World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US bribes and threatens "allies" over Iraq

ஈராக் மீதான விஷயத்தில் "கூட்டாளிகளுக்கு" அமெரிக்கா இலஞ்சம் கொடுக்கிறது மற்றும் அச்சுறுத்துகிறது

By Bill Vann
17 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை ஆதரிக்க வேண்டி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு புஷ் விடுத்த இறுதி எச்சரிக்கையை அடுத்து, வாஷிங்டன் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களை அச்சுறுத்தவும் அவற்றுக்கு இலஞ்சம் கொடுத்து வாங்கவும் பலமுனைப் பிரச்சாரத்தை தொடுத்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னோடியான சர்வதேச சங்கத்திற்கு, லெனினின் பொருத்தமான சுட்டுப் பெயர் "கள்வர்களின் சமையலறை" ஆகும். ஈராக் மீதான இன்னொரு போருக்கான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையில் வென்றெடுக்க வாஷிங்டனால் செய்யப்படும் இன்றைய பிரச்சாரம் அப்பட்டப்பெயர் இன்னும் பொருந்துவதைத் தெளிவாக்குகிறது. கைம்மாறு பற்றிய குழப்பங்கள் மற்றும் கீழ்த்தரமான பேரங்கள் போரில் கொள்ளையடிப்பதை குண்டர்கள் பகிர்ந்து கொள்வதைப் பற்றிய அனைத்து தகுதியையும் கொண்டிருக்கிறது. பொதுச்சபைக்கு அவரது உரையின் பொழுது அமெரிக்க ஜனாதிபதி தனது இலக்கு, உலக அமைதி என கூறிக் கொண்டார், இந்தச்செயலின் தனிக்கூறு யாதெனில், உலகத் தலைவர்களுக்கு அவர் வழங்குவதற்கு பிரதியுபகாரமாக அமெரிக்க நோக்கங்களுக்கு அவர்கள் தடைச்சொல்லின்றி உடன்படல் ஆகும்.

அரசுத்துறைச் செயலாளர் கொலின் பாவெல், அடுத்த சில நாட்களுக்குள் கடந்த வளைகுடாப் போருக்குப் பின்னர் திணிக்கப்பட்ட 16 தனித்தனி தீர்மானங்களுக்கு இணங்கிப் போகவேண்டும் அல்லது இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிவரும் எனக் கோரும் பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் வழியாக, கெட்டிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபைக்கு திரும்பினார். ஈராக் தேசிய மற்றும் உலகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது என்ற கூற்றுக்கள் மீதாக, அது அமெரிக்க ஆக்கிரமிப்பு மூலமாக மட்டுமே முடிவடைய முடியும், என்பது பற்றி உள்நாட்டில் ஐயுறவாதத்தையும் வெளிநாட்டில் பரந்த அளவிலான எதிர்ப்பையும் எதிர்கொண்டு, வாஷிங்டனானது ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்க இராணுவ வாதத்துக்கு ஒரு சர்வதேச மூடுதிரையை வழங்கவேண்டும் என கோருகின்றது.

திங்களன்று, ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் கோபி அன்னான், பாக்தாத், நாட்டிற்குள் ஐ.நா ஆயுத பரிசோதகர்களை திரும்ப அனுமதிக்க உடன்பட்டிருந்தது என அறிவித்தார். ஆயுத பரிசோதகர்கள் 1998ல் முன்னெடுக்கப்பட்ட நான்கு நாட்கள் அமெரிக்க - பிரிட்டிஷ் குண்டு வீச்சுத் தாக்குதலில் வாஷிங்டனிலிருந்து வந்த அழுத்தத்தின் கீழ் வாபஸ் பெற்றிருந்தனர்.

