World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

ஙிusலீ, 9/11 ணீஸீபீ மிக்ஷீணீஹீணீ ஜீஷீறீவீநீஹ் யீஷீuஸீபீமீபீ ஷீஸீ பீமீநீமீஜீtவீஷீஸீ

புஷ், 9/11 மற்றும் ஈராக் - மோசடியில் உருவாக்கப்பட்ட கொள்கை

By Bill Vann
9 September 2003

Back to screen version

ஈராக் தொடர்பாக ஜனாதிபதி புஷ் நாட்டிற்குத் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஆற்றிய உரை ஊடகத்திலிருந்து சூடான எதிர்விளைவை தூண்டி விட்டுள்ளது. "நியூயோர்க் டைம்ஸ்`" ``வாஷிங்டன் போஸ்ட்`` இரண்டும், "சர்வதேச ஆதரவை" வெல்லும் ஒரு வழிவகையாய்: அதாவது, தென்கிழக்காசியாவிலிருந்து பீரங்கிகளுக்கு தீனி போட மற்றும் ``பழைய ஐரோப்பா`` பணத்தைக் கொடுத்து பேரழிவிற்கு இலக்காகிவிட்ட ஆக்கிரமிப்பிலிருந்து அமெரிக்காவை மீட்க, ஈராக் நிர்வாகத்தில் ஐ.நா.வின் பங்கு பணியை அதிகரிப்பதை வெளிப்படையாக உறுதி கூறும் வகையில் புஷ் உரையாற்றத் தவறிவிட்டதாக கண்டித்திருக்கின்றன.

ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற போருக்காகும் செலவை ஈடுகட்டும் வகையில் வெள்ளை மாளிகை கூடுதலாக 87 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரும் முயற்சியை விடாப்பிடியாக மேற்கொள்ளக்கூடும் என்பதை ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர். வியட்நாம் போர் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது 87 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்கா வீண்செலவு செய்த தொகைக்கு சமமானது. அமெரிக்க செனட் சபை, வெளியுறவுகள் குழுவில் உயர் அதிகாரம் வகிக்கும் ஜனநாயகக்கட்சி செனட் சபை உறுப்பினர் ஜோசப் பிடன், பன்முகத்தன்மைக்கு அவர் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டு புஷ்ஷைப் பாராட்டினார். ``ஒரு பெரிய மனிதர்தான் அதைச் செய்ய முடியும். மற்றும் அவரை ஆதரிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்`` எனக் குறிப்பிட்டார்.

புஷ் உரை பற்றிய ஆய்வுகளிலும், விமர்சனக் கட்டுரைகளிலும், அவரது உரையின் மிக முக்கியமான அம்சத்தை திட்டமிட்டே புறக்கணித்திருக்கிறார்கள். புஷ் எழுப்பி இருக்கும் வாதங்கள் அடி முதல் உச்சி வரை பொய் மூட்டைகளாகவே அமைந்திருந்தன. ஈராக்கில் அமெரிக்க இராணுவம் தலையிடுவதற்கான உண்மையான நோக்கத்தை மூடி மறைத்துவிட்டு அமெரிக்க மக்களை ஏமாற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அந்த பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.

ஆப்ரகாம் லிங்கன் விமானம்தாங்கி கப்பலில் இருந்து ஜனாதிபதி புஷ் மே-1 தேதியன்று ஆற்றிய பகட்டாரவார வெற்றி உரையோடு இந்த உரையை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். அப்போது அவர் "நிறைவேற்றல்", "வெற்றி" என்ற வார்த்தைகளில் பேசிய பொழுது, ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஈராக்கில் அமெரிக்க கொள்கைகளுக்கு கிடைத்திருக்கும் பேரழிவுகரமான தோல்வியை எதிரொலிப்பதாக அமைந்திருக்கின்றது. அவரது உரையில் "தியாகம்" பற்றியும், "சுமை" பற்றியும் அடிக்கடி குறிப்பு வருகிறது. புஷ்ஷின் உரையை தயாரித்தவர்கள் தெளிவாகவே மிகவும் நிதான போக்கை கடைப் பிடிக்க பயற்றுவித்திருக்கிறார்கள், ஆயினும் அவரது வழக்கமான முத்திரை பதித்த அகந்தை போக்கு அவரது உரையில் வெளிப்பாடாகியது.

