World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq: Civil unrest hits British-controlled Basra

ஈராக்: பிரிட்டன் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்ரா நகரில் உள்நாட்டு கிளர்ச்சி

By Mike Ingram
19 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

பிரிட்டிஷ் துருப்புக்களின் கட்டுப்பாட்டிலுள்ள பாஸ்ரா நகர்ப் பகுதியில் ஆகஸ்ட் 16 ந் தேதியன்று நடந்த ஒரு சம்பவத்தில் டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு சிப்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் ஈராக்கிற்கு டென்மார்க் தனது 400 துருப்புக்களை அனுப்பியதன் பின்பு, கோப்ரல் பிரபன் பெடர்சன் (வயது 34) ஆகஸ்ட் 16 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவ தினத்தன்று, பாஸ்ராவிற்கு வடக்கில் சுமார் 50 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள அல் மஜீனத் நகருக்கு பல ஈராக் மக்கள் டிரக்கில் சென்றனர். இரவில் வழக்கமாக நடைபெற்றுவரும் ரோந்து பணிகளில் நடக்கும் சோதனையாக டென்மார்க் யூனிட்டைச் சேர்ந்த ஒரு சிப்பாய் அந்த டிரக் வண்டியை தடுத்து நிறுத்தினார். அப்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்றதாக டென்மார்க் இராணுவ தலைமையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்தார்.

பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்ரா பகுதியில் பல வாரங்களாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. ஈராக்கில் அமெரிக்க கூட்டணிப் படைகள் அமைதி நிலைநாட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் w புஷ் கூறிவருவதை பொய்யாக்கும் வகையில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சி நடந்திருக்கிறது.

சதாம் ஹூசேன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 100 நாட்களை குறிக்கின்ற வகையில் வானொலி ஒலிபரப்பிய நிகழ்ச்சியில் புஷ் இந்தக் கருத்தை தெரிவித்தார். ''தனது பொருளாதாரத்தை சீரமைப்பதில் ஒவ்வொரு நாளும் ஈராக் முன்னேற்றம் கண்டுவருகிறது. ஈராக் மக்களது நலன்களை பேணுகின்ற வகையில் ஈராக்கின் எரிபொருள் தொழில் மீண்டும் செயல்படத் துவங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் பத்து லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யும், இருபது லட்சம் கலனுக்கு மேற்பட்ட காசலினும் தயாரிக்கப்பட்டு வருகின்றன'' என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய உற்பத்தி ஈராக் மக்களது நலனுக்காக நடைபெறவில்லை. ஈராக் மக்கள் கடுமையான எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகஸ்ட் 9,10 திகதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையானது தெருக்களில் கண்டனமாக வெடித்தது. பொதுமக்கள் திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டிஷ் துருப்புக்கள் மீது, அவர்கள் கற்களால் வீசி எறிந்தனர்.

தெற்கு ஈராக் நகரான பாஸ்ராவில் உள்ள பல பகுதிகளில் இப் பிரச்சனை வெடித்தது. 2000 மக்கள் எரிபொருள் பற்றாக்குறையை கண்டித்து அணிவகுத்து வந்தபோது அங்கிருந்த குவைத் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

நகரில் உள்ள பெட்ரோல் நிலையங்களைச் சுற்றி இந்தக் கலவரங்கள் நடந்தன. அத்துடன் மின்சார வெட்டின் காரணமாக வீடுகளுக்கு எரிபொருள் குழாய் இணைப்புக்கள் மூலம் வழங்க முடியவில்லை. அத்துடன் வீடுகளிலுள்ள குளுரூட்டி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கும் மின்சாரம் வழங்க முடியவில்லை. எனவே தவிக்கும் அனலில் மக்கள் புழுக்கத்தில் வாடினர்.

இந்தப் பகுதியில் நிர்வாகத்தை நடத்தி வருகின்ற பிரிட்டிஷ் படைகள் இந்த நிலவரம் குறித்து முன்னுக்கு பின் முரணான அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு வருகின்றன. இராணுவ அதிகாரியான ஸ்குவார்ட் ரன் லீடர் லிண்டா சாவர்ட்ஸ் இந்த நிகழ்ச்சிகள் மிக சாதாரணமானவை என்று கருத்துத் தெரிவித்தார்.

''இந்த வெப்பத்தினால், குளுரூட்டி வசதி இல்லாதது மற்றும் பகல்நேரத்தில் வெயில் அதிகரித்து தவிக்கும் நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் மக்களின் உணர்ச்சி வேகம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இராணுவத்தினர் தாக்குதல்களுக்கு நடுவில் நின்று சமாளிக்க வேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது.'' என்று அந்த அதிகாரி கருத்து தெரிவித்தார்.

