World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Casting about for a pretext for war
Washington insists Iraqi scientists submit to private interviews

போர் புரிவதற்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதில் தீவிரம்

ஈராக் விஞ்ஞானிகள் தனிப்பட்டரீதியில் வாக்குமூலம் வழங்கவேண்டும் என வாஷிங்டன் வலியுறுத்துகின்றது

By Peter Symonds
25 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் போருக்கு எதிர்பு பெருகிவருவதால், புஷ் நிர்வாகம் எப்படியாவது ஈராக்கிற்கு எதிராக போர் புரிவதற்கு ஒரு சாக்குப்போக்கை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக முயன்று வருகின்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆயுத ஆய்வாளர்கள் தங்களது அறிக்கையை திங்களன்று தாக்கல் செய்த பின்னர், அதன்மீது விவாதம் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில் வாஷிங்டன் தொடர்ந்து ஈராக்கின் "ஒத்துழையாமை" மற்றும் "நிபந்தனைகளுக்கு உட்படாத போக்கு" குறித்து குற்றச்சாட்டுக்களைப் பறைசாற்றுகின்றது.

ஈராக் பேரழிவுமிக்க ஆயுதங்கள் என அழைக்கப்டும் எதையும் தயாரிக்கவில்லை. அல்லது அத்தகைய ஆயுதங்களைத் தயாரிக்க திட்டமிடவில்லை என்று தெரிந்த பின்னர் நேற்று புஷ் நிர்வாகம் ஈராக் விஞ்ஞானிக்களை ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் ஈராக் அதிகாரிகளுடன் இல்லாத நிலையில் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. ``ஈராக் விஞ்ஞானிகளை தனிப்பட்ட முறையில் பேட்டி காண்பதற்கு ஈராக் சம்மதம் தெரிவிக்காதது, நிபந்தனையை திட்டமிட்டே மீறுகின்ற செயலாகும்`` என்று வெள்ளை மாளிகையின் கருத்துரைப்பாளரான Ari Fleischer தெரிவித்தார்.

``ஈராக் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ள உடன்படவேண்டும். இதில், பேச்சுவார்த்தைக்கு இடமில்லை; விவாதத்திற்கு இடமில்லை. சதாம் ஹுசைனுக்கு இதில் எந்தவிதமான மாற்றீட்டிற்கும் இடமில்லை. அவர் இதில் மறுப்பு தெரிவிப்பது ஈராக் எதையோ மறைக்கின்றது, என்பதற்கு மேலும், ஆதாரமாக விளங்குகின்றது. ``சமாதானத்தை நிலைநாட்ட ஈராக் தனது விஞ்ஞானிகள் தனிப்பட்ட பேட்டியில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்தவேண்டும். அதையும் தாமதமில்லாமல் விவாதத்திற்கு வழியில்லாமல் செய்ய வேண்டும்`` என்று Fleischer தெரிவித்தார்.

சென்ற திங்கட்கிழமையே ஈராக் இத்தகைய அனுமதிக்கு உடன்பாடு தெரிவித்துவிட்டது என்ற உண்மையை, Fleischer புறக்கணித்துவிட்டார். ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களுடன் பத்து அம்ச உடன்பாடு ஒன்றை ஈராக் செய்துகொண்டது. ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களுடன் தலைமை தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஜெனரல் Hussam Muhammad Amin ஆறு விஞ்ஞானிகள் பேட்டியளிப்பதனை விரும்பினர் என்றும் அரசாங்க அதிகாரிகள் உடன் இருக்கவேண்டும். அல்லது தங்களது பேட்டி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், வலியுறுத்தினார்கள் என்று தெரிவித்தார்.

மிகுந்த விசனத்துடன் ஜெனரல் Amin நிருபர்களிடம் கூறியதாவது; ``இந்த பிரச்சனையை எப்படி, தீர்த்துவைப்பது; அந்த விஞ்ஞானியை சிறையில் அடைத்து, தனிப்பட்ட முறையில் பேட்டியளிக்குமாறு கூறமுடியுமா? அப்படிச் செய்வது அவரது, தனி மனித உரிமைக்கு முரணானது, இது தேவையற்றது`` என்று குறிப்பிட்டார். தனது விஞ்ஞானிகளை ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க மறுத்ததை காரணமாகக் கொண்டு அமெரிக்கா ஈராக்குடன் போருக்கு சாக்குபோக்குகளை தயாரித்து வருகின்றது.

