World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Britain: Foreign secretary admits oil central to war vs. Iraq

ஈராக்கிற்கு எதிரான போரின் உயிர் நாடி எண்ணெய்வளம்: பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஒப்புதல்
By Julie Hyland
14 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவின் தலைமையில் ஈராக்கிற்கு எதிராக நடக்கும் போரில், பிரிட்டன் கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதில் உயிர் நாடியான அம்சம் எண்ணெய் வளம் தான் என்பதை வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ ஒப்புக்கொண்டார்.

சென்ற வாரம் லண்டனில் நடைபெற்ற பிரிட்டனின் தூதர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஸ்ட்ரோ உரையாற்றியபோது, வளைகுடாவில் உள்ள அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து கொள்வதற்காக இராணுவ ரிசேர்வ் படைகள் மற்றும் கடற்படை தாக்குதல் பிரிவுகளை அரசாங்கம் அனுப்பியுள்ளதாகக் கூறினார். உலகிலேயே மிகவும் அதிகமான எண்ணெய் வளத்தைக் கொண்டிருக்கும் இரண்டாவது நாடு ஈராக் ஆகும்.

வரும் இருபது ஆண்டுகளில் பிரிட்டனின் வெளியுறவு கொள்கைக்கான குறிக்கோள்களை விவாதிப்பதற்காக லண்டனில் இரண்டு நாட்கள் பிரிட்டிஷ் தூதர்களது மாநாடு நடைபெற்றது.

''பிரிட்டன் மற்றும் உலக அளவில் எரிபொருட்கள் விநியோகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பெருக்குவது'', வரும் ஆண்டுகளில் பிரிட்டன் மேற்கொள்ளவிருக்கும் முன்னுரிமையான கேந்திர முடிவுகளில் ஒன்றாகும் என ஸ்ட்ரோ கூறினார். அந்த மாநாட்டில் 150 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் தூதர்கள் மற்றம் இராஜதந்திர அதிகாரிகள் கலந்து கொண்டனர். பயங்கரவாத மிரட்டல்களை மட்டுப்படுத்துவது, குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, பிரிட்டனின் பொருளாதார நலன்களை மேம்படுத்துவது மற்றும் ''ஐ.நா சாசனத்தின் அடிப்படையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டு நிலையான சர்வதேச உறவு முறையை நிலை நாட்டுவது'' ஆகியவை வரும் 20 ஆண்டுகளில் பிரிட்டன் மேற்கொள்ளவிருக்கும் வெளியுறவுக் கொள்கைகளில் அடங்கும்.

அதிகாரப்பூர்வமாக, அரசாங்கம் ஈராக்குடன் மோதுவதற்கு தெரிவித்துள்ள காரணம் ஈராக்கிடம் ''மக்களை பெருமளவில் கொன்று குவிக்கும் ஆயுதங்கள்'' இருக்கின்றன அல்லது அத்தகைய ஆயுதங்களை தயாரிக்க எண்ணியுள்ளது என்ற அச்சம் எனக் கூறியது. ஆனால், ஐ.நா ஆயுத ஆய்வாளர்கள் ஈராக் முழுவதிலும் விரிவாக ஆராய்ந்த பின்னர் அத்தகைய ஆயுதம் எதுவும் அந்நாட்டில் இருப்பதற்கான சான்றுகள் எதையும் தாக்கல் செய்யவில்லை என்ற உண்மை வெளிவந்த பின்னரும் பிரிட்டிஷ் அரசாங்கம் மேலே கூறிய அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.

