World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Blix report to the UN: diplomatic charade masks US imperialist war aims

ஐ.நா.விற்கு பிலிக்ஸ் அறிக்கை: இராஜதந்திர புதிர்வித்தையின் முகமூடிக்குள் ஏகாதிபத்திய போர் நோக்கங்கள்
By Barry Grey
29 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஐ.நா. தலைமை ஆயுத ஆய்வாளர் ஹான்ஸ் பிலிக்ஸ், திங்களன்று (27 Jan 2003) பாதுகாப்புக் கவுன்சிலில் தாக்கல் செய்துள்ள அறிக்கையானது புஷ் நிர்வாகத்தை திருப்திப்படுத்தும் வகையில் மிகவும் தெளிவாகத் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் புஷ் நிர்வாகத்தின் போர்ப்பட்டறை அசை போடுவதற்கு ஏற்ற அடிப்படையை இது உருவாக்கித் தந்திருக்கிறது. ஈராக்கில், மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கர ஆயுதங்கள் எதுவும் இருப்பதாக எந்த ஒரு சான்றையும் பிலிக்ஸ் தனது அறிக்கையில் எடுத்துக்காட்ட முடியவில்லை. இருந்த போதிலும், சென்ற நவம்பரில் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானங்களின் நிபந்தனைகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு ஈராக் நடந்துகொள்ளத் தவறிவிட்டதாக இவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, ஐ.நா.வில் பணியாற்றும் அமெரிக்கத் தூதர் ஜோன் நெக்ரோபோன்ட், தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் தோன்றி ஈராக் மீது போர்ப் பிரகடனம் செய்வது தவிர்த்து, மற்ற எல்லா வகையான கண்டனக் கணைகளையும் தொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி புஷ்ஷூனுடைய பத்திரிகைத் தொடர்பு அதிகாரி ஆரி பிளீச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவல் ஆகியோர் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டனர். அத்துடன், அடுத்த நாள் மாலை ஜனாதிபதி புஷ், பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் போர் நிலை பற்றிய அறிவிப்பை வெளியிடுவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் இவர்கள் செய்தனர்.

இந்த விவகாரம் முழுவதுமே, அபத்தமான பயங்கர புதிர் போட்டியாக அமைந்திருக்கின்றன. இந்த நாடகத்தில் செய்தி ஊடகங்கள் உட்பட அனைவருமே ஐ.நா. ஆய்வாளர் அறிக்கை பற்றிய ஒரு பாவனையை உருவாக்கி, பாரசீக வளைகுடாப் பகுதியில் போரா? சமாதானமா? என்பதை இந்த அறிக்கை தெளிவுப்படுத்தும் என்றும் கூறினர்.

அமெரிக்காவின் போர் முயற்சிக்கு உண்மையான நோக்கம் என்ன? இந்த நோக்கத்திற்கும், ஈராக்கிடம் மக்களைக் கொன்று குவிக்கின்ற ஆயுதங்கள் உள்ளனவா? இல்லையா? என்பதற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்பதிலிருந்துதான் இந்த நிகழ்ச்சிகள் பற்றிய தீவிர விமர்சனங்கள் எதுவும் தொடங்கவேண்டும். அமெரிக்கா ஈராக்குடன் போருக்குச் செல்வது பல்வேறு பொருளாதார, பூகோள அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டது. ஈராக்கின் பாரிய எண்ணெய் சேர்ம வளத்தையும் அதற்கு மேலாக, வாஷிங்டனின் உலக மேலாதிக்க நோக்கத்தையும் கொண்டது தான் இந்த படையெடுப்பாகும்.

ஈராக்கிடம் ஆயுத குவியல்கள் இருப்பதாகவும், இரசாயண உயிரியில் மற்றும் அணு ஆயுதத் திட்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுவது எல்லாம் 1980 களில், முதலாவது வளைகுடா போருக்கு முன்னர் ஐ.நா. தயாரித்த ஆயுதங்கள் தொடர்பான மதிப்பீடுகளிலிருந்து எடுக்கப்பட்டு இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் 1991 ம் ஆண்டு ஐ.நா. பொருளாதாரத் தடை மற்றும் ஆயுதச் சோதனைகள் செயல்படுத்தப்பட்டதன் பின்பு ஈராக் அத்தகைய ஆயுதங்கள் எதையும் தயாரித்ததாக சிறிய சான்றுகூட இவர்களால் காட்ட முடியவில்லை.

