World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

மிஸீ ஷ்ணீளீமீ ஷீயீ லீமீறீவீநீஷீஜீtமீக்ஷீ ணீttணீநீளீகீணீsலீவீஸீரீtஷீஸீ ஜீக்ஷீமீஜீணீக்ஷீமீs யீஷீக்ஷீ னீணீss ளீவீறீறீவீஸீரீ வீஸீ மிக்ஷீணீஹீ

ஹெலிகாப்டர் மீதான தாக்குதலை அடுத்து - ஈராக்கில் பரந்த மக்கள் படுகொலைக்காக வாஷிங்டன் தயாரிப்பு செய்கிறது

By Bill Vann
6 November 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில், பல்லூஜா அருகே சினூக் ஹெலிகாப்டரை வீழ்த்திய, 15 அமெரிக்க படைவீரர்களது உயிரைக் காவு கொண்டதாகக் கூறப்படுகிற, நவம்பர் 2ம் தேதி நடந்த கொரில்லா தாக்குதலை அடுத்து புஷ் நிர்வாகமானது ஒடுக்கும் வன்முறையை பெரிதும் வெடிப்புறச்செய்வதற்காக தயாரிப்பு செய்து வருகிறது.

புஷ் நிர்வாகம் கடந்த மார்ச்சில் இந்நாட்டிற்கு எதிராக அதன் தூண்டப்படாத போரைத் தொடுத்த பின்னர் எந்த ஒரு தனித்த சம்பவத்திலும் அமெரிக்கப் படைகளுக்கு மிக மோசமான இழப்பை விளைவித்த இவ் ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் நுணுக்கமாக வைத்ருத்தலைக் கோடிட்டுக்காட்டும் எதிர்ப்பின் தொடர்ச்சியான வகையின் ஒரு பகுதி ஆகும்.

பாக்தாதில் செவ்வாய்க்கிழமை வரிசையாய் இரண்டாவது இரவாக மோட்டார் சுடுதல்களும் பெரும் வெடிப்புக்களும் ராக்கிய தலைநகரை அதிர வைத்தன. குண்டுகள் தற்காலிக நிர்வாகக் கூட்டணியின் தலைமை அலுவலகங்கள் மற்றும் ஏனைய முக்கிய வாய்ப்பு வசதிகளுக்கும் இடம் கொடுத்துள்ள கடும் காவல் நிறைந்த "பசுமை மண்டலத்தில்" குண்டுகள் விழுந்து, குறைந்த பட்சம் மூன்று அமெரிக்கர்கள் காயமுற்றனர். முந்தைய நாளிரவு, மோட்டார் ஷெல்கள் இரண்டாவது Armored Cavalry Regiment தலைமைக் கட்டிடத்தையும் நகரின் மையத்திலுள்ள ஏனைய பகுதிகளிலும் தாக்கின.

செவ்வாயன்று இன்னொரு தாக்குதலில், பாக்தாதில் சாலையோர குண்டு வெடிப்பில் ஒரு அமெரிக்க படைவீரர் கொல்லப்பட்டார் மற்றும் ஏனைய இருவர் காயமுற்றனர். திங்கள் அன்று திக்ரித் நகரில் இதேபோன்ற ஒரு தாக்குதலில் ஒரு படைவீரர் கொல்லப்பட்டார் மற்றும் இன்னொருவர் காயமுற்றார். இந்த மரணங்கள், போரை அறிவிக்க மற்றும் "பணி நிறைவேற்றம்" தொடர்பாக, புஷ் விமானந்தாங்கிக் கப்பலான ஆபிரஹாம் லிங்கனில் வீண்பெருமை நடைபோட்டபொழுது, மே 1ம் தேதிக்குப் பின்னர் சண்டையிட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை 141ஆகக் கொண்டு வந்துள்ளது.

