World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq war: more revelations of lies over Niger uranium

ஈராக் போர்: நைஜர் யூரேனியம் பற்றி மேலும் பொய்கள் அம்பலம்

By Barbara Slaughter
15 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீது முன்கூட்டி தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்துவதற்காக -2002 செப்டம்பர் "புலனாய்வு ஆவணங்களில்" சதாம் ஹூசேனிடம் 45-நிமிடங்களுக்குள் ஏவுகின்ற பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், 2001-ம் ஆண்டில் நைஜர் நாட்டிலிருந்து அணு ஆயுத தயாரிப்பு பொருட்களை வாங்குவதற்கு அவர் முயன்றிருந்தார் என்றும் கூறப்பட்ட- கூற்றுக்கள் வெறும் பொய் மூட்டைகள் என்று உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அப்படியிருந்தும் பிரதமர் டோனி பிளேயர் அவர் வெளியிட்ட ஆவணத்தை தொடர்ந்து தாங்கிப்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார். போர் தொடக்கப்பட்டமை நியாயம்தான் என்றும் ஈராக்கின் ஆயுதத்திட்டம் தொடர்பாக பிரத்தியேகமான புலனாய்வு தகவல், சுதந்திரமான மூல ஆதாரத்திலிருந்து அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதாகவும் கூறிவருகிறார். ஈராக் தூதுக்குழு ஒன்று 1999-ம் ஆண்டு நைஜருக்கு மேற்கொண்ட விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் தனது வாதத்தை இப்பொழுது சுருக்கிக் கொள்ள வேண்டிய அளவிற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அந்த விஜயம் எங்களது முடிவை ஆதரிப்பதாக அமைந்திருக்கிறது. "யூரேனியத்தை பெறுவதற்கு ஈராக் முயன்றது என்பதற்கு இந்த விஜயமே ஆதாரம் ஆகும்". (2003-ஜூலை மாதம் 14-ந்தேதி பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வமான பிரதிநிதி தெரிவித்தார்.)

1999-ம் ஆண்டு நைஜருக்கு விஜயம் செய்த ஈராக் தூதர் விஸ்ஸாம் அல் சகாவி (Wissam al-Zahawie) சென்றவாரம் லண்டனில் தங்கியிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் வந்திருந்தார். இந்தப் பிரச்சனையில் தனது கருத்தை தெரிவிக்கவும் தனது பெயரைத் தெளிவுபடுத்தவும் ஆகஸ்ட் 10-ந் தேதியன்று, இன்டிபென்டன்ட் ஆன் சன்டே பத்திரிகையின் ரேமாண்ட் வைட்டேக்கரிடம் பேட்டியளித்தார்.

1999-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆபிரிக்காவிற்கு தான் விஜயம் மேற்கொண்டது நைஜருக்குச் செல்வதற்காக மட்டுமே அல்ல, "நான்கு மேற்கு ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு அவர்கள் பாக்தாத் விஜயம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி சதாம் ஹூசேனின் சார்பில் அழைப்பை எடுத்துக்கொண்டு செல்லும்படி நான் பணிக்கப்பட்டிருந்ததாக" அவரும் கூறியுள்ளார்.

அந்த ஆண்டு இறுதியில் பாக்தாத்தில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியில் வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்ள ஊக்குவிப்பதன் மூலம், ஐ.நா பொருளாதாரத்தடையை சமாளிப்பதற்காக சதாம் ஹூசேனால் எடுக்கப்பட்ட முயற்சியாக அவ்வழைப்புக்கள் இருந்தன. வைட்டேக்கர் மத்திய கிழக்கு ஆய்வாளர் ஒருவரது கருத்தை மேற்கோள் காட்டியுள்ளார். ''இந்த நாடுகளின் சில, ஒரு கட்டத்தில் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறுகின்ற சூழ்நிலை ஏற்படும்போது அத்தகைய நாடுகள் ஈராக்கிற்கு எதிரான பொருளாதார தடையை முறியடிக்கும் வகையில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் சிந்தனை இருந்தது.''

