World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Blair government under right-wing attack in "Cheriegate" scandal

பிரிட்டன்: "செரிகேட்" ஊழலில் பிளேயர் அரசு வலதுசாரியின் தாக்குதலுக்கு உள்ளாகின்றது

By Chris Marsden and Julie Hyland
13 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயரின் மனைவி செர்ரியால், தனக்கு எதிரான பத்திரிகை பிரச்சாரத்தை ஓர் முடிவிற்கு கொண்டு வர எடுத்த முயற்ச்சி தோல்வியடைந்துள்ளது. தனக்கும், தண்டனை பெற்ற ஒரு குற்றவாளிக்கும் இடையே உள்ள உறவுகள் குறித்து பேசும் இந்த ஊழலானது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிசம்பர் 10 அன்று பகிரங்க அறிக்கைவிடும் மளவுக்கு அவரை நிர்ப்பந்தித்துள்ளது.

அவருடைய 9 நிமிட உரையில், அரசாங்கத்தின் ஈடுபாட்டுக்கான சாத்திய கூறுகளும், சட்ட அமைப்பின் தலையீடு உள்ளதாகவும், நிதி துர்ப்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதை திருமதி பிளேயர் மறுத்துள்ளார். தான் தவறுகள் செய்துள்ளதாக ஒப்புக்கொண்ட போதிலும், அவையெல்லாம் தான் ஒரு பிரதமரின் மனைவியாகவும், முன்னணி வழக்கறிஞராகவும், ஒரு தாயாகவும் பங்களிக்க வேண்டி இருந்த அழுத்தத்தால் இவை உண்டானது என கூறியுள்ளார்.

பூத் என்ற தன் முதற்பெயரில் தொழில் புரியும் திருமதி பிளேயரின் அறிக்கை டெய்லி மெய்ல் மற்றும் அதன் துணை பத்திரிகையான மெய்ல் ஆன் சன்டே ல் வெளியான பிரச்சார செய்தியின் விளைவானதாகும். பாரம்பரிய கன்சர்வேடிவ் பத்திரிகைகள் 1997 பிளேயரை ஆதரித்திருந்தன. ஆனால் அரசின் பலவீனத்தையும் அதனது ஐரோப்பிய-சார்பான போக்கினையும், பாலியல் விவகாரங்கள் பற்றிய விடயத்தில் ஓர் வெளிப்படையான தாராள மனப்பான்மையையும் கொண்டுள்ளதாலும் அவை அதிகமாக எதிர்த்து வருகின்றன.

அவர்களுடைய தொடர்ச்சியான பிளேயருக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ந்து ஏனைய பத்திரிகைகள் தொழிலாளர்களுடைய பைகள் என விமர்சித்துள்ளன. அரசாங்கத்தை தாக்குவதற்கு மெய்ல் குற்றச் சாட்டுகளை கைப்பற்றிய கன்சர்வேட்டிவ்வினர், ஓர் சுயாதீன நீதி விசாரணை குழு ஒன்றை அமைக்கும் படி கோரியுள்ளனர்.

டிசம்பர் 1 அன்று, செர்ரி பிளேயர் பிரிஸ்டலில் இரண்டு சொகுசு தட்டடுக்கு வீடுகளை வாங்கியதில் பீட்டர் ஃபாஸ்டரின் உதவியை நாடியுள்ளதாக மெய்ல் ஆன் சன்டே குற்றம் சாட்டிய போது இந்த ஊழல் விவகாரம் வெளியானது. திருமதி பிளேயரின் வாழும் முறைக்கான குருவும், நெருங்கிய தோழியுமான கேரோல் கப்லினுடன் ஆகஸ்ட் மாதம் பிரிட்டனுக்கு வந்த சில வாரங்களிலேயே, ஃபாஸ்டர் என்பவருடனும் உறவு வைத்துக்கொண்டார். ஆஸ்திரேலியரான ஃபாஸ்டர், மூன்று கண்டங்களில் குற்றங்கள் புரிந்ததற்காக சிறை தண்டனை அனுபவித்தவரும், 1980ல் உடல் பருமனை குறைக்க உதவும் உபகரண விற்பனை மோசடி செய்துவிட்டு, அங்கு தண்டனையிலிருந்து தப்பிக்க நாட்டை விட்டு ஓடி வந்த இவர் இப்போது பிரிட்டனில் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளார். பிளேயரின் பெயரை பயன்படுத்தி 20,000 பவுண்ட் தள்ளுபடியை, ஒவ்வொரு வீட்டின் விலையான 295,000 பவுண்ட் மதிப்பிலும் பெற்றதாக, ஃபாஸ்டர் தன் நண்பர்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டார்.

