World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

ஜிமீக்ஷீக்ஷீஷீக்ஷீவீsனீ ணீஸீபீ tலீமீ ஷீக்ஷீவீரீவீஸீs ஷீயீ மிsக்ஷீணீமீறீறிணீக்ஷீt 2

தீவிரவாதமும் இஸ்ரேலின் தோற்றமும் - பகுதி 2

By Jean Shaoul
23 June 2003

Use this version to print | Send this link by email | Email the author

இது இரு பகுதி கொண்ட கட்டுரைத் தொடரின் முடிவுரை ஆகும். முதல் பகுதி ஜூன் 21 அன்று வெளிவந்தது.

இர்குன்கள்

ஸ்டேர்ன்/லெஹி குழுவிற்கு மாறுபட்ட முறையில் பிரிட்டனுக்கு எதிராக ஜேர்மனி தோல்வியடையும் என்பது உறுதியானவுடன்தான், ஆயுதமேந்திய போராட்டத்தை இர்குன் மேற்கொண்டது. 1942ம் ஆண்டுக் கடைசியில் மெனாச்செம் பெகின் (Manachem Begin) போலந்தில் ஒரு சோவியத் தொழிலாளர் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் பாலஸ்தீனத்திற்குத் திரும்பி வந்தார். இர்குனுடைய இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டு ஆயுதமேந்திய போராட்டத்தை -கிளர்ச்சியை- ஆங்கிலேயரை விரட்டுவதற்காக மேற்கொண்டார்.

ஆனால் இர்குனுடைய நடவடிக்கைகள் அப்பகுதியில் ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் புரட்சிகரமான போராட்ட முறையோடு எந்த முறையிலும் பொதுவான கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. அதன் நடவடிக்கைகள் அரேபியரையும் கூட இலக்கு வைத்து இருந்தன. அதனுடைய துண்டுப் பிரசுரங்களுள் ஒன்று கூறியது: ``அரேபியர்களை அடக்கியாளவும், அவர்களுடைய கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்யவும், அவர்களோடு நாம் சண்டை போடவேண்டும். களத்திலிருந்து அவர்கள் ஓர் அரசியல் சக்தியாக இருப்பதை அகற்றிவிட வேண்டும். இந்த அரேபியருடனான போராட்டம் வெளிநாடுகளில் நம் இனத்தைச் சார்ந்துள்ளோரை ஊக்குவித்து இணைக்கும். உலகத்திலுள்ள பல நாட்டு மக்களின் கவனத்தை நம்மால் ஈர்க்கும், ஆயுதமேந்திப் போராடும் மக்களை உலகம் மதிக்க நிர்பந்திக்கப்படும். மக்கள் இராணுவத்திற்கு அதன் போராட்டத்தில் ஆதரவளிக்கும் ஒரு நட்பு நாடு காணப்படும்.``

ஸ்டேர்ன், லெஹிக் குழுக்களைப் போலல்லாமல், "பயங்கரவாதம்" என்ற முத்திரையை எப்பொழுதும் நிராகரித்து, வேறொரு இராணுவத்துடன் போராடும் இர்குனும் ஒரு இராணுவப் படையே என்ற கூற்றை முன் வைத்தது. அவ்விரு தீவிரவாதிகளின் செயல்முறைகளையே கடைப்பிடித்து, இர்குனின் பிரிட்டிஷுக்கு எதிரான மிகவும் தெரியப்பட்ட செயல், 1946 ஜூலையில் ஜெருசலேத்தில் பிரிட்டிஷ் இராணுவத் தலைமையகமாக இருந்த கிங்டேவிட் ஹோட்டலைத் தகர்த்தது ஆகும்.