ஆயுத பரிசோதகர்கள் அனுமதிக்கப்படுகின்றனரோ அல்லது இல்லையோ, பாக்தாதில் அமெரிக்க கைப்பொம்மை ஆட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட "முன்னதே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும்" போர் ஒன்றில் வாஷிங்டனது கொள்கை தொடர்ந்திருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் திரும்பத்திரும்ப வலியுறுத்தினர். அவர்கள் சதாம் ஹூசைன் ஆட்சி ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு முழுதாய் இணங்கிப் போகும் சாத்தியம் பற்றியும் கூட பொருத்தமற்றதென விலக்கி இருப்பது, பரிசோதகர்கள் திரும்பி வந்தால், அமெரிக்க / ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுறுத்தல்களை ஈராக் மறுப்பதாக ஒருமுறை கருதப்பட்டதும் ஆத்திர மூட்டல்களை உருவாக்குவதும் போர்க்காரணங்களை வழங்குவதும் அவர்களது செயல்பாடாக இருக்கும் என்பதைத் தெளிவாக்கியது.

இருப்பினும், போருக்கான சாக்குப்போக்கை நிறுவுவதற்கு, அமெரிக்க விளக்க விவரத்தின்படி பாதுகாப்புச் சபையின் தீர்மானம் கட்டாயம் சூழ்ச்சி செய்யப்பட வேண்டும் மற்றும், ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் ஒருவர் கூட --அமெரிக்க, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா-- ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், முறைமன்றத்தின் 15 உறுப்பினர்களால் அங்கீகாரமளிக்கப்பட வேண்டும். பாரசீக வளைகுடாவிலும் மற்றும் எங்கிலுமுள்ள ஏனைய அரசாங்கங்கள், தாக்குதலில் அமெரிக்க படைகள் பங்கேற்க தளங்களை வழங்கவும் ஏனைய வடிவிலான ஆதரவுகளை வழங்கவும் கட்டாயம் வழிக்குக் கொண்டு வரப்படவேண்டும்.

பிரதான வெகுமதி எண்ணெயாகத்தான் இருக்கின்றது. அமெரிக்க அதிகாரிகளும் சரி ஈராக்கிய எதிர்க்கட்சி என்று கூறக்கூடியவர்களும் சரி --ஈராக்கிய தேசிய காங்கிரசில் உள்ள அரச பரம்பரையினர், புலம்பெயர்ந்த செல்வந்தர்கள் மற்றும் முன்னாள் படைத்தளபதிகள் கொண்ட திரட்டு-- வெற்றிகரமான அமெரிக்கப் போருக்குப் பின்னர் ஈராக்கின் வளம் கொழிக்கும் எண்ணெய் வயல்களின் பிரதான பங்கினை அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பெட்ரோலிய பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மாற்றுவதற்கான தங்களின் விருப்பம் பற்றியதில் எந்த பழிபாவத்திற்கும் அஞ்சாதிருக்கின்றனர்.

"பரந்த அழிவுகரமான ஆயுதங்கள்" பற்றிய ஆதாரமற்ற கூற்றுக்களை முடிவில்லாமல் திரும்பத்திரும்பக் கூறும் மற்றும் சதாம் ஹூசைனின் உள்நாட்டு ஒடுக்குமுறை மீதான அக்கறை பற்றி பாசாங்கு செய்யும் அதேவேளை, அமெரிக்கா பின்பற்றி வரும் மூலோபாய குறிக்கோள் ஈராக் எண்ணெய் மீதான கட்டுப்பாடுதான். அந்நாடு உலகில் 112.5 பில்லியன் பாரல்கள் என மதிப்பிடப்படும் இரண்டாவது பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் சேர்ம இருப்பு ஆகும் --அது செளதி அரேபியாவுக்கு மட்டும் பின்தங்கி இருக்கிறது. அரை நிலப்பிரபுத்துவ செளதி அரேபிய முடியாட்சியின் ஸ்திரத்தன்மை பற்றி வளர்ந்து வரும் அக்கறையுடன், அமெரிக்க நிர்வாகம் ஈராக்கைக் கட்டுப்படுத்துவதைக் கைப்பற்றிக் கொள்ள உறுதியாக இருக்கிறது.

