World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா

WSWS/SEP international conference:

Resolutions condemn war in Iraq, Australian intervention in Solomons

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச மாநாடு

ஈராக்கின் மீதான போர், சாலோமன்களில் ஆஸ்திரேலியத் தலையீடு இவற்றின் மீதான கண்டனத் தீர்மானங்கள்

14 July 2003

Use this version to print | Send this link by email | Email the author

``ஈராக்கின் மீதான போரின் படிப்பினைகள்: சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முன்னேற்ற வழி`` என்ற தலைப்பில் ஜூலை 5, 6ம் தேதிகளில் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் àôè சோசலிச வலைத் தளம் சோசலிச சமத்துவக் கட்சி இணைந்து ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தின. இம்மாநாட்டின் நிகழ்வைப் பற்றிய சுருக்கமான அறிக்கை: உலக சோசலிச வலைத் தளத்தில் ஜூலை 9ம் தேதி வெளியிடப்பட்டது. (பார்க்க: உலக சோசலிச வலைத் தளம் ஈராக்கியப் போரின் அரசியல் படிப்பினைகள் பற்றிய மாநாட்டை நடத்துகிறது) மற்றும் ஜூலை 10, 11ம் தேதிகளில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும், ஆஸ்திரேலியாவின் சோசலிச சமத்துவ கட்சியின் தேசியச் செயலாளருமான நிக் பீம்சின் தொடக்க அறிக்கை வெளியிடப்பட்டன. (பார்க்க: அமெரிக்க இராணுவ வாதத்தின் அரசியல் பொருளாதாரம் பகுதி1, பகுதி2)

இந்த மாநாட்டில் ஒருமனதாக பிரதிநிதிகளால் ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களில் முதல் இரண்டு தீர்மானங்களை இன்று வெளியிடுகின்றோம். வரும் நாட்களில் மற்றைய தீர்மானங்களை வெளியிட உள்ளோம்.

மாநாட்டுத் தீர்மானம்: அமெரிக்கத் தலைமையிலான ஈராக்கிய ஆக்கிரமிப்பை உடனே நிறுத்துக

ஈராக்கின் மீதான அமெரிக்கத் தலைமையிலான போர்தொடுப்பை குற்றஞ்சார்ந்த (Criminal) ஆக்கிரமிப்பு நடவடிக்கை என இந்த மாநாடு எந்த ஐயத்திற்குமிடமின்றிக் கண்டனம் செய்கிறது. அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் ஆஸ்திரேலியப் படைகள் சட்ட விரோதமாக ஈராக்கில் ஆக்கிரமித்துள்ள நிலை, சாதாரணக் குடிமக்களை கடுமையாக அடக்கும் புதிய முறையிலான குடியேற்ற ஆதிக்கப் போராக வளர்ந்து உள்ளது. அமெரிக்கர் அங்கு தொடர்ந்து இருப்பதற்கு மக்களது வளர்ந்து வரும் எதிர்ப்பானது, வீடு வீடாகச் சோதனையிடல், ஏராளமான பேரைக் கைது செய்தல், கொலைக்கும் தயங்காத பதிலடிகள் உட்பட பெரும் படைபலத்தைப் பயன்படுத்தல் மூலம் சந்திக்கப்பட்டுவருகிறது. இந்தப் போரைத் தொடங்கியதன் உண்மையான நோக்கம் ஈராக்கிய மக்களை விடுவிப்பது அல்ல, மாறாக அமெரிக்காவின் பெரு நிறுவன நிதி நலன்கள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்ற பூகோளத்தை மறு ஒழுங்கு செய்வதற்கானதொரு விரிந்த மூலோபாயத்தின் பகுதியாக, இந்த நாட்டைக் காலனியாக்கவும், அதனுடைய எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதும் ஆகும்.

