World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

Sudan: western powers move towards military intervention

சூடான்: இராணுவ தலையீட்டிற்கு மேற்கு நாடுகள் முயற்சி

By Chris Talbot
7 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

மேற்கு சூடானில் உள்ள Dadfur-ல் மனிதநேய நிலவரம் படுமோசமாக ஆகிக்கொண்டிருக்கிறதென்று உதவி அமைப்புக்கள் தகவல் தந்திருக்கின்றன.

ஐ.நா உலக உணவு திட்ட அமைப்பு (WFP) ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் இடம்பெயர்ந்து, உணவு அளிப்புக்கள் இல்லாது பிரதானமாக முகாம்களில் தங்கி உள்ளவர்களிடம் சென்று சேர்வதற்காக உணவுப்பொருட்களை விமானம் மூலம் வழங்க தொடங்கியிருக்கிறது. மழைக்காலம் தொடங்கி இருப்பது சில சாலைகளை வாகனங்கள் செல்ல முடியாததாக ஆக்கிவிட்டது, மேலும் குடிப்படைகள் நடமாடுவதால் பயணம் செய்வது ஆபத்தாகிவிட்டது.

WFPன் சூடான் டைரக்டர் இதுபற்றி விளக்கம் தரும்போது ''விமானம் மூலம் உணவுப் பொருட்களை வழங்குவது செலவு அதிகம் பிடிக்கும் கடைசிக்கட்ட நடவடிக்கைதான், ஆனால், இந்த நேரத்தில் Dadfur-ன் பல பகுதிகளை சென்றடைவதற்கு அதைத்தவிர வேறுவழியில்லை. Médecins sans Frontières (MSF) உதவியமைப்பு சாவு விகிதங்கள் ஆபத்தான கட்டத்தைவிட அதிக அளவிற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. குடி தண்ணீர், உணவு, குடியிருப்பு மற்றும் கழிப்பிட வசதிகள் பற்றாக்குறை அதிகமிருப்பதால் சாவு எண்ணிக்கை "அவசர எல்லைக்கு" மேல் பெருகிக்கொண்டு போகிறது. கழிப்பிட வசதிகள் இல்லாததால் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு அதிகமாகி அதுவே சாவு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. "இது போன்ற சண்டைகளில் சிவிலியன்களுக்கு கிடைக்கவேண்டிய எந்த உதவியும் இப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை. சில பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் மடிகின்ற பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது" என்று MSF தலைவர் தெரிவித்தார்.

மேற்கு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் தோரணை காட்டிக்கொண்டிருந்தாலும், அந்தப்பகுதியில் மனிதநேயப் பேரழிவை தடுத்து நிறுத்துவதில் ஈடுபட்டுள்ள WFP மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நிதியாதரவு முற்றிலும் போதுமானதாக இல்லை. WFP தனது உதவிநடவடிக்கைகளுக்கு தேவைப்படும் நிதியில் பாதியைத் தான் பெற்றிருக்கிறது. Dadfur-ல் அவசர உதவிகளுக்கு 2004-ம் ஆண்டில் தேவைப்படும் 195- மில்லியன் டாலர்களில் 78.5 மில்லியன் டாலர்கள்தான் கிடைத்திருக்கின்றன. தற்போது செப்டம்பர் வரை கூடுதலாக விமான எரிபொருளுக்கும், செலவிட வேண்டியிருக்கிறது. தேவையான அளவிற்கு இல்லாமல் தாறுமாறாக உணவுசப்ளை கிடைத்துவருவதாக MSF கூறியுள்ளது. அண்மையில் WFP உணவு வழங்குவது சற்று சீரடைந்திருந்தாலும், தேவையில் பாதியைத்தான் ஜூலை மாதம் பூர்த்தி செய்ய முடிந்தது. மே, ஜூன் மாதங்களில் நான்கு அகதிகள் முகாம்களில் சத்தூட்டம் பற்றிய ஆய்வுகள் நடத்தப்பட்டன. சத்தூட்ட குறைபாடு 4.1 முதல் 5.5 சதவீத அளவிற்குள்ளதாக அந்த ஆய்வுகள் தெரிவித்தன.

மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ளவர் களுக்கு Dadfur, சூடானை பூதாகரமாக சித்தரிப்பதற்கு இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்துவதற்கு போர்த்தளவாடங்களை வழங்கி இருக்கின்றன.

அரசிற்கு ஆதரவான Janjaweed குடிப்படைக்குழு, கருப்பர் இன ஆபிரிக்க மக்களுக்கெதிராக புரிந்துவரும் கொடுமைகளை "இனப்படுகொலை" என்று அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள ஒரு தீர்மானம் கண்டிக்கிறது. இதைத்தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தயாரித்த ஒரு ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. Janfaweed க்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அந்தத் தீர்மானம் சூடானுக்கு 30-நாட்கள் அவகாசம் தந்திருக்கிறது, அப்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால் சூடான் பொருளாதார தடை நடவடிக்கைகளை சந்திக்க வேண்டிவரும்.

சூடான் அரசாங்கத்தின் ஆதரவோடு Janjaweed கிராமங்களை அழித்திருக்கிறது, கொலைகள் செய்திருக்கிறது, கற்பழிப்புக்களில் ஈடுபட்டிருக்கிறது என்று நம்பத்தக்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக பத்து லட்சம் மக்கள் வரை தங்கள் வீடுகளை விட்டுவேளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சிவிலியன் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக திட்டமிட்டு உணர்வுகளை கிளப்பிவிடும் மிகைப்படுத்தப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்ற ஒன்றரை ஆண்டுகளில் Darfur -ல் - பிரான்சு நாடு அளவிற்குள்ள பகுதியில்- ஏறத்தாழ 30,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பகுதி அகதிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்காததால் நிகழ்ந்த சாவுகள், இப்போது அவற்றை 1994-ல் ருவாண்டாவில் நடைபெற்ற கொலைகளோடு ஒப்புநோக்கிக் கூறுகிறார்கள். அப்படிக் கூறுவது முற்றிலும் மோசடியான ஒன்றாகும். 1994-ல் ருவாண்டாவில் 10-லட்சம் மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர்.

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் கொசோவாவில் இராணுவத் தலையீட்டிற்கு முந்திய ஆண்டுகளில் "இனக்கொலை" என்றும் "இனங்கள் வெளியேற்றப்படுவதாகவும்" திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே வந்தார்கள். இந்த சம்பவங்கள் அனைத்திலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆபிரிக்க அக்கறைகள் பற்றி மேலெழுந்தவாரியாக ஆராய்ந்தால் கூட சூடானைப்பொறுத்த வரை மனித நேயக் கவலைகளுக்கு அப்பாற்பட்ட ஏதோ இருப்பது தெளிவாகத்தெரியும்.

பிரிட்டன், அமெரிக்கா, நோர்வே மற்றும் இத்தாலி ஆகியவை சூடான் அரசிற்கும் அந்த நாட்டின் தெற்கு மண்டலத்திலுள்ள சூடான் மக்கள் விடுதலைப்படைக்கும் (SPLA) இடையில் ஒரு சமாதான பேரத்தை பூர்த்தி செய்யும் கட்டத்திற்கு வந்திருக்கின்றன.

கடந்த 21 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவிற்கு கொண்டுவர சூடான் அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான கண்டனங்கள் பெரும்பாலும் கைவிடப்பட்டன. 1990கள் முழுவதிலும் சூடான் அரசாங்கத்திற்கு எதிராக SPLA வை ஏறத்தாழ பகிரங்கமாக அமெரிக்கா ஆதரித்துவந்தது. இதில் ஒரு பிரதான கண்ணோட்டம் என்னவென்றால் அந்த மண்டலத்தில் ஏதாவது ஒருவகையில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்பதுதான். அப்பகுதியிலிருந்து தினசரி 3,45,000- பீப்பாய்கள் கச்சா எண்ணெய் அனுப்பப்படுகிறது. தற்போது செயற்பட்டுவரும் எண்ணெய் கிணறுகளில் மட்டுமே அமெரிக்க எரிபொருள் தகவல் நிர்வாக அமைப்பு கொடுத்திருக்கும் தகவலின்படி 6,60,000 பீப்பாய்கள் முதல் 1.2 பில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய் எடுக்க வேண்டியுள்ளது.

