World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US administration plans for long-term military occupation in Iraq

ஈராக்கில் நீண்ட கால இராணுவ ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்க நிர்வாகம் திட்டம்

By Peter Symonds
22 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

பொதுமக்களுக்காக வேறு வகையில் சொல்லிக்கொண்டிருந்தாலும், புஷ் நிர்வாகம் ஈராக்கில் நிரந்தரமாக தனது இராணுவத்தை வைத்திருப்பதற்கு, முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும், அமெரிக்காவின், கேந்திர மற்றும் பொருளாதார நலன்களை வலுப்படுத்தும் விரிவான, திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கையை புஷ் நிர்வாகம் எடுத்துவருகின்றது.

ஈராக்கில் கேந்திர பகுதிகளில் குறைந்தபட்சம் நான்கு இராணுவ தளங்களில் தொடர்ந்து செயலாற்ற, பென்டகன் திட்டமிட்டு வருவதாக மூத்த அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஞாயிறன்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. பாக்தாத்திற்கு சற்று வெளியில் சர்வதேச விமான நிலையம், தெற்கில் நசீரியா அருகில் டாலில் விமான தளம், மேற்கு பாலைவனத்தில், H-1- என்று அழைக்கப்படும் ஒதுக்குப்புற விமானதளம், மற்றும் கூர்து பகுதிகாளன வடக்கில், பாசூர் விமானதளம், ஆகியவை, பென்டகன் திட்டமிட்டுள்ள நான்கு தளங்களாகும்.

ஈராக்கில் உருவாகும் புதிய நிர்வாகத்துடன் உடன்பாடு, செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்று ஒப்புக்காக பேசினாலும் மேலே கூறப்பட்ட நான்கு தளங்களும், ஏற்கனவே இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதோடு அவற்றில் நிரந்தரமாக தங்குவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது. Tallil Forward விமானத்தள கமாண்டர் கேர்னல் ஜோன் டோபின்ஸ், அந்த பத்திரிகை நிருபருக்கு பேட்டியளிக்கும்போது அமெரிக்க விமானப்படை திட்டத்தில் இரண்டு தளங்கள், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன அவற்றில் நீண்ட காலத்திற்கு படைகள் இருக்கும் என குறிப்பிட்டார். சர்வதேச விமான நிலையம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்றும், அமெரிக்க சிறப்புப் படைகள், ஜோர்டான், மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள இரகசிய தளங்களிலிருந்து, அமெரிக்க சிறப்புப் படைகள் H-1 தலைமையகத்தை அமைப்பதற்காக, வந்து சேர்ந்திருக்கின்றன.

பாக்தாத்தில் அமைக்கப்படும் எந்த ஈராக்கிய ஆட்சியும், இந்த ஏற்பாட்டை அங்கீகரிக்கும் என்பதை வாஷிங்டன் தெளிவாக எதிர்பார்க்கிறது. புஷ் நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி விளக்கியுள்ளதைபோல்: "புதிய ஈராக்குடன், ஆப்கானிஸ்தானை போன்றவகையிலான, நீண்டகால பாதுகாப்பு உறவுகள் நிலவும். அது எந்த அளவிற்கு என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முழுமையாக செயல்படும் தளங்களா அல்லது சிறிய முன்னணி செயல்பாட்டு தளங்களா அல்லது படைகளுக்கான வசதி மட்டுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என விளக்கினார்."

ஆப்கானிஸ்தானுடன் ஒப்புநோக்கி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது தலிபான் வீழ்ச்சியடைந்து ஏறத்தாழ 18-மாதங்களுக்குப் பின்னரும், ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை திரும்ப பெறுவதற்கு அமெரிக்காவிடம் திட்டம் எதுவுமில்லை. தனக்கு கீழ்ப்படிவான ஆட்சியை காபூலில், உருவாக்கிவிட்டு, அமெரிக்க இராணுவம் இரண்டு பெரிய தலைமையகங்களை உருவாக்கியுள்ளது ஒன்று பாக்ராம் விமானதளம், இது காபூலுக்கு வடக்கே உள்ளது. இரண்டாவது தளம், தெற்கு நகரான கான்டகாரில் அமைந்திருக்கிறது. இவற்றுடன் பல்வேறு சிறிய முன்னணி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. "அல் காய்தா மற்றும் தாலிபானில் மீதமிருப்பவர்களை" தேடிக் கண்டுபிடிப்பது என்னும் பெயரில் நாடு முழுவதிலும் அமெரிக்கப் படைகள், எந்தவித தங்குதடையுமின்றி செயல்பட்டு வருகின்றன.