இந்த மிருகத்தனமான போரின் நடப்பு அதன் நோக்கங்களில் இருந்து நேரடியாக ஊற்றெடுக்கிறது. ``அதிர்ச்சியையும் பிரமிப்பையும்`` கொடுக்கும் வகையில் மிகப்பெரிய குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியதன் அர்த்தம் ஈராக்கிய அரசாங்கத்தை சில நாட்களுக்குள்ளேயே மனதளவில் தகர்த்துவிடுவதும் அமெரிக்கா தலைமையிலான படைகள் மக்கள் வரவேற்பின் ஆரவாரத்திடையே பாக்தாதில் நுழைய வைப்பதும் ஆகும். ஆனால் மக்களின் தடுப்பும் எதிர்ப்பும் புலப்பட்ட அளவிலேயே பென்டகனுடைய மூலோபாயம் வெளிப்படையான அச்சத்தை ஏற்படுத்தும் வகைக்கு மாற்றப்பட்டது. க்ரூஸ் ஏவுகணைகள், குறைந்த திறனுடைய யூரேனிய குண்டுகள், குவியல்முறை குண்டுகள் - உயர்ந்த நுட்பமுடைய கண்காணிப்பு முறையில் செலுத்தப்படுபவை - அனைத்துமே, பழுதடைந்த டாங்குகள், குறைந்த அளவு ஆயுதமேந்திய முறைசாராப் போராளிகள், லாரிகளில் இருந்த வீரர்கள், ஒன்றுமறியாத சாதாரண மக்கள் ஆகியோர் மீது பொழியப்பெற்றன. இன்றியமையாத அடிப்படைக் கட்டுமானங்கள், பொதுத் தொடர்பு முறை, மின் வசதி வகை, குடிநீர் அளிப்புக்கள் உட்பட, குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டு, சாதாரண மக்கள் குடியிருப்புக்களும், பாக்தாத் சந்தைகள் போன்ற இராணுவ ரீதியாய் மதிப்பற்ற இடங்கள் உட்பட, தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது போலந்தின் குதிரைப்படை மீது நாஜிக்கள் `மின்னல் தாக்குதல்கள்` நடத்தியதற்கு அல்லது 19ம் நூற்றாண்டில் குடியேற்றங்கள் மீது நடத்தப்பட்ட ஒருதலைப்பட்ச படுகொலைகளுக்கு ஒப்பாகவே இந்தத் தாக்குதலும் அமைந்திருந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு USS ஆப்ரகாம் லிங்கன் போர்க் கப்பலின் மேல் தளத்திலிருந்து "பெரிய போர் நடவடிக்கைகள்" முடிந்துவிட்டன என்று ஜனாதிபதி புஷ் பிரகடனப்படுத்தினார். ஆனால் சண்டையிடுதலோ தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது. அமெரிக்க எதிர்ப்புக்கள், ஆயுதங்கொண்டு தாக்குதல் என்ற இரண்டும் பெருகிவரும் நிலையில் சாதாரண மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்குக் காட்டும் பரந்த அளவிலான விரோதப்போக்கை வெளிப்படுத்துவதோடு, அமெரிக்காவின் அபத்தமான கூற்றான ``ஹுசேன் ஆதரவாளரை`` த் தாக்க மட்டுமே தங்கள் நடவடிக்கை உள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளன. ஈராக்கிய மக்களுக்கெதிரான போரில்தான் வாஷிங்டன் இப்பொழுது ஈடுபட்டுள்ளது மற்றும் மொத்த மக்கட்தொகையையும் அச்சுறுத்தும் வியட்நாமிய முறைகளைத்தான் புதுப்பிக்க முயன்றுள்ளது.

ஈராக்கின் மீது படையெடுப்பதற்காக புஷ், பிளேயர், ஹொவார்ட் ஆகியோர் கூறிய பாசாங்குக் காரணங்கள் அனைத்துமே -அதுவும் உலகம் இதுவரை கண்டிராத அளவு நடத்திய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மீறி- தயாரிக்கப்பட்ட சான்றுகளையும், அப்பட்டமான பொய்களையும்தான் ஆதாரமாகக் கொண்டவை என அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. பேரழிவு ஆயுதங்களைப் பற்றிய ஐ.நா. தீர்மானங்களை ஈராக் ஏற்கவில்லை என்ற முக்கிய காரணம் மாபெரும் மோசடி என புலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்க விஞ்ஞானிகள், வல்லுனர்கள், ஈராக் முழுவதிலும் தேடித் துருவியுங்கூட, அணுவாயுத, இரசாயன ஆயுத, உயிரியல் ஆயுத, வகைகள் பற்றியோ தடை செய்யப்பட்ட தொலைதூர ஏவுகணைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுடன் அதைப் பற்றிய ஆராய்ச்சிகளோ அவற்றை வளர்ப்பதற்கான சான்றுகளோ கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஹுசேனுடைய மதச்சார்பற்ற பாக்தாதின் பாதிஸ்ட் ஆட்சிக்கும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளான அல்கொய்தா அமைப்பிற்கும் இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு பற்றியும் எந்தச் சான்றுகளும் கிடைக்கவில்லை.

