World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

John Christopher Burton, civil rights attorney and socialist, to run in California recall election

குடிமையுரிமை வழக்கறிஞரும் சோசலிஸ்டுமான ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன், கலிபோர்னியாவின் திருப்பி அழைத்தல் தேர்தலில் வேட்பாளராகிறார்

By Barry Gray
9 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் 7ம் தேதி நடைபெறவிருக்கும் கலிபோர்னியாவின் கவர்னரைத் திருப்பியழைக்கும் தேர்தலில், குடிமையுரிமை வழக்கறிஞரும் சோசலிச சமத்துவ கட்சியின் ஆதரவாளருமான ஜோன் கிறிஸ்டோபர் பேர்ட்டன் சுயேச்சை வேட்பாளராக நிற்பதற்கு வேட்பு மனு செய்துள்ளார்.

50 வயதான பேர்ட்டன் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் புகழ்பெற்ற குடிமையுரிமை வழக்கறிஞர் ஆவார். போலீஸ் அராஜகம் மற்றும் பாரபட்சம் காட்டல் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதாடுவதில் தனிச்சிறப்பு பெற்றுள்ளார். திருமணமாகி, இரண்டு குழந்தைகளை உடைய இவர், சோசலிச சமத்துவ கட்சியின் கொள்கைகளுக்கு செயலூக்கமான ஆதரவு கொடுத்திருப்பதுடன் உலக சோசலிச வலைத் தளத் திற்கு நிறைய கட்டுரைகளும் பங்களிப்பு செய்துள்ளார்.

வியாழன் வரை, தேர்தல் விதிகளின்படி திருப்பியழைத்தல் வாக்கிற்கு மாவட்ட தேவைகளைப் (Country Requirements) பூர்த்தி செய்யும் 37 வேட்பாளர்களில் பேர்ட்டனும் ஒருவர் என ஆகஸ்ட் 8ம் தேதி, வெள்ளி அன்று ெலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 7ம் தேதி கவர்னர் கிரே டேவிஸ் திருப்பியழைக்கப்படுவது பற்றி "வேண்டும்" அல்லது "வேண்டாம்" என வாக்களிக்கும் வாய்ப்புள்ள கலிபோர்னிய வாக்காளர்கள், அதே நேரம் அவருக்கு எதிரான வாக்குகள் 50 சதவிகிதத்திற்கு மேலிருந்தால், அவருக்குப் பதிலாக வர இருப்பதற்கு இதே தேர்தலில் ஒருவரையும் தேர்ந்தெடுக்க வழிவகை உள்ளது. திருப்பி அழைத்தலுக்கான வாக்குகள் பெரும்பான்மையாகிவிட்டால், அதிகபட்ச வாக்குகள் பெற்றுள்ள வேட்பாளர் டேவிஸூக்குப் பதிலாக கவர்னராகப் பதவியேற்பார்.

கலிபோர்னியாவின் வலதுசாரிக் குடியரசு சக்திகளால் ஏற்பாடு செய்யப்பட்டு பண உதவியும் அளிக்கப்படும் திருப்பியழைத்தல் முயற்சிக்கு பேர்ட்டன் எதிராக உள்ளார். 9 மாதத்திற்கு முன்னர்தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் டேவிஸ் திருப்பி அழைத்திடப்பட வேண்டும் என்பதற்கு ``கூடாது`` என வாக்களிக்கச் சொல்கிறார்.

இந்தத் திருப்பிழைத்தல் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், டேவிசுக்கோ அல்லது ஜனநாயகக் கட்சிக்கோ அவர்களின் அரசியல் கொள்கைகளுக்கோ பேர்ட்டன் எந்தவித ஆதரவும் வழங்கவில்லை; ஏனெனில் மாநிலத்தின் நிதி நெருக்கடியை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கு குடியரசுக் கட்சியுடன் அவர்கள் ஒத்துழைக்கின்றார்கள்.

பெருமுதலாளிகளின் இரு கட்சிகளுக்கும் எதிராக ஜனநாயக சோசலிச மாற்றுக் கொள்கையை முன்வைக்கும்பொருட்டு பேர்ட்டன் இத்தேர்தலில் நிற்கிறார். ஒருவேளை டேவிஸ் திருப்பி அழைக்கப்படவேண்டும் என்ற முடிவு ஏற்பட்டால், வாக்காளர்கள் உண்மையான தொழிலாளர் வர்க்க அடிப்படையிலான உண்மையான சுயாதீனமான அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு ஆதரவு தருவதற்காக தனக்கு வாக்களிக்குமாறு கலிபோர்னியர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் பேர்ட்டனின் பெயரை வாக்குச்சீட்டில் சேர்ப்பதற்காக, ஆகஸ்ட் 7ம் தேதி அவருடைய ஆதரவாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவில், சுயேட்சைக் கருத்துடையவர் என்றோ அரசியல் கட்சிகளில் குறித்த விருப்பம் இல்லையென்றோ தெரிவித்துள்ள 87 பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயர்கள் உள்ளன.

தெற்கு கலிபோர்னியாவில் Orange, சான்டியாகோ மாவட்டத் தேர்தல் அலுவலகங்களிலும் கூடுதலான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வட கலிபோர்னியாவில் சான்பிரான்ஸிஸ்கோ, அலமெடா, சாந்தா கிளாரா, சாந்தா க்ரூஸ் மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்டு 9, சனிக்கிழமையாகும்.

வாக்குப்பதிவில் பங்குபெற தகுதி காண்பதற்காக, வேட்பாளர்கள், குறைந்தபட்சம் 65 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், அதிகபட்சம் 100 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்களைக் குறித்திடல் வேண்டும்.

வேட்பு மனுத் தாக்கலுடன், பேர்ட்டன் வேட்பாளர் அறிக்கையொன்றையும் தாக்கல் செய்துள்ளார்; இந்த அறிக்கை கலிபோர்னியா வாக்காளர் செய்திச் சிறுநூலில் சேர்க்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட 10.8 மில்லியன் இல்லங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும். செப்டம்பர் 7லிருந்து செப்டம்பர் 16 வரை இந்தத் தகவல் அனுப்பிவைக்கப்படும் என மாநில தேர்தல் அதிகாரிகள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 11, திங்கட்கிழமை தொடக்கம் திருப்பி அழைத்தல் தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்களின் அறிக்கைகள் கலிபோர்னியாவின் அரசு செயலகத்துறை வலைத் தளமான www.ss.ca.gov வில் வெளியிடப்படும்.

Top of page