World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain's whistleblower scandal: Slanders against BBC's Andrew Gilligan

பிரிட்டனின் உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழல்: பிபிசியின் ஆண்ட்ரூ ஜில்லிகன் பற்றி அவதூறுகள்

By Chris Marsden
30 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை 24ம் தேதி, வெளிவிவகார குழுவிற்கு (Foreign Affairs Committee -FAC) தான் ஜூலை 17ம் தேதி கொடுத்த வாக்குமூலம் இப்பொழுது வெளியிடப்படவேண்டாம் என்று ஆண்ட்ரூ ஜில்லிகன் கேட்டுக்கொண்டதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றி அரசாங்கம் பொய் கூறியதா என்பது பற்றி இந்தக் குழு ஆராய்ந்து வருகிறது. உயர் அதிகாரி Dr.டேவிட் கெல்லியின் மரணம் பற்றிய நீதி விசாரணையில் அது தாக்கல் செய்யப்படும் வரை இரகசியமாகவே வைத்துக்கொள்ளப்படவேண்டும் என்று ஜில்லிகன் கேட்டுக்கொண்டுள்ளார்.

போர் தொடுப்பதற்காக, ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய அச்சுறுத்தலை மிகைப்படுத்துவதற்காக அது தொடர்பான செப்டம்பர் மாத உளவுத்துறைக் கோப்பை, தொழிற்கட்சி அரசாங்கம் குழப்பி அவலப்படுத்தியதாக, ஓர் ஆதாரத்தைக் கொண்டு, பிபிசி இன்று நிகழ்ச்சியின் செய்தியாளர் ஜில்லிகன் ஒரு வானொலி உரையில் கூறியிருந்தார். இதனால் பூசலிடவேண்டிய கட்டாயத்திற்குட்பட்ட பிரதம மந்திரி டோனி பிளேயருக்கு பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களைப் பற்றி வளர்ந்துவந்த குறைகூறல்களைத் திசை திருப்பும் பொருட்டு, இரண்டு பாராளுமன்ற விசாரணைகளை அமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விசாரணையின்போது, கவனத்தைத் தன்னிடமிருந்து வெளியே திசை திருப்புவதற்காக அரசாங்கம் பிபிசி-ஐ கடுமையான தாக்குதலுக்கு இலக்காக்கியது. ஜில்லிகனுடைய தகவலுக்கு ஆதாரம் பாதுகாப்புத் துறையின் நுண் உயிரியல் விஞ்ஞானியும், முன்னாள் ஆயுத ஆய்வாளருமான டாக்டர். டேவிட் கெல்லி என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் வற்புறுத்தியதோடு, அவரை இரு விசாரணைகளிலும் சாட்சியம் கூறவும் வற்புறுத்தியது. மறுநாள், ஜூலை 17 அன்று, தன்னுடைய ஆக்ஸ்போர்டுஷைர் இல்லத்திற்கருகே, மணிக்கட்டிலிருந்து இரத்தப்பெருக்கினால் மரணமுற்ற நிலையில் டேவிட்டின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. கெல்லியின் மரணத்திற்கு காரணத்தை ஆராய, ஹட்டனின் பிரபு (Lord Hutton) தலைமையில் ஒரு விசாரணை நடத்த உத்தரவு இடப்பட்டுள்ளது.

BBC தலைவர் கெவின் டேவிசிடம் (Gavyn Davies) இருந்து ஒரு கடிதம் வந்த பின்னர், "தயக்கத்துடன்" ஜில்லிகனுடைய சாட்சியத்தை வெளியிடுவதில்லை என்ற முடிவிற்கு வெளிவிவகார குழு ஒப்புக்கொண்டது. ஜில்லிகன் விசாரணையின்போது தெரிவித்தது சூடான கருத்து வேறுபாடுகள் கொண்ட விஷயமாகிவிட்ட நிலையில், இந்த முடிவு சற்றே வியப்பைக் கொடுத்துள்ளது.

