World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The diplomacy of imperialism: Iraq and US foreign policy

Part nine: American policy after the Iran-Iraq war

ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

ஒன்பதாம் பகுதி: ஈரான்-ஈராக் போருக்குப்பின் அமெரிக்க கொள்கை

By Joseph Kay and Alex Lefebvre
2 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் வரலாறு, அதன் அமெரிக்காவுடனான உறவு பற்றிய தொடர் கட்டுரைகளில் இது ஒன்பதாவதும் கடைசியும் ஆகும். முந்தைய பகுதிகள், மார்ச் 12, 13, 16, 17, 19, 24, 26, 29 தேதிகளில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்டன. அமெரிக்க கொள்கை வகுப்போரிடையே, ஈரான் ஈராக் போருக்குப்பின் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் பற்றியும், குவைத்தை ஈராக் தாக்கிய பின்னர் அதன்மீது படையெடுப்பதற்கான முடிவு பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது. வேறுவிதமாக குறிப்பிடப்படவில்லை எனின், அனைத்து மேற்கோள்களும், தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் http://www.gwu.edu/~nsarchiv அல்லது http://nsarchive.chadwyck.com. இவற்றில், காணக்கூடிய இரகசிய பாதுகாப்பு நீக்கப்பட்டவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை என்று கொள்ளவேண்டும்.

ஈரான்-ஈராக் போரின் முடிவில் அமெரிக்காவின் கொள்கை

ஈரான்-ஈராக் போர் முடிவிற்கு வந்த நிலையில், அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டிற்கும் றீகன் நிர்வாகத்திற்குமிடையே ஈராக் பற்றிய அமெரிக்க கொள்கையை பற்றி கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அரசு துறையின் மிக முக்கியமானவர்களின் கருத்தை பிரதிபலித்த ஒரு பிரிவு, ஈராக்குடனும், சதாம் ஹுசைனுடனும் உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் தொடரவேண்டும் என விரும்பியது; பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பென்டகனில் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களையும் கொண்டிருந்த மற்றொரு பிரிவு அந்நாட்டுடன் ஒரு மோதலை விரும்பியது.

1988இலும், 1989இலும், அரசு துறை தயாரித்திருந்த பல ஆவணங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பலவற்றை வெளிப்படுத்தும் தன்மையைப் பெற்றுள்ளன. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்து விவாதங்களும், முடிவுகளும் இரக்கமற்ற முறையில், ஏகாதிபத்திய அரசியலுக்குத்தான், பொதுவாக ஒழுக்கநெறிப்படி கூறப்படும் சொற்களான "ஜனநாயகம்", "அமைதி", "மனித உரிமைகள்" போன்றவற்றிற்கு எதிராக கொள்ளப்பட்டன என்பதைப் புலப்படுத்துவதுடன், பிந்தைய முறையில் மக்களடையே அரசாங்க அதிகாரிகளாலும், செய்தி ஊடகங்களாலும் பொதுமக்களின் சிந்தைனைக்கு போலித்தனமானவை உலவவிடப்பட்டன.

கிழக்கத்தைய, தெற்கு ஆசிய விவகார துணைச்செயலர் றிச்சார்ட் மர்பி (Richard Murphy) எழுதிய செப்டம்பர் 19, 1988 குறிப்பு ஒன்று, இராசயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்காக ஈராக்மீது பொருளாதார தடைகள் சுமத்துவதை எதிர்க்கிறது. "அமெரிக்க-ஈராக் உறவு நம்முடைய நீண்டகால வளைகுடா, அதற்கப்பால் கொண்டுள்ள அரசியல், பொருளாதார புறநிலைகளின்படி, முக்கியத்துவம் வாய்ந்தது. ஈராக் போருக்குப் பின் ஒரு பெரிய பொருளாதார, இராணுவ சக்தியாக வெளிப்பட்டுள்ளது. அதன் எண்ணெய் இருப்புக்கள், சவுதி அரேபியாவிற்கு அடுத்தாற்போல் மிக அதிகமானவை. இங்கு தன் மக்களாலும் மற்றவர்களாலும், பயத்திற்கும் மரியாதைக்கும் உட்பட்ட ஒரு சர்வாதிகாரியின் தலைமையின்கீழ் கட்டுப்பாட்டுடன், உறுதியான நோக்கத்துடன், இரக்கமற்ற ஆட்சியாக அமைந்துள்ளது" என்றும் அது குறிப்பிடுகிறது.