பிளிக்ஸ் கூட அவரது அறிக்கையில், இதற்கு முந்திய சோதனைகளில் இரசாயண அல்லது உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதற்கு எந்தவிதமான சான்றுகள் எதையும் பெறவில்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது, ஈராக் தன் வசம் இருந்த அத்தகைய ஆயுதங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதற்கான திட்டவட்டமான அறிக்கை எதையும் தாக்கல் செய்யத் தவறிவிட்டதாக அதன் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. (இந்த ஆயுதங்கள் எப்படி தயாரிக்கப்பட்டவை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். 1980 களில் ஈரானுக்கு எதிரான போரின்போது அமெரிக்கா, ஈராக்கிற்கு ஆதரவு தந்ததுடன் நிதி உதவியும், அரசியல் அனுமதியும் வழங்கியது)

ஐ.நா. ஈராக் தொடர்பாக வெளியிடும் அறிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் வழக்கம்போல் திரித்துக் கூறி வருகின்றனர். இதற்கு முன்னர் இருந்த ஆயுதங்கள் தொடர்பான சரியான கணக்கு எதையம் தாக்கல் செய்யவில்லை எனவும் அத்தகைய ஆயுதங்கள் இன்றைக்கும் ஈராக்கிடம் இருக்கிறது எனவும் அவற்றை இரகசிய இடங்களில் அது பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறிவருவதற்கான எந்தவிதமான சான்றையும் காட்டாமல் அமெரிக்க அதிகாரிகள் ஈராக் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

இத்தகைய எந்தவிதமான ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்கள், திரித்தல்கள் மற்றும் பொய்கள் அடிப்படையில்தான் அமெரிக்கா போருக்கான நியாயப்படுத்தலை, மிகப்பெரிய மோசடியை செய்து வருகிறது. இதற்கு ஐ.நா.வும் உடந்தையாக உள்ளது. அப்படி அவர்கள் செய்வது அமெரிக்க மற்றும் சர்வதேச மக்களை ஏமாற்றுவதற்காக பத்தாண்டுகளுக்கு மேலாகவே புஷ் நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கியமான சக்திகள் இத்தகைய ஆக்கிரமிப்பு போருக்கான சாக்குபோக்கை கற்பனையாகவே உருவாக்கிக்கொண்டு வருகின்றனர்.

ஐ.நா. நடவடிக்கைகள் எந்தப் பின்னணியில் பிரபலப்படுத்தப்படுகின்றன என்பதை, நாம் ஆராய்வது அவசியம். புஷ் நிர்வாகம் கடந்த பல வாரங்களாக, ஆயுத சோதனைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், முதலாவது வளைகுடாப் போரைவிட படுபயங்கரமான நாசம் விளைவிக்கும் குண்டு வீச்சிற்கு அமெரிக்க இராணுவத்திற்கு அவகாசம் தருகிற வகையில் ஐ.நா. ஆயுத ஆய்வாளர்கள் தங்களது பணிகளை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றது. புஷ் தன்னுடைய குரோத உணர்வை மதிநுட்பமற்ற அடிப்படையில் வெளிக்காட்டுகின்ற தனது எண்ணத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார். ஐ.நா. ஆயுத ஆய்வாளர்களின் சோதனையை தான் பார்க்க விரும்பாத ''கெட்ட திரைப்படம்'' போல் உள்ளது என்று பகிரங்கமாக கூறி பிறரைத் துன்புறுத்துவதிலேயே இன்பம் காணும் மனப்பான்மையை எடுத்துக்காட்டியிருந்தார்.

ஐ.நா. தலைமை ஆய்வாளர் பிளிக்ஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் மீது அமெரிக்கா மிகப்பெரும் அளவிற்கு நிர்ப்பந்தங்களை பிரயோகித்து வருகிறது. ஆயுத ஆய்வாளர்களையும், தனது ஐரோப்பிய ''நண்பர்களையும்'' தூண்டிவிடுவதற்கு மிரட்டல்களையும், லஞ்சம் கொடுப்பதையும் இணைத்து வாஷிங்டன் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. இதேநேரம் பிளிக்ஸ் தனது அறிக்கையை வெளியிட்ட நேரத்தில் தனிப்பட்ட முறையில் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளை சந்தித்திருந்தார்.

