World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Portugal's Prime Minister Barroso nominated as European Commission president

போர்த்துக்கல் பிரதமர் பரோசோ ஐரோப்பிய ஒன்றிய தலைவராக பதவி நியமனம்

By Paul Stuart
21 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர் குழு போர்த்துக்கல் பிரதமர் ஜோசே மனுவேல் டூரோ பரோசோவை (யிஷீsங விணீஸீuமீறீ ஞிuக்ஷீஏஷீ ஙிணீக்ஷீக்ஷீஷீsஷீ) ஐரோப்பிய ஒன்றியத் தலைவராக நியமித்திருக்கிறது. தேசிய அரசாங்கங்களினால் அமர்த்தப்பட்ட அமைச்சர்கள் பரோசோவை நியமித்துள்ளபோதிலும், ஜூலை 22 ல் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் ரகசிய வாக்கெடுப்பு மூலம் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படவேண்டும்.

பரோசோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க உறவுகளின் மேல் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கும் மோதல் நெருக்கடிக்கு ''சமரச முறையை'' கையாண்டு, ஐரோப்பிய மக்களிடையே அரசியல் ஆதரவும், ஐராப்பிய ஒன்றிய திட்டத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாததையும் மாற்றுவதற்கு ஈடுபடப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த ஜரோப்பிய தேர்தலில், கண்டத்தின் ஏறக்குறைய அனைத்து ஆளும் கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளதுடன், இத் தேர்தலில் பரந்தளவிலான மக்கள் பங்குபெறவில்லை. அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான வலதுசாரிக் கட்சிகள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. மிகப்பெரும்பாலான தொழிலாளர்களால், பிரிட்டனில் டோனி பிளேயர் தலைமையில் அல்லது ஜேர்மனியில் ஷ்ரோடர் தலைமையில் செயல்படுகின்ற சமூக ஜனநாயகக் கட்சிக்கும் வலதுசாரி பாரம்பரிய கட்சிகளுக்குமிடையிலான வித்தியாசத்தை எந்த வகையிலும் வேறுபடுத்தி பார்க்க முடியவில்லை.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மிகப்பெரிய குழுவினர் ---வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினர்-- பரோசோவின் வேட்பாளர் முன்மொழிவை ஆதரிக்கின்றனர். என்றாலும் இரண்டாவது பெரிய கூட்டணியின் --ஐரோப்பிய சோசலிஸ்டுகள்-- தலைவர் Poul Nyrup Rasmussen விடுத்துள்ள எச்சரிக்கையில் ''எங்களது வழிக்கு அப்பாற்பட்ட வேறு வழியில் ஐரோப்பிய ஒன்றியத்தை கொண்டு செல்ல எண்ணுகின்ற எவருக்கும் எங்களது அரசியல் ஆதரவு கிடையாது. அவருக்கு எங்களது நம்பிக்கையை என்றைக்கும் தரமாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சியினர் பரோசோவை விமர்சித்துள்ளார்கள். அவருக்கு ''ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை வளர்ப்பதில் போதியளவு அனுபவம் கிடையாது. மற்றும் ஐரோப்பா போட்டியிட்டு முன்னேறுகின்ற தன்மையை வலுப்படுத்துவதிலும், சமூக பொறுப்புணர்வு மற்றும் பாதுகாப்போடு கைகோர்த்துச் செல்லவேண்டும் என்பதிலும் நம்பிக்கை இல்லாதவர்'' என்று அவர்கள் கூறியுள்ளனர்.

விளையாட்டு போட்டிகள் மற்றும் அரசியல் ஈடுபாடு காரணமாக பரோசோ போர்த்துக்கலின் சில்வியோ பெர்லுஸ்கோனி என்று ஊடகங்களினால் வர்ணிக்கப்படுவதோடு, அவர் தலைவர் பதவிக்கு மூன்றாவது தேர்வு வேட்பாளராக கருதப்படுகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட அவரது பெயர் போட்டியிடுபவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை. அவர், பெல்ஜியத்தின் தாராளவாத கட்சி பிரதமர் Verhofstadt யும், முன்னாள் பிரிட்டிஷ் பழமைவாத கட்சி அமைச்சரும் ஐரோப்பிய ஒன்றிய அல்லாத நாடுகளுடன் உறவு வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐரோப்பிய கமிஷனரான கிறிஸ் பேட்டனையும் தோற்கடித்தார்.