இதற்கு தெளிவான அடையாளம் நேற்று அமெரிக்க பாதுகாப்புத்துறைத் துணை அமைச்சர் Paul Wolfowitz அறிக்கையில் தெளிவாக தெரிந்தது. நேற்று அறிக்கை வெளியிட்ட அவர், வலதுசாரி சித்தாந்தியான இவர், ஈராக்குடன் போர் தொடுக்க வேண்டும் என்பதில் கடந்த பத்தாண்டுகளக்கு மேலாக உறுதியுடன் உள்ளவர். நேற்று நியூயார்க்கில் அவர் உரையாற்றும்போது கூறியதாவது: "இன்றைய தினம், பல்வேறு செய்தி மூலங்கள் வழியாக சதாம் ஹுசைனின் மிரட்டலுக்கு ஆதாரம் கிடைத்திருக்கின்றது. ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களின் விசாரணையில் ஒத்துழைக்கும் எந்த விஞ்ஞானியாக இருந்தாலும், அவரும் அவரது குடும்பத்தினரும் கொலை செய்யப்படுவர் என்று சதாம் ஹுசைன் மிரட்டியிருக்கின்றார். ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் கேட்கும்போது என்னென்ன கூறவேண்டும் என்று ஈராக் விஞ்ஞானிகளுக்கு ஈராக் அரசு கற்றுத்தந்திருக்கின்றது, என்பதும் எங்களுக்குத் தெரியும்." எனக் கூறினார்.

ஈராக்கிடம் ஆயுதங்கள் இருப்பதாக, புஷ் நிர்வாகம் கூறிக்கொண்டிக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டையும்போல், Wolfowitz இன் அறிக்கையும் `மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாகவே` அமைந்திருக்கின்றது. எந்தவிதமான ஆதாரமும் காட்டப்படவில்லை. தனது தகவல் மூலங்கள் எவை என்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. ஈராக் புலனாய்வு அதிகாரிகளில் யார் அல்லது எந்த அதிகாரிகள் ஆள்மாறாட்டத்திற்காக தயாரிக்கப்பட்டனர், என்பது பற்றியும் அவர் எந்தவிதமான தகவலும் தரவில்லை. 1990-91-ம் ஆண்டு வளைகுடாப் போருக்குப் பின்னர் ஈராக்கின் முன்னணி விஞ்ஞானிகள் அனைவரும், உலகில் எல்லோருக்கம் தெரிந்தவர்கள்தான், ஏனென்றால் வளைகுடாப் போருக்குப் பின்னர், பல ஆண்டுகள் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் ஈராக்கில் விரிவான சோதனைகளை நடத்தியிருக்கின்றனர்.

சதாம் ஹுசைன் ஆட்சி வன்முறைப் பிரயோகத்தில் குறைவானதல்ல ஆனால், இப்போது பொதுமக்களுக்கு கிடைத்திருக்கிற தகவல்களை பார்த்தால் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் வாஷிங்டன் நிர்பந்தம் காரணமாக ஈராக் விஞ்ஞானிகளை மிரட்டுவதற்கும், அவர்களை திசை திருப்புவதற்கும் முயன்று வருகின்றார்கள். ஒரு சில விஞ்ஞானிகள் தான் பேட்டியளித்திக்கிறார்கள். பேட்டியளித்த இரண்டு விஞ்ஞானிகள் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் போக்கை பகிரங்கமாக கண்டித்திருக்கின்றனர். தங்களது சான்றுகளை திரித்துக்கூறவும், தனிப்பட்ட பேட்டிக்கு கட்டாயப்படுத்தவும், அவர்கள் முயன்று வருவதாக, அந்த இரண்டு ஈராக் விஞ்ஞானிகளும் கூறியுள்ளனர்.

