World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

France goes on the offensive in Ivory Coast

ஐவரி கோஸ்ட்டில் பிரான்சின் விரோத போக்கு

By John Farmer
7 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் டு வில்பன் (Dominique de Villepin) முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு (Côte d'Ivoire) மேற்கொண்ட விஜயத்தை வார இறுதியில் முடித்துக் கொண்டதுடன், அதிகரித்து வரும் உள்நாட்டு போரில் தீவிரமாய் ஈடுபடும் வடபிராந்திய கிளர்ச்சிக் குழுவான, ஐவரி கோஸ்ட் தேசபக்த இயக்கம் (MPCI) மற்றும் அந்நாட்டு அரசுடனும் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

வில்பன், ''ஆபத்தான வளைவை'' ஒரு முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் முயற்சி செய்வதாகக் கூறியதுடன், அவரது பயணமானது நான்கு மாத காலமாய் நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக இருக்கின்றது. அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் MPCI கிளர்ச்சிக் குழுவை அடுத்த மாத இறுதியில் பாரீசில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு பங்கேற்குமாறு அவர் மேலும் அழைப்பு விடுத்தார்.

ஐவரி கோஸ்ட்டின் ஜனாதிபதி லோரன்ட் பாக்போ, புவேக் (Bouake) நகருக்கு 40 மைல் மேற்கே MPCI யின் கட்டுப்பாட்டிலுள்ள மெனாக்ரோ மீன்பிடிக் கிராமம் மீது தாக்குதல் நடத்த கூலிப்படையை ஹெலிகாப்டரில் அனுப்பிய செயலுக்குப்பின், வில்பன்னின் இப்பயணம் அமைந்தது. ஹெலிகாப்டர் தாக்குதலில் 12 அப்பாவி மக்கள் இறந்த விதம் ''அனுமதிக்க முடியாததும், பொறுத்துக்கொள்ள முடியாததும்'' என பிரெஞ்சு இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேனல் ஏன்ஜெல் அந்துவான் லெசியா கூறினார். மேலும், கிராமவாசிகளை ''முயலை சுடுவதைப்போல்'' சுட்டு வீழ்த்தியதாக பிரெஞ்சுப் படைகள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர், அந்நிய கூலிப்படைகளை வெளியேற்றி ஆகாயத் தாக்குதல்களை நிறுத்துமாறு பாக்போவுக்கு ஆலோசனை கூறியுள்ளதுடன், MPCI யுடன் நடத்திய தனியான சந்திப்பில், நடந்த இந்த செயலுக்கு பதிலடி தரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். கிளர்ச்சிக் குழுவின் எல்லைப் பகுதிக்குள் சென்று பாக்போ, இப்படுகொலைகளை மேற்கொண்ட விதமும், போர் நிறுத்தம் அறிவித்திருக்கும் வேளையில், MPCI யை கண்காணித்து வரும் பிரெஞ்சு படையை தாண்டி, தெற்கே அரசாங்கம் அடித்தளமிட்டிருக்கும் அபித்ஜானை நோக்கி கிளர்ச்சிக்குழு வர இருப்பதை தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்டது இவ் ஆத்திரமூட்டும் செயலாகும்.

ஐவரி கோஸ்ட்டுக்கு மேற்கே புதிதாக உருவான இரண்டு கிளர்ச்சிக் குழுக்களான நீதி மற்றும் அமைதி இயக்கம் (MJP), ஐவேரியன் பெரும் மேற்கு மக்கள் இயக்கம் (MPIGO), ஆனது வில்பன்னின் பேச்சுக்களில் இடம்பெறவில்லை. இருந்தாலும் அக்குழுக்களின் தலைவர்கள், பாரீஸ் மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர். கடந்தகால போர் நிறுத்தத்திற்கு இந்த இயக்கங்கள் கலந்து கொள்ளாததால் தற்சமயம் ஆயுதம் தரித்த பிரெஞ்சு படையோடு சிறு மோதல்களில் அவை ஈடுபட்டு வருகின்றன.

கடந்த வாரங்களில், பிரான்ஸ் வெளிப்படையாகவே அந்நாட்டில் இராணுவ ரீதியில் ஆக்கிரமிப்பு செய்ய முன்னேறியிருந்தது. கடந்த டிசம்பர் 28 அன்று, பிரெஞ்சுப் படைகள், இராணுவ தளவாடங்களுடன், பிரான்சிலிருந்து 10 நாள் கப்பல் பயணத்திற்குப்பின் அபித்ஜானுக்கு வந்து சேர்ந்ததுடன், அங்கே ஜீப்புகள், டிரக் வண்டிகள் மற்றும் 30 இலகுரக கவச வண்டிகளும் இறக்கப்பட்டன. ''செயல்திட்டம் - ஒற்றைக்கொம்பு மிருகம்'' என்று பெயரிடப்பட்ட இந்த இராணுவ செயல்திட்டத்திற்காக சுமார் 2,500 இராணுவ வீரர்கள் ஐவரி கோஸ்ட்டில் வந்து சேர்ந்துள்ளார்கள்.