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களினால் ஆதரிக்கப்பட்ட Verhofstadt, தனது ஜனாதிபதி பதவிக்கான முயற்சியை இது ''விரைவாக வெட்டியிழுத்துவிட்டதாக'' பழிபோட்டார். அவர் அமெரிக்காவிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக இராணுவ வலிமையை ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்ற கருத்தில் நெருக்கமான தொடர்புள்ளவராக இருப்பதோடு, அண்மையில் அமெரிக்காவிவிருந்து ஐரோப்பா ''விடுவிக்கப்பட'' வேண்டிய அவசியம் குறித்தும் பேசினார்.

கிறிஸ் பேட்டனின் வேட்பாளர் முன்மொழிவை பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் எதிர்த்தார். ''ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்துக் கொள்கைகளிலும் பங்குபெறாத ஒரு நாட்டின்'' வேட்பாளரை ஏற்றுக்கொள்வது என்பது தவறான கருத்தாகும் என்று குறிப்பிட்டார்.

அத்தோடு, தலைவர் பதவிக்கு வரவுள்ளவர் ஐரோப்பிய மண்டல அரசிலிருந்து வருவதுடன், பிரெஞ்சு மொழி பேசுபவராக இருக்க வேண்டும் என்று சிராக் வலியுறுத்தினார்.

பரோசோவின் வேட்பாளர் முன்மொழிவை ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வரவேற்றதோடு, அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை கூறினார். பரோசோவின் வேட்பாளர் முன்மொழிவானது, வாஷிங்டனின் ஈராக் போர் நடவடிக்கைக்கு அவரின் அசைக்க முடியாத ஆதரவிற்கு கிடைத்த கைமாறாகும். அத்தோடு, பிரிட்டன், ஸ்பெயின் (வலதுசாரி மக்கள் கட்சி ஆட்சியிலிருந்தபோது) மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை இணைத்து புஷ்ஷிற்கு ஆதரவான ''புதிய ஐரோப்பிய'' அணியை உருவாக்குவதற்கான உதவி நடவடிக்கையாகும்.

போர்த்துக்கல் மக்களில் 84 சதவீதம் பேர் போருக்கு எதிராக உள்ளனர் என்ற கருத்துக்கணிப்பு இருந்த பொழுதும் பரோசோ ஈராக் போரை ஆதரித்தார். ஈராக் போர் தொடங்குவதற்கு குறுகிய காலத்திற்கு முன்னர் போர்த்துக்கலின் அசோர் (Azores) தீவுகளில் போருக்கு ஆதரவான உச்சிமாநாட்டை நடத்தினார். உலகப் பத்திரிகைகள் அவரை புஷ், பிளேயர் மற்றும் ஸ்பெயினின் முன்னாள் பிரதமர் அஸ்னாருக்கு கீழ்படிந்து நடப்பவர் என்று கருதின. அத்துடன், போர்த்துக்கல் எதிர்க்கட்சியின் தலைவர் ஒருவர் அவரை பெரிய வல்லரசுகளின் ''தலைமைப் பணியாளர்'' என்று வர்ணித்தார்.

