World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

British army admits brutalising Iraqi civilians

ஈராக்கிய மக்களை மிருகத்தனமாகத் தாக்கியதாக பிரிட்டன் இராணுவம் ஒப்புக்கொள்கிறது

By Julie Hyland
5 September 2003

Use this version to print | Send this link by email | Email the author

பாஸ்ரா நகரத்திலிருந்து 120 மைல் தொலைவிலுள்ள மஜர் அல் கபீர் என்ற நகரிலிருந்த சாதாரண அப்பாவி மக்களை மிருகத்தனமாகத் தாக்கியதற்காகப் பிரிட்டன் இராணுவம் மன்னிப்புக் கேட்டு ஒரு பொது அறிக்கையை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 23 ம் தேதி Daily Mirror செய்தியிதழின்படி, 22 வது சிறப்பு விமானப்படையைச் சேர்ந்த (SAS) சிப்பாய்கள், இந்த நகரில் ஜூன் 25 ம் தேதி 6 பிரிட்டிஷ் இராணுவப் போலீசாரைக் கொன்றதில் தொடர்புடையவர்கள் என்ற தவறான ஊகத்தினால், 11 ஈராக்கியர்களை தடியால் அடித்தும், காலால் மிதித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

எதிர்ப்புக்களையும், புரட்சிக்கு எதிரான தாக்குதல்களையும் சமாளிக்கப் பயிற்சி பெற்றுள்ள இந்த உயர்மட்டப் படையானது, இந்த நகரில் மூன்று வீடுகளின் கதவையுடைத்து பூட்ஸ் கால்களாலும், துப்பாக்கிப் பிடியினாலும் வீட்டிலிருந்தோரை நையப்புடைத்தனர். இத் தாக்குதலில் காயமுற்றோரில் ஒரு பெண்மணியும் அடங்குவார்.

ஒரு வீட்டில் 9 ஆண்கள் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த வீட்டுச் சொந்தக்காரர் கைது செய்யப்பட்டார். மோயர்ட் ஜாப்பர் என்ற இறைச்சிக் கடைக்காரர் செய்தியிதழிற்குக் கூறியபோது ''இரவு 11 மணியளவு இருக்கும். திடீரென வெடிச்சத்தம் கேட்டது. கதவை உடைத்துத்கொண்டு திறந்தார்கள்'' என்றார்.

ஏராளமான சிப்பாய்கள் துப்பாக்கி முனையைக் காட்டி எங்களை நோக்கி ''கீழே படுங்கள், படுங்கள்'' என்று கூச்சலிட்ட வண்ணம் உள்ளே நுழைந்தனர். எங்களைத் தரையில் படுக்கவைத்தபின், பேசவும் விடவில்லை. எமக்கு என்ன நடக்கிறது என்பது புரியவுமில்லை. ஆகையால் நான் பெரிதும் பயந்துபோனேன்.''

''என்னுடைய பீரோக் கதவுகளை இழுத்துத் திறந்து என்னுடைய உடைமைகளையெல்லாம் தரையில் வீசி எறிந்தனர். பெண்களும், குழந்தைகளும் நடுங்கி அழ ஆரம்பித்தனர். பின்னர் அந்த சிப்பாய்கள் எங்களை இழுத்துச்சென்று கவச வண்டியில் தள்ளினர். இராணுவ முகாம் செல்லும் வரை எங்கள் தலையில் பூட்ஸ் கால்களால் மிதித்த வண்ணம் இருந்தனர்'' என்று மேலும் அவர் தெரிவித்தார்.

பாசிம் ஹாசன் என்ற வேறு ஒரு ஆடு வெட்டுபவர், கண்கள் கருவளையமிடும் அளவிற்கும், முகத்தில் காயங்கள் ஏற்படும் வரையிலும் உதைக்கப்பட்டார். ''நான் கீழே படுத்துக்கிடந்த பொழுது சிப்பாய்களில் ஒருவர் எனது தலையை மிதித்தார். என்னுடைய முகம் வேகமாகத் தரையில் பட்ட அளவில் நான் நினைவிழந்துவிட்டேன்'' என்று Mirror செய்தியாளர் ரொம் நியூட்டனுக்கு கூறினார்.

''அவர்களின் இத்தாக்குதலுக்கு நாங்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா என்று ஒரு சிப்பாயை நான் கேட்டேன். அவர் பதிலுக்கு என் முகத்தில் அறைந்து கண்ணத்தில் கருவளையத்தையும், மூக்கில் இரத்தம் வருமாறும் செய்தார்'' என்று அப்துல் அமீர் என்ற வேதியல் ஆசிரியர் விவரித்தார்.

காய்கறி விற்பவரான ஷோபன் ஜேசெம் என்பருக்கும் அவருடைய வீடு சோதனைக்குட்பட்ட அனுபவம் ஏற்பட்டது. இவருடைய மனைவியின் சகோதரி இராணுவத்தினர்களைப் பார்த்து தம் குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சிய போது, துப்பாக்கிப் பிடியால் பதிலுக்கு முகத்தில் அடி வாங்கியுள்ளார்.

''நான் தரையில் கிடந்தபோது ஒரு சிப்பாய் என்னை கடுமையாக மூக்கில் உதைத்தார். அதனால் எனக்கு ஏராளமான இரத்தம் கொட்டியது'' என்று 62 வயதான ஜேசெம் என்பவர் கூறினர்.

''அதன்பின் இராணுவத்தினர், வெளியே நிறுத்தியிருந்த கவச வண்டியில் ஏற்றுவதற்காக வீதியில் இழுத்துவந்து அதற்குள் தள்ளினர். இதனால் முழங்காளில் எனக்குப் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. என்னை எங்கு அழைத்துக்கொண்டு போகிறார்கள் என்று தெரியாத நிலையில், நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன். `ஏன்`, `ஏன்` என்ற அவர்களைக் கேட்டதற்கு, வாயை மூடு'' என்று என்னை அடக்கிவிட்டனர் என்றார்.

11 பேரும் கைவிலங்கிடப்பட்டு King's Own Scottish Borders Regiment உடைய தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீண்டும் பழையபடி அங்கே அவர்களுக்கு அடியும் உதையும் கிடைத்தது. 18 மணி நேரம் கழித்து, புகைப்படங்களிலிருந்தும் பெயர் பட்டியலிலிருந்தும் தவறாக இவர்கள் பிடித்து வரப்பட்டுள்ளனர் என்று தெரிந்தபின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

லண்டனில் உள்ள பாதுகாப்பு மந்திரி அலுவலகம் (Ministry of Defence MoD) இந்த SAS ன் காட்டுமிராண்டித்தனம் பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாதென்று கூறிவிட்டனர். அத்தோடு, சாதாரண குடிமக்கள் இது போல் நடத்தப்பட்டதாகத் தங்களுக்குத் தகவலில்லை என்று அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்கும் ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் இதற்கு ஒரு நாளைக்குப் பிறகு குற்றமற்ற ஒவ்வொருவருக்கும் சில நூறு பவுன்கள் இழப்பீடு தருவதாக MoD ஒப்புக்கொண்டது.

எவ்வாறாயினும், பாதுகாப்பு மந்திரி அலுவலகம் இழப்பீடு தருவதையிட்டு, தான் குற்றத்தை செய்ததாக ஏற்றுக்கொள்ளாது. SAS சிப்பாய்கள் மக்களை தவறாக விசாரித்தனர் என்று அதன் பேச்சாளர் கூறினார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ''குறைந்தளவு காயங்கள் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளது.'' ஆனால் இப்படியான விசாரணைகளில் இத்தன்மை இயற்கையானது என்றும், மேலும் இது பற்றிய விசாரணை எதுவும் இனி இருக்காதென்றும் அவர் தெரிவித்தார்.

மஜர் அல் கபீரில் படையினர் இதற்கு முன் இல்லாத அளவு தமது நடத்தைக்காக மன்னிப்புத் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டதானது, பொதுமக்களின் கடுஞ்சீற்றம் அந்த அளவிற்கு அங்கு இருந்ததினாலாகும்.

பிரிட்டிஷ் இராணுவத்தினர் ஆபத்திற்குட்பட்டுள்ளனர் என்று இந்த நகரின் மக்கள் Mirror இடம் எச்சரித்தனர். ''அவர்களுடைய செயலால் மக்கள் கோபம் கொண்டுள்ளனர் எனப் பிரிட்டிஷாரிடம் கூறியுள்ளேன். எவரையாவது கைது செய்ய அவர்கள் இனி இங்கு வந்தால், அவர்கள் கொல்லப்படுவார்கள்'' என்று நகரக் கவுன்சில் தலைவரான சடேக் அல்ஹுல் எச்சரித்தார். ''என்னுடைய தந்தையும், சகோதாரரும் சதாம் ஹுசைனை எதிர்த்ததால் தூக்கிலிடப்பட்டனர். நாங்கள் பிரிட்டிஷாரை வரவேற்றோம். ஆதலால், இப்பொழுது இதைத்தான் அவர்கள் எங்களுக்குச் செய்துள்ளனர்'' என்று பஸிம் ஹசன் குறை கூறினார்.

''சதாம் ஹுசேனுடைய ஆட்கள் நடந்துகொள்வது போல்தான், இவர்களும் எங்களை நடத்தியுள்ளனர். ஒரு மிகப்பெரியத் தவற்றினை அவர்கள் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் சதாம் ஹுசேனை எதிர்த்துப் போராடியதுபோல் இவர்களோடு சண்டையிட விரும்பவில்லை'' என்று தெரிவித்தார்.

