World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Fiji vice-president jailed for treason over 2000 coup attempt

2000-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பான அரசு துரோகத்துக்கு பிஜி துணை ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை

By Frank Gaglioti
11 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

பிஜி துணை ஜனாதிபதி Ratu Jope Seniloli மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் உட்பட நான்கு இதர முன்னணி அரசியல்வாதிகளுக்கு சென்ற வெள்ளிக்கிழமையன்று, அரசு துரோகக் குற்றம் செய்ததாகவும் மரணதண்டனைக்குரிய குற்றத்தை செய்வதற்கு சட்ட விரோதமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகவும், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2000-ல் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் தனது பங்களிப்பிற்காக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள மிக மூத்த அரசியல் தலைவர் Seniloli ஆகும்.

2000-மே இல், இராணுவ செல்வந்தத் தட்டின் எதிர்-கிளர்ச்சி எழுச்சிக் குழுவின் உறுப்பினர்கள் உட்பட, George Speight மற்றும் ஆயுதந்தாங்கிய துப்பாக்கிப்படையினர், நாடாளுமன்ற கட்டிடத்தை கைப்பற்றிக் கொண்டு, பிஜி நாட்டின் முதலாவது இந்திய வம்சாவழி பிரதமர் மகேந்திர சவுத்திரியின் அமைச்சரவை முழுவதையும், பிணைக்கைதிகளாக ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பிடித்துவைத்துக்கொண்டனர்.

Seniloli, Speight-னால் ''ஜனாதிபதி'' என்று மகுடம் சூட்டப்பட்டார் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் முன் நடைபெற்ற கிளர்ச்சியாளர்களின் மந்திரிசபை பதவி ஏற்புவிழாவிற்கு தலைமை தாங்கப்பட்டார். மற்றைய குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் Speight இன் டாகேய் சிவிலியன் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்களாவர். நடப்பு விளையாட்டுத்துறை அமைச்சர் Isireli Leweniqila தவிர மற்ற அனைவர்மீதும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது, தான் அதில் அங்கம் வகிக்க நிர்பந்திக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

குற்றச்சாட்டுக்களின் கடுமையான தன்மையைக் கருதிப்பார்க்கும்போது, அதிகபட்சமாக ஆயுள் சிறைத்தண்டைன விதிக்கப்படலாம் என்றாலும், Seniloli நான்காண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டார், இது ஒப்பீட்டளவில் மிதமான தண்டனை தான். நாடாளுமன்ற துணை சபாநாயகர் Ratu Rakuita Vakalalabure க்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான Peceli Rinakama, Ratu Viliame Volavola மற்றும் Viliame Sava ஆகியோர் குறுகியகால சிறைத்தண்டனைகளும் பெற்றனர்.

Seniloli-க்கு தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர், Suva விலுள்ள உயர் நீதிமன்றத்தில் முன்கண்டிராத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நீதிபதி Nazhat Shmeen நிரந்தரமாக ஆயுதந்தாங்கிய காவலில் இருந்தார், நீதிமன்ற அறையில் நுழைந்த ஒவ்வொருவரும் சோதனையிடப்பட்டனர். எல்லாப் பேரணிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது, நள்ளிரவு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. பாதுகாப்பிற்கு போலீசார்தான் பொறுப்பென்றாலும் போலீஸ் ஆணையர் ஆண்ட்ரூ ஹூக்ஸ் இராணுவத்துடன் தினசரி தொடர்பு கொண்டார்.

குற்றத் தீர்ப்பு அரசியல் கொந்தளிப்பை மோசமாக்கியுள்ளது. 2000-த்தில் நடைபெற்ற முற்றுகையை முடிவிற்கு கொண்டு வருவதற்காக Speight ற்கும், இராணுவத்திற்கும் இடையே உருவான ஒரு உடன்படிக்கையின் ஓர் அங்கமாக Seniloli துணை ஜனாதிபதியாக மட்டுமே பதவியில் அமர்த்தப்பட்டார். அந்த பேரம் படி செளத்திரி மறுபடியும் அதிகரத்திற்கு வரமாட்டார் மற்றும் பிரதமர் Laisenia Qarase தலைமையிலான அரசாங்கம் Speight இன் வகுப்புவாத வேலைத்திட்டங்களில் பலவற்றை அமுல்படுத்தும் என உறுதிப்படுப்படுத்தி இருந்தது. Qarase மந்திரி சபையில் பல இன பிஜி தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர், அவர்கள் பகிரங்கமாக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை ஆதரித்தவர்கள் அல்லது அதற்கு அனுதாபம் காட்டியவர்கள் ஆவர்.

