World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Blair forecasts "dangerous problems" in 2003

பிரிட்டன்: 2003ல் ''அபாயகரமான பிரச்சனைகள்'' நிகழும் பிளேயர் முன்கணிப்பு

By Julie Hyland
10 January 2003

Use this version to print | Send this link by email | Email the author

பிரதமர் டோனி பிளேயர் தன்னுடைய புத்தாண்டு செய்தியில், ''தற்போதுள்ளதுபோல் பிரிட்டன் முன் ஒருபோதும் ஒரேநேரத்தில் இந்த அளவிற்கு அதிக கஷ்டங்களையும், அபாயகரமான பிரச்சனைகளையும்'' முகங்கொடுத்து என்பதை தன்னால் நினைவுகூர முடியவில்லை என்றார்.

ஈராக் மீதான போரின் சாத்தியம் ஒருபுறம் இருக்க, ''நிறைய உளவு செய்திகள்'' அல் கொய்தாவால் தொடர்ந்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று தெரிவிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் மோதல் அதிகரிக்கும் என்றும்; அது மத்திய கிழக்கில் அதிகமான நாசத்தை உண்டுபண்ணக்கூடிய சக்தியுடையதாகும் என்றும், வடகொரியாவின் அணு ஆயுத திட்டம் அங்கு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும் எனவும் டோனி பிளேயர் தெரிவித்தார்.

உலக பொருளாதாரமும் அச்சமூட்டும் வகையில் உள்ளது என்றார் அவர். 1970 எண்ணெய் விலை அதிர்ச்சிக்குப்பின் உலக பொருளாதார வளர்ச்சி 2002ல் குறைந்துபோய் மிகத்தாழ்ந்த நிலைக்கு வந்தது G7 நாடுகளின் உற்பத்தி குறைந்துபோனதால்; உலக வர்த்தகம் ஒரு தேக்க நிலைக்கு வந்துள்துடன், பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்ததுள்ளது.

மொத்தத்தில் பல மக்களுக்குப் புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் இந்த நவீன உலகம் பாதுகாப்பற்றதாகும். அதிக வரவேற்பு பெறாத பிளேயரின் நடவடிக்கைகளான அதிகரித்த பல்கலைக்கழக கல்விக்கட்டணம் மற்றும் தனியார்மயமாக்கப்படவுள்ள பொதுச்சேவைகள் போன்ற நடவடிக்கைகளால் இது தணிக்கப்பட போவதில்லை.

பிளேயரின் செய்தியானது தகவல்தொடர்பு அமைப்புகளுக்கு உலகம் முழுதுமே நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. இப்படிப்பட்ட இருண்ட, பிரகாசமற்ற கணிப்புகளைக்கூறி பிரதமர் என்ன செய்ய உள்ளார்? அவருடைய கருத்துரைப்புக்கள், ''புது பயங்கலந்த வாழ்த்துக்கள்'', மற்றும் ''நாம் எல்லாம் அழிந்தோம்'' என்ற தலைப்புகளின் கீழ் வந்தது.

பிளேயரின் மிக விசுவாசமான ஆதரவாளர்களில் ஒன்றான, கார்டியன் செய்திப் பத்திரிகை அவருடைய இந்த நம்பிக்கையற்ற மதிப்பீடு வேண்டுமென்றேதான் செய்யப்பட்டது என்று வர்ணித்துள்ளது. அப்பட்டமாகவே உள்ள உண்மையான அபாயங்களை சேர்ச்சிலின் (Churchillian) பாணியில் சுட்டிக்காட்டி, தன் அரசு அப்படிப்பட்ட சவால்விடும் தருணத்தில் அதனை தக்கவாறு சந்திக்கும் என்பதை தெளிவாக்கிவிட்டார் என அப்பத்திரிகை குறிப்பட்டது. .

பிரதமர் இதைத்தான் சொல்ல விழைந்துள்ளார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும், தன் அரசு பல எதிர்ப்புகளை பல முனைகளிலும் சந்திக்கிறது என்பதை உறுதியாய் சொன்னார். ''என் செய்தி இதுதான்: இப்படிப்பட்ட உண்மையான, ஆதாரபூர்வமான பிரச்சனைகள் இருந்தாலும், பிரிட்டன் அதனை எதிர்கொள்ள தக்க இடத்தில் உள்ளது'' என்றார். தன் அரசு ''சரியான தீர்மானங்கள்'' எடுத்துள்ளது, அதனால் குறுகிய கால பிரபலயத்திற்காக அதிலிருந்து பின்வாங்காது'' எனக் கூறினார்.