இருப்பினும், இந்தக் குறிக்கோள், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் ரத்து அதிகாரத்தை வைத்திருக்கும் மூன்று நாடுகள் --பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியன உட்பட, பல நாடுகளின் நலன்களைத் தாண்டிச் சென்றது. ஏனைய அரை டசின் நாடுகளுடன் சேர்ந்து, அவர்களும் பெட்ரோலியத்தை அகழ்ந்தெடுப்பதற்காக அல்லது நாட்டின் எண்ணெய் உள்கட்டமைப்பைக் கட்டுவதில் ஈராக்கிய ஆட்சியுடன் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை, 12 ஆண்டுகள் பழமையான இந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் விலக்கப்பட்டதும் அமலுக்கு வரும். தற்போதைய ஆட்சி அமெரிக்க ஆக்கிரமிப்பால் தூக்கி வீசப்படும்பொழுது அல்லது தூக்கி வீசப்பட்டால் இந்த அனைத்து விதமான ஒப்பந்தங்களும் ரத்தாகி விடும் என்று அரசுத்துறை ஆதரவு ஈராக்கிய எதிர்ப்பினர் வலியுறுத்தி இருக்கின்றனர்.

வரலாற்று ரீதியாக, ரஷ்யாவும் பிரான்சும்1991 வளைகுடா போருக்கு முன்னர் ஈராக்கில் மிகுதியான பொருளாதார நலன்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக, ரஷ்யா, சதாம் ஹூசைன் ஆட்சி முன்னாள் சோவியத் ஒன்றியத்திடம் 8 பில்லியன் டாலர்கள் கடன் பெற்றிருந்ததாக இன்னும் கோருகிறது. வாஷிங்டனின் அதுபோன்ற நுண்ணயம் வாய்ந்ததில்லாத செயல் தந்திரம், இந்த நாடுகள் மற்றும் ஏனையநாடுகளுக்கு, அவை அமெரிக்கப்போரை ஆதரித்தால் கொள்ளைப் பொருளில் குறிக்கப்படா பங்கைப் பெறுவதற்கு உறுதி கொடுப்பதாக இருக்கிறது. அதேவேளை அதனை அவர்கள் எதிர்த்தால் அந்த அளவு பீப்பாய்கள் க்ரூட் எண்ணெய் இல்லாமல் அவர்கள் துண்டிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டனர்.

ஈராக்கிற்கெதிரான விரைந்த போருக்கு முன்னணி கிளர்ச்சித் தலைவராக வெளிவந்திருக்கும் முன்னாள் சி.ஐ.ஏ இயக்குநர் மற்றும் அமெரிக்கக் கார்ப்பொரேட் ஆலோசகர், ஜேம்ஸ் ஊல்சி, வாஷிங்டன் போஸ்ட் உடனான நேர்காணல் ஒன்றில் அப்பட்டமாக இந்த அணுகுமுறையை உச்சரித்தார். "அது மிகவும் நேரிடையானது" என அவர் கூறினார். "பிரான்சும் ரஷ்யாவும் ஈராக்கில் எண்ணெய்க் கம்பெனிகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் நலன்களைக் கொண்டிருக்கின்றன. நாகரீகமான அரசாங்கத்தை நோக்கி ஈராக் நகருவதில் அவர்கள் உதவியாக இருப்பார்களாயின், நாம் புதிய அரசாங்கமும் அமெரிக்கக் கம்பெனிகளும் அவர்களுடன் நெருக்கமாக வேலைசெய்வன என அவர்களிடம் சொல்லப்பட வேண்டும்" ஆனால், அவர் மேலும் கூறினார், "அவர்கள் சதாம் நிலையில் பங்கு கொண்டால், புதிய ஈராக்கிய அரசாங்கத்தை அவர்களுடன் வேலை செய்வதற்கு அறிவுறுத்தி இணங்க வைக்க சாத்தியமின்மையின் அளவுக்கு கடினமானதாக இருக்கும்."

வேறு வார்த்தைகளில் சொன்னால்: "ஈராக்கை தாக்க எங்களுக்கு உதவுங்கள், அடித்த கொள்ளையில் நாங்கள் உங்களுக்கு ஒரு பகுதியை வெட்டி விடுவோம்; மாறாக எங்கள் வழியில் குறுக்கிட்டீர்களோ நீங்கள் ஒன்றும் பெறமாட்டீர்கள்." என்பதாகும்.

