World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Corruption scandal signals sharp differences in Chinese ruling elite

ஊழல் அவதூறு சீன ஆளும் செல்வந்த தட்டினுள் கடும் வேறுபாட்டை சமிக்கை காட்டியுள்ளது

By John Chan
3 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

பொருளாதார கொள்கை செல்லுகின்ற வழி தொடர்பாக சீனாவின் உயர்மட்ட தலைமைக்குள் நிலவுகின்ற கூர்மையான பிரிவு வேறுபாடுகள் நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் அவதூறு வடிவில் வெடித்துள்ளது, ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோடு நெருக்கமான உறவு கொண்டிருக்கும் பிரதமர் வெண் ஜியாபாவோ-வையும் சூழ்ந்து கொள்ளும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

இந்த குற்றச்சாட்டின் செய்தி முதலில் குவாங்டங் மாகாணத்தை அடித்தளமாகக் கொண்ட ஷாங்கை தொழிலதிபருக்கு சொந்தமான 21st Century Economic Report செய்தித்தாளில் வெளிவந்தது. ஜூலை 1 தேதி வெளிவந்த கட்டுயிரையில் பிரதமரின் மகன், வன் யுன்சாங், ஒரு தவறான அடையாள அட்டை (ID) அடிப்படையில் 7.36 பில்லியன் ஹாங்காங் டாலர்கள் (சுமார் 900- மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பங்குகளாக பெற்றதாகக் குறிப்பிட்டது. முன்னாள் பங்குச் சந்தைகள் நெறிமுறை கமிஷனின் தலைவரின் மகன் உட்பட, பல அதிகாரிகள் பெருமளவிற்கு லஞ்சமாக பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

சீனாவின் இரண்டாவது பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான Ping An, ஹாங்காங் பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கு சிறப்பு அனுமதி பெறுவதற்காக இந்த லஞ்சம் தரப்பட்டதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. இதுதவிர Ping An வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 50- சதவீத அளவிற்கே முதலீடு செய்யவேண்டுமென்ற நெறிமுறையை தவிர்க்க முயன்றது. இதில் அந்த நிறுவனம் பதிவு செய்யப்படுமானால், அரசுக்கு சொந்தமான கம்பெனியின் முன்னாள் தலைவர், Ma Mingzhe-க்கு 10- பில்லியன் ஹாங்காங்க் டாலர்கள் இலாபம் கிடைக்குமென்று முன்னாள் இயக்குநர் ஒருவர் விளக்கினார், அதன் மூலம் அவர் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆக்கப்படுவார்.

1990-களில், ஷென்ழென்னில் முன்னாள் பணியாற்றி வந்த அதிகாரியான Ma, Ping An இன்சூரன்ஸ் நிறுவனத்தை ஒரு சிறிய நிறுவனத்திலிருந்து மிகப்பெரிய அரசிற்கு சொந்தமான இராட்சத நிறுவனமாக மாற்றினார், அது HSBC மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற வெளிநாட்டு வங்கிகளின் பெருமளவிலான முதலீடுகளை கவர்ந்தது. குறிப்பாக 1990-களின் கடைசியில் கம்பெனி கடும்போட்டியில் ஈடுபட்டிருந்தபொழுது, அரசு அதிகாரத்துவத்தில் தனக்கிருந்த தொடர்புகளால்தான் அதை அவர் அவ்வாறு செய்ய முடிந்தது.