பிளேயர் மற்றும் அஸ்னாரோடு இணைந்து பரோசோ இந்த பின்னணியில் ஒரு கூட்டணியை உருவாக்கவும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை தனிமைப்படுத்தவும் முயன்றார். அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது ஐரோப்பாவிற்கு முக்கிய மூலோபாய பணியாகும் என்று அவர் நம்புகின்றார். ஐரோப்பாவிற்கு அதிவிரைவான எதிர்த்தாக்குதல் படை (Rapid Reaction Force) தேவை என்பதை தீவிரமாக நியாயப்படுத்துகிறார். ஆனால், அத்தகைய படை புஷ் நிர்வாகத்தோடு கலந்து ஆலோசிக்கமால், அதன் அனுமதிபெறாமல் உருவாக்கப்படக்கூடாது என்று கூறுகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய முதலாவது வெளியுறவு அமைச்சராக நேட்டோவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜவியே சொலோனோ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பரோசோவை நியமிப்பது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு செய்யும் தகுதியையே இது முடக்கிவிடுமோ என்று அச்சுறுத்துகிற வகையில் இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக இடைவிடாத மோதல்கள் நிலவின.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதால் ஐரோப்பாவில் நெருக்கடி உருவாயிற்று. புஷ் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது இராணுவ வலிமை மூலம் சர்வதேச மேலாதிக்கத்தை உருவாக்க முயன்று வருவதுடன், ஐரோப்பிய வல்லரசுகளையும் அது வற்புறுத்துகிறது. அது, பிரதானமாக பிரிட்டனை ஆதரித்தும், கிழக்கு ஐரோப்பிய அரசுகளான போலந்தையும் ஓரளவிற்கு இத்தாலி மற்றும் போர்த்துக்கல்லையும் ஆதரித்து, அதன் மூலம் ஜேர்மனி மற்றும் பிரான்சின் செல்வாக்கை கட்டுப்படுத்த முயன்று வருகிறது.

பிரெஞ்சு செய்திப் பத்திரிகையான லு மொன்ட் பிரான்சும், ஜேர்மனியும் ''தங்களது அதிகார இழப்பை சரிக்கட்டுகிற வகையில் தங்களது கமிஷ்னர்களுக்கு முக்கியமான பொறுப்புக்களை பெற்றுத்தருவதில் உறுதியாக உள்ளன'' என்று அறிவித்திருக்கிறது. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஷ்ரோடர் ஐரோப்பிய ஒன்றிய ஜனாதிபதி பதவிக்கு Verhofstadt தேர்ந்தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், பரோசோ பொருளாதாரக் கொள்கை தொடர்பான கமிஷனர்களாக ஜேர்மனியைச் சேர்ந்தவர்களை நியமிப்பாரானால் அதைத் தாம் ஆதரிப்பதாக குறிப்பிட்டார். பரோசோ, ''கமிஷனர்களைத் தேர்ந்தெடுப்பது தலைவரின் பணி அந்தப் பொறுப்பை நான் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை'' என்று தனது அறிக்கையில் கூறினார்.

மேலும் அவர், ஐரோப்பிய அரசாங்கங்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தாக வேண்டுமென்று எச்சரித்ததோடு, அமெரிக்காவிற்கு ''ஆதரவாக அல்லது எதிராக தான் செயல்பட்டாக வேண்டும்'' என்று கூறினார். ''ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நிலவுகின்ற உறவுகளுக்கு உயர்ந்த மதிப்பு வாய்ந்த முக்கியத்துவம் தரவேண்டுமென்று நாம் நினைக்கிறோம். அதே மதிப்பை அவர்களுடன் நாம் பகிர்ந்து கொள்கிறோம். பணியாற்றும் பாணியில், உணர்வுகள் வெளிப்பாட்டில் வேறுபாடுகள் இருக்கலாமே தவிர, ஆனால் மதிப்புகள் எல்லாம் ஒன்று தான்'' என்று மேலும் அவர் குறிப்பிட்டார்

பரோசோவை ஜனாதிபதியாக நியமிப்பதில் அனைத்து ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் உடன்பாடு எற்பட்டு குறைந்தபட்சம் ஒரே ''மதிப்பில்'' சமரசம் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அது பெரிய நிறுவனங்களின் சார்பில் தொழிலாள வர்க்கத்தை மிகப்பெருமளவில் சுரண்டுவதற்கு உயிர்நாடியான நலன்புரி வழங்கலை சிதைப்பதில் எற்பட்டிருக்கிறது. போர்த்துக்கலில் பரோசோ இதுபோன்ற தாக்குதல்களில் முன்னணியில் நின்றார். 2000 ல் அவர் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர், 1974-75 ல் போர்த்துக்கல் புரட்சிக்கு பின்னர் இருந்த மிச்சமிருந்த நலன்புரி சேவைகளையும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களையும் சிதைப்பதில் கவனம் செலுத்தினார். இதனால், மிகப்பெருமளவில் கண்டனப்பேரணிகளும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்ற நேரத்தில் போர்த்துக்கலை ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட் வரம்புகளுக்குள் கொண்டு வருவதற்காக பொதுமக்களது எதிர்ப்பை பொருட்படுத்தாத ''உணர்ச்சியற்ற மனிதராக'' அவர் நடந்து கொண்டதாக பத்திரிகையாளர்கள் வர்ணித்தனர்.