ஆளும் வட்டாரங்களில் அரசு அதிகாரிகள் போருக்கு உண்மையான காரணம் எண்ணெய் வளம் தான் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். தூதர்கள் மாநாடு தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் கார்டியன் நாளிதழ் ''பிரிட்டிஷ் அரசின் சில அமைச்சர்களும் அதிகாரிகளும், தனிப்பட்ட முறையில் பேசும் போது மக்களை கொன்று குவிக்கும் ஆயுதங்களை விட எண்ணெய் வளம் தான் எங்களது கணிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இப்போது எண்ணெய் வளங்கள் கிடைப்பதில் நிலையற்ற தன்மை உருவாகி வருகின்றது. தற்போது மத்திய கிழக்கு, காஸ்பியன் பிராந்தியம் மற்றும் அல்ஜீரியாவிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வளம் தொடர்பாக நிலையற்ற தன்மையிருப்பதால், பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியமாகின்றது என அந்த அதிகாரிகள் கூறினார்கள்'' என்று எழுதியுள்ளது.

பிரிட்டனின் வட கடல் எண்ணெய் உற்பத்தி குறைந்து கொண்டு வருவதால், அதன் எரிபொருள் கொள்கையை வகுப்பவர்கள் எதிர்கால எண்ணெய் விநியோகம் குறித்து அபாயமணி அடித்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த 50 ஆண்டுகளுக்குள் பிரிட்டன் முழுவதும் இறக்குமதிகளை மட்டும் நம்பியே வாழவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்திருக்கின்றனர். இந்தப் பிரச்சனை பிரிட்டனை மட்டும் பாதிப்பது அல்ல. வரும் 30 ஆண்டுகளுக்குள் ஐரோப்பிய நாடுகளுக்கு தேவைப்படும் எண்ணெய் 92 சதவீதத்திற்கு அதிகமாகவும், எரிவாயு 81 சதவீதத்திற்கு அதிகமாகவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாகவிருக்கும்.

பிரிட்டனின் வெளியுறவுத் துறை நாட்டின் எரிபொருள் தேவைகளை மட்டும் கருத்தில் கொண்டு இந்தக் கவலையை வெளியிடவில்லை.

ஏதாவதொரு நாடு அல்லது நாடுகள் இந்த அத்தியாவசிய வளத்தின் மீது முழுகட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால், அவற்றிற்கு தனது எதிரிகளை விட மிகப் பெரிய அனுகூலம் கிடைக்கும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் அமெரிக்கா தனது மத்தியகிழக்கு கொள்கையை வகுத்து செயல்பட்டு வருகிறது. ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டு அதன் எண்ணெய் வளங்களை கைப்பற்றி விட்டால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பானுக்கு எதிராக தட்டிக்கேட்க ஆட்கள் இல்லாமல் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.

அதே அடிப்படையில் ரொனி பிளேயர் அரசு எண்ணெய் விநியோகப் பிரச்சனையை ஆயுத பலத்தால் முடிவு செய்யவேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறது. 1998 ம் ஆண்டு ''பாதுகாப்புத்துறைக்கான எதிர்கால கேந்திர அணுகுமுறை ஆய்வு'' ஒன்றிற்கு பிரிட்டிஷ் அரசு கட்டளையிட்டது. வரும் இருபது, முப்பது ஆண்டுகளில் பிரிட்டன் சந்திக்கவிருக்கும் பிரதான சவால்களை அடையாளம் கண்டு அவற்றை சமாளிப்பதற்கு இராணுவ ஏற்பாடுகளை செய்வது என்பது தான் அந்த ஆய்வின் நோக்கமாகும்.

''மேற்கு நாடுகளின் அடிப்படை நலன்கள் அல்லது பாதுகாப்பிற்கு'' ஆபத்தை விளைவிக்கின்ற மிக முக்கியமான அம்சம் எண்ணெய் விநியோகம்தான் என்று அந்த ஆய்வு அறிக்கை குறிப்பாக தெரிவித்தது. கடலுக்கு அடியிலிருந்து கிடைக்கும் எண்ணெய் எரிபொருள் வளங்களை பயன்படுத்திக் கொள்ளும்போது அவை சர்வதேச தகராறுகளை உருவாக்கும் தன்மை கொண்டவையாகவும், போரை உருவாக்கும் தன்மை கொண்டதாகவும் அமையும். மேலும் நாடுகளுக்கிடையே இந்த எண்ணெய் எரிவாயு வளத்திற்காக மிகத் தீவிரமான நேரடி மோதல் போட்டிகளும் உருவாகக் கூடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கை செய்தது. எதிர்காலத்தில் இத்தகைய எண்ணெய் விநியோகங்கள் வளைகுடாப் பிராந்தியத்திற்குள் குவிந்திருப்பதால் பிரிட்டனின் பாதுகாப்புக் கொள்கை குறிப்பாக, இந்த எண்ணெய் விநியோகங்களின் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய வேண்டுமென்று அந்த ஆய்வறிக்கை மேலும் கூறியது.