"இரகசிய அணு ஆயுதத்திட்டம்"

முதல் சம்பவம் டிசம்பர் கடைசியில் நடைபெற்றது. ஐ.நா. அதிகாரி Hiro Ueki டிசம்பர் 27 அன்று பக்தாத்தில் ஒரு பேட்டியளித்தார். சர்வதேச அணு சக்தி ஏஜென்சி ஆய்வாளர்கள், ஈராக்கிலுள்ள அரசிற்குச் சொந்தமான ஒரு பெரிய நிறுவனத்தின் உலோகவியல் தொழில்நுட்ப ஊழியரை பேட்டி கண்டதாகவும், அவர் மூலம் இராணுவ திட்டங்களுகான தொழில்நுட்ப விபரங்களை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த உலோக தயாரிப்பு திட்டம் மறைமுக அணு ஆயுத திட்டத்திற்கு முன்னோடியாக இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். ஐ.நா. அதிகாரிகள் அந்த விஞ்ஞானியை முதல் தடவையாக, ஈராக்கிற்கு வெளியே கொண்டு சென்று விசாரிக்க தயாராகி வருவதாக அவர் கோடிட்டு காட்டினார். இது ஐ.நா. தீர்மானம் 1441 இன் நிலைக்கு விதிவிலக்கான நிபந்தனைகளின் அடிப்படையில் நடப்பதாகவும் Ueki தெரிவித்தார்.

சில மணி நேரங்களுக்குள் ஐ.நா. அதிகாரி கூறிய தகவல்கள் தொடர்பான உண்மைகள் அம்பலத்திற்கு வந்தன. அந்த விஞ்ஞானி, Kazem Mijbil நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது தான் அத்தகைய தகவல் எதையும் ஐ.நா. அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டார். அவர் ஈராக்கில் இருந்து வெளியேறுவதற்கான திட்டம் மிக வேகமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனால் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ஐ.நா. அதிகாரி Hiro Ueki இன் அறிக்கை மித மிஞ்சிய கற்பனை கலந்தது. ஜோடனை அளவிற்கு சென்று கொண்டிருக்கின்றது, என்று வர்ணித்த ஈராக் விஞ்ஞானி, ``அதை நான் கடுமையாக மறுக்கிறேன், வெளிப்படையாகச் சொல்வது என்றால், அந்த அறிக்கைகள் குறித்து மிகவும் கவலை அடைந்திருக்கிறேன். அவற்றிற்கும் உண்மைக்கும் சம்பந்தம் இல்லை`` என அவர் குறிப்பிட்டார்.

எண்பதுகளில் வாங்கப்பட்டது முதல், துருப்பிடித்துக்கொண்டிருக்கும் அலுமினிய குழாய்களை சீரமைப்பதில் உலோகவியல் தொழில்நுட்ப ஊழியர் என்ற முறையில் Mijbil ஈடுபட்டிருந்தார். தனது நிறுவனம் குழாய்களை சுத்தம் செய்வதில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாக அவர் விளக்கினார். அந்த அலுமினிய குழாய்கள் ஐ.நா. தீர்மானங்கள் அனுமதி வழங்கியுள்ள, குறுகிய எல்லை இலக்கைக் கொண்ட 81 மில்லிமீட்டர் ராக்கெட்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக அவர் விளக்கினார். இப்படி துருப்பிடித்த அலுமினிய குழாய்களை தூய்மையாக்குவது எப்படி ரகசிய ஆயுத திட்டமாக அமையும்? என்று அவர் கேட்டார்.

ஐ.நா. தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுவதற்கு தான் மறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். ஐ.நா. தலைமையகம் என்பதால் தனக்கு என்ன நேரும் என்பது குறித்து அவர் கவலை அடைந்ததாகவும், எப்படிவேண்டுமானாலும் தனது சாட்சியம் திருத்தப்படலாம் என்பது குறித்தும் கவலையடைந்ததாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க ராணுவத்தினர் கியூபாவில் நூற்றுக்கணக்கான போர் கைதிகளை அடைத்து வைத்து விசாரணை செய்து வருவது பற்றி குறிப்பிட்ட அந்த ஈராக் விஞ்ஞானி, ``ஐ.நா. தலைமையகம் குவான்டனமோ முகாம் போல் எனக்குத் தோன்றுகின்றது. மேலும் நான் ஒரு கைதியல்ல, நான் சுதந்திரமான ஈராக்கிய மனிதன்`` என்று அவர் குறிப்பட்டார்.