சென்றாண்டு கம்பனி தலைவர் பதவியிலிருந்து Ma சம்பிரதாய முறையில் நீக்கப்பட்டார். இந்த பிரச்சனை பகிரங்கமாக வெளியிடப்படவில்லையே தவிர இன்டர் நெட்டில் அந்தக் குற்றச்சாட்டு, அரசிற்கு சொந்தமான 20- பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அந்த பெரிய நிறுவனத்தை தனது சொந்த வர்த்தகத்திற்கு திருப்புவதற்கு பல்வேறு கூட்டுப் பங்கு கம்பனிகளை பதிவு செய்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு சுற்றிக்கொண்டே வந்தது. Ma-விற்கும், பிரதமரின் குடும்பத்தைச் சேர்ந்த பல உறுப்பினருக்கும் இடையே நிலவிய கடந்தகால நெருக்கமான தொடர்புகள்பற்றி Ping An -ன் முன்னாள் ஊழியர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் மகனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் 21st Century Economic Report-ல் வெளிவந்ததும், உத்தியோகரீதியான Xinhua செய்தி நிறுவனம் மற்றும் People's Daily உட்பட சீனாவின் பிரதான வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் 24 மணிநேரத்தில், அந்த செய்திகள் அனைத்துமே நீக்கப்பட்டன. அதிகாரபூர்வமான புலன்விசாரணை அறிவிக்கப்படவில்லை, அந்த செய்திகள் அனைத்தும் கைவிடப்பட்டன. இந்த காட்சிகளின் பின்னணியில், அந்த பிரச்சனைகள் எதிரொலித்துக் கொண்டுதான் உள்ளன.

Voice of America, தந்திருக்கின்ற தகவலின்படி, இந்தப்பிரச்சனை ஜூலை மாததுவக்கத்தில் நடைபெற்ற பொலிட் பீரோ நிலைக்குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது. வென் உடைய புதல்வர் சம்மந்தப்பட்ட விவகாரம் தொடர்பான தகவல் அப்போது கலந்துகொண்ட தலைவர்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. அவரது பொருளதாரக் கொள்கைகளுக்கு பிரதமர் ''அரசியல் பொறுப்பு ஏற்கவேண்டுமென்று'' Shanghai ன் கட்சிச் செயலாளர் Chen Liangyu பகிரங்கமாக சவால் விட்டார்.

பணவீக்கமடைந்த சீனப்பொருளாதாரத்தை தணிப்பதற்காக ஏப்ரலில் முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தை சென் விமர்சித்தாக புகார் கூறப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகளால் கிழக்கு கடற்கரை மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன, Shanghai இன் பொருளாதாரத்தை கீழறுப்பதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியை குன்றச் செய்யும் அச்சுறுத்தலும் உள்ளது என்று குற்றம் சாட்டினார். அப்போது பிரதமர் வென்னுக்கும், சென்னுக்கும் கசப்பான வாக்குவாதம் வெடித்தது, அது ஜனாதிபதி ஹூ தலையிட்ட பின்னர்தான் ஒரு முடிவிற்கு வந்தது. Wen-க்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தெளிவானது: அவரது பொருளாதார கொள்கைகள் மாற்றப்படாவிட்டால், ஊழல் குற்றச்சாட்டுக்களால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்பை எதிர்கொள்ள நேரிடும்.

சீன ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கண்டிப்பான படிமுறையாய் அமைந்த தலைமையை பார்க்கும்போது, ஒரு நகர கட்சித்தலைவர் சக்திவாய்ந்த ஆதரவு இல்லாமல் பிரதமருக்கு சவால்விட முடியுமென்பது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதது. சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் Straits Times ஜூலை 10-ல் முன்னாள் ஜனாதிபதி Jiang Zemin மே மாத தொடக்கத்தில் பிரதமரின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக தனது அதிருப்தியை தெரிவித்ததாக வெளிப்படுத்தியிருந்தது. பிரதமரின் கொள்கைகளை பகிரங்கமாக ஆதரித்த பொலிட் பீரோவின் நிரந்தரக்குழு உறுப்பினர்களில் ஒரே ஒரு உறுப்பினர் ஜனாதிபதி Hu மட்டுமே. அந்த முன்னணி கம்யூனிஸ்ட் கட்சி குழுவில் இடம்பெற்றுள்ள மற்றவர்கள் அனைவரும் Jiang-ன் அடிவருடிகள் ஆவர்.

