World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

New Sinhala extremist party fields Buddhist monks in Sri Lankan elections

புதிய சிங்கள தீவிரவாத கட்சி பெளத்த பிக்குகளை இலங்கை தேர்தல்களில் களம் இறக்கியுள்ளது

By Panini Wijesiriwardana and K. Ratnayake
1 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

"சமாதான முன்னெடுப்புக்கும்" ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்திற்கும் எதிரான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பேரினவாத ஆர்ப்பாட்டங்கள், நாட்டை மீண்டும் யுத்தத்திற்கு இட்டுச் செல்லும் அபாயகரமான இனவாத சக்திகளின் இயக்கத்திற்கு களம் அமைக்கும் என உலக சோசலச வலைத் தளமும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றது.

குமாரதுங்க, பெப்ரவரி 1ம் திகதி அரசாங்கத்தை பதவி விலக்கியவுடன், ஜாதிக ஹெல உறுமய அல்லது தூய சிங்கள தேசிய மரபுரிமை அமைப்பு உருவாக்கப்பட்டமை இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதியையும் மற்றும் முழு அரசியல் ஸ்தாபனத்தையும் மேலும் வலதுபுறத்திற்கு தள்ளுவதற்காக, தீவிர வலதுசாரி கருவிகளான சிங்கள உறுமய மற்றும் அதனுடன் இணைந்த பெளத்த பிக்குகளின் அமைப்பான ஜாதிக சங்க சம்மேளனத்தாலும் ஜாதிக ஹெல உறுமய ஸ்தாபிக்கப்பட்டது.

வெளிப்படையான சிங்கள பெளத்த மேலாதிக்க வேலைத் திட்டத்துடன் நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் 252 பெளத்த பிக்குகளை வேட்பாளர்களாக ஜாதக ஹெல உறுமய நிறுத்தியுள்ளது. ஐ.தே.மு மற்றும் தமிழீழ வடுதலைப் புலிகளுடனான அதன் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கும் எதிராக போதிய இறுக்மான நடவடிக்கைகளை குமாரதுங்கவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேற்கொள்ளவில்லை என ஜாதிக ஹெல உறுமய விமர்சிக்கிறது.

ஜாதிக ஹெல உறுமயவின் விமர்சனம் குமாரதுங்கவின் ஆபத்தான சமநிலைப்படுத்தும் நடவடிக்கையயை அம்பலப்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு அதிகளவில் இணங்கிப் போவதாக குற்றும்சாட்டும் அதே வேளை, நாட்டின் 20 வருடகால யுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவர நெருக்கிவரும் பெரும் வர்த்தகர் பகுதியினர் மற்றும் பெரும் வல்லரசுகளையும் அந்நிய படுத்தாமல் இருப்பதில் அவர் கவணமாக இருக்கின்றார். ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் வேலைத் திட்டம் தற்போதைய போர் நிறுத்தத்தை பராமரிக்கவும் விடுதலைப் புலிகளுடன் அதன் சொந்த பேச்சுவார்த்தைய ஆரம்பிப்பதற்கும் கதவுகளை திறந்துவிட்டுள்ளது.

மறுபக்கத்தில், ஜாதிக ஹெல உறுமய சமாதானப் பேச்சுவார்த்தையை மீளத்தொடங்குவதை எதிர்க்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை மீண்டும் மீணடும் கண்டனம் செய்த சிங்கள உறுமயவும் ஜாதிக சங்க சம்மேளனமும், நோர்வே மத்தியஸ்த்தர்களை விடுதலைப் புலிகளின் கைக்கூலிகள் என கண்டனம் செய்ததுடன் யுத்தத்திற்கு தயார் செய்வதன் பேரில் இலங்கை இராணுவத்தை பலப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தன. ஐ.தே.மு அரசாங்கத்தை பதவி நீக்கியதற்காக குமாரதுங்கவை பாராட்டிய போதிலும், ஜாதிக ஹெல உறுமய தாம் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிப்பதற்கான நிபந்தனைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான அவகாசத்தை கோருகிறது. அவர் தமாதப்படுத்தியதை அடுத்து, ஜாதிக சங்க சம்மேளன தலைவர்கள் அழுத்தத்தை மேலும் இறுக்குவதற்காக ஜாதிக ஹெல உறுமய கட்சியை அமைத்தனர்.

