World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The looting of Baghdad's museum and library

US government implicated in planned theft of Iraqi artistic treasures

பாக்தாத் அருங்காட்சியகம் மற்றும் நூலக சூறையாடல்:

ஈராக்கின் கலைப் பொக்கிஷங்கள் திட்டமிட்டு
கொள்ளையடிக்கப்பட்டதில் அமெரிக்க அரசாங்கம் உடந்தை

By Ann Talbot
19 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

பாக்தாத்தில் ஈராக் தேசிய அருங்காட்சியகம், சூறையாடப்பட்டது, தொடர்பான முழு விபரங்கள், வெளியே வரும்போது அது, தற்செயலாக நடந்துவிட்டதல்ல என்பது தெளிவாக வருகிறது. மாறாக, ஈராக், அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள கலை மற்றும் வரலாற்று பொக்கிஷங்கள் சூறையாடப்பட்டது நீண்ட காலமாக திட்டமிடப்பட்ட ஒரு செயலின் விளைவுதான் என்பது தெளிவாகிறது.

அந்த அருங்காட்சியகத்தில் ஈராக்கில் உள்ள, ஏழை குடிசை பகுதி மக்கள் கொள்ளையடித்திருந்தால் கூட அது குற்றம்தான் மற்றும் அதற்கு பொறுப்பு அமெரிக்க நிர்வாகம்தான். ஏனெனில், திரும்பத் திரும்ப எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்தும் பாக்தாத்தின் கலாச்சார கட்டிடங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், அமெரிக்க நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அருங்காட்சியக ஊழியர்கள் வெளியுலகோடு தொடர்புகொள்ள தொடங்கியதும், சூறையாடல் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. தாங்கள் என்ன தேடுகிறோம் என்பதை தெரிந்தவர்கள் மற்றும் அதற்கான சிறப்பு சாதனங்களுடன் சூறையாடல் பணியை செய்வதற்கு வந்திருக்கிறார்கள்.

டாக்டர்-டோனி ஜோர்ஜ், பாக்தாத் அருங்காட்சியகத் தலைவர் தலைமை அதிகாரி, அவர் சொன்னார்:- "தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்துகொண்டவர்கள் தான், அதை செய்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள், பிளாக், ஓபேலிஸ்க் (Black-Obelisk) சிப்சம் பிரதியை, தொடவில்லை. இதன் பொருள் என்னவென்றால், அவர்கள் நிபுணர்களாக இருந்திருக்கவேண்டும். அவர்கள் அந்தப் பிரதிகளைத் தொடவில்லை."

பிரிட்டனின் நான்காவது சனல், செய்தி நிகழ்ச்சியில், டாக்டர் டோனி ஜோர்ஜ் பிரிட்டனின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாச்டர்-ஜான் குர்டிஸிற்கு, பேட்டியளித்தார். அந்த பேட்டியில், திருடப்பட்ட கலைப்பொருட்களில், ஒன்று 5,000-ஆண்டுகளுக்கு முந்திய புனித வர்க்கா-பாத்திரம் (VASE). அது உர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தால் ஆனது அக்காடியன் (Akkadian) காலத்து, சிலையின் பீடம், மற்றும் அஸ்சிரியர் காலத்து சிலை ஆகியவை சூறையாடப்பட்ட பொருட்களில் அடங்கும் என்று ஜோன் குர்டிஸிற்கு தெரிவித்தார். "இது மேனோலிசாவை, திருடியதைப் போன்ற செயல்" என்று டாக்டர் குர்திஸ் தெரிவித்தார்.

ஏறத்தாழ அருங்காட்சியகம் ஆரம்பத்தில் சூறையாடப்பட்டு ஒரு வாரம் கழித்த பின்னர்தான், டாக்டர்-ஜோர்ஜ் உலகம் முழுவதிலும் உள்ள அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு சூறையாடப்பட்டது என்ன என்பது குறித்து எச்சரிக்க முடிந்திருக்கிறது. அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பாக்தாத்திலிருந்து, அந்த வரலாற்று சின்ன பொருட்கள், வெளியேறுவதை தடுப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அல்லது திருடப்பட்ட கலைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச அளவில் விசாரணைக்கும் ஏற்பாடு செய்யவில்லை.

இப்படி அமெரிக்கா செயல்பட தயக்கம் காட்டி வருவதை, எந்த வகையிலும் விளக்க முடியாது. ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தொழில்முறை அகழ்வாராய்ச்சியாளர்களும், மற்றும் கலை வரலாற்று ஆசிரியர்களும், பென்டகனுக்கு சூறையாடல் ஆபத்து தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கின்றனர். பிரிட்டனின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர். இர்வின், பிங்க்ல் நாலாவது சனலுக்கு அளித்த பேட்டியில், ``சூறையாடல், முற்றிலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் மற்றும் சூறையாடல் நடக்காமல் எளிதாக தடுத்திருக்க முடியும்`` - என்று குறிப்பிட்டார்.

மிக கவனமாக திட்டமிடப்பட்ட தாக்குதலுக்கு அந்த அருங்காட்சியகம் பலியாகியிருக்கிறது. அதிக மதிப்புள்ள வரலாற்று பொருட்களை திருடிச் சென்றவர்கள், மிக கனமான பொருட்களை தூக்கிச் செல்வதற்கு, கிளப்புவதற்கு தேவையான சாதனங்களுடன் வந்திருக்கின்றனர். அரங்குகளில் இருந்து அந்த பொருட்களை ஊழியர்கள் நகர்த்த முடியாது மற்றும் அதிக மதிப்புள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அறைகளின் சாவிகள் ஊழியர்களிடம் இருந்தன. நாஜிக்கள் திட்டமிட்டு ஐரோப்பிய நாடுகளில் அருங்காட்சியகங்களை சூறையாடிய பின்னர், இத்தகைய குற்றச் செயல் இதுவரை நடைபெற்றது இல்லை.

பிஸினஸ் வீக் பத்திரிகையின், US Online வெளியீட்டில் ஏப்ரல்-14-ந் தேதி ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ஈராக் அருங்காட்சியகங்கள் சூறையாடப்பட்ட நிகழ்ச்சி, திட்டமிடப்பட்ட சதிச்செயல் என அந்த கட்டுரை வலியுறுத்துகிறது. ``பாக்தாத்தின் தொல்பொருள் கொள்ளைக்காரர்கள் தயாராகயிருந்தார்களா?`` என்ற தலைப்பில் அந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில், துணை தலைப்பு ஒன்று தரப்பட்டிருக்கிறது. ``அவர்கள் தங்களுக்கு தேவைப்படுவது என்ன என்பதை தெரிந்துகொண்டே வந்திருக்கவேண்டும், ஏனென்றால் கலைப்பொருள் வியாபாரிகள் முன்கூட்டியே மிக முக்கியமான கலைப்பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கின்றனர்`` - என்பது அந்த துணைத் தலைப்பு.