அண்மைய வாரங்களில் புஷ்ஷுடன் திரும்பத்திரும்ப பேசி இருந்த, ரஷ்யாவில் உள்ள ஜனாதிபதி விளாதிமீர் புட்டினின் அரசாங்கம் தொடர்பாக மிக விரிவான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஈராக் தொடர்பாக "இரு தரப்பு அக்கறைகளை" மதிப்பீடு செய்வதை நோக்கம் கொண்ட மூன்று நாள் விஷயத்திற்காக கடந்த வாரம் மொஸ்கோவுக்கு அரசுத்துறை பேராளர் குழு ஒன்று அனுப்பப்பட்டது. அடுத்த மாத தொடக்கத்தில் ரஷ்ய அதிகாரிகள் அதே பொறுப்பு வகிக்கும் அவர்களின் அமெரிக்க எதிரிணையாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் ரஷ்ய எண்ணெய்க் கம்பெனிகளின் பிரதிநிதிகளுடன் ஒரு எண்ணெய் உச்சி மாநாட்டை நடத்த இருக்கின்றனர்.

மேலும் கூடிய ஊக்குதலாக, வாஷிங்டனானது அமெரிக்காவில் புஷ் நிர்வாகம் பெருமளவில் செய்திருக்கும் அளவுக்கு, ஏனைய அரசாங்கங்கள் "பயங்கரவாதம் மீதான போர்" என்பதைத் தங்களின் அரசியல் நலன்களுக்கு பொருந்தும் வகையில் அர்த்தம் கற்பித்துக் கொள்வதற்கு அனுமதிக்கின்றது. இவ்வாறு, செச்சென் பிரிவினைவாதிகள் தளம் கொண்டிருக்கும் ஜோர்ஜியாவுக்கு எதிராக ரஷ்ய இராணுவத் தாக்குதலுக்கு வெளிப்படையாக தனது எதிர்ப்பைக் கூறும் அதேவேளை, திரைமறைவில் வாஷிங்டன் செச்சென்யாவுக்குள் தனது இரத்தம் தோய்ந்த ஒடுக்குதலை உக்கிரப்படுத்துதற்கு மொஸ்கோவுக்கு ஒரு பச்சை விளக்கைக் காட்டுகிறது.

அதேபோல, அமெரிக்கா அண்மையில் வடமேற்கு சீனாவில் உள்ள, கிழக்கு துர்க்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் எனும் பிரிவினைவாதக் குழுவை ஒடுக்குதற்கு பெய்ஜிங்கிற்கு அதன் ஆதரவை அளித்தது. அரசுத்துறை சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான அதன் பெயர்ப்பட்டியலில் அவ்வியக்கத்தைச் சேர்த்து, ஐக்கிய நாடுகள் பயங்கரவாதிகள் பட்டியலில் அதனை இடுவதற்கு சீனா எடுத்திருக்கும் முயற்சிக்கு அமெரிக்கா துணை நின்றது.

கனேடிய பொதுமக்கள் கருத்தை இணக்குவிப்பதற்கான தெளிவான முயற்சியில் மற்றும் ஆக்கிரமிப்புக்கு ஒட்டாவா ஆதரவளிக்க வழியை ஏதுவாக்குவதில், அமெரிக்க விமானப் படையானது கடந்த வாரம் இரண்டு அமெரிக்க போர்விமான ஓட்டிகளை, ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரலில் நடத்திய "நட்பு ரீதியான சண்டையில்" குண்டு வீசியதில் நான்கு கனேடிய படைவீரர்களைக் கொன்றதற்காகவும் எட்டுப்பேரைக் காயப்படுத்தியதற்காகவும் குற்றம் சாட்டி இருந்தது என்பதை அறிவித்தது. இரு இல்லினாய்ஸ் தேசிய விமானப்படை காவல் விமான ஓட்டிகள் காந்தஹார் அருகே இரவு சண்டை ஒத்திகைப் பயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, 500 பவுண்டு எடையுள்ள லேசர்- வழி நடத்தும் குண்டுகளைப் போட்டனர். விமான ஓட்டிகளின் மேலதிகாரிகள் கனேடிய நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களுக்கு அறிவிக்கத் தவறிவிட்டனர் என்று அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஈராக் மீதான எந்தவிதமான அமெரிக்கப் போருக்குள்ளும் துருக்கி வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தப்படும் அதேவேளை --தியார்பக்கீர் மற்றும் இன்சிர்லிக்கில் உள்ள விமானப்படைத் தளங்கள் அரபுநாடு மீதான அமெரிக்க-பிரிட்டிஷ் வான்தாக்குதலில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன-- பிரதமர் புலெண்ட் எசெவிட்டின் (Bulent Ecevit) ஸ்திரமில்லா அரசாங்கம் ஆக்கிரமிப்பானது அவருடைய நாட்டின் மீது ஏற்படுத்தும் பாதிப்பு பற்றி பெரிதும் கவலைகளை வெளிப்படுத்தியது.