ஜாதிக ஹெல உறுமயவின் செயற்படும் வழிமுறை பயமுறுத்தலும் குண்டர் நடவடிக்கையுமாகும். கடந்த செப்டெம்பர் மற்றும் அக்டோபரில், ஜாதிக சங்க சம்மேளனமும் சிஹல உறுமயவும் ஆத்திரமூட்டும் இரண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தின: கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பெளத்த விகாரைகளின் சிதைவுகளை "பரிசீலிக்க" சென்றன. கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாமை நோக்கி ஊர்வலம் சென்றன. இந்த இரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் விடுதலைப் புலிகளுடன் ஆத்திரமூட்டல் கலவர மோதலை உருவாக்கும் சாத்தியப்பாட்டிற்கு இட்டுச் சென்றது.

கிறிஸ்தவ சபைகளையும் முறையற்ற மதமாற்றத்தையும் தடைசெய்யுமாறு கோரி ஜாதிக சங்க சம்மேளனமும் சிஹல உறுமயவும் தீவிர கிறிஸ்தவ விரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. குறிப்பாக கிறிஸ்தவ குழுக்கள் ஏழைகளுக்கு நலன்புரி சேவைகளையும் கல்வி வேலைத்திட்டங்களையும் வழங்கி மதமாற்றத்தை மேற்கொள்கின்றன என பெளத்த உயர்பீடத்தினர் ஆத்திரமடைந்திருந்தர். கடந்த ஆறு மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொழும்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அமைப்புக்களும் காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின. பாதிப்புக்குள்ளான பலர் இந்த தாக்குதல்களில் பெளத்த பிக்குகள் நேரடியாக ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டினர்.

கடந்த டிசம்பரில் அதன் தலைவரும் பெளத்த மதகுருவுமான கங்கொடவில சோம தேரர் ரஷ்யாவிற்கான பயணத்தின் போது இறந்தவுடன் இந்த பிரச்சாரம் மேலும் வெறித்தனமானதாக அமைந்தது. எந்தவொரு உறுதியான ஆதாரமும் இன்றி, இந்த இறப்பு --கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்ட-- சதி முயற்சிகளின் விளைவு எனக் குற்றம்சாட்டியதோடு, கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதலை அதிகரித்துடன் அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் அழுத்தத்தை அதிகரித்தன. "முறையற்ற மதமாற்றத்திற்கு" முடிவுகட்டு என்பது ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாகும்.

ஜாதிக ஹெல உறுமய, சிங்கள பெரும்பான்மையினதும் பெளத்த மதத்தினதும் மேலாதிக்கத்துடனான ஒரு அரசை அமைப்பதன் அடிப்படையில், சிறுவியாபாரிகளதும் விவசாயிகளதும் மற்றும் அரச இயந்திரத்தினதும் அதிருப்தியடைந்த தட்டினருக்கும் பிற்போக்குத்தனமாக அழைப்பு விடுக்கின்றது. அதனுடைய வேலைத் திட்டம் ஏனைய மதங்கள், சிறுபான்மை இனங்கள் குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஆழமடையச் செய்யும்.

ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளரும் பெளத்த பிக்குவுமான உடுவே தம்மாலோக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் இதை (எமது பிரச்சாரத்தை) தேர்தலுக்கு போட்டியிடுவதாக கருதவில்லை. புத்த சாசனத்தை (பெளத்த மதத்தை) பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகவும், நாடு எதிரிகளின் கைகளுக்கு செல்வதை தடுக்கும் நடவடிக்கையாகவும் கருதுகிறோம்" எனக் கூறினார். ஆளும் வர்க்கத்தின் இராணுவவாத தட்டினரின் மனோபாவத்தை பிரதிபலிக்கும் வகையில், இராணுவத்தின் கடந்த கால தோல்விகள் "அரசியல் தலையீட்டினால்" ஏற்பட்டது எனவும், விடுதலைப் புலிகளை நசுக்குவதற்கு இராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமய அழைப்பு விடுக்கிறது.