Qarase அரசாங்கம் சட்டபூர்வமான நடவடிக்கையை தொடங்க தயக்கம் காட்டிவந்தது. அந்த சம்பவங்கள் நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் விசாரணை தொடங்கியது மட்டுமல்லாமல், கடுமையான குற்றத்தன்மை கொண்டதாக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த விசாரணை தனது கூட்டணியில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் என்றும் மேலும் அரசியல் கிளர்ச்சிக்கு வழி செய்யும் என்றும் Qarase கவலை கொண்டார்.

Speight ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த பழமைவாத கூட்டணி (CA), கூட்டணி அரசாங்கத்தின் ஓர் அங்கமாக உள்ளது, தீர்ப்பை ஏற்கனவே அக்கட்சி விமர்சித்துள்ளது. கட்சி பிரதிநிதியும் எம்.பி.யுமான Samisoni Tikoinasau, ''தலைவர் உட்பட 100- சதவீத பிஜியன் மக்கள் அனைவர் சார்பிலும் நான் பேசுகிறேன். அதே மக்கள் 2000-ல் கடுங்கொந்தளிப்பை ஆதரித்தார்கள்.'' என தெரிவித்தார். CA தலைவர் Ratu Naiqama Lalabalavu மறைமுகமான அச்சுறுத்தலை வெளியிட்டார்: ''நாங்கள் நீதிமன்றங்களின் எந்த முடிவையும் மதிக்கிறோம் ஆனால் அதுதான் கடைசிக் கருத்து என்பதல்ல'' என்று கூறினார்.

சென்றவாரக் கடைசியில் Samoa-ல் நடைபெற்ற பசிபிக் தீவுகள் அரங்கு கூட்டதில் கலந்து கொண்ட Qarase- ம் நீதிமன்ற முடிவுகளிலிருந்து தன்னை விலக்கியே வைத்துக்கொண்டார். ''தீர்ப்பின் கடுமை குறித்து தாம் அதிர்ச்சியடைந்ததாக'' அவர் குறிப்பிட்டார். கைதிகள் மீது தமக்கு மிகுந்த அனுதாபம் உண்டு என்றும் அவர்கள் ''பிஜி நாட்டின் மைந்தர்களது கட்டுப்பாட்டை ஆதரிக்கும் துணிவு கொண்டவர்கள்'' என்றும் குறிப்பிட்டார். Speight ன் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கும் அதன் வகுப்புவாதக் கோரிக்கைகளுக்கும் அனுதாபம் கொண்ட தட்டுகளுக்கிடையே அவரது அரசாங்கம் ஆதரவை திரட்டுகின்ற வகையில் இந்தக் கருத்து அமைந்திருக்கிறது.

அதேபோன்ற மனநிலையில், வெளியுறவு அமைச்சர் Kieren Keke-யும், அரசாங்கம் Seniloli க்கு பொதுமன்னிப்பு அளிப்பது பற்றி ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். என்றாலும், இப் பிரச்சனையில் அமைச்சரவையில் பிளவு உள்ளது. அட்டர்னி ஜெனரல் Qoroniasi Bale பகிரங்கமாக ஜனாதிபதிக்கு பொதுமன்னிப்பு இல்லை என்று அறிவித்தார், Seniloli முழு சிறைத்தண்டனையும் அனுபவித்தாக வேண்டுமென்றும் கூறினார்.

நியூசிலாந்து சர்வதேச வானொலிக்கு ஆகஸ்ட் 9-ல் பேசிய பேல் கூட, அரசியலமைப்பு நெருக்கடிக்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சுட்டிக்காட்டினார். அரசியல் சட்டத்தின் கீழ் Seniloli -ஐ நீக்குவதற்கு விதி எதுவும் இல்லாதிருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இன்றைய ஜனாதிபதி Ratu Josefa Iloilo உடல் நலமின்றி இருக்கிறார், எனவே Seniloli ஜனாதிபதி பொறுப்பேற்கும் நிலையில் உள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்களுள் நாட்டின் இராணுவப்படைகளின் தலைமை தளபதி என்ற அதிகாரமும் உள்ளடங்கும்.