எண்ணெய் குழாய் பாதைகளில் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக, உள்ளூர் மக்களுக்கெதிராக சூடான் அரசாங்கம் குடிப்படைக்குழுவினரை பயன்படுத்தி, எண்ணெய் தயாரிக்கும் மண்டலங்களில் இருந்து கிராமம் கிராமமாக அவர்களை வெளியேற்றிய பொழுது, அமெரிக்கா தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தது.

மேலும், 2003-ல் SPLA மேற்கு நாடுகளின் சலுகைகளை பெற்றுள்ளது என்பது தெளிவாக தெரிந்ததும், Darfur மண்டலத்திலுள்ள போராளி குழுக்களான சூடான் விடுதலை இராணுவம் (SLA) மற்றும் நீதி மற்றும் சமத்துவ இயக்கம் (JEM) ஆகியவை ஆரசாங்கத்திற்கு எதிராக தங்களது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன.

சூடான் ஆட்சி தனது இதர பிராந்தியங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய பிரித்தாளும் அணுகுமுறையை பயன்படுத்தியது (பிராந்தியத்தை முதலில் "ஆபிரிக்க" மற்றும் "அரபு" என்ற இரு சிக்கலான இனக்குழு ரீதியான வேறுபாடுகளுக்குள் பிரிவினைகளை திணித்திருந்த பிரிட்டிஷ் காலனி ஆட்சியைப் பின்பற்றியது).

Janjaweed குடிப்படைகளுக்கு ஆயுதங்களும், ஆதரவும் தரப்பட்டு ஏராளமான மக்கள் அந்த மண்டலத்திலிருந்து கிராமம் கிராமமாக வெளியேறிய நேரத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களது சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஓராண்டிற்கு மேல் கண்ணை மூடிக்கொண்டிருந்தன. அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பது சென்ற மாதத்தில் உலக தலையங்கங்களில் அந்த அளவு அக்கறையாக வெளிவரத் தொடங்கிய பொழுதுதான் அல்லது அதற்குப் பின்னர்தான் சூடான் அரசிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மற்றும் பொருளாதாரத் தடைவிதிப்பது பற்றிய கோரிக்கையும் பிரச்சனையாக ஆகிவிட்டது. ஈராக்கில் உருவாகிவரும் பேரழிவிற்கு மாற்றாக ஆறுதல் அளிக்கிற வகையில் பட்டினி கிடக்கும் மக்களுக்கு பாதுகாப்பளிக்க இராணுவத்தலையீடு பயன்படுத்தப்பட்டது பற்றி ஊடகங்களில் அக்கறைகாட்டுவதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

தற்போது அமெரிக்கா ஆபிரிக்க யூனியனை Darfur-க்கு பாதுகாப்பு படையை அனுப்புமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறது. முப்பது நாட்களுக்குப் பின்னர் சூடான் அரசாங்கத்தின் நடவடிக்கை போதுமானதாகயிருக்காது என்று ஊகிக்கப்படுவதால், இத்தகைய நடவடிக்கைக்கு அமெரிக்கா முயன்று வருகிறது. AU இதுவரை நைஜீரியாவிலும் ருவாண்டாவிலுமிருந்து 300- துருப்புக்களை அனுப்ப சம்மதித்திருக்கிறது. ஆனால் தற்போது இதை 2000 துருப்புக்களாக உயர்த்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிறிஸ்துவ மதபோதனை அமைப்புக்கள் அண்மையில் புஷ் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. "ஆபிரிக்கா யூனியன் பாதுகாப்பு படையை விரிவுபடுத்தவும் அதற்கு மிகவும் தேவையான சாதனங்களையும் வளங்களையும் ஆராயுமாறு" அழைப்பு விடுத்து, மேற்கு நாடுகளிலிருந்து துருப்புக்களை அனுப்புதல் உள்பட இருக்கின்ற தலையீட்டுக்கான அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அந்தக் கடிதம் புஷ் நிர்வாகத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அமெரிக்காவில் உள்ள ஆபிரிக்க நடவடிக்கை குழுவும், நாடாளுமன்ற கருப்பர் இன தேர்வுக்குழுவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவலுக்கு, அந்த மனுவில் அமெரிக்க நிர்வாகம் டார்பர் தொடர்பாக ''இனக்கொலை'' என்ற சொல்லை பயன்படுத்துமாறும் "அட்டூழியங்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் மனிதநேய உதவியை உத்திரவாதப்படுத்துமாறும்" கேட்டுக்கொள்ளும் ஒரு மனுவைத் தந்தன.

