World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel assassinates Hamas leader

ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்தது

By David Cohen
23 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு இஸ்லாமிய போராளி ஆகஸ்ட் 19 அன்று நடத்திய தற்கொலை குண்டு வீச்சு தாக்குதலினால் 20 இஸ்ரேலியர்கள் மடிந்ததோடு 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேற்கு சுவர் பகுதியில் இருந்து ஹார் நோப் புறநகர் பகுதிக்கு வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தில் இச்சம்பவம் நடைபெற்றது. பலியானவர்கள் அதி வைதீக யூதர்கள், அவர்களில் பலர் குழந்தைகள். இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பேருந்துகள் தாக்குதலுக்கு இலக்காகின. தற்கொலை குண்டுவெடிப்பாளர் குண்டை வெடித்த பேருந்து முழுமையாக சேதம் அடைந்ததோடு பின்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் ஜன்னல்களும் சிதைந்துவிட்டன.

இந்த தாக்குதலை புஷ் நிர்வாகம் உடனடியாக கண்டித்தது. புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு குழுவின் பிரதிநிதியான சியன் மெக்கார்மாக் பாலஸ்தீன நிர்வாகம் (PA) "பயங்கரவாத அமைப்புக்களை அப்புறப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டது.

பாலஸ்தீன நிர்வாகத்துடன் ஜெரிக்கோ மற்றும் க்வால்கில்யா (Qalqilyah) பகுதிகளின் நிர்வாகத்தை பாலஸ்தீன கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான திட்டம் குறித்து பேச்சுவார்த்தையை ஏரியல் ஷரோனின் இஸ்ரேலிய அரசாங்கம் தள்ளிவைத்துவிட்டது மற்றும் பாலஸ்தீன நிர்வாகம் பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

அதற்குப் பின்னர் ஆகஸ்ட் 21 அன்று, காசா நகரில் இஸ்ரேல் ஹெலிகாப்டர் விமானத்திலிருந்து வீசப்பட்ட ராக்கெட் காரில் சென்று கொண்டிருந்த மூத்த ஹமாஸ் போராளி தலைவர் இஸ்மாயில் அபு ஷனாப் மற்றும் அவரது இரண்டு மெய்காப்பாளர்களையும் தாக்கியதில் அவர்கள் மாண்டனர். ஹமாஸ் அமைப்பும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பும் ஜூன்-29- அன்று அறிவிக்கப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக தாங்கள் கடைபிடித்துவரும் ஒரு தலைப்பட்சமான சண்டை நிறுத்த நடவடிக்கைகளுக்கு இனியும் கட்டுப்பட்டு இருக்கப்போவதில்லை என்றும் பதிலடி கொடுக்கப் போவதாகவும் அறிவித்துவிட்டன.

பாலஸ்தீன போராளி என சந்தேகிக்கப்படுபவர்களை "குறிவைத்து கொலைசெய்கின்ற" நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு கொள்கை அடிப்படையில் தற்போது பிரதமர் ஷரோனின் பாதுகாப்பு அமைச்சரவை உடன்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிலும், இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பகுதிகளிலும் அண்மையில் நடைபெற்ற சம்பவங்களை இப்படித்தான் ஊடகங்கள் சித்தரித்தன - முதலில் பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவர் அதற்கு பதிலடியாக இஸ்ரேலியர் எதிர்தாக்குதல் நடத்துவர். அதற்கு பின்னர் "சாலை வரைபடம்" என்று கூறப்படுவதன் கீழ் "சமாதானத்தை" உத்தரவாதம் செய்வதற்காக மிகவும் நேர்மையாக முன்னெடுக்கும் முயற்சிகள் சீர்குலையும் ஆபத்தில் இருப்பதாக புஷ் நிர்வாகம் அறிக்கை வெளியிடும். பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த PA அமைப்பு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே இதர நடவடிக்கைகள் அமையும் என்று பின்னர் கூறப்படும்.