பரோசோவின் அரசியல் மரபுவழியை அறிந்த ஐரோப்பிய ஆளும் செல்வந்த தட்டுக்கள், ஐரோப்பா முழுவதிலும் இதே கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு அவர் சரியான மனிதர் என்று கருதுகின்றன.

தனது அரசியல் வாழ்க்கை தனது அன்பிற்குரிய ஆசிரியரை பாசிஸ்டுகள் தாக்கியதை பார்த்ததில் இருந்து தொடங்கியதாக பரோசோ கூறுகிறார். 1974 ல் செலசார் கோட்டனோ (Salazar/Caetano) சர்வாதிகாரம் வீழ்ச்சியடைவதற்கு முன், அவர் மாவோயிச மறு ஒழுங்கு இயக்கமான பாட்டாளி வர்க்க கட்சியில் (MRPP) இணைந்து கொண்டதுடன், லிஸ்பேன் பல்கலைகழக மாணவர் அணியின் முன்னணி உறுப்பினராக இருந்தார். 1970 ல் MRPP போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தது. 1974-75 ல் நடைபெற்ற புரட்சிகர சம்பவங்களின்போது, MRPP தொழிலாளர் இயக்கத்திற்கு எதிராக வன்முறை ஆத்திரமூட்டல்களை தூண்டுவதில் மிகவும் இழிவு புகழ் பெற்றிருந்தது.

MRPP போர்ச்சுக்கல் சோசலிஸ்ட் கட்சியிடனும், ஆளும் வர்க்கத்துடனும் பகிரங்கமாக கூட்டு சேர்ந்து கொண்டது. 1975 ல், இதனது தலைவர் அர்னோல்டோ மாட்டோஸ், இராணுவ அமைப்பானது இடதுசாரி கொள்கையுடைய அதிகாரிகளைக் கொண்ட ''உலகிலேயே அதிக ஜனநாயகத்தன்மை கொண்ட போலீஸ்படை'' என்று வர்ணித்தார். சில வாரங்களில் அதே படை அவரது உறுப்பினர்களை நூற்றுக்கணக்கில் கைது செய்தது. 1976 ல் நடைபெற்ற முதலாவது ஜனநாயகத் தேர்தல்களில் MRPP தலைமையானது தனது ஆதரவாளர்களை, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப் போவதாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த ரமலா ஏனஸ் என்பவருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டது.

பரோசோவின் அதிகாரப்பூர்வமான அரசியல் வரலாற்றில் இந்த அத்தியாயம் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், இதை ஐரோப்பிய அரசியல் ஸ்தாபனங்கள் மறந்து விடவில்லை. இத்தாலியின் La Republica என்ற பத்திரிகை ''ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்ல தலைவர் என்ற அம்சங்கள் அவரிடம் உள்ளன... அவர் எந்தளவிற்கு வளைந்து கொடுக்கும் அரசியல்வாதி என்றால், அவர் கம்யூனிச சீனாவின் ஆதரவாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி பகிரங்கமாக பழமைவாத தலைவராக உருவாகியதன் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்'' என்று எழுதியிருந்தது.

பிரிட்டனுடைய டைம்ஸ் பத்திரிகை ''முன்னாள் மாவோயிச தீவிரவாதியான அவர் ஒரு காலத்தில் முதலாளித்துவத்தை கண்டித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை போதித்தார். ஆனால், அவர் இப்போது வெகுதூரத்திற்கு சென்று விட்டார்'' என்று எழுதியுள்ளது.

