World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Egypt antiwar protesters face sedition trial

எகிப்தில் ஈராக் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரச துரோக வழக்கு

By Bill Vann
29 August 2003

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் மீது அமெரிக்கா சென்ற மார்ச் மாதம் படையெடுப்பு நடத்திய நேரத்தில் எகிப்தில் நடைபெற்ற மிகப்பெரும் போர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்ட ஐந்து தொண்டர்கள் மீது இந்த மாதம் தொடக்கத்தில் எகிப்தின் ஹோஸ்னி முபாரக் ஆட்சி அரச துரோக வழக்கைத் தொடுத்திருக்கிறது. நாட்டின் அவசரகால பாதுகாப்பு நீதிமன்றத்தில், அஸ்ராப் இப்ராஹீம், நசீர் பாரூக் அல் பிகிரி, யஹ்யா பிக்கரி அமீன் சஹ்ரா, முஸ்தபா முஹ்மது அல் பசியுனி மற்றும் ரேமன் எட்வர்ட் கிண்டி மோர்கன் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

முப்பதைந்து வயதான பொறியாளர் அஸ்ராப் இப்ராஹீம் சென்ற ஏப்ரல் மாதம் அரசு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் 111 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். கடந்த கடைசி 10 நாட்களில் அவர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். மற்றும் 4 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் சரணடைந்து நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுவதா என்பது குறித்து வழக்கறிஞர்களை கலந்து ஆலோசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

எகிப்தின் "இன்றைய ஆட்சியை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டு இரகசிய கம்யூனிச அமைப்பை உருவாக்குவதற்கு சதி ஆலோசனை செய்தார்கள்" என்று ஐவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த இரகசிய அமைப்பிற்கான தலைவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இப்ராஹீம், தன் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுடன் பேசியதன் மூலம், "எகிப்து நாட்டின் கவுரவத்தையும் அந்தஸ்தையும் சீர்குலைத்ததாக" மேலும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். "சமுதாய அமைதிக்கு அல்லது தேசிய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும்" வகையில் செயல்படுபவர்களை தடுத்து நிறுத்துவதற்கான எகிப்தின் சட்டப் பிரிவுப் படி இவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கின்றது.

அன்றைய ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1981 முதல் எகிப்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மிகக் கடுமையான அவசர நிலைச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். நாட்டின் பாதுகாப்பு நீதிபதிகளை ஜனாதிபதி நியமிக்கிறார் மற்றும் அவர்களில் இராணுவ அதிகாரிகளும் இருக்கலாம். இந்த நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்யமுடியாது. எகிப்தில் பணியாற்றி வருகின்ற மனித உரிமைக் குழுக்கள் அரசாங்கம் இந்த நீதிமன்றங்களை அடிக்கடி பயன்படுத்தி வருவதையும், அரசியலில் எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றிய வழக்குகளை மட்டுமே விசாரிப்பதற்காக இந்த நீதிமன்றங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பத்திரிகைச் செய்திகளின்படி, எகிப்து அரசாங்க வழக்கறிஞர்கள், இப்ராஹீமிடமும் அவரது வழக்கறிஞர்களிடமும் சில தகவல்களை கூறியுள்ளனர். அரசு பாதுகாப்பு புலனாய்வுக் கழக உறுப்பினர்களும் எகிப்தின் அரசியல் போலீஸ் குழுவினர் இப்ராஹீம் வீட்டில் திடீர் சோதனை நடத்தி, அவரது கம்ப்பியூட்டரை பறிமுதல் செய்தபின்னர் அவர் கடும் விசாரணைக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறினர். அவர் தனது கம்ப்பியூட்டர் மூலம் சோசலிச இயக்க வெளியீடுகளை பெற்றதையும் அல் ஜெசீரா வலைத் தளத்திலிருந்து தகவல்களைப் படி இறக்கம் செய்திருந்ததையும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து வெளியீடுகளைப் பெற்றதையும் அவர்கள் கண்டு பிடித்தனர். மார்ச் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில் கெய்ரோ நகரத்து வீதிகளில் லட்சக்கணக்கான மக்கள் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைப் படம் பிடிக்க பயன்படுத்தப்பட்ட வீடியோ காமிராவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

முபாரக் ஆட்சி அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மக்களது வெறுப்பு உணர்வை எகிப்து ஆட்சி ஆட்சியாளர்களுக்கு எதிராக திருப்பி விடக்கூடும் என்று அஞ்சி எகிப்து ஆட்சியாளர்கள் போர் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, தண்ணீரைப் பீச்சி அடித்து, நாய்களை ஏவிவிட்டு மற்றும் தடியடி பிரயோகம் செய்து கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். அதற்குப்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 800 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் அவர்களில் பலர் சிறையில் தடியடிக்கு ஆளாயினர் மற்றும் சித்ரவதைக்கும் ஆளாயினர்.

இப்ராஹீம் வன்முறை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டார், அல்லது அவற்றில் சம்பந்தப்பட்டிருந்தார். என்பதற்கு எகிப்து அதிகாரிகள் எந்தவிதமான ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. அதற்கு மாறாக அவர்கள்,அவரது கணினியில் மார்க்ஸ், லெனின் மற்றும் ட்ரொஸ்கியின் எழுத்துக்கள் அடங்கிய போல்டர்களைக் கண்டதாக வெளிப்படுத்தி இருந்தனர். அவரது வீட்டில் பிரிட்டனின் செய்தி இதழான எக்காணமிஸ்ட் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையையும் கைப்பற்றினர். அந்தக் கட்டுரை எகிப்து ஆட்சியின் உயர் மட்டத்தில் நிலவுகின்ற ஊழல் சம்பந்தப்பட்டது. அந்தக் கட்டுரை அடங்கிய எக்காணமிஸ்ட் வார இதழுக்கு ''முபாரக்'' ஆட்சி தடை விதித்திருந்தது.