பாஸ்ராபோல், மஜர் அல் கபிரூம் ஷியா முஸ்லிம்களின் நகராகும். அத்துடன் சதாம் ஹுசைனுக்கு எதிர்ப்பு நிறைந்திருந்த மையங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் பெருகி வரும் பிரிட்டிஷ் படையின் திமிர்த்தனத்தினாலும், மிருகத்தன முறையினாலும், கடந்த சில மாதங்களாக இவர்கள் மேற்கொள்ளும் ஆயுத சோதனை என்ற பெயரில் வீடுகளைச் சோதனையிடுவதும் குடியேற்றமுறையின் தன்மையை நன்கு தெளிவாக்கியுள்ளன. இதனால் மக்களின் விரோதப்போக்கு பெரிதும் இங்கு வளர்ந்துள்ளது.

ஒரு சோதனை நடவடிக்கையின்போது ஆறு பிரிட்டிஷ் சிப்பாய்கள் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டதானது, இன்று வரை அதிகமான பிரிட்டிஷ் உயிரிழப்பைக் காட்டுகின்றது.

அதேபோன்ற பதிலடி நடவடிக்கை வந்துவிடுமோ என்ற பயத்தில், பிரிட்டிஷ் படையின் மேஜர் ஸ்டூவர்ட் இர்வின் தன்னுடைய ''ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தலை'' பொதுக்கடிதம் ஒன்றின் மூலம் வெளியிட்டு, இதைப் பற்றிய முழு விசாரணை நடத்தப்பெறும் என்றும் காயங்களுக்கும், தவறான கைதுக்கும் இழப்பீடு தரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

''பதினொரு நகரவாசிகள் கைது செய்யப்பட்டு மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே காரணமின்றிக் கைது செய்யப்பட்டனர். இந்நிழ்ச்சியானது, எங்கள் சிப்பாய்கள் ஆறு பேரைக் கொன்றவர்களை நீதிக்குமுன் நிறுத்த நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கும்போது நேர்ந்துவிட்டது'' என்றும் இந்தக் கடிதம் ஒப்புக்கொள்கிறது.

''இந்த நடவடிக்கை கூட்டணிப்படையின் ஒரு சிறு பிரிவால் நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் அபு நஜிர் முகாமை சேர்ந்தவர்களோ அல்லது மஜரில் உள்ள படைகளைச் சேர்ந்த சிப்பாய்களோ அல்லர்'' என்று இந்தச் சோதனையை நடத்திய SAS பிரிவிற்கும் மஜரில் உள்ள படைகளுக்கும் தொடர்பில்லை என்று காட்டும் முயற்சியையும் இக்கடிதம் மேற்கொண்டது.

பிரிட்டிஷ் படைத்தலைவர் கேர்னல் டிம் கொலின்ஸ், ஈராக்கில் போர்க்குற்றங்கள் பற்றிய உள் விசாரணையொன்றில் எக்குற்றத்தையும் செய்யவில்லை என்று அறிக்கை வெளியிட்ட மறுநாள் மஜர் நகர நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வந்தன.

போருக்கு முன்னால் தன்னுடைய பிரிவிற்கு கொலின்ஸ் ஆற்றிய உரையைக் கொண்டு, பிரிட்டிஷ் செய்தி ஊடகம் அவரைப் பெரும் புகழிற்குக் கொண்டு சென்றது. ''நாம் அவர்களை விடுவிக்கப் போகிறோம். பிராந்தியங்களைக் கைப்பற்ற அல்ல. போரில் ஆக்கிரோஷமாக இருந்தால், வெற்றியில் பெருந்தன்மையுடன் இருக்கவேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்'' என்று அவர் கூறியிருந்தார்.

ஈராக் மக்களையும், போர்க் கைதிகளையும் இந்தக் கேர்னல் முறைகேடாக நடத்துவதாக ஒரு அமெரிக்க சிப்பாயால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். ஆனால் MoD எந்தக் குற்ற நடவடிக்கையோ, ஒழுங்கு நடவடிக்கையோ இவர் மீது எடுக்கப்படமாட்டாது எனக் கூறியுள்ளது. இவருக்கு இப்பொழுது பதவி உயர்வு வரலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த கேர்னல் மீது குற்றமில்லை என்று கூறப்பட்டுவிட்டதால், அவர் மீதான விசாரணை செய்தி ஏடுகளில் பிரபலமாகியது. அத்துடன், மக்களைக் கொடுமைப்படுத்தல் வேறு கணக்கிலடங்கா குற்றச்சாட்டுக்கள் என்பன பிரிட்டிஷ் படைகள் மீது உள்ளன. படையினரே எடுத்த சில புகைப்படங்கள், அவர்கள் எவ்வாறு பிடிபட்டவர்களைச் சித்திரவதைப்படுத்தினர் எனத் தெரிவிக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் அறிவிக்கப்படுவதில்லை. அவற்றைப் பற்றியும், விசாரணைகளைப் பற்றியும் அதிக விவரங்களும் வெளிவருவதில்லை.

Top of page