World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: workers respond angrily to deal at DaimlerChrysler

ஜேர்மனி: டைம்லர்கிறைஸ்லர் பேரத்திற்கு தொழிலாளர் கோபத்துடன் விடையளிக்கின்றனர்

By Ludwig Niethammer
12 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

தெற்கு ஜேர்மன் நகரமான Stuttgart உள்ள Sindelfingen-TM, டைம்லர்கிறைஸ்லர் பணித் தளத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களோடு அண்மையில் WSWS நிருபர் குழு பேசியது.

ஜூலை 23-ல் அந்த தொழிற்சாலையின் தொழிற்சங்கக் குழுவும், பொறியியல் தொழிற்சங்கம் IG மெட்டாலும் நிர்வாகத்தின் கடுமையான கோரிக்கைகளுக்கு சரணாகதி அடைந்து, ஆண்டிற்கு தொழிலாளர் செலவினங்களில் 500- மில்லியன் யூரோக்களை (611-மில்லியன் டாலர்களை) குறைத்துக்கொள்வதற்கு சம்மதித்தன. இந்தக் தொகை துல்லியமாக நிர்வாகம் இந்தத் தொழிற் தகராறு தொடங்கிய காலத்தில் வேண்டுகோள் விடுத்ததாகும். 2012-ம் ஆண்டுவரை கம்பெனி வேலை வாய்ப்பு அளவை பராமரிப்பதாய் உறுதியளித்திருப்பதாக தொழிற்சாலை தொழிற்சங்க குழுவும், IG மெட்டாலும் வலியுறுத்திக் கூறியுள்ளன என்றாலும், அத்தகைய உறுதிமொழி எப்படி கடைப்பிடிக்கப்படும் என்ற சாத்தியக்கூறைப்பற்றி எவராலும் விளக்கமுடியவில்லை.

இறுதிப் பேரம் நிகழ்ந்ததற்கு முன்பு பல வாரங்களுக்கு மேலாக தொழிற்துறை தகராறு நீடித்தது, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திலும், கண்டனப்பேரணிகளிலும், கலந்து கொண்டனர். என்றாலும், தொழிற்சங்கங்களை பொறுத்த வரை இந்த கூக்குரல் கணடனங்களை உள்ளார்வத்துடன் எடுத்துக்கொள்ளவில்லை, அவர்கள் கணித்த சரணாகதிக்கான நாடகத்திரையாக மட்டுமே பயன்பட்டது. டைம்லர்கிறைஸ்லரில் உருவாக்கப்பட்ட பேரம் இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய ஜேர்மனியின் வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. இதற்கு முன்னர் எந்தக்காலத்திலும் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் கம்பெனி நிர்வாகம் இத்தகைய கடுமையான வெட்டுக்களை திணிக்க முடிந்ததில்லை.

டைம்லர்கிறைஸ்லர் சாதாரண ஆலைத்தொழிற்சாலையல்ல, இன்றைய தினம் உலகிலேயே மிக சக்திவாய்ந்த அளவில் செயல்படுகிற நிறுவனங்களுள் ஒன்றாகும். அதற்கு மொத்தம் 3,62,000- உழைப்பாளர்கள் உள்ளனர். அதன் ஆண்டு வருவாய் 136 பில்லியன் யூரோக்கள், (166.2- பில்லியன் டாலர்கள்). அதன் மெர்சிடஸ் துணை நிறுவனம் மட்டுமே சென்ற ஆண்டு 3.1 பில்லியன் யூரோக்கள் (3.8-பில்லியன் டாலர்கள்) இலாபம் பெற்றிருக்கிறது.

நீண்டகாலமாக IG மெட்டால் தொழிற்சங்கம் ஊதியங்கள் மற்றும் தொழிலாளர் பயன் (benefit) உடன்படிக்கைகளை உருவாக்கும் முன்மாதிரியாக அந்தக் கம்பெனியை பயன்படுத்திவந்தது. ஜேர்மன் தொழிற்துறை நடைமுறைக்கு ஏற்ப தொடக்க கலைந்துரையாடல்களுக்காக தொழிற்சங்கம் குறிப்பிட்ட மாநிலங்களை தேர்ந்தெடுப்பது உள்ளது. மாநிலத்தின் தனிசிறப்புடைய உயர்ந்த அளவு தொழிற்சங்க அமைப்பை தேர்ந்தெடுப்பது தொழிற்சங்க பாரம்பரியமாகும்----- எடுத்துக்காட்டாக, தென்மாநிலமான Baden-Württemberg-ல் மெர்சிடஸ்- உடையது பல பெரிய தொழிற்சாலைகள் உள்ளது. மனநிறைவுதரும் ஊதிய உடன்பாடு உருவாக்கப்பட்டு, அது ஒட்டுமொத்தமாக ஜேர்மனி முழுவதிலும் இத்தகைய உடன்பாடுகளுக்கு முன்மாதிரி பேரமாக காட்டப்படும். இப்போது இந்த நடைமுறை தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது. Volkswagen மற்றும் MAN முதலிய பல்வேறு இதர பெரிய ஜேர்மன் கம்பெனிகள்-- டைம்லர்கிறைஸ்லரின் அண்மையின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஊதிய வெட்டுக்களை தங்களது சொந்த தொழிற்சாலைகளிலும் சலுகைகள் மற்றும் ஊதிய வெட்டுக்களை கோருவதற்கு சமிக்கையாக எடுத்துக்கொண்டிருக்கின்றன.

