World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

A reply on Rosa Luxemburg's attitude to Lenin

லெனின் தொடர்பாக ரோசா லக்ஸம்பேர்கின் மனோபாவம் பற்றிய ஒரு பதில்

5 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளம், லெனின் தொடர்பாக ரோசா லக்ஸம்பேர்க்கினுடைய மனோபாவம் பற்றிய ஒரு கடிதத்தை அண்மையில் பெற்றுக்கொண்டது. உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் எழுதிய பதிலை நாம் இங்கு பிரசுரிக்கின்றோம்.

அன்பின் வாசகருக்கு,

ரோசா லக்ஸம்பேர்க்கிற்கும் லெனினுக்கும் இடையில் 20 ஆண்டுகளாக நிலவிய வளமானதும் சிக்கலானதுமான உறவை எளிய முறையிலான வகைப்படுத்தல்களுக்கு தாழ்த்த முடியாது. இந்த இரு தலைசிறந்த புரட்சிகர தத்துவவாதிகளும் முதலாம் உலக யுத்தம் வரையான வருடங்களில் ஐரோப்பிய சமூக ஜனநாயகத்தின் இடது கன்னையை சார்ந்தவர்களாகவும் சந்தர்ப்பவாதத்தின் உறுதியான எதிரிகளாகவும் இருந்து வந்தனர். அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள், பெரும்பாலும், அவர்கள் செயற்பட்ட அரசியல் சூழ்நிலைகளினுள்ளே அவர்கள் முகம் கொடுத்த குறிப்பிட்ட பிரச்சினைகளின் தன்மையினாலேயே வரையறுக்கப்பெற்றது.

உதாரணமாக, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் அடக்கி ஒடுக்கும் அதிகாரத்துவ அமைப்புடன் அவர் கொண்டிருந்த கசப்பான முரண்பாட்டின் பிரதிபலிப்பே, ஒரு வகையில், லெனினின் உறுதியான மத்தியப்படுத்தப்பட்ட கட்சி தலைமைத்துவம் தொடர்பான வலியுறுத்தலின் மீது அவரை நம்பிக்கை இழக்கச் செய்தது. அதேபோல், தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக அவர்களுடைய மாறுபட்ட நிலைப்பாடுகள், ஒரு வகையில், புறநிலை நிலைமைகளின் செல்வாக்கால், இந்த விடயத்தை வேறுபட்ட முன்னோக்குகளில் அணுகுவதற்காக நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமையால் ஊற்றெடுத்தவையாகும். "தேசிய இனங்களின் சிறைக்கூடமான" ஸாரிச ரஷ்யாவில் தொழிலாள வர்க்க கட்சியொன்றை கட்டியெழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்த லெனின், முதலாளித்துவ தாராண்மைவாத கடேட் கட்சியின் பெரும் ரஷ்ய பேரினவாதிகளுக்கும் மார்க்சிச இயக்கத்திற்கும் இடையில் கடக்கமுடியாத பெரும் பிளவை நிறுவ வேண்டியது அத்தியாவசியமானது எனக் கருதினார். லக்ஸம்பேர்க், போலந்து சமூக ஜனநாயக இயக்கத்தின் முன்னணி தத்துவாசிரியை என்ற வகையில், தேசியவாத பில்சுட்ஸ்கி இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ போலி சோசலிஸ்டுகளுக்கு எதிராக சளைக்காத போராட்டத்தை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

இந்த வேறுபாடுகள் தந்திரோபாய கருதிப்பார்த்தல்களால் காரணங்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டன, வெறுமனே ஒரு கூட்டிணைவான சிறப்பியல்புகளின் கருத்துவேறுபாடுகளாக விளங்கியதாக அர்த்தப்படுத்தாது. பல்வேறு முதலாளித்துவ தேசிய இயக்கங்களின் "விடுதலை வாத" பாசாங்குகள் முற்றிலும் அபகீர்த்திக்குள்ளான 20ம் நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்கள், லக்ஸ்ம்பேர்க்கின் சுயநிர்ணய கோரிக்கை தொடர்பான விமர்சனத்தை செல்தகைமை உடையதாக்க துணைநின்றது. மெய்ப்பிக்க சாதகமாக விளங்கியது. ஆனால் கட்சி அமைப்பு தொடர்பான வேறுபாடு, சர்வதேச சோசலிச அமைப்பின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான பரந்த போராட்டத்தின் உள்ளடக்கத்தில் நோக்கும் போது, புதிய அமைப்புரு கொண்ட கட்சியை கட்டியெழுப்புவதற்கான லெனினின் போராட்டமானது உயர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மற்றும் புத்திஜீவித சாதனையாக விளங்கியது. 1903 - 1914 காலகட்டத்தில் திருத்தல்வாதத்திற்கு (Revisionism) எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்தின் அடிப்படையிலேயே ஒரு புரட்சிகர கட்சியை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை, லக்சம்பேர்க் மற்றும் ட்ரொட்ஸ்கி உட்பட, லெனின் வேறு யாரையும் விட மிக தெளிவாக எடுத்துக் காட்டினார். கட்சி அமைப்புமுறை பற்றிய விடயங்கள் இந்த அடிப்படை போராட்டத்தின் சூழ்நிலையிலேயே விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் என லெனின் வலியுறுத்தினார். லெனினிச "மத்தியத்துவ வாதமானது" தொழிலாளர் இயக்கத்தினுள் சந்தர்ப்பவாதத்தின் செல்வாக்குக்கு எதிரான போராட்டத்தின் வெளிப்பாடேயாகும்.