இங்கு ஹுசைனின் இரக்கமற்ற தன்மை அமெரிக்க-ஈராக்கிய உறவுகளை வளர்ப்பதற்குச் சாதகமான வாதம் என்று மர்பி வலியுறுத்துகிறார். முந்தைய தசாப்தங்களில் ஈராக்கின் வெளியுறவுக் கொள்கை, அமெரிக்க நலன்களுக்கு கீழ்படிந்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஈராக் கூடுதலான முறையில் இஸ்ரேலுடன் ஒத்துப்போவதும் "முன்னேற்றமான நடத்தைக்கு" முக்கியமான உதாரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இராசயன ஆயுதங்கள் பற்றிய அமெரிக்க அறிக்கைகள் ''ஈராக்கைத் தாக்கிக் கூறுவதைத்'' தவிர்க்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

1989 ஜனவரியில் எழுதப்பட்ட மற்றொரு ஆவணம், "அமெரிக்க-ஈராக் கொள்கைக்கான வழிகாட்டிகள்" என்ற தலைப்பில் பதவி ஏற்க இருக்கின்ற ஜோர்ஜ் H.W.புஷ் நிர்வாகத்திற்காக எழுதப்பட்டது. இது ஹுசைனின் வலதுசாரித் திருப்பத்தினால், வாஷிங்டனுக்கு நிகழக்கூடிய நன்மைகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. "ஈராக், அதன் ஈரானுடனான போருக்குப்பின், ஒரு பெரிய இராணுவ, அரசியல் சக்தியாக வெளிப்பட்டு வந்துள்ளது, இன்னும் உயர்ந்து செல்லும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. சதாம் ஹுசைன், இப்பகுதி அரசியல், இராணுவ விவகாரங்களில், பழமைவாதம் நிரம்பிய வளைந்துகொடுக்கக் கூடிய நாடுகளின் கூட்டான எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, குவைத் ஆகியவற்றின் மத்தியில் ஒரு பெரிய பங்கைக் கொள்ளும் தகுதியைக் கொண்டுள்ளார். இந்த நாடுகளிடையே, ஈராக் கொண்டுள்ள நன்மதிப்பும், அதன் பெரும் எண்ணெய் வளமும், அமெரிக்கப் பொருட்களுக்கு பெரும் இலாபம் தரும் சந்தையைக் கொடுப்பதுடன், ஒரு அசைந்துகொடுக்கும், பகுதி சோவியத் வாடிக்கையாளர் என்ற அதன் நிலையும் நம் இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவுகளுக்கு முக்கியத்துவத்தை கொடுத்து வாய்ப்புக்களுக்கான வகையையும் அளித்துள்ளது''.

பெருநிறுவன ஸ்தாபனங்களின் முக்கியத்துவம்வாய்ந்த பிரிவு ஒன்று, அமெரிக்கப் பொருட்களுக்கு, நல்ல இலாபம் தரும் சந்தையாக ஈராக்கை நோக்கியது. அரசுத் துறை 1988 நவம்பர் 18, ஆவணம் ஒன்று சதாம் ஹுசைன் பால் கடின நிலையை மேற்கொண்டால், "அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள், ஈராக்கில் மறுசீரமைப்பு செழுமைநிலை எதிர்பார்த்து தொடங்கும்போது பெரிய ஒப்பந்தங்களில் இருந்து விலக்கப்படும்.'' அந்த நன்மைகள் ஐரோப்பாவிலும், மற்ற இடங்களிலும் இருக்கும் போட்டியாளர்கள் ஆதாயத்திற்குப் போய்விடும்." என்று கூறியுள்ளது. விவசாயத்துறையும், பொருளாதாரத்தடைகளின் விளைவுகளை பற்றிக் குறிப்பாக கவலை தெரிவித்துள்ளது. ஏனெனில் அமெரிக்க தானியங்களை பெருமளவு இறக்குமதி செய்யும் நாடாக ஈராக் உள்ளது, ஆனால் தற்பொழுது, அமெரிக்கா விவசாயத்துறையின் பண்ட கடன் கழகத்தின் (Commodity Credit Corporation-CCC) உதவித்தொகை திட்டத்தை ஈராக்கிற்கு நிறுத்திவிட்டதால், அது, ஐரோப்பா, ஆசியாவில் விவசாய பொருட்களுக்காக எதிர்பார்த்து நிற்கிறது.

இவ்வாறு, கிட்டத்தட்ட தசாப்தங்களாக போருக்குப்பின்னரும்கூட ஈராக், அமெரிக்காவால், பிராந்திய பொருளாதார, இராணுவ சக்தியுடைய திறன் கொண்டதாகக் கருதப்பட்டது. தன்னுடைய இராணுவச்செலவை அதேநிலையில் தொடர்ந்து கொண்டிருந்து, போரின்போது அமெரிக்கா, அதன் கூட்டுநாடுகளிடமிருந்து அதிக கடன் வாங்கி பொருளாதார நெருக்கடியை சமாளிந்திருந்தது. றீகன் நிர்வாகத்தின் சில பிரிவுகள், மற்றும் புதிதாக வந்திருந்த புஷ் நிர்வாகம், ஹுசைன் ஆட்சியின் பெருகிய வலதுசாரிப் போக்கை, அப்பகுதியில் அமெரிக்க நலன்களுக்கு ஈராக் நல்ல முறையில் செயலாற்றும் என்ற கருத்தின் அடையாளமாக கொண்டிருந்தன.