சீனாவில் பெருகிவரும் முதலீட்டு நீர்குமிழி கட்டுப்பாட்டை மீறி சென்று கொண்டிருப்பதன் பயத்தின் மத்தியில் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் இடம் பெற்றன. ஆனால் கடன் கட்டுப்பாடுகள் உள்ளூர் அரசாங்கங்கள், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், மற்றும் சீனாவின் கிழக்குப்பகுதி தொழில் முகவர்கள், ஊகபேர பூரிப்பினால் ரொக்கப்பணம் பெற்றவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டனர். வென்னின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் பொருளாதாரம் மந்த நிலையில் செல்வதால் வேலையில்லாத் திண்டாட்டமும், சமுதாய கிளர்ச்சியும் ஏற்படும் என்று வாதிடுகின்றனர். வங்கிகள் கடன் வழங்குவது இறுக்கமாக்கப்பட்டிருப்பதால் பல்லாயிரக்கணக்கான சிறிய நடுத்தர தனியார் கம்பெனிகளுக்கு வங்கிக்கடன்கள் கிடைப்பது தடுக்கப்பட்டுவிட்டது, இது தற்போது மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன.

என்றாலும், பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் வெளிநாட்டு முதலீடுகள் மடைதிறந்த வெள்ளம் போல் குவிந்து கொண்டிருப்பதால் ஊக்குவிக்கப்படும் இன்றைய வளர்ச்சி விகிதத்தை நீடித்து இருக்கசெய்ய முடியாது என்று சுட்டிக்காட்டுகின்றனர். இப்படிப்பட்ட மிக வேகமான பொருளாதார வளர்ச்சியினால் மின்சாரம், நிலக்கரி, ரயில் வண்டிகள் திறன் ஆகியவற்றில் மட்டும் கடுமையான பற்றாக்குறைகள் ஏற்பட்டது மட்டுமல்லாமல், சொத்துக்களில் ஊக பேரங்கள் மற்றும் நுகர் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்றன எனவே இந்த நீர்குமிழி திடீரென்று சிதறும் போது ''மெதுவாக இறங்குவதை காட்டிலும்'' மிகக்கடுமையான சமூக தாக்கங்கள் ஏற்படும்.

பெய்ஜிங்கில் அதிகாரத்துவம் எதிர் நோக்கியுள்ள தர்ம சங்கடமான நிலை அண்மைக்கால புள்ளிவிவரங்களில் இருந்து கோடிட்டுக்காட்டப்படுகிறது. தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி கடந்த நான்கு மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டேவருகிறது, அசையா சொத்துக்களில் முதலீட்டு வளர்ச்சி முதல் காலாண்டில் 43 சதவீதமாக இருந்து இப்போது 35 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் பிரதமரின் நடவடிக்கைகள் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை குறைப்பதற்கு எதுவும் செய்ய இயலவில்லை, இந்த ஆண்டின் முதல் அரை ஆண்டுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் அளவு 34- பில்லியன் டாலர்களாகும், சென்ற ஆண்டை ஒப்பிடும் பொழுது இதே காலத்தை விட இது 12- சதவீத அதிகரிப்பாகும்.

அதிகாரப் போராட்டம்

சமுதாய மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கள் கூர்மையாகும் போது பெய்ஜிங்கில் பிரிவுகளுக்கிடையிலான (கன்னை) அதிகாரப்போராட்டம் தீவிரமடையவே செய்யும். 2002ல் Hu- ம், Wen -ம் பதவியில் அமர்த்தப்பட்டனர், ஆனால் அவர்கள் பொலிட் பீரோ நிலைக்குழுவில் தொடர்ந்து சிறுபான்மையினராகவே உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி Jiang செல்வாக்கு மிக்க மத்திய இராணுவ கமிஷனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் மற்றும் பெரிய கொள்கை மாற்றங்கள் எதுவும் நடந்துவிடாது உறுதி செய்து தருவதற்காக மத்திய கட்சி தலைமையில் தனது ஆதரவாளர்களைக் குவித்துள்ளார்.