ஜாதிக ஹெல உறுமய, மார்ச் 2 கண்டியில் ஒரு கூட்டத்தில் அதனுடைய வேலைத் திட்டத்தை வெளியிட்டது. இடமும் திகதியும் சிங்கள பெளத்த ஆதிக்கத்தை கோடிட்டுக் காட்ட நிதானமாக தெரிவு செய்யப்பட்டது. பிரித்தானியர்களால் வெற்றிகொள்ளப்படுவதற்கு முன்னர், கண்டி சிங்கள அரசின் இறுதி தலைநகரமாக இருந்ததுடன், 1815 மார்ச் 2ம் திகதி கண்டி ஒப்பந்தத்தின் படி சம்பிரதாய பூர்வமாக ஆட்சி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்னர், ஜாதிக ஹெல உறுமய பிக்குகள் இலங்கை பெளத்திற்கு முக்கிய பங்காற்றும் தலதா மாளிகைக்கு அருகில் ஒரு மத வழிபாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன் 12 அம்ச வேலைத் திட்டம், சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பாக உதட்டளவில் கூறும் அதே வேளை, "இலங்கை நாடு கடந்த காலத்தில் இருந்தது போல் பெளத்த கொள்கையின்படி கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கும் மேலாக, சிங்கள நாட்டின் தேசிய உரித்துடமை, ஏனையவர்களுக்கும் மேலாக நாட்டை கட்டியெழுப்பி அதன் நாகரீகத்தையும் கலாச்சாரத்தையும் வளர்த்தவர்களுக்கே உரியது என ஜாதிக ஹெல உறுமய பிரகடனப்படுத்தியது.

இந்த ஜனநாயக விரோத, மதகுருமார்களின் அரசு என்ற கலவை, ஈரானில் இஸ்லாமிய முல்லாக்கள் அல்லது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு சமமானதாகும். ஜாதிக ஹெல உறுமய "தர்ம ராஜ்ஜியத்தை" ஸ்தாபிப்பதை வலியுறுத்துகிறது. அதாவது உயர்மட்ட மத குருக்கள் அரசாங்கக் கொள்கைகளுக்கு தீர்ப்பளிப்பவர்களாக அமரும் மற்றும் பெளத்த மத கோட்பாடுகளின்படி ஆட்சி செய்யப்படும் ஒரு நாடாகும். ஏனைய மதங்கள் இரண்டாந்தரமாக இருப்பதோடு, திட்டமிடப்பட்ட பாரபட்சங்கள் மற்றும் ஒடுக்குமுறைகளும் மேற்கொள்ளப்படும்.

ஜாதிக ஹெல உறுமய, ஒரு பகுதி வியாபாரிகளிடம் இருந்தும், இராணுவத்திடம் இருந்தும் யுத்தத்தினால் பதவிகளையும் இலாபத்தையும் பெற்றுக்கொண்ட அரச அதிகாரத்துவத்திடம் இருந்தும் குறிப்பிடத்தக்க நிதி மற்றும் அரசியல் ஆதரவையும் பெற்றுக்கொள்கிறது. இலங்கையின் தராதரத்திற்கு அதனுடைய தேர்தல் பிரச்சாரத்தில் மிதமிஞ்சிய செலவு செய்தது. சுமார் ஒரு தொழிற்சாலை தொழிலாளியின் சம்பளத்தின் மூன்று மடங்கிற்கு சமனான தொகையான ரூபாய் 20,000ற்கு 15 வினாடிகள் தொலைக்காட்சி விளம்பரத்தை அடிக்கடி ஒலிபரப்பியதோடு ஜாதிக ஹெல உறுமய வேட்பாளர்கள் நாடெங்கும் பயணம் செய்வதற்கு டசின் கணக்கான வாகனங்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். ஜாதிக ஹெல உறுமய நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்களையும் சிறு புத்தகங்களையும் விநியோகித்தது.

