World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : போர்த்துக்கல்

Thirty years since the Portuguese Revolution Part 1

போர்த்துக்கல் புரட்சியிலிருந்து முப்பது ஆண்டுகள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

By Paul Mitchel
15 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

மூன்று பகுதித் தொடர் கட்டுரையின் முதற்பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த வருடம் போர்த்துக்கல்லின் புரட்சியின் 30வது நிறைவைக் காணும் ஆண்டு. 1974ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 அன்று நடந்த ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கம் ஒன்று புரட்சியை நோக்கி செல்லும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஆளும் செல்வந்தத் தட்டு இந்தப் புரட்சியை, சோசலிச கட்சி, (PSP-Partido Socialista Portugues), போர்த்துக்கல் கம்யூனிச கட்சி (PCP - Partido Comunista Portugues) மற்றும் இடது தீவிரவாத குழுக்களின் சேவையை பயன்படுத்தி தடுத்து நிறுத்த முடிந்தது.

புரட்சியின் போது தலைவராகவும் பின்னர் போர்த்துக்கல்லின் ஜனாதிபதியாக 1986 முதல் 1996 வரை இருந்தவருமான விஊக்ஷீவீஷீ ஷிஷீணீக்ஷீமீs அந்த சம்பவங்களில் ஒரு முக்கிய பங்கினை வகித்தார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் பேசிய Soares, போர்த்துக்கல் இப்பொழுது "வலுவான சமத்துவமற்ற செல்வ பங்கீட்டு முறையை" வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றும் "வெளிப்படையான எதிர்ப்பு, ஒரு சமூக மற்றும் அரசியல் பதட்டங்கள் நிறைந்த சூழ்நிலையைக்கூட" எதிர்கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

இப்பொழுதும் ஐரோப்பாவில் உள்ள மிக ஏழ்மையான நாடுகளில் போர்த்துக்கல்லும் ஒன்றாகும்.

சோரெஸ் தொடர்ந்தார், "மீண்டும், போர்த்துக்கல் ஓர் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது; இதில் சில ஆளும் செல்வந்தத் தட்டுக்கள் எது சரியான பாதை என்பதை அறிய இயலாமல் உள்ளன. பெரும்பாலான போர்த்துகேயர்கள் பெருமளவில் சமுதாயத்தில் பாதிக்கும் சமத்துவமின்மையையும், உயரும் வேலையின்மையின் துயரத்தையும் உணர்ந்து, வருங்காலத்தின் அடிவானம் இருண்ட நிலையை அறிந்துள்ளனர்."

சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த (PSD) போர்த்துக்கல்லின் பிரதம மந்திரியான ஜோசே மானுவேல் டுரோ பரோசோ மக்களுக்கு அழைப்பு விடுத்து புரட்சியை மறக்கும் படியும், போர்த்துகல்லின் "வளர்ச்சியை" பற்றி கொண்டாடுமாறும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஆளும் செல்வந்த தட்டு 1974ம் ஆண்டின் படிப்பினைகளை நினைவிற் கொள்ள வேண்டும் என்பதை சோரெஸ் கவனத்தில் கொண்டுள்ளார். மூர்க்கமான தனியார்மயமாக்குதல், தொழிலாள சீர்திருத்தங்கள், நலன்புரி வெட்டுகள் (இவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொடங்கப்பட்டவை), போர்த்துக்கல்லின் பழைய ஏகாதிபத்தியத்தை மீண்டும் வலியுறுத்திக் கூறல், ஈராக்கின் மீதான போருக்குக் கொடுத்த ஆதரவின் செல்வாக்கு ஆகியவை மற்றொரு சமுதாய வெடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புரட்சியின் அடிப்படைக் காரணங்கள்

1974ம் ஆண்டின் புரட்சி போர்த்துக்கல்லின் காலம் கடந்திருந்த வரலாற்று வளர்ச்சியினால்தான் இறுதியில் வடிவம் கொடுக்கப்பட்டது.

பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து போர்த்துக்கல் ஒரு காலனித்துவப் பேரரசை உருவாக்கியிருந்தது, இதன் விளைவாக உற்பத்தி நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தாத ஒரு சலுகைமிக்க செல்வந்த தட்டு ஏற்பட்டிருந்தது. ஏகாதிபத்தியப் போட்டியாளர்களின் வளர்ச்சியால், குறிப்பாக பிரிட்டனால், போர்த்துக்கல்லின் காலனித்துவ உடமைகள் அச்சுறுத்தலுக்கு உட்பட்டன. நெப்போலியன், ஸ்பெயினையும், போர்த்துக்கல்லையும் தாக்கிய தீபகற்ப போர்களை (1807-1814) ஒட்டி போர்த்துக்கல் பிரிட்டனுக்கு நன்றிக்கடன்படவேண்டிய நிலையை ஏற்படுத்தின; அவை போர்த்துக்கல்லின் காலனித்துவ வாதத்தை இன்னும் கூடுதலாக வலுவிழக்கச் செய்தன. பிரேசில் 1822 இல் சுதந்திர நாடாயிற்று, போர்த்துக்கல்லின் எஞ்சியிருக்கும் காலனித்துவத்தை அதன் போட்டியாளர்களிலிருந்து காப்பாற்றுவதற்கு அதிக படைகள் தேவைப்பட்டன.

"ஆங்கிலோ-போர்த்துகீசியர் கூட்டணியால்", பிரிட்டன் போர்த்துகேயரின் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டனர். சிறு முதலாளித்துவப் பிரிவுகள் சில அழிந்தன; தொழில்மயமாக்கல் இன்னும் மெதுவாகியுள்ளது. மக்களுடயை மனநிறைவு அற்ற நிலை 1810-1836 பெரும் விடுதலை போராட்டங்களை தோற்றவித்தது, ஆனால் சில பெரிய நில உடைமைப் பிரிவுகள் உடைக்கப்பட்டதுதான் முக்கிய விளைவாக இருந்தது. போர்த்துகீசிய மன்னராட்சி 1910 ம் ஆண்டுப் புரட்சிக்குப் பின் அகற்றப்பட்டது.

1914-1918 முதல் உலகப் போருக்குப் பிற்பட்ட காலம் பூகோள முதலாளித்துவத்தின் மாபெரும் நெருக்கடியின் ஒன்றாகும். இந்த ஸ்திரமற்ற தன்மை போர்த்துகல்லிலும் பிரதிபலித்தது. அங்கு முதல் குடியரசுக் காலத்தில், 1910 லிருந்து 1926 வரை எட்டு ஜனாதிபதிகளும் 45 அரசாங்கங்களும் அமைந்திருந்தன.

போரின் முடிவில், போர்த்துக்கல்லின் 6 மில்லியன் மக்கட்தொகையில் 130,000 பேர் மட்டும்தான் தொழிற்துறையில், சிறிய பட்டறைகளில் வேலை பார்த்து வந்தனர். ரஷியாவில் இருந்தது போலவே, தொழிலாள வர்க்கம் மிகுந்த தீவிரத் தன்மையை கொண்டிருந்ததுடன், 1917 இல் நடத்தி ஒரு பொது வேலைநிறுத்தத்தம் இரண்டு முற்றுகை போராட்டக் கட்டங்களையும் தூண்டியது. 1921ம் ஆண்டு போர்த்துகீசிய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

ஸ்திரமற்றதன்மையும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் ஏற்படுமோ என்ற அச்சமும் 1926ம் ஆண்டு மே 28ல் ஒரு வலது சாரி ஆட்சி கவிழ்ப்பைக் கொண்டு வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து, கிஸீtரஸீவீஷீ பீமீ ளிறீவீஸ்மீவீக்ஷீணீ ஷிணீறீணீக்ஷ்ணீக்ஷீ என்ற ஒரு பொருளாதார விரிவுரையாளர் முதலில் நிதி மந்திரியாகவும், பின்னர் பிரதம மந்திரியாகவும் நியமிக்கப்பட்டார். 1934ல் ஐந்து-நாட்கள் எழுச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒட்டி, சலாசர் தன்னுடைய ''Estado Novo" என்ற பெருநிறுவன அரசை அறிவித்தார்.