இப்படி அதிகாரபூர்வமாக தரப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது. உண்மை என்னவென்றால் எப்பொழுதும் பாலஸ்தீன மக்களிடம் மோதலை வெடிக்கச்செய்வது ஷரோனின் நோக்கமாக இருக்கும், பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டிவிடும் நோக்கம் கொண்ட ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்வதால், ஹமாஸ் அல்லது இஸ்லாமிய ஜிஹாத்தால் எடுக்கப்படும் நடவடிக்கை, இஸ்ரேலிய படைகளால் எடுக்கப்படும் மேலும் கடுமையான ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்த அவை பயன்படுத்தப்படும்.

பாதுகாப்பு அமைச்சரவை, குறிவைத்து கொலை செய்கின்ற தனது கொள்கையை "மீழ உயிரூட்டம்" செய்யப்போகிறது என்ற கூற்றும் மோசடியானதாகும். அந்த நடைமுறையை அது ஒரு போதும் கைவிட்டது கிடையாது. மேற்குக்கரை நகரான ஹெப்ரானில் இஸ்லாமிய ஜிஹாத் போராளி அமைப்பின் மூத்த தலைவர் முஹம்மது சிதரை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கைதுசெய்ய முயன்றபோது ஆகஸ்ட்-14- அன்று அவர் கொல்லப்பட்டார். அதற்கு பதிலடி கொடுக்கின்ற வகையில்தான் பேருந்து குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேலும் ஜூன் மாதம் ஹமாஸ் மூத்த தலைவர் அப்தல் அஜீஸ் பயணம் செய்த கார் மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதலை நடத்தியது. அப்போது அவர் சொற்ப காயங்களுடன் தப்பினார்.

தற்போது ஷனாபையும் அவரது மெய்க்காவலர்களையும், இஸ்ரேல் கொன்றுவிட்டது. இதன் நேரடிவிளைவு என்னவென்றால் இஸ்லாமிய போராளிக் குழுக்களால் சண்டை நிறுத்தம் கைவிடப்பட்டுவிட்டது- இதுதான் இஸ்ரேலிய பாதுகாப்புப்படையின் நடவடிக்கைகளின் எப்போதும் விரும்பும் விளைவாக இருந்தது.

இந்த வகையில், ஷரோன் அரசாங்கம் பாலஸ்தீன நிர்வாகத்தை தடி கொண்டு தாக்க முடியும் மற்றும் செய்தி ஊடகத்தின் முழு ஆதரவுடன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பினை நசுக்கும் நடவடிக்கைகளை நோக்கி அதனை விரட்டும்.

அமெரிக்க ஆதரவு பெற்ற பாலஸ்தீன தலைமை இஸ்லாமிய போராளிகள் குழுக்களை கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என பின்னர் கூறப்படும். இதன் நோக்கம் என்னவென்றால், இஸ்ரேல் தொடர்ந்து ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதை நியாயப்படுத்துவதோடு மற்றும் ஷரோன் வன்முறைகளை தூண்டிவிடவில்லை என்றும் மாறாக வன்முறைகள் நடக்கும்போது எதிர் நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்கிறார் என்று சித்தரிப்பதுமேயாகும்.

இஸ்ரேலின் லிபரல் தினசரி பத்திரிகை Haaretz ஆகஸ்ட் 20-ந்தேதி தனது தலையங்கத்தில் பாலஸ்தீன பிரதமர் முஹம்மது அப்பாஸ் "ஜெரூசலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை இது ஒரு தீங்கான செயல் என்றும் பாலஸ்தீன மக்களது நலன்களை பாதிக்கும் என்றும் கண்டித்திருப்பது மிகச்சரியானது என்று குறிப்பிட்டிருக்கிறது. ...கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலைநாட்டப்பட்டுவரும் சண்டை நிறுத்த உடன்படிக்கையை மீறுவதாகும், என்றும் ஆனால் அமெரிக்க ஆதரவும் உதவியும் இருப்பினும், கொள்கை அளவிலான அந்த அங்கீகாரத்தை நடைமுறை மொழியில் காட்டுவதற்கு போதுமான உறுதியாய் இருக்கிறார் என்பதை அப்பாஸ் நிரூபிக்கவில்லை" என்றது.

