World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

SEP candidates on the ballot in New Jersey

நியூ ஜேர்சி வாக்குச்சீட்டில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள்

By a WSWS reporting team
10 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

நியூ ஜேர்சி வாக்குச்சீட்டில் SEP ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக பில்வான் ஒகெனையும், ஜிம் லோரன்சையும் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்தினர் வெற்றிகரமாக இடம்பெறச் செய்திருக்கின்றனர். மொத்தம் பதிவு செய்த வாக்காளர்களின் 1637 கையெழுத்துக்கள் மொத்தம் தேவைப்படும் 800 வாக்காளர்களுக்கு மேல் இரண்டு மடங்கு வாக்காளர்களின் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு, சென்ற மாதம் நியூ ஜேர்சி தேர்தல்கள் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டது. நியமனங்களை ஆட்சேபிப்பதற்குரிய இறுதிநாளான, ஜூலை 30 வரை மனுவை யாரும் எதிர்க்காததால் மனுக்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று மாநில தேர்தல்கள் பிரிவு அறிவித்திருப்பதால், நமது வேட்பாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சி என்ற பெயரோடு வாக்குசீட்டில் இடம் பெறுவார்கள்.

SEP பிரச்சாரத்தினர் வாக்கு மனுக்களில் கையெழுத்துக்களை திரட்டிய பகுதிகளில் ஜேர்சி நகரம், நியூவார்க் மற்றும் நியூவார்க் அருகிலுள்ள புறநகரான இர்விங்டனும் அடங்கும். இந்த மூன்று நகரங்களிலும் பெருமளவில் சிறுபான்மையினரும், சிறப்பாக நிலைபெற்றுவிட்ட புலம்பெயர்ந்தோர் மக்களும் வாழுகின்றனர். முன்னொரு காலத்தில் அந்தப்பகுதி நாட்டின் மிகப்பெரும் தொழிற்துறை மையங்களுள் ஒன்றாக விளங்கியது, இன்றைய தினம் உற்பத்தித்துறையில் ஒருசில வேலை வாய்ப்புக்களே கிடைக்கின்றன. உணவுவிடுதிகள், சில்லறை வர்த்தகம், சிற்ண்டி விடுதிகள், மற்றும் தொடக்கக்கட்ட அலுவலகப்பணிகள் உட்பட, குறைந்த ஊதியம் கிடைக்கின்ற பணிகளில்தான் மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். நியூவார்க் பகுதி புள்ளி விவரங்களின்படி ஏறத்தாழ ஒவ்வொரு தொழிற்துறை உற்பத்திப் பணிக்கும் இணையாக ஏறத்தாழ 9 சேவைப் பணிகள் கிடைக்கின்றன. ஜேர்சி நகரத்தில் இந்த விகிதாசாரம் 16-க்கு ஒன்று என்பதற்கு மேல் உள்ளது.

ஈராக்கிய போருக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பதையும், ஈராக்கிலிருந்து உடனடியாக அமெரிக்க மற்றும் பிற நாட்டுத்துருப்புக்கள் வெளியேறவேண்டும் என்று கோருவதையும் ஏற்று பல தொழிலாளர்கள் SEP மனுக்களில் கையெழுத்திட்டனர். தற்போது போருக்கு செலவிடப்படும் பணத்தை வீட்டுவசதி, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இதர தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்ற SEP கோரிக்கைக்கு வலுவான ஆதரவு இருக்கிறது.

மத்திய நியூ ஜேர்சி நகரான Rutgers பல்கலைக்கழகம் உள்ள New Brunswick-ல் கூட நாங்கள் கையெழுத்துக்களை திரட்டினோம். வகுப்பறைகள் முடிகின்ற பருவத்தின் இறுதிக்கட்டத்திற்கு வந்திருந்தாலும், போர் மற்றும் எதிர்கால சமுதாயத்தைப் பற்றிய கவலை கொண்ட மாணவர்கள் பெருந்திரளாக நமது மனுக்களில் கையெழுத்திட்டனர். ஜோன் கெர்ரியும், ஜனநாயகக் கட்சிக்காரர்களும் எடுத்துள்ள போர் ஆதரவு நிலைப்பாட்டின் மீது தங்களது வெறுப்பை மாணவர்கள் வெளிப்படுத்தினர், வாக்குச்சீட்டில் சோசலிச மாற்று இடம்பெறுவதை ஆதரித்தனர்.