போர்த்தொடுப்பு ஒரு கொடுங்கோலாட்சியை அகற்றிவிட்டது என்ற வாஷிங்டனின் சமீபத்திய கூற்றும், ஒரு சிடுமூஞ்சித்தனமான தன்மையதாகும். இந்தோனேசியாவில் சுகார்ட்டோ, சிலியில் பினோசே போன்று, பாதிஸ்டுகளையும் ஹுசேனையும் பதவிக்கு வர உதவியதே அமெரிக்காவின் நேரடித் தலையீடு கொண்டிருந்ததுதான். ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் பல, சிஐஏ கொடுத்த பட்டியலின்படி 1960களில் பாதிஸ்டு குண்டர்களால் கொல்லப்பட்ட, அரசியல் விரோதிகள், இடதுசாரியை சேர்ந்தவர்களினது புதைகுழிகளாகும். 1980களில் ஈரானுக்கு எதிரான போரில் ஹுசேன் ஆட்சிக்கு, வாஷிங்டன் ஆதரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஈரானிய இராணுவ வீரர்கள், குர்தியச் சாதாரணக் குடிமக்கள் ஆகியோர் மீது இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துதற்கும் துணை நின்றது. 1990-91ல் நடைபெற்ற வளைகுடா போரில், இப்போதைய புஷ்ஷின் தகப்பனார் தூண்டுதலின் பேரில் எழுச்சியுற்ற ஷியைட்டுக்கள், குர்துகள் படுகொலை செய்யப்பட்டதற்கும் அமெரிக்காதான் காரணம்; ஏனென்றால், அவர்களின் நடவடிக்கை அப்பகுதியை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை செய்த பொழுது, அவர்களை தங்கள் விதிப்படி அழித்துக்கொள்ளட்டும் என்று கைவிட்டுவிட்டார்.

ஈராக்கிற்கு, அமெரிக்கா ஜனநாயக முறையைக் கொண்டுவரப் போவதில்லை. பாக்தாதில் வாஷிங்டன் அரசின் சார்பில் ஆட்சியாளராக உள்ள மூன்றாம் போல் பிறேமர், தடையற்ற, எதேச்சாதிகார சக்திகளுக்குத் தலைமை கொண்டுள்ளார். அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருப்பதற்கு எவரேனும் பேச்சு மூலமாகவோ எழுத்து மூலமாகவோ எதிர்ப்புத் தெரிவித்தால், அது குற்றச் செயலாகக் கருதப்பட்டு சிறைதண்டனை, பெருந்தொகை அபராதங்கள் போன்றவற்றிற்கு உட்படுவர் என்ற கடுமையான சட்டத்தையும், சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க இராணுவம் தொடர்ந்திருப்பதை விரும்பாதவர்கள் வேட்பாளராக வெற்றிபெறக்கூடும் என்று தெரிந்த அளவிலேயே, பிறேமர் வட்டார தேர்தல்கள் உட்பட எல்லாத் தேர்தல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டார். அரசாங்கத்தின் கைப்பாவையாக செயல்படுவதில் போரை முன்னெடுப்பதில் முன்னாலேயே தயார் செய்யப்பட்டுத் தெரிந்தெடுக்கப்பட்டிருந்த ஈராக்கிய புலம்பெயர்ந்தோர்கூட திறமையான முறையில் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.