போர்த்துக்கல் புரட்சி தோல்வியடைந்த பின்னர் பரோசோ வாஷிங்டனில் பல்கலைக்கழக ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் சமுதாயத்தை தான் ஆழமாகப் புரிந்துகொள்கிற வாய்ப்பு ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

பரோசோ புரட்சிகர அமைப்பைவிட்டு வெளியேறிய மூன்றாண்டுகளில், 1980 ல் பழமைவாத சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து, அதன்பின், 1985 ல் போர்த்துக்கல் ஜனாதிபதியாக வந்த அனிபல் கவகோ சில்வாவின் மிகவும் வலதுசாரி பிரிவுகளினுள் நகர்ந்தார். மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்தே இந்த சமூக ஜனநாயகக் கட்சி தோற்றம் கண்டது. செலசார் கோட்டனோ சர்வாதிகாரத்தின் கடைசி ஆண்டுகளில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே எதிர்க்கட்சி இந்த மக்கள் ஜனநாயகக் கட்சியாகும். செலசாரின் சர்வாதிகாரம் வீழ்ச்சியடையும் வரை இந்தக் கட்சி சர்வாதிகாரத்திற்கு விசுவாசமாக நடந்துகொண்டது.

1992 ல் சில்வா வெளியவிவகார அமைப்பின் தலைவாரக பரோசோவை நியமித்தார். பின்பு 1999 ல் பரோசோ கட்சித் தலைவரானார். 2002 ல் ஏப்ரல் தேர்தல்களில் ஆளும் சோசலிச அரசாங்கத்தை மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து பரோசோ கூட்டணி அரசாங்கத்தின் பிரதமராக பொறுப்பேற்றார். இக்கூட்டணியில் உள்ள தீவிர வலதுசாரி மக்கள் கட்சியின் போலோ போட்டாஸ் (Paul Portas) தற்போது பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பெர்லுஸ்கோனியின் போர்சா இட்டாலியா, ஜோர்க் கெய்டரின் அதிவலதுசாரி ஆஸ்திரியா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்பெயின் பாப்புலர் கட்சி ஆகியவற்றுடன் மிதமிஞ்சிய தேசியவாதப்போக்கில் செல்கிறது என்று போட்டஸினுடைய கட்சியும் வெளியேற்றப்பட்டது.

ஜூலை 5 ல் போர்த்துக்கல் ஜனாதிபதி ஜோர்ஜ் சாம்பயோவுடன் (Jorge Sampaio) ஒருமணி நேரம் பேசிய பின்னர் பிரதமர் பதவியை பரோசோ கைவிட்டார். பரோசோ, தனது எதிர்கால கமிஷனர் பதவியைக் கருத்தில்கொண்டு, போர்த்துக்கலின் ''தேசிய நலனை'' பேணிக்காக முடியும் என்ற நம்பிக்கையில், தான் பிரதமர் பதவியை துறப்பதாகவும், ''ஜனநாயக நிறுவனங்களின்'' ஸ்திரத்தன்மையில் அவர் நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும் பாசாங்கு காட்டினார்.

பரோசோவினுடைய பதவி விலகலானது, பொதுத்தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியினர்கள் தோல்வியடைவார்கள் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்மையில் நடந்த ஐரோப்பியத் தேர்தல்களில் அவர்கள் கடுமையாக தோற்கடிக்கப்பட்டனர். என்றாலும், பரோசோ உடனடியாக தேர்தல்கள் நடத்தவேண்டுமென்ற சோசலிஸ்ட் கட்சியினரின் ஆலோசனையைத் புறக்கணித்து, லிஸ்பேன் மேயராக தீவிர வலதுசாரியான பேட்ரூ சந்தான லோப்பேசை நியமித்தார். சோசலிஸ்டுகளுக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கும் இடையில் பொருளாதார பிரச்சனைகளில் அடிப்படை வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிற வகையில் சோசலிச கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி, பரோசோ கொண்டுவந்திருக்கும் சிக்கன நடவடிக்கைகளை லோப்பேஸ் மாற்ற முயன்றால் அரசியல் சட்டப்படி தான் நடவடிக்கையில் தலையிட முடியும் என்று அச்சுறுத்தியுள்ளார்.

Top of page