இனவாத அரசியலின் வரலாறு

1948 சுதந்திரத்தில் இருந்து இலங்கை அரசின் சிந்தனாவாதத்தின் அச்சாணியான சிங்கள இனவாதத்தை ஊக்குவிப்பதில், பெளத்த பீடத்தன் முக்கிய பாத்திரத்தை ஜாதிக ஹெல உறுமயவில் உள்ள பிக்குகள் பிரதிபலிக்கின்றனர். ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமூக தீங்குகளுக்காக அழுது புலம்பும் அதே வேளை, சிங்களம் புகழ்பெற்றுவந்த கடந்த காலத்தை திரும்பிப்பார்த்த பெளத்த மறுமலச்சிவாதம், குறிப்பாக ட்ரொட்ஸ்கிச லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க) செல்வாக்கு அதிகரித்து வருவதற்கு எதிராக, முதலாளித்துவ வர்க்கத்தினால் திணிக்கப்பட்டுள்ள பேரினவாத அரசியலின் ஒரு மூலப் பொருளாக எப்போதும் இருந்து வந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) அரசாங்கத்தை மண்டியிடச் செய்த 1953 ஹர்த்தால் இயக்கத்தின் வேலை நிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் ஒரு திருப்புமுனையாக விளங்கின. ல.ச.ச.க தலைமையிலான எதிர்ப்பு விரிவடைவதைக் கண்டு வெருண்ட ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி, குமாரதுங்கவின் தகப்பனாரான எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமது சக்தியை வழங்கினார். அவர் மக்கள் நலன் சார்ந்த வாய்வீச்சுக்கள் மூலமும் மற்றும் சிங்களத்தை மட்டும் அரசகரும மொழியாக்கும் பேரினவாத கோரிக்கையின் மூலமும் சிங்கள கிராமப்புற ஏழைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

1956 தேர்தலின் போது ஐக்கிய பிக்கு முன்னணியின் கீழ் அமைக்கப்பட்ட பெளத்த பிக்குகள் பண்டாரநாயக்கவின் கொள்கையை ஆதரிப்பவர்களாக மாறினார்கள். 12,000 இற்கும் மேற்பட்ட பெளத்த பிக்குகள் நாடுபூராவும் சென்று கிறிஸ்தவத்திலிருந்தும் மற்றும் ஐரோப்பிமயமான ஐ.தே.க பிரபுக்களிடம் இருந்தும் பெளத்த மதத்தை காப்பாற்றுவதன் பேரில் ஸ்ரீ.ல.சு.க வின் வெற்றிக்கு அழைப்பு விடுத்தனர். ஸ்ரீ.ல.சு.க அதிகாரத்திற்கு வந்தது, ஆனால் பண்டாரநாயக்க தானே வளர்த்த பிற்போக்குவாத சக்திகளுக்கு பலியானார். 1959ல், சிங்கள பெளத்த அரசை உருவாக்க பண்டாரநாயக்க மேலதிக நடவடிக்கை எடுக்காததையிட்டு ஆத்திரமடைந்த பிக்கு ஒருவரால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

ல.ச.ச.க படிப்படியாக சிங்கள பேரினவாதத்திற்கு அடிபணிந்ததுடன், 1964ல் அதன் சோசலிச கொள்கைகளை முழுமையாக கைவிட்டு பிரதமர் ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க கூட்டரசாங்கத்தில் இணைந்துகொண்டது. ல.ச.ச.க தலைவர்கள் புனித பல்லை தரிசிப்பதற்காகவும் பெளத்த மதபீடத்தின் ஆசியை பெற்றுக்கொள்வதற்காவும் கண்டிக்கு படையெடுத்தமை, அது முழுமையாக இனவாத அரசியலுக்குள் சரணடைந்ததை தெளிவாக வெளிப்படுத்தியது.

ல.ச.ச.க வின் காட்டிக்கொடுப்பு நேரடியாக பேரினவாத அரசியலின் வளர்ச்சியை ஊக்குவித்தது. 1970 முதல் 1977 வரையிலான இரண்டாவது பண்டாரநாயக்க கூட்டரசாங்கத்தில், சிங்களத்தை அரச மொழியாகவும் பெளத்தத்தை அரச மதமாகவும் சிறப்புப்படுத்திய இனவாத அரசியல் யாப்பை வரைவதற்கு ல.ச.ச.க பொறுப்பாக இருந்தது. தமிழர்களுக்கு எதிரான பரந்தளவிலான பாரபட்சம், தீவின் வடக்கு கிழக்கில் தனியான தமிழ் அரசை ஸ்தாபிக்கக் கோரும் விடுதலைப் புலிகள் போன்ற தமிழ் ஆயுதக் குழுக்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நேரடியாக வழிவகுத்தது