நிதானமான தூரநோக்குள்ள தலைவர், இவரிடம் திட்டமா? அதற்கு வெகுதூரத்தில் அவர் உள்ளார். பிளேயர் ஒரு வண்டியோட்டி போன்றவர், முன்னால் மலை உச்சி இருக்கின்றது என தெளிவாக எச்சரிக்கப்பட்டும், ''எனக்கு அச்சமில்லை'' என மீண்டும் மீண்டும் மந்திரம்போல் சொல்லிக்கொண்டே அதே திசையை நோக்கி அதிவேகமாய் செல்பவரைப்போல் உள்ளார்.

இது மட்டும் பிளேயரின் அரசியல் அளவீடுகள் இல்லை. இவை எல்லாமே எழுப்பும் ஒரு கேள்வி, ஏன் அரசியல் அனுபவம் போதாத, தற்பெருமைக்கு சுயமுக்கியத்துவம் கொடுத்துக்கொள்ளும் ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும்? இந்த பிரதமர் பதவியே புரையோடிப்போன ஒட்டுண்ணித்தனமான, நெருக்கடியிலுள்ள பிரித்தானிய முதலாளித்துவத்தின் தன்மையாகும்.

பிளேயரின் விமர்சனங்கள் திடீரென்று வந்தவை அல்ல. அது ஆளும் தட்டினரது மத்தியில் நிலவும் அச்சங்களினதும், ஆதங்கத்தினதும் வெளிப்பாடாகும். இதன்மூலம் ஒரு நிலையான அரசாங்கம் அமையும் என்பதை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதற்காக விடுத்த புத்தாண்டு செய்தியாகவே அது இருந்தது.

இதற்கு பதில், சந்திக்கப்போகும் பிரச்சனைகளுக்கு தொடர்பான தீர்வுகள் ஏதும் தன் அரசுக்கு இல்லை என்பதையும் மீண்டும் ஆணித்தரமாய் சொன்னார்.

அரசியல் அறிவு என்பது இருக்கும் யதார்த்தங்களுக்கு தன்னை ஒத்துப்போகவைத்துக்கொண்டு அதன் எல்லை வட்டத்துக்குள்ளேயே பணியாற்றுவது என்பதையே பிளேயர் நம்புகிறார். கடந்த பல பத்து ஆண்டுகளில் பிரிட்டனின் பொருளாதார மற்றும் அரசியல் நிலமை சரிந்துவிட்டதையே இது காட்டுகின்றது. இதன் விளைவாக, ''பிரிட்டன் மேலும் சரிவை நோக்கி போவதை நிறுத்தி ஓரளவிற்கு இயல்புக்கு வரவேண்டுமானால், அமெரிக்காவின் இணையற்ற இராணுவ மற்றும் பொருளாதார வல்லமையை அது ஏற்றுக்கொள்ளவேண்டும். உடனடி விளைவுகளைப்பற்றி எண்ணாமல் அதை செய்யவேண்டும்'' என பிளேயர் கூறுகின்றார்.

பிளேயரின் இந்த விமர்சனம் உண்மையில் ஈராக்குக்கு எதிரான போரைப்பற்றிய கவலையைக்காட்டுகிறது. போருக்கான தீர்மானம் இன்னும் முடிவாகவில்லை என்றே பிரதமர் சொல்கிறார். அவர் ''அது சதாமின் விருப்பத்தை பொறுத்தது'' என்றார். ஈராக், ஐ.நா.வுடன் ஒத்துப்போனால்தான் போரை தவிர்க்கமுடியும் என்று திட்டவட்டமாய் கூறினார்.

அமெரிக்கா இது தொடர்பாக முடிவெடுத்துவிட்டதையும், ஈராக் என்னதான் செய்தாலும், தன் நாட்டின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பையும், தன் எண்ணெய் கிணறுகளையும் ஆக்கிரமிப்பு செய்வதை தவிர்க்க இயலாதது என்பதை பிளேயர் மிக நன்கு அறிந்துள்ளார். பிளேயர், '' பிரித்தானியா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை'' என்றபோதும், பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகமானது, வளைகுடாவிலுள்ள அமெரிக்க படைகளுடன் தனது இராணுவ வீரர்களை இணைந்து கொள்ளுமாறு அழைப்புவிட தயாராகிக்கொண்டிருக்கிறது. சுமார் 1500 இருப்பு இராணுவத்தினரை அழைக்க உள்ளதாகவும், எச்எம்எஸ் ஆர்க் ரோயல் (HMS Ark Royal) தலைமையிலான ரோயல் கடற்படை ஒன்று வளைகுடாவுக்கு ஆயத்தப்படுத்திவருகிறது. அரசாங்கமானது, 30 ஒப்பந்த கப்பல்களை பயன்படுத்தி தளவாடங்களை அப்பகுதிக்கு கொண்டு செல்லவும், இந்தப்படை அடுத்த வாரம் பிரயாணத்தை ஆரம்பிக்கும் என்று தகவல்கள் கூறுகிறது. மேலும் கிடைத்த தகவல்படி 30 தேசிய மருத்துவ சேவை மருத்துவமனைகளுக்கு, ஈராக் போரில் காயப்பட்டு வரும் பிரிட்டிஷ் வீரர்களை பராமரிக்க அறைகளைத் தயாராக வைத்திருக்கும்படி அதிகாரபூர்வமாக ஆணையிடப்பட்டுள்ளது.