தேசிய ஒன்றியம் (ஹிழிஹிஸீவீஏஷீ ழிணீநீவீஷீஸீணீறீ), பின்னர் தேசிய மக்கள் நடவடிக்கை (National Popular Action -ANP --Accao National Popular) என்பது ஒன்றுதான் அதிகாரபூர்வமான, சட்ட பூர்வமான கட்சியாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திரமான தொழிற்சங்கங்களும், வேலைநிறுத்தங்களும் சட்டவிரோதமாக்கப்பட்டன, தொழிலாளர்கள் அரசு நிறுவன தொழிற்சங்கங்கள் அல்லது "sindicatos" என்பதில் கட்டாயமாக உறுப்பினர்களாக்கப்பட்டனர். சலாசர் கடுமையான தடைகளை ஏற்படுத்தி, ஒரு இரகசிய போலீ்ஸ் படையையும், றிமிஞிணி (றிஷீறீணநீவீணீ மிஸீtமீக்ஷீஸீணீநீவீஷீஸீணீறீ பீமீ ஞிமீயீமீsணீ பீஷீ ணிstணீபீஷீ) யையும் நிறுவினார்; அது எதிர்ப்பாளர்களை கைது செய்யலாம் அல்லது கொல்லவும் செய்யலாம்.

போர்த்துக்கல்லின் ஆளும் செல்வந்த தட்டினரின் ஆட்சிக்காக சலாசர் அரசாங்கம் செய்த முக்கியமான செயல் தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் எவ்வகையிலும் உருப்பெறாமல் உள்நாட்டில் பார்த்துக் கொள்ளுதலும், காலனித்துவத்தில் எதிர்ப்புக்கள் வளராமல் பார்த்துக் கொள்ளவதும் ஆகும். ஆனால், குறைந்த அளவிலான தேசியச் செல்வாக்கு மட்டுமே பெற்றிருந்த சலாசரின் அறிவுறுத்தல் இந்நாட்டை உலகப் பொருளாதாரத்தில் இருந்து தனித்து பாதுகாக்க இயலவில்லை. உலகத் தேவையை ஒட்டித்தான் இதன் உற்பத்தியில் பெரும்பகுதி நம்பியிருந்தது, தனக்குத் தேவையான பல பொருட்களை அது இறக்குமதி செய்யவேண்டியிருந்தது. 1960 களில், போர்த்துக்கல்லில் வெளிநாட்டு முதலீடு மும்மடங்காயிற்று, இதில் பெரும்பகுதி அமெரிக்காவிலிருந்து வந்தது, ஆனால் இது மிகத்தீவிரமான முறையில் செல்வக் குவிப்பைத்தான் ஏற்படுத்தியது.

1973ம் ஆண்டளவில், போர்த்துகல்லில் கிட்டத்தட்ட 42,000 நிறுவனங்கள் இருந்தன. இவற்றில் மூன்றில் ஒரு பகுதி பத்து தொழிலாளர்களுக்கும் குறைவாகத்தான் வேலையில் அமர்த்தியிருந்தன. ஆனால் சுமார் 150 நிறுவனங்கள் முழுப் பொருளாதாரத்தையும் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டிருந்து, ஒரு சில மிகச் செல்வந்தர்களுடைய போர்த்துகீசிய குடும்பங்களின் தலைமைக்குட்பட்டிருந்தன (Espirito Santo, de Melo, de Brito, Champalimaud போன்றவை), டி மெலோக்களின் ஏகபோக நிறுவனங்களான Uniao Fabril (CUF) போன்றவை, உதாரணமாக, தேசிய மொத்த உற்பத்தியில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் உற்பத்தி செய்த Guinea-Bissau-வின் பெரும்பகுதிகளுக்கு உரிமையாளராக இருந்தன.

இத்தகைய தொழில்துறைமயமாக்கலாக இருந்தபோதிலும், மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாய தொழிலாளர்களாக பெரிய பண்ணைகளில் அல்லது latifundia வில் இருந்தனர். கிட்டத்தட்ட 150,000 பேர், தலைநகரான லிஸ்பனைச் சுற்றியிருந்த சேரிப்பகுதிகளில் குவிந்து வாழ்ந்து வந்தனர். உணவு பற்றாக்குறையும், பொருளாதார கஷ்டங்களும் --ஊதியங்கள் ஐரோப்பாவிலேயே மிக்குறைவாக வாரத்திற்கு அமெரிக்க டொலர்கள் 10 என்ற அளவில்தான் 1960 களில் இருந்தது -- கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும், பிரேசில் மற்றும் காலனிகளுக்கும் பாரியளவில் குடியேறச் செய்ய வைத்தன.

போர்த்துகீசியரின் ஆபிரிக்க குடியேற்றங்களான அங்கோலா, மொசாம்பிக் மற்றும் Guinea-Bissau-வில் விடுதலை இயக்கங்களின் எழுச்சியையும் 1960களில் காணக்கூடயதாக இருந்தது. தசாப்தங்களுக்கும் மேலாக மூன்று கொரில்லா இயக்கங்களுடன் போராடியமை போர்த்துகீசிய பொருளாதாரத்தையும், தொழிலாளர் சக்தியையும் திவாலாக்கியது. வரவு செலவுத் திட்டத்தின் கிட்டத்தட்ட பாதித் தொகை ஆபிரிக்காவில் 150,000 படைகளை தக்க வைத்துக்கொள்ளுவதிலேயே செலவாயிற்று. கடந்த நான்கு ஆண்டுகள் கட்டாய இராணுவ சேவை, மிகக் குறைவான இராணுவத்தின் ஊதியங்கள், நிலைமைகள், ஆகியவை மனக்குறைகளுக்கு அடிப்படையாக அமைந்து, படையினரிடையே எதிர்ப்பு இயக்கங்கள் வளர்வதற்கும் அடிப்படையாயிற்று. "படைத்தலைவர்களின் இயக்கம் (Movement of the Captains)" என்ற தலைமறைவு இயக்கங்களுக்கு இந்த கட்டாய இராணுவ சேவையில் ஈடுபட்ட நிலையும் இது எழுவதற்கு ஓர் அடிப்படையாயிற்று.

ஆபிரிக்காவில் இராணுவ நடவடிக்கைகளினால் ஏற்பட்டிருந்த தொடர்ந்த பொருளாதார திவால்கள் 1960களின் கடைசிப் பகுதியில் உலகெங்கும் தோன்றிய பொருளாதார நெருக்கடிகளினால் தீவிரமாயிற்று.

இந்த நெருக்கடிகள் சமூகப் புரட்சிகள் ஏற்படும் என்ற அச்சத்தால், 1944 பிரெட்டன் வூட்ஸ் உடன்பாட்டின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய ஐரோப்பிய, ஜப்பானிய போட்டியாளர்களை பெரும் சரிவிலிருந்து காப்பாற்றும் கட்டாயத்திற்குட்பட்டது.

அமெரிக்காவின் தலைமையிலும், அமெரிக்க பொருளாதார மற்றும் இராணுவத்தின் வலிமையின் ஆதரவினாலும், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) போன்ற அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு இவற்றின் மூலம் மிகப் பெரிய முறையில் மூலதனங்கள் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கு கடன்தொகையாக வழங்கப்பட்டன.

35 அமெரிக்க டொலருக்கு ஒரு அவுன்ஸ் தங்கம் என்று நிர்ணயித்து உறுதியளிக்கப்பட்டதுதான் இந்த சர்வதேச நிதிமுறை அமைப்பை நிலைப்படுத்த அடிப்படையாக இருந்தது. ஆனால் நீண்ட காலத்திற்கு உலகப் பொருளாதாரத்திற்கு நிதியளிக்கும் பங்கை அமெரிக்காவால் தொடர்ந்து செயலாற்ற முடியவில்லை. அமெரிக்காவின் செலுத்துமதி நிலுவை பற்றாக்குறை (balance of payments deficit) இன்னும் கூடுதலான முறையில் அது வியட்நாம் போரினால் அதிகரித்தது. தங்க இருப்புக்களோ சிதைய தலைப்பட்டன. தங்கத்திற்கு மாற்று தன்மையைத் தொடர முடியாத நிலையில், ஜனாதிபதி நிக்சன்1971 ஆகஸ்ட் 15 அன்று தங்கத் தரத்தில் இருந்து டொலரை விலக்கிக் கொண்டார். இந்த பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்த உடைவு அதிகரிக்கும் பணவீக்கத்தை உருவாக்கியதால் 1973-75 ஆண்டுகளில் கடுமையான மந்த நிலை ஏற்பட்டது. 1930 களுக்கு பின்னர் உலகம் அவ்வாறான ஒரு நிலைமையை கண்டதுடன், ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டம் பாரியளவில் வளர்ச்சியுற்றது.