அதற்கு அடுத்த நாள், டவுனிங் ஸ்ட்ரீட் பத்திரிக்கைத் தகவல் அலுவலகம், ஃபாஸ்டர் என்பவர் திருமதி பிளேயருக்கு நிதி ஆலேசகராக இருந்ததில்லை என்றும், பிரதமர் இதற்கு முன் ஃபாஸ்டரை சந்தித்ததேயில்லை என்றும் தெரிவித்தது. இரண்டு நாள் கழித்து, டெய்லி மெயில் ஆனது, ஃபாஸ்டருக்கும் திருமதி பிளேயருக்கும் இடையே நடந்த மின் அஞ்சல் கடித பரிவர்தனைகளை வெளியிட்டு, ஃபாஸ்டருக்கு இந்த வீடுகள் வாங்கியதில் உள்ள தொடர்பை நிரூபித்தது.

பொருளியல் விடயங்களில் உண்மை என குற்றம் சாட்டப்பட்ட திருமதி பிளேயர், டிசம்பர் 5 அன்று மற்றொரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தன் வேலைப்பளு காரணமாக, வீடுகள் வாங்கும் விஷயங்களை கப்லினிடம் விட்டு விட்டதாகவும் அந்த வீடுகள் வாங்கிய பேரத்தில் ஃபாஸ்டர் உதவி செய்ததையும் ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்த மற்றய குற்றங்களாவன, திருமதி பிளேயர் "மறைமுக நிர்வாகக்குழு" வை தவறாக பயன்படுத்தி இந்த வீடுகளை வாங்கியதாகவும், இந்த குழுவானது இவர்கள் டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு குடிவரும் முன் தங்கள் குடும்ப வீட்டை விற்ற பணத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட குழு. இந்த குழுவின் முக்கிய அம்சமானது, "அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நிதி முதிலீடுகள் பற்றிய பிரத்தியேகமான அறிவை பெற்றுக்கொள்ளாமல் இருக்கவும், அரசு கொள்கைக்கு எதிரான வகையில் சொத்துக்களை வாங்காமல் இருக்கவும்" இது தடுக்கிறது.

மெயில் வெளியிட்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டு என்னவென்றால், திருமதி பிளேயர், ஃபாஸ்டர், குற்றத்திற்காக நாட்டை விட்டு வெளியேற்றப்படும் வழக்கில் சம்பந்தப்பட்டு, அவருக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள் மற்றும் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் பெயரை சரி பார்த்ததுமாகும்.

இரண்டாவதாக குறிப்பிட்ட குற்றச்சாட்டானது, திருமதி பிளேயரின் நீதித்துறை வாழ்க்கையினை பெரிதும் பாதிக்கும் என்பதால் அவர் பொது அறிக்கை வெளியிட வேண்டியிருந்தது. அதில் அவர், நீதி விசாரணை செய்யும் நீதிபதியை சரிகட்ட முயலும் "ஆர்வம்" உள்ளதாக வந்துள்ள குற்றங்கள் எத்தனை மோசமானதாகவும், தவறானதுமாக தன் மீது வந்துள்ளது என்றார். "தனக்கு அறிமுகம் இல்லாத, எப்போதும் சந்தித்திராத ஒருவரை தன் குடும்ப விஷயங்களில் ஈடுபடுத்தியதற்கு மனம் வருந்துகிறேன்.... அவரைப் பற்றி நிறைய கேள்விகளை நான் கேட்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டேன்" என்றார்.