ரஷ்ய புரட்சி பற்றிய ரோசா லக்ஸம்பேர்க்கின் விமர்சனத்தைப் பொறுத்தவரை, அந்தப் புகழ்பெற்ற பிரசுரமானது அக்டோபர் புரட்சியை நிபந்தனையின்றி பாதுகாக்கும் நிலைப்பாட்டில் இருந்து எழுதப்பட்டது என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. லக்ஸம்பேர்க் வலியுறுத்திய லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் "தவறுகள்", இரண்டாம் அகிலத்தினதும் ஜேர்மன் சமூக ஜனநாயகத்தினதும் காட்டிக்கொடுப்புகளின் விளைவுகளால் போல்ஷிவிக் கட்சி முகம் கொடுத்திருந்த அசாத்தியமான நிலைமைகளிலிருந்தே வளர்ச்சிகண்டது என லக்சம்பேர்க் சுட்டிக்காட்டினார்.

லக்ஸ்ம்பேர்க், போல்ஷிவிக் கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளின் சில அம்சங்களில் விமர்சனம் கொண்டிருந்தபோதும், லெனின் ட்ரொட்ஸ்கியின் வேலைகளின் மீது அவர் கொண்டிருந்த வரம்பற்ற மதிப்பில் சந்தேகத்துக்கு இடம் வைக்கவில்லை.

அவர் எழுதியதாவது, "வரலாற்று சாத்தியப்பாடுகளின் வரையறைக்குள் ஒரு மெய்யான புரட்சிகர கட்சியால் செய்யக்கூடிய பங்களிப்புகள் எல்லாவற்றையும் தம்மால் செய்யமுடியும் என்பதை போல்ஷிவிக்குகள் காட்டியுள்ளனர். அவர்கள் அதிசயங்களை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது. உலக யுத்தத்தினால் சோர்வடைந்த, ஏகாதிபத்தியத்தினால் குரல்வளைகள் நெரிக்கப்பட்ட, இரண்டாம் அகிலத்தால் காட்டிக்கொடுக்கப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நாட்டில், முன்மாதிரியானதும் பிழையற்றதுமான பாட்டாளி வர்க்கப் புரட்சி இடம்பெறுவது வியக்கத்தக்கதாகும்."

"சரியான நடவடிக்கை என்னவென்றால், போல்ஷிவிக்குகளின் கொள்கைகளில் அத்தியாவசியமற்றவையிலிருந்து அத்தியாவசியமானதையும் எதிர்பாராத தசைத் திரட்சியிலிருந்து கருமூலங்களையும் வேறுபடுத்திக்கொள்வதாகும். தற்போதைய காலகட்டத்தில், உலகின் சகல பாகங்களிலும் நிகழும் தீர்க்கமான இறுதிப் போராட்டங்களை நாம் எதிர் கொள்ளும்பொழுது எரியும் பிரச்சினையாக இருந்ததும் இருப்பதும் சோசலிசம் பற்றிய மிக முக்கியமான பிரச்சினை ஆகும். அது இந்த அல்லது அந்த தந்திரோபாயத்தின் இரண்டாம் பட்சமான விடயமல்ல. ஆனால், அது பாட்டாளி வர்க்கத்தின் நடவடிக்கைக்கான கொள்திறன், நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான பலம், சோசலிச அதிகாரத்துக்கான உறுதிப்பாடு பற்றிய பிரச்சினையாகும். இதில் உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு உதாரணமாக முன்சென்றவர்களில் லெனினும் ட்ரொட்ஸ்கியும் மற்றும் அவர்களது சகாக்களும் முதன்மையானவர்களாவர்; இன்று வரையிலும் 'நாம் துணிச்சல்கொள்வோம்!' என சொல்லக்கூடியவர்கள் அவர்கள் மாத்திரமேயாகும்.

"இதுவே போல்ஷேவிக் கொள்கையில் உள்ள அத்தியாவசியமும் நீடித்த தன்மையும் ஆகும். இந்த அர்த்தத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றி, சோசலிசத்தை யாதார்த்தமாக்கும் பிரச்சினையை நடைமுறையில் இருத்தியதோடு முழு உலகிலும் மூலதனத்துக்கும் உழைப்பிற்குமிடையிலான கொடுக்கல் வாங்கலுக்கு முடிவுகட்டுவதற்கான வல்லமையை அபிவிருத்தி செய்து, உலகப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையாக முன்சென்ற அந்த அழியாத வரலாற்றுப் பணி அவர்களுக்கே சொந்தமானதாகும். பிரச்சினையை ரஷ்யாவினுள் முன்னெடுக்கக மாத்திரமே முடிந்தது. அது ரஷ்யாவினுள் தீர்க்கப்படமுடியாது. மற்றும் இந்த அர்த்தத்தில் நோக்கும்போது, எல்லாப் பிரதேசத்தினதும் எதிர்காலம் 'போல்ஷிவிசத்துக்கே' சொந்தமானது."

இறுதியாக ஒரு ஆலோசனை: லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியோர் வழிபாட்டு இடங்களில் வைத்து பூஜித்து வணங்கப்படவேண்டிய கடவுள்கள் அல்லர். அவர்கள் அதிவிசேட புத்திஜீவிகளாக இருந்தாலும் பிழைவிடக்கூடிய மனிதப் பிறவிகளே. சோசலிச இயக்கத்தின் வரலாற்று உரிமை மீது நம்பிக்கை வைப்பதற்கு லெனின், ட்ரொட்ஸ்கி மாத்திரமல்ல லக்ஸம்பேர்க்கும் எடுத்த முடிவுகளின் பிழையற்றதன்மை மீதான வரம்பற்ற விசுவாசம் தேவையற்றது.

உண்மையுள்ள,

டேவிட் நோர்த்

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவிற்காக

Top of page