நாட்டின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, பண்பாட்டு மரபு போன்றவை பெரும்பாலும் சிதைந்த நிலையில் உள்ளன. அமெரிக்கப் பெருநிறுவனங்களால் நாடு முழுமையான அளவில் தனியார்மயமாக்கப்படவும் பொருளாதாரச் சூறையாடலுக்காகவுமான தயாரிப்பில், போருக்கு முந்தைய ஆட்சியமைப்புக்கள், பணித்துறைச் செயல்கள், தொழில்கள் இவற்றை குறைக்கும் வகையில், பென்டகன் நனவானமுறையில் அதிக அளவிலான கொள்ளைச் செயல்களை போரையொட்டி அனுமதித்திருந்தது. அமெரிக்கத் திட்டத்திற்கு முக்கியமான இரண்டு கட்டடங்கள் -எண்ணெய் மற்றும் உள்துறை அமைச்சகங்களைச் சார்ந்தவை- மட்டுமே டாங்குகளாலும், படைகளாலும் காவல் செய்யப்பட்டன; பாக்தாதின் அருங்காட்சியகங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள், வணிக அமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் விடப்பட்டிருந்தன.

ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றியது ஒரு புதை குழியாக மாறிக்கொண்டு வருகிறது. வளர்ந்துவரும் ஈராக்கிய எதிர்ப்பை ஒடுக்குவதில் உதவுவதற்கு மற்ற நாடுகள் படைகளைக் கொடுக்குமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவருகிறது. புஷ் நிர்வாகத்தின் பொய்கள் அம்பலமான பின்னர், சாவு எண்ணிக்கை அதிகமாகும்பொழுது ஈராக்கில் கொல்ல அல்லது கொல்லப்பட இருக்கும் இராணுவ வீரர்களிடம் தாம் ஏன் இங்குள்ளோம் என்ற கேள்வி தவிர்க்கப்பட முடியாதது ஆகும். புஷ் நிர்வாகத்தின் போர் உந்துதலினால்தான் பெரும்பாலான ஆண் - பெண் இளவயதினர் போருக்குள் ஈடுபடுத்தப்பட்ட பலியாடுகளாக உள்ளனர். இவர்களுடைய உயிர்த் தியாகம், ஆளும் மேல்தட்டின் நலனுக்காகவேயொழிய, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இவற்றின் உழைக்கும் மக்களின் நலனுக்காக அல்ல.

அமெரிக்க சர்வதேச அடவாடித்தனம் வெறுமனே வெள்ளை மாளிகையின் வலதுசாரி சதிக்கூட்டத்தின் செயல் விளைவு மட்டுமல்ல. தீர்க்கப்படமுடியாத அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார, சமூக முரண்பாடுகளிலிருந்து அது விளைந்துள்ளது; மலைபோன்ற பெருநிறுவனக் கடன் சுமை, குறைந்து வரும் இலாப விகிதங்கள், செல்வந்தர் ஏழைகள் இவர்களுக்கிடையே பெருகிவரும் எற்றத்தாழ்வுகள் இவற்றிலும் அது பிரதிபலித்துள்ளது.

புஷ், பிளேயர், ஹொவார்ட் தங்களுடைய அடியாட்களுடன் ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் படையெடுப்பில் ஈடுபட்டதில், அனைவருமே ஒரு சட்ட விரோதமான போரைத் திட்டமிட்டுச் செயலாற்றியுள்ளனர் என்பதும், இதே குற்றத்திற்காக நூரெம்பேர்க்கில் நாஜித் தலைவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரண தண்டனைக்குள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய கரங்கள் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியரின் குருதியால் கறைபடிந்துள்ளது. இதற்குப் பொறுப்பாயிருந்தவர்கள் ஒரு சர்வதேச நீதியமைப்பின் முன்பு போர்க் குற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

புஷ் நிர்வாகம் இன்னமும் புதிய இராணுவ படையெடுப்புக்களுக்குத் தயார் செய்துகொண்டு வருகிறது. சிரியா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்கு எதிராக இப்பொழுது மேற்கொண்டுள்ள ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை மற்றும் இராணுவத் திட்டங்களை இம்மாநாடு கண்டிக்கிறது. ஈராக்கைத் தாக்க, தூண்டுதலின்றிச் செயல்பட்டதுபோல், பொருளாதார அளவில் பலவீனமான இந்த நாடுகளின்மீதும் போரைத் தொடுக்க அமெரிக்கா எதையும் நியாயப்படுத்த தேவையில்லை.