அவருடைய அறிக்கையை அரசுக்கு நெருக்கமான பத்திரிகை வரவேற்றபோதும், மெயில் மற்றும் கன்சர்வேட்டிவ்வின் பிரச்சார பீரங்கியான டெலிகிராஃப் இதனை பிதற்றல் என்று நிராகரித்துவிட்டது. இந்த குற்றச்சாட்டு அரசின் கபட நாடக வேஷம் என்பதற்கு ஆதாரம் என்று டெலிகிராஃப் வற்புறுத்தியது.

இக் கோரிக்கைக்கு உழைக்கும் மக்கள் மத்தியிலிருந்து சில ஆதரவு கிட்டியது. பிளேயரின் அந்தரங்க வாழ்க்கை, எப்போதுமில்லாதவாறு அளவுகடந்த முறையில் சில நாட்களாக பலத்த சோதனைகளுக்கும், கண்காணிப்புக்கும் ஆளானது. இது செல்வங்கள் நிறைந்த தன்னிறைவு பெற்ற தம்பதியராகவும், யோசிக்கும் திறனற்றும், "புதிய காலத்தின்" கொள்கையோடு தங்கள் இஷ்டப்பட்ட போக்கில் வாழ்பவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்களின் ஊதியத்தை உயர்த்த மறுக்கும் பிளேயர், பாடாசாலையில் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ள நிலையில், திருமதி பிளேயரின் "சொத்து விவகாரங்களும், கப்லினின் பணிகளுக்கு 60,000 பவுண்டுகள் ஊதியமாக ஒரு வருடத்திற்கு தர ஒப்புக்கொண்டுள்ள திருமதி பிளேயரின் செய்திதான் பரபரப்பாக உள்ளது.

இப்படிப்பட்ட போக்கை மெயில் திறம்பட பயன்படுத்திக்கொண்டாலும், ஆளும் வட்டாரங்களிடையே உள்ள அதி தீவிர வலது சாரித் தட்டுக்களின் பின்னணியில் நடாத்தும் பிரச்சாரத்தின் உண்மையான நோக்கத்தை மறைக்க நிச்சயமாக இது அனுமதிக்கவில்லை.

பிளேயரின் அத்துமீறல்களைப் பற்றி கொதிப்படைந்துபோனதாக பாவனை செய்யும் பல்வேறு எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களும் கபட நாடக வேடம் தரிப்பதாய் அதிகமாய் குற்றம் சாட்டப்படலாம். இவர்கள் சொல்லும் கணக்கு பல மக்களுக்கு பெரிதாய் இருந்தாலும், ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு அது சிறியதாகவே உள்ளது. ஒரு பத்திரிகையாளர் குறைகூறி சுட்டிக்காட்டுகையில், "செர்ரி பிளேயர், 10 வது இலக்கத்தில் வாழ்ந்தாலும், ராஜ வாழ்க்கை ஆடம்பரங்களோடு தான் உள்ளார். (தற்காலிக) பொருளாதாரத்திற்கும், சமூக அந்தஸ்துக்கும் நடுவே தத்தளிக்கும் அவர்கள் (பிளேயர்கள்) வாழ்வில், ஒரு பகட்டான வாழ்வு முறையை பின்பற்றுகிறார்கள். உண்மையில் செல்வந்தர் அல்லாத அவர் பழகுவது செல்வச் சீமான்களோடுதான். வருமான வரி செலுத்தும்போது அங்கு உள்ள வேலையாட்களும் அவர்கள் விலாசமும் கூட இரவல்தான் என்கிறது.