1944ல் மோய்ன் பிரபுவை லெஹி படுகொலை செய்தமை -அவர் சேர்ச்சிலின் நெருங்கிய நண்பராயிருந்தார், அவருடன் வெய்ஸ்மன் (Weizman), பென் குரியன் (Ben Gurion) ஆகிய சியோனிச தலைவர்கள் நல்ல உறவு கொண்டிருந்தனர்-- லெகியையும் இர்குனையும் நசுக்கிவிட அவர்களை இட்டுச்சென்றது. ``ஒவ்வொரு ஒழுங்கான அமைப்பும் இவர்களை காறி உமிழ்ந்திடவேண்டும்.... இந்தக் காட்டுமிராண்டித்தனமான மனிதர்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் மறுக்கப்படவேண்டும்... நம்முடைய இதயங்களைத்தான் -பிரிட்டனின் இதயத்தையல்ல- இந்த பயங்கரவாதிகளின் இரும்புத்தடி ஊடுருவி வலியூட்டியுள்ளது. நம்முடைய கைகள்தாம், வேறு எவருடையதுமில்லை, அதைப் பிடுங்கி எறியவேண்டும்`` (மேற்கோளிட்டது, Colin Shindler in the Land Beyond Promise: Israel, Likud and the Zionist Dream).

சியோனிச கட்சிகள் இணைகின்றன

ஜூலை 1945ல் கிளமென்ட் அட்லியின் தொழிற்கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற அதன் பேரார்வம், தொழிலாளர் சியோனிஸ்டுகளுக்கும் பயங்கரவாத அமைப்புக்களுக்குமிடையே கசப்புக்கள் நிறைந்த சமாதானத்திற்குத் தூண்டியது.

இந்தக் குழுக்கள் பல ஆண்டுகளாக பெரும் குரோத உணர்வுமிக்க அரசியல் போட்டியாளர்களாக இருந்தன. 1943ல் நிகழ்ந்த வார்சோ (Warsaw) சேரிப் பகுதிகள் எழுச்சியில் கூட அவை ஒன்றாகச் சேர்ந்திருந்ததில்லை. தொழிற்கட்சி முன்பு யூத நாட்டிற்குத் தெரிவித்திருந்த ஆதரவை அயல்நாட்டு அமைச்சர் எர்னெஸ்ட் பெவின் மாற்றியது முதல் காரணமாக இவை ஒன்றுபட வழிகோலியது. இரு நாடுகள் கோட்பாட்டை -ஒன்று யூதருக்காகவும் மற்றொன்று அரேபியருக்காகவும்- இப்பொழுது பெவின் நிராகரித்து டிரான்ஸ் ஜோர்டான் -ஜோர்டானுக்கு அப்பால்- எகிப்து, ஈராக் போல அரேபியக் கைப்பாவை அரசு அமைத்து, யூதர்களுக்குச் சிறுபான்மை உரிமைகளை உறுதி அளித்தால் போதும் என்று கூறினார்

இரண்டாவதாக, அதேபோன்ற காரணங்களுக்காகவும், தொழிற்கட்சி அரசாங்கம், பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் குடிபெயர்ந்து செல்வதையும் எதிர்த்தது. பிரிட்டனோ, அமெரிக்காவோ பேரழிவிலிருந்து தப்பிய நூறாயிரக்கணக்கான யூதர்களைத் தம் நாடுகளுக்கு வரவேற்கத் தயாராக இல்லாத நிலையில் யூதர்கள் எந்த எந்த நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனரோ அங்கு இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும், எங்கெங்கு அவர்கள் துன்புறுத்தப்பட்டனரோ அங்கேயும் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஹாகனா (Haganah) (தொழிற்கட்சி சியோனிஸ்டுகளின் இராணுவப் பிரிவு மூன்று இராணுவ அமைப்புக்களிலும் அதிக எண்ணிக்கை பெறிருந்தது), இர்குன், லெஹி மூன்றும் இணைந்து, பாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டிஷாரை விரட்டியடிக்க, ஐக்கிய எதிர்ப்பு இயக்கத்தை (United Resistance Movement) ஏற்படுத்தக் கையெழுத்திட்டன. இது ஓராண்டு காலம்கூடச் செயல்பட முடியவில்லை -கிங் டேவிட் ஹோட்டல் மீதான குண்டு வீச்சு வரை- பென் குரியன் ஒப்பந்தத்தை ``இர்குன் யூத மக்களின் விரோதி`` எனக் கூறி உடன்பாட்டை ரத்துச்செய்தது. இருப்பினும், பயங்கரவாதத்தாக்குதல்கள் பத்து மடங்கு அதிகரித்தன.