அமெரிக்காவினுடைய பிரச்சாரம் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. ஆயுத குவியல்கள், ஈராக் - அல்கெய்டா தொடர்புகள், ஈராக் விஞ்ஞானிகளுக்கு கொலை மிரட்டல் என்று இப்படியே குற்றச்சாட்டுப் பட்டியல்களை அடுக்கடுக்காக தேர்ந்தெடுக்கிறார்கள், கைவிட்டுவிடுகிறார்கள், திரும்பவும் சிடுமூஞ்சித்தனமாக அதையே சொல்கிறார்கள். ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய் என்று அம்பலப்படுத்தப்படுகின்ற போது, ஆயுதங்கள் இருப்பதாக கூறப்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படும்போது, அணு விஞ்ஞானிகள் சான்று கூறம்போது, அல்லது சர்வதேச புலனாய்வு ஏஜென்சிகள் தகவல் தரும்போது, பொய் என்று அம்பலப்படுத்தப்படுபவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு அடுத்த சம்பவம் நடக்கும்போது அதையே திரும்ப அமெரிக்கா சொல்லிக்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா தனது, படைகளை வளைகுடாப் பிராந்தியத்தில் மிக ஆவேசமாக பெருக்கிக்கொண்டு வருவதுடன் விமானப்படை, கடற்படை, தரைப்படை ஆகியவற்றின் பலத்தையும் அதிகரித்து வருகின்றது. அரசாங்கத்திற்கு உள்ளேயும், வெளியிலும் இருக்கின்ற விமர்சகர்கள் தாக்குதல்கள் எந்தத் தேதியில் தொடக்கப்படலாம் என்பது குறித்து மதிப்பீடுகளை செய்துகொண்டிருக்கின்றனர். நிர்வாகத்திற்கு நெருக்கமாக உள்ள வலதுசாரி செய்தி ஊடகங்களின் பண்டிதர்கள் மிக அவசர அவசரமாக விமர்சனங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். புஷ்ஷின் வெள்ளை மாளிகையானது போர் புரிவதற்கு மிக ஆழமாக உறுதி எடுத்துக்கொண்டு, ஈராக்குடன் தனது பகையை தீர்த்துக் கொள்வதன்மூலம்தான் அரசியலில் நீடிக்க முடியும் என்ற நிலையிருப்பதால், விரைவில் போர் தொடங்கும் என்ற கணிப்புகளை இப்பண்டிதர்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், போர்ப்பறை முழங்குகின்ற தருணத்திற்கு பின்னணி என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அமெரிக்காவிற்குள் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் மிகத் தீவிரமடைந்து செல்லும்போது, அவற்றிற்கு புஷ் நிர்வாகத்திடம் எந்தவொரு தீர்வும் இல்லை. சர்வதேச நாணய மாற்று சந்தைகளில் டொலரின் மதிப்பு மிகக் கடுமையாக வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதுடன், அமெரிக்காவின் வர்த்தக மற்றும் பட்ஜெட் பற்றாக்குறைகள் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் மாநில அரசுகள் திவாலாகிக் கொண்டிருக்கின்றதோடு உள்நாட்டுப் பொருளாதாரம் மந்த நிலையின் விளிம்பிற்கு வந்துவிட்டது. ஆதலால் போர் அரசாங்க கொள்கையின் ஒரே அச்சாணியாக ஆகிவிட்டது.

இந்த நிலைமைகளின் கீழ், அமெரிக்காவின் குற்றச்சாட்டான மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை ஈராக் வைத்திருக்கிறது என்பதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதே பொதுமக்களை ஏமாற்றும் மோசடிக்கு நியாயம் கற்பிற்கும் ஆபத்தில் முடிந்துவிடும்.

See Also :

அமெரிக்காவை எப்படி சமாளிப்பது? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை

பாக்தாதில் அமெரிக்க காலனித்துவ அரசாங்கத்திற்கான பிரதி

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

Top of page