World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Britain: Charities warn 11 million Iraqis face starvation in event of war

பிரிட்டன்: போர் நிகழ்ந்தால் 110 இலட்சம் ஈராக்கியர் பட்டினியை எதிர்கொள்வர் என அறக்கொடை அமைப்புக்கள் எச்சரிக்கின்றன

By Julie Hyland
15 March 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீதான அதன் போரை அமெரிக்கா முன்னெடுக்குமானால் சுமார் 11 மில்லியன் மக்கள் பட்டினி உடனடி ஆபத்து நேர்விற்கு உள்ளாவர் என்று, பிரிட்டனில் உள்ள முன்னணி உதவி அறக்கொடை அமைப்புக்கள் எச்சரித்திருக்கின்றன.

மார்ச்12 அன்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்களுக்கான சுருக்க உரை வழங்குகையில், கேர் இன்டர்நேஷனல் (Care International), கிறிஸ்தவ உதவி நிறுவனம் (Christian Aid) மற்றும் குழந்தைகள் காப்பு நிறுவனம் (Save the Children) ஆகியன இராணுவ நடவடிக்கை 60 சதவீத ஈராக்கியரை பட்டினியின் விளிம்புக்குள் தள்ளக் கூடும் என எச்சரித்துள்ளன. கிட்டத்தட்ட ஈராக் மக்கள் தொகையின் பாதிப்பேர் 14 வயதிற்கும் கீழ்ப்பட்டவர்கள்.

இங்கிலாந்து கேர் இன்டர்நேஷனலின் திட்ட இயக்குநர், ராஜா ஜாரா (Raja Jarrah), போரானது போக்குவரத்து, எரிபொருள் மற்றும் சக்தி அளிப்புக்கள் இவற்றில் குழப்பத்தை விளைவிக்கும் மற்றும் உணவு பங்கீடு முறையை சீர்குலைக்கும் என்றார்.

கடந்த 12 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தல் ஈராக் மக்கள் தொகையின் 60 சதவீதத்தினரை உணவு உதவி பெறுவதற்காக அரசாங்கத்தை சார்ந்திருக்க வைத்திருக்கிறது. இவர்கள் போர் நடைபெறும் பட்சத்தில் "பட்டினிச்சாவை இல்லையென்றாலும் பட்டினியை" எதிர்கொள்வர். சிறப்பாக குண்டுவீச்சுக்கு முன்னதாகவே ஐ.நா அதிகாரிகள் திரும்பப் பெறப்படுவதால், ஈராக் முழுவதிலும் 45,000 வழிகள் வழியாக உணவு வழங்கல் கிட்டத்தட்ட ஸ்தம்பிதம் அடைந்துவிடும். கடந்த மாதம் ஈராக் அரசாங்கம் உணவு வழங்கல்களை இரட்டிப்பாக்கிய போதிலும், ஏழ்மை என்பது மிக ஏழ்மையான குடும்பங்கள் அதனுடைய சிலவற்றை விற்றிருக்கின்றன என்பதை அர்த்தப்படுத்தி இருக்கின்றது என உதவி முகவாண்மைகள்(Aid agencies) கூறின.

"ஈராக்கின் 90 சதவீத கழிவுநீர் அகற்றும் நிலையங்கள் மின்சாரம் நின்று போனால் பாதிக்கப்படக் கூடியதாக, குடிநீரை மாசுபடுத்த மற்றும் பொது சுகாதாரத்திற்கு கடும் கேடு விளைக்க வழிவகுக்ககூடியதாக உள்ளன" என்று ஜாரா விவரித்தார்.

"நாம் போரின் துல்லியமான விளைபயன்களை முன்கணிக்க முடியாத பொழுதிலேயே, அவை பேரிடர் பயக்கவல்லது, மற்றும் பல குடும்பங்களுக்கு, பேரழிவுகரமானதாக இருக்கும் என்று நாம் முன்கணிக்க முடியும்."

உலகம் "அந்த அளவு அழிவுக்காக தயாரிக்கப்பட்டிருந்தது" என்பதற்கு "ஆதாரம் இல்லை" என்று அவர் எச்சரித்தார்.

ஈராக்கிற்குள்ளே மனிதாபிமான உதவியை வழங்கும், அறக்கொடை நிறுவனங்கள், மக்கள் பலரது வாழ்க்கை நிலைமைகள் எந்தவிதமான மேலதிக சீரழிவுடனும் தாக்குப்பிடித்துப் போகமுடியாத அளவு ஏற்கனவே சீழிந்து போய் இருக்கின்றன எனக் கூறின.