பாலஸ்தீனத்தில் குரோதமும் இடையூறும் வளர்ந்துவரும் நிலையிலும், அரேபியர், யூதர்கள் இருவருமே இரு நாடுகள் கொள்கையை நிராகரித்த அளவில், பிரிட்டன் இப்பூசலை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியது, மீண்டும் அது தனக்கே ஒப்படைக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில். ஆனால் பிரிட்டனின் நம்பிக்கையான பாலஸ்தீனப் பிரச்சினையை தன்னுடைய விருப்பங்களுக்கேற்றவாறு தீர்க்கலாம் என்பது தகர்க்கப்பட்டது. பெரிய வல்லரசுகளான அமெரிக்காவும், சோவியத் யூனியனும் தங்களின் சொந்த நோக்கங்களுக்காக ஒரு யூத நாட்டை ஏற்படுத்தும் முயற்சியை ஊக்கத்துடன் ஆதரித்தனர்: அதனை மத்திய கிழக்கில் பிரிட்டனின் நிலையை தடுக்கும் வழியாக அவர்கள் பார்த்தனர். இதுவும், உலகெங்கிலும் ஐரோப்பிய யூதருக்கு இழைக்கப்பட்ட பேரழிவுகளுக்கான பரிவுணர்வும், 1947 நவம்பரில் ஐ.நா.வில் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் வாக்கெடுப்பை நடத்த வழிவகை செய்தன. 1948 மே மாதம் பிரிட்டிஷார் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறிய அளவில், சியோனிஸ்டுகள் தங்கள் உரிமையைப் பிரகடனப்படுத்தி இஸ்ரேலை அமைத்துக்கொண்டனர். இஸ்ரேலுக்கும் அரபு நிலப்பிரபுக்கள் தலைமையிலான பாலஸ்தீனியர்களுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நாட்டைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான போர் மூண்டது.

திரிபுவாதக் குழுவினர் பிரிட்டிஷாருக்கு எதிராகப் பயன்படுத்திய பயிற்சி மற்றும் வளர்த்தெடுத்த வழிமுறைகளைக் கொண்டு பாலஸ்தீனியர்களை அச்சுறுத்தவும் ஆத்திரமூட்டவும் செய்தனர். திட்டமிட்ட பயங்கரவாதச் செயல்கள் இர்குன், லெஹி குழுக்களால் மேற்கொள்ளப்பட்டது, இது தொழிற்கட்சி சியோனிஸ்டுகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது -பாலஸ்தீனியரை அவர்கள் வீடுகளிலிருந்து விரட்ட இது முக்கிய பங்காற்ற இருந்தது. Deir Yassin என்ற இடத்தில் நடைபெற்ற படுகொலையில் 200க்கும் மேற்பட்ட ஆண், பெண், சிறுவர்கள் கொலை செய்யப்பட்டனர் -இது ஒன்றுதான் மிகவும் அறிந்த சான்று ஆகும். பாலஸ்தீனியர்களை வீடுகளிலிருந்து விரட்டுவதற்கு பென்குரியனே ஹகானாவை ஊக்குவித்தார்- இது பெருமளவில் Histadrut/Mapai கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, பின்னர் இதுதான் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தோன்ற முன்னோடியாக இருந்தது. பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்பட்டது, அவர்களை அண்டை நாடுகளில் புலம்பெயர்ந்தோராக மாற்றியதோடு உலகெங்கிலும் தஞ்சம் அடையவும் அடிகோலியது; அவர்களுடைய நிலப் பகுதியைப் பறித்துக்கொண்டது, இவை இஸ்ரேல் நாடு தோற்றுவிக்கப்பட அத்தியாவசிய முதற்கட்ட தேவைகளாயிற்று.