முதலில் பிரெஞ்சு இராணுவமானது அங்குள்ள பிரெஞ்சு மக்களைக் பாதுகாக்கவும், போர் நிறுத்தத்தை அமல்படுத்தவும் தான் அங்கு வந்ததாக கூறப்பட்டபோதிலும், தற்போது அவர்கள் அங்கு இல்லாவிட்டால் கிளர்ச்சிக் குழுக்கள் பாக்போவை அநேகமாய் வீழ்த்திவிட்டு நாட்டையே கைப்பற்றிவிடும் சூழல் உள்ளதாய் தெரிகிறது. தென்னாபிரிக்கா, குரோவேஷியா, பிரான்ஸ் ஆகிய நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படைகளையே பாக்போ முற்றிலுமாக நம்பியுள்ளார். கிளர்ச்சிக் குழுக்கள், ஐவரி கோஸ்ட்டின் செல்வம் எனப்படும் கோப்பி பயிரிடும் பகுதிகள் அடங்கிய நாட்டின் அரைவாசிப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள்.

பொருளாதார அடிப்படையில் தன்னை மிகவும் சார்ந்திருக்கும் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள இந்த நாட்டை கிளர்ச்சிக் குழுவிடம் ஒப்படைக்க பிரான்சுக்கு மனம் இல்லை. MPCI என்ற கிளர்ச்சிக் குழுவினர் வடக்கு பிராந்திய வர்த்தக பிரமுகர்கள் ஆதரவிலும், MJP மற்றும் MPIGO ஆகிய குழுக்கள் லைபீரியாவின் ஆதரவிலும் இயங்கி வருகின்றன. வில்பனின் குறிக்கோள், இவர்கள் ''அனைவரையும் பேச்சுவார்த்தைக்காக'' பாரீஸ் மாநாட்டுக்கு வரவழைப்பதாகும். இதன்படி பார்த்தால் பிரான்ஸ் ஒரு நேரடியான ஆட்சியை அங்கே திணிக்க நினைக்கிறது என்பது தெரிகிறது.

பிரான்ஸ், 3 பில்லியன் டொலர் மதிப்புள்ள முதலீடுகளை ஐவரி கோஸ்ட்டில் செய்துள்ளதுடன், அங்கிருக்கும் செல்வம் கொழிக்கும் சில பொதுநல பயனீட்டு நிறுவனங்களை கட்டுமானம் சரிப்படுத்தும் திட்டத்தின் கீழ் விற்கச் செய்ததால், அவைகள் பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனங்கள் கையில் போய் சேர்ந்துவிட்டன. ஐவரி கோஸ்ட் உலகிலேயே அதிக அளவில் கொக்கோவை உற்பத்தி செய்வதால், கொக்கோவின் விலை 11 வாரங்களில் அதி உச்சக்கட்டத்திற்கு உயர்ந்துள்ளது. இதனால் விநியோகம் தடைபடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சுற்றியுள்ள ஆபிரிக்க நாடுகளுக்கு, ஐவரி கோஸ்ட்தான் பொருளாதார வர்த்தக மையமாகவும், கடல் மார்க்கத்திற்கு ஏற்றதாகவும் உள்ளது. அதற்கென சொந்தமாக எண்ணெய் வளம் தற்போது இல்லாவிட்டாலும், ஆபிரிக்காவின் மேற்குப் பகுதியில் அதிக அளவில் எண்ணெய் திட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அமெரிக்கா இதன்மீது அதிக அக்கறை எடுத்து வருகிறது.

பிரான்ஸ் தன்னுடைய சொந்த துருப்புக்களை அங்கே வைத்தபோதிலும், அதோடு சேர்த்துக்கொள்ள அமைதிப் படைகளை மேற்கு ஆபிரிக்க நாடுகளிலிருந்து தருவித்து, ஐவரி கோஸ்ட்டில் பணியாற்ற அது நினைத்துள்ளது. இத்தகைய படைபலமானது, பிரான்சின் தலையீட்டிற்கு ஒரு ''சர்வதேச நம்பகத்தன்மை'' யை அளிக்கும், ஆனால் ஆபிரிக்க படைகளுக்கு இப்டிப்பட்ட ஸ்திரத்தண்மையற்ற சூழலில் வந்து செயல்பட தயக்கம் உள்ளது. ஜனவரி 3ம் தேதியன்று வெறும் 49 வீரர்கள் மேற்கு ஆபிரிக்க நாடுகளிலிருந்து முதற்கட்ட அமைதிப் படையாக வந்தனர். செனகலின் அதிபர் அப்துலாயே வாட், ''அங்கே போராடும் குழுக்களிடம் அரசியல் உடன்பாடு ஏற்பட்ட பிறகே, எஞ்சிய செனகல் அமைதிப் படை வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவர்'' என்றார்.