அதே நேரத்தில், ஒரு புதிய 1989 ஜனவரி மாத "வழிகாட்டிக் குறிப்புக்கள்" அமெரிக்க-ஈராக்கிய உறவுகளில், "அமெரிக்காவில் பெரும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள" ஈராக்கின் இராசயன ஆயுதப்பயன்பாடு உட்பட சில மிகமோசமான காரணிகளை மேற்கோளிட்டுள்ளது. அது மேலும் கூறியது: "ஈராக்கின் புதிய இராணுவ திறன்களும் அபிலாசைகளும், 1970களில் அதன் தீவிரமான, அனைத்தையும் ஒதுக்கித்தள்ளும், பயங்கரவாத "சட்ட பாதுகாப்பை இழந்த" அரசு என்ற பெயரும், இஸ்ரேலுக்கு ஆபத்தை கொடுக்கும் தன்மையையும், அமெரிக்காவிலேயே பலருக்கும் கவலையை கொடுக்கும் தன்மையையும் கொண்டுள்ளது."

ஈராக்கின் விஷவாயு பயன்படுத்தியதையும், மனித உரிமைகள் நிலைச்சான்றில் அதன் மோசமான பின்னணியையும் பற்றிக் கவலைப்பட்ட அரசுத்துறை, இக்காரணிகள் "அமெரிக்க-ஈராக் உறவுகளை முறிப்பதற்கு போதுமானவையாக உள்ளன" என்று தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில் பின்னர் மனித உரிமைகளுக்கான அக்கறைக்கும் திரும்புகிறது; "மனித உரிமைகள் ஈராக்குடன் உறவுகளை முற்றிலும் துண்டிக்க அல்லது பெரிதும் குறைக்க விரும்புவோருக்கு அதை நியாயப்படுத்தும் களத்தைக் கொடுத்துள்ளது."

இறுதியாக, அரசு துறை, ஈராக்கிய நாட்டின் சர்வாதிகாரத்தன்மையோ அல்லது இப்பகுதியில் மற்ற அமெரிக்க நட்புநாடுகளின் நலன்களோ அமெரிக்க-ஈராக்கிய உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் குறுக்கிட அனுமதிக்கப்படக்கூடாது என்ற முடிவைக் கூறுகிறது. "தனக்கு ஆபத்து என கருதுபவர்களை சதாம் ஹுசைன் அகற்றிவிடுவார், இரகசியங்களை வைத்திருப்போரை சித்திரவதைப்படுத்தி அவற்றை அறிந்து கொள்ளுவார், ஜனநாயகத்திற்கு எந்தச் சலுகையையும் உண்மையில் கொடுக்கமாட்டார்... எனவே நாம் உண்மை நிலை உணர்ந்து, அதன் அண்டை நாடுகள் எப்படி இருக்கின்றனவோ அதற்கேற்றாற்போல் ஈராக் இருக்கும் என்பதை அறிந்து, அதை ஒரு பழைமைவாதமும் பொறுப்பும் நிறைந்திருக்கும் வெளியுறவுக் கொள்கையோடு தொடர்பு படுத்திக்கொள்ளவேண்டும்."

ஹுசைனுக்கு எதிராக மாறுதல்

ஈரான்-ஈராக் போர் முடிவடைந்த அதேநேரத்தில், அமெரிக்கா ஹுசைனுக்கு ஆதரவு கொடுக்க நேர்ந்ததற்கு முக்கிய காரணமாகயிருந்த சோவியத் ஒன்றிய ஸ்ராலினிச ஆட்சி நெருக்கடியும் முடிவடைந்தது. இது இறுதியில் 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியமும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்படுவதற்கு இட்டுச்சென்றது. இது அரேபிய ஆட்சிகளுக்கு அவர்களுடைய முக்கியமான இராணுவ, நிதி உதவி, ஆதரவு கிடைத்த முறையை இழக்கச் செய்து விட்டது. இதுதான் பலவழிகளில் ஈராக்குடனான அமெரிக்க உறவுகளில் முக்கிய முடிவை கொடுக்கும் காரணியாயிற்று.

மத்திய கிழக்கின் அரேபிய முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் நம்பியிருப்பதை குறைப்பதற்காக முன்னர் சோவியத் யூனியனை நம்பியிருந்த நாடுகள், இப்பொழுது வாஷிங்டனுடன் நெருங்கிய தொடர்புகொள்ளுவதற்கு பரபரப்புடன் முனைந்தன. 1989ல் அரேபிய கழகம் (Arab League) அமெரிக்காவிற்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சலுகையை அமெரிக்காவுக்கு உருவாக்கி, 1978ல் தனியே இஸ்ரேலுடன் அமைதி உடன்பாடு கொண்டதற்காக வெளியேற்றிய எகிப்தை மீண்டும் தங்கள் கூட்டில் சேர்த்தன.