நமது ஆதரவாளர்களுள் WSWS-யை வாசிக்கும் பலர் உள்ளனர், அதில் ஒருவர் ஜேர்ஸி நகரில் மதுபான கடை வைத்திருக்கிறார். இந்த பிரச்சாரம் பற்றி கேள்விப்பட்டபோது, அவர் SEP பிரதிநிதிகளை அழைத்து தனது மதுபான கடையிலிருந்தவர்களிடம் மனுக்களை சுற்றுக்கு விட்டார்.

Rutgers Newark வளாகத்தில் ஓரு மாணவர், நியூ ஜேர்ஸியில் சோசலிச பிரச்சாரம் நடக்கிறது என்பதையே முதலில் நம்பிவில்லை. எவ்வாறாயினும், துண்டு அறிக்கையை படித்த பின்னர், மனுவில் கையெழுத்திட்டதுடன், தமது பள்ளிக்கூடம் இலையுதிர்காலத்தில் திரும்ப திறக்கப்பட்டதும் அங்கு வந்து SEP-யை உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

SEP பிரச்சாரம் சம்பந்தமாக பல்வேறு ஆதரவாளர்களிடம் WSWS பேசியது. WSWS வாசகர் ஒருவர், ''அமெரிக்க அரசியலை விழிப்போடு பின்பற்றுவோருக்கு ஒன்று நன்றாகத் தெரியும், குடியரசுக் கட்சிக்காரர்கள், அல்லது ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இவர்களில் எவர் அதிகாரத்தில் அமர்ந்தாலும் நாம் கொடூரமான எதிர்காலத்தை சந்திக்க விருக்கிறோம் என்று சொன்னார். SEP தேர்தலில் வெற்றி பெறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அது அதன் குறியிலக்கும் அல்ல. SEP யை ஆதரிப்பதன் மூலம், நாம் ஒரு நோக்கத்தை உருவாக்கவே முயற்சிக்கிறோம்.

''போஸ்டனில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டை நீங்கள் கவனித்திருந்தால் அதில் 50- மில்லியன் டாலர்களை நன்கொடையாகக் கொடுத்த, குடியரசுக் கட்சிக்காரர்களை ஆதரித்த அதே ஆதரவாளர்கள்தான் (lobbyists) ஜனநாயகக் கட்சிக்காரர்களையும் ஆதரிப்பார்கள், தங்களது பணத்தின்மூலம் அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்பதை அறிவீர்கள்.

WSWS-ன் மற்றொரு வாசகர் நியூ ஜேர்ஸி பிரச்சாரத்தில் தான் எப்படி உதவ முடியும் என்று கேட்டார். 79 வயதான அந்தப்பெண் சக்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடுகிறார். தான் பல துண்டறிக்கைகளை விநியோகிக்கின்ற நிலையில் இல்லை என்று தனது கடிதத்தில் விளக்கியிருக்கிறார் என்றாலும், நியூ ஜேர்ஸியில் SEPன் 15- எலக்டர்களில் ஒருவராக பணியாற்றும் தொண்டராக முன்வந்திருக்கிறார்.

அவர் விளக்கினார்: ''1924ல் நான் பிறந்தேன், ஏராளமான வரலாற்றுச் சம்பவ காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன்--- பெரிய பொருளாதார மந்தம், இரண்டாம் உலகப்போர், பனிப்போர், மக்கார்த்தீ சகாப்தம், படுகொலைகளின் தசாப்தங்கள், வாட்டர் கேட் மற்றும் இது போன்ற பலவாகும்...... 1948ல் -நான் எனது முதலாவது வாக்கை--- ஹென்றி வாலாஸிற்கு அளித்தேன். நான் வளரும் வயதில் 'உணர்வுபூர்வமாகவும்,' மற்றும் 'நடைமுறைரீதியாகவும்' செயல்பட தொடங்கினேன். மழலையர் பள்ளியிலிருந்து 'சோசலிசம்' என்ற சொல்லே கறைபடிந்த சொலாக பார்ப்பதற்கு, முதலாளித்துவத்தை 'சுதந்திரம் மற்றும் ஜனநாயகம்' என்பதுடன் ஒரு பொருள் குறிக்கும் பல சொல் ஆக நம்பச்செய்வதற்கு மக்கள் மூளைச்சலவை செய்யப்படும்பொழுது, நாடு எப்படி தயாராக இருக்க முடியும் - அது தயாராக இல்லை. சோசலிசத்துக்கு மூன்றாவது கட்சிகள் எப்போதுமே வெற்றி பெறமுடியாது. எனவேதான் குறைந்ததீங்கு [Lesser evil] இருந்துவிட்டு போகட்டுமே என்பதற்காக நான் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு, சில நேரங்களில் மூக்கை பொத்திக்கொண்டு வாக்களித்தேன்.