பாஸ்ராவில் பிரிட்டன் தலைமையிலான கூட்டணி இடைக்கால ஆணையம் (Coalition Provisional Authority - CPA) செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களாக பாஸ்ராவில் பல மாவட்டங்களில் மிகக் குறைந்த அளவிற்கே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி மின்சாரம் குறைந்து கொண்டு வருவதற்குக் காரணம் கடத்தல்காரர்களும், சூறையாடுபவர்களும், நாசவேலைக்காரர்களும் தொடர்ந்து தங்களது கொடூரச் செயல்களில் ஈடுபட்டிருப்பதுதான் காரணம் என்று இந்த ஆணையம் கூறிக் கொண்டிருக்கின்றது

அத்தோடு சிறுபான்மை தீவிரவாதிகளே கலவரங்களை தூண்டிவிட்டுக் கொண்டிருப்பதாக CPA கருத்து தெரிவித்துள்ளது. பாஸ்ரா உள்ளிட்ட தென் பிராந்தியத்திற்கு CPA சார்பில் பொறுப்பு வகிக்கும் அதிகாரியான இயான் பிக்காட் கருத்து தெரிவிக்கும் போது எரிபொருள் பற்றாக்குறையால் நேரடியாக வண்டி ஓட்டுனர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆர்பாட்டங்கள் இயல்பாக தோன்றிக் கொண்டிக்கின்றன என்றார். நகரின் பல பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் நெருப்பு வைத்துக் கொளுத்துவதற்காக வண்டி ஓட்டுனர்களே டயர்களை தெருவில் போட்டுவிட்டுச் செல்வதாகவும், இப்படி செய்பவர்கள் ''இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களைச்'' சார்ந்தவர்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஈராக் மக்கள் அளவிற்கு அதிகமான எதிர்பார்ப்பில் வாழ்ந்து கொண்டிருப்பதாக பிக்காட் மேலும் குற்றம்சாட்டினார். அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், போர் துவங்குவதற்கு முன்னர் மக்களில் சிலர் எல்லா வகையான உறுதி மொழிகளையும் தந்துவிட்டனர் என்று அவர் புகார் கூறினார்.

உண்மையிலேயே பாஸ்ராவில் நிலவுகின்ற கிளர்ச்சியானது, தங்களது நாட்டை அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் படைகள் சட்ட விரோதமாக ஆக்கிரத்துக் கொண்டதற்கு மக்களிடையே எதிர்ப்பு உணர்வு பெருகிக் கொண்டு வருவதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. பாக்தாத்திற்கு மேற்கிலும், வடக்கிலும் பெரும்பாலும் சன்னி முஸ்லீம்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது எதிர்ப்பை தினசரி அமெரிக்கப் படைகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. தினசரி அமெரிக்க இராணுவம் இழப்புகளை சந்தித்துக்கொண்டிருப்பதால், அமெரிக்க இராணுவம் மற்றும் புஷ் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு இந்த நடவடிக்கைகளில் ''சதாம் ஹூசேன் விசுவாசிகள்'' ஈடுபடுகின்றனர் என்றும் மிகப்பெரும்பாலான மக்களது கருத்துக்களை அவர்கள் எதிரொலிக்கவில்லை என்றும் விளக்கம் தந்து வருகின்றனர்.

பாஸ்ராவில் நடந்துவரும் சம்பவங்கள் இத்தகைய கூற்றுக்களை பொய்யாக்குகின்றன. பாஸ்ராவில் பெரும்பாலும் ஷியாட் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சதாம் ஹூசேன் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பகுதியாகவும் இது இருந்தது. தற்போது நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் ஷியாட் முஸ்லீம்கள் அனைவருமே கலந்துகொண்டு வருகின்றனர். கூட்டணிப் படைகள் இந்த மக்களுக்கு ''விடுதலையை'' வாங்கித் தருவதாகவும், ''ஜனநாயகத்தை'' நிலைநாட்டுவதாகவும் உறுதியளித்தனர். அந்த உறுதிமொழிக்கு மாறாக பிரிட்டனின் கட்டுப்பாட்டில் பொம்மை நிர்வாக ஆணையம் உருவாக்கப்பட்டிருப்பதுடன், தொடர்ந்தும் பரவலாக பற்றாக்குறைகளும் ஏற்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட கொந்தளிப்புகளால் கிளர்ச்சி உருவாகியிருக்கிறது. 50 டிகிரி செல்சியஸ் (120 டிகிரி பாரனைட்) வெப்பம் உயர்ந்து கொண்டே செல்கிறது. குளிர்சாதனப் பெட்டிகளும், குளுரூட்டி சாதனங்களும் நின்றுவிட்டன. வீடுகளில் இருக்கும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலைமைக்கு கண்டனம் செய்பவர்களை விரட்டுவதற்காக பிரிட்டிஷ் துருப்புக்கள் வானத்தை நோக்கி சுட்டன. மேலும் ஒரு எரிவாயு நிலையத்தில் வரிசையில் நின்ற மக்களை கலைப்பதற்காக தடியடி பிரையோகம் செய்தனர் என்பதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். துருப்புக்கள் ரப்பர் குண்டுகளைப் பாவித்து சுட்டதில் குறைந்தபட்சம் இரண்டு ஈராக்கியர்கள் காயமைடந்ததாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