துருக்கிய ஆட்சியாளர்களின் கவலைகளை தணிக்கும் முயற்சியில், புஷ் அமெரிக்கா "ஐக்கிய ஈராக்" கை ஆதரிக்கிறது என வார்த்தைக் குறிப்பை கவனமாக தனது உரையில் சேர்த்துக் கொண்டார். இந்த சொற்றொடர் இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு, சிறப்பாக துருக்கிக்கு, ஈராக்கின் வடக்கில் தனிநாடு அமைக்கும் அதன் நீண்டகாலக் குறிக்கோளை அடைவதற்கு ஈராக்கின் குர்து சிறுபான்மையால் எடுக்கப்படும் எந்த நகர்வையும் வாஷிங்டன் நசுக்கும் மற்றும் துருக்கியின் சொந்த குர்துகளுக்கு எதிரான அங்காராவின் இராணுவத் தாக்குதலையும் ஆதரிக்கும் என மீள உத்திரவாதப்படுத்துவதற்கு இச்சொற்றொடர் வடிவமைக்கப்பட்டது. கிழக்கு துருக்கியில் 17 ஆண்டுகளாக கிளர்ச்சி எதிர்ப்பு தாக்குதலில் குறைந்த பட்சம் 30,000 குர்துகள் ஏற்கனவே இறந்துள்ளனர். துருக்கிய இராணுவப் படைகள் நீண்டகாலமாக பி.கே.கே குர்து பிரிவினைவாத இயக்கத்துடன் இணைந்த கொரில்லாப் படையினரை "பின்பற்றுவதில்" ஈராக்குக்குள் எல்லை கடந்த திடீர் தாக்குதல்களை நடத்தி வந்திருக்கின்றது.

அமெரிக்க ஆக்கிரமிப்பில் துருக்கியின் முழு ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதில் பணமும் கூட கைமாறி இருக்கும் சாத்தியம் இருக்கிறது. அங்காராவில் ஆட்சியானது பன்னாட்டு நாணய நிதியத்தால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருக்கும் 16 பில்லியன் டாலர்கள் பணம் கொடுப்பதற்கு சாதகமாக வாஷிங்டன் உத்திரவாதம் அளிப்பது பற்றி ஆர்வமாக இருக்கிறது, மற்றும் ஆயுத ஒப்பந்தங்களுக்காக அமெரிக்காவிற்கு கொடுக்க வேண்டிய 5 பில்லியன் டாலர்கள் கடனை விட்டுக் கொடுப்பதை நாடுகிறது.

அமெரிக்க இராணுவ தகவுப் பொருத்த அர்த்தத்தில் ஏனைய முக்கிய நாடு செளதி அரேபியா ஆகும். செளதி வெளிநாட்டு அமைச்சர் சாட் அல் பெய்சல், வாஷிங்டன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் வழியாக தீர்மானத்தைப் பெற்றால் முடியாட்சி ஆனது ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஆதரவளிக்கும் என ஞாயிறு கூறினார், மற்றும் செளதி மண்ணை போர் தொடங்குவதற்கான தளமாக பெண்டகன் பயன்படுத்துவதற்கு மீண்டும் ஒருமுறை அனுமதிக்கும்.