1983ல், கொழும்பில் கொடூரமான தமிழர் விரோத படுகொலைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் நாட்டின் உள்நாட்டு யுத்தத்திற்கு வழியமைத்த ஐ.தே.க வின் கீழ், அரச அணுசரனையுடனான பாரபட்சம் தொடர்ச்சியாகவும் உக்கிரமாகவும் முன்னெடுக்கப்பட்டது. இந்த அழிவுகரமான மோதலின்போது, பெளத்தமத பீடம் யுத்த முயற்சியை ஆதரித்ததோடு சில சந்தர்ப்பங்களில் இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பதில் செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்தது. மிகவும் வலதுசாரி பிக்குகள் இந்த யுத்தத்தை சவால் செய்யமுடியாத பெளத்த மேலாதிக்கத்தையும் "சிங்கள நாட்டையும்" உறுதிப்படுத்துவதற்கான ஒரு புனித மதப் போராக கருதினர். மீண்டும் பெளத்த பீடத்தில் உள்ள சக்திகள், எந்தவொரு சமாதான நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஏன், தமிழ் சிறுபான்மையினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்குவதற்கு எதிராகவும் கூட, சிங்களத் தீவிரவாத அமைப்புகளுடன் பல்வேறு கூட்டுக்களில் இணைந்துகொண்டனர்.

கடந்த காலங்களில், பெளத்த பிக்குகள் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான கட்சியான ஐ.தே.க அல்லது ஸ்ரீ.ல.சு.க ஆகிய ஏதாவது ஒரு பெரிய கட்சியை ஆதரித்தனர் அல்லது பிரச்சாரம் செய்தனர். இப்போது, இருந்துகொண்டுள்ள கட்சிகளில் இருந்து பரந்த மக்கள் தட்டினர் ஆழமாக அந்நியப்பட்டு செல்லும் நிலைமைக்கு பிரதிச் செயலாற்றும் ஒரு பகுதி பெளத்த பிக்குகள், அதை முழுமையாக பிற்போக்குவாத திசையில் திருப்பிவிட முனைகின்றனர். ஜாதிக ஹெல உறுமய கட்சியை ஸ்தாபிக்கவும், ஏப்பிரல் 2 தேர்தலில் பங்குபற்றவும் அவர்கள் தீர்மானித்திருப்பது, அரசியல் நிறுவனத்தின் உடைவினதும் நாட்டின் ஆழமான அரசியல் நெருக்கடியினதும் ஒரு பாகமாகவாகும்.

எல்லா மத அடிப்படைவாதிகளையும் போன்று, ஜாதிக ஹெல உறுமயவும், எல்லா சமூக பிரச்சினைகளுக்கும் ஒழுக்கயீனத்தை குற்றம் சாட்டுகிறது. அது "அரசியலை தூய்மைபடுத்துவதாகவும்" "நேர்மையான சமூகத்தை" மீண்டும் நிறுவுவதாகவும் வாகுறுதியளிப்பதன் மூலம், மோசடியினால் அதிருப்தியடைந்துள்ள மற்றும் வளர்ச்சியடைந்துவரும் சமூக அமைதியின்மையையிட்டு பீதியடைந்துள்ள மத்தியதர வர்க்கத்தின் பாதுகாப்பும் தகவமைவும் அற்ற தட்டினருக்கு அழைப்புவிடுக்கிறது. அதனுடைய வேலைத்திட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டி கம்பெனிகளால் அழிக்கப்பட்டுகொண்டிருக்கும் சிறு வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்க தட்டினரை பிரதிபலிப்பதாக உள்ளது. உள்ளூர் விவசாயிகளையும் மற்றும் தொழிலதிபர்களையும் அடித்தளமாகக் கொண்டுள்ள அதன் பொருளாதார வேலைத்திட்டம், "ஒரு நேர்மையான தேசிய பொருளாதாரத்துக்கு" அழைப்புவிடுப்பதுடன் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவினது வேலைத் திட்டமும் வழிமுறையும் முற்றிலும் ஜனநாயக விரோதமானது. கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிரான அதனுடைய வன்முறைப் பிரச்சாரம் அம்பலப்படுத்துவது போல், அது எதிரியாக கருதும் எவருக்கும் எதிராக சரீரரீதியான தொந்தரவுகளையும் காடைத்தனத்தையும் பயன்படுத்த தயாராக உள்ளது. கடந்த அக்டோபரில், ஜாதிக சங்க சம்மேளனமும் சிஹல உறுமயவும் சிங்கள தமிழ் கலைவிழாவுக்கு எதிராக மோசமான பிரச்சாரத்தை முன்னெடுத்ததுடன், விடுதலைப் புலிகளின் ஒரு கூட்டு என அதை கண்டனம் செய்தது. கொழும்பு அதிகாரிகள் அந்த நிகழ்வை நிறுத்தத் தவறியதை அடுத்து, ஆத்திரமூட்டலை மேற்கொண்ட சிஹல உறுமய மற்றும் ஜாதிக சங்க சம்மேளன தலைவர்கள் கூட்டத்தின் மீது குண்டர்களை கட்டவிழ்த்துவிட்டு நால்வரை காயப்படுத்தினர்.

