World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

30,000 British troops on standby for war vs. Iraq

ஈராக் போரில் 30,000 பிரிட்டனின் துருப்புகள்

By Chris Marsden
19 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி துவக்கத்தில், ஈராக்கிற்கு எதிரான தரைவழிப் போரில், 30,000 பிரிட்டன் துருப்புக்களை பிரதமர் டோனி பிளேயரின் தொழிற் கட்சி அரசு உதவிக்குத் தயார் நிலையில் வைத்திருக்கிறது.

போர் தொடர்பாக 10 நாட்களுக்குள் பிரதமர் தமது முடிவை அறிவித்துவிட வேண்டும் என்று இராணுவத் தலைமை அதிகாரிகள் கோரி வருவதாக இதற்கு முன்னர் தகவல்கள் வந்தன. அப்படி முடிவு அறிவிக்கப்பட்டு விட்டால் பிரிட்டனின் பீரங்கி, கவச வாகனங்களைக் கொண்டுள்ள டிவிஷனை போர்முனைப் பகுதிகளுக்கு அனுப்பி, 6 முதல் 8 வாரங்களுக்குள் நிலைகொள்ளச் செய்ய முடியும். போருக்குச் செல்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசு அதிகாரிகள் வலியுறுத்தினாலும், அவர்களது நடவடிக்கைகள் அவர்களது அறிவிப்பைப் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றன.

குறுகிய கால முன்னறிவிப்பில் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு கேந்திர இராணுவப் பிரிவுகளுக்கு நோட்டீஸ் கொடுக்கும் காலம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசேர்வ் படையினர் எவ்வளவு தேவைப்படுவர் என்பதை அரசு ஆராய்ந்து வருகின்றதுடன், இப்படையினர் எந்த நேரத்திலும் கட்டாயமாக அழைக்கப்படலாம் என்று அவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளவர்களுக்கு முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கைக்குத் தேவைப்படும் சிவிலியன் கப்பல்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் தளவாடங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சில பிரிவுகளில் பணிகளை முடுக்கிவிடுமாறு, குறிப்பாக, சேலஞ்சர் போர் டாங்கிகளை, பாலைவனங்களில் பயன்படுத்தும் வகையில் மாற்றுவது போன்ற பணிகளை விரைவு படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சகம், தளவாட உற்பத்தியாளர்களுக்கு முன்னறிவிப்புக் கொடுத்திருக்கிறது.

அடுத்த மாதத்திற்குள், ஈராக் எல்லைகளை ஒட்டி - முதலில் குவைத்தில் பிரிட்டிஷ் படைகள் குவிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகமுள்ளதாக, ''டெய்லி மெயில்'' பத்திரிக்கைக்கு பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தந்திருக்கின்றன.

ஈராக்கின் ஆயுதங்கள் தொடர்பான பிரகடனம் குறித்து கிறிஸ்மஸ்சிற்குப் பின்னர் வரை அரசாங்கத்தின் கருத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படமாட்டாது. சதாம் குசேன் பொய் சொல்லிக் கொண்டிருப்பதாக, அரசு தொடர்ந்து வலியுறுத்திக் கூறி வருகின்றதுடன், சென்ற மாதம் பிளேயர் தனது சொந்த ''புலனாய்வு அறிக்கையை'' வெளியிட்டார். பாக்தாத் தொடர்ந்து இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது மற்றும் அணு ஆயுத பலத்தைப் பெற முயன்று வருகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

ஈராக்குடன் போர் புரிவதை வெறித்தனமாக ஆதரிக்கும் ரூபர்ட் முர்டோக்கின் ''சன்'' செய்திப் பத்திரிக்கை, பாதுகாப்பு அமைச்சக அறிவிப்பு வந்த நாளில், திட்டமிடப்படும் படைகளின் மதிப்பீட்டை பிரசுரித்திருந்தது. அப்போது அது வெறும் அனுமானம் என்று பாதுகாப்புத்துறை உடனடியாகவோ அல்லது தவிர்க்க முடியாததாகவோ ஆகிவிடவில்லை. இன்றும் இராஜதந்திர நடவடிக்கை எடுக்கப்பட்டே வருகின்றன என பாதுகாப்புத் துறை அதிகாரியொருவர் பி.பி.சி.க்குத் தெரிவித்தார்.

ஆனால், படைகள் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடு உண்மை என்றே தோன்றுகிறது. 3,00,000 அமெரிக்க படைகள் வளைகுடாவில் நிலைகொள்ளும்போது, பிரிட்டிஷ் படைகளின் பங்கு அதிகமாக இருக்கும் என்று ''சன்'' செய்தி வெளியிட்டது.