ஏப்ரல் 1990ல், சோவியத் தலைவரான மிகையில் கோர்ப்பச்சேவ், வருகை புரிந்திருந்த சிரிய ஜனாதிபதி அபேஸ் எல்-அசாத் இடம், சோவியத் யூனியன் இனி இஸ்ரேலுக்கு சமமாக சிரிய இராணுவத் திறனை உயர்த்த உதவமுடியாது என்று தெரிவித்துவிட்டார். இது சோவியத் ஒன்றியம் ஈராக்கிற்கு உதவுவதில்லை என்ற இன்னும் கூடுதல் முக்கியத்தவத்திற்கு முன்னுரை போன்றது ஆகும்; மேலும் அமெரிக்காவோடு ஈராக்கிற்கு எதிராகவும் சேர்ந்து கொண்டது; இது 1990 ஆகஸ்டில், ஹுசைன், குவைத் நாட்டை தாக்கியபோது நிகழ்ந்தது. அமெரிக்காவுடன் எப்படியும் நல்லுறவு தேவை என்று அடிபணிந்து நின்ற சிரியா, இதன் நீண்ட நாள் பிராந்திய போட்டி வீழ்ச்சியில் ஆர்வம் கொண்டு, கடைசியில் ஈராக்கிற்கு எதிரான கூட்டணியில் சேர்ந்தது.

சோவியத் யூனியனின் வலிமையற்ற, ஸ்திரமற்ற தன்மையின் வளர்ச்சியை கண்ட அமெரிக்கா, அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, தன்னுடைய நலன்களை உலக அரங்கில் முன்னேற்ற தொடங்கியது. ஈராக், குவைத்தை தாக்கியதை ஒரு காரணமாக கொண்டு, முதல் புஷ்ஷின் சொற்களில், "ஒரு புதிய உலக ஒழுங்குமுறையை", அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களுக்காக உலகை வேறு வடிவத்தில் வாஷிங்டன் கொண்டு வருவதற்கு செயலாற்றியது. வலதுசாரி கட்டுரையாளர் Charles Krauthammer இதை "ஒற்றை முனை இயக்கம்" (unipolar moment) என்று அறிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, கூர்மையான, ஒருதலைப்பட்ச மற்றும் இராணுவத் திருப்பத்தைக் கொள்ளல்

அமெரிக்க பெருநிறுவனங்கள் ஐரோப்பாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் எதிர்கொண்ட போட்டி, 1970 களிலிருந்து வளர்ந்துகொண்டிருந்தது; இது இப்பொழுது ஒப்புமையில் தடையற்ற அமெரிக்க இராணுவத்திறனால் விடையளிக்கப்படலாம். பாரசீக வளைகுடாவை பொறுத்தவரையில், அமெரிக்க இராணுவம் உலகிலியே மிக முக்கியமான எண்ணெய் உற்பத்தி பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை தடையைற்று இருக்கும் முயற்சிகளுக்கு உதவ பயன்படுத்தப்படலாம்; இது வாஷிங்டனை அதன் எண்ணெய் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய, ஆசிய ஏகாதிபத்திய போட்டியாளர்களை பயமுறுத்தும் நிலையில் தள்ளுவதற்கு உதவும்.

பின்னர், ஜனாதிபதி H.W. புஷ் அறிவித்ததுபோல், 1991 வளைகுடா போருக்கு முந்தைய நிகழ்ச்சிகள், ஈராக்கின்மீதான தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு, அமெரிக்காவிற்கு ''உந்துதலை கொடுத்து அதிக இணக்கமான வர்த்தக உறவுகளுக்கு வகை செய்யும்."

இந்த நிலைமைகளில், அமெரிக்க ஆளும் வர்க்கம், ஈராக் போன்ற நாடுகளின்மீது கூடுதலான கடுமையுடன் நடந்து கொள்ள முடியும் என்ற உணர்வைப் பெற்றது; அதிலும் குறிப்பாக, இந்த நாடுகள் பிராந்தியத்தில் சக்திவாய்ந்தவையாக இருக்கவேண்டும் என்ற அபிலாசைகளை கொண்டிருந்த நிலையில், ஹுசைன் ஆட்சி அத்தன்மையையே கொண்டிருந்தது. அமெரிக்க ஸ்தாபனங்களின் முக்கிய செல்வாக்கு உடைய பிரிவுகள் பெருகிய முறையில், ஈராக்கிய பாதிஸ்ட் கட்சி போன்றவற்றை அரவணைத்து செல்லவேண்டிய தேவையில்லை என்று நினைக்க தலைப்பட்டன. ஈராக், அதன் எண்ணெய் வளம் இவற்றின்மீது அமெரிக்க ஆதிக்கத்தை ஸ்தாபிக்க இயலும் என்றும், அது சர்வதேச அளவில் அமெரிக்காவிற்கு முன்கண்டிராத சக்தியைக் கொடுக்கும் என்றும் கருதப்பட்டது.