டைம்லர்கிறைஸ்லரில் உருவாக்கப்பட்டுள்ள பேரம் வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ஊடகங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதோடு நிற்காமல் அரசியல் கட்சி மற்றும் ஜேர்மன் அரசாங்கமும் இந்த பேரத்தை மறைக்க முடியாத மகிழ்வோடு வரவேற்றிருக்கிறது. ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் இந்த பேரம் ''பொது அறிவிற்கு கிடைத்த வெற்றி'' என்று வர்ணித்துள்ளார். பழமைவாத எதிர்கட்சியான கிறிஸ்துவ சமூக ஒன்றிய தலைவர் Edmund Stoiber ''எதிர்காலத்தில் ஜேர்மனி ஒரு தொழிற்துறை அடித்தளம் என்பதின் ஒரு சமிக்கையாக இது அமைந்திருக்கிறது'' என்று கூறினார்.

WSWS-இடம் மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் பேசியபொழுது இந்த பேரம் பற்றி தங்களது மிக நிதானமான மதிப்பீடுகளை செய்தனர். தொழிலாளர்கள் பொதுவாக அந்த பேரத்தின் உள்ளடக்கத்தை புறக்கணித்தனர், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைக் குழுவின் பங்களிப்பு குறித்து பெரும் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில், பெரும்பாலானவர்கள் தொழிற்சாலை மட்டத்திற்குள் நடத்தப்படும் கண்டனம் மற்றும் அழுத்தங்கள் நிர்வாகத்தின் மிரட்டலை சமாளிப்பதற்கு போதுமானவையல்ல என்று விழிப்புடன் இருந்தனர்.

பொதுவாக தொழிலாளர்களின் உணர்வுப்போக்கை கீழ்க்கண்ட வகையில் சுருக்கமாக சொல்லலாம்: ''நாங்கள் மிரட்டி பணியவைக்கப்பட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும், தொழிற்சங்கமும், தொழிற்சாலைக் குழுவும் எங்களை காட்டிக்கொடுத்துவிட்டன. ஆனால் 6000-பேர் வேலையிழக்கின்ற வகையில் டைம்லர்கிறைஸ்லர் நிறுவனம் தனது உற்பத்தியை இடமாற்றம் செய்வதற்கான அச்சுறுத்தலை நிறைவேற்றியிருக்குமானால் அதைத் தடுக்க நாங்கள் என்ன செய்திருக்க முடியும்?''

டைம்லரில் 28-ஆண்டுகள் பணியாற்றிய 61 வயது Gred W. கூறினார்:

''ஏற்கனவே தொழிற்சங்க குழுவும் கம்பெனி நிர்வாகமும் முன்கூட்டியே உருவாக்கிவிட்ட ஒப்பந்தப்படி இப்போது தங்களுக்குரிய பங்களிப்பை தருவதில் அவர்கள் நாடகமாடியிருக்கிறார்கள் என்பது என் கருத்து. இந்த பேரம் முடிவானதை தொடர்ந்து தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்டுவிட்ட உணர்வோடு மிகவும் கீழ்ப்படிந்து இருக்கின்றனர்.

''2012- வரை வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் செய்துதரும் உறுதிமொழியை நாங்கள் நம்ப முடியாது. சென்ற ஆண்டு இலையுதிர்காலத்தில் நாங்கள் ஒரு உடன்பாடு செய்து கொண்டோம். அது அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஊதியங்களையும், சலுகைகளையும் முடிவு செய்தது, இப்போது அதை குப்பைக் கூடையில் தூக்கிப்போட்டுவிட்டார்கள். இப்போது பொருளாதாரமே ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும், அப்படியிருக்கும்போது திடீரென்று எட்டு ஆண்டுகளுக்கு வேலைபாதுகாப்பு ஏன்? எவரும் அத்தகைய உறுதிமொழியை நம்பமாட்டார்கள்!