போர்த்துக்கலின் புரட்சி பொதுவாக ஐரோப்பிய புரட்சியின் ஒரு பாகமாகவும் மற்றும் சோசலிசத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் உலக போராட்டமாகவும் அபிவிருத்தியடைந்திருக்க வேண்டும். ஆனால் மாறாக, சமூக ஜனநாயகக் கட்சி, மற்றும் ஸ்ராலினிசத்தின் காட்டிக் கொடுப்பாலும், குட்டி முதலாளித்துவத்தின் தீவிரவாதபோக்குகளின் உதவியாலும் முதலாளித்துவத்தின் உயிர்வாழ்க்கை உறுதிசெய்யப்பட்டது.

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு தயாரிப்பு

காலனித்துவ எழுச்சி, மற்றும் போர்த்துக்கல்லில் வேலைநிறுத்த அலைகள் இவற்றை எதிர் கொண்ட நிலையில், இராணுவத் தலைவர்கள் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், தொழிலாள வர்க்கம், விவசாயிகள் ஆகியோரின் எதிர்ப்பை நிறுத்துவதற்கும் தயாராயினர்.

பெப்ரவரி 1974ல் படைத்தலைமையில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தவரும், CUF உட்பட இரண்டு முக்கிய போர்த்துகல்லின் ஏகபோக நிறுவனங்களில் இயக்குனராகவும் இருந்த ஜெனரல் கிஸீtரஸீவீஷீ பீமீ ஷிஜீணஸீஷீறீணீ, போர்த்துக்கல்லும் வருங்காலமும் என்ற நூலை வெளியிட்டார். இந்தப் புத்தகம் சலாசரைத் தொடர்ந்து ஆட்சி செலுத்திய Marcello Caetano இன் ஆபிரிக்க கொள்கையை விமர்சித்ததுடன், தேசியவாதிகளிலிருந்து பிளவிற்குட்படுத்தக்கூடிய மிதவாதப் போக்குடைய கறுப்பு இன செல்வந்த தட்டினரை ஆதரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியது. கேடனோ இப் புத்தகத்தை தடை செய்து, இப் புத்தகத்தை வெளியிட அனுமதி கொடுத்திருந்த படைத்தலைவர் ஜெனரல் கோஸ்டா கோம்ஸையும், ஸ்பினோலாவையும் பதவியிலிருந்து நீக்கினார்.

பெப்ரவரி 1974ல், வடக்குப் பகுதியில் Caldas da Rainha என்ற இடத்தில் உருச்சிதைக்கப்பட்ட கிளர்ச்சி ஏற்பட்டது. மார்ச் 18 தேதி, காப்டன்கள் இயக்கம் (Movement of the Captains) வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று ஸ்பினோலா மற்றும் கோமேசை பாரட்டியதுடன் Caldas da Rainha வில் உள்ள படைகளுக்கு முழு ஆதரவு தருவதாக, "அவர்களுடைய இலக்குகள் நம்முடைய இலக்குகளே" என்று கூறிற்று.

காப்டன்கள் இயக்கத்தின் தலைவர்கள் இந்த அறிவிப்பைப் பற்றி ஸ்பினோலா மற்றும் கோமேசுடன் விவாதித்து 1974 ஏப்ரல் 25 அன்று ஒரு ஆட்சிக் கவிழ்ப்பிற்கு திட்டம் இட்டிருந்தனர்.

அன்று, இராணுவப் படைகளின் இயக்கம் (MFA--Movimento das Forcas Armadas) --காப்டன்களின் இயக்கம் இப்பொழுது அவ்வாறு மாற்றுப் பெயரிடப்பட்டிருந்தது-- "மக்களுடைய விருப்பங்களை விளக்கும் வகையில்" முடிவெடுக்கப்போவதாகவும் Caetano வை அகற்றப்போவதாகவும் அறிவித்தது. உண்மையில், Caetano உட்பட ஸ்பினோலா "கலகக்கும்பலுடைய கைகளில் விழுவதிலிருந்து'' நாட்டை தடுத்தார் என்று குறிப்பிட்டார். இதன் விளைவாக தேசிய இழப்பிலிருந்து மீளும் சபையான உயர் மட்ட இராணுவ அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு சபை (யிஷிழியிuஸீtணீ பீணீ ஷிணீறீஸ்ணீஃஏஷீ ழிணீநீவீஷீஸீணீறீ) உருவாக்கப்பட்டது, அதேவேளையில் ஜனாதிபதியாக ஸ்பினோலா ஆனார்.