பெப்ரவரியில் துவங்கும் இராணுவப் ''பயிற்சிக்கு'' படைகள் நடமாட்டம் வழக்கமாக நடப்பது தான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பற்படைக் கப்பல்கள் அணிவகுப்பை - நேவல் டாஸ்க் குரூப் - 2003 என்று அறிவித்தார்கள். விமானந்தாங்கிக் கப்பல் எச்.எம்.எஸ்.ஆர்க் றோயல், கப்பற்படைகள் அணிவகுப்பிற்குத் தலைமை வகிக்க, அதை நாசகாரி கப்பல்கள், டி-வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்ந்து செல்லும். இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் நீண்ட தூர ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

சிறப்பு விமானப் படையின் தனித்தன்மை வாய்ந்த துருப்புகளும் அனுப்பப்படும்போது இவர்களுடன் பல்லாயிரக்கணக்கான ரோயல் கப்பற்படை கமாண்டோக்களும் செல்வர்.

இந்து சமுத்திரத்தில் ''நீண்ட நாட்களுக்கு'' முன்னரே திட்டமிடப்பட்ட ''ஆப்பரேஷன் ஃபிளையிங் ஃபிஷ்'' (Operation Flying Fish) பயிற்சியை மேற்கொள்ள பிரிட்டிஷ் கப்பல்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் மாதம் சிங்கப்பூர், மலேசியாவில் பயிற்சிகள் பூர்த்தியாகும். ''வளைகுடா வழியாக'' அவை செல்லும்போது தேவைப்பட்டால், ஈராக் போருக்காகக் இக்கப்பல்கள் திருப்பிவிடப்படலாம். அதற்கான அவசரத் திட்டமும் உள்ளது. ''தற்போது வளைகுடாவை நோக்கிச் செல்லவில்லை, ஆனால் வளைகுடாவிற்குச் செல்ல முடியும்'' என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

பல தொழிற்கட்சி எம்.பி.க்கள், ஈராக்கிற்கு எதிரான போருக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அவர்களுக்குச் சமாதானம் கூறுகின்ற வகையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜியோஃப் ஹிடன், ''இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை'' என்று வலியுறுத்திக் கூறினார். இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நா. பந்தோபஸ்து சபையின் உடன்பாடு தேவையா? என்ற கேள்விக்குப் பதிலளித்த ஹிடன், ''பந்தோபஸ்து எதுவும் எங்களுக்குத் தேவையில்லை'' என்று பதிலளித்தார். ''எப்போதுமே அத்தகைய முடிவுகள் எடுப்பது பந்தோபஸ்து கவுன்சில் உறுப்பினர்களின் தனி உரிமை'' என்றார்.

இராணுவ வட்டாரங்களின் கருத்துப்படி ஈராக்கில் இரண்டு முனைகளின், வடக்கிலும், தெற்கிலும் போர் நடத்தப்படலாம். குர்திஸ்தான் இன மக்கள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ஈராக்கில் ஏற்கெனவே, அமெரிக்கா, மற்றும், பிரிட்டனின் சிறப்புப்படைப் பிரிவுகள், துருக்கி எல்லைக்கு எதிரில் நிலை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அப்பகுதியில் படை எடுப்பிற்கான ஒரு படைப் பிரிவு துருக்கி எல்லையில் அணிவகுத்து நிற்கக்கூடும். துருக்கி இராணுவ மூத்த அதிகாரி ஒருவர் தனது நாடு படைகளையும், பொறியியளாளர்களையும், வடக்கு ஈராக் எல்லை அருகே தயார் நிலையில் வைத்திருப்பதாக தெரிவித்தார். பாக்தாத் மீது அமெரிக்கா தலைமையில் தாக்குதல் நடந்தால், அதற்கான முன்னேற்பாடுதான் இது. இந்த முன்னேற்பாட்டில் 10,000 முதல் 15,000 துருப்புகள் சம்மந்தப்பட்டிருப்பதாக உள்ளூர் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

வடக்கு அராபிய வளைகுடாவில் விமானந்தாங்கி கப்பலில் இருந்து அமெரிக்க மற்றும் பிரிட்டனின் கடற்படை வீரர்கள் ஈராக் கரைப்பகுதியில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராக் எல்லையை ஒட்டியுள்ள குவைத் நாட்டில் 60,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஏற்கெனவே அணிவகுத்து நிற்கின்றனர். அவர்கள் இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டாலும், அமெரிக்க போர் விமானங்கள் தினசரி ஈராக் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தற்போது ஈராக்கில் குண்டு வீசி தாக்குதல் நடத்துவது 30 சதவிகிதத்தை எட்டிவிட்டது. இதனால், ஈராக் வெளியுறவு அமைச்சர் நஜி சாப்ரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு டிசம்பர் 9 ல் கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். ''ஈராக் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக குண்டு வீசி தாக்குதல் நடத்துவது பிரகடனம் செய்யப்படாத, போராக அதிகரித்துவிட்டது'' - என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த மாதத்தில் மட்டும் 1400 முறை ஈராக் எல்லையில் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக அதில் சுட்டிக்காட்டியுமுள்ளார்.

See Also :

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page