''ஊதிய விகிதங்கள் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது நம்மை எங்கே இட்டுச்செல்லும்? பணம் அனைத்தும் செல்வம் முழுவதும், வங்கிகள் மற்றும் ஒரு சிறிய சிறுபான்மைக்குழுவின் கையில் குவிந்திருக்கும் போது, தொழிலாளர்களது பாக்கெட்டுகளுக்கு வரும் ஊதியம் குறைந்து கொண்டே வருகின்ற நிலையில் அது என்னமாதிரியான சமுதாயமாக இருக்கும்?

WSWS உடன் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ஒரு இளம் தொழிற்துறை பயிற்சியாளர் Markus, சென்ற ஆண்டு மெர்சிடஸ் மிகப்பெரும்மளவில் இலாபம் பெற்றதைக் குறிப்பிட்டார். அந்த அடிப்படையில் பார்த்தால் தொழிலாளர்களின் ஒரு பாகமாக ஊதிய வெட்டை தான் ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை என்று கருத்தைத் தெரிவித்தார்.

''இதுவரை அவர்கள் 500- பில்லியன் யூரோக்களை மிச்சப்படுத்த எங்கே வெட்டுக்களை செய்யப்போகிறார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை. இது தொடக்கந்தான் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுது அவர்கள் ஆண்டுக்காண்டு நிறைய வெட்டுக்களை கோருவார்கள், நிர்வாகமும் பங்குதாரர்களும் மேலும் மேலும் வேண்டுகோள் விடுக்கவே செய்வார்கள்''

23-வயதான ஸ்டெ ஃபான் K., கூறினார்:

''தொழிற்சங்கம் குறைந்த பட்சம் அந்த பேரம் குறித்து தொழிலாளர்களை கலந்து ஆலோசித்திருக்கலாம். நாங்கள் அதில் அனைத்தையும் தடுத்திருக்க முடியாது, ஆனால் இதைவிட சிறந்த முடிவை உருவாக்கியிருக்க முடியும். மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த பேரம் பற்றி மகிழ்ச்சியடையவில்லை. வேலைக்கு உத்திரவாதம் என்பது---பேப்பரில் எழுதுவது, நான் நினைக்கவில்லை எந்த விதத்தில் மதிப்புவாய்ந்தது என்று குறிப்பிட்டார். அவர்கள் விருப்பம்போல் வேலையிலிருந்து தொழிலாளர்களை தூக்கி எறிந்துவிட முடியும், அவர்கள் சற்று மேலே சென்று அதையும் செய்யமுடியும்,'' என்று குறிப்பிட்டார்

20-வயதான மார்ஷெல் மூன்றாவதாண்டாக தொழிற்பயிற்சி பெற்றுவருபவர் அவர் இந்த உடன்படிக்கைபற்றி கூறினார்:

''தொடக்கத்திலிருந்தே அனைத்தும் உருவாக்கப்பட்டுவிட்டது. ஒப்பத்திற்கு எதிராக மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயாரானார்கள், ஆனால் அது திட்டத்தின் ஓர் அங்கமல்ல. இப்போது என்னைப்போன்ற பயிற்சி பெறுபவர்கள் பயிற்சி முடிந்ததும் பட்டியலிடப்பட்டு ஒன்று சேர்ப்பர். அதன்பிறகு தொழிற்சாலை விட்டு தொழிற்சாலைக்கு மாற்றிக்கொண்டேயிருப்பார்கள்''.

46-வயதான அலி-B- டைம்லரில் 25- ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் WSWS நிருபர்களிடம் கூறினார்:

''அவர்கள் ரோபோக்களை கையாள விரும்புகிறார்கள், சமூக உரிமைகள் படைத்த மனிதர்களை பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. வேலை உத்திரவாதம் அடுத்த சில வருடங்களுக்கு என்பது பற்றி எனக்கு நம்பிக்கையில்லை. உலகப்பொருளாதாரம் மிக மோசமாக மாறிக்கொண்டே வருகிறது, உலகம் முழுவதிலும் வேலைவாய்ப்புக்கள் குறைந்துகொண்டு வருகின்றன மற்றும் தொழிலாளர்களது வாழ்க்கைத்தரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.''

See Also :

ஜேர்மனி: டைம்லர்-கிறைஸ்லர் தொழிற்சங்கம் பூரண சரணாகதி

டெட்ரோய்ட்டிலிருந்து படிப்பினைகள்
ஜேர்மன் டைம்லர்கிறைஸ்லர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அரசியல் பணிகள்

டைம்லர் கிறைஸ்லர் வேலை வெட்டிற்கு ஜேர்மன் கார் தொழிலாளர்கள் கண்டனம்

Top of page