இதற்கிடையில், வடக்கு நகரமான மொசூலில், செவ்வாய்க் கிழமை 82வது Airborne Division தலைமையகம் ஏவுகணை சுழல் எறிகுண்டு (rocket-propelled grenade attacks) தாக்குதலுக்கு ஆளானது. ஒருசமயம் அமெரிக்கத் துருப்புக்களுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்று விவரிக்கப்பட்ட நகரின் வழியே சென்ற மூன்று படைத்துறை காவல் வாகனங்கள் ஏவுகணை சுழல் எறிகுண்டுத் தாக்குதலுக்கு ஆளாகி, ஐந்து அமெரிக்க படைவீரர்கள் காயமுற்றனர்.

இத் தாக்குதல்களை தடுத்து நிறுத்துதற்கு அல்லது அதன் பகைவரை அடையாளம் காண்பதற்கு அமெரிக்க இராணுவத்தின் இயலாமை, அதேபோல ஈராக்கிய எதிர்ப்பு போராளிகளின் கண்டுபிடிக்க முடியாதவகையில் இயங்குதல், ஆக்கிரமிப்பிற்கு மக்கள் எதிர்ப்பின் மற்றும் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதற்குப் போராடுபவர்களுக்கான மக்கள் ஆதரவின் அளவுகளாகும்.

Newsweek- இதழ் இந்த பரந்த மக்களின் உணர்வுகளைப் பற்றி குறிப்பாக தெளிவாய் சுட்டிக் காட்டுகிறது. "ஈராக்கில், கொரில்லாக்கள் திடீரென்று செய்த வெடிபொருட்களை (IED) சாலையின் ஓரத்தில் வைக்கும்பொழுது, சிலநேரங்களில் அவர்கள் தெருக்களில் அரபிக் மொழியில் எழுதி வைப்பார்கள்", என அவ்விதழின் நவம்பர்10ம் தேதி வெளியீடு அறிவித்தது. "உள்ளூர்வாசிகள் வழியறிந்து ஓட்டிச்செல்ல, அமெரிக்கர்கள் நேராக பொறிக்குள் ஓட்டிச்செல்வார்கள். 'எங்களைத் தவிர ஒவ்வொருவரும் அறிவார்கள்', என124வது காலாட் படைப்பிரிவு, புளோரிடா தேசிய காவற்படையின் லெஃப்டினென்ட் ஜூலியோ டிராடோ மனக்குறைபட்டுக் கொண்டார்.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு ஒரு சில "முன்னேற முடியாதவர்கள்", குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளைத் தவிர ஒருவரும் இல்லை, அதேவேளை பெரும்பான்மை ஈராக்கியர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறார்கள் என்ற கூற்று, அமெரிக்க நிர்வாகம் அதன் சட்டவிரோதப் போரை நடத்துவதற்கு பயன்படுத்தியுள்ள பொய்களின் மூட்டையில் இன்னொரு பொய்யாகும்.

பெருகி வரும் உயிரிழப்புக்கள் அமெரிக்காவிற்குள்ளேயே மறுக்க முடியாத பாதிப்பைக் கொண்டிருக்கின்றன, ABC- வாஷிங்டன் போஸ்ட் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு, முதல்தடவையாக, கணக்கெடுக்கப்பட்டோரில் 51 சதவீதத்திற்கும் அதிகமான பேர் புஷ் ஈராக்கை கையாளும் முறையை அங்கீகரிக்கவில்லை எனக் காட்டுகிறது. கடந்த மாத்த்திற்கு முந்திய மாதம், CBS செய்திக் கருத்துக் கணிப்பு கணக்கெடுக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஈராக்கில் உள்ள சம்பவங்கள் கட்டுப்பாட்டை விட்டுப் போய்விட்டன என்று கூறியதாகக் கண்டது.

ஹெலிகாப்டரை வீழ்த்தி திகைப்பூட்டும் இழப்பின் மீது எந்த விதமான நேரடி கருத்தையும் இரண்டு நாட்களாக தவிர்த்ததன் பின்னர், செவ்வாயன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, "பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு" அமெரிக்கப் படைவீரர்களின் வாழ்வை தியாகம் செய்வது தேவையானது என்று கூறியதன் மூலம் பதிலளித்தார்.

"நாம் போரில் இருக்கிறோம், அமெரிக்க மக்கள் செப்டம்பர்11, 2001-ன் படிப்பினைகளை மறக்கக் கூடாது" என்பது அவசியமானது.