பிஸினஸ் வீக் எழுதுகிறது:- ``இந்த சூறையாடலை நடத்தியவர்கள், பாக்தாத் வீழ்ச்சிக்காக காத்துக்கொண்டு இருந்ததைப்போல் தெரிகிறது. பாக்தாத் வீழ்ச்சியடைந்ததும் அவர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். ஜில்-T. ஸ்டீம், அகழ்வாராய்ச்சி பேராசிரியர் அவர், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறை, கடந்த 80-ஆண்டுகளாக ஈராக்கில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வருகிறது. முன்கூட்டியே, மிக முக்கியமான கலைப்பொருட்களுக்கு, வியாபாரிகள் ஆர்டர் கொடுத்திருக்கவேண்டும் என்று சிக்காகோ -பல்கலைக்கழக- தொல்பொருள் ஆய்வுத்துறை நம்புகிறது. சூறையாட வந்தவர்கள், மிகவும் திட்டவட்டமான கலைப்பொருட்களை தேடினர். அவற்றை எங்கு, கண்டுபிடிப்பது என்பது அவர்களுக்கு தெரியும் என்று, அந்த பேராசிரியர் கூறுகிறார்.

1991-ம் ஆண்டு நடைபெற்ற, வளைகுடாப் போருக்குப் பின்னர், அப்போது அருங்காட்சியகங்களில் இருந்தும் மற்றும் தொல்பொருள் - ஆய்வு பகுதிகளில் இருந்தும் சூறையாடப்பட்ட பொருட்கள், மார்க்கெட்டுகளில் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது புல்டோசர்கள் மூலம் தொல்பொருள் ஆய்வு பகுதிகள் தகர்க்கப்பட்டன. அதுபோன்ற பகுதிகளில் கிடைத்த பண்டைக்கால சிலைகளை ரம்பங்களால் துண்டாக்கி, ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக ஆக்கினார்கள்.

ஈராக்கின் கலாச்சார பாரம்பரியத்தை இப்படி சூறையாடியது அரும்பொருட்களை சேகரிப்பவர்களின் ஆசையை பெருக்கியது. தூரகிழக்கு நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகள், மற்றம் இத்தாலியன் தொல்பொருள் ஆய்வுப் பகுதியில் நடைபெற்ற சூறையாடல்களுக்கு இதுபோன்ற அரும்பொருட்களை சேகரிப்பவர்கள்தான் பொறுப்பாகும். சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டதும் கலை மற்றும் கலாச்சார தொல்பொருட்கள் மதிப்பு அதிகமாயிற்று, அவை மிகவும் பாதுகாப்பான முதலீடுகளாக கருதப்பட்டன. ஏற்கனவே, கலை, கலாச்சார தொல்பொருட்களில் நடைபெற்று வரும் கள்ளச்சந்தை மேலும் வேகமடைந்தது.

தொல்பொருட்களில் கள்ளச்சந்தை, போதைப் பொருட்கள் கடத்தல் போன்றவை பெரும் இலாபகரமான தொழில் என்று கருதப்படுகிறது. அடிக்கடி இரண்டையும் சம்மந்தப்படுத்தி வருகிறார்கள். மெக்டோனால் தொல்பொருள் ஆய்வுக்கழகம், 2001-ஆம் ஆண்டில் ``தொல்பொருட்களில் சட்ட விரோத வர்த்தகம்: உலகின் அகழ்வாராய்ச்சி பாரம்பரியம் அழிப்பு`` என்ற தலைப்பில் தயாரித்துள்ள அறிக்கையில், இலண்டனும், நியூயார்க்கும் இந்த வர்த்தகத்தில் பிரதான மாக்கெட்டுகள். சுவிட்சர்லாந்தில் 5 ஆண்டுகள் வைத்திருக்கப்படும் கலைப்பொருள்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை சுவிட்சர்லாந்து வழங்குகிறது. அந்நாடு கலைப்பொருட்கள் ஏற்றுமதியில் பிரதான மையமாக திகழ்கிறது.

கெய்ம்ஸ்தார்ன், பேராசிரியர் லார்ட் ரென்பிரூ (Lord Renfrew) கேம்பிரிட்ஜ் மெக்டோனால் கழக இயக்குனர். அவர் அறிக்கை வெளியிடப்பட்டபோது நடைபெற்ற நிருபர்கள் பேட்டியில், ``இந்த வர்த்தகம் நீடிப்பதற்குக் காரணம், அரசு கலைப்பொருட்சந்தையின் மார்க்கெட்டில் உள்ளது. எனவே கலைப்பொருட்கள் நடமாட்டத்தை (வர்த்தகத்தை) விரும்புகிறது. இது ஒரு மோசடியாகும்`` என்று குறிப்பிட்டார்.

அண்மையில் நடந்த சூறையாடல் பற்றிய செய்தி வெளியானதும், அவசரமாக, பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரின் அரசு, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில், நிருபர்கள் கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்ட கலாச்சார அமைச்சர் டெஸ்ஸா ஜோவெல், ஈராக்கின் தொல்பொருட்களை பாதுகாக்க, அரசின் ஆதரவிற்கு உறுதியளித்தார்.

அவர் இவ்வாறு பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போதே, ஈராக் தேசிய நூலகம் சூறையாடப்பட்டது. அபூர்வமான பல நூற்றாண்டுகளுக்கு முந்திய குரான் அலங்கார பிரதிகள், அரபு கையெழுத்துப் பிரதிகள், உதுமானிய சாம்ராஜ்ய காலத்திலிருந்து, காக்கப்பட்டு வரும், இனி பிரதி எடுக்க முடியாத, வரலாற்று பதிவேடுகள் அடங்கிய அந்தக் கட்டடம் தீ வைத்துக்கொளுத்தப்பட்டது. அதனால், எண்ணிறந்த, பதிவேடுகள் அழிந்தன.

தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்த ரிப்போர்ட்டர் (மியூசிய அதிகாரி) அமெரிக்க இராணுவத்தினரிடம் ஓடிச்சென்று, சில தொல்பொருட்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் உதவிக்கு வரமறுத்துவிட்டனர். ``இன்டிபென்டென்ட்`` பத்திரிகையில் பிரிஸ்க் கீழ்க்காணும்வாறு எழுதினார்:- ``நான் வரைபடத்தில் அந்த இடத்தை கோடிட்டு காட்டினேன், தெளிவான பெயரை அரபு மொழியிலும், ஆங்கிலத்திலும், எழுதியிருந்தேன். தீ எரிவதை மூன்று மைலுக்கு அப்பாலிருந்து காண முடிந்தது. மற்றும், மூன்று நிமிடத்தில் இராணுவ வாகனங்கள் சென்றுவிட முடியும் என்றும், நான் சுட்டிக்காட்டினேன். அரை மணி நேரத்திற்கு பின்னர், அந்த இடத்தில், எந்தவொரு அமெரிக்கரும் இல்லை, தீ பிழம்பு காற்றில் 200-அடி உயரம் உயர்ந்து காணப்பட்டது.``

பாக்தாத் அருங்காட்டியகத்துக்கு ஏற்பட்ட கதியை பார்க்கும்போது; பொதுவாக நூலகத்தில் நடைபெற்ற சூறையாடலும் தீ வைப்பும், திட்டமிட்ட ஒரு குற்றச்செயலை மறைப்பதற்காக, நடத்தப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கை என்றுதான், முடிவு செய்ய முடியும். அந்த திட்டமிட்ட குற்றச் செயலில், பணக்கார, அரும்பொருள் சேகரிப்பாளர்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட, பதிவேடுகள் களவாடப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கையில், அவர்கள் புத்தகங்களை எரித்திருக்கிறார்கள். இது, மற்றொரு நாஜிக்களது நடவடிக்கையாகும். இப்படி புத்தகங்களை எரிப்பது, குற்றச்செயலில் உடந்தையாக இருக்கும் நடவடிக்கையாகும்.