கெல்லி இறந்த அன்று, குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜில்லிகன் கூடுதலான சாட்சியத்தை அளித்தார்; குழுவினர் கெல்லிதான் இவருடைய செய்திக்கு ஆதாரம் என்று உறுதிப்படுத்துமாறு ஜில்லிகனை நெருக்கிக்கொண்டிருந்தனர். ஒரே ஒரு கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினரும் விடுமுறையில் சென்றிருந்தபோது, தொழிற்கட்சி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் அக் குழு, கூட்டத்தைக் குறுகியகால அவகாச அறிவிப்புக் கொடுத்துக் கூட்டியது.

கூட்டம் முடிந்த அளவிலேயே, தொழிற்கட்சி எம்பியும் கமிட்டித் தலைவருமான டோனால்ட் ஆண்டர்சன் கூட்டத்தை "மன நிறைவளிக்காத சாட்சியுடனான, மன நிறைவற்ற விசாரணை" என்று விமர்சித்தார் மற்றும் ஜில்லிகன் தன் செய்தியை மாற்றிக்கொண்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டை ஜில்லிகன் மறுத்ததுடன் குழுக்கூட்டத்தை "கங்காரு நீதிமன்றம்" என்று விவரித்ததுடன் ``என்னை நையப்புடைக்க குழு தீர்மானித்திருந்தது`` என்றும் கூறினார். இரு தரப்பினருமே தனி விசாரணையின் குறிப்புக்கள் வெளியிடப்படவேண்டும் என்று வலியுறுத்தினர்.

"ஹட்டன் பிரபுவின் விசாரணை நடக்கும்போது இந்தக் குறிப்பு வெளிவந்தால் நிச்சயமாகப் பொருத்தமாக இருக்கும்" என்ற நம்பிக்கையும், கெல்லியின் குடும்பம் துக்கத்தில் உள்ளபோது சற்று "நிதானத்துடன்" நடந்துகொண்டால் நல்லது என்ற விருப்பத்தின் காரணமாகத்தான் ஜில்லிகன் தன்னுடைய சாட்சியக் குறிப்பை சிலகாலம் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கக் கேட்டுக்கொண்டதற்குக் காரணம் என்று ஒரு பிபிசி பேச்சாளர் கூறினார்.

ஆனால், வெளிவிவகாரக் குழு உறுப்பினரால் கொடுக்கப்படும் விளக்கம் இதுவல்ல மற்றும் செய்தி ஊடக பகுதிகள், "பிபிசி தலைவரிடம் இருந்து வந்த தனிப்பட்ட செய்தி இரகசியமாக வைக்கப்பட வேண்டியது" என்று ஆண்டர்சனால் கூறப்பட்ட டேவிசின் கடிதம் ஜில்லிகனுடைய மனநிலை சோர்வு பற்றி கவலைகளைக் கிளப்பி இருக்கிறது என்று சுட்டிக்காட்டியது.

அதே நாள் ஒரு பெயர் குறிக்கப்படாத டெலிகிராப்பில் வந்த அறிக்கை ஒன்று, "வெஸ்ட் மினிஸ்டர் ஆதாரம்", பிபிசி ஜில்லிகன் மனநிலையைப் பற்றிக் கவலை கொண்டுள்ளது என தெரிவிக்கிறது: "அவர்கள் சாட்சியத்தை ஹட்டன் விசாரணையின்போது கொடுக்கலாம் எனக் கருதுகின்றனர். டாக்டர் கெல்லி தன் உயிரை மாய்த்துக்ாெகள்வதற்கு முன் கொண்டிருந்த மனநிலைதான் இப்பொழுது கில்லிகனுக்கும் இருக்கிறது என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்."

இந்தக் கூற்றுக்களை நிராகரிக்க BBC யின் ஒரு செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ``ஆண்ட்ரூ ஜில்லிகனுடைய மனநிலை முழுமையான இயல்பாகத்தான் உள்ளது; அதைப் பற்றிக் கேள்வி கேட்பது முற்றிலும் தவறானதாகும். இத்தகைய அறிக்கைகளை யார் வெளியிட்டனர் என்பது பற்றி எங்களுக்குத் தெரியாது; ஆனால் அவை முழுப்பொய்; அவற்றை சுட்டிக்காட்டினால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.``

இதற்கு மறுநாள் டெய்லி மிரர் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் டொம் நியூட்டன், ``பிபிசி செய்தியாளர் ஆண்ட்ரூ ஜில்லிகன் மனச்சிதைவிற்குட்பட்டு, தற்கொலை செய்யும் அளவிற்கு விரக்தி அடைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் வகையிலான அவதூறுப் பிரச்சாரத்திற்குக் காரணகர்த்தா டோனி பிளேயருக்கு நெருங்கிய லேபர் எம்பி ஒருவர்தான் என்று நம்பப்படுகிறது`` என எழுதியுள்ளார்.