அதேவேளை, போர் தொடுக்கப்பட்டால் மற்றும் அது தொடுக்கப்படும்பொழுது தமது ஆட்சி சர்வதேச ரீதியாக எண்ணெய் விலைகளை சீராக்குவதற்கு செயல்படும் என செளதி இளவரசர் கூறினார். வாஷிங்டனுடன் கலந்துரையாடி இருப்பதாகக் கூறப்படும் அது கொண்டிருக்கும் முக்கிய கவலைகளுள் பாக்தாதில் சதாமிற்குப் பின்னரான ஆட்சியானது பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் அதன் உறுப்பாண்மையைப் பராமரிக்குமா என்பதும் ஒன்றாகும். வாஷிங்டன் OPEC-ல் இருந்து அதனை வெளியேற்றுவதற்கு தேர்ந்தெடுக்குமாயின், ஈராக்கின் உற்பத்தி மற்றும் விலையிடல் ஏனைய எண்ணெய் உற்பத்தியாளரின் பொருளாதாரத்தை அழித்து விடக்கூடும்.

ஈராக் மீதான அமெரிக்கப் போரின் விளைபயன்கள் பற்றி பேரிடர் பயக்கவல்ல எச்சரிக்கைகளை செய்த மற்றைய அரபு ஆட்சிகளும் கூட வாஷிங்டனுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்பதற்கான மூடுதிரையாக, ஐக்கிய நாடுகள் சபைக்கு புஷ்ஷின் வேண்டுகோளுடன் தாழ்ப்பாளிட்டன. எடுத்துக்காட்டாக, எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் புஷ்ஷின் பேச்சிற்குப்பின் அடுத்து உடனடியாக இந்தப் பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் செய்து, ஈராக் ஆயுதப் பரிசோதகர்களை மீள அனுமதிக்க அரபு ஆட்சிகளால் ஒன்றிணைந்த அழுத்தம் கொடுக்க வலியுறுத்தினார். உலகிலேயே அமெரிக்க இராணுவ உதவி அதிகமாய்ப் பெறுவது இஸ்ரேலுக்குப் பின்னர் எகிப்து ஆகும்.

பாக்கிஸ்தானில், இராணுவ ஆட்சியாளர் பெர்வெஸ் முஷாரப் அவரது சர்வாதிகாரத்தை திடப்படுத்துவதற்கு அமெரிக்காவால் சுதந்திரமாக விடப்பட்டிருக்கிறார். அரசாங்கத்தை இராணுவம் கட்டுப்படுத்துவதை உத்திரவாதப்படுத்தும் நாட்டின் பிரபலமான இரு தலைவர்களை தேர்தலில் போட்டி இடுவதிலிருந்து தடுக்கும் கடந்த மாதம் அறிமுகப்படுத்திய அரசியல் மாற்றங்களின் பெயரளவிலான விமர்சனத்தை அரசுத்துறை விடுத்த அதேவேளை, புஷ் தான் அதுபற்றி அக்கறைப்படவில்லை என்பதைத் தெளிவாக்கினார். "பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் எங்களுடன் முஷாரப் இன்னும் இறுக்கமாக இருக்கிறார், மற்றும் அதுதான் நான் பாராட்டுவது," அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக இருக்கும் மற்றைய நாடுகள் ஈராக் ஆக்கிரமிப்பு மீதாக அளிக்கும் வாக்குக்கு பிரதியுபகாரமாக வாஷிங்டனிலிருந்து சலுகைகளைப் பெறும் நம்பிக்கையுடன், தமது சொந்த கோரிக்கைகளை வைப்பதை ஆரம்பித்தன. எடுத்துக்காட்டாக, வாஷிங்டனின் ஒரு வழக்கமான எளிதில் வசப்படத்தக்க கலவையான, மெக்சிகன் ஜனாதிபதி வின்சென்டி பாக்ஸ், அமெரிக்காவில் உள்ள முறையான பத்திரங்கள் இல்லாத முப்பது இலட்சம் மெக்சிகோ தொழிலாளர்களின் நிலையை சட்டரீதியானதாக்க அதன் உறுதிமொழியை புஷ் நிர்வாகம் நிறைவேற்றத் தவறியதைப் பற்றிப் புகார்கூறும் பகிரங்க அறிக்கைகளை கடந்தவாரம் விடுத்தார். "பயங்கரவாதம் மீதான போரை" தொடர்ந்து நடத்துகின்ற அதேவேளை, அவர்களின் நிலையை ஒழுங்குபடுத்துவது சாத்தியப்படுமா, என அவர் குறிப்பாகக் கூறினார்.