அமெரிக்கா தன்னுடைய பொருளாதார எதிரியான பிரான்சை, ஐவரி கோஸ்ட்டில் ஸ்திரத்தன்மையை கொண்டுவர அனுமதியளிப்பதாக தெரிகிறது. அமைதிப் படைகளுக்கு ஆதரவுதர அமெரிக்காவிற்கு விருப்பம் இல்லை, அதேபோல் நைஜீரியாவும் இதில் கலந்துகொள்ள இசைவு தெரிவிக்கவில்லை.

பிரான்சின் இத்தகைய ஈடுபாட்டினால், ஆளும் கட்சி வட்டாரத்தில் ஒரு பயம் எழுந்துள்து. லிபரேஷன் என்ற செய்தித்தாளில் ''வலையில் சிக்கியது பிரான்ஸ்'' என்ற தலைப்பிட்ட செய்தியில், வியட்னாம் போரில் அமெரிக்கா செய்தது போன்று பிரான்சும் சரியாக திட்டமிடவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

பாக்போவோடு, பிரான்சின் தலையீடு வெளிப்படையாகவே அதிருப்தியை காட்டுகிறது. அபித்ஜானிலுள்ள மேல்தட்டு செல்வந்தர்கள் இனவாத ஆதிக்கத்தில் களம் இறங்கி எதிரிகளை தாக்கும் சம்பவங்கள் என்பது இதற்கு முந்தைய தலைவர்களான கானன் பெடி மற்றும் ஜென்ரல் க்யூவை பிரான்சு ஆதரித்ததிலிருந்தே நடைபெற்று வருகின்றது. லூ மொன்ட் என்ற பத்திரிக்கையின் செய்தியாளர் கூறுகையில், ''செயல்திட்டம் - ஒற்றைக் கொம்பு மிருகம்'' என்ற பிரான்சின் செயல்பாட்டைப் பார்த்தால் கிளர்ச்சியாளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் தஞ்சம் தரும் பாதுகாப்பு திரையாகவும், தற்கால ஆட்சியின் கருவூலத்தைக் காக்கும் காவலாளியாகவும் அது இருப்பதாக தெரிகிறது என்றார். கொக்கோ ஏற்றுமதி மீது விதித்த சுமையினால் வரும் வருவாயில்தான் லோரன்ட் பாக்போ ஆட்சி நடத்த ஏதுவாக உள்ளதுடன், அவர் இதை வைத்து அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தரவும், போர்த் தளவாடங்களை வாங்கவும் ஏதுவாகவும் உள்ளது.

மேற்குப் பகுதியில் இந்த போர் நிறுத்தம் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது சந்தேகமாய் உள்ளது. கடந்த வாரம், லைபீரிய எல்லைப் பகுதியில் MJP யும் MPIGO வும் போர் நிறுத்தக் கோட்டின் தெற்கே ஒரு புதிய பகுதியில் ஆக்கிரமித்துள்ளனர். தெற்குக்கரை பகுதியில் சான் பெட்ரோ துறைமுகத்திலிருந்து 120 மைல் தொலைவில் அவர்கள் உள்ளார்கள். டியூக்யூவின் (Duékoué) முக்கியமான வீதிகளில் பிரெஞ்சுப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கே வாழும் சுமார் 20,000 பிரெஞ்சுப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு தருவதற்கும், கொக்கோ ஏற்றுமதிக்கு மிக முக்கியமான சான்பெட்ரோவை நோக்கி கிளர்ச்சிக் குழுக்கள் முன்னேறாமல் தடுப்பதற்காகவும் பிரெஞ்சு படைகள் அங்கே நிலைகொண்டுள்ளது.

பல நாடுகளுடன் கூட்டு சேர்ந்து, ஐவரி கோஸ்ட்டில் கட்டுப்பாடு கொண்டுவரவே பிரான்ஸ் விரும்புகிறது. கடந்த வாரங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது, முன்னாள் காலனியாதிக்க அரசு மீது அதிகப்படியான விரோதபோக்கு உள்ளதாக நிலைமைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. வில்பன் அபித்ஜானுக்கு வந்து இறங்கியபோது, அங்கே ஒரு மணி நேரம் அவர் காக்க வைக்கப்பட்டார். இதற்குக் காரணம் அங்கே நூற்றுக்கணக்கானவர்கள் தேசியவாதிகளின் சட்டைகளை அணிந்து பிரெஞ்சு அமைச்சர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவி செய்வதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். அரசு படைகளுக்காகவே அங்கு பிரெஞ்சுப் படைகள் பயன்படுகிறது என்று தெளிவாகத் தெரிந்ததும் வடக்குப் பகுதியில் கிளர்ச்சிக் குழுவிற்கான ஆதரவு அதிகமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

See Also :

ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு பிரான்ஸ் அனுப்பிய 1700 துருப்புகள்

Top of page