ஒரு எளிமையான புத்துணர்ச்சி மட்டுமே போதும் என்று ஸ்பினோலா கருதியிருந்தார்; ஆனால் ஆட்சி கவிழ்ப்பு உடனடியாக வெகுஜனங்களை வீதிக்கு அழைத்து வந்து கூடுதான மாறுதல்களை கோர வைத்தது. சீற்றமுற்றிருந்த மக்கள் பழைய ஆட்சியின் அதிகாரிகள் ஆதரவாளர்கள் ஆகியோருடன் கணக்குத் தீர்க்கப்படவேண்டும் என்று வற்புறுத்தினர்; றிஷீறீணநீவீணீ மிஸீtமீக்ஷீஸீணீநீவீஷீஸீணீறீ பீமீ ஞிமீயீமீsணீ பீஷீ ணிstணீபீஷீ (பொலிஸ் பாதுகாப்பு படை) உறுப்பினர்களில் சிலர் கொல்லப்பட்டனர். தொழிலாளர்கள் ஆலைகள், அலுவலகங்களை, கடைகளை கைப்பற்றுகையில் விவசாசிகள் பண்ணை நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். அரை மில்லியன் மக்கள் ஒரு வாரம் கழித்து மே தினத்தன்று லிஸ்பனில் அணிவகுத்து நடந்தனர். புரட்சி சூழ்நிலை படையினரிடையேயும் பரவத் தலைப்பட்டது; இராணுவத்தினரும் கடற்படையினரும் தொழிலாளர்களுடன் இணைந்து, சோசலிசம் தேவை என்று எழுதியிருந்த பதாகைகளை தாங்கி அணிவகுத்துச் சென்றனர்.

முன்னர் தடைசெய்யப்பட்டிருந்த கட்சிகள் மீண்டும் தலைமறைவு நிலை அல்லது நாடு கடத்தப்பட்ட நிலையிலிருந்து தலையெடுத்தன; இவற்றில் றுறீஸ்ணீக்ஷீஷீ சிuஸீலீணீறீ தலைமையிலான PCP மற்றும் விஊக்ஷீவீஷீ ஷிஷீணீக்ஷீமீs தலைமையிலான PSP ஆகியவை அடங்கியிருந்தன. இன்னும் கூடுதலான தொலைநோக்குடைய ஆளும் செல்வந்த தட்டு உறுப்பினர்கள் புரட்சியின் வளர்ச்சியை தடுக்க இக்கட்சிகளின் முக்கிய பங்கைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்.

புரட்சியில் வெளிவந்த முக்கியமான கேள்விகளில் ஒன்று MFA மற்றும் அதன் "ஆயுதம் ஏந்திய தலையீட்டுப்" பிரிவான, Continental Operations Command (COPCON-Comando Operacional do Continente) பற்றியது ஆகும்-- இப்பிரிவு 5000 சிறப்பு பயிற்சி பெற்றிருந்த வீரர்கள், Otelo Saraiva de Carvalho வை தலைவராக கொண்டிருந்தது.

"MFA மற்றும் மக்களுடைய கூட்டு" என்ற கருத்தை MFA வளர்க்க முற்பட்டது. PSP, PCP மற்றும் பிற தீவிர குழுக்கள் இந்த பெரும் பொய்யை அறைகூவலுக்கு உட்படுத்தவில்லை. மாறாக, PCP, MFA "ஜனநாயகத்திற்கு உறுதியளிக்கும்" என்று அறிவித்து Carvalho, General Vasco Goncalves மற்றும் இராணுவ உயர் குழுவுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் போர்த்துகீசிய ஆதரவாளர்களான LCRP என்று அழைக்கப்பட்ட League for the Construction of the Revolutionary Party, PCP மற்றும் PSPஐ முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அரசாங்கக் கருவிகள் என குறிப்பிட்டதுடன், மற்றும் MFA இவற்றில் இருந்து முறித்துக் கொள்ளமாறு கோரினர். மேலும் MFA மற்றும் அதன் அரசியலமைப்பு சபைக்கு எதிராக இராணுவம் கலைக்கப்பட்டு ஒரு தொழிலாளர்கள், விவசாயிகள், வீரர்களின் சோவியத்துக்களை உருவாக்கவேண்டும் என்பதையும் முன்வைத்தனர்.

தொடரும்

Top of page