World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

ஹிழி மீstவீனீணீtமீ யீஷீக்ஷீ க்ஷீமீதீuவீறீபீவீஸீரீ மிக்ஷீணீஹீ லீணீறீயீ tலீணீt ஷீயீ ஙிusலீsஷ்லீமீக்ஷீமீs tலீமீ னீஷீஸீமீஹ் ரீஷீவீஸீரீ?

ஐ.நா. ஈராக்கிய மறுசீரமைப்பிற்கான மதிப்பீடு, புஷ்ஷின் மதிப்பீட்டில் பாதிமடங்குதான்-- பணம் எங்கே போகிறது?

By Patrick Martin
11 October 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஐ.நா, உலக வங்கி இரண்டும் இணைந்து தயாரித்த அறிக்கையின் படி, ஈராக்கில் அடிப்படை மறு கட்டமைப்பிற்கான மதிப்பீட்டுதொகை, அமெரிக்க காங்கிரசில் புஷ் நிர்வாகம் கோரியதில் பாதி மடங்குதான் ஆகும். 2004ம் ஆண்டில், ஈராக்கிய சீரமைப்பிற்காக, 9 பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என இவ்வறிக்கை மதிப்பீடு செய்துள்ளது. அமெரிக்க சட்டமன்ற ஒதுக்கீட்டுக்குழு, சீரமைப்புத் திட்டத்திற்கென 18.6 பில்லியன் டாலர்களுக்கு ஒப்புதல் கொடுத்த அன்றே தான், இவ்வறிக்கையும் வெளிவந்தது.

இன்றியமையாத பணிகளை மீட்பதற்கான செலவினங்கள், தனித்தனியே இவ்வறிக்கையில் பிரித்துக் கொடுக்கப்பட்டு, மொத்த மதிப்பீட்டுத் தொகையையும், இவ் அறிக்கையில் அடங்கியுள்ளது. உதாரணமாக, நாட்டின் மின்வசதியை மறுசீரமைக்க, புஷ் நிர்வாகம் 5.7 பில்லியன் டாலர்கள் கோரியுள்ளபோது, ஐ.நா. உலக வங்கி இணைந்த அறிக்கை செலவுத் தொகையை 2.38 பில்லியன் டாலர்களாகக் கொடுத்துள்ளது. அதேபோல், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மீளக் கட்டுதற்கு நிர்வாகம் 3.77 பில்லியன் டாலர்கள் கேட்டுள்ளபோது, கூட்டு அறிக்கை அதற்கான மதிப்பீட்டில் 1.9 பில்லியன் டாலர்கள்தான் தேவை எனக் கணக்கிட்டுள்ளது.

எந்தச் சீரமைப்புத் திட்டத்தை தொடக்குவதாக இருந்தாலும், அதன் கீழுள்ள முரண்பாட்டை, ஐ.நா. உலக வங்கி அறிக்கை தெளிவாக்கியுள்ளது: தொடர்ந்துள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பும் அதற்கெதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பும், உண்மையான மறுகட்டமைப்பும், சமுதாய முன்னேற்றத்தையும் சாத்தியமில்லாததாக ஆக்குகிறது. "மதிப்பீடு பற்றிய வேலை தொடங்கியவுடன், அதன் கீழுள்ள பிரதானமான அனுமானம் பாதுகாப்பான சூழ்நிலை இருக்கும் எனக் கருதப்பட்டதாகும்" என பத்திரம் கூறுகிறது. ஆனால் தேவைகள்- மதிப்பீடு முடிவு செய்யப்படும் கட்டத்திலும் கூட இந்த நிலைமை ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது."

மாட்ரிட்டில், அக்டோபர் 23- 24ம் தேதிகளில் நடக்கவுள்ள "நன்கொடையாளர் மாநாட்டிற்கு" முன்பே, இவ்வறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. புஷ் நிர்வாகம், 2004 லிருந்து 2007 வரையிலான காலத்திற்கு, ஈராக்கிய மறு கட்டுமானத்திற்காக 55 பில்லியன் டாலர்கள் தேவைப்படுமென மதிப்பிட்டுள்ளது. காங்கிரசில் இது கேட்டுள்ள 20 பில்லியன் டாலர்களுடனும் கூட, மற்ற நாடுகள் இந்த 35 பில்லியன் டாலர்கள் தொகையைக் கொடுக்க முன்வரவேண்டும் என்று வாஷிங்டன் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ள ஐ.நா. அதிகாரிகள், மிகக் குறைந்த அளவான 1 பில்லியன் டாலர்கள் தான் நன்கொடையாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள். இக்கூட்டத்திற்கு விருந்தோம்பல் செய்யும், வலதுசாரி ஸ்பெயின் அரசாங்க பிரதம மந்திரியான ஜோஸ் அஸ்நர், தன்னுடைய அமெரிக்க நண்பருக்கு சங்கடம் நேரக்கூடாது என்ற நோக்கத்தில் கூட்டத்தையே ஒத்திப்போடலாமா என யோசித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