அத்தகைய கருத்துக்களால் தான் மக்களது எதிர்ப்பு உணர்வையும் மீறி ஈராக்கிற்கு எதிரான அமெரிக்க போர் முயற்சியில் பிரதமர் ரொனி பிளேயர் தனது அரசை உறுதியுடன் அமெரிக்காவுடன் சேர்த்திருக்கின்றார்.

இதற்கு கைமாறான ஏற்பாட்டை அமெரிக்கா செய்ய வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். மத்திய கிழக்கை கைபற்றுவதில், அமெரிக்க இராணுவத்திற்கு ஆதரவு தருவதற்கு பிரதி உபகாரமாக பிரிட்டிஷ் முதலீடுகளுக்கு ஈராக்கின் எண்ணெய் வளத்தில் மிக முக்கியமான பங்கு தர வேண்டுமென்று பிரிட்டன் விரும்புகிறது.

இதை பிரதமர் ரொனி பிளேயர் சென்ற ஏப்ரல் மாதம் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி சீனியர் ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதி நூலகத்தில் உரையாற்றும் போது கோடிட்டுக் காட்டியுள்ளார். ''யார் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை மேம்படுத்துகிறார்கள், புதிதாக எண்ணெய் எரிவாயு உற்பத்திக்கான வளங்கள் என்ன என்பது உயிர் நாடியான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி'' என்று அமெரிக்க அரசு அதிகாரிகளும், பிரமுகர்களும் அடங்கிய கூட்டத்தில் கூறினார்.

அமெரிக்காவும் பிரிட்டனும் ''உலகிலேயே தலைசிறந்த எரிபொருள் கம்பெனிகளை'' வைத்திருப்பதாக ரொனி பிளேயர் அங்கு குறிப்பிட்டார். ஆனால் இந்த இரண்டு நாடுகளும் கூட்டாக ஒரு உத்தியை வகுக்க வேண்டும். அந்த உத்தி "அரசியல் மற்றும் கோர்ப்பிரேட் உலகுகள் இணைந்து ஒத்துழைப்பதற்கும்" தங்களது நலன்களைப் பாதுகாப்பற்கும் உத்திரவாதம் செய்து தருவதாக அமைந்திருக்க வேண்டும் என்று பிளேயர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

பிரதமரது கவலைகளை பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, பிரவுன் பிரபு (Lord Browne) எதிரொலித்தார். பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று. ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய பின்னர் அந்த நாட்டிற்குள் முதலீடு செய்வதற்கான ''எண்ணெய் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதில்" சம உரிமைகளுக்கு புஷ் நிர்வாகம் உறுதி செய்து தர வேண்டும் என்று சென்ற அக்டோபரில் பிரவுன் பிரபு வலியுறுத்தினார். அமெரிக்காவின் எண்ணெய் வளம் தொடர்பாக, அதிகாரிகள் வாஷிங்டனில் ஈராக் எதிர்க்கட்சித் தலைவர்களோடு இரகசியமாக பேச்சு நடத்தியதாகவும், அந்தப் பேச்சில் போருக்குப் பின்னர் எண்ணெய் உற்பத்தியை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்று விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளி வந்ததைத் தொடர்ந்து பிரவுன் பிரபு பகிரங்கமாக சென்ற அக்டோபர் மாதம் சதாம் ஹசேனுக்குப் பின்னர் எண்ணெய் வளத்தை பகிர்ந்து கொள்வதில் கம்பெனிகளுக்கிடையில் சம வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

See Also :

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

Top of page