இதர எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் வன்முறை பரவியுள்ளது. பிரிட்டனின் பிரதான தலைமை அலுவலகத்தை காவல் புரிந்து கொண்டிருக்கின்ற இராணுவத்தினர் மீது பொதுமக்கள் கும்பலாக திரண்டு கற்களை வீசித் தாக்குதல் நடத்தினார்கள். 20 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர்களுக்கு கத்திக்குத்து மற்றும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. கற்கள் மற்றும் கண்ணாடி புட்டிகள் தாக்கியதால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றிற்கான அடிப்படைக் காரணம் என்ன என்பது பின்னர் தெரிய வந்தது. ஆகஸ்ட் 10 ந் தேதி பிரிட்டிஷ் இராணுவத்தின் இரண்டு டாங்கிகள் ராக்கெட் மூலம் தாக்கப்பட்டதை தொடர்ந்து, பிரிட்டிஷ் இராணுவம் இரண்டு ஈராக்கியர்களை சுட்டுக்கொன்றது

பிரிட்டன் அதிகாரிகள் நிலவரம் கட்டுப்பாட்டில் இருப்பதாக தொடர்ந்து கூறிவந்தாலும், அந்த வாரம் முழுவதிலும் வன்முறை நீடித்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 11 திங்களன்று பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த லேண்ட் ரோவர் வாகனம் உம்கஸ்ஸார் (Umm Quasr) துறைமுகத்திற்கு அருகேயுள்ள பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அந்த வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அது சேதம் அடைந்தது. சுமார் 20 ஈராக்கியர்கள் அந்த வாகனத்தின் மீது கற்களை வீசி எறிந்தனர். அந்த வாகனத்தின் ஜன்னல்கள் நொறுங்கின. உள்ளேயிருந்த இராணுவத்தினர் இறங்கி தப்பியோடினர்.

ஆகஸ்ட் 14 வியாழன் அன்று, அவசர மருத்தவ உதவி வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பிரிட்டிஷ் சிப்பாய் கொல்லப்பட்டு மற்றும் இருவர் காயம் அடைந்தனர். சாலையின் ஓரத்தில் விளக்கு கம்பத்தில் விடப்பட்டிருந்த மிக நுட்பமான வெடிப்பு சாதனக்கம்பி அந்த வாகனத்தின் மீதுபட்டதால் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது.

உள்ளூர் மக்களை பேட்டி கண்டதன் மூலம் அவர்களிடம் நிலவுகின்ற ஆத்திரத்தை அளவிட முடிகின்றது. அவர்கள் குவைத் மீது தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். குவைத்தைச் சேர்ந்தவர்கள் ஈராக்கின் மலிவான எண்ணெய்யை கடத்துவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சிலர் தங்களது பகுதியை ஆக்கிரமித்துக்கொண்ட பிரிட்டிஷ் படைகள் மீது தங்களது ஆத்திரத்தைக் காட்டினர். இந்த படையெடுப்பின் மூலம் பிரிட்டிஷ் படைகள் ஈராக்கிலிருந்து எண்ணெய் கடத்துவதற்கு குவைத்தைச் சேர்ந்தவர்களுக்கு வசதி செய்து தந்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர். அவர்கள் படையெடுப்பிற்கு முன்னர் தந்த உறுதிமொழிகளுக்கு ஏற்ப, தங்களது பகுதிகளில் சேவைகள் மீட்டுத்தரப்படவில்லை என்று பெரும்பாலோர் தங்களது ஆத்திரத்தை வெளியிட்டனர்.

45 வயதான டாக்ஸி டிரைவர் அந்னான் அபூத் போன்றவர்கள் தெரிவித்த புகார்கள் பொதுவானவை. அவர் பெட்ரோலுக்காக 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்தார். ''பிரிட்டிஷாரும், அமெரிக்கர்களும் இங்கே வருகிறார்கள், உறுதிமொழிகளை அள்ளி வீசுகிறார்கள், ஆனால் தற்போது சதாம் ஹூசேன் ஆட்சியை விட மோசமான நிலவரம்தான் இங்கு உள்ளது'' என்று அந்த டாக்சி டிரைவர் குறிப்பிட்டார்.

''அவர்கள் தந்த உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை, காத்திருந்து நாங்கள் பொறுமை இழந்து விட்டோம், எனவேதான் கிளர்ச்சி வெடித்திருக்கிறது'' என்று 19 வயது மாணவர் அசன் ஜெசிம் குறிப்பிட்டார்.