பிளேயருக்கு இத்தகைய கபடப்பேச்சு தேவையாகவுள்ளது, ஏனெனில் பிரிட்டனின் அநேக மக்கள் ஈராக்குடனான போரை எதிர்க்கின்றனர். அமெரிக்காவின் உண்மையான நோக்கத்தைக்கண்டு ஆத்திரம் கொண்டுள்ளனர். பிளேயரும் ஏனைய ஐரோப்பா நாடுகளில் உள்ளதுபோல், அமெரிக்காவின் செயல் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்வதோடு, ஏற்கனவே சரிவில் இருக்கும் உலக பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்று அரசியல் மற்றும் சமூக எழுச்சிகளை உருவாக்கி விடும் என்ற பயத்தை உணர்ந்துள்ளதுடன், வெளிப்படுத்துகின்றார்.

இத்தகைய அபாயங்களை ஒப்புக்கொண்டாலும், வெள்ளை மாளிகையின் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்பணிய முடியாது என்று பிளேயர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சென்ற வார தொடக்கத்தில் நடந்த ஒரு சந்திப்பில் உலகின் அனைத்து பிரிட்டிஷ் வெளிநாட்டு தூதர்கள் எல்லோரும் கலந்துகொண்டனர். அங்கு அவர் ஆற்றிய உரையில், அதிகரித்துவரும் போர் விரோத எண்ணங்கள் ஆசியா மற்றும் மத்திய கிழக்கிலுள்ள மேற்கிற்கு சார்பானவர்கள் மத்தியில் ஸ்திரமின்மையை தோற்றுவிக்கும் என்ற கவலையின் மத்தியிலும், தன்னுடைய அரசும் அமெரிக்கா செல்லும் வழியிலேயே துடுப்பைச் செலுத்தும் என்று பிளேயர் மீண்டும் சொன்னார். இதற்கு பதிலாக, தனது நெருங்கிய கூட்டான பிரித்தானியாவினதும், ஏனைய ஐரோப்பாவின் கருத்துக்களையும் அமெரிக்கா கேட்கவேண்டும் என தெரிவித்தார்.

மேற்கத்திய சக்திகளிடையே சமரசம் கொண்டுவர, பிளேயர் தன்னை ஒரு ''இணைக்கும் பாலமாக'' காட்டிக்கொள்வது இது ஒன்றும் புதிதல்ல. பிளேயர் தன்னுடைய புத்தாண்டு உரையில், ''அராபியர்களுக்கும், இஸ்லாமிய உலகத்திற்கும்'' தான் கைகொடுப்பதாய் வாக்களித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தொடர்ந்து மீறிவரும் இஸ்ரேல் பற்றி அவர் கூறுகையில், ''மத்திய கிழக்கில் அமைதி கொண்டுவர நாம் பாடுபட வேண்டும்.... இல்லையெனில் எம்மீது குற்றம்சாட்டப்படுவதுபோல், இரட்டை வேடம் போடுகிறோம் என்று எம்மீது குற்றத்திற்கு உள்ளாகின்றோம்'' இதன் முடிவில், பாலஸ்தீனத்தில் சீர்திருத்தம் குறித்து ஒரு கருத்தரங்கு மாநாடு புத்தாண்டில் பிரிட்டனில் நடத்த உள்ளது'' என்று பெருமையுடன் அறிவித்தார்.

சில நாட்களுக்குள்ளாகவே, அவர் திட்டம் தவிடுபொடியானது. ஆரியல் ஷரோனின் இஸ்ரேலிய அரசு, பிரிட்டனில் நடக்கும் எந்த மாநாட்டுக்கும் பாலஸ்தீன உயர்மட்ட குழுக்கள் சென்று பங்கேற்பதை தடை செய்தது. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்ஜமின் நெட்டன்யாகு, பிளேயரை எச்சரிக்கையில், ''பிரிட்டன், இஸ்ரேலின் ஆதரவாளரான அமெரிக்காவின் போக்குடன் ஒத்துப்போகவில்லை" என்றும் தன்னுடைய பிரிட்டிஷ் சகா ஜாக் ஸ்ட்ரோவிடம் பேசும்போது, புஷ் எடுக்கும் முடிவையே பிளேயரும் எடுப்பதுதான் புத்திசாலித்தனம். பயங்கரவாதத்தை உள்ளடக்கியுள்ளவர்கள், சமாதானத்தின் சகாக்களாக மாட்டார்கள். அதற்கு நேர் எதிரானதையே செய்வார்கள்'' என குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சனை பிளேயரின் திட்டங்களை வலிமையிழக்க செய்கின்றது. உலகில் ஸ்திரத்தன்மையின்மையை எதிர்க்க உதவுவதற்கு மாறாக, அமெரிக்காவின் பொறுப்பற்ற இராணுவ அதிகாரமானது அதை மேலும் அதிகரிக்கிறது. அது ஒரு இணைந்த நலன்களை உருவாக்காது, ஒவ்வொருவருக்கும் இடையிலான மோதலை மூட்டுகிறது.