இந்த மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள, இப்பகுதியிலுள்ள, உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தை, ஈராக்கிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் அயல்நாட்டுப் படைகள் அனைத்தும் நிபந்தனையின்றி திரும்பப்பெறவேண்டும் என அழைப்பு விடுக்குமாறும், ஈராக்கிய மக்கள் தங்களது நாட்டின்மீதான காலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்த்து தங்கள் உரிமையை எந்த நிபந்தனையுமின்றி பாதுகாக்கவும் தங்கள் வருங்காலத்தை தாங்களே முடிவெடுக்கவும், ஈராக்கிய மக்களுடைய கடும் பொருளாதாரச் சமுதாயத் தேவைகளுக்காக அவசர உதவியாக பில்லியன் கணக்கில் டாலர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்குமாறு அழைப்பு விடுக்கிறது.

மாநாட்டுத் தீர்மானம்: ஈராக்கிலிருந்தும், சொலோமன் தீவுகளிலிருந்தும் ஆஸ்திரேலியப் படைகள் வெளியேறு!

அமெரிக்க பிரிட்டிஷ் படைகள் ஈராக்கின் மீது படையெடுத்துக் கைப்பற்றி அங்கே படைகளை நிறுவியிருப்பதை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு எனக் கூறி, ஹொவார்ட் அரசாங்கம் அதில் தொடர்ந்து பங்கு கொண்டிருப்பதை இம்மாநாடு கண்டிக்கிறது. தன்னுடைய புதிய காலனித்துவக் கொள்கைகளை தொடரவும், உள்நாட்டில் உள்ள கடுமையான பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவும், இரண்டாந்தர வல்லரசான ஆஸ்திரேலியா உலகின் தலையாய ஏகாதிபத்தியத்தின் மேலங்கித் துணியை எதிர்ப்பேச்சிற்கிடமின்றி, இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு உலவுகிறது.

புஷ் நிர்வாகத்தின் பொய்களுக்கும் ஏமாற்றுதல்களுக்கும் ஹொவார்ட் அரசாங்கம் துணை நின்று முழக்கமிட்டு ஆதரவு கொடுப்பது தற்செயலாக நிகழ்வது அல்ல. அல்கொய்தாவின் தொடர்பு ஈராக்கிற்கு உண்டு என்ற புனையப்பட்ட கூற்றையும், "பேரழிவு ஆயுதங்களை" ஈராக் கொண்டுள்ளது என்ற கட்டுக்கதைகளையடுத்தும் ஈராக்கியப் போரில் சேருவதற்கான உட்காரணங்கள் அதற்கில்லை. ``விருப்பமுடைய நண்பர்கள்`` என்ற புஷ்ஷின் கூற்றிற்கு நம்பிக்கைத் தன்மை தருவதற்கும், அமெரிக்க - ஆஸ்திரேலிய இராணுவ உடன்படிக்கையின் மூலம் தான் ஆசிய - பசிபிக் பகுதியில் அதன் சொந்த செல்வாக்கை நிறுத்திடவும் பறிமாறிக்கொள்ளப்படும் பிரதியீடாகும் இது.

அமெரிக்கா தலைமையிலான தாக்குதலில் சேருவதற்கு எடுக்கப்பட்ட முடிவு, ஆஸ்திரேலியா முழுவதும் நடந்த போரெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் ஜனநாயக நெறியையும் மீறியதாகும். ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஹொவார்ட் கூறியிருந்தபோதிலும், தாக்குதல் தொடக்கப்படுவதற்கு முன்பே ஆஸ்திரேலிய SAS துருப்புக்கள் ஈராக்கில் இருந்தன. மார்ச் 18 அன்று ஹொவார்டுக்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முழு அளவிலான போர் தொடக்கப்பட உள்ளது என கூறிய அளவில், ஹொவார்ட் ஒன்பது மாதங்களுக்கு முன்னரே அதற்கு இணக்கம் தெரிவித்திருந்ததை, அமைச்சரவை ஆராயாது முத்திரையிட்டு ஒப்புதல் தெரிவித்தது. அன்று காலை அதற்குப்பின்னர் கூட்டப்பட்ட பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்று வெறுமனே அறிவிக்கப்பட்டது.