ஞாயிற்றுக்கிழமை, "இன்டிபெண்டன்ட்'' செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையின்படி, பிரிட்டனின் 12-வது காலாட்படைப்பிரிவு சூடான் நடவடிக்கைக்காக தயார் நிலையில் உள்ளது. டார்பரின் தொலைதூர பாலைவன மண்டலத்திற்கு துருப்புக்களை அனுப்புவதில் கேந்திர படை மற்றும் தளவாடங்கள் நகர்த்தல் பிரச்சனைகள் உள்ளன என்று மூத்த பிரிட்டிஷ் அதிகாரியை மேற்கோள் காட்டி அந்தக்கட்டுரை விவரிக்கின்றது.

சப்ளைகளை லிபியா வழியாக அனுப்பவேண்டுமென்று ஒரு அதிகாரி தெரிவித்தார். லிபியா தலைவர் கேர்னல் கடாஃபி' தற்போது புதிய ஆதரவாளராக மாறியிருக்கிறார். இது ஒரு சிக்கல் நிறைந்த நடவடிக்கை ஆகும், 2000- முதல் 5000-வரை துருப்புக்கள் போக்குவரத்தில், பொறியில் மற்றும் செய்தித் தொடர்பில் ஈடுபடுத்த வேண்டி உள்ளது, மற்றும் இயலுமானால் சாட் நாட்டை முன்னணி தங்கு தளங்களாக பயன்படுத்திக்கொள்ளும்.

வான் பாதுகாப்பு வல்லுநர்களின் கருத்துப்படி சூடானிடம் 40-க்கு மேற்பட்ட ரஷ்ய மற்றும் சீன இன்டர் செக்டர் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் உள்ளன என்பதால், இதற்கொரு மாற்றுத்திட்டமான செங்கடல் மற்றும் Dijibouti- ல் உள்ள பிரான்ஸ் தளத்திலிருந்து விமானங்கள் மூலம் படைகளை அனுப்புவது சிக்கல் நிறைந்தது என்று விமானப்படை நிபுணர்கள் கருதுகின்றனர்.

பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் எதிர்கட்சி பிரதிநிதியான ஜோன் பெர்கோ- தற்போது ராஜ்ஜியத் துறைமுயற்சிகள் "காலம் கடந்துவிட்டவை, பயன்தர முடியாதவை" என்று குறிப்பிட்டதுடன் "சில நாட்களில்" அந்த நாட்டில் மனிதநேய நெருக்கடியில் தளர்வு ஏற்படாவிட்டால் பிரிட்டிஷ் துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டுமென்று கோரியுள்ளார்.

சாட் நாட்டிலுள்ள தளங்களைப் பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பிரிட்டன் ஏதாவது ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. பிரான்சின் முன்னாள் காலனியான சாட் நாட்டில் சூடான் எல்லையில் பிரான்ஸ் 200-முதல் 1000- துருப்புக்களை வைத்திருக்கிறது.

