World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

WSWS/SEP London meeting: "The working class needs its own international strategy"

உலக சோசலிச வலைத் தளம்- சோசலிச சமத்துவக் கட்சி லண்டன் கூட்டம்: "தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்த சர்வதேச மூலோபாயம் தேவை"

By our correspondent
26 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 22, ஞாயிறன்று உலக சோசலிச வலைதளம் மற்றும் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP), இணைந்து லண்டனில் ஈராக்கியப் போரின் படிப்பினைகள், ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய பணி இவற்றைப் பற்றி கலந்துரையாட ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது.

உலக சோசலிச வலை தள ஆசிரியர் குழு உறுப்பினரும், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான பீட்டர் சுவார்ட்ஸ் தனது உரையை, ஈராக்கியப் போர் சர்வதேச அரசியலில் ஒரு திருப்புமுனை என வலியுறுத்தி ஆரம்பித்தார்.

"போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் பழைய அரசியல் நிறுவனங்கள் மற்றும் அவை பின்பற்றிய பழைய இயங்குமுறைகளின் அடிப்படைகள், அனைத்துமே அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் புதிய திசைவழியால் சிதைந்துவிட்டன." என சுவார்ட்ஸ் கூறினார்: "இது சர்வதேச உறவுகளுக்கு மட்டுமே பொருந்தவில்லை, தேச நிலைமைகளுக்கும் பொருந்தும். இப்புதிய நோக்கினால் சமுக, அரசியல் பாதிக்கப்படாத நாடு ஒன்றுகூட இல்லை" என்றார் சுவார்ட்ஸ்.

பிரான்சில் சமீபத்தில் மில்லியன் கணக்கில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததோடு, ஜோன் பியர் ரஃபரனின் வலதுசாரி அரசாங்கம், ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டத்திற்கெதிராக, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

"இந்த இயக்கத்தின் இரண்டு மிகக் குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருந்தன" என்று சுவார்ட்ஸ் கூறினார்: "அதனுடைய உறுதிப்பாடு, அளவு, தீவிரப் பற்றுதல் -பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும், பெருமளவு அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட்டது- மற்றும் ஒரு இயக்கத்தை வெற்றி அடையச்செய்வதற்கு தவிர்க்க முடியாததாக இருந்திருக்கும் அரசியல் முன்னோக்கும், தலைமையும் முழு அளவில் இல்லாமற்போனது. அனைத்துத் தொழிற்சங்கங்களும், இடதுசாரிப் போக்குகளும் இயக்கத்தை வெளிப்படையாக எதிர்த்தன, அல்லது உள்ளிருந்தே நாசம் செய்தன அல்லது பயனற்ற முடிவுக்குக் கொண்டுவந்தன. முடிவில் தொழிலாளர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போயிற்று."

தொழிற்சங்கங்கள், சோசலிச, கம்யூனிச கட்சிகள், தீவிர இடதுசாரிக் கட்சிகள் இதில் பங்குபற்றிய முறையை விவரித்த பின்னர் சுவார்ட்ஸ் முடிவாக:

"பிரெஞ்சு அனுபவத்திலிருந்து நிறையப் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலாவதாகப் பழைய போராட்ட முறைகளும், பழைய சீர்திருத்தக் கட்சிகளும், தொழிற் சங்கங்களும் தங்களைக் களைப்பில் ஆழ்த்திக்கொண்டு செயலற்றவையாகப் போய்விட்டன. கடந்த 50 ஆண்டுகளாக தொழிற்சங்க வடிவத்தை எடுத்திருந்த வர்க்கப் போராட்டம் இப்பொழுது அரசியல் வடிவத்தை கட்டாயம் எடுத்தாக வேண்டும். (அதாவது, அது நேரடியாக முதலாளித்துவ ஆட்சியையும் சமூகத்தின் மீதான அதன் கட்டுப்பாட்டையும் எதிர்த்து சவால் செய்தாக வேண்டும்.) எனக் கூறினார்

"இரண்டாவது, இந்தப் பணியைப் பற்றி கவனம் செலுத்த பிரான்சில் தற்பொழுது ஒரு சமுதாய அமைப்போ அரசியல் அமைப்போ கூடக் கிடையாது -இதைப் பற்றிய பொறுப்பு எடுப்பதைப் பற்றி கூறவேண்டிய தேவையேயில்லை. முதலாளித்துவத்தின் ஆட்சியை சவால் செய்யாமல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அரசாங்கத்தை நிறுவாமல் ஓய்வூதியங்களையோ அல்லது ஏனைய சமூக தேட்டங்களையோ பாதுகாப்பதற்கு வேறு வழியே இல்லை. இது ஒரு சாதாரண பணி அல்ல; ஒரே நாளில் செய்து முடிக்கப்படும் செயலும் அல்ல. இது ஒரு புதிய தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட அரசியல் கட்சியை நிறுவும் பணியைக் கோருகிறது. இந்தப் பிரச்சினையை வெளிப்படையாக முன்வைத்தால் ஒழிய, இதற்கு முடிவு ஏற்படப்போவதில்லை.

"அத்தகைய கட்சி -இது மூன்றாவது படிப்பினை- இப்பொழுதுள்ள அரசியல் நிறுவன அமைப்புகளினின்றும் அடிப்படையிலேயே மாறுபட்ட அணுகுமுறையை, மூலோபாயத்தை கொண்டிருக்கும். பிரான்சின் எல்லைக்குள் ஓய்வூதியத் திட்டப் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்ற எண்ணம் சிறு பிள்ளைத்தனமான பிழையாகும். ஐரோப்பிய நாடுகள் முழுவதிலுமே, ஏன், உலகம் முழுவதுமே, இத்தகைய சமுதாய நலத்திட்டங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ரஃபரனையும் சிராக்கையும் மட்டும் எதிர்நோக்கவில்லை; இவ்விருவருக்கும் பின்னால் வேலை அளிப்போர் சங்கமான Medef, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியத் தலைமை அனைத்தும் உள்ளன. ரஃபரன் பின்வாங்கினாலும்கூட, பன்னாட்டு சந்தைகள் உடனடியாக பிரான்சை தடைகளுக்கு உட்படுத்திவிடும்.