ACCP-யின் பங்கு

இந்த இரண்டு நாசம் விளைவித்த தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க கலாச்சாரக் கொள்கை குழுவின் நடவடிக்கைகள் மீது கவனம் திரும்பி உள்ளது. உலகில் மிகக் கடுமையான, அவதூறு தடுப்பு சட்டங்களின் கீழ் பிரிட்டன் பத்திரிகைகள் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய, பத்திரிகைகளே, ஈராக்-கலாச்சார தொல்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் சம்மந்தமான அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையில், மாற்றத்தை ஏற்படுத்தி ACCP தங்கள் பக்கம் இழுத்திருக்கலாம் என்று கூறுகிற அளவிற்கு எழுதியுள்ளன.

ACCP-2001-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பணக்கார கலைப்பொருட்கள், சேகரிப்பாளர்கள், ஒரு குழுவாக இணைந்து, இந்த அமைப்பை உருவாக்கி, அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள கலாச்சார சொத்துக்கள் செயலாக்க சட்டத்திற்கு எதிராக இயக்கம் நடத்தி வருகின்றன. அந்தச் சட்டம் கலைப்பொருட்கள் விற்பனை சந்தையை நெறிமுறைப்படுத்த முயலுகிறது. மேலும், திருடப்பட்ட கலைப்பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கிறது. இந்த அமைப்பு, நியூயார்க் கலைப்பொருள் விற்பனையாளர் பிரடரிக்ஸ்கூல்ட்சை(Frederick Schultz) ஆதரிக்கின்றது. அவர், திருடப்பட்ட தேசீய பொருள் சட்டப்படி கண்டிக்கப்பட்டவர். இந்த அமைப்பு 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் வழங்கப்பட்ட மெக்லைன் வழக்கு (1977 US v. McClain )தொடர்பான சட்ட முன்மாதிரியை, திருடப்பட்ட கலைப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் பயன்படுத்தக்கூடாது என்று, எதிர்ப்பு தெரிவித்து இயக்கம் நடத்தி வருகிறது.

மெக்சிகோ-அரசின், திட்டவட்டமான சம்மதத்தை பெறாமல், அமெரிக்காவுக்குள் கொண்டுவரப்பட்ட முந்தைய கொலம்பியா கலைப்பொருட்கள் மற்றும், நகைகள், அனைத்தும் திருடப்பட்ட பொருட்கள் என்று ஏற்றுக்கொண்டு, ஒரு, அமெரிக்க நீதிபதி மேக்லைன் வழக்கில் தீர்ப்பளித்தார். மெக்சிகோ சட்டத்தில் எல்லா தொல்பொருள் கலைச் சின்னங்களும், அரசு சொத்துக்கள் என்று கருதப்படுகின்றன. அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படி தடைவிதித்துள்ள பல நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று.

கலைப்பொருட்கள் தொடர்பான முன்னணி வழக்கறிஞரும், ACCP-யை, நிறுவியவருமான ஆஸ்டன் ஹாக்கின்ஸ், அத்தகைய சட்டம் உள்நாட்டுக்குள்ளேயே, வரலாற்று தொல்பொருள் சின்னங்களை ்அடக்கிவைக்கும், தன்மை கொண்டது என்று கருதுகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால், தொல்பொருள் வளமிக்க நாடுகள், மற்றும் அருங்காட்சியகங்கள் தங்களது, கலைப்பொருட்களை பாதுகாக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் கண்டித்தார். கிளிண்டன் நிர்வாகத்தில் அத்தகைய, சட்டம், மேலாதிக்கம் செலுத்த துவங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு, அருங்காட்சியகங்கள் மீது, ஹாக்கின்ஸ் தனது கவனம் முழுவதையும் திருப்பி உள்ளார். கெய்ரோ-அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ள, எகிப்து நாட்டின் தொன்மை வரலாற்று கலைப்பொருட்கள் அனைத்தையும் பரவலாக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். ``கெய்ரோ-அருங்காட்சியகம், தன் வசம் வைத்திருக்கும், கலைப்பொருட்களில், 50-சதவிகிதம் வரை உலகில் உள்ள இதர அருங்காட்சியகங்கள் கையகப்படுத்திக்கொள்ள வழிவகை செய்யவேண்டும். அதற்கு பதிலாக, ஒவ்வொரு பிற அருங்காட்சியகங்களும் எகிப்தில் கிசா பள்ளத்தாக்கில் புதிய, அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு 1-மில்லியன் டாலர்களை தரவேண்டும். இதை ஒரு எடுத்துக்காட்டாக நான் சொல்லுகிறேன், இதை ஒரு ஆலோசனையாக, நான் தருகிறேன்`` - என்று ஹாக்கின்ஸ் குறிப்பிட்டார்.

உஸ்பெக் ஜவுளி ரகங்களை, சேகரிக்கும், கிடோ-கோட்மேன் என்பவருக்குச் சொந்தமான ஐந்தாவது அவென்யூ குடியிருப்பில், ACCP-துவக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர், கலிபோர்னியாவில் உள்ள மாலிபூர் கெட்டி மியூசிய முன்னாள் அறக்காப்பாளர் ஆர்தர் அவுட்டன்; இந்த மியூசியத்தில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் பல வரலாற்று, மற்றும் தொல்பொருள் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. நியூயார்க், மெட்ரோ பாலிடன், கலை மியூசியத்தின் டிரஸ்டிகள் குழு துணைத் தலைவராகயிருந்துவந்த ஹாக்கின்ஸ் 2000-ம் ஆண்டில் ஓய்வுபெற்றார். இந்த மியூசியத்தில், எஸ்ட்ரூஸ்கன்(Etruscan) கல்லறைகளிலிருந்து, களவாடப்பட்ட பல கலைப்பொருட்கள் இடம்பெற்றிருப்பதாக, அதன் முன்னாள் டைரக்டர் தாமஸ் ஹோவிங் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

போர் துவங்குவதற்கு முன்னர், ACCP-பென்டகன் அதிகாரிகளை சந்தித்து பேசியது, அந்த சந்திப்பில், கலந்துகொண்டவர்கள் ஈராக்கின் தொல்பொருட்கள் குறித்து, கவலை தெரிவித்தனர். அவர்களது, கவலை என்ன என்பதை அந்தக் குழுவின் பொருளாளர் வில்லியம் பேல்ஸ்டீன் கூறிய, கருத்துக்கள் தெளிவாக்குகின்றன. தொல்பொருட்கள் தொடர்பாக ஈராக்கில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் உள்நாட்டுக்குள்ளேயே கலைப்பொருட்களை அடக்கிவைக்க, வகை செய்தவை, என்று அவர் வர்ணித்தார். ஈராக், சட்டங்கள் மாற்றப்படவேண்டும், என்று தாங்கள் கூறவில்லை என்பதாக, ACCP-விளக்கம் தந்தாலும், ஈராக் அருங்காட்சியகமும், நூலகமும் சூறையாடப்பட்டிருப்பதன் மூலம், அந்தப் பிரச்சனையை, சரியாக சமாளித்துவிட முடியும். அதற்கு, திருடப்பட்ட, கலைப்பொருட்கள் தொல்பொருட்கள், ஆகியவை தொடர்பான அமெரிக்கச் சட்டம், மாற்றப்படவேண்டும்.