தனது சக விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு செல்லவோ தனிப்பட்ட முறையில் பேட்டியளிப்பதற்கோ மறுத்துவிடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். ``நான் எனது நாட்டில், ஈராக் அரசு பிரதிநிதி முன்னிலையில் பேட்டியளித்தேன். அந்த பேட்டி பத்திரிக்கைகளில் எப்படி பிரசுரிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள், எனவே, வெளிநாட்டில் ஒருவர் விசாரிக்கப்பட்டால், அது என்னவாகும்; கருத்து வேறுபாடுகளும், கட்டுக்கதைகளும், பொய்களும் தான் அதில் அதிகம் இருக்கும்`` என அந்த விஞ்ஞானி குறிப்பிட்டார்.

அலுமினியக் குழாய்கள் விவகாரம் மிகவும் அற்பமான ஒன்றல்ல; இந்தக் குழாய்களை ஈராக் இறக்குமதி செய்து, அவற்றின் மூலம் யுரேனியத்தை செறிவூட்டும் கருவிகளை தயாரிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது. இந்தக் கருவிகள் மூலம், அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான அடிப்படைகளை உருவாக்க முடியும் என்று அமெரிக்கா கூறுகின்றது. சென்ற செப்டம்பரில் ஐ.நா.வில், உரையாற்றிய புஷ் அதில் ஈராக் மீது, திட்டவட்டமான குற்றச்சாட்டுக்கள் என்று சிலவற்றை குறிப்பிட்டார். அதில் ஒன்று, இந்த அலுமினியக் குழாய்களிற்கு யூரேனிய செறிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்கும் நோக்குடன் ஈரக் அவற்றினைக் கொள்வனவு செய்ய முயன்றது என்பதாகும்.

இந்த கருத்துத் தொடர்பாக பல சந்தேகங்க்ள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அலுமினியக் குழாய்களை பொருத்தி 81 மில்லிமீட்டர் ராக்கெட்டுகளை தயாரிக்க முடியுமே தவிர அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான அடிப்படையை (gas centrifuges) உருவாக்க முடியாது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளிவந்த ஒரு நிபுணரது விளக்கத்தின்படி, யூரேனியத்தை செறிவூட்ட அலுமினிய குழாய்களை தொழில்நுட்ப அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஈராக் தவறான பொருட்களை வரவழைத்து, நீண்ட நேரத்தையும் பணத்தினையும் விரையம் செய்து அவற்றினை மீண்டும் சரிசெய்து ஆயுதம் தயாரிக்கும் தரத்திற்கு கொண்டுவர கட்டளையிட்டது என்று, நீங்கள் நம்பவேண்டியிருக்கும்`` அதே நேரத்தில் ஈராக் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கு இதர உயிர்நாடி உபகரணங்களான, தனிவகை காந்தம், உலோக மூடிகள், மோட்டார்கள் ஆகியவற்றிற்கு அனுப்பாணை (order) கொடுத்தது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடைக்கவில்லை.

Mijbil பகிரங்கமாக அறிக்கைகளை வெளியிட்ட பின்னர், ஐ.நா. ஆய்வாளர்கள் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளானார்கள், தங்களது கருத்தை திரும்பப் பெற்றக்கொண்டார்கள். ஐ.நா. அதிகாரி ஹீரோ ஊக்கி இரண்டாவது அறிக்கை ஒன்றை தனது நிலையை தெளிவுப்படுத்துவதற்காக வெளியிட்டார். அந்த அறிக்கையில் முந்திய அணுத ஆயுத திட்டம் எதிலும் அந்த ஈராக் விஞ்ஞானி சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டார். நான் அதைப்பற்றி எந்தவிதமான தீர்ப்பும் சொல்லவில்லை, Mijbil வெளியிட்ட "அறிக்கையில் சேர்க்கப்டாத தகவல் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் அக்கறைக்குரியதா இருக்கும்" என்றுதான் குறிப்பிட்டேன் என அந்த அதிகாரி விளக்கினார்.