இந்தப் படிப்பனைகள் துல்லியமாக என்னவென்றால் அச்சம்பவம் அலுவலக ரகசியத்தில் தொடர்ந்து உருத்தெரியாமல் மூடிமறைக்கப்படிருப்பது போல வேறு எந்த வகையிலும் தெளிவாக இல்லவே இல்லை. நியூயோர்க் மாநகர் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை விசாரணைக்குழு புலனாய்வு செய்யத் தொடங்குவதை புஷ் நிர்வாகம் தடுத்துவிட்டிருப்பது, குழுவின் தலைவர், முன்னாள் நியூஜெர்ஸி கவர்னர் தோமஸ் கீன் கடந்த மாதத்திற்கு முந்தியமாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தகவல்களைக் கறப்பதற்கு முறைமன்ற அழைப்பு ஆணை வழங்குவதாக அச்சுறுத்தினார்.

வளர்ந்து வரும் எதிர்ப்பு இருப்பினும் நிர்வாகமானது இராணுவ ஆக்கிரமிப்பினை முன்கொண்டு செல்வதில் உறுதியாக இருக்கிறது. அது அமெரிக்க மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பினை அச்சுறுத்தி அடக்கும் முயற்சியில் செப்டம்பர் 11 இறப்பு எண்ணிக்கை பற்றி சம்பந்தமில்லாத வகையில் வேண்டி வரவழைக்கிறது. அது ஜனநாயகக் கட்சிக்குள்ளே உள்ள அதன் பகட்டு வெளிவேட அரசியல் எதிர்ப்பின் முதுகெலும்பில்லாத் தன்மையையும் ஈராக்கில் உள்ள நெருக்கடியின் கடுமையை மூடிமறைக்கும் செய்தி ஊடகத்தின் உடந்தையையும் கூட கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

புஷ் நிர்வாகத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் அடிவருடிக்கிடக்கும் புதிய அறிகுறி, இந்தவார தொடக்கத்தில், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்த இராணுவ நடவடிக்கைகளுக்காக 87.5 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடுக்கு செனெட் சட்டத்துடன் வந்தது. இந்நடவடிக்கை ஆறு செனெட்டர்கள் மட்டுமே வருகை தந்த்துடன் அங்கீகரிக்கப்பட்டது. வருகைப் பதிவேடு வாக்கு எடுக்கப்படவில்லை மற்றும் செனெட்டர் றொபேர்ட் பைர்ட் (மேற்கு வர்ஷீனியா, ஜனநாயகக் கட்சிக்காரர்) குரல்வாக்கிற்கு கேட்டபொழுது, "இல்லை" என மறுப்பாய்க் கூறியவர் அவர் ஒருவர் தான். இந்நடவடிக்கைக்கு ஆதரவளித்த ஜனநாயகக் கட்சித் தலைமை, வாக்கின் பதிவுச்சான்றை விரும்பவில்லை.

இந் நடவடிக்கைக்கு தனது தனி வாக்கை அளிக்கும் முன்னர், மாநாட்டுக் குழு அவை மற்றும் செனெட் மசோதாக்களுக்கு இடையிலான வேறுபாட்டை திட்டம் செய்தது-- ஈராக்கிய மறு கட்டமைப்பு ஒப்பந்தங்கள் மீதாக கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர்கள் செலவு செய்தல் மீதாக எந்தவித சீரிய கணக்கையும் திணிக்கின்ற அனைத்து திருத்தங்களையும் படிப்படியாக அகற்றுவது, நிர்வாகத்தை அதன் கார்ப்பொரேட் ஆதரவாளர்களுக்கு பரந்த தொகையைப் பங்கிட்டுக் கொடுக்க சுதந்திரமாய் விடுகிறது என பைர்ட் சுட்டிக்காட்டினார்.