ஸ்டான்போர்ட், சட்டக் கல்லூரி பேராசிரியரும்; ACCP-உறுப்பினருமான, பேராசிரியர் ஜான் மெரிமேன் அமெரிக்க நீதிமன்றங்களில், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பாக, சில குறிப்பிட்ட சர்வதேச அமலாக்க நடவடிக்கையை, மேற்க்கொள்ளப்பட வேண்டும் என்று, கோரியிருக்கிறார். இதை, வேறு வகைகளில், சொல்வது என்றால், அமெரிக்க நீதிமன்றம், ஈராக் சட்டத்தை, அங்கீகரிக்கவில்லையென்றால், சூறையாடப்பட்ட கலைப்பொருட்களை இறங்குமதி செய்வது, முற்றிலும் நியாயமான சட்டப்பூர்வமான நடவடிக்கைதான், என்று அவர் கூறுகிறார்.

1998-ம் ஆண்டு, ACCP-வெளியிட்ட ஒரு அறிக்கையில், மெரிமென் தனது அமைப்பின் கொள்கைகளை, விளக்கியுள்ளார். ஒரு கலைப்பொருள் திருடப்பட்டது என்ற, உண்மையின் காரணத்தால் மட்டும், அந்த பொருளை அமெரிக்காவிற்கு சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்வதில், எந்தவிதமான தடையும் இல்லை என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

அவர் மேலும் கூறினார்:- ``கலாச்சார பொருட்களுக்கு ஒரு மார்க்கெட் இருப்பது, அவை அழிக்கப்பட்டுவிடாமல், அல்லது புறக்கணிக்கப்பட்டுவிடாமல், அவற்றிற்கு ஒரு மார்க்கெட் மதிப்பை, உருவாக்கி தருகிறது. கட்டுத்திட்டம் இல்லாத சட்டப்பூர்வமான, கலாச்சாரப் பொருட்கள், வர்த்தகத்தின் மூலம் அவற்றை மிகப்பெரும் அளவில், மதிக்கின்ற மற்றும் அவற்றை மிகப்பெரும் அளவிற்கு பேணிக்காக்கின்ற மக்களிடமும், அமைப்புகளிடமும், அவை சென்று சேரமுடியும்`` - (சர்வதேச சட்டமும், அரசியலும், தொகுதி 31:1).

இது தனக்குத்தானே, சமாதானம் சொல்லிக்கொள்ளும் வாதம் ஆகும். இந்த வாதத்தில் அகந்தை போக்கு நிறைந்திருக்கின்றது. பாக்தாத் தெருக்களில் தற்போது, நடைபெற்றுக் கொண்டுள்ள, குழப்பங்கள், மியூசியம் சூறையாடப்பட்டது, மற்றும் நூலகம் எரிக்கப்பட்டது, ஆகியவை ஈராக் மக்கள் தங்களது பொக்கிஷங்களை பராமரிப்பதற்கு, அறிவு இல்லாதவர்கள் அல்லது ஏழைகள், அவர்களுக்கு அந்த ஆற்றல் இல்லை, அல்லது, அவர்களுக்கு அந்த விருப்பம் இல்லை, அவற்றை அமெரிக்க மியூசியகங்களில், அல்லது தனியாரிடம், சேர்த்தால், அவர்கள் சிறப்பாக பராமரிப்பார்கள் என்று, பணக்கார, அரும்பொருள் சேகரிப்பாளர்கள், சுட்டிக்காட்டுகிறார்கள்.

ACCP-கருத்துக்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் குறிப்பிட்ட சூறையாடல் மற்றும் நலன்களை, பிரதிநிதித்துவபடுத்துவதாக அமைந்திருக்கின்றது. விலைமதிக்க முடியாத, கலை, அல்லது அறிவியல் பொருள் உட்பட எந்த பொருள்களும், மதிப்பு அதனுடைய, மார்க்கெட் விலையை பொறுத்தது என்று, அந்தக்குழு ஒரு கொள்கை வகுத்து செயல்படுகிறது.

அவர்கள் அர்த்தப்படுத்தும் விலை என்னவெனில், பாக்தாத் மியூசியத்தில் மற்றும் ஈராக் தேசீய நூலகத்தில், திருடப்பட்ட பொருட்களில் உண்மையான, மதிப்பு கணக்கிட இயலாதது. இப்படிப்பட்டவர்கள் ஒவ்வொரு பொருளின் விலையையும், அறிவார்கள், ஆனால், எந்தவொரு பொருளின் மதிப்பையும் அறியமாட்டார்கள்.

கலைப்படைப்புக்கள் மற்றும், தொல்பொருள் ஆய்வு பொருட்கள், யாரிடம் இருப்பது என்பதை சந்தையில் முடிவு செய்யப்படுமானால், இத்தகைய கலைப்பொருட்கள் ஒரு சில, பணக்காரர்கள் கையில் சிக்கிவிடும். அவற்றின் சொந்தக்காரர்களின் நல்லெண்ணத்தை பொருத்துத்தான், அவை பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்கக்கூடும். ACCP-உறுப்பினர்களில் பலர், பெரிய, பொது, அருங்காட்சியகங்களோடு சம்மந்தப்பட்டிருந்தார்கள் என்றாலும், அவர்களது இன்றைய நடவடிக்கை குறித்து, கலை, மற்றும் தொல்பொருள் ஆய்வு பொதுமக்களுக்கு கிடைப்பதை பெருமளவிற்கு எதிர்ப்பதாக அமைந்திருக்கிறது. இதர நாடுகளில், நடைமுறையில் உள்ள, சட்டத்தை மாற்றுவதற்கு, அவர்கள் முயன்றுவருவதுடன், அமெரிக்க சமுதாயத்தின் மிக முற்போக்கான, பாரம்பரியத்திற்கு எதிராகவும், செயல்படுகிறார்கள். அமெரிக்க பாரம்பரியம் எப்போதுமே, பொது அருங்காட்சியகங்களை மதித்துவருகிறது.

அறிவியல் - பாரம்பரியம்

பொது மியூசியங்கள் வளர்ச்சியில், தொல்பொருள் ஆய்வு கலை பொருட்கள் தொடர்பான, அறிவியல் ஆய்வுகள், மற்றும் அவற்றை உருவாக்கிய சமுதாயங்களைப் பற்றிய அறிவியல் ஆய்வுகள் ஆகியவற்றோடு, இணைந்து வளர்ந்து வந்திருக்கின்றன. தனியார், பொக்கிஷங்களை வேட்டையாடும், பாரம்பரியத்திலிருந்து, முறித்துக்கொண்டு, பொது நிதியிலிருந்து மியூசியங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த கால, வரலாற்று பொருட்களை அறிவியல் முறையிலும், பகுத்தறிவிற்கு ஏற்றவகையிலும், காட்சிப் பொருட்களாக, கண்காட்சிகளில் வைக்கப்பட்டன.

தொல்பொருள் ஆய்வு கலைப்பொருட்கள் தனியார் கையில் குவிந்துவிடுவது; அறிவியல் ஆய்வு பணிகளை சீர்குலைக்கும் ஏனென்றால், அந்த பொருட்கள் பலர் கையில் பரவலாக, சேர்ந்துவிடும். எனவே, அவற்றை பட்டியலிடுவது சிரமம். மேலும், அந்தத் துறையில் பணியாற்றிக்கொண்டுள்ள அறிஞர்களுக்கு பெரும்பகுதி தெரியாமலே போய்விடும். பொது மியூசியங்கள் பொது நிதியை பயன்படுத்துவது மட்டுமல்ல, அவற்றின் அரங்குகள் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படுகின்றன. எல்லோருக்கும், அவை தொடர்பான அறிவு கிடைப்பதற்கு, வழிவகை செய்யப்படுகிறது. பதினேழாவது நூற்றாண்டில் நடைபெற்ற அறிவியல் புரட்சிக்கு பின்னர், இப்படி அருங்காட்சியகங்கள் செயல்படுவது, பிரதான பணியாக, அங்கீகரிக்கப்பட்டது.