1989, 1990 ஆண்டுகளில், அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரின் முக்கிய பிரிவுகள், ஈராக்குடனான போருக்கு தேவையான தயாரிப்புக்களை உருவாக்க முன்னுக்கு வந்தன. CIA கொடுத்த ஊக்கத்தினால், குவைத்தும், ஐக்கிய அரேபிய எமிரேட்டும் (UAE), தங்களுடைய எண்ணெய் உற்பத்தி அளவை OPEC கட்டுப்பாட்டைவிட அதிகப்படுத்தின: இதன் விளைவாக எண்ணெய் விலை குறையத் தொடங்கியது; இந்தக் காலக் கட்டத்தில்தான், போரினால் மிகப்பெரிய கடனில் ஆழ்ந்திருந்த ஹுசைனின் ஆட்சி எரிபொருள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து, பொருளாதார சீரமைப்பிற்கு நம்பியிருக்கவேண்டி இருந்தது. 1990ன் முதல் மாதங்களில், அமெரிக்க செய்தி ஊடகங்கள், ஈராக்கிய அணுவாயுதங்கள், இராசயன ஆயுதங்கள் இவற்றின் திறன் பற்றி தொடர்ந்து அச்சுறுத்தும் கதைகளை வெளியிட தலைப்பட்டன.

ஜனவரி 12, 1990 அரசுத்துறை திட்டப்பிரிவு தயாரித்திருந்த "ஈராக் பற்றிய கொள்கைக்கான சிந்தனை" என்ற தலைப்பு கொண்டிருந்த ஆவணம், இந்த அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பரபரப்பான மாற்றத்தை பிரதிபலித்தது. "கடந்த காலத்தில், அமெரிக்க அணுகுமுறை, ஈராக்கை பொறுத்தவரை, முற்றிலுமாக கிழக்கு-மேற்கு பின்னணியில் (பாக்தாத் ஒப்பந்தம்/ஐசனோவர் கோட்பாடு) என்று அமைக்கப்பட்டிருந்தது. ...சோவியத் ஒன்றியத்துடனான நம்முடைய மாறிக்கொண்டு வரும் உறவு கிழக்கு/மேற்குப் பின்னணியின் தன்மையை மாற்றிக் கொண்டு வருகிறது.

"வளைகுடாப்பகுதி அமெரிக்காவிற்கு எண்ணைய்தான் ஆரம்பபுள்ளி" என்று கூறியபின், இந்த ஆவணம், எவ்வாறு 1970 களில் ஈரானியக் கொடுங்கோல் முடியரசான ஷாவின் ஆட்சியை நம்பமுடியாமல் போயிற்றோ, அதேபோல்தான் அமெரிக்கா ஹுசைனுடைய ஆட்சியையும் இறுதியில் நம்பமுடியாமல் போக நேரிடும்" என்று குறிப்பிட்டது. "1970 களில் ஈரான் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்கா, (1) நாம் ஈரானை நம்பினோம், (2) நம்முடைய எண்ணெய் நலன்களைப் பாதுகாக்கும் திறன் இருந்தது, அதை ஏற்கவும் அது தயாராக இருந்தது. இந்த அமெரிக்க, ஈரான்மீதான நம்பிக்கை, சோவியத் அச்சுறுத்தல் தன்மையில் கொண்டிருந்த நிலைப்பாட்டை ஒட்டியிருந்து, வளைகுடாவில் இருக்கும் நிலைமையைக் காப்பாற்றுவதற்கும், இஸ்ரேலின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் அமைந்திருந்தது.

"தன்னுடைய நலன்களைக் காப்பதற்கு அமெரிக்கா இன்று ஒருதலைப்பட்சமாகத் தயாராக இருந்தாலும், ஒரு உயர் சிந்தனை உலகில், அந்த பிராந்தியத்தில் நட்பும், சக்தியும் நிறைந்த நாட்டுடன் இணைந்து செயல்படுவது விரும்பத்தக்கது. எவ்வாறாயினும், எந்த வளைகுடா சக்தியும் (அ) அந்தப் பங்கைக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்கவில்லை, (ஆ) வளைகுடா ஒழுங்கு பற்றி நாம் கவலையற்று இருக்கக் கூடிய ஒரு பார்வையை நம்முடன் பகிர்ந்துகொள்ளவில்லை. உதாரணமாக, ஈராக் (அ) தேவைகள் பற்றி உதவலாம், ஆனால் (ஆ) பற்றி உதவாது; சவுதி அரேபியா (ஆ) தேவைகள் பற்றி உதவலாம், ஆனால் (அ) தேவை பற்றி உதவாது."

எனவே ஆவணம் அமெரிக்க-ஈராக்கிய உறவுகளில் ஒரு மோதல் அணுகுமுறை தேவை என்ற அழைப்பை விடுத்து, "இதன் முக்கிய புறநிலை சதாம் கடின விருப்பங்களை மேற்கொள்ள வற்புறுத்தப்பட வேண்டும்" என்று கூறி முடித்திருந்தது.