பென்டகன் ஆதரிக்கும், ஈராக்கின் அகதியான அஹமது சலாபி, பாக்தாத்தில் பிரதான அரசியல் பங்கு வகிப்பதை பென்டகன் ஆதரிக்கிறது. அவர் ஏற்கனவே அமெரிக்க இராணுவம் இருப்பதற்கு தனது ஆதரவை தெரிவித்துவிட்டார். "குறைந்தபட்சம் முதலாவது ஜனநாயக தேர்தல் நடத்தப்படும் வரை" அவருடைய கணிப்பில் இன்னமும் இரண்டு வருடங்களாகலாம் அதுவரை அமெரிக்க இராணுவம் இருப்பது அவசியமாகும். "ஈராக்கிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உருவாகியுள்ள கேந்திர உடன்பாடு இருவருக்குமே நல்லது என்பது" தனது சொந்தக் கருத்து என சலாபி சென்ற வாரக் கடைசியில் குறிப்பிட்டார்.

நேற்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ட்ரம்ஸ்பீல்ட் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது அமெரிக்க இராணுவம் நிரந்தரமாக ஈராக்கில் நிலைபெற்றிருப்பது தொடர்பான நியூயோர்க் டைம்ஸ் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். "அந்த செய்தி தவறானது, துரதிஷ்ட வசமானது, நாங்கள் ஆக்கிரமிப்பாளர்களாக செயல்பட திட்டமிடவில்லை". ஏதாவது ஒருவகையில் "நிரந்தரமாக நீடிக்கவும் விரும்பவில்லை" என்பதாக டிரம்ஸ்பீல்ட் குறிப்பிட்டார். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ஈராக்கில் அமெரிக்க தளங்கள் இருப்பது தொடர்பான தகவலுக்கு மறுப்புக்கூற மறுத்துவிட்டார்.

மேலும், ட்ரம்ஸ்பீல்ட் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதை நேருக்கு நேராக மறுக்கும் வகையில், பகிரங்கமாக அமெரிக்காவின் நீண்ட கால இராணுவ திட்டம் பற்றி, விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சென்ற செவ்வாய்க்கிழமையன்று வலதுசாரி அமைப்பான, அமெரிக்கன் எண்டர்பிரைஸ், இன்ஸ்ட்டியூட்டின் பொறுப்பு ஆய்வாளர் தோமஸ் டானல்லி பகிரங்கமாக "அமெரிக்கப் படைகள் ஈராக்கிய பிராந்தியத்தில் நீண்ட காலத்திற்கு தலைமுறைகளுக்கு நீடிக்கும்" என்று குறிப்பிட்டார். கன்சர்வேடிவ் சிந்தனையாளர்கள், புஷ் நிர்வாகத்தோடு நெருக்கமான உறவுகொண்டிருப்பவர்களும் குறிப்பாக, பென்டகன் பிரமுகர்களான ட்ரம்ஸ்பீல்ட், மற்றும் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர், போல் வுல்போவிச், ஆகியோருடன், நெருக்கமான உறவுகளை கொண்டிருப்பவர்களுமாவர்.

செனட் வெளியுறவுகள் குழுத்தலைவரும் மூத்த குடியரசுக் கட்சி செனட்டருமான ரிச்சர்ட் லுகார், ஞாயிறன்று NBC-க்கு அளித்த பேட்டியில், குறைந்தபட்சம் அங்கு நாம் ஐந்து ஆண்டுகள் இருப்பது பற்றி சிந்திக்கவேண்டும். அது மிகக் குறைவான மதிப்பீடுதான் என குறிப்பிட்டார். மிக விரைவாக போருக்கு பிந்திய நிர்வாகத்தை ஏற்படுத்த புஷ் நிர்வாகம் தவறிவிட்டதால், உருவாக்கப்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து லுகார் கவலை தெரிவித்துள்ளார். ஒரு இடைவெளி தோன்றியிருப்பதாகவும், அந்த இடைவெளியில் குறிப்பிடத்தக்க துன்பங்கள் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடைவெளியை இட்டு நிரப்புவதற்காக மதத்தலைவர்களும் மற்றும் மதக்குழுக்களும் விரைந்து செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

லுகார் மறைமுகமாக குறிப்பிடுவது என்னவென்றால், பாக்தாத், நசீராயா மற்றும் இதர ஈராக் நகரங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, அமெரிக்காவிற்கு எதிரான கண்டனப் போக்கு கணிசமாக வளர்ந்து வருவதை குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கண்டனங்களில் தற்போது மதத்தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அமெரிக்கப் படைகள் திருப்ப பெறப்பட்டு இஸ்லாமிய அரசு உருவாக்கப்படவேண்டும் என மதத்தலைவர்கள் கோரிவருகிறார்கள். பாக்தாத்தில் சியா- பிரிவினர் வாழும் புறநகர் பகுதிகளிலும், மற்றும் சில தென்பகுதி நகரங்களிலும், சியா குழுக்கள், மிக விரைவாக உள்ளூர் நிர்வாகங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. வெளிப்படையாக நடப்பதை: அமெரிக்காவின் இராணுவ படைபலம் ஆதரவு இல்லாமல் அமெரிக்காவிற்கு ஆதரவான பாக்தாத் ஆட்சி, நீடித்திருக்கும் என்று வாஷிங்டன் நம்ப முடியாது என லுகார் மிகச் சாதாரணமாக சொல்லுகிறார்.

