World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

The US prepares another democratic charade in Afghanistan

ஆப்கானிஸ்தானில் மற்றொரு ஜனநாயக நாடகத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

By Peter Symonds
4 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஆப்கானிஸ்தானில் அதிக அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் முதலில் ஜூன் மாதம் நடத்தப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தபோதும், அது இரண்டுமுறை தாமதப்படுத்தப்பட்ட பின்னர் அக்டோபர் 9 ல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், ஜூன் மாதத்தில் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல்களும் அடுத்த ஏப்ரல் வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்தல்களுக்கும் ஆப்கானிஸ்தான் மக்களது ஜனநாயக உரிமைகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வாக்குப்பதிவுகள் ஜனநாயகத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதை குறிப்பதாக வாஷிங்டன் கூறிக்கொண்டாலும், 20,000 அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகள் அத்துடன் காபூலை தளமாகக் கொண்ட நேட்டோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப்படையைச் சேர்ந்த 6,500 துருப்புக்கள் ஆகியவற்றுடன், அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் கீழ்தான் ஆப்கானிஸ்தான் உள்ளது.

இன்றைய ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் (Hamid Karzai) பதவியில் அமர்த்தப்பட்டது போன்று, இந்தத் தேர்தல் நிகழ்ச்சிப்போக்கில் ஆப்கானிஸ்தான் மக்கள் சொல்வதற்கு எதுவுமில்லை. அமெரிக்கா, ஐ.நா அதிகாரிகள் மேற்பார்வையில் அரசியல்யாப்பு உருவாக்கப்பட்டு சென்ற ஆண்டு கடைசியில் மிக கவனமாக நிர்வகிக்கப்பட்ட oya jirga அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் அதற்கு அங்கீகார முத்திரையும் குத்தப்பட்டது. அதன் நோக்கம் வாஷிங்டனுக்கு விசுவாசமுள்ள காபூலில் உள்ள பொம்மையாட்சியை பலப்படுத்துவதுதான். அது ஜனாதிபதி தலைமையின் கீழ், விரிவான சர்வாதிகார அதிகாரங்கள் அரசாங்க சாதனங்கள் முழுவதிலும் வழங்கப்படும். அத்தோடு, அமைச்சர்களை, இராணுவ அதிகாரிகளை, நீதிபதிகளை, தூதர்களை மற்றும் இதர அதிகாரிகளை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் அவருக்கு அதிகாரங்களையும் வழங்குகிறது.

உள்நாட்டு அரசியலைவிட ஆப்கானிஸ்தான் தேர்தல் நடத்தப்படும் தேதி முடிவுசெய்யப் பட்டிருப்பது புஷ்ஷின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏற்றவகையில்தான் என்று பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு செல்வந்த பஸ்தூன் வர்த்தகரான அகமட் ஷா வாஷிங்டன் போஸ்டில் புகார் கூறியிருப்பதைபோல், ''அமெரிக்காவில் நடக்கும் நவம்பர் தேல்தலுக்காக எங்களது தேர்தல்களை நாங்கள் தியாகம் செய்திருக்கிறோம்---- இல்லையென்றால் எங்களது தேர்தலை இவ்வளவு வேகமாக நடத்துவதற்கு காரணம் எதுவுமில்லை. ''நான் ஒரு வீரன் ஆப்கானிஸ்தானில் தேர்தல் நடத்தியிருக்கிறேன்'' என்று காட்ட புஷ் விரும்புகிறார். அவர்கள் தங்களது சொந்த தேர்தலுக்காக எல்லாவற்றையும் கட்டாயப்படுத்துகிறார்கள், ஏழை ஆப்கானிஸ்தான் மக்களுக்காக அல்ல''.

சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடத்தப்படும் என்ற கூற்று மிகவும் அபத்தமானது. தலைநகருக்கு வெளியில் நாட்டின் பெரும் பகுதி பல்வேறு யுத்த பிரபுக்கள் மற்றும் தனியார் இராணுவக் குழுக்களின் ஆதிக்கத்தில்தான் உள்ளன. அவர்கள் அச்சமூட்டியும், சலுகை காட்டியும் உள்ளூர்களில் தங்கது பிடியை பராமரித்து வருகின்றனர். புதிதாக பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கான் இராணுவத்தை சேர்ந்த 12,000 பேர் மற்றும் 30,000 சக்திவாய்ந்த போலீஸ் படை இவை இரண்டும் முழுமையாக அணிதிரட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த பாதுகாப்புப் படைகள் அதிகம் என்றாலும், பல சம்பவத்தில் அதிக ஆயுதபலத்தோடு உள்ள தனியார் இராணுவக் குழுக்களின் மதிப்பீடு 1,00000 ஆகும்.

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் பஸ்தூன் இனமக்கள் வாழ்கின்ற இடங்களில் அமெரிக்க இராணுவம் நடமாடுவதற்கு எதிராக ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி வளர்ந்து கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் நான்கு தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. அவற்றில் தாலிபான் மற்றும் இதர தனியார் இராணுவக் குழுக்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன. வாக்காளர்களை பதிவு செய்வதற்கும் வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் ஈடுபட்டுள்ள ஐ.நா மற்றும் ஆப்கான் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து குறைந்தபட்சம் 650 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

Far Eastern Economic Review என்ற பத்திரிகைக்கு அண்மையில் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாய் அளித்த பேட்டியில், ''தாலிபானைவிட யுத்த பிரபுக்களின் இராணுவம் ஒரு பெரிய பிரச்சனையாகும். ஏனென்றால், அந்த இராணுவம் ஆப்கானிஸ்தானில் நிறுவனங்கள் சார்ந்த கட்டுக்கோப்பை கீழறுத்து வருகின்றது. அந்த வகையில் தனியார் இராணுவங்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அவற்றை ஆராய்ந்து அவற்றிற்கு நாங்கள் தீர்வு கண்டாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார். ஜூலை நடுவில் அவர் ஒரு கட்டளையைப் பிறப்பித்தார். அதில், நாட்டின் யுத்த பிரபுக்கள் மற்றும் தனியார் இராணுவத் தலைவர்கள் ஆயுதங்களை துறந்துவிட வேண்டும், அணிதிரட்டலை கைவிடவேண்டும், மற்றும் சமுதாயத்தோடு ஒருங்கிணைந்துவிட வேண்டும் அல்லது அவர்கள் அரசாங்கத்திற்கு விரோதமானவர்கள் என்று நடத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்ற வாரம் தனது முதலாவது துணை ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மொகமட் பாஹீமிற்கு தேர்தலில் கலந்துகொள்ள அனுமதி கொடுப்பதில்லை என்று கர்ஷாய் முடிவு செய்தார். இந்த முடிவு இராணுவக் குழுக்களின் செல்வாக்கை சிதைப்பதற்கு எடுக்கப்படும் மற்றொரு நடவடிக்கை என்று கருதப்படுகிறது. 2001 ல் தாலிபான் ஆட்சியை வெளியேற்றுவதற்கு வாஷிங்டன் இராணுவ தலையீட்டில் இறங்கியபோது, வடக்கு கூட்டணியின் முக்கிய தலைவரான தாஜிக் இனத்தைத் சேர்ந்தவர் பாஹீம்மை வாஷிங்டன் பயன்படுத்திக்கொண்டது. பல்வேறு யுத்த பிரபுக்களுடன் பாஹீம் நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொண்டிருப்பதுடன் அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்யும் முயற்சியையும் தடுத்து வந்திருக்கிறார். அத்துடன், பாதுகாப்பு அமைச்சர் என்கிற முறையில் தனது சொந்த இராணுவக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நாட்டின் ''புதிய பாதுகாப்பு'' படைகளில் சேருவதற்கு உறுதிசெய்து கொண்டார்.