ஆயினும், இரண்டு உரைகளிலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு பொதுவான அம்சம் என்னவெனில், கடந்த இரண்டு ஆண்டுகளில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை-- வெளிநாட்டில் போர், உடனடியான பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக பூகோள அளவில் நடத்தப்பட்டு வருகின்ற போராட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவாக உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கோடிக்கணக்கான அமெரிக்க தொழிலாளர்களின் சமூக நிலைமைகளை அழித்தல் இவற்றை -- உத்தியோகபூர்வமாக நியாயப்படுத்துவதற்கு, அவரது இரண்டு உரைகளுக்கும் நம்பிக்கை ஆதாரமாக இருக்கும் பொய் சேவகம் செய்திருக்கின்றது.

ஈராக் மீது தொடுக்கப்பட்ட சட்ட விரோதமான போரில், அதில் 2001 செப்டம்பர் 11-ல் நடைபெற்ற தாக்குதல்களுக்கு சதாம் ஹூசேன் ஆட்சி பொறுப்பு என பொய் கூறப்பட்டது. இதற்கு முன்பு, இந்த வலியுறுத்தலானது, ஈராக்கிடம் ஏராளமான இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் உள்ளது, அணு ஆயுதங்கள் கூட இருக்கிறது மற்றும் அடுத்த பயங்கரவாத தாக்குதல் "காளான் போன்ற மேகமூட்டத்தால்" அடையாளப்படுத்தக் கூடிய அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களுடன் இணைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்கள் ஐந்து மாதங்கள் வரை ஈராக் முழுவதிலும் ஆராய்ந்த பின்னரும், அதுபோன்ற ஆயுதங்களின் தடயம் ஈராக்கில் கிடைக்காததன் பின்னர், புஷ் நிர்வாகம் செப்டம்பர் 11 தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியை பயன்படுத்திக்கொள்ள முன்வந்திருக்கிறது.

வெள்ளை மாளிகையிலிருந்து ஜனாதிபதி புஷ் ஞாயிறு இரவு ஆற்றிய உரையில் செப்டம்பர் 11 தாக்குதல்கள் குறித்து ஆறு முறை குறிப்பிட்டிருக்கிறார், புதிய பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்கு ஈராக்கில் இரத்தக்களரி அவசியமானதென குறிப்பிட்டார். ``அமெரிக்கா தீயைத் தடுத்த பின்னர், செப்டம்பர் 11 அன்று ஏற்பட்ட நெருப்புக்களை அணைத்த பின்னர் மற்றும் மாண்டுவிட்ட நமது மக்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், நாம் போருக்குச் சென்றோம். வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது." போரை எதிரியிடத்திலேயே நடத்தி இருக்கிறோம், நாகரீக உலகிற்கு ஏற்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலை சுருட்டிக்கொண்டு போக வைத்து வருகிறோம். அந்த பயங்கரவாத அச்சுறுத்தலின் வலுவிற்கான உயிர்நாடியிலேயே போர் புரிந்துகொண்டிருக்கிறோம். அந்த செல்வாக்கின் விளிம்பு நிலையில் நாம் நின்றுகொண்டு அதை நடத்தவில்லை,`` இவ்வாறு புஷ் பிரகடனம் வெளியிட்டார்.

``ஈராக்கிலும் மற்றும் ஆப்கானிஸ்தானிலும், இன்றைய தினம் நாம் எதிரியோடு போரிட்டுக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் மீண்டும் அந்த எதிரியை நமது தெருக்களில், நமது சொந்த நகரங்களில் சந்திக்கக்கூடாது என்பதற்காகத்தான்" என பின்னர் புஷ் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 11 நிகழ்ச்சியோடும், அல்கொய்தா இயக்கத்தோடும் ஈராக் ஆட்சிக்கு தொடர்பு இருந்தது என்பதற்கு சான்று எதுவும் இல்லை. அவை பரஸ்பர வெறுப்பு உணர்வினால் பண்பிடப்படுகின்றன. இலட்சக் கணக்கில் இல்லை என்றாலும், ஆயிரக்கணக்கான ஈராக்கிய குடிமக்கள் மற்றும் பல்லாயிரக் கணக்கான ஈராக் இராணுவ வீரர்கள், அமெரிக்க ராக்கெட்டுக்களால், குண்டுகளால், மற்றும் பீரங்கி தாக்குதல்களால் கொல்லப்பட்டனர், அவர்கள் மீது, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 3000 அமெரிக்க மக்களைக் கொன்றதற்கு எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை.

மேலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அந்நாடுகளை பிடிப்பதற்கான போர் திட்டங்கள் 2001 செப்டம்பர் மாதத்திற்கு முன்னரே உருவாக்கப்பட்டுவிட்டன. செப்டம்பர் 11 தாக்குதல்களை ஒரு பொன்னான வாய்ப்பாக புஷ் நிர்வாகம் பிடித்துக்கொண்டு, இப்போர்த் திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டது. இந்தப் போர்களுக்கான நோக்கங்கள், உந்துதல்கள், பயங்கரவாதமோ, அல்லது பேரழிவு ஆயுதங்களோ அல்ல, ஆனால் அமெரிக்கா பூகோள அளவில் மேலாதிக்கத்தை தொடரவும் மற்றும் பரந்த சக்தி வளங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டது.

இவை அத்தனையும் ஊடகங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் ஜனாதிபதி பொய் சொல்வதற்கு மற்றும் ஒரு கிரிமினல் கொள்கை என்று தெளிவாக தெரிவதை முன்னெடுத்துச் செல்வதற்கு செப்டம்பர் 11 அன்று அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை பயன்படுத்திக்கொள்ள சுதந்திரம் அளிக்கப்பட்டார். அடிமைப்பட்டு கிடக்கும் அமெரிக்க பத்திரிக்கை பட்டாளம் தன்னை இது சம்மந்தமாக விளக்கம் கேட்கும் என்ற பயம் அவருக்கு இருக்கவேயில்லை.

பழைய பொய்களுக்கு மேல் தற்போது நிர்வாகம் புதிய பொய்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்காக, அவர்களது உள்ளத்தில் தானே உருவாக்கிய தவறான எண்ணக்கருத்துக்களை, பயன்படுத்திக் கொள்ள இப்போது முயன்று வருகின்றது.

செப்டம்பர் 11 தாக்குதல்களில் சதாம் ஹூசேன் ஆட்சிக்கு பங்கு இருக்கிறது என 69 சதவிகித மக்கள் நம்புவதாக வாஷிங்டன் போஸ்ட் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்ட சில தினங்களுக்கு பின்னர் புஷ் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார். அந்த பத்திரிகையே அத்தகைய தொடர்புக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டிருக்கின்றது. இந்தப் போரை உருவாக்கிய பிரதான சிற்பிகளில் ஒருவரான பாதுகாப்புத்துறை துணை செயலர் போல் வொல்போவிற்ச் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதாக அது எழுதியிருக்கிறது.

அப்படியிருந்தும், இந்த தவறான கருத்தின் மூலாதாரம் எது என்பதில் மர்மம் எதுவும் இல்லை. ஈராக் படையெடுப்பிற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்ற மாதங்களில் நிர்வாகம் அத்தகைய தொடர்புகள் நிலவுவதாக இடைவிடாது தண்டோரா போட்டுக் கொண்டேயிருந்தது. இது சம்மந்தமாக AFP-செய்தி நிறுவனம் அப்போது குறிப்பிட்டிருந்ததாவது: ``சதாம் ஹுசேனின் பைத்தியக்காரத்தனத்தின் விரிவாக்க பகுதியாக அல்கொய்தா அமைப்பு செயல்படும் ஆபத்து இருப்பதாக 2002 செப்டம்பர் 25 அன்று புஷ் எச்சரிக்கை விடுத்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஹோண்டலிசா ரைஸ் அதற்கு மேல் சென்று அல்கொய்தாவிற்கும் ஈராக்கிற்கும் தொடர்புகள் நிலவுவது தெளிவாக தெரிவதாக குறிப்பிட்டார். அடுத்தநாள் பாதுகாப்புசெயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் அல்கொய்தா- சதாம் தொடர்புகளுக்கு 'அசைக்க முடியாத ஆதாரம்' இருப்பதாக குறிப்பிட்டார்.``

தற்போது அமெரிக்க நிர்வாகம் ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களை ஆக்கபூர்வமான அபிவிருத்தி என்று சித்தரித்து காட்ட முயன்று வருகின்றது. "அமைதி மற்றும் முன்னேற்றத்தை" நிலை நாட்டுவதற்கான அமெரிக்க ஆதரவிற்கும் "நாகரிகத்திற்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும்" இடையிலான ஒருவகையான இறுதிப் போர் நடைபெற்று வருவதைத்தான் அது பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி வருகின்றது.