"அப்பாஸூக்கும் அவரது பாதுகாப்பு அமைச்சர் முகமது தலானுக்கும் பாதுகாப்புப் படைகள் துணையாக நிற்கும் காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதையும் அப்பாஸ் எடுக்கவில்லை. காசா பகுதியில் உள்ள பயங்கரவாதிகள், இடையூறு இன்றி தாராளமாக பயிற்சி பெறுகின்றனர், அப்போதைக்கப்போது பீரங்கிகள், உட்பட ஆயுதங்களால் இஸ்ரேல் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர், தொலைவையும் துல்லியத்தையும் மேம்படுத்த வேண்டி சில நேரங்களில் காசம் ராக்கெட்டுக்களை சோதனைக்காக ஏவிக் கொண்டிருக்கின்றனர். மேற்குக் கரையில், அதேபோல, பெரும்பாலான நகரங்களில் கூட பாதுகாப்புப் பொறுப்பு பாலஸ்தீன நிர்வாகத்திடம் மாற்றப்படாதிருக்கின்ற போதிலும், பயங்கரவாத அமைப்புக்களை கவனிப்பதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருப்பதற்கான அல்லது அத்தகைய தயாரிப்பை செய்வதற்கு விருப்பம் கொண்டிருப்பதற்கான அறிகுறி ஏதும் பாலஸ்தீன நிர்வாகத்திடம் இல்லை" என்று Haaretz பத்திரிகை புகார் கூறியுள்ளது.

ஜெரூசலம் போஸ்ட் பத்திரிகை தனது தலையங்கத்தில், "பாலஸ்தீன நிர்வாக அமைப்பு எந்த வழிமுறையையாவது, இப்பொழுது தேர்ந்தெடுத்தாக வேண்டும். பயங்கரவாத அடிப்படையில் ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது மற்றும் ஒரு பாலஸ்தீன அரசையும் நிறுவிவிட முடியாது" என்றது.

மதச்சார்பற்ற ஃபத்தா அமைப்பாக இருந்தாலும் சரி அல்லது ஹமாஸ் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களாய் இருந்தாலும் சரி, இருக்கின்ற பாலஸ்தீன அரசியல் போக்குகள் ஒன்றுகூட பாலஸ்தீன மக்களை இஸ்ரேலிய ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து விட இயலாது. அவர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பொதுவாகப் பாதுகாப்பதற்கு விரிவுபடுத்தும் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் யூத மற்றும் அரபு தொழிலாள வர்க்கத்திற்கு இடையிலான ஒற்றுமைக்கான ஒரு உண்மையான வேண்டுகோளை செய்வதற்கு, துணிவாய் முடிவெடுப்பதுதான் சிறந்த வழியாக இருக்கும். அரபு-யூத ஐக்கியத்திற்கான கருத்திற்கான இஸ்லாமிய பிற்போக்கின் அமைப்பு ரீதியான குரோதம் அதன் வெளிப்பாட்டை இஸ்ரேலின் அப்பாவி மக்களை இலக்கு வைக்கின்ற பயங்கரவாத குண்டு வெடிப்புக்களில் காண்கிறது. இத்தகைய இரத்தக்களரிகளை எதிர்த்து நின்கின்ற அரபு மக்களும் யூத மக்களும், ஊடகங்களின் பிரசாரங்களை பொருட்படுத்தாமல், தேசிய, மத, மற்றும் இன வேறுபாடுகளை கடந்து வர்க்க அடிப்படையில் ஒரு இயக்கத்தை கட்டி எழுப்புவதற்கான முயற்சியை மேற்கொண்டாக வேண்டும்.