ஜனவரி துவக்கத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜென்சி இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஈராக் வசமிருக்கும் அலுமினியக் குழாய்களும் அது இறக்குமதி செய்ய உத்தேசித்துள்ள அலுமினியக் குழாய்களும், நேரடியாக யூரேனிய செறிவூட்டத்திற்கு பயன்படாது, ஆனால் அவற்றைக் கொண்டு சாதாரண ஆட்டிலறி ராக்கெட்டுகளை தயாரிக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தது.

மாஃபியா கும்பலைப் போன்ற செயற்பாடு

மற்றொரு சம்பவம் ஈராக்கின் 55 வயதான அணு விஞ்ஞானி Faleh Hassan அவரும் மற்றொரு விஞ்ஞானியும் சம்பந்தப்பட்டது. இவ் இருவரது வீடுகளிலும் ஜனவரி 17ம் தேதி எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் சோதனை நடத்தினார்கள். அவரையும், அவரது குடும்பத்தினரையும் விசாரித்தார்கள் 6 மணி நேரத்திற்குமேல் அவரது வீட்டில் சோதனைகள் நடாத்தினார்கள் ஏராளமான தஸ்தாவேஜூகளையும், அறிக்கைகளையும் கைப்பற்றினார்கள். ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் வலியுறுத்தியதற்கு ஏற்ப, Hassan அவர்களை தனக்கு சொந்ததமாகயிருந்த பழைய பண்ணைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் ஐ.நா. ஆய்வாளர்களுடன் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றார். பல மணி நேரம் விவாதங்கள் நடைபெற்றன. அதன் பின்னர் Hassan இடமிருந்து கைப்பற்றப்பட்ட தஸ்தாவேஜூகளின் நகல் பிரதிகளை (photocopies) அவருக்குத் தர சம்மதித்தனர்.

இதைப்பற்றி ஊடகங்களில் மிகப்பெரும் பரபரப்போடு செய்திகள் வெளியிடப்பட்டன; 3000-பக்கங்களைக் கொண்ட தஸ்தாவேஜூகள் கைப்பற்றப்பட்டன. லேசர் கதிர்வீச்சு முறையில் யுரேனிய செறிவூட்ட திட்டங்கள் அதில் அடங்கியிருக்கின்றன, என்பது போன்ற தலைப்புக்களில் அவை செய்திகளைப் பரப்பின. இதில், சர்வதேச அணு சக்தி அமைப்பின் தலைவர், Mohamed ElBaradei யின்கருத்து மிக அதிக அளவில் வெளியிடப்பட்டது. அவர் ஈராக் மீது அவதூறு செய்யும் வகையில் அறிக்கை வெளியிட்டார். ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள், கண்டுபிடித்திருக்கும் சான்றுகள், ஈராக் ஒத்துழைத்க மறுப்பதையும் அணு ஆயுத திட்டங்களை ரகசியமாக வைத்திருப்பதையும், காட்டுவதாக அவர் கருத்து தெரிவித்தார். இந்த தஸ்தாவேஜூகளை நாங்களே கண்டுபிடித்திருக்க வேண்டிய, அவசியம் இல்லை. அவை ஏன்? ஓர் தனியார் வீட்டில் இருந்தன. அவற்றை ஏன் எங்களிடம் தரவில்லை என ElBaradei கேட்டார்.

மறு நாள் ஈராக் விஞ்ஞானி Hassan ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் மாஃபியா கும்பல்களைப் போல் செயற்பட்டதாக குற்றம் சாட்டினார். அமெரிக்கரான ஓர் பெண் அதிகாரி என்னை அணுகி, நோய்வாய்பட்டிருக்கும் எனது மனைவிக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக, ஈராக் அதிகாரிகள் காதில் விழுகின்ற அளவிற்கு ஆலோசனை கூறினார். அப்போது நான் எனது மனைவியுடன் செல்லும்போது, ஈராக்கின் ஆயுத திட்டங்கள் பற்றிய விசாரணைக்கு உட்பட வேண்டுமென அந்த ஆய்வாளரது வலியுறுத்தல் இருந்தது.