அமெரிக்க- பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு படைகளுக்கு நன்கொடையளிக்க தயாராக உள்ள நாடுகளுக்கு, அரசியலளவில் பாதுகாப்பு அளிக்கும், ஈராக்கின் மீதான தீர்மான ஒன்றை, அமெரிக்காவிற்கு பின் வரிசையாக நாடுகளை அணிவகுக்க செய்வதற்கு, ஐ.நா.பாதுகாப்புக் குழுவில், புஷ் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி ஏறத்தாழ சரிந்ததை அடுத்து, இந்த ஐ.நா.-உலக வங்கி அறிக்கை வெளிவந்துள்ளது.

இத் திட்டத்திற்கு, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷியா, சீனா போன்ற பெரிய நாடுகள் அதிக ஆர்வம் காட்டாததை அடுத்து, அதிலும் தீர்மானம் போட்டாலும், போடாவிட்டாலும் குறிப்பிடத்தக்க படைகளை சில நாடுகளே அனுப்ப விரும்பும் நிலையில், ஐ.நா. தலைமைச்செயலர் கோபி அன்னன், வழக்கத்திற்கு மாறான முறையில், அமெரிக்க ஆதிக்கத்திலுள்ள ஈராக்கில், ஐ.நா.விற்கு வழங்கும் துணைப் பங்கை எதிர்த்து அப்பட்டமாக பொது அறிக்கைகளை வெளியிட்டது, அமெரிக்க திட்டத்தை தகர்த்து விட்டது.

இவ்வாறு, ஐ.நா. உலகவங்கி அறிக்கை, அன்னன், மற்றும் தன்னுடைய ஐரோப்பிய, ஆசிய எதிர்ப்பாளர்களால், நாசமாக்கப் பட்டுவிட்டது என வாஷிங்டன் கருதக்கூடும். அந்த நம்பிக்கை, வெள்ளிக்கிழமையன்று, முக்கிய பிரிட்டிஷ் வணிகச் செய்தித்தாளான Financial Times சிறப்புக்-கட்டுரை ஒன்றை வெளியிட்டதையடுத்து, புஷ் நிர்வாகத்தின் பதில் நடவடிக்கையிலிருந்து தெளிவாகும். வெள்ளை மாளிகை, ஐ.நா. மதிப்பீடுகளையும், தன்னுடைய ஈராக்கிய ஒதுக்கீட்டுத் தொகையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பிழையென்றும், அமெரிக்க செலவினங்கள் 18 மாத காலத்திற்கானவை என்றும், ஐ.நாவுடையது 12 மாத காலத்திற்கென்றும் வாதிட்டது. ஆனால், வெள்ளை மாளிகை, சட்டமன்றத்திற்கு நிதியாண்டு 2004 க்கான கோரிக்கையை அக்டோபர் 1, 2003 முதல், 30 செப்டம்பர் வரையிலான 12 மாதங்களுக்குத்தான்-- அனுப்பி வைத்தது.

புஷ் நிர்வாகத்தின் போர் மற்றும் பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் நாசத்திற்குட்பட்ட ஈராக்கிய அடிப்படை கட்டுமானப் பணிகளின் சீரமைப்பிற்கான செலவின மதிப்பீட்டுத்தொகை, சவாலுக்கு ஆளாகி உள்ளது, இது முதல் தடவையல்ல. அமெரிக்க ஆட்சியாளர் போல் பிரேமரால் நியமிக்கப்பட்டுள்ள 25- நபர்களடங்கிய ஈராக்கிய ஆட்சிக் குழுவே, பிரேமரின் பல வரவுசெலவுத்திட்ட கணிப்புக்களை ஐயத்திற்கு உட்படுத்தியுள்ளது. அதிக செலவுகள் எடுக்கும், அயல்நாட்டு ஒப்பந்தக்காரர்களை, அதிலும் அமெரிக்கர்களை, ஈராக்கிய வணிகர்களே மலிவாக முடிக்கக்கூடிய பணிகளுக்கு பயன்படுத்துகிறார் பிரேமர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்கள்.

New York Times க்கு, குழுவின் குர்டிஷ் உறுப்பினரான மஹ்மூத் ஒத்மான் தெரிவித்ததாவது; "வெளிப்படையாக எதுவும் செய்யப்படுவதில்லை, இதைப்பற்றிய நடவடிக்கை வேண்டும். எல்லா வகைகளிலும் நிர்வாகத் தவறுகள் நடக்கின்றன.... நிறைய அமெரிக்கப் பணம் வீணாகப்போகிறது, என நான் நினைக்கிறேன். நாங்களும் அமெரிக்க வரி செலுத்துவோரும் தான் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்."