தலைமறைவு பயங்கரவாதக் குழுக்களிலிருந்து அரசியல் முதன்மைநிலைக்கு

அதிகாரபூர்வமான திருத்தல்வாதிகளுக்கு எதிர்ப்பில், இர்குன் தலைவரான, மெனாச்செம் பெகின், போர் முடிந்தவுடன் இர்குனை ஹெரட் (Herut) என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சியாக மாற்றியமைத்தார். பெகின் அரேபியருக்கு எந்தச் சலுகையும் வழங்கப்படக்கூடாது என்று தீவிரமாய் எதிர்த்தார், அப்துல்லாவிடம் கொண்ட ஒப்பந்தப்படி Transjoroan உடன் மேற்குக்கரையையும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஜோர்டான் என்று மறுபெயரிடப்பட்டது, பெகின் தலைமறைவுச் செயல்களைப் பெருமைப்படுத்தி, பிரிட்டிஷாருக்கு எதிரான இர்குனின் பயங்கரவாதத்தையும் புகழ்ந்தார். அவருடைய அனல் கக்கும் மொழியும் நடையும் 1930களில் தேசியப் போலந்திற்கான கீழை ஐரோப்பிய தேசியப்போக்கையும் பில்ஸூடிஸ்கியின் இராணுவப் போக்கையும் நினைவுறுத்துவதாய் அமைந்தன.

பாலஸ்தீனிய மீட்புக்கு அர்ப்பணம் செய்துகொண்ட அளவில், அவரும் ஹெரட் கட்சியினரும் அத்தகைய முன்னோக்கினை எதிர்த்தவர்களை யூத மக்களின் விரோதிகள் என்று அழைக்கத் தலைப்பட்டனர். இர்கன் ஆயுதச் சரக்குக்குக் கப்பலான அல்டாலினாவை தொழிற்கட்சி சியோனிஸ்டுகள் மூழ்கடித்ததைத் தொடர்ந்து, பல இர்குன்கள் அதில் மடிந்தனர், உண்மையில் பென்குரியனுக்கு எதிரான உள்நாட்டுப் போர் அறிவிப்பாக இருந்தது. பலரும் ஹெரட் ஒரு திடீர் புரட்சியைக் கொண்டுவரும் என்று நினைத்தனர்.

முதல் தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளுமே ஏதோ ஒரு விதத்தில் சோசலிச இணைப்பைக் காட்டின; பெகினுடைய ஹெரட் கட்சி சோசலிஸ்டு அல்லாத கட்சிகளில் அதிகமான இடங்களைக் கொண்டது; மொத்த வாக்குகளில் 11 சதவீதமும் 120 உறுப்பினர் கொண்ட (Knesset) பாராளுமன்றத்தில் 14 இடங்களையும் பெற்றது. திரிபுவாதிகளுக்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை. திரிபுவாதிகளின் முக்காட்டைப் போட்டுக் கொண்டு தொழிற்கட்சி, சியோனிஸ்டுகளுக்கு எதிரான வலதுசாரி அணி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

சியோனிச அரசின் தொடக்க ஆண்டுகளில், ஹெரட்டின் வாக்குகள் குறைந்து, அடுத்த 30 ஆண்டுகள் பெகின் அரசியல் வனவாசம் செய்திருந்தார், ஹெரட் கட்சியை 1965ல் கஹாலாக உருமாற்றுதற்கும் விரிவுபடுத்துதற்கும் செலவழித்தார். 1967 ஜூன் போருக்குமுன் போர்க் கூட்டணியில் அரேபியருக்கு எதிரான போரில் சேர்ந்து, எகிப்திய தலைவர் நாசரின் பொறுப்பற்ற சந்தர்ப்பவாதத்தால் தூண்டப்பட்ட நிலைமையை சதாகமாகப் பயன்படுத்தி, இஸ்ரேலின் எல்லைகளை குறிப்பிடத்தக்க அளவு விரிவுபடுத்த உதவினார்.