ஒரு உணவு விடுதியின் உரிமையாளர் சாப்ரி சுகே (வயது 45) தனது ஜெனரேட்டருக்கு எரிபொருள் கிடைக்காதது பற்றி கருத்து தெரிவிக்கும்போது ''பிரிட்டிஷார் எல்லாவற்றையும், சிறப்பாக முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லப்போவதாக உறுதியளித்தார்கள். இப்போது நிலவரம் படுமோசமாகிவிட்டது. பழைய காலத்தில்கூட இவ்வளவு மோசமான நிலை இருந்ததில்லை. உறுதிமொழி வெறும் பயனற்ற வார்த்தைகள்தான்'' என்று குறிப்பிட்டார்.

இன்றைய தினம் பெட்ரோல் கிடைக்கும் என்று உறுதியளித்தார்கள். ஆனால் பெட்ரோல் சிறிது கூட கிடைக்கவில்லை. பிரிட்டிஷார் குவைத்திற்கு பெட்ரோலை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பீப்பாய்க்கு 75 அமெரிக்க டொலர்கள் வீதம் கமிஷன் பெறுகிறார்கள்'' என்று 29 வயதான தொழிலாளி கதீம் ராபன் கருத்து தெரிவித்தார்.

இதுபோன்ற வெறுப்பு உணர்வுகளின் காரணமாகத்தான் ''கிர்கூக்'' பகுதியிலிருந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய் இணைப்புக்களில் ஒரு பகுயில் தீவிபத்து ஏற்பட்டது என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது. துருக்கியைச் சேர்ந்த செயாகான் எண்ணெய்க் குழாய் சப்ளை இணைப்பிற்கு ஈராக்கில் உற்பத்தியாகும் எண்ணெயில் 40 வீதம் இந்த புதிய குழாய் இணைப்பு வழியாக அனுப்பப்படுகிறது.

ஆகஸ்ட் 13 புதன் கிழமையன்று இது திறந்து வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமையன்று அதில் ஒரு பகுதியில் பெரும் தீ விபத்து ஒன்று ஏற்பட்டதால், அதனை பழுது பார்ப்பதற்காக மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனைப் பழுதுபார்க்க பலவாரங்கள் ஆகும்.

''இந்தக் கட்டத்தில் குழாய் இணைப்பில் பொருத்தப்பட்ட ஒரு வெடிப்பு சாதனம்தான் இந்த விபத்திற்கு காரணம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அமெரிக்கா நியமித்துள்ள ஈராக்கின் இடைக்கால எண்ணெய் அமைச்சர் தபீர் கட்பன் (Thamir Ghadban) குறிப்பிட்டார். ஆகஸ்ட் 17 ஞாயிறன்று அதே குழாய் இணைப்பில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்துள்ளதாக செய்திகள் வந்தன. அதுவும் நாசவேலைதான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் குழாய் இணைப்பும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும், போரில் சிதைந்து கிடக்கும் ஈராக்கை மீண்டும் உருவாக்குவதற்கு உயிர் நாடியானது என்று அமெரிக்க நிர்வாகம் கூறுகின்றது. ஆனால் பல ஈராக்கியர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டின் பொருளாதார வளத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள் அதன் விளைவுகளை ஈராக் மக்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றது என்று ஈராக் மக்களில் பெரும்பாலோர் கருதுகின்றனர்.

ஈராக்கின் இதர பகுதிகளிலும் நிலவரம் மோசமாகவே உள்ளது. பாக்தாத்தில் தண்ணீர்க் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டிதில் தலைநகரில் பிரதான சாலைகளில் ஆகஸ்ட் 17 ஞாயிறன்று வெள்ளம் ஓடியது. அந்தப் பகுதிகளில் வாழும் 300,000 மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதற்கும் நாசவேலைதான் காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம்கூட பாக்தாத் புறநகர்ப் பகுதியிலுள்ள அபு கிரைப் சிறைச்சாலையில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஆறு ஈராக்கியர்கள் பலியாகினர். அதில் 59 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் ஏன் நடந்தது என்பது விளக்கப்படவில்லை. ஆகஸ்ட் 16 சனிக்கிழமையன்று பாக்தாத் உணவு விடுதியிலிருந்து வெளியில் வந்த இரண்டு அமெரிக்க இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், அவர்கள் காயம் அடைந்தனர். மற்றொரு சம்பவத்தில் ஈராக் போலீஸ் தலைமை அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதலில் வடக்கு மோசூல் பகுதியின் தலைமை போலீஸ் அதிகாரி காயம் அடைந்ததுடன், இரண்டு அதிகாரிகள் அதில் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Top of page