இந்தக் கருத்துக்கள், ஹுசைன் ஆட்சி போர்க்கடன்கள், உள்நாட்டுச் சமூக பதட்டங்கள் இவற்றின் அழுத்தத்தினால், மத்திய கிழக்கில் இஸ்ரேல், வாஷிங்டனுடைய நிலப்பிரபுத்துவ வளைகுடா நட்பு நாடுகள் இவற்றிற்கு எதிராக தன் செல்வாக்கை பெருக்கிக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து, இறுக்கம் பெற்றன. 1990 களில், எண்ணெய் விலையைக் குறைப்பு செய்ததால், வளைகுடா நாடுகளை ஹுசைன் கண்டனம் செய்வது வாடிக்கையாயிற்று; தன்னுடைய படைகளையும் குவைத் என்லைக்கு அருகில் அவர் குவித்துவைத்தார். இந்த நடவடிக்கைகள் மூலம் தன்னுடைய கடன் பிரச்சினைகளை தீர்ப்பதுடன், சவுதி அரேபியா, குவைத், எமிரேட் ஆகிய பிற்போக்கான முடியாட்சிகளில் மக்கள் கொண்டிருந்த வெறுப்பையும் ஒன்றுசேர்க்கப்படலாம் என்று நம்பினர்.

அதே நேரத்தில், இன்னும் கூடுதலான ஆயுதத் திட்டங்களை தொடர்ந்து, மேற்கத்திய ஈராக்கில் இஸ்ரேலை தாக்கக் கூடிய தூரத்தில் ஏவுகணை தளங்களையும் அமைத்திருந்தார். 1981ல் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள், ஈராக்கின் ஒசிராக் அணுசக்தி நிலையத்தை தாக்கி அழித்தது போல், மீண்டும் இஸ்ரேல் ஈராக்கைத் தாக்குவதைத் தவிர்க்கும் வகையில் செய்யப்பட்டது.

இறுதியில், இருபதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதிகளில் நிகழ்ந்த பெரும் தப்புக்கணக்குகளில் குறிப்பிடத்தக்க ஒன்றான 1990, ஆகஸ்ட் 2ல் ஹுசைன் ஆட்சி குவைத்தின் மீது படையெடுத்து, அந்நாட்டை ஆக்கிரமித்தது. அமெரிக்கா இந்த நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்க்காது என்ற நினைப்பில்தான் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தகைய தப்புக்கணக்கு போடுவதற்கும் ஒரு காரணம் இருந்தது.

படையெடுப்பிற்கு ஒரு வாரம் முன்புதான் சதாம் ஹுசைன், ஈராக்கின் அமெரிக்க தூதரான ஏப்ரல் கிளாஸ்பியைச் (April Glaspie) சந்தித்திருந்தார்; அவர் "உங்கள் நாட்டை மறுசீரமைக்கும் பெரும் முயற்சிகளை நான் கண்டு வியக்கிறேன். உங்களுக்குப் பணம் தேவை என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அதைப் புரிந்துகொள்ளுகிறோம், எங்கள் கருத்து நீங்கள் உங்கள் நாட்டை மறுசீரமைக்க ஒரு வாய்ப்பு வேண்டும். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அரேபிய-அரேபிய மோதல்களளை பற்றி நாங்கள் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. வெளிவிவகாரத்துறை செயலர் ஜேம்ஸ் பேக்கர் எங்களுடைய அதிகாரபூர்வமான தொடர்பாளரை இந்தக் கருத்தை வலியுறுத்தச் சொல்லி உத்திரவிட்டுள்ளார்." என கூறியிருந்தார்.

இந்த சம்பவங்களில், அமெரிக்காவின் விளைவு வேறு விதமாயிற்று: ஈராக்கிற்கு எதிராக போர்தொடுத்து, பேரழிவு தரும் குண்டுவீச்சுக்களை நடத்தியது. அந்தப் போரைப் பற்றிய விரிவான விவரம் அல்லது அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி எழுத இது இடமில்லை. முதல் வளைகுடாப் போர், அமெரிக்க ஸ்தாபனங்களின் நடைமுறையில் மூர்க்கமான பிரிவினருக்கு கணிசமான வெற்றியைப் பிரதிபலித்தது என்று கூறினால் போதுமானது.

எவ்வாறாயினும், முதல் புஷ்ஷின் நிர்வாகம், தான் இன்னும் சில தடைகளுக்குள் இருந்ததாக உணர்ந்திருந்தது. சோவியத் யூனியனது விதி தெளிவற்றதாக இருக்கையில் அமெரிக்க கொள்கையில் மாற்றம் அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது. தற்போதைய ஜனாதிபதியின் தந்தை, அனைத்து அரசியல், இராணுவ பொறுப்புக்களையும் விளைவிக்கும் முழு-அளவிலான ஈராக்கின் மீதான படையெடுப்பை மேற்கொள்ளும் நிலையில் தான் இல்லை என்ற கருத்தைக் கொண்டிருந்தார். மேலும், அத்தகைய படையெடுப்பை ஐரோப்பிய, அரேபிய நாடுகள் நிச்சயமாக எதிர்த்திருக்கும்; அப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையையும் மற்ற ஏகாதிபத்திய நாடுகளுடைய ஆதரவையும் தூக்கி எறிந்துவிட இன்னும் விரும்பாமல்தான் இருந்தது.