மேற்குக்கரை மற்றும் காசா ஆகியவற்றை வெற்றி கொண்டது தீவிர வலதுசாரி சக்திகளுக்கு ஒரு புதிய வாழ்வை அளித்தது, இது 1973ல் லிக்குட் கட்சி தோன்ற வழிவகுத்தது. 1977 தேர்தல்களில் அது பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியது. விளிம்பில் எப்பொழுதும் நின்றிருந்த, அதிதீவிர தேசியவாத வலதுசாரி அரசியல் சக்தி, பழைய அரசியல் நிறுவனத்தை அகற்றி, இப்பொழுது செல்வாக்குப்பெற்ற போக்காக ஆனது.

லிக்குட்டையும் விட அதிக தேசிய உணர்வுகளை வெளிப்படுத்தும் அமைப்பாக, லெஹிக் குழு மொலெடெட் கட்சியாக உருமாறியது, இதன் அருவருக்கத்தக்க நடவடிக்கை இனத் தூய்மையைக் கொண்டு வருவதாக விளங்கியது: பாலஸ்தீனியர்களை இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அகற்றுதல் ஆகும்.

1940களில் ஷமிர் தீவிர அரசியலிலிருந்து விலகினார். பென் குரியன் லெஹி உறுப்பினர்கள் மீது அரசு பதவிகளை வகிப்பதற்கான தடையை நீக்கிய அளவில், Isser Havel என்ற மொசாட் தலைவர் ஷமிரையும் மற்றவர்களையும் தன்பால் அழைத்துக்கொண்டார். 1960களில் நாசருடைய எகிப்தில் பணிபுரிந்த ஜேர்மன் விஞ்ஞானிகளுக்கு எதிரான கடித -வெடிகுண்டைத் திட்டமிட்டது ஷமிர்தான்; இது அவரை அப்போதைய துணை பாதுகாப்பு அமைச்சராக இருந்த சிமோன் பெரசுடன் ஒரு மோதலில் ஈடுபடுத்தியது. 1970ல் கூறப்பட்ட ``நைலிலிருந்து யூப்ரடிஸ் வரையிலான" பரந்த இஸ்ரேல் என்ற கருத்தை விடாத ஒரே கட்சியான ஹெரட் கட்சியில் அவர் சேர்ந்தார். சோவியத்திலிருந்து வெளியேற விழைந்த சோசலிசத்திற்கெதிரான எண்ணமுடைய ரஷ்ய யூதர்களோடு நன்கு பழகி, அவர்களை லிக்குட் கட்சிக்கு கொண்டு வந்தார். திடீரென்று பெகின் ராஜிநாமா செய்தவுடன் 1983ல் அவர் பிரதம மந்திரியானார். இது இஸ்ரேலிய அரசியலில் மேலும் கூடுதலான வலதுபுற நகர்வினைக் காட்டியது.

ஸ்டேர்ன், பெகின், ஷெமிர் போன்ற பயங்கரவாதிகளின் அரசியல் வாரிசுகள்தாம் இன்றைய இஸ்ரேலின் அரசியல் நிர்வாகத்தை அமைப்பவர்கள் மற்றும் புஷ் நிர்வாகத்தின் இப்பிராந்தியத்து தலைமை கூட்டாளிகள். இவர்களுடைய முன்னோடிகள் கனவில் மட்டுமே கருத முடிந்தவற்றை இவர்கள் நடைமுறையில் கொண்டுவர முடிகிறது. அவர்களுடைய வரலாறு இஸ்ரேலிய அரசியல் ஏன் எப்பொழுதும் முரண்டுபிடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது என்பதை விளக்குகிறது. மேற்புறத்திற்கு அடியில் தொலைவில் இல்லாத உள்நாட்டுப் போர் நீண்டகால அடிப்படையைக் கொண்டிருக்கிறது.