காபூலில் உள்ள நேட்டோ துருப்புக்கள் உடனடியாக கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு கூடுதலாக ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாஹீம் மற்றும் அவரது நண்பர்கள் தங்களது இராணுவ வலிமை மூலம் பதிலடிகொடுப்பார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. நாட்டில் அமெரிக்க இராணுவத் தலையீடு அரசு விவகாரத்தில் எந்தளவிற்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது என்பதை கோடிட்டுகாட்டப்படுகிறது. பாஹீம் மற்றும் இதர யுத்தப் பிரபுக்கள் அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பது கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக பென்டகன் மேற்கொண்டுவரும் மூலோபாயத்தின் நேரடி விளைவுகள் ஆகும். அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தனியார் இராணுவங்களுக்கு ஆயுதங்களையும், நிதியையும், பென்டகன் வழங்கி வருகிறது.

பாஹீமிடன் உள்ள உறவை முறித்துக்கொள்ள வேண்டுமென்று கர்ஷாய் எடுத்த முடிவானது அமெரிக்கா ஆதரவால் இடம்பெற்றிருக்கக் கூடும். கர்ஷாய்க்கு குறிப்பிடத்தக்க ஆதரவும் அடிப்படையும் கிடையாது. மற்றும் சொந்தத்தில் ஆயுதம் தாங்கிய படைகளும் இல்லை. அண்மையில் Asia Foundation நடத்திய கருத்துக்கணிப்பில் கர்ஷாய்க்கு மக்கள் ஆதரவு 35 சதவீதமாக அவர் வந்திருக்கும் தெற்கு பஸ்தூனிய இனத்தவரிடையே காணப்படுகிறது. ஜனாதிபதி கர்ஷாய்க்கு உள்ள ஒரே தகுதி அவர் நீண்டகாலமாக வாஷிங்டனுடன் வைத்திருக்கும் உறவாகும். தனது சொந்த பாதுகாப்பு உட்பட முழுவதுமாக அமெரிக்க இராணுவத்தையே அவர் நம்பியுள்ளார்.

பாஹீம் மற்றும் இதர தனியார் இராணுவத் தளபதிகளை நிர்வாகம் ஒரங்கட்ட மேற்கொள்கிற எந்த முயற்சியும், அவர்களை மேலும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டுத் துருப்புக்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிவிடும். நேட்டோ கூடுதல் துருப்புக்களை தராவிட்டால் ஆப்கானிஸ்தானில் ஒரு பேரழிவுதான் ஏற்படும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்திருக்கிற நேரத்தில், ஆயுதக்குறைப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ''கூடுதல் படைகளை நேட்டோ வழங்காவிட்டால் ஆப்கானிஸ்தானில் பேரழிவு ஏற்படக்கூடும். இது ஆபத்தான ஒரு இடம். அது மிகவும் பலவீனமான ஒரு அரசு ---உலகின் மிக கொந்தளிப்பான, தூண்டுதலுக்குரிய ஒரு பிராந்தியம்-- எனவே, இத்தகைய வளங்கள் வராவிட்டால் அங்கே நிலவரம் வெடித்துச் சிதறிவிடும், அதனால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும்'' என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

தேர்தலை மேற்பார்வையிடுவதில் உதவுவதற்காக கூடுதலாக 1800 நேட்டோ துருப்புக்கள் ஏற்கெனவே வந்திருக்க வேண்டும். நடைபெறவிருக்கிற ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும், வழிசெய்கிற ஒரு நடவடிக்கை என்பது உண்மையல்ல. அது அந்த நாட்டின்மீது வாஷிங்டன் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. தேர்தலும் யார் நாட்டை நடத்துவது என்பதும் ஆப்கான் மக்கள் முடிவு செய்யவேண்டிய விவகாரம் என்று சென்ற மாதம் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கத்தூதர் ஷால்மே காலிஷட் மிகுந்த பக்தி சிரத்தையோடு கூறினார். ஆனால், ஐயத்திற்கிடமின்றி காலிஷட்டும் இதர அமெரிக்க அதிகாரிகளும், இராணுவமும் கர்ஷாய் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.

தொடக்கத்திலிருந்தே கர்ஷாய் தெளிவாக அவர்களது அன்பிற்கு பாத்திரமானவர். அவர், தாஜிக் இனத்தவருடைய ஆதரவை பெறுவதற்காக கொலை செய்யப்பட்ட வடக்கு கூட்டணித் தலைவர் அகமட் ஷா மாசூட்டின் இளைய சகோதரரான அகமட் ஷியா மசூட்டை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளார். மற்றொரு துணை ஜனாதிபதி வேட்பாளர் தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள கசரா இனத்தைச் சேர்ந்த கரீம் கலிலியாகும். கர்ஷாயின் பிரதான எதிரியான யூனிஸ் குனானி சென்றவாரம் கல்வியமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அவர் பாஹீம் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லா என்பவர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார். இந்த மூவரும் வடக்குக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் ஆவர்.