சாட் நாட்டிலுள்ள பிரான்ஸ் தூதர் ''Jean Pierre Bercot" தற்போதைக்கு தமது நாட்டு துருப்புக்கள் சாத் நாட்டு எல்லைக்குள்தான் இருக்கும் என்றும் அந்த நாட்டு எல்லையை காக்கும் என்றும் கூயிருப்பதாக BBC தகவல் தந்திருக்கிறது. எல்லை 1,200 கிலோமீட்டர் உடையது (745- மைல்கள்) என்பதை எடுத்துக்கொண்டால், துல்லியமாக அதன் அர்த்தம் என்ன என்பது தெளிவாக விளக்கப்படவில்லை. அது மட்டுமல்லாமல் ஜன்ஜாவீத் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி 1,80,000 சூடான் அகதிகள் சாட் நாட்டில் தங்கியுள்ளனர், எல்லைதாண்டி வந்து தாக்குதல் நடத்தினால் அவர்களை காப்பாற்ற முடியுமா என்ற கேள்வியை பிரான்ஸ் நாட்டுத் தூதர் தவிர்த்துவிட்டார். பிரான்ஸ் துருப்புக்கள் பயிற்சி அளிப்பதாகக் கூறப்படும் எண்ணிக்கை குறிப்பிடப்படா சாட் நாட்டு படைகள் பிரெஞ்சுத்துருப்புக்களுடன் சேர்ந்து கொள்ளும். டார்பரில் தற்போது உள்ளAfrican Union ஐ சேர்ந்த 80- பார்வையாளர்களுக்கு உதவும்.

ஆகஸ்ட் -4- புதன்கிழமையன்று அரசாங்கம் ஏற்பாடு செய்த ஒரு பேரணியில் பல்லாயிரக்கணக்கான சூடான் மக்கள் கார்ட்டூமில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு அணிவகுத்துச் சென்று மேற்கு நாடுகளின் தலையீடுபற்றிய அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு லட்சம் மக்கள் இந்தக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் அன்னான் அன்னான் நீ (ஐ.நா பொதுச்செயலாளர்) கோழை என்று கண்டித்தனர் மற்றும் "அமெரிக்கர்கள் எங்களை ஆள்வதற்கு முடியாது" என்று முழக்கமிட்டனர்.

ஆனால் பின்னணியில் சூடான் அரசாங்கம் மேற்கு நாடுகளின் நிர்பந்தத்திற்கு கட்டுப்பட்டு Janjaweed குடிப்படையை கட்டுப்படுத்தி வருகிறது. ஐ.நா பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் அடுத்த நான்கு மாதங்களில் அந்த மண்டலத்தில் சூடான் தனது துருப்புக்களை 12000- ஆக உயர்த்தவிருக்கின்றது.

மனித உரிமைக்குழுக்கள் குற்றம் சாட்டுவதைப்போல் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு திரும்பி வருமாறு சூடான் அரசாங்கம் மக்களைக் கட்டாயப்படுத்துவதற்கு எந்தவிதமான சான்றையும் Darfur ல் உள்ள ஐ.நா குழு பார்க்கவில்லை. மனிதநேய உதவிகளுக்கு அச்சுறுத்தலும், பொதுமக்களுக்கான பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலும் அரசாங்க ஆதரவு குடிப்படைகளிலிருந்து மட்டும் வரவில்லை என்றும் கூட தெளிவாய்த் தெரிகிறது. SLA மற்றும் JEM படையினர் Rizeiqat மக்கள் அரபு மூலம் என்று கருதப்படும் தெற்கு டார்பரிலுள்ள கிராமங்களின் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்தி வருவதாக அல் ஜஸீரா அறிவிக்கிறது. Janjawiid போன்று வேடமிட்டுக்கொண்டு அவர்கள் ஒட்டகங்களிலும், குதிரையிலும் வந்து டிரக்குகளை சூறையாடுவதில் ஈடுபட்டிருப்பதாக உள்ளூர் அரசாங்க கவர்னர் தெரிவித்தார். SLA போராளிகள் தங்களது டிரக்குகளை நிறுத்தி உணவுப்பொருட்களை சூறையாடி சென்ற இரு சம்பவங்களை WFP யும் சுட்டிக்காட்டியுள்ளது.

Top of page