இந்த டெலிகிராப் உடைய ஆதாரம் லேபர் எம்பி யான வெளிவிவகாரக் குழுவில் இருக்கும் உறுப்பினர் எரிக் இல்ஸ்லியாக (Eric Illsley) இருக்கலாம் என்றும் பிபிசி-ஐக் குறைகூறுவதில் மிக வெளிப்படையாக இருந்து வருபவர் மற்றும் ஜில்லிகனிடம் விரோதப்போக்கைக் காட்டுபவர் என்றும் கூறப்படுகிறது. கெல்லியின் மரணத்திற்குப் பிறகு, ஜில்லிகன் `புத்தித் தடுமாற்ற விளிம்பில்` இருப்பதாக தான் கூறியதை அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

கெவின் டேவிஸ்தான் முதலில் ஜில்லிகனுடைய மனநிலை பற்றிய அச்சத்தை எழுப்பியதாகவும், டேவிஸும் பிபிசியும் பொய்யையே கூறுவதாகவும் மூடல் மழுப்பலின்றி இல்ஸ்லி குற்றஞ்சாட்டியுள்ளார். ``அதன் பின்னர் டேவிஸ் எங்களுக்குப் போன் செய்து சாட்சியத்தை வெளியிடவேண்டாம் என்றும் ஜில்லிகன் 'புத்தி தடுமாற்றத்தின் விளிம்பில்' இருப்பதாகவும் கூறினார்`` எனவும் தெரிவித்தார்.

``அது ஒரு அந்தரங்க உரையாடல் எனக் கொள்ளப்பட்டது; ஆனால் அதன் விவரம் வெளிவந்துவிட்டது. என்னையும் சேர்த்துப் பலரும் இப்பொழுது அதை அறிந்து உள்ளோம். மிஸ்டர் டேவிஸ் கூறியதையேதான் நான் திருப்பிச் சொல்லியிருக்கலாம், மற்றவர்களுக்கோ அவருடைய கருத்துக்கள் தெரியும். என்ன பேசப்பட்டது என்பது பற்றி நான் மற்றவர்களுக்குச் சொல்லியுள்ளேன்; ஆனால் ஜில்லிகன் தற்கொலையின் விளிம்பில் இருப்பதாக நான் சொல்லவில்லை.``

``அந்தக் கதை கெவின் டேவிஸிடமிருந்துதான் வந்தது; அதைப் பற்றி இரு கருத்துக்களுக்கு இடமில்லை.``

பிபிசி செய்தித் தொடர்பாளர் அதற்கு விடையிறுக்கும் வகையில் சொன்னார்: ``டோனால்ட் ஆண்டர்சனுக்கு பிபிசி தலைவர் எழுதியுள்ள கடிதத்திலும், டெலிபோன் உரையாடலிலும் ஆண்ட்ரூ ஜில்லிகனின் மனநிலை பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே.``

``திரு. ஜில்லிகன் குழுவிற்கு அளித்த சாட்சிக் குறிப்பு வெளியீடு பற்றிய அவருடைய ஒரே அக்கறை, டாக்டர் கெல்லியின் இறுதிச்சடங்குகள் விரைவில் நடைபெற இருப்பதால் அவர் குடும்பத்தினருக்கு உரிய மரியாதை கொடுக்கலாமே என்பதுதான். இது ஒரு நிதானத்திற்கான வேண்டுகோள். திரு. இல்ஸ்லி ஏன் இத்தகைய கருத்துக்களைக் கூறியுள்ளார் என்பது பற்றிய ஊகங்களை நாங்கள் செய்ய விரும்பவில்லை.``

ஜூலை 28 அன்று மிரர் ஒரு பிரத்தியேகமான பேட்டியைக் ஜில்லிகனுடன் கண்டது, அதில் அவர் அரசாங்கம் தன் மீது "இழிவான" சேற்றைப் பூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதைக் கண்டித்தார்.