"வெளிநாடுகளில் மன்னர்களாக வாழ்வதைவிட எமது நாட்டில் பிச்சைக்காரர்களாக வாழ்வதே மேல்`` என ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் Hassan குறிப்பிட்டார். ஈராக் அரசு கட்டளையிட்டாலும் நான் வெளிநாட்டிற்குச் செல்லமாட்டேன் என்று அவர் தெரிவித்தார். ``என் மீது எந்தக் குற்றச்சாட்டும் கூறப்படவில்லை, குற்றம் எதுவும் செய்யாத என்னை வேறு எங்காவது செல்வதற்கு யாரும் நிர்பந்திக்கமுடியாது. ஈராக்கின் கட்டுப்பாட்டில் இல்லாத எந்த அமைப்பிற்கும் நான் செல்லமாட்டேன். அப்படி சென்றால், என்னை அங்கே அடைத்து வைத்துவிட்டு, நான் அரசியல் தஞ்சம் கோருவதாக வெளியில் கூறிவிடுவார்கள்`` என்று Hassan குறிப்பிட்டார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆசை காட்டும் தூண்டுதல்கள் பயன்படுத்தப்பட்டன என்பது அவரது பேட்டியிலிருந்து தெரிகின்றது.

தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட அறிக்கைகள் பழையவை, நகல் பிரதி (photocopie) எடுப்பதற்குக் கூட தகுதியில்லாதவை என்று, Hassan வர்ணித்தார். யுரேனியம் செறிவூட்டுவதற்கான லேசர் கதிர்வீச்சு ஆராய்ச்சி 1988-ம் ஆண்டிலேயே கைவிடப்பட்டுவிட்டதாக அந்த விஞ்ஞானி தெரிவித்தார். ஐ.நா. தலைமை ஆயுதங்கள் ஆய்வாளர் Hans Blix பின்னர், அந்த அம்சத்தை ஒப்புக்கொண்டார். 1991-ம் ஆண்டு ஈராக் அறிவித்த திட்டங்களக்கு ஏற்ப, அதிலிருந்து எந்த வகையிலும், வேறுபடாத அறிக்கைதான் என்னிடம் இருந்தது என்றும் அசன் தெரிவித்தார். அதைப் பற்றி சர்வதேச அணு ஏஜென்சி தலைவரிடம் விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சர்வதேச அணு ஆயுத ஏஜென்சி தலைவர் ElBaradei யுடன் பக்கம் பக்கமாக, வரிவரியாக, வார்த்தைக்கு வார்த்தை பரிசீலனை செய்ய தான் தயாராகயிருப்பதாக Hassan குறிப்பட்டார்.

நேற்று புஷ் நிர்வாக அதிகாரிகளான Ari Fleischer மற்றும் Wolfowitz வெளியிட்ட அறிக்கைகளில் அமெரிக்கா மேலும், தீவிரமாகவும் ஆத்திரமூட்டும் வகையிலும் சோதனைகளுக்கு வலியுறுத்தும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈராக் விஞ்ஞானிகள் தனிப்பட்ட முறையில் பேட்டியளிக்க தாமதிக்கக்கூடாது. அது பற்றி விவாதிக்கவும் கூடாது, என்று Fleischer தெரிவித்தார். ஏற்கெனவே, ஈராக்கிற்கு வெளியில், ஈராக் விஞ்ஞானிகளை விசாரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஐ.நா. வேண்டுகோளுக்கு இணங்க, சைபிரசில் ஈராக் விஞ்ஞானிகளை ஐ.நா. ஆய்வாளர்கள் விசாரிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக சைபிரஸ் அறிவித்துள்ளது.

See Also :

பாக்தாதில் அமெரிக்க காலனித்துவ அரசாங்கத்திற்கான பிரதி

போருக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

Top of page