இவை பிளேயரின் பேச்சுக்களின் பலவீனத்தை கோடிட்டு காட்டுகிறது. ஏற்கனவே பலவீனமாக இருக்கும் உலக பொருளாதாரம் மேலும் மோசமடையக்கூடிய அறிகுறிகள் தென்படுகிறது. இதெல்லாம் தெரிந்த உண்மைதான் என்றாலும் அது ஏற்படும் முன்னரே அர்த்தமற்ற பேச்சுக்களை பிரதமர் பேசி வருகிறார். ''பிரிட்டன் எத்தகைய புயலையும் எதிர்த்து நிற்கக்கூடியது'' என பிளேயர் கூறினாலும், ஆதாரங்கள் எல்லாம் அதற்கு எதிர்மாறாகவே உள்ளது.

உலக வர்த்தகம் மற்றும் முதலீடுகளையே பெரிதும் பிரிட்டன் நம்பியிருக்க பொருளாதார மந்த நிலையின் தாக்கம் உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் உணரப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் தொழிற்சங்க சம்மேளனம், பிரிட்டனின் உற்பத்தி கேந்திரங்கள் எல்லாம் பல ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது இரண்டாவது முறையாக மந்த நிலையை சந்திக்கிறது என எச்சரித்துள்ளது. Economic Review இல் சமீபத்தில் Deloitte & Touche என்ற கணக்காளர் நிறுவனம், ''பொருளாதார வளர்ச்சியானது வீழ்ச்சி பெறும், பங்கு விலைகள் சரியத்தொடங்கும், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிடும் என எச்சரித்துள்ளது. சுமார் 250,000 தொழிலாளர்கள் 2003இல் வேலை இழக்கக்கூடும் என்றும் வீடுகளின் விலை 20% குறையும். கடனுக்கு வீடுகளை வாங்கியுள்ளவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏழைகள் என்று அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்படலாம் என்கிறது. இது ஒரே இரவில் பல மில்லியன் மக்களை ஏழைகளாக்கலாம்'' எனவும் அது குறிப்பட்டுள்ளது.

இருப்பினும், தன் அரசாங்கமானது மக்களின் வேலைகளையும், ஓய்வூதியம், வீடுகள் மற்றும் பொது சேவைகளை வரப்போகும் ஆபத்திலிருந்து பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கும் என்று பிரதமர் கூறவில்லை. அதற்குப்பதில், பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியானது, ''என்ன விளைவு வந்தாலும், தன் அரசு, பொருளாதார நிர்வாகத்திற்கான கட்டமைப்பினை'' உறுதியாக தொடரும் எனவும், பொதுச் சேவைகளை மேலும் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தும் - அதாவது தனியார்மயமாக்கப்படும் என்று உறுதியாய் சொன்னார்.

பிளேயர் வெளியிட்ட செய்தியில், தன் அரசாங்கமானது, உழைக்கும் மக்களின் பிரச்சனைகளிலிருந்து விலகிப்போயிவிட்டதையும், சமூகத்தின் அதியுயர் செல்வந்தர்களோடு ஒன்றாகிவிட்டதையும் காட்டுகின்றது. மக்கள் கசப்பான மருந்துகளை மேலும் எடுத்துக்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்று மேல்குடி மகனின் பாணியில் சொல்லவேண்டியது அவசியம் என நம்புகிறார். அதற்கு அப்பால் இருக்கும் பிரச்சனைகள் பற்றி அவருக்கு அச்சங்கள் இருந்தாலும், தன்னுடைய வெளிநாட்டுப்போர் கொள்கையும், உள்நாட்டின் கடுமையான நடவடிக்கைகளும் உருவாக்கும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் உண்மையான பரிமாணங்கள் தொடர்பாக அவரிடம் ஒரு கருத்தும் இல்லை.

See Also :

ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் போர் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில்: 2003-ம் ஆண்டின் அரசியல் சவால்

Top of page