ஓய்வுபெற்ற அமெரிக்க ஜெனரல் ஜே கார்னர், ஈராக்கில், இடைக்கால ஆளுனராக வாஷிங்டன் சார்பில் பணியாற்றப்போகிறார். அவர் நேற்று பாக்தாத் நகர மத்துவமனைகளில் ஒன்றில் ஒப்புக்காக உற்சாகம் அளிக்கும் உரையாற்றியிருக்கிறார். அமெரிக்க விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்று அது. உங்களோடு இணைந்து பணியாற்ற நீங்கள் முன்வரவேண்டும். அது கடுமையான பணியாக இருக்கும். நீண்ட காலம் பிடிக்கும் என அவர் கூறினார். சாதாரண ஈராக் மக்களிடையே எந்த அளவிற்கு கசப்பு உணர்வு இருக்கிறது, என்பதை ஒரு பெண் டாக்டர் இமான் கூறிய, கருத்து தெளிவாக்குகிறது. "அவர்கள் ஏதாவது எங்களுக்குத் தருகிறார்கள் என்றால், அது அவர்களது சொந்த பணம் அல்ல எங்களது எண்ணெய் வளத்திலிருந்து கிடைக்கின்ற பணம், சதாம் ஹூசேன் நியாயமற்ற ஆட்சியாளர், ஏதாவதொரு ஒரு கட்டத்தில் அவரை நாங்கள் தீர்த்துக்கட்டியிருப்போம். அந்நியர்கள் இங்கு வந்து புகல் என்ன நீதி? என்று அந்த டாக்டர் ஆவேசமாக கேட்டார்.

அமெரிக்க மேலாதிக்கத்திற்கான திட்டங்கள்

ஈராக்கில் நிரந்தரமாக அமெரிக்க இராணுவம் இருக்கவேண்டும் என்பது, அந்த நாடும் அதன் எண்ணெய் வளங்களும் உறுதியாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்பதை மட்டும் கருத்திற்கொண்டதல்ல. மத்திய கிழக்கு முழுவதிலும் தனது இராணுவ வலிமை மற்றும் மிரட்டல் மூலம் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான திட்டங்களை செயல்படுத்தும் கேந்திர தளமாக ஈராக்கை நிலைநாட்டவே புஷ் நிர்வாகம் விரும்புகிறது.

இதைப் பற்றி நியூயோர்க் டைம்ஸ், "மத்திய தரைக்கடலிலிருந்து, இந்து மகா சமுத்திரம் வரை தென்மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் தற்போது, ஒரு கேந்திர புரட்சி நடவடிக்கைகளுக்கு அமெரிக்க-ஈராக் உறவுகள், மிக முக்கியமான சம்பவங்களாக விளங்கும். ஈராக்கில் இராணுவம், காலூன்றியிருப்பதன் எதிரொலிப்பு சிரியாவிலும் இருக்கும், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து அமெரிக்கா நிலைபெற்றிருக்கிறது, அதன் மூலம் ஈரானை சுற்றி வளைக்கும் அளவில் அமெரிக்கா நிலை பெற்றிருப்பதாக" குறிப்பு எழுதியுள்ளது.

முன்னணி வெள்ளை மாளிகை அதிகாரிகள், ஏற்கனவே சிரியாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர் அதேபோன்று ஈரானுக்கும் எச்சரிக்கைவிடுத்திருக்கின்றனர். ஆதாரமற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பாக "மக்களை அழிக்கும் பயங்கர ஆயுதங்கள்" என்ற பெயரில் மிரட்டலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டிருப்பதைப்போல் ஈரானுக்கும், சிரியாவிற்கும் அருகாமையில் அமெரிக்க இராணுவம் நிலைபெற்றிருப்பது அவர்களை பீதியடையச் செய்திருக்கிறது.