இத்தேர்தலில் மொத்தம் 20 ஜனாதிபதி வேட்பாளர்கள் களத்திலுள்ளனர். இவர்களில் உஸ்பெக் யுத்த பிரபுவான ஜெனரல் ராஷிட் டொஸ்தொம், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்காக கர்ஷாயின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார். இப்படி பிளவுபட்டு கிடக்கும் ஒரு களத்தில் கர்ஷாய் போட்டியிடுகிறார் என்பதால் அது அவருக்கு ஒரு அனுகூலமாகும். ஐ.நா வகுத்தளித்துள்ள அறிக்கையின்படி, இந்த ஆண்டு கர்ஷாய் அரசாங்கத்தின் பட்ஜெட் 4.67 பில்லியன் டாலர்கள் ஆகும். அதில் 300 மில்லியன் டாலர்கள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் வசூலிக்கப்படும். மீதி கடன்களாகவும், உதவித் தொகையாகவும்தான் வரவேண்டும்.

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ஆப்கானிஸ்தானில் உதவிப் பணிகளை மேற்கொண்டிருந்த பிரான்சின் மருத்துவ சேவை அமைப்பான எல்லைகளற்ற மருத்துவம் (Médecins sans Frontières - MSF) அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகிக்கொண்டுள்ளது. அமெரிக்க உதவிகள் என்பன அரசியல்மயமாக்கப்படுகின்ற முறையை அது கண்டித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. அமெரிக்க இராணுவமானது மனிதநேய உதவித் தொண்டர்களினுடைய வாழ்விற்கே ஆபத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதாகவும், சிப்பாய்களுக்கும் உதவித் தொண்டர்களுக்குமிடையே வேறுபடுத்திப்பார்க்க முடியாத அளவிற்கு இராணுவக் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் MSF குற்றம்சாட்டியுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 5 MSF தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

MSF பணிகள் தொடர்பான இயக்குநர் கெனி குளூக், ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் நடைபெற்றுவரும் அமெரிக்க இராணுவ செயற்திட்டங்கள் குறித்து தாக்கியுள்ளார். சில நேரங்களில் தாலிபான்களைப்பற்றி புலனாய்வுத் தகவல் தந்தால் அதற்கு கைமாறாக உதவி கிடைக்குமென்று அவர்கள் உறுதி மொழியளிக்கின்றனர். ''மக்களது உள்ளத்தையும் மனதையும் கவர்வதற்கு, மனிதநேய உதவியின் பேரில் அவர்கள் முயற்சிப்பதை MSF கண்டிக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார். ''அமெரிக்க ஆதரவு பெற்ற கூட்டணிப் படைகள் தங்களது சொந்த இராணுவ மற்றும் அரசியல் நோக்கங்களை ஆதரிப்பதற்கும், ஆதரவைப் பெருக்குவதற்கும் மனிதநேய உதவியை பயன்படுத்திக்கொள்ள தொடர்ந்து முயன்று வருவதாகவும்'' மேலும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆகவே, இந்த ஜனநாயகத் தேர்தல்கள் இத்தகைய சூழ்நிலைகளில் நடக்கமுடியுமென்று கூறுவது மோசடியாகும். ஈராக்கைப்போல் ஆப்கானிஸ்தானிலும், அமெரிக்கத் துப்பாக்கி முனையில் ஜனநாயகத்தை கொண்டுவர முடியாது. ஆப்கானிஸ்தான் மக்களது அடிப்படை ஜனநாயக உரிமைக்கு முன்நிபந்தனையாகவுள்ளது என்னவெனில், ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாகவும், நிபந்தனை எதுவுமில்லாமலும் அனைத்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டு துருப்புக்களும் வெளியேற வேண்டும் என்பதுதான்.

Top of page