பாலஸ்தீன மக்களுடனான ஐக்கியம் மற்றும் போருக்கு எதிரான எகிப்திய குழு என்று அமைக்கப்படுவதில் இப்ராஹீம் தீவிரமாக பணியாற்றி வந்தார். போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் அவர் பங்களிப்பும் இருந்தது.

குற்றச்சாட்டுக்கள் எதுவிமின்றி அவரை நீண்டகாலம் சிறையில் அடைத்து வைத்திருந்ததன் நோக்கம் மார்ச் மாதம் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்ட மற்றவர்களது விபரங்களை பலரறிய வெளியிடுமாறு அவரை நிர்பந்திக்கும் நோக்கத்தில்தான். இப்ராஹீம் மனைவி வார்தா எகிப்தின் பிரபல பத்திரிகையான ''ÜTM அக்ரம்'' நிருபருக்கு பேட்டியளித்தார். ''பாதுகாப்பு அதிகாரிகள் எனது கணவரை திரும்பத் திரும்ப விசாரணைக்கு அழைத்தனர். 20 முதல், 30 இதர இயக்கத்தினருக்கு எதிராக சாட்சியம் அளிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டனர். "அவர் பேசுவதற்கு மறுத்துவிட்டார். எனவேதான் அவர் இன்னமும் சிறையிலிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்'' என்று அவர் தெரிவித்தார்.

ஜூலை 21ந் தேதியன்று இப்ராஹீம் சிறையிலிருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்று கடத்தி வரப்பட்டது. அந்தக் கடிதத்தில் அவர் தான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதை அறிவித்தார். ''சிந்தனை மற்றும் பேச்சு சுதந்திரத்தை காப்பதற்காக நான் சாவதற்கும் தயாராக இருக்கிறேன். மற்றும் எனது மகளுக்கு அடிப்படை மனித உரிமைகளுள் ஒன்று கிடைத்தாக வேண்டும். அதைக் காப்பதற்காகவும் நான் பாடுபடுகிறேன். நிலையான குடும்ப வாழ்விற்கு அவளுக்கு அடிப்படை உரிமை உண்டு. தனது தந்தையை பார்ப்பதற்கு அவளுக்கு உரிமை உண்டு. கடந்த 100 நாட்களாக தனது தந்தை 'வெளிநாடு' சென்றிருக்கிறார் என்று அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள்.'' இவ்வாறு இப்ராஹீம் தனது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியதற்குப் பதில் கொடுக்கம் விதமாக எகிப்திய நிர்வாகிகள் அவரை தண்டிக்கும் வகையில், காற்றோட்டம் இல்லாத புழு பூச்சிகள் நிறைந்த அறையில் அடைத்து வைத்தனர். நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதும் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். ஆனால் அவரது உடல் நிலை குறித்து மனித உரிமைக்குழுக்கள் கவலை தெரிவித்து வருகின்றன.

கடந்த 20 ஆண்டுகளில் எகிப்து அரசாங்கம் கம்யூனிச அரச துரோகம் என்று முதல் தடவையாக இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஏனென்றால் சென்ற மார்ச் மாதம் நடைபெற்ற போர் எதிர்ப்பு கண்டனப் பேரணியின் அளவையும் வேகத்தையும், கண்டு முபாரக் ஆட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. வழக்கமாக இஸ்லாமிய குழுக்கள் தான் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை நடத்தும். 1990களில் நடைபெற்ற அவர்களின் கண்டப் பேரணிகளை எகிப்து ஆட்சி கொடூரமான ஒடுக்கு முறைகள் மூலம் அடக்கியது. தற்போது ஆட்சிக்கு எதிராக இடதுசாரி சக்திகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் ஆட்சியாளர்கள் கவலை அடைந்திருக்கின்றனர்.

இப்ராஹீம் மற்றும் நாலுபேர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருப்பதற்கு எகிப்திலேயே கடுமையான காரசாரமான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. 21 எகிப்து அரசியல் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் இது அரசியல் ரீதியில் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் "எகிப்தில் அரசியல் தொண்டர்களை அச்சுறுத்தும் முயற்சி என்றும், குறிப்பாக ஈராக்கில் அமெரிக்காவின் போர் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பானவர்களை பழிவாங்கும் செயல்" என்றும் கண்டனம் செய்திருக்கின்றன.

"இந்த அதிகரிப்பு எகிப்தில் சாதாரண அரசியல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முட்டுக்கட்டை இடும் முயற்சிகளின் ஒரு பகுதி மற்றும் அரசியல், மனித உரிமை இயக்க தொண்டர்களை அச்சுறுத்துவதில் அவசரச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வரும் அரசாங்கத்தின் நோக்கத்தையும் விளக்கிக் காட்டுகிறது" என அறிக்கை கூறுகிறது.

300க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டு ஓர் மனுவை அரசு வழக்கறிஞருக்கு கொடுத்தனர். அதில் தாங்களையும் அதே காரணத்திற்காக கைது செய்யுமாறு கோரியிருந்ததாக அல் அகரம் தெரிவித்தது. ஆகஸ்ட் 2-ந்தேதி கெய்ரோவில் உள்ள பிராசிகியூட்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெளியில் மனித உரிமைக்குழுக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் குற்றச்சாட்டுக்களை ரத்து செய்துவிட்டு அஸ்ரப் இப்ராஹீமை (Ashraf Ibrahim) உடனடியாக விடுதலை செய்யக்கோரி எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு பின்வரும் முகவரியில் தந்தி கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது: webmaster@presidency.gov.eg.

Top of page