ஈராக்கில் பிரதான அமெரிக்க இராணுவ தளங்களை நிலைநாட்டுவது சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலையை குறைக்கும். ஏனெனில் இந்த நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகள் வளர்ந்துவருகின்றன. இதற்கு முதல் கட்ட நடவடிக்கையாக துருக்கியில் உள்ள விமான தளத்திலிருந்த 50-அமெரிக்க இராணுவ விமானங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவிலும், மற்றும் ஜோர்டானிலும் இருந்த சிறப்புப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

ஈராக் போரினால், பென்டகன் மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாக, ஜேர்மனியில் தனது இராணுவ தளங்களை குறைத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. மேலும் கிழக்கு ஐரோப்பாவில் புதிய இராணுவத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துருக்கியில் இருந்து பாக்தாத்திற்கு வடக்கமுனையில் போர் தொடுக்க தடைவிதிக்கப்பட்டதால், கருங்கடல் துறைமுகத்திற்கு அருகில் உள்ள ருமேனிய விமானத்தளத்திலிருந்து, அமெரிக்கப் படைகள் விமானம் மூலம் அனுப்பட்டன. பல்கேரியாவின் புர்காஸ் விமான நிலையமும் அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஈராக்கில் இருந்து வெளியேறியவர்கள் தஞ்சம் புகுந்தவர்களுக்கு இராணுவப் பயிற்சியளிப்பதற்காக ஹங்கேரி அமெரிக்காவிற்கு ஒரு இராணுவத்தளத்தை திறந்துவிட்டிருக்கிறது.

ஐரோப்பாவில் உள்ள முன்னணி விமானப்படை அதிகாரி, ஜெனரல் கிரிகோரி மார்டின் இந்த மாத ஆரம்பத்தில் பல்கேரியாவிற்கும், ருமேனியாவிற்கும் விஜயம் செய்தார். பால்கன் பகுதியில் தனது இராணுவ தளங்களை அமைப்பதற்குரிய வாய்ப்புக்களை அவர் ஆராய்ந்தார். இந்த இடங்களில் தற்போது உறவுகளை உருவாக்கிக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார். "ஏதாவது ஒரு நாளில் எங்களுக்கு தேவைப்படும் வாய்ப்பாக அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும்" என்றும் அவர் கூறியதாக, கார்டியன் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

செப்டம்பர்-11 பயங்கரவாதிகள் தாக்குதலை புஷ் நிர்வாகம் பயன்படுத்திக்கொண்டு, முதலில் ஆப்கானிஸ்தான் மீதும் தற்போது ஈராக்கிலும் தாக்குதல் நடத்தி, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் நிலைநாட்டுவதற்கான நீண்ட காலத்திட்டத்தை வகுத்து செயல்பட்டு வருகின்றது. மத்திய கிழக்கில் மற்றும் மத்திய ஆசியாவில் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளை தனது கட்டுப்பாடடில் கொண்டுவர அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. புதிய இராணுவத்தளங்களை, தன்னை அதிக அளவில் பொருளாதார அடிப்படையில் சார்ந்துள்ள நாடுகளில், அல்லது வாஷிங்டனால் நேரடியாக பதவியில் ஆட்சியாளர்களை அமர்த்தியுள்ள நாடுகளில் அமைத்துவருகிறது.

கார்டியன் பத்திரிகை சுட்டிக்காட்டியிருப்பதைப்போல், "கடந்த இரண்டு ஆண்டுகளில், பால்கன் பகுதியிலிருந்து சீன எல்லை வரை மற்றும், காக்கஸ் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் இந்திய துணைக்கண்டம் வரை பல்லாயிரக்கணக்கான மைல்களை உள்ளடக்கிய பகுதிகளில் அமெரிக்கப் படைகள் மிக வேகமாக விரிவாக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் அடிவயிற்றுப் பகுதி என்று கருதப்படும் மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தனைச் சுற்றி 9 நாடுகளில் 13- புதிய தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய ஆசியா முதல் தடவையாக, அமெரிக்காவின் இராணுவ மிரட்டலுக்குள்ளாகிறது."

அமெரிக்காவின் பாதுகாப்பு தகவல்மைய நிபுணர் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் மார்க்குஸ் கோர்பின், கார்டியன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "உலகின் இதர பகுதிகள் கலவரமடைகின்ற வகையில், அமெரிக்காவின் இராணுவத்தளங்கள் மிக வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. அவை பரவலாகவும் அதன் வீச்சு மிக வலுவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது." இந்த விரிவான திட்டத்தின் ஒரு உயிர் நாடி அம்சம் ஈராக்கை அமெரிக்க காபந்து அரசாக மாற்றுவதாகும். இந்தத் திட்டத்தின் இறுதி நோக்கம், ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் உள்ள அமெரிக்காவின் பிரதான போட்டி நாடுகளின் பொருளாதார மற்றும் இராணுவ கேந்திர நலன்களை முறியடிக்கவேண்டும் என்பதேயாகும்.

Top of page