ஈராக்கில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்க துருப்புக்கள் மீது நடைபெற்று வருகின்ற தாக்குதல்களுக்கு, அதேபோல பெருமளவில் கார் குண்டு வெடிப்புக்கள் நடைபெற்று வருவதற்கு மூலஆதாரம் தொடர்பாகவும், மிகுந்த கட்டுப்பாட்டோடும் அறிக்கைகளை விடுகிறார்கள். தற்போது ஈராக்கில் இளைஞர்களும், தொழிலாளர்களும், வெளிநாட்டுப் படைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கங்களில் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்பதை பரவலாக அறிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் அல்கொய்தா அல்லது பாத்திச பற்று உறுதியினால் இவ்வாறு எதிர்ப்பு இயக்கங்களில் சேரவில்லை, மாறாக தங்களது நாட்டை வெளிநாட்டு இராணுவ மேலாதிக்கத்திலிருந்து விடுவிப்பதில் உறுதி கொண்டிருக்கின்றதன் காரணமாகவே ஆகும். ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும், பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய மக்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டங்கள், தாக்குதல் நடத்துபவர்கள் அவ்வாறு செய்யக் கூடியதாய் இருப்பது, பொதுமக்களது பரந்த ஆதரவையும் பாதுகாப்பையும் அவர்கள் பெறுவதால்தான் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

சாராம்சத்தில், ஈராக்கில் காலனி ஆதிக்க இரத்தக்களரியான போரை, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு காரணமாகயிருந்தவர்களை பழி தீர்க்கும் ஒரு முயற்சியாக அமெரிக்க பொதுமக்களை நம்புமாறு செய்வதற்காக புஷ் நிர்வாகம் முயன்று வருகின்றது. ஈராக்கை இராணுவம் பிடித்துக் கொண்டதை எதிர்ப்பவர் எவராகயிருந்தாலும் அவரை ``பயங்கரவாதி`` என்று சித்தரிக்க புஷ் ஆரம்பித்ததிலிருந்து கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் ஈராக்கில் தொடக்கி வைக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் மேலும் பல ஈராக்கியர்கள் மாண்டார்கள், இராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு ஈராக் மக்களிடையே ஆதரவு பெருகி வருகின்றது.

ஈராக் தொடர்பாக வெள்ளை மாளிகை அவிழ்த்து விட்டுக்கொண்டுள்ள பொய்கள் மூலம் ஈராக்கில் நடைபெற்றுள்ள எதிர்ப்பு போராட்டத்தின் தீவிரத் தன்மையை புரிந்துகொள்ள முடியும். அமெரிக்காவிற்குள் நிலவுகின்ற உள்நாட்டு நெருக்கடிகளை சமாளிப்பதற்காகத்தான் புஷ் நிர்வாகம் அத்தகைய பொய்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டேயிருக்கின்றது. ஒரு அரசாங்கம் தன் மக்களிடம் பொய்யான தகவல் மற்றும் ஏமாற்று வேலைகள் மூலம் மட்டுமே தனது கொள்கைகளை பாதுகாக்க முடியும் என்றால் அந்த ஆட்சி மிகக் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது என்றாகிறது. மற்றும், இத்தகைய திட்டமிட்ட பொய்களின் அடிப்படையில் அது நிறுவப்படும் மட்டத்தில், ஈராக் மீதான தொடர்ச்சியான தலையீட்டிற்கு எவ்வளவுதான் பொதுமக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறினும் அது மிகக் குறைந்ததாகும்.