கணக்கில் காட்டப்படாத, இந்த பில்லியன்களை, பிரேமரும், புஷ் நிர்வாகமும் ஈராக்கிய மக்கள் மீது அள்ளிக் கொட்டிவிடுகிறார்கள் எனக் கருதிவிட வேண்டாம். ஐ.நா.- உலகவங்கி அறிக்கைக்கும் ஈராக்கிய- குழுவின் புகார்களுக்கும் பின்னே, ஈராக்கை மீளக் கட்டியமைக்க புஷ் நிர்வாகம் கொண்டுள்ள கீழ்த்தரமான இரகசிய முறை இருக்கிறது: காங்கிரசால் ஒதுக்கீடு செய்யப்படும் தொகை முழு அளவில் ஈராக்கியரைச் சென்றடையாது, பெரிய அமெரிக்க நிறுவனங்களுக்குத் தான், அதிலும் குறிப்பாக, குடியரசுக் கட்சியின் மற்றும் புஷ் நிர்வாகத்தின் உயர்மட்ட தொடர்புடைய Bechtel, Halliburton போன்றவற்றிற்குத்தான் செல்லும்.

இது, செய்தி ஊடகம் மற்றும் காங்கிரசின் கவனமும் பெருமளவில் குவிந்துள்ள "மறு கட்டமைப்பு" நிதியான 20.3 பில்லியன் டாலர்களுக்கு மட்டும் பொருந்தாது; கடந்த மாதம் புஷ் அறிவித்திருந்த முழு 87 பில்லியன் டாலர்கள் ஒட்டுமொத்தச் செலவினத்திற்கும் தான் பொருந்தும். இந்நிதியில் பெரும்பகுதியான $66 பில்லியன் டாலர்கள் இராணுவச் செலவுக்கு எனக்கூறப்பட்டாலும் கூட, அதில் கிட்டத்தட்ட எதுவுமே அமெரிக்க வீரர்களுக்கோ, அவர்கள் குடும்பத்திற்கோ சென்றடையாது. இராணுவ வீரர்களின் ஊதியங்கள், பென்டகனின் வாடிக்கையான ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகும், புதிய திட்டப் பொதியம் அல்ல; அவர்களுக்கு போர்க்கள படி என ஒரு சிறிய தொகை மட்டும்தான் போகும்.

இராணுவச் செலவு எனப்பட்டியலில் உள்ளது, ஈராக்கில் உணவு, எரிபொருள், ஆயுத வெடிமருந்துகள் கொடுத்தல், போர்க்கள முகாம்கள் அமைத்தல், மற்றய வசதிகள் அளித்தல் மற்றும் ஏனைய போர் தொடர்பான தயாரிப்புக்களைச் செய்தல் போன்றவற்றைச் செய்யும் அமெரிக்கப் பெருநிறுவனங்களுக்குத்தான் செல்லும். கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பாலான இத்தகைய பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன; இராணுவத்தினருக்குச் சுட்டுக்கொல்லும் வேலை ஒன்றுதான் கொடுக்கப்படுகிறது.

ஈராக்கின் மீதான படையெடுப்பு, ஆக்கிரமிப்பு இவற்றிற்காக தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட 79 பில்லியன் டாலர்களை தவிர, சமீபத்திய கோரிக்கை, ஈராக்கிய போருக்காக மொத்தச் செலவை 166 பில்லியன் டாலர்களுக்குக் கொண்டு வந்துள்ளது. இதில் பெரும்பாலான தொகை அமெரிக்கப் பெரு நிறுவனங்களுடைய கருவூலத்திற்குச் செல்கிறது. பெருநிறுவனங்கள் ஒப்பந்தங்களின் மூலம் உறுதி செய்யப்பட்ட இலாபங்களை அடைகின்றன; அதாவது செலவினங்கள் முழுமையாக கொடுக்கப்படுவதுடன், கூடுதலாக 7% இலாபம் கொடுக்கப்படும். நிறுவனங்கள் பென்டகனை அதிக அளவு செலவுத் தொகை கேட்டால், நிறுவனங்கள் கூடுதலான இலாபம் பெறும்.

ஈராக்கியப் படையெடுப்பிற்கு, போர்க்கால இலாபம் மட்டும் காரணமில்லை, ஆனால் புஷ் நிர்வாகம் முடிவெடுக்க, மிக சக்திவாய்ந்த ஒரு காரணியாக உள்ளது; நிர்வாகத்தில் ஏராளமான பழைய தலைமை நிறைவேற்று அதிகாரிகள் (CEO க்கள்) முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

Top of page