அதன் பங்கிற்கு, அமெரிக்க செய்தி ஊடகம் ஈராக்கில் எதிர்ப்பின் உட்குறிப்புக்களை பொதும்க்களிடம் இருந்து மறைப்பதற்கு வேலை செய்திருக்கிறது. பல நாளிதழ்கள் செவ்வாய் அன்று தலையங்கங்களை வெளியிட்டுள்ளன ஆக்கிரமிப்பிற்கான மற்றும் ஈராக்கிய மக்களுக்கு எதிரான இராணுவ ஒடுக்குமுறையை அதிகரிப்பதற்கும் ஆதரவை சுட்டிக் காட்டுகிறது. நிர்வாகத்தின் கொள்கைகள் பற்றிய விமர்சனத்தின் பரப்பு பெரும்பாலும் தந்திரோபாய பிரச்சினைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, ஈராக்கில் போரைத் தொடருவதற்கான தேவை அரிதாகவே கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.

லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் , உள்ளூர் ஈராக்கிய ஐந்தாம்படை படையினருக்கு பயிற்சியை விரைவு படுத்துதற்கான நிர்வாகத்தின் முன்மொழிவுக்கான அதன் ஆதரவைக் குறிகாட்டி அறிவித்தது: "அமெரிக்கப் படைகள், வெளிநாட்டு உதவி தொழிலாளர்கள் மற்றும் ஈராக்கிய குடிமக்கள் மீதான தாக்குதல்களின் அதிகரிக்கும் எண்ணிக்கை மற்றும் கடுமை ஆகியன, சிறப்பான உளவறிதல் மற்றும் மிகப் பலவந்தமான பதில் நடவடிக்கை ஆகியவற்றுக்கான தேவையைக் காட்டுகிறது."

நியூயோர்க் டைம்ஸ் அதன் தலையங்கத்தில், அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதன் எதிர்ப்பினை உச்சரித்தது: "பெருகி வரும் அமெரிக்க இழப்புக்கள் மற்றும் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அவசர இராணுவ திரும்பப் பெறலுக்கு அழுத்தத்தை உருவாக்கக் கூடும், அப்போக்கை எதிர்க்க நிர்வாகம் சரியாகவே சபதம் பூண்டுள்ளது. "ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதில் அமெரிக்கத் துருப்புக்களால் அடையப்பட்ட இழப்புக்களின் வகையை அமெரிக்க பொதுமக்கள் அடையப்பெறலாம் என நிர்வாகத்தின் கடும் எச்சரிக்கையை எதிரொலிக்கும் வகையில், செய்தித்தாள், "ஞாயிறு போன்று மிகவும் பயங்கரமான நாட்கள் முன்னுக்கு வர இருக்கின்றதாக அது தெரிகின்றது" என முடித்தது.

பத்திரிகையில் காணப்படும் மிகவும் வெறுப்பூட்டுகிற பகுதிகள் மத்தியில்- மற்றும் நிர்வாகத்தினதும் அதன் ஆதரவாளர்களினதும் எண்ணத்தை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் ஒன்று- நியூயோர்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளரும் வலதுசாரி வீக்லி ஸ்டாண்டர்ட் ஆசிரியருமான டேவிட் புரூக்சால் எழுதப்பட்டதாகும்.

செவ்வாய் அன்று வெளியிடப்பட்ட பத்தியில்: "நாம் இழப்புக்களை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்பது அல்ல. வரலாறு அமெரிக்கர்கள் தியாகம் செய்வதற்கு விருப்பமானவர்களாக இருக்கின்றனர். தண்டனை வகையில் அவற்றை நாமே ஏற்பதாகப் பார்க்கும் பொழுது உண்மையான சந்தேகம் வருகின்றது. எமது சொந்த துருப்புக்கள் ஏற்றுக் கொள்ளவிருக்கும் காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளின் படிமங்களை செய்தி நிகழ்ச்சிகள் ஒலி, ஒளிபரப்பும் பொழுது தேசிய மனநிலைக்கு என்ன நிகழும்? தவிர்க்க முடியாதவாறு, அங்கு இருக்கும் கொடுமைகள் நல்லிதயம் படைத்தவர்களை குறிக்கோளில் இருந்து விட்டோட வைக்கும்........ நாம் மோசமான உலகில் வாழ்கிறோம், நம்முடன் பகைகொள்ளும் கொலைகாரர்களை நாம் தோற்கடிக்க வேண்டுமானால், நாம் ஒழுக்க ரீதியாக துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறோம் என ஜனாதிபதி எமக்கு நினைவூட்டுவார்" என புரூக்ஸ் எழுதினார்.