சகாவி முதலில் நைஜருக்கு சென்றார். பர்க்கினா பாசோ, பெனின் மற்றும் கொங்கோ- பிரசவில் (Congo-Brazzaville) ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நைஜர் ஜனாதிபதி மட்டுமே அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். இரண்டு மாதங்களுக்கு பின்னர் பாக்தாத் வருவதாக ஒப்புக்கொண்டார். சிறிது காலம் கழித்து நைஜர் ஜனாதிபதி மைனசாரா கொலை செய்யப்பட்டு விட்டதால் விஜயம் மேற்கொள்ளவில்லை.

சகாவி (Zahawie) தூதரக பணியிலிருந்து 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இப்போது அவர் ஜோர்டானில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெப்ரவரி மாத தொடக்கம் வரை அவர் தனது ஆபிரிக்க பயணம் குறித்து சிந்தனை செலுத்தவில்லை. அப்போது அம்மானில் உள்ள ஈராக் தூதரகத்தில் இருந்து, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பாக்தாத்தில் உள்ள வெளியுறவுத்துறைக்கு வருமாறு சகாவிக்கு அவசர அழைப்பு வந்தது.

அவர் ஈராக் வந்ததும், ஐ.நா- ஆயுத ஆய்வாளர்கள் அவரை சந்திக்கவிரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. ''அவர்கள் சர்வதேச அணு சக்தி அமைப்பைச் சேர்ந்தவர்கள் (IAEA) அவர்களில் மூவர் ஆண்கள், மற்றும் இருவர் பெண்கள். ஆண்களில் இருவர் மட்டுமே என்னிடம் பேசினர். ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர், மற்றொருவர் கனடாவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் வாய்திறக்கவில்லை. நான் அவர்களை சந்தித்தது 'பேட்டி' என்று கூட கூறமுடியாது, விசாரிக்கப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அப்போது எந்த ஈராக் அதிகாரியும், உடன் இருக்கவில்லை. நான் அவர்களுடன் நடத்துகின்ற உரையாடலை எனது சொந்த கேசட் ரிகார்டரில் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்'' என்று சகாவி குறிப்பிட்டார்.

ஐ.நா- ஆயுத ஆய்வாளர்கள் ஈராக்கிற்கும், நைஜருக்கும் இடையே ஏதாவது தொடர்புகள் இருந்ததா என்பதையும், அவற்றை அவர் அறிவாரா என்பதையும் பற்றி கேட்டனர். இரு நாடுகளின் அதிகாரிகளின் விஜயங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது பற்றியும் கேட்டனர். நைஜருக்கு அவர் விஜயம் செய்ததன் நோக்கத்தை அவர்கள் விசாரித்தனர். ஈராக்கிற்கு நைஜர் யூரேனியம் விற்பது தொடர்பாக அவர் 2000- ம் ஆண்டு ஜூலை-6-ந்தேதி ஒரு கடிதத்தில் அவர் கையெழுத்திட்டாரா என்றும் ஐ.நா- ஆய்வாளர்கள் கேட்டனர். ''இல்லை அந்தக் கடிதத்தில் கையெழுத்திடவேயில்லை, அப்படி ஒரு கடிதத்தை பார்த்திருப்பீர்களானால் அது நிச்சயமாக போலிக் கடிதமாகத்தான் இருக்க முடியும். நான் எந்த நேரத்திலும் இரகசிய பேரங்களில் சம்மந்தப்பட்டிருக்கவில்லை. என்னை சந்திக்க விரும்புகின்ற, மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புகின்ற எவரையும் சந்திக்கவும் ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன்''- என்று சகாவி பதிலளித்தார்.

''இன்டிபென்டன்ட் ஆன் சன்டே'' பத்திரிகைக்கு சகாவி அளித்த பேட்டியில் ஐ.நா- ஆய்வாளர்களிடம் இருந்த ஆவணங்கள் தன்னிடம் காட்டப்படவில்லை, என்பதை சுட்டிக்காட்டினார். மறுநாள் IAEA- டைரக்டர் முகம்மது எல் பாராடி என்னுடைய பேட்டியில் திருப்தியடையவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்: "நான் வெளியிட விரும்பியதற்கு மேல் எனக்கு தகவல்கள் தெரியும் என்று அவருக்கு உணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும்." எனவே இரண்டாவது தடவையாக ஐ.நா- ஆய்வாளர்களை சந்திக்க கேட்கப்பட்டது. இரண்டாவது சந்திப்பில் நான் விசாரணைக்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தேன் அவர்கள் வசமிருந்த ஆவணங்களை பார்க்க விரும்பினேன். அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது.