"உற்பத்தியில் பூகோளமயமாக்கல் முறை நீண்ட காலமாகவே சலுகைகள் அளித்தலையும் வர்க்க சமரசத்தையும் கீழறுத்து விட்டது. ஈராக் மீதான போரும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவிவரும் கடுமையான பூசல்களும் மாபெரும் அளவில் அந்த நிகழ்ச்சிப்போக்கை விரைவுபடுத்தியுள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகப் பொருளாதாரம் முழுவதையுமே தன் விருப்பப்படி, சுதந்திர சந்தையின் ஈவிரக்கமற்ற மற்றும் அப்பட்டமான வடிவங்களுக்கேற்ப மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

"பிரெஞ்சு; ஜேர்மன் அரசாங்கங்கள் அமெரிக்க போர் முன்னெடுப்புக்கு சரணாகதி அடைந்துவிட்டன மற்றும் காலந்தாழ்த்தி, ஈராக்கியப் போரை ஏற்றுக்கொண்டுள்ளன. பொருளாதார அளவில் அமெரிக்க சமூக நிலைமைகளை ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த முற்படுவதன் மூலம், இராணுவ அளவில் காலனித்துவ தலையீட்டிற்கான தங்களின் சொந்த திறமையை வளர்த்துக்கொள்ளுதல் மூலம் தற்பொழுது அமெரிக்காவோடு போட்டியிட முயலுகின்றன.

"இந்தச் சூழ்நிலைகளில் ஓய்வூதியத் திட்டப் பாதுகாப்புக்களும், சமூக வெற்றிகளும், ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் எதிரான போராட்டத்தோடு இணைந்து நிற்கின்றன. தொழிலாள வர்க்கம் இத்தகைய ஆபத்துக்களை தேசியக் கூட்டிற்குள் பதுங்கிக்கொள்வதால் எதிர்நோக்க முடியாது. அதற்கு அதன் சொந்த சர்வதேச மூலோபாயம் தேவைப்படுகிறது.

"இந்தச் சிறப்பு அணுகுமுறையில் மையக் கூறுபாடு ஐக்கிய சோசலிச ஐரோப்பிய குடியரசு என்ற அமைப்பிற்காகப் போராடுதலாகும். ஒற்றைச் சந்தை முறை, ஐரோப்பிய ஒன்றியம், ஒற்றை யூரோ நாணய முறை முதலியவை பொருளாதார அளவில் கண்டத்தை ஒருங்கிணைத்துள்ளன மற்றும் அதனுடைய பல உள் எல்லைகளை அகற்றிவிட்டன. ஆனால் ஐரோப்பிய முதலாளித்துவம் ஒருங்கிசைந்த முறையில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முடியவில்லை, அமெரிக்க அறைகூவலை எதிர்த்து நிற்கும் திறனையும் கொண்டிருக்கவில்லை.

"நாம் ஓர் ஐக்கியப்பட்ட ஐரோப்பாவைச் சமத்துவத்தின், ஜனநாயகத்தின், சோசலிசத்தின் அடிப்படையில் உருவாக்க நோக்கம் கொண்டுள்ளோம். நாம் உள்நாட்டைச் சார்ந்தவராயினும் புலம்பெயர்ந்தவராயினும், தேசிய இனம், நிறம் அல்லது மதம் இவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுடைய -சமூக அரசியல் சமத்துவத்திற்காகப் பாடுபடுவோம். நாம் சோசலிச அடிப்படையில் பொருளாதார வாழ்வைச் சீர்திருத்திக் கொள்ளப் போராடுவோம்.

"ஒரு சோசலிச ஐரோப்பா தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சக்திவாய்ந்த எதிரிடையாக விளங்க முடியும். போருக்கு நம்முடைய விடை, ஆயுதக்களைவு அல்ல, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிராகத் திரட்டுதலேயாகும். இது அமெரிக்க எதிர்ப்பு அல்ல. உண்மையில் இத்தகைய கொள்கை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை ஈர்க்கும் முழுமையான ஆற்றலைக் கொண்டுள்ள புள்ளியாக இருக்கும். வாஷிங்டனில் `ஆட்சி மாற்றத்திற்கு` அமெரிக்கத் தொழிலாளரின் அத்தகைய திட்டத்திற்கு நாம் உதவ விரும்புகிறோம்."

பிரான்சின் வேலை நிறுத்த இயக்கத்தைப் பற்றி ஒரு உயிரோட்டமான விவாதம் தொடர்ந்தது; மற்றும் தற்போதைய பிரிட்டிஷ் செய்தி ஊடகமும், பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கமும் சமுதாய நெருக்கடிக்கு தஞ்சம் அடைவோரைப் பலியாடுகளாகச் செய்யும் முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

See Also :

லண்டன் கூட்டத்தில் கிறிஸ் மார்ஸ்டன் உரை: "ஐரோப்பாவில் வர்க்க உறவுகளைப் பொறுத்தவரை ஒரு திருப்புமுனை"

ஈராக்கியப் போரைப் பற்றிய பேர்லின் கூட்டம்:
''சர்வதேச அரசியலில் ஒரு திருப்புமுனை''

உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு

Top of page