இதற்கு மூன்று மாதங்களுக்குப் பின்னர், இதே ஜனநாயகமற்ற முறைகள்தான் சொலமோன் தீவுகளில் தலையிடுவதற்கு -புதிய காலனித்துவ முறையிலான திட்டத்தை தெற்கு பசிபிக் முழுவதும் கொண்டுவரும் முதற்கட்டமாக கையாளப்படுகின்றன- பாராளுமன்ற விவாதம் என்ற பெயரளவு முறைகூட இல்லாமல், ஹோவர்ட் அரசாங்கம், தொழிற்கட்சி, ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி என்ற அனைத்துப் பாராளுமன்ற எதிர்க்கட்சிகளுடைய ஆதரவுடனும், 2000 பேர் அடங்கிய இரணுவ; போலீஸ் படையொன்றை, கடற்படை பீரங்கிக் கப்பல்கள் ஆதரவில், பாதுகாப்பற்ற அந்நாட்டினை கட்டுப்பாட்டில் கொண்டுவர அனுப்பியுள்ளது.

வெள்ளை மாளிகையின் அடியாட்களிடமிருந்து பெருமையைச் சம்பாதித்த அளவில், புதிய முக்கியத்துவம் பெற்ற தலைக்கனத்தால், அமெரிக்க நிர்வாகம் உலகத்தை மறுஒழுங்கு செய்ய முற்படுவதுபோல், பசிபிக் பகுதியை, தங்கள் அரசாங்கம் மறுஒழுங்கு செய்ய முடியும் என்ற எண்ணத்தை ஹொவார்ட் அரசாங்கம் கொண்டுள்ளது. தூண்டுதலின்றி ஆக்கிரமிப்புச் செய்யும் முறை, ஜனநாயக மரபுகளைத் தூக்கியெறியும் தன்மை, தேசிய இறைமையை அவமதித்தல், சர்வதேச சட்டத்தை அசட்டை செய்தல் இவற்றில் சொலமோன்கள் மீதான நடவடிக்கையானது, சிறிய அளவில் ஈராக்கிய ஆக்கிரமிப்பு போல் அமையும்.

ஜூன் 25ம் தேதி கான்பெராவில் தேசிய பத்திரிகையாளர்கள் சங்கத்தில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாந்தர் டெளனர் ஆஸ்திரேலியாவின் புதிய காலனித்துவ அபிலாஷைகளைத் தெளிவாக்கியுள்ளார். இவருடைய வாஷிங்டன் ஆசான்களுடைய கருத்தைப் பிரதிபலிக்கும் முறையில், ஆஸ்திரேலியா தேசிய இறையாண்மையை ``முழுமையானது அன்று`` என கருதுகிறது என்றும் ஐ.நா.வைப் பற்றிப் பொருட்படுத்தாமல் தன் நாட்டின் நலன்களை காக்க "விருப்பமுடையோரின் கூட்டைக்கொண்டு" செயல்படுத்த உறுதி கொண்டுள்ளது எனவும் கூறினார்.

"கூட்டுறவு தலையீடு" என்ற முறையில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சொலோமன்களின் அரசாங்கத்தைத் தாங்கள் தலையிடுமாறு சம்பிரதாய ரீதியில் கேட்டுக்கொள்ள மிரட்டியும் மற்றைய பசிபிக் நாடுகள் நடவடிக்கையில் சேர்ந்துகொள்ள அழுத்தமும் கொடுத்தும் வருகின்றன. பாப்புவா நியுகினியா, வானாட்டு, பிஜி போன்ற நாடுகள் பங்குகொள்ள இருந்தாலும், தாங்கள் தாம் அடுத்த இலக்குகளோ என்ற அச்சத்திலும் உள்ளன.

"மனிதாபிமானத்தை" இட்டு படைகளை அனுப்புவதாக தெரிவிக்கப்படும் ஆஸ்திரேலியாவின் கூற்று பாசாங்கு நிறைந்ததாகும். தெற்கு பசிபிக்கின் பொருளாதாரத்தை இணைந்து ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும், பழைய காலனித்துவ வல்லரசான பிரிட்டனும்தான் சொலோமன் மக்களுடைய வறுமைக்கும், சமுதாய இழிவிற்கும், வகுப்புவாதப் பூசல்களுக்கும் முக்கிய காரணங்களாகும்.