பாக்தாத் மியூசியம், சூறையாடப்பட்டதின் விளைவுகளில் ஒன்று, அந்த அருங்காட்சியகத்தின் பட்டியல் (கார்டு-கோட்லாக்) மற்றும், அருங்காட்சியாக பொருட்கள் தொடர்பான கம்ப்யூட்டர் பதிவேடுகள் அழிக்கப்பட்டுவிட்டது. இதனால்; அந்தப் பொருட்களை தேடி கண்டிபிடிப்பது, பெரும் சிக்கலாகிவிட்டது. பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுமையாக மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வு பணிகள் அழிக்கப்பட்டுவிட்டன. அத்தகைய பட்டியலை, அழிப்பது; உண்மையிலேயே அவற்றை தனியார் கையில் சேர்க்கும் நடைமுறைதான். அதை அத்தகைய நடவடிக்கையில் அடையாளச் சின்னமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால், வெளி உலகிற்கு, அங்கு இடம்பெற்றிருந்தது, என்ன என்பது தற்போது, தெரியாமல் போய்விட்டது.

அருங்காட்சியகங்களில் இடம்பெற்றுள்ள பிரதான, பொருட்கள், சர்வதேச அளவில் தெரிந்ததுதான் என்றாலும், ஒரு அருங்காட்சியகத்தின் பதிவேடுகள் இத்தகைய மகத்தான, கலைப்பொருட்களுக்கு, அப்பாலும் மீண்டு கொண்டு செல்கிறது. அகழ்வாராய்ச்சியின்போது, கிடைக்கின்ற எல்லா சிறிய பொருட்களும், இடம்பெறும். அவை, கண்ணுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவற்றை இதர பொருட்களோடு இணைத்து ஆராய்ந்தால், அந்த சமுதாயத்தை பற்றிய ஒரு சித்திரம் கிடைக்கும். கலைப்பொருட்களால் மற்றும் அந்த சித்திரத்தை வெற்றிபெற முடியாது.

தொல்பொருள் ஆய்வாளர்கள், பழைய நாகரீகங்களின் வரலாற்றை முடிவு செய்வதற்கு அவற்றோடு, வாழ்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். டன் கணக்கில் மண்ணை சளிக்கிறார்கள். அவற்றில் கிடைக்கும், படிமானங்கள், வித்துக்கள், மற்றும் குப்பை கூளங்களின், குவியல்கள் மிகப்பெரிய அறவிச் செல்வகுவியலாகும். தொல்பொருள் ஆய்வாளர்கள் புறக்கணித்து தூக்கி எறிகின்றவை நினைவுச் சின்னங்கள், பெரிய ஆலயங்கள், அரண்மணைகள் அல்லது மன்னர்கள் கல்லறைகளை பற்றி சரியாக, விளக்கம் தருகிற ஆதாரமாக, இருக்கக்கூடும்.

பீட்டர் சர்வாக் - அண்மையில், வெளியிட்டுள்ள நூல், ``வரலாற்றுக்கு முந்திய மெசபட்டோமியா`` (1) - அதில் அழகான, கவர்ச்சியான களிமண் துண்டுகளால் உருவாக்கப்பட்ட புகைப்பட உருவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை ரஷ்மேட்டிங்முறையில் உருவாக்கப்பட்டவை. இந்த புகைப்படங்கள், அரும்பொருட்களை சேகரிப்பவர்களது அறைகளை அலங்கரிப்பவை அல்ல, ஆனால், தொண்மைக்கால மெசப்பட்டோமியாவின், வாழ்க்கை முறையையும், கைவண்ணத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

உலக ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பேரிடி

பாக்தாத் மியூசியம், கலைப்பொருட்களை மட்டுமே, காட்சிக்கு, வைத்திருப்பதில்லை. ஈராக்கில் சர்வதேச அகழ்வாராய்ச்சி குழுக்கள் நடத்திய, எல்லா அகழ்வாராய்ச்சி அறிக்கைகளும், இடம்பெற்றிருக்கின்றன. எனவே, அந்த மியூசியத்தில், அறிவாற்றல், புள்ளி விபர அடிப்படைகள், அடங்கியுள்ளன. அவை சர்வதேச அளவில் எல்லா ஆராய்ச்சியாளர்களுக்கும் கிடைத்துவந்தன. அது மிக பரவலான, கூட்டுறவு முயற்சி நடவடிக்கை கேந்திரமாகயிருந்தது. இப்போது, அது தலைகீழாக மாறிவிட்டது. மெசபட்டோமியாவில் அறிவியல் அடிப்படையில், தொல்பொருள் ஆய்வு, துவங்கிய, காலத்திற்கு முந்தைய, 150-ஆண்டுகளுக்குமேல், பின்னோக்கி இப்போது, சென்றிருக்கின்றது.

ஆரம்பக் கட்டத்தில் நடைபெற்ற, அகழ்வாராய்ச்சிகள், நவீன முறைகளோடு ஒப்பிடும்போது அறிவியலுக்கு புறம்பாக நடைபெற்றது. அகழ்வாராய்ச்சியாளர்கள் சோதனை முறையில், தங்களது கலையை கற்றுத் தேர்ந்தனர். தவறு செய்வதும், தவறுகளை திருத்திக்கொள்வதும், இப்படியே துவங்கி இந்த ஆய்வு வளர்ந்தது. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும், ஒவ்வொரு தொல்பொருளும், அது கண்டுபிடிக்கப்பட்ட, சுற்றுப்புறச்சூழல்களுக்கு ஏற்ப, மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த அடிப்படையில், அந்த சமுதாயத்தின், வரலாறு, தொகுக்கப்பட்டது.

ஒரு தொல்பொருள் ஆய்வாளர், சூழ்நிலை என்று சொல்வது, ஒரு கலைப்பொருள் பூமியில், கண்டுபிடிக்கப்பட்ட இடம்; அது எந்த அடுக்கில் இருந்தது; அந்த மண் அடுக்கின் தன்மை என்ன, இவற்றை எல்லாம், ஆராய்ந்து, கண்டுபிடிக்கப்பட்ட பொருளின் காலத்தை நிர்ணயித்து, மற்ற விபரங்களை, அவற்றின் பயன்பாடு மற்றும் சமுதாய சிறப்புக்களை மதிப்பீடு செய்கின்றனர். இந்த சூழ்நிலையிலிருந்து, அந்த கலைப்பொருளை பெயர்த்து எடுத்துவிட்டால், அதனுடைய அர்த்தம் பெரும்பகுதி மறைந்துவிடும். மிக நேர்த்தியான, கலைப்படைப்புக்கூட, அதன் சூழ்நிலையை ஒட்டித்தான் சிறப்பாக மதிப்பீடு செய்ய முடியும். அந்தச் சூழ்நிலையை ஒட்டிதான், அதை உருவாக்கியவர்களின் சமுதாய நிலைப்பாடுகளை புரிந்துகொள்ள முடியும்.

மிக விரிவான பொருளில் ஒரு கலைப்பொருளின் சூழ்நிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், தொல்பொருள் ஆய்வு நடைபெற்ற பகுதி முழுவதையும், பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதைச் சுற்றியுள்ள, அகழ்வாராய்ச்சி பகுதிகள், அதன் வரலாற்று அடிப்படையிலான, நிலப்பகுதி அமைப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளவேண்டும். எந்த நாட்டில், தொல்பொருள் ஆய்வுப்பொருட்கள் கிடைக்கின்றனவோ, அந்நாட்டில் அவற்றை வைத்திருக்கவேண்டும் என்பது, தேசீய உணர்வுகளால், உருவான, நியாயப்படுத்தும் நடவடிக்கை என்று அடிக்கடி கூறப்பட்டு வந்தாலும், அதற்கு முக்கியமான, அறிவியல் காரணம் உண்டு என்று, நவீன அறிவியல் அடிப்படையில், அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்திற்கு அருகாமையிலேயே, அந்த இடத்தில் கிடைத்த, ஆய்வுப்பொருட்களை வைத்திருக்கவேண்டும். அப்போது தான், முறையாக அவற்றை பராமரிக்க முடியும்.

இன்றைக்கும், கட்டப்பட்டுள்ள ஈராக் வீடுகள், பூர்வீக கட்டுமான, நிபுணர்கள் உருவாக்கிய அதே முறைகளை அடிப்படையாகக் கொண்டு, வடிவமைக்கப்பட்டிருப்பதை காண முடியும். அதே வடிவமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ள, படகுகளையும் இன்றைய தினம் ஈராக்கில் காண முடியும். நவீன ஈராக்கின் நிலப்பகுதி அமைப்பை ஆராய்ந்தால், அதிலிருந்து, அந்த நாட்டின் வரலாற்று துவக்கத்தை நாம் காண முடியும். இந்த நிலப்பகுதி அமைப்பு, அசாதாரணமானது, ஈராக் நாட்டின், ஒவ்வொரு மலைக்குன்றும், சமவெளியிலிருந்து, உயர்ந்தே செல்கிறது. தலைமுறை தலைமுறையாக, அந்த நாட்டை ஆண்டு வந்தவர்கள், செங்கற்களால், அடுக்கடுக்காக கட்டிய கட்டிடங்கள், சமவெளியில் இருந்து மலைக்குன்று நோக்கி உயர்ந்து செல்லுகின்றன.

அமெரிக்க காலணி ஆதிக்க நிர்வாகியாக, தற்போது நியமிக்கப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி அந்த நிலப்பரப்பின் உணர்வுபூர்வமான தாக்கத்தை தனது, அலுவலக வடிவமைப்பில் காட்டியிருக்கிறார். தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக, பெரிய கூடாரத்தை 4000-ம் ஆண்டு வரலாறு படைத்த, சிக்குராட் (Ziggurat) உர்-அருகே அமைத்திருக்கிறார். அது சந்திரனை நானா-கடவுள் என்று வழிபட்ட கோயில் அரங்கு; ஆனால், பாக்தாத் மியூசியத்தை சூறையாடுவதற்கு அனுமதித்ததன் மூலம், மனித இன வரலாற்றில், ஈராக்கின் உண்மையான முக்கியத்துவத்திற்கு எந்தவிதமான, மதிப்பையும், அமெரிக்க அதிகாரிகள் தரவில்லை என்பதை காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

மத்திய கால ஐரோப்பிய நாட்டு வரைபட தயாரிப்பாளர்கள், 13-வது நூற்றாண்டு ஹெரிபோர்ட் உலக வரைபடத்தை உருவாக்கினார்கள், அதில், அந்தக் காலத்து, பூமி மண்டலத்தை சித்தரித்தன. அந்த வரைபடத்தில் ஆசியாவை, உச்சியில் அமைத்தனர். ஏனென்றால் அவர்களுக்கு அதுதான், மிக முக்கியமான கண்டம். அங்கேதான், பைபிளில் கூறப்பட்டுள்ள இடங்கள் உள்ளன, அவர்களது உலக பார்வையில்; ஜெரூசலம் தான், உலகின் நடுநாயகமான பகுதி, அதற்கு அப்பால், பாபிலோன் இருந்தது, யூதர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நடந்தது அங்குதான். பேபல்டவர் மற்றும் ஆபிரகாம் இல்லம் உர்-நகரில் உள்ளது.

ஐரோப்பியர்களின் உள்ளத்தில், இந்த பைபிள் உருவகங்கள், ஆழமாக பதிந்து கிடந்ததால், பண்டைய, வரலாற்றுப் பகுதிகளை முதலில், அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் பைபிளை, உறுதிப்படுத்துவதற்கான சான்றுகளை தேடினர். இருபதாவது நூற்றாண்டில் கூட, லூனாட் ஊலி, வர்க்காவில் தான் நடத்திய அகழ்வாராய்ச்சிக்கு பைபிளில் இடம்பெற்றுள்ள உர்-சால்டிஸ் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

என்றாலும், ஊலி மற்றும், லாயாட், போட்டா, மற்றும் ஹர்முஸ்ரஸ்ஸாம், போன்ற அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பொருட்கள் பைபிள் கண்ணோட்டத்தில் அமைந்த, உலகப் பார்வையை அசைத்துவிட்டன. பைபிள் எழுதப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மெசப்பட்டோமியாவில் நோவாவின் படகும், வெள்ள பிரளயமும் நடந்திருக்கிறது, என்று கண்டுபிடிக்கப்பட்டது; மிக முக்கியமான ஒன்று. அங்கு மெசப்பட்டோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள களிமண் தகடுகளில் எழுதப்பட்டுள் கூனிபர்ம் வரிவடிவம் என்ன என்று ஆராயப்பட்டது. அதன் மூலம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத, மிக பழங்காலத்திலேயே, மெசப்பட்டோமியாவில், உயர்ந்த, வளர்ந்த நாகரீகங்கள் நிலவியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வரலாற்று உண்மைகள், முழுமையாக நமக்கு, தெரிந்ததற்கு அடிப்படையாக அமைந்திருப்பது அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும், கார்பன்-14-டேட்டிங் - மற்றும் இதர செம்மையாக்கம் செய்யப்பட்ட அறிவியல் ஆய்வுமுறைகள் தான். இருபதாவது நூற்றாண்டின் இரண்டாவது பாதியில்தான், உழவுத் தொழில் எப்போது துவங்கியது, என்ற, முடிவிற்கு நாம் வரமுடிந்தது. மத்திய கிழக்கில், கி.மு பதினோராவது ஆயிரம் ஆண்டின் மத்திய பகுதியில்தான், வேளாண்மை சமுதாயங்கள் தோன்றியுள்ளன, என்பதை நாம் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.

நாகரீகத்தின் தொட்டிகள்

இன்றைய ஈராக், நிலப்பரப்பு அமைந்துள்ள பகுதிகளில், உலகின் பண்டைய உழவர் சமுதாயங்கள் தோன்றவில்லை. ஆனால், பாசன வசதி, அதிகம் உள்ள, மலைப்பாங்கான சாக்ரோஸ் மலைகள், அன்ட்டோலியா, லேவான்ட் மற்றும் டேக்லூரான் சமவெளிகளில்தான், முதலில் உழவர் சமுதாயங்கள் தோன்றின. அப்படியிருந்தும், இரண்டாவது கட்ட, இடைவிடாத புதிய கற்கால புரட்சி, ஈராக்கை, மையமாகக்கொண்டுதான் நடைபெற்றிருக்கின்றது. அப்போது, வீட்டு விலங்குகள், வளர்க்கப்பட்டன. நவதானியங்கள், விளைவிக்கப்பட்டன.

ஈராக்கில், அந்தப் புரட்சி கணிசமான அளவிற்கு முன்னேற்றம் கண்டது, அதற்கு அடிப்படையாக அமைந்தது, பாசன வசதி. மேம்பட்ட பாசன வசதி தொழில்நுட்பம் வளர்ந்ததால், வேளாண்மை உற்பத்தித்திறன் பெருகியது. இப்படி, பாசன வசதியால் உபரியாக, உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதன் மூலம், நமது பூமியில், முதலாவது, நகர நாகரீகம் தோன்றிய அதே மண்டலத்தைத்தான், அமெரிக்கா, மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த, இராணுவப் படைகள் இணைந்து, தரிசுநிலமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

கி.மு.5,800-வாக்கில், யூப்ரடீஸ் நதிக்கரையில் சிறிய உழவர் சமுதாயங்கள் தோன்ற ஆரம்பித்தன. சில நூற்றாண்டுகளுக்குள், அந்த சமுதாயங்கள் இணைந்து, மக்கள் நெரிசல் மிக்க நகரப்பகுதிகளாக உருவாகின. ஒவ்வொரு நகர குடியிருப்பிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெற்றன. ஒரு கோயிலைச் சுற்றி குடியிருப்புக்கள் அமைந்தன. அந்தக் கோயில், பாசன முறையை, உணவு விநியோகத்தை கற்கள், கனிமங்கள், மற்றம் மரங்கள் இறக்குமதி போன்ற பல்வேறு காரியங்களை ஒவ்வொரு நகரத்திலும், நிர்வகித்துவந்தது. ஒவ்வொரு நகருக்கும் பொறுப்பான கோயில் நிர்வாகம் அருகாமையில் உள்ள, மலைபாங்கான பகுதிகளில் இருந்து, தேவையான பொருட்களை இறக்குமதி செய்தன.

இரண்டாவது ஆயிரம் ஆண்டுகளில் (2-மில்லியன்-யா) மெசப்பட்டோமியா நகரங்களில் செப்பு வார்படக்கலை, துவங்கிவிட்டது. பித்தளை, கலப்பு உலோகம் தோன்றியது. மிக முக்கியமாக, கையெழுத்து வரிவடிவம், துவங்கியது. பெரும்பாலும், செயற்கையாக உருவாக்கப்பட்ட சுற்றுப்புறச்சூழலால் நடைபெற்றுவந்த பாசன வசதி போன்றவற்றை நிர்வகிப்பதற்கும், மிக முக்கியமான, மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் எழுத்து வரிவடிவம் தேவைப்பட்டது (2).

எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், திடீரென்று, அறிவு வளர்ச்சி ஏற்பட்டது. பொருட்களை குறித்துவைப்பதற்கும், அவற்றைக்கொண்டு சேர்ப்பதற்கும், உருவாக்கப்பட்ட வரிவடிவம், கவிதைகளை, கதைகளை, மற்றும் வரலாற்றை எழுதுவதற்கு ஒரு ஊடகமாக பயன்பட்டது. அறிவியலும், கணிதமும் செழிந்து வளர்ந்தன.

நவீன ஆய்வுகளின்படி பெருக்கல், கழித்தல், கூட்டல், லாகிர்தம், 2-முதல்-16-வரை, மற்றும் சிக்கலான பல்வேறு கணித முறைகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அவை; பாபிலோனிய கணித மேதைகள், Pi-3.125-என்ற அளவிற்கு அதனுடைய உண்மையான மதிப்பிற்கு, நெருங்கிவருகிற அளவிற்கு, கணித முறைகளை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர். வானவியல் பெரிதும் வளர்ந்திருந்தது. எதிர்காலம் பற்றிய அனுமானங்களை கூறுவது, கெட்ட சகுனங்களை கூறுவது, கிரகங்கள் நடமாட்டம், கிரகணங்கள் ஆகியவை துல்லியமாக, கணக்கிடப்பட்டன (3).

மெசப்பட்டோமிய சமுதாயத்தின், சமுதாய மற்றும் அரசியல் அமைப்பு முறை நேரிடையாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருந்து கண்டுபிடித்துவிட முடியாது. அகழ்வாராய்ச்சி நிபுணர்களுக்கிடையே, இது சம்மந்தமாக, கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சமுதாயத்தின் தன்மை, அதனுடைய வளர்ச்சி போக்கு ஆகியவற்றை ஆராய்ந்த பீட்டர் சார்வ்ாட் கி.மு.3000-ஆண்டிலேயே, மெசப்பட்டோமிய சமுதாயத்தின் எல்லா அம்சங்களையும், சமத்துவமும், பொதுத்தன்மையும், நிலவியதாக, கூறகிறார். அவர்களது வாழ்க்கைத்தரம் சமச்சீர் நிலையில் நிலைநாட்டப்பட்டது. அதற்கு ஏற்ற வகையில், சொத்துக்கள் பகுத்து, வழங்கப்பட்டன. பொதுமக்கள், கூட்டமாக இணைந்து பொது நலன்கள் பற்றி விவாதித்து முடிவு செய்தனர். வாழ்விலும், சாவிலும், அனைவருக்கும் சமமான மரியாதைதான் தரப்பட்டது என்று அவர் எழுதியுள்ளார் (வரலாறு முந்தைய மெசப்பட்டோமியா - பக்கம் - 158-159).

கி.மு.3000-லிருந்து, சமுதாய ஏற்றத்தாழ்வுகள் உருவானதற்கான சான்றுகள் ஓரளவிற்கு கிடைத்திருக்கின்றன. உர்-பகுதியில், மன்னர் கல்லறைகள் காணப்படுவது, அரசியல் ஆதிக்கக்குழு அல்லது ஆளும் வர்க்கம் உருவானதை காட்டுகிறது. ஆனால், சில அகழ்வாராய்ச்சியாளர்கள், இந்த கல்லறைகளை வைத்து இப்படி மதிப்பீடு செய்வதை மறுத்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் இரண்டு பெரிய நாகரீகங்கள் தோன்றின. இன்றைய ஈராக்கிற்கு, தென்பகுதியில் சுமேரிய நாகரீகம் தோன்றியது. வடக்கில் அக்காடிய நாகரீகம் தோன்றியது. நகரங்களே நாடுகள் என்ற அடிப்படையில், இந்த நாகரீகங்கள் வளர்ந்தன. முந்தைய காலத்து கலாச்சார பாரம்பரியங்கள் பல அப்படியே, பேணிக்காக்கப்பட்டு வந்தன. கி.மு.2334-ஆண்டு வரை எந்த சாம்ராஜ்ஜியமும் தோன்றவில்லை. அந்த ஆண்டுதான், அகாடே பகுதியைச் சேர்ந்த சர்கோன் முதலாவது சாம்ராஜ்யத்தை நிறுவினார். அவர் இரண்டு பெரிய கூட்டரசுகளை இணைத்தார்.