மிகவும் அடிப்படை ரீதியாக, அமெரிக்க அரசியல் வாழ்வின் நடைமுறைப் போக்காய் பொய் மேலாதிக்கம் செய்தல் ஆகிவருவது அமெரிக்க ஜனநாயகத்தின் செல்தகைமையையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த நடைமுறையானது, அமெரிக்காவில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் மேலாக ஆதிக்கம் செய்யும் பில்லியனர்கள், மில்லியனர்களைக் கொண்ட சிறு அடுக்கிற்கும் மற்றும் எல்லா வகையிலும் காரணத்துடனும் திட்டமிட்ட நோக்கத்துடனும், அரசியல் அடிப்படையில் வாக்களிக்கும் உரிமையிழந்தவர்களாக ஆக்கப்பட்டு விட்ட பரந்த பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும் இடையே ஆழமான இடைவெளியை உண்டுபண்ணயுள்ளது.

ஈராக்கில், வாஷிங்டன் ஒரு இராணுவ ஆக்கிரமிப்பு நோக்கோடு குற்றவியல் பிரச்சார இயக்கத்தை தொடக்கியதன் நோக்கம் ஈராக்கின் செல்வத்தையும், இயற்கை வளங்களையும், செல்வந்த தட்டினரின் நலனுக்காக கைப்பற்றிக்கொள்வது மற்றும், அமெரிக்காவின் அரசியல் தொடர்புடைய பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு இலாபம் அதிகரிக்கும் வகையில் ஒப்பந்தங்களை வழங்குவது போன்ற இப்படிப்பட்ட கொச்சையான இயக்கத்தை ஜனநாயகத்தை, சுதந்திரத்தை காப்பதற்கான போராட்டம் என்று புஷ் நிர்வாகம் மக்களிடையே கூறி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பெருகி வரும் இராணுவ வரவு-செலவு திட்டத்திற்காக பொதுமக்களது குறைந்து கொண்டுவரும் பற்றாக்குறையில் உள்ள பொதுப்பணத்தை தியாகம் செய்யவும், இளைஞர்களது வாழ்வை பலிகொடுக்கவும் கோரி வருகின்றது.

ஈராக்குடன் தொடர்புபட்ட வகையில் புஷ் நிர்வாகத்தில் காணப்படுவதுபோல, இந்த அளவிற்கு பொய் சொல்ல தயாராகிவிட்ட ஓர் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளவும் தயாராகவேயிருக்கும். செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடைபெற்ற ஏறத்தாழ 2 வருடங்களுக்கு பின்னர் கூட, அன்று நடைபெற்ற சம்பவங்களை இன்னும் அரசாங்கம் இரகசியமாக மூடி மறைத்து வருகின்றது. அன்றைய சம்பவங்கள் குறித்து, மிகக் குறைந்த அளவிற்கான தகவல்களை வெளியிட்டால் கூட, அது "தேசிய பாதுகாப்பிற்கு" குந்தகம் விளைவிக்கும் என கூறிவருகின்றது.

போதிய நிரூபணங்களுடன் பிரிட்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் நாளேட்டில் மிக அண்மையில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில் அமெரிக்க ஊடகத்தினால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஆதாரங்கள் வரிசைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. புஷ் நிர்வாகத்திற்கு பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி தேவையான முன்னெச்சரிக்கைகள் கிடைத்திருந்தும், தனது நீண்டகால போர் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில், அந்தத் தாக்குதலை அமெரிக்கா வரவேற்றதாக, பிரிட்டனின் முன்னாள் கேபினட் அமைச்சர் மைக்கல் மீச்சரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மீச்சர் எழுப்பியுள்ள சந்தேகங்கள் குறித்து, முழுமையாக விசாரிக்கப்பட்டாக வேண்டும். புஷ் நிர்வாகத்திற்கு உள்ளே இருக்கும் சக்திகளே, அமெரிக்க புலனாய்வு மற்றும் இராணுவ தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி விட்டார்களா மற்றும் போருக்கான சாக்குப்போக்கு கிடைப்பதற்காக பயங்கரவாத நடவடிக்கையை அனுமதித்தார்களா என்பதையும் முழு அளவில் கட்டாயம் விசாரிக்க வேண்டும்.

ஈராக்கிய மற்றும், அமெரிக்க மக்களுக்கு பேரழிவை மட்டுமே உருவாக்க கூடிய கொள்கையை வளர்ப்பதற்காக, செப்டம்பர் 11 நிகழ்ச்சிகள் தொடர்பாக, தொடர்ந்து புஷ் நிர்வாகம் பொய்களைக் கூறிக் கொண்டே வருவதால், அத்தகைய முழு விசாரணை மேலும் அவசியமாகி விட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved