World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The Bush administration wants war

புஷ் நிர்வாகம் போரை விரும்புகிறது

By David North
18 September 2002

Back to screen version

அது வேறொன்றையும் சாதிக்கவில்லை என்றால், ஈராக்கிய அரசாங்கம் ஐ.நா ஆயுதப் பரிசோதகர்கள் நிபந்தளைகள் எதுவுமின்றி திரும்பி வரலை ஏற்றுக்கொள்ள முன்வரல் தற்போதைய சர்வதேச அரசியலின் மிக அடிப்படையான உண்மையை: புஷ் நிர்வாகம் போரை விரும்புகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. அதன் பாசாங்குக் கூற்றான "பரந்த மக்களை அழிக்கும் ஆயுதங்கள்" என்பது போரை பகிரங்கமாக நியாயப்படுத்துதலை உற்பத்தி செய்யும் வழிமுறைகளைத் தவிர வேறெதுவாகவும் ஒருபோதும் இருந்திருக்கவில்லை. புஷ் நிர்வாகமானது, ஈராக்கிய வெளியுறவு அமைச்சரின் ராஜியக் குறிப்பிற்கு --அது ஐ.நாவால் அலட்சியம் செய்யப்பட வேண்டும் என்று கோரி-- கோபத்துடன் பதிலிறுத்திருக்கிறது-- ஏனெனில் சதாம் ஹூசைனின் விட்டுக் கொடுப்பானது ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கான, அதன் அரசாங்கத்தை அழிப்பதற்கான, அதன் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதற்கான மற்றும் அந்நாட்டை, செயல்முறை அளவில், அரைக்காலனித்துவ அந்தஸ்தில் இருக்குமாறு குறைப்பதற்கான, போலி-சட்டரீதியான சாக்குப்போக்கின் மூடிமறைப்பை ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு இல்லாதாக்குகிறது என்பதை அது அறியும்.

ஐக்கிய நாடுகள் அவையில் புஷ் நிர்வாகத்தால் கையாளப்பட்ட கடந்த வாரத்து சூழ்ச்சிமுறைகள், பாதுகாப்பு சபையின் மூலமாக ஐக்கிய அமெரிக்க அரசுகள் இறுக்குவதற்கு நோக்கம் கொண்ட ஆத்திரமூட்டும் மட்டும் கடுமையான தீர்மானங்களுடன் ஈராக் ஒருபோதும் பொருந்திப்போகாது என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தன. மேலும், ஈராக் விட்டுக் கொடுத்ததா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிப்பதை, தீர்மானங்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளிடம் விட்டு விடும். இந்த ஏற்பாடு தவிரிர்க்க முடியாதபடி, நாட்கள் அளவில் இல்லை என்றாலும் சில வாரங்களினுள், ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு போர்க் காரணத்தை வழங்கும் என்பதில் புஷ் நிர்வாகம் நம்பிக்கை கொண்டு இருந்தது. அது ஈராக் "விட்டுக் கொடுத்துப் போகவில்லை" மற்றும் குரோதங்களை முன்னெடுத்தது என்று அது சர்வசாதாரணமாக அறிவிக்க முடியும்.

ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க அழுத்தத்திற்கு விரைவில் வளைந்து கொடுக்காது என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றபோதிலும் --இந்தக் கணத்திலாவது, இந்தக் காட்சி ஒருமாதிரி கலைக்கப்பட்டு இருக்கின்றது. புஷ் நிர்வாகமானது தீர்மானங்கள் மற்றும் அது விரும்பும் போர் இரண்டையும் பெற்றுக்கொள்ளும் என்பது, நிகழத்தக்க ஒன்றாக இருக்கும்.

அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு நிர்வாகமும், 1938 மியூனிச் கோரக்காட்சியை -- பிரிட்டிஷ் பிரதமர் நெவில்லே சேம்பர்லெய்ன், ஹிட்லரின் வற்புறுத்தலுக்கு இணங்கி நாஜிக்களுக்கு செக்கோஸ்லோவேகியாவைக் கையளித்த பொழுதான காட்சியை-- அதன் சொந்த வலுச்சண்டைக்குப் போகும் ஏகாதிபத்திய அரசியலை நியாயப்படுத்துதற்கு வணங்கி வரவேற்றிருக்கின்றன. ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பின் மறைப்பில் தனது நடவடிக்கைகளை அமெரிக்கா வழமையாக மூடிமறைப்பதைக் கொண்டிருக்கிறது. ஆனால், ஈவிரக்கமற்ற கொடுங்கோலனுடன் சமரசம் செய்து கொள்ளுபவருக்கு எதிராக தன்ன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும், சேர்ச்சிலுக்கு இணையான நவீனகால வடிவாக புஷ்-ஐ செதுக்கிக் காட்டும் இந்த சமீப முயற்சியானது, வேறு எந்த நிர்வாகமும் சாதித்திராத பொய்மைப்படுத்தலின் அளவைப் பெறுகிறது. செக் நெருக்கடியை வேண்டுமென்றே புனைந்து உருவாக்கியதில் மற்றும் செப்டம்பர் 1938ல் மியூனிச்சில் பேச்சுவார்த்தை நடத்தைகளில் நாஜி நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை, ஈராக் தொடர்பான புஷ் நிர்வாகத்தால் பின்பற்றப்படும் தந்திரோபாயங்களை விட அந்த அளவுக்கு நெருக்கமாக நினைவு கூறுவது வேறு எதுவுமில்லை.

1938 கோடை அளவில், நாஜிக்களிடம் அறிவுபூர்வமான தீர்வு இருந்திராத பரந்த அளவிலான சமூகப் பொருளாதார முரண்பாடுகளுக்கு போரை ஹிட்லர் ஆட்சி அவசியமான ஒன்றாகப் பார்க்கவிருந்தது. செக்கோஸ்லோவேகியா மீது தாக்குதலை நியாயப்படுத்த ஹிட்லரால் பற்றிக் கொள்ளப்பட்ட சிறப்பான விஷயங்களுடன் சுடெட்டென்லாண்ட் (செக் குடியரசின் வட பிராந்தியம்) மீதாக எழுந்த நெருக்கடி --பிரதானமாக, ஜேர்மன் சிறுபான்மையினரின் தவறான நடத்துகை என்று கூறப்படுவது-- போருக்கான சாக்குப்போக்கைக் காண்பதற்கு நாஜி ஆட்சியில் உள்ளே உள்ள முன்னணி நபர்களின் நோக்கத்தை விட, மிகவும் குறைவாகவே தொடர்புடையதாக இருந்தது. உண்மையில் பல வரலாற்றாசிரியர்கள் விளக்கிக் காட்டியவாறு, ஹிட்லர் போரைத் தொடங்குவதற்கான நியாயப்படுத்தலைப் பெறுவதினை விடவும் செக்கோஸ்லோவேகியாவிடமிருந்து விட்டுக் கொடுப்புக்களைப் பெறுவதில் குறைவாகவே அக்கறை உடையவராக இருந்தார்.

ஹிட்லர் பற்றிய அவரது சிறப்பான வாழ்க்கை வரலாற்றில், வரலாற்றாசிரியர் அயன் கெர்ஷா மியூனிச்சில் பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்சு விட்டுக்கொடுப்புக்கள் ஜேர்மனியை சுடெட்டென்லாண்டை ஒரு சூடு கூட நடத்தப்படாமல் கைப்பற்றுவதற்கு அனுமதித்தது நாஜி தலைவர்களை தொல்லைப்படுத்தியது என விரித்துரைக்கிறார். செக்கோஸ்லோவேகியாவை பிரிக்க அனுமதிக்கும் பத்திரங்களில் ஹிட்லர் தயக்கத்துடன் கையெழுத்திட்டார். "அவரைப் பொறுத்தவரை, அப்பத்திரம் அர்த்தமற்றதாக இருந்தது. மற்றும் அவரைப் பொறுத்தவரை மியூனிச், கொண்டாடுதற்குரிய பெரும் காரணமாக இல்லை. கோடை முழுவதும் அவரது நோக்கமாக இருந்திருந்த, செக்குகளுடனான மட்டுப்படுத்தப்பட்ட போரிலிருந்து கிடைக்கும் என்று அவர் உறுதியாய் இருந்த பெரும் வெற்றி பற்றியதில் தான் ஏமாற்றப்பட்டதாய் உணர்ந்தார்." [Hitler 1936-1945: Nemesis (New York and London, 2001), pp. 122-23].