''ஐ.நா- ஆய்வாளர்கள் தங்களது ஈராக் தொடர்பு அதிகாரியிடம் ஒரு கோரிக்கை விடுத்தனர். என்னுடைய மறுப்புக்களை நிலைநாட்டும் வகையில் என்னுடைய கையெழுத்தின் பிரதியை பெற விரும்பினர். என்னுடைய கையெழுத்துப் பிரதிகளை அவர்களுக்கு அனுப்பினேன். அடுத்த நாள் நான் ரோமில் இருந்தபோது எழுதிய கடிதங்களின் பிரதிகளை அவர்களுக்கு கொடுத்தேன். அந்த கடிதங்களையும், இணைத்து படித்து பார்த்த IAEA- குழுவினர் கடைசியாக அவர்களிடம் இருந்த ஆவணம் உண்மையில் போலியானது என்ற முடிவிற்கு வந்தனர்'' என சகாவி லண்டன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விளக்கியிருந்தார்.

ஒரு மாதத்திற்கு பின்னர் டாக்டர் எல் பாராடி ஐ.நா- பாதுகாப்பு சபையில் உரையாற்றும் போது ஐ.நா-வும் மற்றும் நடுநிலையான தடயவியல் நிபுணர்களும் -IAEA விற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் சரியானவையல்ல, உண்மையானவையல்ல, என்று கண்டுபிடித்ததாக குறிப்பிட்டார். ஜூலை- 7-ந்தேதி வெள்ளை மாளிகை அந்த ஆவணங்கள் போலியானவை என்று ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜனவரி மாதம் ஜனாதிபதி ஜோர்ஜ்-W-புஷ் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டதில் உரையாற்றும்போது அந்த ஆவணங்களை சுட்டிக்காட்டியிருக்க வேண்டியதில்லை என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட வேண்டி வந்தது.

இதில் பல கேள்விகள் விடையளிக்கப்படாமலேயே விடப்பட்டுள்ளன. அந்த போலி ஆவணங்களை தயாரித்தது யார்? யார் யாருக்கு அந்த போலி ஆவணங்களை வழங்கினார்கள்? இந்த விவகாரங்கள் முழுவதிலும் பிரிட்டன் மற்றும் அமெரிக்க புலனாய்வு சேவைகளின் பங்களிப்பு என்ன? IAEA- சில மணிநேரங்களில் கண்டுபிடித்த மோசடியை அந்த புலனாய்வு ஏஜென்சிகள் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்?

அதற்குப்பின்னர் அமெரிக்கா நைஜர் நாட்டிலிருந்து மேலும் தகவல்கள் எதுவும் வராது தடுக்க முயன்றிருக்கிறது. ஆகஸ்ட்-3-ந் தேதி சண்டே டெலிகிராப் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது. ஆபிரிக்காவிற்கான முன்னாள் அரசு துணைச்செயலாளர் ஹெர்மன் ஹோகன் முந்தியவாரம், நைஜர் ஜனாதிபதி Mamadou Tandja- யை சந்தித்ததாகவும் இந்த தகராறில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு அவரை எச்சரித்ததாகவும், அந்த பத்திரிகை தகவல் தந்தது.

ஒரு மூத்த நைஜர் அரசாங்க அதிகாரி சண்டே டெலிகிராப் நிருபருக்கு அளித்த பேட்டியில்" நைஜர் நாட்டிலிருந்து மேலும் சங்கடம் அளிக்கின்ற தகவல்கள் வராது தடுப்பதற்கு தெளிவான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக" தெரிவித்தார். வாஷிங்டனின் எச்சரிக்கையை கேட்டேயாக வேண்டும் என அவர் கூறினார். "திரு. கோகன் தெளிவாக எச்சரிக்கை செய்யாவிட்டாலும், அமெரிக்கா அல்லது பிரிட்டனுக்கு அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையில் இறங்கினால் அதனுடைய விளைவுகள் என்னவாக இருக்கும் என்று நைஜரில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் நைஜர் நாடு உலகிலேயே வறுமையில் வாடும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நாங்கள் உயிர் வாழ்வதற்கே, சர்வதேச வர்த்தகத்தை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது" என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

Top of page