மிகக் கொடுமையாக ஒடுக்கப்பட்ட ஐரோப்பிய மக்களுக்கு, ஜனநாயக ரீதியான மற்றும் சமத்துவ சமுதாயத்தைக் கட்டி எழுப்ப அர்ப்பணிக்கப்பட்ட முன்னேற்றமுள்ள பகுதியாகப் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இஸ்ரேல் விளங்கும் என்று அது வரவேற்கப்பட்டது. ஆனால் சியோனிச அரசின் தோற்றமும் வளர்ச்சியும் அது ஒரு செப்பிடு வித்தையாக உள்ளதைக் காட்டுகிறது. சமூக ரீதியான முன்னேற்றகரமான சமுதாயத்தை தேசிய முன்னோக்கின் அடிப்படையில் கட்டி எழுப்ப முடியாது. சியோனிச முன்னோக்கு, அது தொழிலாளர் சியோனிஸ்டாக இருக்கட்டும் அல்லது அதனுடைய தீவிர பிற்போக்கு மாறுதலுடையதாயினும் சரி, ஒருபுறம் தேசிய முதலாளித்துவத்தின் அதிகாரத்தை ஊக்கியும், மற்றொரு புறம் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகள் இடையே பிளவை ஏற்படுத்தியும் ஏகாதிபத்தியத்தையும் நாட்டு வெறியையும் வலுப்படுத்துவதில் நச்சுப்பாத்திரத்தையே ஆற்றி இருக்கிறது.

பிரிட்டிஷ் உளவுத்துறைக் கோப்புக்கள் செய்தி ஊடகத்தில் தக்க கவனம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் உள்ளடங்கிய விவரக் குறிப்புக்களைத் தவிர அரசியல் எழுத்தாளர்கள் சியோனிச அரசை தோற்றுவிக்க பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளையோ இஸ்ரேலிய அரசாங்கத்தின் அரசியல் வேர்களையோ ஆராயவில்லை.

இஸ்ரேலுக்குள்ளேயே, தாராண்மை நாளேடான ஹாரெட்ஸ் ஒரு Reuters அறிக்கை பற்றி, "ஆவணம்: சியோனிச தீவிரவாதிகள் இரண்டாம் உலகப்போருக்குப்பின் பெருமளவில் ஊடுருவல் செய்வரோ என்று பிரிட்டன் அச்சம் கொண்டது" (Document: UK feared influx of Zionist terrorists in post-WWII era ) என்ற தலைப்பில், சியோனிசம் தங்களுடைய முன்னோக்கின் மற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை மறந்து, ஏதோ ஒரு தடுமாற்றம் போல் எழுதியுள்ளது. கட்டுரையே பிரிட்டிஷ் அதிகாரிகள் சியோனிச பயங்கரவாதத்தைச் சமாளிக்க யூத எதிர்ப்பை மேற்கொண்டது போன்ற குவிப்பைக் காட்டுகிறது. கிங் டேவிட் ஹோட்டல் குண்டுத் தாக்குதலுக்குட்பட்ட பின்னர் எழுதப்பட்ட கோப்புக்கள் என்பதை விளக்கிவிட்டு, பெகின் எகிப்துடனான சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதற்கு நோபல் அமைதிப் பரிசை வாங்கியதாகக் குறிப்பிட்ட போதிலும், கட்டுரை இர்குனைப் பற்றியும் மெனாச்செம் பெகின் குண்டு வீச்சில் கொண்டிருந்த தொடர்பைப் பற்றியும் மெளனம் சாதிக்கிறது. பிரிட்டனின் அயலுறவு அமைச்சரைப் படுகொலை செய்யத் திட்டமிட்டதையும் பல முக்கிய பிரிட்டிஷ் முன்னணி அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும் கூறாமல் விட்டுவிட்டது.

அப்படிப்பட்ட தொழில் முறை மற்றும் அரசியல் நேர்மையானது, பயங்கரவாதத்தின் தோற்றம் மற்றும் சியோனிச அரசியல் நிர்வாகத்தின் பங்கு இவற்றின்பால் மட்டுமே ஈர்க்கப்பட்டிருக்கும். சியோனிச அரசியல் நிர்வாகத்தை புஷ் நிர்வாகத்தில் உள்ள அரசியல் கொள்ளைக் கூட்டத்தினர் மத்திய கிழக்கைப் பிரித்து ஆளுவதற்கு ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றனர்.

Top of page