Hu-ம், Wen-ம் அனைத்து ஸ்ராலினிச அதிகாரத்துவ அடக்குமுறை நடவடிக்கைகளை ஆதரித்தாலும், 1990-களில் நடைபெற்ற முதலீட்டு பூரிப்பினால் இலாபம் அடைந்த மத்தியதர வர்க்கத்தினரிடையே ஆட்சிக்கு ஒரு சமூக அடித்தளத்தை நிறுவுவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் அவசியமென்று சமிக்கை காட்டியுள்ளனர். சென்றமுறை 1989-ல் இந்தக் கொள்கை கடைபிடிக்கப்பட்டபோது, அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்கள் Tiananman சதுக்கத்தில் குவிந்து நடைப்பெற்றுக்கொண்டிருக்கும்பொழுது, இராணுவ படைகளால் அதை நசுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என அவர்களை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சென்ற மாதம் Hu தனது எதிரிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டார் தனது கொள்கைகளுக்கு பொதுமக்களது ஆதரவு கோரினார். கட்சி பாரம்பரியத்திலிருந்து உடைத்துக்கொண்டு, கட்சியின் நிறை பேரவையின் (plenum) நிகழ்ச்சி நிரலை பொதுமக்களது விவாதத்திற்காக வெளியிட்டார். செப்டம்பரில் நடைபெறவிருக்கும் அடுத்த நிறை பேரவை ''கட்சியின் ஆளும் திறனை வலுபடுத்துவது'' மீது குவிமையப்படுத்தும், இது Hu வின் அதிகாரத்தை வலுப்படுத்துவதை பொருள்படுத்துவதாக கூறப்படுகிறது.

தான் பதவிக்கு வந்த பின்னர், சென்ற வாரம் ஜியாங்கின் அதிகார அடித்தளம் என்று கருதப்படுகிற Shanghai-க்கு Hu விஜயம் செய்தார், அங்கு அவர் ''பருவினப் பொருளாதார கட்டுப்பாடுகள்'' கொண்டுவர வேண்டியது காலத்திற்கு ஏற்ற அவசிய நடவடிக்கை என்று அவர் வலியுறுத்தினார். கடன்கள் கட்டுப்படுத்தப்படுவது, எவ்வாறாயினும், உள்ளூர் வர்த்தகத்தையும், அரசாங்கத்தையும் கடுமையாகப் பாதித்துவிட்டது என்றார். உள்ளூர் பத்திரிகைகளில் வந்துள்ள தகவலின்படி, 159- திட்டங்களின் மதிப்பான 2.4 பில்லியன் டாலர்கள் நிறைவேற்றப்படுவது தாமதமாகியுள்ளது என்றும், சுரங்க நீர்வழித்தடம் மற்றும் புதிய ஆழ்கடல் துறைமுகத்தின் இரண்டாவது கட்டம் போன்ற உயர் முதலீட்டுத் திட்டங்கள் உள்பட பலவும் இதில் அடங்கும்.

பிரதமர் Wen மற்றும் அவரது கொள்கைகள் மீது கட்சிப் பிரிவினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு தங்களது சொந்த ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் Huவின் ஆதரவாளர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. Young Communist League- ன் அதிகாரபூர்வமான செய்திப்பத்திரிகையான China Youth Daily-யில் ஜூலை 26ல், ஒரு கட்டுரை வெளியாயிற்று, அதில் Hu வின் பிரதான கோஷ்டி தளம் --- உள்ளூர் மக்களை கட்டாயமாக வெளியேற்றிய பல ரியல் எஸ்டேட் அபிவிருத்தித் திட்டங்களுக்கு Jiang Zemin தான் பொறுப்பு என்று சுட்டிக்காட்டும் வகையில் அக்கட்டுரை அமைந்திருந்தது. இப்படி பரவலாக கடைபிடிக்கப்பட்ட நடைமுறை பொதுமக்களிடம் வெறுப்பையும், கண்டனத்தையும் கிளறிவிட்டது.

கடந்த தசாப்தங்களுக்கு மேலாக மிகப்பெரும் அளவில் இலாபம் சம்பாதித்துக் கொண்டிக்கும் ஒரு சிறிய சலுகைபெற்ற தட்டினரை கன்னை தகராறில் ஈடுபட்டுள்ள ஆளும் அதிகாரத்துவத்தின் இருதரப்பினருமே தற்காத்து நிற்கின்றனர். சாதாரண உழைக்கும் மக்களுடைய வெகுஜனங்களால் வளரும் ஆத்திரத்தையும், விரோதப் போக்கையும் எதிர்கொண்டு ஆபத்து நிறைந்த நிலைமை சமாளிக்க கையாளும் தந்திரங்களை சுற்றியே இந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன.

Top of page