சொலோமன்சை "தோல்வியுற்ற அரசு" என்று வருணித்த பின்னர், கான்பெரா ஆஸ்திரேலியப் பெருநிறுவனங்களின் நலன்களுக்காக அந்நாட்டின் அரசு அதிகாரத்தின் முக்கிய ஆதாரங்கள் மீது தனது கட்டுப்பாட்டை நிறுவவும் பொருளாதார வளங்களைச் சுரண்டவும் முற்பட உள்ளது. நாட்பட்ட வேலையின்மை, வறுமை, சமுதாய நெருக்கடிகள், விரோத உணர்வுகளைத் தூண்டுதல், ஆஸ்திரேலிய ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு, ஆகியவற்றை இதன் கொள்கைகள் அதிகப்படுத்தும். தவிர்க்க முடியாத வகையில் ஆஸ்திரேலியப் போலீசும் இராணுவத்தினரும் சொலமோன்களின் மக்களின் மீது அடக்குமுறையைக் கையாளும் போரில் உழல்வர்.

வாஷிங்டன் மத்திய கிழக்குப் பகுதியில் செய்ததைத்தான் ஹொவார்ட் அரசாங்கம் மாதிரியாகக் கொண்டுள்ளது என்பது மட்டுமல்ல. கிழக்கு திமோரில், முன்பு எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு இயக்கங்கள் ஆதரவுடன், கையாண்ட தலையீட்டு முறையை முன்னோடியாகக் கொண்டு இப்பொழுதும் இந்நிலையைச் சுரண்டப் பார்க்கிறது. திமோர் மக்கள்பால் ``மனிதாபிமானம்`` மற்றும் அவர்களுக்கு "சுதந்திரம்" ஏற்படுத்தல் என்ற மூடுதிரையின் கீழ் திமோரிலும் இந்தோனேசிய தீவுக்கூட்டங்களிலும் தனது மூலோபாய நலன்களை உத்திரவாதப்படுத்த அரசாங்கம் துருப்புக்களை அனுப்பியது. நான்கு ஆண்டுகள் கடந்தபின்னரும் சீரழிந்த நிலையே பலாபலனாகக் காணக் கிடக்கிறது. ஆஸ்திரேலியப் படைகள் வீதியைக் காக்கின்றன, வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகின்றன, உள்ளூர் ஆளும் மேல்தட்டினர் மேலை நாடுகளின் புரவல்தன்மைக்கு முற்றிலும் உட்பட்டுள்ளனர். இராணுவ அடாவடித்தன மிரட்டல்முறை, பொருளாதார ப்ளாக்மெயில், தூதரகமுறை அச்சுறுத்தல்கள் இவையடங்கிய கலவையினால் திமோரின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான பெரும்பகுதியை ஆஸ்திரேலிய நலன்கள் தன்னகத்தே கொண்டுள்ளன.

ஆஸ்திரேலிய மக்களுக்குப் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் இராணுவப் போக்கையும், காலனித்துவ முறையையும் ஹொவார்ட் அரசாங்கம் அரவணைப்பதை இம்மாநாடு கண்டிக்கின்றது. பயங்கரவாதத்தின் தாக்குதல்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக கான்பெராவின் கொள்கைகள் அந்நாட்டை புதிய மற்றும் அதிக அளவிலான இரத்தம் தோய்ந்த பேரழிவுகளுக்கே ஆளாக்கும்.

சொலோமன் தீவுகள் மற்றும் மற்றைய ஆசிய - பசிபிக் பகுதியின் மக்கள் ஆஸ்திரேலிய இராணுவ ஆற்றலை எதிர்க்க அனைத்து உரிமைகளையும் கொண்டவர்கள் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது. ஆஸ்திரேலிய, நியூசிலாந்து படைகள் ஈரக்கிலிருந்தும் ஆப்கானிஸ்தானிலிருந்தும் வாபஸ் பெறப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும் என்றும், வரவுள்ள தவிர்க்க முடியாத சொலோமன்ஸ் தீவுகளை எடுத்துக்கொள்வது போன்றவை நிறுத்தப்படவேண்டும் என்றும், மனிதாபிமான முறையில் மிக அவசரமான வகையில் சொலமோன் தீவுகள், திமோர், மற்றைய வறுமையில் வாடும் பசிபிக் நாடுகளின் மக்களுக்கு மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கவும் கோரிக்கைவிடவேண்டியது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கடமை ஆகும்.

Top of page