1991ல் அமெரிக்கப் படைகளை ஈராக்கிற்கு அனுப்பி பாத்திஸ்ட் ஆட்சியை கவிழ்க்காதது, குடியரசுக் கட்சியின் வலதுசாரிப் பிரிவினால் ஒரு இழக்கப்பட்டுவிட்ட வாய்ப்பாக கொள்ளப்பட்டது. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகுந்த கொள்ளையடிக்கும் நோக்குடைய பிரிவுகள், அடுத்த பத்து ஆண்டுகளை, அமெரிக்க நலன்கள் குறைக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டன. இந்தப் பிரிவுகளின் சக்திகள்தாம், தற்போதைய புஷ் நிர்வாகத்துடன் அதிகாரத்திற்கு வந்துள்ளன.

இவ்வாறு முன்பு அமெரிக்க நண்பராக இருந்த சதாம் ஹுசைன் அதன் விரோதியானார். இகழ்வான ஈரான்-ஈராக்கிய போரை, ஈரானிய முறையில் ஷியிட் அடிப்படைவாதம் வளைகுடா நாடுகளில் ஆதரவு பெறுவதை தடுக்கும் முயற்சியாக தன்மக்கள் மீது சுமத்திய பின்னர், அவருடைய ஆட்சி ஈராக்கிய முதலாளித்துவத்திற்கு கூடுதலான பங்கை மத்திய கிழக்கில் கொடுக்கும் நம்பிக்கையை கொடுத்த விதத்தில், அமெரிக்க நலன்களுக்கு தடையாயிற்று.

தான் குவைத்தை எந்த தடையின்றியும் படையெடுக்கலாம் என்ற ஹுசைனின் மாபெரும் தப்புக் கணக்கின் நினைப்பு, மூன்றாவது உலகத்தின் தேசிய முதலாளித்துவத்தின் முன்னோக்கின் வளர்ச்சிக்கு கல்லறையாயிற்று. சோவியத் ஸ்ராலினிஸ்டுகள் ஆதரவு, மற்ற அரேபிய நாடுகள் அமெரிக்கப் படைகளை வரவேற்கவோ, ஆதரவு அளிக்கவோ செய்யாது என்று கருதப்பட்டது, ஹுசைனுடைய வாஷிங்டனுடனான ஒத்துழைப்பின் வரலாற்றினால், அமெரிக்கா தன்னை தாக்காது என்று ஹுசைனால் கருதப்பட்ட காரணிகள் அனைத்தும் பயனற்றுப் போயின. அமெரிக்க ஆதரவுடன் சர்வாதிகார ஆட்சியை நடத்திவந்தும், அமெரிக்க ஆதரவுடனும், பண உதவியுடனும் ஆயுதங்களை வாங்கியும் வந்திருந்த போதிலும் ஹுசைன், தான் அமெரிக்காவின் நல்வாழ்த்துக்களுடன் தொடங்கிய காரியங்களே நீக்கப்படவேண்டும் என்று அமெரிக்கா அறிவித்ததை கண்ணுற்றார்.

ஈராக்கிய மக்கள் சதாம் ஹுசைனின் சர்வாதிகாரம், நாட்டை பலமுறை குண்டுவீச்சுக்ககளுக்கு உட்படுத்துதலுக்கும், மக்களை அழித்த மிருகத்தனமான பொருளாதாரத்தடைகளுக்கும், இறுதியில் மார்ச் 2003ல் அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் படை எடுத்து நாட்டை ஆக்கிரமித்ததற்கும், அமெரிக்கர்களால் போலிக்காரணம் காட்டப்பட்டது என்று அறிந்தனர்.

* * *

அமெரிக்க-ஈராக்கிய உறவுகள் பற்றி ஆராய்ந்த இக்கட்டுரை தொடர், ஈராக்கின்மீது போர்தொடுத்து அந்நாட்டை ஆக்கிரமித்ததை நியாயப்படுத்துவதற்கு, புஷ் நிர்வாகம் தெரிவித்திருந்த கூற்றுக்களின் மோசடித்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. இருப்பதிலியே முற்றிலும் இழிந்த பொய்யுரைகள், சதாம் ஹுசைனின் கடந்தகால, தொடர்ந்திருந்த இரசாயன, உயிரியல் பேரழிவு ஆயுதங்கள் பயன்படுத்தியது என்ற உறுதியான பொய்யுரை ஆகும்.

அத்தகைய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல், இந்த தொடரில் தெளிவாக ஆவணங்கள் விளக்கியுள்ளதுபோல், ஈராக்கிய ஆட்சி அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை பெற்றிருந்தபோதுதான் உண்மையிலேயே இரசாயன ஆயுதங்களைக் கொண்டிருந்துடன், பயன்படுத்தியது. இந்த ஆயுதங்கள் ஈரானியருக்கு எதிராகவும், குர்திஷ் எழுச்சியாளர்களுக்கு எதிராகவும் 1980களில் பயன்படுத்தப்பட்டது, றீகன் நிர்வாகத்தால் ஒரு தூதரகமுறை அசெளகரியம் என்று மட்டுமே கொள்ளப்பட்ட, ஹுசைனை பதவியிலிருந்து அகற்றுவது ஒரு புறம் இருக்க, அந்த ஆட்சியுடன் கொள்ளப்பட்டிருந்த உறவுகளை எவ்விதத்திலும் பாதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது என்ற கருத்தில்தான் இருந்தது.