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அரசாங்கங்கள் தொடர்ந்து நீதிமன்ற விசாரணை நடைபெறவேண்டும் என்று வலியுறுத்திவந்தன. கான்பெராவும், வெலிங்டனும் Qarase அரசாங்கத்தை ஆதரித்தன, வெளிநாட்டு முதலீடுகளுக்கேற்ப ஸ்திரமான சூழ்நிலையை அவரது அரசாங்கம் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தின. வழக்கமான இராஜதந்திர நடவடிக்கைகளை முறித்துக்கொண்டு, ஆஸ்திரேலிய ஹைகமிஷன் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று ''அந்தத் தீர்ப்பு நிதி நிர்வாக முறையின் கண்ணியத்தையும், சட்டத்தின் விதி கடைப்பிடிக்கப்படுவதை'' எடுத்துக்காட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

தெற்கு பசுபிக் பகுதியில் தனது கட்டுப்பாட்டை இறுக்கமாக்கிக் கொள்வதற்கு தீட்டியுள்ள பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக போலீஸ் மற்றும் சட்ட முறை உட்பட பிஜி யின் முக்கிய பதவிகள் பலவற்றில் ஆஸ்திரேலியா தனது அதிகாரிகளை நியமித்துள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ் துணை கமிஷனர் ஆண்ட்ரூ ஹூக்ஸ், உயர் நீதிமனறத்திற்கு வெளியில் சென்றவாரம் போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தவேளை, நீதிமன்றத்திற்குள் மூத்த ஆஸ்திரேலிய வழக்கறிஞர் Mark Tedeschi அந்த வழக்கை பிராசிகியூட்டராக இருந்து நடத்திக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tedeschi அந்த வழக்கில் தனது வாதத்தை முடித்துவைக்கும் போது Canberra விலும் Wellington-லும் நிலவுகின்ற கவலைகளை எடுத்துரைத்தார். ''இந்த நாடு அதன் வரலாற்றில் மிகப்பெரும்பாலான கால கட்டங்களில் நிலைநாட்டி வந்த அனுபவித்துவந்த ஜனநாயக முறையின் ஆணிவேரையே வெட்டுகின்ற வகையில் (2000-ம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி) நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் பிஜியின் செல்வாக்கை இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி சிதைத்துவிட்டது, சுற்றுலா தொழில் சிதைந்துவிட்டது, அந்நியச்செலாவணி வெளியேறிவிட்டது'' என்று குறிப்பிட்டார்.

பிஜி வர்த்தக வட்டாரங்களில் அந்தத் தீர்ப்பு பாராட்டப்பட்டது. பிஜி தொழிலதிபர்கள் கூட்டமைப்பு தலைவர் Hafiz Khan அந்த தீர்ப்பு ''தொலை நோக்கானது'' என்று வர்ணித்தார். அதே நேரத்தில் பிஜி வர்த்தக சபைத்தலைவர் Taito Waradi முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை மீட்டுத்தருவதில் அந்தத்தீர்ப்பு நீண்ட வழி சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 7-ல் பிஜி சன் பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள ஒரு தலையங்கத்தில், ''அந்த தீர்ப்பு தெளிவான சமிக்கையை சம்மந்தப்பட்டவர்களுக்கு காட்டியிருப்பதாகவும்--- சட்டத்தை மீறுபவர்கள் சமுதாயத்தின் எந்த தரப்பினராக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்தத் தீர்ப்பு கூறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில், பிஜி நாடே ஒட்டுமொத்த நிரந்தர பேரழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டபொழுதான, அதற்குப் பின்னர் உருவாகிய ஸ்திரத்தன்மை நீடிக்குமா என்பதற்கான சோதனைக்களமாக அடுத்த சிலநாட்கள் அமையுமென்றும்" எச்சரித்து எச்சரிக்கை குறிப்பை தந்துள்ளது.

2000- ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அடிப்படைக்காரணமாக இருந்த எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படவில்லை என்ற உண்மையை அந்த தலையங்கம் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது. சமுதாய நெருக்கடி ஆழமாகிக்கொண்டு வந்த நிலைமையில், பிஜி ஆளும் செல்வந்தத் தட்டினுடைய பிரிவுகள் செளத்திரி அரசாங்கத்திற்கு வளர்ந்து வந்த எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு, இந்திய எதிர்ப்பு உணர்வுகளை தூண்டிவிட்டு தொழிலாளர்களை பிளவுபடுத்தவும், தங்களது சொந்த சலுகை நிலைப்பாடுகளை தக்கவைத்துக் கொள்ளவும் முயன்றன. கான்பெரா மற்றும் வெலிங்டனுடைய பொருளாதார கோரிக்கையான மேலும் பொருளதார மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது, நாட்டின் சமுதாய மற்றும் அரசியல் பதட்டங்களை உக்கிரப்படுத்தவே செய்யும்.

Top of page