"என்னைப் பற்றியும் என் செய்தி சேகரிக்கும் பணியைப் பற்றியும் இவர்கள் கூறியுள்ள பொய்களையும், சகதி பூசும் தன்மையுடைய பிரச்சாரங்களையும் பார்க்கும்போது உண்மையில் கடந்த பல வாரங்களாகக் கொலை செய்யலாம் என்ற உணர்வு கொண்டேனேயொழிய, தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கருதியதில்லை" என மிரர் இடம் ஜில்லிகன் கூறினார்.

"மிக இழிவாக நடந்துகொண்டவர்களுள் திருவாளர் இல்ஸ்லியும் ஒருவராவார்; என்னிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவருக்கு நான் எழுதப்போகிறேன்.``

இந்தக் கெல்லி அவதூறில் கடைசித் திருப்பம் கடுமையான எச்சரிக்கைகளை வெளிப்படுத்துகிறது.

முதலில் ஜில்லிகன் சாட்சியக் குறிப்பு நிறுத்திவைக்கப்படவேண்டும் என்று கூறியதே அவருக்கும் பிபிசி க்கும் எந்த அளவு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்ததால் தங்கள் நிலையிலிருந்து பின்வாங்குவர் என்பதைக் காட்டும்; மேலும் நிதானப்போக்கிற்கு காலஅவகாசம் பிளேயர் கேட்டதைக் குறிப்பிட்டுள்ளதும், இத்தன்மையைத் தெளிவாக்குகிறது.

அரசாங்கத்தையும் அதனுடைய ஆதரவாளர்களையும் பொறுத்தவரை ஜில்லிகன் பால் நிதானப்போக்கு காட்டப்படவில்லை; மாறாக அவதூறுப் பிரச்சாரத்தில் கூடுதல் கட்டமாக அவருடைய மனநலனையே கேள்விக்குட்படுத்தியுள்ளனர். கெல்லி விவகாரத்தால் அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து இனி வேறு எதையும் எதிர்பார்ப்பது மன்னிக்க முடியாத அரசியல் அறியாமையையே குறிக்கும்.

அதே காரணத்திற்காக, ஜில்லிகன் மற்றும் பிபிசி-ன் முடிவும், ஹட்டன் விசாரணையின் நேர்மைக்கு சட்டப்படி உரிமை அற்ற ஒப்புதல் அளிக்கிறது.

பொதுவாகவே இதுபோன்ற விசாரணைகள், உண்மையை மறைப்பதற்கேயொழிய, வெளிப்படுத்துவதற்கு அல்ல. கெல்லியின் மரணம் எவ்வாறு, ஏன் நடந்தது பற்றி அம்பலப்படுத்தப்பட வேண்டுமானால், வெளிப்படுத்தப்பட வேண்டிய உண்மையை மறைப்பதற்கான கருவியாக ஹட்டன் விசாரணை ஏற்கெனவே ஆகி இருக்கிறது. எப்படியும், ஜில்லிகனோ, பிபிசியோ, வெளிவிவகாரக் குழுவோ, அரசாங்கமோ, ஹட்டன் பிரபுவோ மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சாட்சியத்தை தடை செய்யும் உரிமையைப் பெற்றுவிடக்கூடாது. உண்மை தேடல் என்பது ஜில்லிகன் சாட்சியக் குறிப்பை வெளியிடுவதிலும் வெளிவிவகார குழுவிற்கு டேவிஸ் எழுதிய கடிதத்தையும் வெளியிடுவது ஆகும்.

இந்த நிகழ்ச்சிகளில் உள்ள வேறு ஒரு அம்சத்தையும் அக்கறையுடன் கவனித்தாக வேண்டும். ``வெஸ்ட் மின்ஸ்டர் ஆதாரம்`` பற்றிய கூற்றும் இல்ஸ்லியின் கருத்துக்களும், அரசியல், உணர்வு அளவில் ஜில்லிகன் மீது தாக்கத்தைக் கொண்டிருப்பதுடன், ஹட்டன் விசாரணையில் அரசாங்கத்தின் செயல்முறை பற்றி அவர் விமர்சித்து கூறும் எதனது உண்மைத் தன்மையையும் கீழறுத்துவிடும். மொத்தத்தில், மனநிலை தடுமாற்றத்திற்குட்பட்ட ஒரு நபரின் பேச்சை ஒருவர் ஏன் நம்ப வேண்டும் ?