ஜாதிக ஹெல உறுமயவின் தோற்றம் பெளத்த மதபீடத்தை பிளவுபடுத்தி ஆளும் வட்டாரத்தில் ஒரு அரசியல் அமைதியின்மையை உருவாக்கியுள்ளது. குமாரதுங்கவை ஆதரிக்கும் ஒரு ஆளும் கும்பல், இது சிங்கள வாக்காளர்களை பிளவுபடுத்தி ஐ.தே.மு வை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான ஒரு சதி என குறிப்பிடுகிறது.

பிக்குகள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதை பிக்குகளில் ஒரு பகுதியினரும் ஊடகங்களில் ஒரு பகுதியும் எதிர்த்துள்ளன. உதாரணமாக சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் சாதுவாக பின்வருமாறு சுட்டிக்காட்டியதாவது: "மக்களை நீதியாக வழிநடத்தி செல்வதற்கு இலங்கையின் அரசர்கள் பெளத்த பிக்குகளின் ஆலோசனையை தொடர்ச்சியாக கேட்டுவந்தார்கள். இன்றும் அப்படியே இருக்க வேண்டும். இங்கு இன்று பிக்குவே அரசனாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது."

ஆளும் வட்டாரத்தில் எவரும் ஜாதிக ஹெல உறுமய இனவாத வேலைத்திட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்துவதை கண்டிக்கவோ விமர்சிக்கவோ இல்லை. இந்த ஏக அமைதி இலங்கை அரசியலின் அழுக்கான இரகசியத்தை வெளிப்படுத்துகிறது. எந்தவித அழிவுகரமான பிரதி விளைவுகளையும் கணக்கில் எடுக்காது தொழிலாளர் வர்க்கத்தை பிளவுபடுத்தி பலவீனப்படுத்த கொழும்பில் உள்ள முழு அரசியல் நிறுவனமும் சிங்கள பேரினவாத்ததை பயன்படுத்திக்கொண்டது. ஜாதிக ஹெல உறுமயவுக்கு சவால் விடுக்க முடியாத சக்தியாக வளர அனுமதிக்கும் நச்சுத்தனமான அரசியல் சூழலை உருவாக்கியமைக்கு அனைத்து பிரதான கட்சிகளும் நேரடிப் பொறுப்பாளிகளாவர்.

இலங்கை தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்டுள்ள ஆபத்துகளில் ஜாதிக ஹெல உறுமயவின் உருவாக்கம் மேலும் ஒரு எச்சரிக்கையாகும். ஜனாதிபதி குமாரதுங்க, பேரினவாத உணர்வை தூண்டிவிட்டு ஐ.தே.மு அரசை ஜனநாயக விரோதமான முறையில் வெளியேற்றியதன் மூலம், ஏற்கனவே வெடிக்கும் நிலையில் இருப்பதை மேலும் எரியச் செய்துள்ளார். ஏப்பிரல் 2 தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் அடுத்த அரசாங்கம் ஆழமான சமூக அரசியல் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும். கடந்த காலத்தைப் போல், ஆளும் வர்க்கம் தனது ஆட்சியை தூக்கிநிறுத்த ஜாதிக ஹெல உறுமய போன்ற கருவிகளை அணிதிரட்ட தயங்கப்போவதில்லை.

Top of page