''இரண்டு பிரதான கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகள் அவர்களை ஆதரிக்கின்ற பெருநிறுவன பகாசுரர்களை சார்ந்து இருத்தலால் முடமாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட செயற்திட்டத்திலிருந்து அதிகம் விலகிச்செல்ல முயன்றால் ஒழித்துக்கட்டப்பட்டு விடுகிறார்கள்.

''இல்லினோயில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் SEP வாக்குப்பதிவில் கலந்து கொள்ளவிடாது தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சி அவர்களது அசாதாரணமான முயற்சியை அம்பலப்படுத்துகிறது. இரண்டு கட்சிகளுக்கும் பரவலான எதிர்ப்பு நிலவுகிறது என்பதை ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் குவிமையப்படுத்தப்படவில்லை. அதை குவிமையப்படுத்துகிற கட்சியால் அவர்களுக்கு நரகவேதனையாக உள்ளதாக பீதியடைந்துள்ளனர்.

''சோசலிச மூன்றாவது கட்சி வரவேண்டிய நேரம் வந்துவிட்டது. பூகோள பேரழிவிற்கு இது ஒன்றுதான் மாற்றீடாகும். இனி நாம் காத்திருக்க முடியாது. இந்த தேர்தலில் SEP வெற்றி பெறமுடியாது, ஆனால் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை இதன் மூலம் அக்கட்சி உருவாக்கிவிட முடியும்''.

WSWS-ன் மற்றொரு நீண்டகால வாசகர் நியூ ஜேர்ஸி பிரச்சார எலெக்டராக பணியாற்ற தாமாக முன்வந்திருக்கிறார். SEP வாக்குச்சீட்டில் இடம்பெறும் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அவர் கூறினார், ''நான் WSWS யையும், அதன் பிரச்சாரத்தையும் ஆதரிக்கிறேன். ஏனென்றால் WSWS- ல் முன்வைக்கப்படும் விளக்கத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் இந்தப் பணியைச் செய்கின்ற அவர்களை ஆதரித்து ஊக்குவிக்க விரும்புகிறேன்.

''குறிப்பாக, நான் இந்தப் பிரச்சாரத்தை ஆதரிக்கிறேன் ஏனென்றால், அது மக்களுக்கு திட்டவட்டமான ஒன்றைத் தருகிறது. பில்வான் ஓகெனுக்கும், ஜிம் லோரன்ஸுக்கும் வாக்களிக்க வேண்டும்--- ஏனென்றால் அப்படிச்செய்வது மக்களுக்கு கல்வி புகட்டும் மற்றொரு வழியாகும்.

''ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டை பற்றியும் நான் மிகக்குறைவாகவே மதிப்பிடுகிறேன். டென்னிஸ் குசினிச், ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார் என்பதனால் நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். அந்த மாநாடு நாடகம் போல் நடத்தப்பட்டிருக்கிறது, அந்த மாட்டிற்குப் பின்னர் நான் அக்கட்சி மீது எந்த நம்பிக்கையும் வைத்திருக்க அல்லது அதை நம்ப எந்த காரணமும் இல்லை.

''ஜோன் கெர்ரியை ஆதரிக்க வேண்டுமென்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை ஏனென்றால் 'புஷ்ஷை தவிர வேறு எவரும் சிறந்தவர்', என்ற வாதம் புஷ்ஷைவிட கெர்ரி மோசமானவர் என்ற நிலையை ஏற்படுத்திவிடும் என்று நினைக்கிறேன். இறுதியாக என்னைப் பொறுத்தவரை 40- ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து வந்திருக்கிறேன், இப்போது அது செயல்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் தருணம் வந்துவிட்டது''

Top of page