பிளேயர்களின் இப்போதைய நிலையான, "சூழலுக்கு ஏற்றவாறு உயர்வாய் வாழ்வது" என்று இருக்கும் அவர்கள் மீது இரக்கப்பட எந்த தேவையுமில்லை. இருந்தாலும், தனிப்பட்ட நடத்தைகள் குறித்து எழும் குற்றச்சாட்டுக்கள் என்பது புதிதானதோ, முதலாவதோ அல்ல என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் வலது சாரிகளின் பிரச்சாரத்தில், அரசை உத்தேசித்த திசையில் கொண்டு போகவோ அல்லது ஒட்டுமொத்தமாக ஆட்சியையே மாற்றுவதோ கூட சாத்தியமாகலாம். இதற்கு இணையாக, அமெரிக்காவில் கிளின்டனுக்கு எதிராக குடியரசுக் கட்சியின் பிரச்சாரம் இருந்தது. வைட் வாட்டர் ஊழல் மோசடியின் கண்டுபிடிப்புடன் இது தொடங்கியதுடன், இது முன்னாள் ஜனாதிபதி, வெள்ளை மாளிகையின் அலுவலர் மொனிக்கா லெவின்ஸ்கியுடனான பாலியல் தொடர்புகள் வைத்திருந்தார் என குற்றம் சாட்டும் முயற்சியில் முடிவடைந்தது.

பிரிட்டனின் பூகோள இருப்பிடத்துக்கு எதிரிகள் இருப்பதுபோல், பிளேயர்களுக்கும் எதிராக அதே அடிப்படை அரசியல் சக்திகள் வேலையில் இறங்கியுள்ளது.

சில பத்திரிகைகளினால் தயாரிக்கப்பட்ட ஃபாஸ்டர் - கப்லின் பற்றிய ஊழல் பிரச்சாரத்திற்கும், பிளேயர் அரசாங்கத்தின் வர்த்தகத்திற்கு சார்பான திட்டத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் எதிர்ப்பினையும் யாரும் குழப்பிக்கொள்ளக்கூடாது.

மெய்ல் பத்திரிகை, அரசாங்கத்தை குறிவைத்து தாக்குவதன் காரணம் என்னவென்றால் அது சம்பள மற்றும் சமூக வசதிகளை தாக்குவதில் அதிக அளவில் செல்லவில்லை என்பதாலாகும். அவர்களின் பிரியமான அரசாங்கம் கன்சர்வேடிவ் தான் ஆனால் அக் கட்சி இப்போது கொலைக்களமாக உள்ளது. அரசுக்கு எதிரான செயலில், முன்னணியில் நேரடியாய் நின்று எதிர்த்து ஆதரவு பெற முடியாததால், வலதுசாரிகள் தாக்குவதற்கு இப்போது ஒரு சுற்றுப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளன.

டெய்லி மெய்லின் ஆசிரியரும், லார்ட் ராதர்மியரின் அசோசியட் பத்திரிக்கைகளின் தலைமை ஆசிரியருமான, பால் டாக்கர், பிரிட்டிஷ் ஜேர்னலிசம் ரெவ்யூ வுக்கு செப்டம்பர் அளித்த பேட்டியில் தனது அரசியல் கருத்துக்களை கோடிட்டுக் காட்டினார்.

மிகவும் காரசாரமாக இருந்த அப்பேட்டி, "தாராளமயத்தையும், சரியான அரசியல் ஒப்பந்தங்களையும்" எதிர்க்க இருந்ததோடு, மீண்டும் தாட்சர் ஆட்சிக் காலத்தை கொண்டுவருவதற்கான அழைப்பாக இருந்தது. அந்த அம்மையார் (முன்னாள் பிரதமர் தாட்சர்) செய்த பலவற்றை மெல்ல கழற்றிவிட்டுக்கொண்டு வருகின்றனர் என்பது வருத்தமாய் உள்ளது.