"ஈராக் மக்கள் ஒரு படுபயங்கரமான நெருக்கடி நிலை வழியாக ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இராணுவ நடவடிக்கையால் கொண்டு வரப்படும் கூடுதல் நெருக்கடியுடன் தாக்குப் பிடித்திருப்பதற்கு அவர்களிடம் வளங்கள் இல்லை" என்று கேர் இன்டர் நேஷனல் முன்னர் அறிவித்திருந்தது.

ஜனவரியில், ஐ.நா பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் முன்னர் சுருக்கமாக விளக்குகையில், ஈராக் கேர் நிறுவன இயக்குநர், மார்கரெட் ஹசான் (Margaret Hassan), ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அந்நாடானது உணவு, குடிநீர், சுகாதாரம் மற்றும் கல்வியில் மனிதாபிமான நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது என அறிவித்தார்.

1991 போர் மற்றும் ஐ.நா பொருளாதாரத் தடைகள் இவற்றின் விளைபயனாக, ஐந்து வயதிற்கும் கீழ்ப்பட்ட குழந்தைகள் மத்தியில் ஊட்டச் சத்துணவு இன்றி பாதிக்கப்பட்ட நாள்பட்ட நோயாளிகள் 1991ல் 18.7 சதவீதத்திலிருந்து 2000-ல் 30 சதவீதமாக உயர்ந்திருக்கிறது மற்றும் குழந்தை இறப்பு 166 சதவீதம் அளவில் உயர்ந்திருக்கிறது. அனைத்துக் குழந்தைகளுள் மூன்றில் ஒரு பகுதி இன்னமும் பள்ளிகளுக்கு வருகை தருவதில்லை. பல சேவைகளுக்கு அத்தியாவசியமான மின்சாரம், நாட்டின் பல பகுதிகளில் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்களுக்கும் குறைவாக கிடைக்கின்றன, அதேபொழுதிலேயே ஐந்து இலட்சம் தொன்கள் கழிவு நீர் நீர்வளங்களுள் நாளும் வெளியேற்றப்படுகின்றன-- பாக்தாதில் 300,000 தொன்கள் ஆகும்.

இராணுவ நடவடிக்கை முன்செல்லுமானால், உடனடி உணவு தட்டுப்பாடுகளுடன் சேர்த்து, மக்களின் 39 சதவீதத்தினர் தூய்மையான குடிநீர் கிடைக்க முடியாதவர்கள், மற்றும் 50 இலட்சம் பேர் சுகாதார வசதி கிடைக்க இயலாதவர்கள் ஆவர்

குழந்தைகள் காப்பாற்றகம் சார்பில் வழங்கிய ஆதாரப்படி, அதன் செயலதிபர் மைக் அரோன்சன் (Mike Aaronson), தற்போது 1 கோடியே 60 இலட்சம் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு உதவி, இராணுவ நடவடிக்கையின்பொழுது துண்டிக்கப்பட்டு விடும். இருப்பினும், "அரசாங்கமும் சர்வதேச முகவாண்மைகளும், போரின் பொழுது அல்லது அதற்குப் பிறகு எப்படி அவர்கள் மக்களுக்கு உணவளிப்பர், மற்றும் தூய்மையான குடிநீர் மற்றும் ஏனைய சுகாதார அடிப்படைகள் கிடைப்பதற்கு வகை செய்வர் என்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் கவனித்து வருகின்றனர் என்பதற்கு சிறிதே ஆதாரம் இருக்கிறது" என குறிப்பிட்டார்.

வட ஈராக்கில் உள்ள குர்துகள் பெரிதும் பாதிக்கப்படுவர். குழந்தைகளைக் காப்பாற்றும் அமைப்பானது குர்திஷ் மக்களின் 60 சதவீதத்தினர் ஒரு நாளைக்கு சராசரி வருமானம் 3- 6 டாலர்கள் வரை பெறுகின்ற ஏழ்மை நிலைமையில் வாழ்கின்றனர். பாக்தாது தற்போது வடக்கு பகுதிக்கு மாதாந்திர உணவு அளிக்கின்றது, அது கிட்டத்தட்ட முற்றிலுமாக அதன் தேவைகளை நிறைவேற்றுதற்காக வெளியார் உதவிகளை நம்பி உள்ளது.