சர்கோனின் சாம்ராஜ்ஜியம், மிகக்குறுகிய காலம் தான் இருந்தது. கி.மு.2112-ம் ஆண்டில், உர்நம்முசாம் ராஜ்ஜியம் உருவாயிற்று, இந்த சாம்ராஜ்ஜியம் கி.மு.1990-வரை நீடித்தது. அந்த அளவிற்கு கவனமாக நாட்டின் எல்லா ஆதாரங்களும், நிர்வகிக்கப்பட்டதற்கான சான்றுகள், ஆயிரக்கணக்கான களிமண் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அதற்குபின்னர், பாபிலோனிய சாம்ராஜ்ஜியம், உருவாயிற்று. அந்த பாபிலோனிய சாம்ராஜ்ஜியத்தின் மிக உயர்ந்த அந்தஸ்து ஹமூராபி காலத்தில் கி.மு.1792-ம் ஆண்டில் உருவாயிற்று.

கி.மு.12-ம் நூற்றாண்டு நடுப்பகுதியில், முதலாவது அசிரியா சாம்ராஜ்ஜியம் எழுந்தது. அசிரியர்கள் மீண்டும், மெசப்பட்டோமியா மீது, ஆதிக்கம் செலுத்தினர். வளைகுடாவில் இருந்து, மத்திய தரைக்கடல் வரை, கி.மு.9-தாவது நூற்றாண்டில் அசரியா ஆதிக்கம் செலுத்தியது. கி.மு.612-ல், பாபிலோனிய சாம்ராஜ்ஜியம் நிறுவப்பட்டது. அந்த சாம்ராஜ்ஜியத்தின் தலைசிறந்த மன்னரான, நேபுசாஸ்நிசார்(Nebuchadnezzar), பாபிலோன், தொங்கும் தோட்டங்களை அமைத்தார். நகரில் இரட்டைச் சுவர்களை கட்டினார், பெரிய வழிபாட்டுத்தளத்தை அமைத்தார். பேரணி நடத்துவதற்கான சாலைகளை அமைத்தார். ஜெரூசலத்தை சூறையாடியதற்கு பொறுப்பானவர் அவர்தான். பல யூதர்களை அடிமைகளாக பிடித்துவந்தார்.

இப்படி, பல்வேறு சாம்ராஜ்ஜியங்கள் மற்றும், பெர்சியா சாம்ராஜ்ஜியம் ஒன்றன்பின், ஒன்றாக உருவாகி, நிலைநாட்டப்பட்டு வந்ததற்கான காரணம் பாசன முறைகளால் உருவான மிகப்பெரும் உற்பத்தித்திறன், மற்றும், நிலைநாட்டப்பட்ட மிகவும் சிக்கலான நிர்வாக முறை, அவர்கள் உருவாக்கியது. அதிநுட்பமான, கருத்துக்கள்தான், பிற்கால சமுதாயங்களில் அறிவு ஜீவிகள் பயன்படுத்திக்கொண்டவை. கிரேக்கர்கள்தான், நமக்கு நிலம் என்பது ஆறுகளுக்கு, நடுவில் உள்ளது என்று, அடையாளம் காட்டியவர்கள். அவர்களேகூட, வியந்து, நின்று மெசப்பட்டோமியாவின் சாதனைகளை பாராட்டியிருந்தனர்.

அண்மை நாட்களில் நடத்தப்பட்ட சூறையாடல்கள், திட்டமிட்டு அழிக்கப்பட்ட, அமைச்சங்களில் ஒன்றான ஈராக்கின் பாசனத்துறையின் அமைச்சர், இந்த செயல் மூலம், அமெரிக்க நிர்வாகம், ஈராக்கை திரும்பவும், இருண்ட காலத்திற்கு விரட்டுகின்றது என்று சொல்ல முடியும். ஆனால், ஒரு விதிவிலக்கு, ஐரோப்பிய நாடுகள் சந்தித்த, இருண்ட காலத்தை எப்போதுமே ஈராக் சந்தித்ததில்லை; சாம்ராஜ்ஜியங்கள் எழலாம், வீழ்ச்சியடையலாம், ஆனால், ஆறுகளுக்கு நடுவில் பாசன முறை நீடிக்கிறவரை, அந்த மக்களது தேவைக்குமேல் அதிகமாக, உணவு உற்பத்தியாகிக் கொண்டேயிருந்தது. இந்த பாசன முறையை அமெரிக்க நிர்வாகம் குறிவைத்து தாக்கியதன் மூலம், இதற்கு முன்னர், எந்த படையெடுப்பாளரும் செய்யாத அளவிற்கு சில வாரங்களில் அமெரிக்க நிர்வாகம் அதிக சேதத்தை உருவாக்கிவிட்டது.

ஈராக்கின் பண்பாட்டு சிறப்பு, பெர்சியா சாம்ராஜ்ஜியம், முடிவிற்கு வந்ததோடு, முற்றுப்பெற்றுவிடவில்லை. ஐரோப்பிய நாடுகள், இருண்ட காலங்களில் தத்தளித்த நேரத்தில், அது ஒரு, கல்விச் சுரங்கமாக விளங்கியது. பாக்தாத் கலிபாக்கள், மேலை நாடுகள் இழந்துவிட்ட, இலக்கிய பதிவேடுகளை அப்படியே காப்பாற்றித் தந்தார்கள். இஸ்லாமிய அறிஞர்கள்தான், அரிஸ்டாட்டில் தத்துவம், ஐரோப்பாவில், மீண்டும் முகிழ்த்து எழுவதற்கு, உயிர்நாடியாக, விளங்கியிருக்கிறார்கள், மற்றும் அவர்கள்தான், அதே இஸ்லாமிய அறிஞர்கள்தான், மறுமலர்ச்சிக்கும், உயிர்நாடியாக இருந்திருக்கிறார்கள்.

தேசீய நூலகத்தில், எந்தெந்தப் பொருட்கள் சூறையாடப்பட்டன, என்பது பற்றி பட்டியல் இடும்போதுதான், இழப்புக்களில் முழு அளவு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஏற்கெனவே ஒன்று தெளிவாகிவிட்டது, ஈராக் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, முழு மனித இனத்திற்கும் எதிராக, ஒரு பெரிய குற்றச்செயல் நடத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், மனித இனத்தின் வரலாற்றின் மீதே, அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த வகையில், பாக்தாத் சூறையாடப்பட்டது; புஷ் நிர்வாகத்தின், கொள்கையில், ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். ஏனென்றால், புஷ் நிர்வாகம், மனித இனத்தையே, கொடிய காட்டுமிராண்டித்தனத்தில், மூழ்கடிக்க முயன்று வருகிறது. கடந்த காலத்தில் நடைபெற்ற, எந்த, காட்டுமிராண்டித்தனத்தையும் மிஞ்சுகின்ற செயலாகும் இது.

குறிப்புகள்:-

1. பீட்டர்-சர்வாட், வரலாற்றுக்கு முந்தைய மெசப்பட்டோமியா, 2002.

2. பிரைன்-எம்.பாகான், மண்ணின் மைந்தர்கள், பிரின்டீஸ்ஹால், 2001.

3. மைக்கேல்ரூப், மெசப்பட்டோமியாவின் கலாச்சார வரைபடம், இக்குநாய் புக்ஸ், 1990.

See Also :

ஈராக்கினுடைய அருங்காட்சியகங்கள் சூறை: பண்பாட்டிற்கும் வரலாற்றிற்கும் எதிராக அமெரிக்கா போர் புரிகிறது

Top of page