பாதுகாப்பு சபையில் 10 தற்காலிக இருக்கைகளில் மூன்று இருக்கைகளை வகிக்கப் போகும் அனைத்து ஏழ்மை மிக்க மற்றும் சிறிய நாடுகளான கேமரூன், குய்னியா மற்றும் மொரீசியஸ் ஆகியவற்றுக்கு புதிய அமெரிக்க உதவி செயல் வேலைத்திட்டங்கள் விரைவில் ஒழுங்கு செய்யப்பட்டதைப் பார்ப்பது அரிதாகத்தான் வியப்பாக இருக்கும்.

"சர்வதேசியத்துக்கு" சரணாகதி அடைந்ததாக மற்றும் அமெரிக்க இராணுவ பலத்தை ஒருதலைப் பட்சமாகப் பயன்படுத்துதலிலிருந்து பின்வாங்குவதாக அவரது சொந்த குடியரசுக் கட்சியினரின் பகுதிகளால் எதிர்க்கப்படுகிற அதேவேளை, ஈராக்கிற்கு எதிராக ஒரு போரைத் தயாரிப்பதற்கு புஷ் ஐக்கிய நாடுகள் சபைக்கு திரும்புவது என்பது அந்த அமைப்பு வடிவமைக்கப்பட்ட முக்கிய நோக்கத்தை --ஏகாதிபத்திய சூழ்ச்சித் திட்டத்திற்கான சர்வதேச கைப்பொறிப்பு முத்திரையாக இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது. தூண்டப்படாத ஆக்கிரமிப்பு போருக்கு ஆதரவளிப்பதில் அரசாங்கத்திற்குப் பின் அரசாங்கத்தை அமெரிக்கா வாங்கக் கூடியதில் அல்லது மிரட்டிப் பணியவைப்பதில் சிக்கல் நிலை அகற்றுவது ஆளும் கும்பல்களின் முறியடிப்பை மற்றும் இலஞ்ச ஊழலை அரபு உலகில் மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்படும் பூகோளப் பிராந்தியங்கள் முழுவதிலும் கூட வெளிக்காட்டி இருக்கிறது.

இருப்பினும், வாஷிங்டனின் எரிந்து விழும் சூழ்ச்சித் திட்டங்கள், போருக்கு உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் குரோதத்தைச் சிதறடிப்பதில் மற்றும் பரந்த அளவிலான குடிமக்களின் சேதங்களின் வாய்ப்பு பற்றியதில் மற்றும் ஈராக்கில் அமெரிக்க தாக்குதலில் ஏற்படும் அழிவு பற்றியதில் பத்துலட்சக் கணக்கானவர்களால் உணரப்படும் பேரச்சத்தை சிதறடிப்பதில் குறைந்த அளவே பலனுடையதாக இருக்கும் என்பதை நிரூபிக்கும்.

See Also:

ஐ.நா சபையில் புஷ்: உலகத்துக்கு வாஷிங்டனின் போருக்கான இறுதி எச்சரிக்கை

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை எதிர்!
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

அமெரிக்கா,பிரிட்டன் ஈராக் மீதான வான்வழிப் போரை விரைவுபடுத்துகின்றன

செனியின் போருக்கான விவரம்: பரந்த பொய்களும் வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல்களும்

உத்தியோகபூர்வ விவாதத்திற்குப் பின்னால், அமெரிக்கா ஈராக்கைத் தாக்குவதற்காக படைகளைத் தயாரிக்கிறது

ஜேர்மன் பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்துள்ளார்

ஈராக்கில் அமெரிக்க யுத்த நோக்கங்கள் குறித்து அமெரிக்க மக்கள் அறியாது மறைக்கப்பட்டுள்ளனர்

ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்கா நெருங்குகிறது

அமெரிக்கா ஈராக்கின் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது

Top of page