"பெரிதும் நகர்மயமாக்கப்பட்ட மக்கள் தொகை கொண்ட வட ஈராக்கில், மோதல், உணவு அளிப்புக்களை சீர்குலைக்கும் மற்றும் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவு நீக்க வசதிகளில் வெட்டுக்களை ஏற்படுத்தும், அது மிகப் பெரிய அளவில் குழந்தைகளை அவர்களின் குடும்பங்களில் இருந்து பிரிக்கும் மற்றும் இடம்பெயரச் செய்யும்" என்று குழந்தைகளைக் காப்பாற்றும் அமைப்பின் இங்கிலாந்து பிராந்திய அவசரநிலை ஆலோசகர், ரோப் மாக் ஜிலிவ்ரேய் (Rob Mac Gillivray) கூறி இருக்கிறார். "அகதிகள் அந்தஸ்துக்கு ஏற்ப முறையான மனிதாபிமான உதவி வழங்கப்பட முடியாவிட்டால், சூழ்நிலையானது வாழ்க்கை அச்சுறுத்தலாக ஆகக்கூடும். தொலைதூர மலைப் பிராந்தியங்களை அடைவது கடினமானதாக இருக்கும், சிறப்பாக குளிர்காலத்தில். எரிபொருள் ஏற்கனவே பற்றாக்குறை அளிப்பாக இருக்கிறது மற்றும் தனியார் உணவு இருப்புக்கள் குளிர்காலத்தில் குறைவாகப் போகும்."

"தெற்கு மற்றும் மத்திய ஈராக்கில் வாழுகின்ற ஈராக்கியர்கள் நிலை இன்னும் மோசமாகக் கூட இருக்கின்றது" என முகவாண்மை எச்சரிக்கிறது. இராணுவத் தலையீடு ஈராக்கில் மனிதாபிமான உதவியை அதிகமாய் நெருக்கடிக்கு உள்ளாக்கும் மற்றும் மக்கள்தொகையினரை "விளிம்புக்கு" தள்ளும் என அது அறிவித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி போரால் இருபது லட்சம் மக்கள் வீடற்றவர்களாக ஆகக் கூடும், பலர் நாட்டைவிட்டு பறந்தோட முயற்சிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து இலட்சம் பேர் ஈராக்கிற்கு உள்ளேயே இடம்பெயர நேருவதோடு அவர்கள் குர்துகள் கட்டுப்பாட்டில் உள்ள வட ஈராக்கில் அகதிகளாக நிலை பெறலாம் என்றது.

அத்தகைய எண்ணிக்கைக்கு பொருந்தும் வகையில் உண்மையில் வசதி வாய்ப்புகள் அங்கு இல்லை என்று உதவி செய்யும் முகவாண்மைகள் கூறுகின்றன மற்றும் போர் நடைபெறும் பட்சத்தில் ஐ. நாவானது உணவு இருப்பையும் மருந்துப்பொருட்களையும் இருப்பில் வைக்கும் முயற்சிகள் திட்டமிடப்பட்டதற்கு பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது.

உலக உணவு திட்டம் எனும் அமைப்பு "ஒரு ஆரம்ப தற்காலிக திட்டம்" என்பதற்கு 23 மில்லியன் டாலர்களை நிதி கேட்டு வேண்டுகோள்விடுக்கிறது. அது 900,000 மக்களுக்கு பத்து வாரங்களுக்கு வெறும் உணவை மட்டுமே வழங்கும். இதுவும் இலக்கிற்குப் பின்னால் இருக்கிறது-- வெறும் 7.5 மில்லியன் டாலர்களை பெற்றிருக்கிறது. குழந்தைகள் அறக்கொடை UNHCR நிறுவனம் தனக்குத் தேவைப்படும் 60 மில்லியன் டாலர்களுக்கு வெறும் 16.3 மில்லியன் டாலர்களையே பெற்றுள்ளது என அறிவித்திருக்கிறது.

"ஆட்சி மாற்றல்" என்பதை இராணுவ ரீதியாய் பலவந்தப்படுத்துதற்கு திட்டங்களுடன் முன்னெடுத்துச் செல்வதில் ஈராக்கிய மக்களின் நலன்களின் பேரில் செயல்பட இருப்பதாய் கூறும் அமெரிக்க பிரிட்டிஷ் கூற்றுக்கள், போரின் விளைவாக பத்துலட்சக்கணக்கானோர் எதிர்கொள்ளும் நிலையுடன் "ஒத்திசைந்து போதலில் நம்பிக்கை இழந்ததாக" இருக்கின்றன என்று இங்கிலாந்து அறக்கொடை நிறுவனங்கள் எச்சரித்தன.

ஐ.நா ஆணை இல்லாமல், செய்யப்படும் மனிதாபிமான முயற்சிகள் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். "போர் வெறிக்கூச்சல் கொண்ட அரசாங்கங்களின் ஏவலாளாக காணப்படுவதை நாம் விரும்பவில்லை மற்றும் ஐ.நா ஆணை இல்லாத போரைப் பொறுத்தவரை அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் அரசாங்கங்களிடமிருந்து பணம் எடுப்பது எமக்கு கடினமானதாக இருக்கும்" என்று இங்கிலாந்து, கேர் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைமை நிர்வாகி வில் டே (Will Day) கூறி இருக்கிறார்.

Top of page