நிர்வாகமானது செய்தி ஊடகத்தை அமெரிக்க அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளை தவிர்க்க முடியாதது எனக் காணப்படுவதாக மூடித் திரையிடவும் சுய தணிக்கை செய்து கொள்ளவும் கவனத்தில் கொள்ளச்செய்கிறது. போரின் பொழுது பிரதான ஒலி, ஒளிபரப்பு வாயில்களின் நடத்தையை எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கையின் மீதான நம்பிக்கைக்கு அது போதுமான ஆதாரத்தைப் பெற்றிருக்கிறது.

புரூக்சின் பத்தியைத் தொடர்ந்து கடந்த வாரம், முன்னாள் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மைப் பிரிவுத் தலைவரும் செனெட்டருமான Trent Lott (மிசிசிப்பி குடியரசுக் கட்சியாளர்) பெரும் வன்முறை வெடிப்பிற்காக முன்மொழிந்தார். "அது இப்படிப் போகும் என நான் நினைத்ததைவிட நேர்மையாகவே அது சிறிது கடினமானதாக இருக்கிறது" என அவர் ஈராக்கிய ஆக்கிரமிப்பு பற்றிக் கூறினார். "என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போமேயானால், நாம் முழு இடத்தையும் பேரழிவுக்குள்ளாக்க வேண்டும். நீங்கள் எமது ஆட்களைக் கொல்லுகின்ற பைத்தியக்கார தற்கொலைக் குண்டு வெடிப்பாளர்களை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் மற்றும் அவர்களை துடைத்துக் கட்டுவதில் மிக பலவந்தம் கொண்டோராய் நாம் இருப்பது தேவையாகும்."

Lott- ன் காட்டுமிராண்டித்தனமான முன்மொழிவு நிர்வாகம் தலைமையில் இருப்பதன் குறிகாட்டலாகும். பெருந்திரள் திருப்பித்தாக்குதல், கூட்டுத் தண்டனை மற்றும் ஒட்டுமொத்த கொலைகள் ஆகியன ஈராக்கிய எதிர்ப்பினருக்கு ஆதரவான மக்களின் ஆதரவை நசுக்குவதற்கான முயற்சியால் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொலைப்படைக் குழுக்கள், மூலோபாய சிற்றூர்கள், தரைவிரிப்பு குண்டுவீச்சுக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட இழிபுகழ் பெற்ற வழிமுறைகள் மற்றும் "அதனைக் காப்பாற்ற கிராமத்தையே அழித்தல்" ஆகியன ஈராக் மக்களின் மீது தண்டனையாக அளிக்கப்பட இருக்கின்றன.

இவ்வழிமுறைகள் ஆக்கிரமிப்புக்கு பெரும் எதிர்ப்பினையும் குரோதத்தையும் மட்டுமே உண்டு பண்ணும், அமெரிக்கப் படைகளை இரத்தம் தோய்ந்த மற்றும் வெடிக்கும் மோதலில் சிக்க வைக்கும், அது எண்ணற்ற ஈராக்கியர்களின் உயிரைக் காவுகொள்ளும் அதேவேளை மேலும் மேலும் அமெரிக்க இளைஞர்களை கொல்லவும் ஊனமடையவும் செய்விக்கும்.

அவை அமெரிக்க மக்களுக்குள்ளே ஈராக்கிய ஆக்கிரமிப்புக்கு கடும் எதிர்ப்பையும் கடும் திடீர் நிலைமாற்றத்தையும் கூட தோற்றுவிக்கும் மற்றும் அனைத்து அமெரிக்கத் துருப்புக்களையும் உடனடியாக வாபஸ் பெறுவதற்கான கோரிக்கைகளை அதிகரிக்கச் செய்யும்.

Top of page