பாத் கட்சியின் மனித உரிமைகள் தவறாக மீறப்பட்டது பற்றியும், ஜனநாயக விரோத கொள்கைகள் பின்பற்றப்பட்டது பற்றியும், இவை ஒன்றும் அமெரிக்க அரசாங்கத்தின் பெரிய அக்கறைகள் இல்லை. உண்மையில், பாத்திஸ்டுகள் ஆட்சிக்கு வந்ததும், ஹுசைனின் சர்வாதிகாரமும், ஓரளவு இரகசிய அமெரிக்க ஆதரவுடன்தான் நடைபெற்றவை ஆகும். அவரது ஆட்சி ஈராக்கிய மக்களை நசுக்கியதும், குறிப்பாக சோசலிச இயக்கத்தை அடக்கியது, அமெரிக்க அரசாங்கத்தால் வரவேற்கப்பட்டு இருந்தது.

அமெரிக்க உறவுகள் ஈராக்குடனும், மத்திய கிழக்கு முழுவதும் இருந்த நிலைப்பாட்டின் அடித்தளத்தில், இப்பொழுதைய போரின் கூறப்படாத நோக்கங்களுடைய மத்திய கருத்தாகவும், செய்தி ஊடகத்தால் பெரிதும் கவனத்திற்கெடுக்கப்படாது விடப்பட்டுள்ள அமெரிக்க அரசியல் நடைமுறையால் அடக்கிவைக்கப்பட்டுள்ளதுமான காரணி அப்பகுதியின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்துதலாகும். காரணி எதுவும் இல்லை என்று கூறப்படுதவதைவிட, அமெரிக்கா ஈராக்கின்மீது கொண்டுள்ள கொள்கையின் பல நெளிவு, சுளிவுகளுக்கிடையே நிரந்தரமாக நிலைபெற்றுள்ள காரணி இதுதான்.

எண்ணெய் பிரச்சினை, அமெரிக்க ஆற்றல் பெருநிறுவனங்களுக்கும், பெருநிறுவன செல்வந்த தட்டினருக்கு மட்டும் அக்கறையானது அல்ல; அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு புவியியில்-அரசியல் நிலைக்கும், தந்திரி நிலைப்பாட்டிற்கும் பெரும் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. உலகின் எண்ணெய் வளங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுள்ள பெரும் நாடு, மிகப்பெரிய செல்வாக்கு தன்மையை மற்ற அனைத்து ஏகாதிபத்திய போட்டியாளர்களுக்கும் எதிராக கொள்ளமுடியும்.

1980 களில், ஈரானிய புரட்சிக்கு எதிராகவும், வளைகுடாப்பகுதியில் எண்ணெய் வளம் மிகுந்த, அமெரிக்க சார்புடைய முடியாட்சிகளுடைய நிலையை காப்பாற்றவும், ஈராக்கிற்கு ஆதரவு கொடுப்பதை ஒரு வழியாகக் கொண்டது. சோவியத் ஒன்றிய சரிவிற்குப்பின், அமெரிக்கா ஈராக்கின்மீது படையெடுப்பதை, நேரடியாகவே அந்நாட்டின்மீது படையெடுத்து அதன் எண்ணெய் வளங்களை பற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக கொண்டது.

அமெரிக்க-ஈராக் உறவுகளின் வரலாறு, ஏகாதிபத்திய இராஜதந்திர வரலாறு ஆகும். ஒரு சிறிய நாடு எவ்வாறு வெற்றிகொள்ளப்பட்டது, அதனுடைய நலன்கள் எவ்வாறு உலகின் மிக சக்திவாய்ந்த, இரக்கமற்ற அதிகாரத்தின் நலன்களுக்கு அடிபணியவைக்கப்பட்டன என்ற வரலாறு ஆகும்; இந்த வழிவகையில் ஒரு வலுவற்ற, நம்பவேண்டிய நிலையில் இருந்த ஒரு தேசிய முதலாளித்துவ செல்வந்த தட்டின் உதவியும் இருந்தது. அமெரிக்க செய்தி ஊடகத்தாலும், ஜனநாயக குடியரசுக் கட்சிகள் உட்பட அரசியல் ஸ்தாபனங்களாலும், இந்த வரலாறு மறைத்து வைக்கப்படுவது, அமெரிக்காவின் ஈராக் மீதான கொள்கை அமெரிக்க மக்களுடைய நலன்களுக்காக இல்லாமல், ஒரு நிதி உயர்பிரபு குழு, பொய்கள், இராணுவ வன்முறை, அடக்குமுறை இவற்றின் மூலம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உழைக்கும் வெகுஜனங்களை சுரண்டும் கருவிகளாக பயன்படுத்துவதுதான் உண்மை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முற்றும்.

Top of page