பிளேயரின் `பச்சோந்தி` குணத்தால், மெய்ல் கொடுத்த ஆரம்பகட்ட ஆதரவு சற்று தணிந்துள்ளது. `பல வருடங்களாக நமக்கு பலவீனமான எதிர்க்கட்சியே இருந்து வந்துள்ளது என்பது ஆழ்ந்த வேதனையாக இருக்கிறது` எனக் கூறிய டாக்கர், மேலும் கூறுகையில் "ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தின் மீதும், நாட்டு இறையாண்மை, மக்கள் தொடர்பு ஸ்தாபனங்கள் மூலம் அதிகரித்து வரும் புகலிடம் தேடி தஞ்சம் புகுவோர் பற்றியும்`` தன் கவலைகள் உள்ளதாக தெரிவித்தார்.

டாக்கரின் சம்பளம் 727,000 பவுண்டு மற்றும் போனஸ் என்று கூறப்படுகிறது.

மெய்ல்ஸ், ஃபாஸ்டர் மற்றும் திருமதி பிளேயருக்குமிடையே நடந்த மின் அஞ்சல் கடிதங்களை பிரசுரித்ததற்கு ஃபாஸ்டருக்கு எந்தத்தொகையும் அளிக்கவில்லை என்று கூறியுள்ளது. ஆனால் இது சம்பந்தப்பட்ட கூட்டத்திற்கோ, இடைத்தரகர்களுக்கோ கொடுத்ததைப் பற்றி அறிக்கையில் சொல்லாமல் தவிர்த்தது.

ஃபாஸ்டர் மற்றும் கப்லின் மிக உயர்ந்த விளம்பரதாரரை அமர்த்திக்கொண்டனர். ஈயன் மொங்க் என்ற டெய்லி மெய்லின் முன்னாள் செய்தி ஆசிரியர், ஃபாஸ்டருக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறார்.

இப்படிப்பட்ட "ஊழல்கள்" வெடிப்பது என்பது, மெளனமாய் இருக்கும் ஆளும் கன்னையின் சிலருக்கு வழக்கை அழுத்த வசதியாயிருக்கும், ஆனால் எதிர்கட்சிக்கு கொள்கை ரீதியிலான எதிர்ப்பை சுமத்த முடியவில்லை. இப்போது இவர்களுக்கு எதிராய் உள்ள சக்திகள், தங்களின் கடந்த கால சீர்த்திருத்தக் கொள்கையின் மறுப்பால் வளர்ந்தவர்களும், தாட்சரின் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு ஆதரவளித்தவர்களும் ஆவார்கள். இதனால் உழைக்கும் மக்களிடமிருந்து, லேபர் கட்சி அந்நியப்பட்டு வருகிறது. தங்களுக்கென்று கொள்கை ஒற்றுமைகொண்ட அரசியல் குழுக்களானது, மற்றவர்களை வெளியேற்றவும், தங்கள் சுயநலத்திற்காகவும், அரசை தங்கள் கோரிக்கைகளுக்கு கீழ்படிய முயற்சிக்கிறது.

இந்த சூழ்நிலையில், பெரிய அபாயமானது, ஆளும் கட்சியின் வலதுசாரி பிரிவினர் எப்போதும் அரசியல் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்து ஆளுமை செலுத்தப் போகிறார்கள் என்பதாகும். பிளேயர் அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை அச்சுறுத்தும் வகையில், ஈராக்குக்கு எதிரான பெரிய இராணுவ முயற்சியில் மிகவும் மும்முரமாய் உள்ளது. அதன் சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகள், நாட்டின் ஜனத்தொகையின் மேல் தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தியபடியே உள்ளது. சர்வதேச நாணய நிதியமானது, அது `தேக்க நிலையை` நோக்கிச் செல்லும் சூழலில் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல ரொதர்மியர்ஸ் பிரபுக்களின் பிற்போக்கு நடவடிக்கைகளின் அரசியல் அலைகளின் விளைவுகளுக்கு ஏமாந்துவிடாமல் இதுபோன்ற கேள்விகளில் தொழிலாள வர்க்கம் தொழிற் கட்சிக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தாக வேண்டும்.

Top of page