ஆனால் கார்டியன் இதழின் Zoe Williams ஜில்லிகன் ``விளிம்பிற்கு மிக அருகில் உள்ளார்`` என்று கூறப்படுவதை, அதிலும் கெல்லியின் மரணம் பற்றிய சூழ்நிலைகள் விசாரிக்கப்படாத நிலையை எடுத்துக் கொள்கையில், மிகுந்த ஆபத்தான அச்சுறுத்தலாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். என வாதிக்கிறார். தான் கூறுவது மிகச்சரியே என்ற போக்கில் இவ்வம்மையார் எழுதியுள்ளபோதிலும் அக்கட்டுரை சில ஆபத்தான உட்குறிப்புக்களையும் கொண்டுள்ளது; அவர் எழுதுவதாவது: ``ஒரு நல்ல சதித்திட்டம் எனக்குப் பிடிக்கும். உண்மையான சதித்திட்டம் பற்றி நல்ல திரைப்படத்தை நீங்கள் எழுதினால், மிகக்கூடுதலான சிக்கல்கள் அதில் காட்டப்படவேண்டுமென்று விரும்பாதிருந்தால், இப்படித்தான் நீங்கள் எழுதுவீர்கள். 56வது காட்சியில் லேபர் எம்.பி. இல்ஸ்லி, ஆண்ட்ரூ ஜில்லிகனை "விளம்பிற்கு அருகிலுள்ளவர்" என்று அழைத்து அவருடைய மனநிலையைப் பற்றிய சந்தேகத்தை எழுப்புகிறார். இந்த வெளிப்படுத்தலின் கொச்சைத்தன்மை ஒருபுறமிருக்க, அடிப்படையில் அவர் தற்கொலை எண்ணம் நிறைந்துள்ளவர் என்ற கருத்து வெளிப்படுகிறது. உங்களை ஏற்கனவே பிடிக்காதவர்கள், உங்களுடைய வாழவேண்டும் என்ற உந்துதலை கேள்விக்குட்படுத்தும்போது, உண்மையாகக் கூறுங்கள், ``சிங் சிங் சிங்`` போன்ற உரத்த குரல் உங்கள் தலைக்குள் பிளிறிடவில்லையா?``

``பொய் நமக்குக் கூறப்பட்டுவிட்டது என்று சொன்னால், அதிலும் ஒரு நன்மையுண்டு என்று நான் எதிர்பார்க்கிறேன்; சதித்திட்ட தத்துவத்தின் செல்வாக்கு ஒரு புத்தெழுச்சி காணும், அதையொட்டி ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கப்பால்தான் சிலவற்றைக் கண்ணுறுவோம்`` என்று வில்லியம்ஸ் கணிப்புக்கொடுத்து தன்னுடைய கட்டுரையை முடித்துள்ளார்.

தற்போதைய பத்திரிகைத் தர்மத்தின் இழிந்த நிலையின் அளவு "குறிப்பிட்ட தொலைவிற்கப்பால்" போன்ற சொற்றொடர்கள் அரிதாகிவிட்டதோடு, அதிகாரபூர்வமான விளக்கங்கள் பெரும்பாலும் ஐயத்திற்குட்படுத்தப்படுவதில்லை. கெல்லி விவகாரத்தில் முழு உண்மையும் வெளிவரவேண்டும் என்று விரும்புபவர்கள், அத்தகைய மெத்தனமான அணுகுமுறைக்கு, நம்பிக்கைத்தன்மையைக் கொடுக்கமாட்டார்கள்.

See Also:

ஈராக்கைப் பற்றி பிளேயர் பொய்கள் கூறியதைப் பாராளுமன்றம் மறைக்க முற்பட்டமை தோல்வியடைந்தது

பிளேயர் அரசாங்கத்தை அம்பலப்படுத்திய டாக்டர் கெல்லி மரணம் பற்றி பிளேயர் அரசாங்கம் பதில் சொல்லி ஆகவேண்டிய கேள்விகள்

பிரிட்டன்: டாக்டர் கெல்லி மரணம் தற்கொலையா?

Top of page