ஜோர்ஜ் புஷ் அடால்ப் ஹிட்லராக இல்லை மற்றும் அவரது நிர்வாகம் நாஜி ஆட்சியின் அமெரிக்க இணையாக இல்லை. ஆனால் இந்த அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள புவி- மூலோபாய மற்றும் பொருளாதார அபிலாஷைகளை அடைவதற்கான ஒரு வழிமுறையாக போரைப் பயன்படுத்துவதற்கு மும்முரமாய்க் கோரும் அமெரிக்க ஆளும் தட்டின் ஈவிரக்கமற்ற மற்றும் மூர்க்கமான பகுதிகளால் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த இரு நாட்களுக்குள் ேவால்ஸ்ட்ரீட் பத்திரிகையில் இடம்பெற்ற மாதிரிக் கட்டுரைகள், இந்த நிர்வாகத்தின் உள்ளேயும் அதன்மீதும் ஆழமான செல்வாக்குடைய முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளே உள்ள சக்திகளின் கருத்துக்களை எதிரொலிக்கின்றன. "போரை முடி" என தலைப்பிடப்பட்ட பத்தியில், விக்கடர் டேவிஸ் ஹேன்சன் செவ்வாயன்று, ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஈராக்கை "கட்டாயம் ஆக்கிரமிக்க வேண்டும், வெல்ல வேண்டும் மற்றும் அமைதிப்படுத்த வேண்டும்" என்று எழுதினார்.

"ஈராக்கை விடுவித்தல் என்பது நடக்குமா என்பதை விட, எப்பொழுது என்பது பற்றிய கேள்வியாகவே அது அதிகமாய் இருக்கிறது" என ஹேன்சன் அறிவித்தார். "சதாமை அழித்தலில் தாமதம் சில சாதகமான பலன்களை உருவாக்கி இருக்கிறது. நிர்வாகமானது அதன் போருக்கான காரணத்தை இங்கும் வெளிநாடுகளிலும் தெளிவாக்கி இருக்கிறது."

அதேநாளன்று, பத்திரிக்கையின் துணை ஆசிரியரான, ஜோர்ஜ் மெல்லோன், ஐக்கிய நாடுகள் சபைக்கு புஷ்ஷின் இறுதி எச்சரிக்கை "சதாம் ஹூசைனை அகற்றுவதற்கான களத்தைத் தொடங்கி வைக்கிறது" என அறிவித்தார். அவர் தொடர்ந்தார்: "எப்படி செய்யப்படும் என்பது அமெரிக்க இராணுவத்தைப் பொறுத்தது. ஆனால் இந்த நேரத்தைப் பொறுத்தவரை, நிலைமை கைக்குள் இருக்கிறது."

திங்களன்று வெளியிடப்பட்ட, "சதாமின் எண்ணெய்" எனத் தலைப்பிடப்பட்ட இன்னொரு கட்டுரையில், பத்திரிகையானது, "எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கான சிறந்த வழி, காலந்தாழ்த்தி நடத்தப்படுவதைக் காட்டிலும் விரைவில் நடத்தப்படும், ஈராக் மீதான வெற்றிகரமான போர் ஆகும்" என அப்பட்டமாக வலியுறுத்திக் கூறியது.

உழைக்கும் மக்களான பரந்த வெகுஜனங்களின் மத்தியில் அமெரிக்க முதலாளித்துவத்தின் கார்ப்பொரேட் தூண்களை முற்றிலும் செல்வாக்கிழக்கவைக்கும் ஊழலுக்கிடையே மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியுடன், தாம் முரண்கொண்டிருப்பதாகக் காணும் புஷ் நிர்வாகமானது, ஆழமடைந்து வரும் மற்றும் எளிதில் அடக்கமுடியாதிருக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து ஒரு கவனத்தைத் திருப்புதலாக போரைப் பார்க்கிறது.

ஈராக்கிற்கு எதிரான அதன் போரில் நுழைவதில் நிர்வாகம் வெற்றி பெற்றால், மிகப் பெரிய மற்றும் இரத்தம் தோய்ந்த கொடூரங்களுக்குக் கூட அது ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதை அது நிரூபிக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved