World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

Livio Maitan, 1923-2004: a critical assessment

Part 3: A "Trotskyist" in Rifondazione Comunista

லிவியோ மைய்ற்ரான், 1923-2004: ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு

பகுதி 3: Rifondazione Comunista Mல் ஒரு ''ட்ரொட்ஸ்கிஸ்ட்''

பகுதி 1 | பகுதி 2

By Peter Schwarz
6 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

இக்கட்டுரை செப்டம்பரில் ரோம் நகரில், தனது 81வது வயதில் காலமான லிவியோ மைய்ற்ரானுடைய அரசியல் வாழ்வைப் பற்றிய மூன்று-பகுதிக் கட்டுரையில் இது மூன்றாம் பகுதியாகும். ஏர்னஸ்ட் மண்டேலுடன், நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தில் நன்கு அறியப்பட்டிருந்த பிரதிநிதியாகவும் சர்வதேச திருத்தல்வாத போக்குடையவராகவும் இருந்தார். கட்டுரையின் முதல் பகுதி நவம்பர் 4 இலும் இரண்டாம் பகுதி நவம்பர் 5 இலும் (ஆங்கிலத்தில்) வெளிவந்தது.

Partito della Rifondazione Comunista (PRC) கட்சியைப் பற்றி முந்தைய நிகழ்வுகளை விரிவாகக் கூறும் இடமன்று இது. அதற்குப்பதிலாக, நான் இக்கட்சியில் நிர்வாகக் குழுவில் பத்து ஆண்டுகள் இருந்த கட்சித் தலைவர் பெளஸ்டோ பெர்டிநோட்டியின் உற்ற, நெருங்கிய ஆலோசகராகவும் அமைப்பின் தன்மை, பங்கு பற்றி மோசமான பொய்த்தோற்றங்களையும் பிரச்சாரம் செய்திருந்த மைய்ற்ரானுடைய பங்கு பற்றி எழுதுவதுடன் நிறுத்திக் கொள்கின்றேன்

Rifondazione பற்றி ஐக்கிய செயலகத்தின் பத்திரிகைகளில் வெளிவந்திருந்த, மைய்ற்ரானுடைய புகழாரத்துதிகளில் இத்தாலிய ஸ்ராலினிசம், மாவோ சேதுங், பிடெல் காஸ்ட்ரோ, சேகுவரா பற்றி இவர் முன்பு புகழ்பாடியிருந்தபோது பயன்படுத்திய தனித்தன்மை வாய்ந்த பப்பலோவாத நடைமுறைச் சொற்றொடர்களையே காண்கிறோம். கட்சியின் வேலைதிட்டத்தை பற்றிய சீரான ஆய்வு, இத்தாலிய அரசியல் வாழ்வில் அதன் பங்கு ஆகியவை பற்றி இப்படைப்புக்களில் தேடித் துருவினாலும் எதையும் காண்பதற்கில்லை. மைய்ற்ரான், "முரண்பாடுகள்", "புறநிலை சக்திகள்", மற்றும் "சக்திகளின் உறவுகள்" என்றவற்றை பற்றி வீணாக பேசியுள்ளார்.

இந்த ஆண்டு மைய்ற்ரானுடைய போக்கை கொண்டுள்ள ஒர் உறுப்பினரான Flavia D'Angeli எழுதியுள்ளது Rifondazione மத்தியில் இருப்பவர்கள் தொடர்பான ஒரு மதிப்பீட்டை காட்டுவதாக உள்ளது. "PRC இன் வரலாறு முழுவதிலும், Bandiera Rossa வை சுற்றியுள்ள அரசியல் போக்கு கட்சியின் நடவடிக்கையில் அதன் போராளிகள் உண்மையாக நுழைக்கப்படுவதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கவும், வர்க்க நடவடிக்கைகளை போலியாக காட்டவும், சமூக கருத்தை உள்ளே கொண்டு வருவதற்கு ஊக்கம் கொடுக்கவும் முயன்றது. ஒரு தனிச்சிறப்பு உடைய நிகழ்வாகவும், ஒரு புதிய புரட்சிகரமான அரசியல் கருத்துகளை மீளஉருவாக்கும் கருவியாக, மோதல்கள், பிளவுகள், பரிசோதனைகள், புதிய வாய்ப்புக்கள், புதிய முறையில் இணைப்புக்களைக் கொள்ளுதல் என்ற சிக்கல் நிறைந்த வகையில் ஒரு கருவியாக Rifondazione நமக்குத் தோற்றமளிக்கிறது.

"ஒரு முற்றுப்பெற்றுள்ள முதலாளித்துவ-எதிர் சக்தியை நோக்கி நேரடியாக வளர்ச்சியுறும் நிலையை நாம் நினைத்துப் பார்க்கவில்லை; மாறாக ஒரு முரண்பாடான நிகழ்வுப்போக்காகத்தான் எதிர்பார்த்தோம். இவ்வாறு, ஒரு முழுக் கட்டத்திலும், நாம் கட்சிக்குள் பரந்த, பன்முக இடதை அமைக்க முயன்றோம்; சில நேரங்களில் அது வெற்றிகளை பெற்றது, ஆனால் இந்த ஆரம்பமுயற்சிகள் இல்லாமல், ஓர் ஒருமைப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்து, ஒரே சீரான மூலோபாய நிலைநோக்கை அளித்தது...

"எங்கள் முக்கிய சக்திகளை முன்னணியில் இருந்த குழுவில் திரட்டி நின்றோம், பெரும்பாலான தோழர்களுடன் சகஜமான உறவுகளைக் கொண்டிருந்தோம்; ஒரு புரட்சிகரக் கட்சியை அமைப்பதற்கு மிகச் சாதகமான நிலைமை உள்ளது என்ற நனவு இருந்தது; ஆனால் அதே நேரத்தில் அத்தகைய முன்னேற்றும் உறுதியாக வந்துவிடும் எனக் கொள்வதற்கில்லை என்ற நனவும் இருந்தது; மேலும் முரண்பாடுகள் தொடர்ந்து இருக்கும் என்றும் தோன்றியது." (16)

"சிக்கலான முரண்பாட்டு நிகழ்ச்சிபோக்குகள்" போன்ற எல்லா வெற்று பேச்சுக்குப் பின்னே மறைந்திருக்கும் எளிமையான உண்மை என்னவென்றால், ஒரு 13 ஆண்டு காலத்திற்கு மைய்ற்ரானுடைய குழு முதலாளித்துவ அமைப்பிற்கு இடதுசாரி மறைப்பு என்ற முறையில் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளது, கட்சி முதலாளித்துவ சமுதாயத்தை ஒவ்வொரு கடுமையான நெருக்கடியிலும் பாதுகாத்துள்ளதோடு, ஒருவேளை அடுத்த தேர்தலில் சில்வியோ பெர்லுஸ்கோனியின் வலதுசாரிக் கூட்டணி தோல்வியடைந்தால், அடுத்த இத்தாலிய அரசாங்கம் அமைப்பதிலும் அநேகமாக நேரடித் தொடர்பு கொள்ளக் கூடும். Rifondazione கொண்டிருந்த பங்கு பற்றிய எந்தத் தீவிர சோதனைக்கும் அது "ஒரு புரட்சிகரமான கட்சியை அமைப்பதற்கான" "ஒரு கருவி" என்றோ அல்லது "முதலாளித்துவ-எதிர்ப்பு சக்தி" என்று கூறும்படியோ இல்லை; மாறாக அது தொழிலாள வர்க்கம் சுயாதீனமான, சோசலிச நிலைநோக்குடையதாக வளர்வதற்கு ஒரு தடையாகத்தான் இருந்துள்ளது.

Rifondazione இன் தோற்றம் 1991க்குப் பின் செல்லுகிறது. அப்பொழுது, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி (PCI) தன்னுடயை பாரம்பரிய பெயரை விலக்கிடவும், கட்சியின் அடையாளம், அதன் பழைய கம்யூனிச செயல்கள் ஆகியவற்றையெல்லாம் துறந்துவிட முடிவு செய்ததுடன் தன்னுடைய விசுவாசத்தை சமூக ஜனநாயக கட்சிக்கு அறிவித்தது. இத்தகைய மாற்றம் இதன் போக்கில் விரைவாக ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாஸ்கோவிற்கும் பாரம்பரியமாக இருந்திருந்த தொடர்புகள், சோவியத் ஒன்றியத்தின் சரிவிற்குப் பின்னர் இறுதியாக முடிவுற்றன என்பது முதல் காரணமாகும். இத்தாலியின் பாரம்பரிய ஆளும் கட்சிகளான கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளும் சோசலிஸ்டுகளும் பெரும் ஊழல் அவதூறு நடவடிக்கையில் ஆழ்ந்தது இரண்டாம் காரணமாகும். தன்னுடைய கம்யூனிசத்துடனான அடையாளத் தொடர்புகளை ஒதுக்கிவிட்டதின் மூலம், இடது ஜனநாயகக் கட்சி (Democratic Party of the Left-PDS) என்று புதுப்பெயரிடப்பட்டதே அது அரசாங்கத்தில் பொறுப்பேற்பதற்கு தயாராக இருந்து, ஆணிவேர்களில் ஆட்டம் கண்டிருந்த ஒரு முதலாளித்துவத்தை காப்பாற்ற விழைந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.

இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒரு பிரிவு, இத்தகைய மாறுதலை மிகக்கூடுதலான வலது போக்கு என்று கருதியது. இடதில் இத்தகைய மாற்றம் ஆபத்தான வெற்றிடத்தை விட்டுச் சென்றுவிடும் என்ற அச்சத்தைக் கொண்டிருந்தது. இவ்விதத்தில்தான் கம்யூனிச மறு அஸ்திவாரம்", (Rifondazione Communista) தோன்றியது. இப்புதிய அமைப்பில், "ஐரோப்பிய கம்யூனிசம்" என்ற பெர்லிங்கருக்கு எதிரான போராட்டத்தில் மாஸ்கோவின் நம்பிக்கை உரியவகையில் பெயரை ஏற்படுத்திக் கொண்ட ஆர்மன்டோ கோசுட்டாவின் (Armando Cossuta) தலைமையின் கீழிருந்த ஸ்ராலினிச கடும்போக்கானவர்களும் அடங்கியிருந்தனர். இந்தப் புதிய அமைப்பு 1970 களில் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, முன்பு ஓரளவு வலிமையுடன் போராட்டம் நடத்தியிருந்த பல தீவிரபோக்குப் பிரிவுகளுக்கும் தன்னுடைய நிறுவனத்தில் இடம் அளித்தது.

ஆரம்பத்தில், PDS இன் எதிர்பார்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில், பெர்லுஸ்கோனியின் Forza Italia தான் வெற்றியைக் கண்டதே ஒழிய PDS அல்ல. இத்தாலிய வரலாற்றில் போருக்குப் பின் முதல் தடவையாக புதிய பாசிஸ்ட்டுகளை தன்னுடைய ஆளும் கூட்டணிக்குள் கொண்டுவரமுடிந்ததால், பெர்லுஸ்கோனியால் பெரும்பான்மை பெற முடிந்தது. ஆனால் அவருடைய வலதுசாரி அரசாங்கம் ஒரு சில மாதங்களுக்குத்தான் அதிகாரத்தில் இருக்க முடிந்தது; அதனுடைய பொருளாதார, சமூகநலக் கொள்கைகளுக்கு எதிராக மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை அடுத்து அவருடைய ஆட்சி சரிந்து போயிற்று.

இந்தக் காலக் கட்டத்தில்தான் Rifondazione முதல்தடவையாக தன்னுடைய பெருமித அரசியல் நிர்வாகத் தன்மையை நிரூபித்தது. கிட்டத்தட்ட ஒராண்டுக்கும் மேலாக, பெர்லுஸ்கோனியின் கீழ் மந்திரியாக இருந்தவரும், நாட்டின் மத்திய வங்கியின் முன்னாள் தலைவருமான லாம்பெர்டோ டீனியுடைய (Lamberto Dini) இடைக்கால அரசாங்கத்திற்குப் பாராளுமன்ற பெரும்பான்மையை அது பெற்றுத் தந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அது நேரடியாகப் பங்கு கொள்ளாமல் ரோமனோ புறோடியின் (Romano Prodi) இடது-மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுத்தது. இவ்விதத்தில், Rifondazione தீவிரமான நலன்புரி, சமுதாயச் செலவினங்கள் மீதான கடுமையான குறைப்புக்களை செயல்படுத்த தேவையான பாராளுமன்ற பெரும்பான்மைக்கு உத்தரவாதம் அளித்து, வரவுசெலவுத் திட்டத்தை உறுதிப்படுத்தி, இத்தாலி, ஐரோப்பிய கூட்டு நாணய முறையான யூரோவின் பங்கு பெறுவதற்கான தகுதியைப் பெறவும் உதவியது.

1998ம் ஆண்டு Rifondazione புறோடிக்கான தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டபோது, ஒரு பெரிய அரசாங்க நெருக்கடி ஏற்பட்டு, முற்றிலும் எதிர்வகையில் PCT இன் பின்தோன்றல்கள் முதல்தடவையாக ஓர் அரசாங்கத்திற்குத் தலைமேயேற்று நடத்தும் நிலை வந்தது. PDS இன் தலைவரான மாசிமோ டி அலீமா (Massimo d'Alema) இடது-மத்திய கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் வகையில் வருவதையும் பாதுகாத்துக் கொண்டார். இப்பொழுது Rifondazione அரசாங்கத்தில் பங்கு பெற்றிராமல், கூடுதலான எதிர்ப்புத் தன்மை நிறைந்த நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதன் விளைவாக அர்மண்டோ கோசுட்டாவைச் சுற்றி இருந்த மூத்த ஸ்ராலினிஸ்டுகள் கட்சியை விட்டு விலகி, தங்களுடைய சொந்த Comunisti Italiani என்னும் அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்த அமைப்பை நிறுவினர்.

மைய்ற்ரானும் அவருடைய ஆதரவாளர்களும் Rifondazione மேற்கொண்ட இந்தத் தந்திரோபாயத்தை இடது நோக்கிய திருப்பம் என்றும், தங்களுடைய அரசியல் போக்கை நியாயப்படுத்திய ஒன்று என்றும் களிப்புடன் கொண்டாடினார்கள் என்பதைக் கூறவும் தேவையில்லை. "கட்சி முன்னேற முடியாத நிலை, மற்றும் தடுமாறிக் கொண்டிருக்கிறது, உண்மையில் இனித் திரும்பமுடியாத அழிவுநிலைக்கு வந்துவிடும் என்ற ஆபத்தையும் மேற்கொண்டதற்காக பெளஸ்டோ பெர்டிநோட்டிக்கு (Fausto Bertinotti) மதிப்புக் கொடுக்கபடவேண்டும்." என்று மைய்ற்ரான் அறிவித்தார். மேலும் பெர்டிநோட்டி "ஸ்ராலினிசத்திற்கு எதிராக ஒரு பிரச்சாரத்தைக் கொள்ளவும் அதேநேரம் பூகோளமயமான சகாப்தத்தில் முதலாளித்துவத்தின் அடிப்படைக் குணநலன்கள் மற்றும் இயக்கம் தொடர்பான தற்காலத்திற்கான ஒரு மூலோபாய சிந்தனைக்கும் ஊக்கத்தையும் கொடுக்கிறார்" என்று அவர் கூறினார்.(17)

உண்மையில், 1998ம் ஆண்டின் தந்திரோபாய மாற்றம் அடிப்படையில் ஒரு புதிய நிலைநோக்கை கொள்ளுவதுடன் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. பெர்டிநோட்டியுடன் இருந்த பெரும்பான்மையினர் அவர்கள் மக்களிடையே செல்வாக்கையிழந்திருந்த கொள்கைகளுக்கு அடிமைத்தனமான முறையில் ஆதரவைத் தொடர்ந்தால் அரசாங்கமே முழுமையாகக் கவிழ்ந்து விடக் கூடிய அபாயத்தில் இருப்பது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராகப் பெருகி வரும் எதிர்ப்பை திசைதிருப்பும் முக்கியப் பணியை Rifondazione இழந்துவிடும் நிலையை இது ஏற்படுத்தியது.

அடுத்துவந்த ஆண்டுகளில், Rifondazione கூடுதலான முறையில் பூகோளமயமாக்கலுக்கு எதிர்ப்பைக் காட்டும் இயக்கத்தின் செல்வாக்கைப் பெற முயலும் நிலைப்போக்கைக் கொண்டது. இந்த மாற்றத்திற்கு, பூகோளமயமாக்கல்-எதிர்ப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே ஒரு சோசலிச முன்னோக்கை நிராகரித்திருந்த போதிலும் கூட, மைய்ற்ரானுடைய ஆதரவு பிரிவினர் உற்சாகமான ஆதரவை கொடுத்தனர். அதே நேரத்தில், கட்சி தன்னுடைய நிலைநோக்கான அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதை நிலைநிறுத்திக் கொண்டுதான் இருந்தது. இது ஜூன் 2003 இல் இன்னும் தெளிவாயிற்று. Rifondazione ஆரம்பித்துவைத்த சிறுதொழிற்துறைகளில் வேலைப்பாதுகாப்பு விரிவாக்கப்படவேண்டும் என்பது பற்றிய பொது வாக்கெடுப்பு தோல்வியடைந்தவுடனேயே, பெர்டிநோட்டி செய்தியாளர்களிடம் தன்னுடைய கட்சி அடுத்த தேர்தல்களுக்கு இடது-மத்திய கட்சிகளுடன் நடைமுறைப்படுத்தக் கூடிய உடன்பாடு ஒன்றை கொள்ளப் பாடுபடும் என்றும் வருங்காலத்தில் ஒரு மத்திய-இடது அரசாங்கம் ஏற்பட்டால் அதில் மந்திரி பதவிகளைக்கூட ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

1994ம் ஆண்டில் இருந்து Rifondazione-க்குத் தலைமை தாங்கி வந்த பெளஸ்டோ பெர்டிநோட்டி இக்கட்சியில் சந்தர்ப்பவாதப் போக்கின் முழுத்தன்மையையும் கொண்டுள்ளார். 1940ல் பிறந்த அவர் பல வருஷங்கள் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தும் அதன் தலைமையிட உட்பிரிவு வட்டம் எதிலும் சேர்ந்திருக்கவில்லை. வட இத்தாலிய தொழிற்துறை பகுதியில் தொழிற்சங்க உயரலுவலகராக முக்கியத்துவத்திற்கு உயர்ந்த அவர், ஒரு இடதுசாரி தொழிற்சங்கவாதி என்ற புகழை அடைந்திருந்தார். இடது, மற்றும் மார்க்சிச குறிப்புடைய கருத்துக்களைச் செதுக்கிக் கொண்டுவருவதில் அவர் திறமையைக் கொண்டிருந்தார்; ஆனால் அவருடைய கொள்கைகளோ முற்றிலும் எதிர்ப்போக்கைக் கொண்டிருந்தன. உடனடி விளைவுகளைக் கருத்திற்கொண்டுதான் ஒவ்வொரு நடைமுறையும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய அரசியல் வழியில் நீண்டகால அல்லது கொள்கை அடிப்படையிலான பரிசீலனைகளின் விரிவான கருத்தாய்வு இருந்ததில்லை. சோசலிசத்திற்கு அவர் உதட்டளவில் கொடுத்த ஆதரவு தன்னுடைய ஆதரவாளர்களின் மனநிலைக்கு அடிபணியும் நோக்கத்தை கொண்டிருந்தது.

பெர்டிநோட்டியை நல்ல முறையில் சித்தரிக்கும் தன்மையில் மைய்ற்ரான் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். Rifondazione இன் தலைவருடன் அவர் நெருக்கமான உறவைக் கொண்டிருந்து, அவருடைய மரணத்திற்கு சில மணிநேரம் முன்புகூட மிகப் பரந்த அரசியல் விவாதங்களை கொண்டிருந்தார். பெர்டிநோட்டியைப் பற்றிய அவருடைய துதிப்பாடல்கள் சிலநேரம் அரசசபையில் இருந்த புகழ்பாடும் தன்மையைத்தான் ஒத்திருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பெர்டிநோட்டியின் புதிதாக வெளியிடப்பட்ட "மரணிக்காத சிந்தனைகள்" என்ற தலைப்பில் வந்த புத்தகத்திற்கு அவர் மதிப்புரை வழங்கினார்.

இப்புத்தகத்தின் மீது புகழாரம் சூட்டி அவர் எழுதினார்: "நம்முடைய பங்கிற்கு பெர்டிநோட்டியின் ஆராய்ந்த தீர்ப்பை பகிர்ந்து கொள்ளுகிறோம்: இப்பொழுதுள்ள மிக முக்கியமான முரண்பாடு எப்பொழுதையும் காட்டிலும், நிகழ்ச்சிநிரலில் முதலாளித்துவத்தை அகற்றவேண்டும் என்ற முன்னோக்கு மிகக் கட்டாயம் என்ற உண்மையில் துல்லியமாக உள்ளது; ஆனால் சக்திகளின் உறவுமுறைகள் மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு பின்னோக்கிச் செல்லும் முற்றுணர்வைக் கொண்டிருப்பது இரண்டும் இதை உணர்வதில் பெரும் தடையாக அமைந்துள்ளன."(18)

Rifondazione இன் தலைவர் "முதலாளித்துவத்தை அகற்றும் முன்னோக்கை நிகழ்ச்சிநிரலில்" கொண்டுவர விரும்புகிறார் என்ற கூற்று, அவருடைய அரசியல் வாழ்வை காணும்போது மிகவும் அபத்தமானது. உண்மையில் முதலாளித்துவ-எதிர்ப்பு முன்னோக்கு வளர்வதற்கு பெர்டிநோட்டியின் கட்சிதான் ஒரு முக்கியமான தடையாக இருந்தது.

மைய்ற்ரான் கொடுத்த ஆதரவிற்கு பெர்டிநோட்டியும் அவரைப் பற்றிய புகழைப் பாடும் வகையில், மைய்ற்ரானுடைய வாழ்க்கை வரலாறு 2002 இல் வெளிவந்தபோது அதற்கு ஒரு முன்னுரையை அளித்துள்ளார்.

பெர்டிநோட்டியைச் சூழ்ந்திருந்த பெரும்பான்மையைப்பற்றி, கட்சியின் இடதுசாரிப் பிரிவு கூறியிருந்த விமர்சனங்களில் இருந்து காத்திடும் வகையில் மைய்ற்ரான் நடந்துகொண்டுள்ளார். Progetto Comunista போக்கு கட்சியை வலது-மத்தியகூட்டிற்கு திறந்துவிடும் தன்மையை நிராகரித்து, தொழிற்சங்கவாத நிலைப்பாட்டின் வழியில் பூகோளமயமாதலுக்கு எதிரான இயக்கத்திற்கு அடிபணிவதை விமர்சித்துள்ளது. Progetto Comunista இன் தலைவரான மார்கோ பெரென்டோ (Marco Ferrando) இந்த இயக்கம் "ஒரு வெறும் கற்பனையானதாக மாற்றப்பட்டுவிடக் கூடாது" என்று கூறியுள்ளார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பெரன்டோ "பூகோளமயமாக்கலுக்கு எதிரான ஒரு குறுங்குழுவாத பார்வை கொடுக்கின்றார்" என்று மைய்ற்ரான் குற்றஞ்சாட்டினார். "PRC இன் வரலாற்றுத் தன்மை மிகுந்த மாறுதல் வழிவகையைப் பொறுத்தவரையில் அவர் அதிலிருந்து ஒதுங்கியிருக்க'' முடிவெடுத்தார்". (19)

மைய்ற்ரானால் சிலநேரம் காட்டப்பட்ட கருத்துவேறுபாடுகள், அவ்வப்போதான விமர்சனங்கள், அவற்றிற்கும் பல காரணங்களை அளித்தல் என்று இருந்தபோதிலும், அவருடைய Bandiera-Rossa போக்கு Rifondazione-கும், Bertinotti கும் அரசியலில் ஒரு முக்கிய ஆதரவுத் தூணாக அமைந்தது. கட்சி, மற்றும் அதன் தலைமையை இடதுபக்கமிருந்து வரும் விமர்சனங்களில் இருந்து அது காப்பாற்றியதோடு, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான சோசலிப் போக்கை அபிவிருத்திசெய்வதையும் தடுத்துவிடுகிறது. மைய்ற்ரானும் அவருடைய ஆதரவாளர்களும், இந்த அமைப்பின் சந்தர்ப்பவாத, மற்றும் கொள்கையற்ற தன்மையைப்பற்றி எச்சரிக்கும் வகையில் எதிராகப் பேசியதே இல்லை. தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச பாதையை, Rifondazione இடம் இருந்து பிரிந்து மேற்கொள்ளவேண்டும் என்பதற்கு இவர்கள் தயார் செய்யவே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் International Viewpoint இல் கட்சியை பற்றிப் பெரிதும் உற்சாகத்துடன், "அது சிறப்பான, உண்மையில் மிகத் தனித்தன்மை வாய்ந்த குணநலன்களை இத்தாலிய தொழிலாளர்கள் இயக்கங்களிடையே கொண்டுள்ளது" என்று கூறினார். மேலும், "இன்று இதற்குச் சமமானமான ஒரு அமைப்பை ஐரோப்பிய இடது கட்சிகளிடையே மட்டும் இல்லாமல், தொழிலாள வர்க்கத்திற்காகவும் சோசலிசத்திற்காகவும் போராடுவதாக கூறிக்கொண்டு செயல்படும் கட்சிகளை ஐரோப்பாவிலும் மற்ற கண்டங்களிலும் காண்பதற்கில்லை" என்றும் அவர் தெரிவித்தார். (20)

இது ஒரு வெறும் கண்துடைப்பு அல்ல. உண்மையில் மற்ற சந்தர்ப்பவாத கட்சிகளில் இருந்து Rifondazione ஐ வேறுபடுத்திக்காட்ட ஏதும் இல்லை. இவை அனைத்துமே ஒரு காலை பாராளுமன்றத்தன்மைக்கு புறம்பான எதிர்ப்பு, வேலைநிறுத்த இயக்கத்தில் கொண்டு, மற்றோரு காலை அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியல் வாழ்விலும் ஊன்றியுள்ளன. ஸ்ராலினிசத்திற்குப் பின்வந்த கட்சியான ஜேர்மனியின் ஜனநாயக சோசலிச கட்சி (PDS), பப்லோவாதிகளின் Ligue Communiste Révolutionnaire அல்லது பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சி, இங்கிலாந்தின் Socialist Alliance, இன்னும் பல குழுக்களும் இதைப் போன்ற தன்மையைத்தான் ஏதேனும் ஒரு விதத்தில் கொண்டுள்ளன. ஆழ்ந்த சமுதாய நெருக்கடிக் காலங்களில், அவை முதலாளித்துவ அமைப்பிற்கு ஓர் இடது ஆதரவுத் தூண் போல் செயல்படுகின்றனர். இந்த அமைப்புக்கள் Rifondazione உடன் உறவுகளைத் தக்கவைத்திருப்பது தற்செயலான நிகழ்வு அல்ல.

மைய்ற்ரான் சர்வதேச அரங்கில் கடைசியாகத் தோன்றியது

ஐக்கிய செயலகத்தின் ஓர் உறுப்பினரும், பிரெஞ்சு LCR (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழக) தலைவர்களுள் ஒருவருமான Alain Krivine, மைய்ற்ரான் சர்வதேச வழிவகையில் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகளுக்கு "திறந்துவிடுதல்" ('opening up') என்ற கொள்கையை அளிப்பதில் ஒரு முன்னோடியாக இருந்தார் என்று உறுதிபடுத்தியுள்ளார்.

மைய்ற்ரானைப் பற்றிய இரங்கல் குறிப்பில், Alain Krivine எழுதுகிறார்: "லிவியோவின் மரணத்துடன் ஒரு அத்தியாயம் முடிவடைகிறது; ஆனால் அவருக்கு நன்றி கூறுவதுடன் மற்றொன்று தொடங்குகின்றது, அதாவது "திறந்துவிடுதல்" என்பது தொடர்ந்துள்ளது.... 1990 களில், லிவியோவும் மற்ற அகிலத்தின் தலைவர்களும் புரட்சிகரத் தொழிலாளர்களின் இயக்கம் எவ்வாறு சிதைந்துள்ளது என்றும் அது எவ்வாறு மறுபடியும் சீரமைக்கப்படவேண்டும் என்ற நிகழ்வை நன்கு உணர்ந்தனர். நான்காம் அகிலத்தின் மூலம் பிரத்தியேகமாக இது நடைமுறைப்படுத்தப்பட முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர், சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிசக் காட்டிக் கொடுப்பு இரண்டுடனும் சமமாக முறித்துக் கொள்ளும் ஒரு முதலாளித்தவ-எதிர்ப்பு சக்தியின் திட்டத்திற்கு ஒரு புதிய அஸ்திவாரம் அளிப்பது இன்றியமையாதது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இந்த முன்னோக்கு ஏற்கனவே வெளிப்பட்டு, முதலாளித்துவ-எதிர்ப்பு சக்கதிகளை மறுசீரமைக்க உதவுகிறது, அவர்களுடைய பழைய மரபுகள், தோற்றம் ஆகியவற்றைப் பற்றி இது பொருட்படுத்தவில்லை." (21)

இது வட்டத்தை முடிவிற்கு கொண்டுவருகின்றது. 1953ம் ஆண்டு ஐக்கிய செயலகம் தேர்ந்தெடுத்த அரசியல் நிலைநோக்கை அதன் தர்க்கரீதியான முடிவிற்கு மைய்ற்ரான் இட்டுச் சென்றார். அந்த நேரத்தில், நான்காம் அகிலத்தின் சுதந்திரமான பிரிவுகள் என்று அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை, "உண்மையான வெகுஜன இயக்கத்துடன்" அதாவது ஸ்ராலினிசக் கட்சிகள், குட்டி முதலாளித்துவ தேசிய அமைப்புக்கள், போருக்குப் பிந்தைய காலத்தில் சற்று செல்வாக்கைக் கொண்டுள்ள மற்ற அமைப்புக்கள் இவற்றுடன் இணைத்தல் தேவை என்ற நியாயப்பாட்டைக் கூறி பப்லோ நிராகரித்தார். சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னர், இந்த அமைப்புக்களின் மீது கொள்ளப்பட்ட எதிர்ப்பார்ப்புக்களைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி, ஐக்கிய செயலகம் மீண்டும் மற்ற சக்திகளுடன், "அவர்களுடைய மரபுகள், தோற்றம் ஆகியவற்றை பற்றி" பொருட்படுத்தாமல் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள விழைகிறது.

இதன் பொருள் நடைமுறையில் அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியலில் முழுமையான இணைப்பை ஏற்படுத்தியாகிவிட்டது என்பதுதான். இத்தாலியில் உள்ள Rifondazione பற்றி மட்டும் குறிப்பிடாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக 175 மில்லியன் மக்கள் கொண்ட ஒரு நாட்டை ஆண்டுவரும் பிரேசிலுடைய தொழிலாளர்கள் கட்சியை (PT), பற்றியும் மைய்ற்ரான் இவ்வாறு குறிப்பிடுகிறார். ஐக்கியச் செயலகத்தின் பிரேசில் பிரிவு உறுப்பினர் ஒருவரான மிகுவெல் ரோசெட்டோ (Miguel Rossetto) நாட்டின் விவசாயச் சீர்திருத்த அமைச்சராக உள்ளார். மைய்ற்ரான் கடைசியாகப் பங்கு பெற்றிருந்த, ஐக்கியச் செயலகத்தின் 15ஆம் உலக மாநாட்டில், அத்தகைய ஒத்துழைப்பிற்கு வெளிப்படையாக ஒப்புதல் அளித்தலை அவர் குறிப்பிட்டுச் செய்தார்.

தன்னுடைய ஆரம்ப உரையில் அவர் அறிவித்தார்: "கொள்கை அடிப்படையில், நாம் எப்பொழுதுமே தொழிலாள வர்க்க இயக்கத்திற்கு பெருந்தீமை பயக்கும் பாராளுமன்ற குழப்பவாத நோயினால் தாக்கப்படவில்லை.... எனவே நம்முடைய பெருகி வரும் செல்வாக்கின் பிரதிபலிப்பாக உள்ள கடந்த தசாப்தத்தின் உண்மையான நாங்கள் பாராளுமன்ற தேர்தல் வகையில் தொடர்ச்சியான நாடுகளில், பிரேசிலில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை, டென்மார்க்கில் இருந்து போர்த்துக்கல் வரை, ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் பிரதிநிதிகளை கொண்டுள்ளோம். பிரேசிலில் மிகுவெல் ரோசெட்டோ போன்ற தோழர், இவருடைய அரிய குணநலன்களும் போராளித்தன உணர்வும் நன்கு அறியப்பட்டவையே, முன்னோருபோதிமில்லாத வகையில் வெற்றியைக் கொண்டு தேர்தலில் லூலா (Lula) நிறுவியுள்ள அரசாங்கத்தின் உறுப்பினராக இன்று உள்ளார். தீவிரபோக்கான விவசாயச் சீர்திருத்தத்தை சாதிக்கவேண்டிய முக்கியமான பொறுப்பை மிகுவெல் கொண்டுள்ளார். இது தற்போதிருக்கும் அமைப்புமுறையினை உடைக்கும் ("dynamic of rupture with the system") பொதுவான சக்தியை தோற்றுவிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்நிகழ்வை தொடர்ந்து கவனித்து, அவருடைய போராட்டத்திற்கு, PT மற்றும் MST (நிலமில்லாத கிராமப்புறத் தொழிலாளர்) ஆகியவற்றின் தீவிரபோக்கான பிரிவுகளுடைய ஆதரவையும் தருவோம்: மேலும் இந்த முயற்சியில் உள்ள மிகக் கடினமான தன்மையை பற்றிய ஆழ்ந்த வேதனையை அடக்கிக் கொண்டு, இந்த மாநாட்டில் அவருக்கு நம்முடைய உளமார்ந்த ஒற்றுமையுணர்வையும் வெளிப்படுத்துவோம் ஆக."(22)

"தற்போதுள்ள அமைப்புமுறையுடனான உடைவுமுறை" என்ற மைய்ற்ரானுடைய வருங்காலம் பற்றிய கணிப்பு விரைவில் ஒரு கற்பனையை தவிர வேறொன்றும் இல்லை என்பதை புலப்படுத்திக் கொண்டது. சிறிதும் தடையின்றி, வலதுசாரி முன்னோடியின் நவீன-தாராளவாத கொள்கைகளை பிற்பற்றும் ஓர் அரசாங்கத்தில் ரோசெட்டோ ஒரு அதிகாரபூர்வ பொறுப்பை கொண்டிருக்கிறார். இந்த அரசாங்கம் பிரேசில் முதலாளித்துவத்தின் விசுவாசத்தைக் கொண்டுள்ளது; மேலும் சர்வதேச நாணய சபையில் இருந்தும் மிக உயர்ந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சொற்களில்கூட அது "முதலாளித்துவ-எதிர்ப்பை" காட்டுவதில்லை. ஜனாதிபதி மிஸீஊநீவீஷீ "லிuறீணீ" பீணீ ஷிவீறீஸ்ணீ, ஒரு போர்குணமிக்க தொழிற்சங்கவாதி என்ற புகழ் எழுச்சியுறும் அச்சுறுத்தல் கொடுக்கக் கூடிய தொழிலாள வர்க்கத்தை சமாதானப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்விடயத்தில் பப்லோவாதிகள் முக்கிய பாத்திரத்தை வகித்தனர்.

மைய்ற்ரானுடைய வாழ்வில் இருந்து ஒரு படிப்பினையைப் பெறலாம் என்றால், அது முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அதிகாரத்துவ அமைப்புகளிலிருந்து சுயாதீனமாக, நான்காம் அகிலத்தில் தலைமையின்கீழ், ஒரு சர்வதேசச் சோசலிச கட்சியை பொறுமையாக அமைப்பதை விட வேறு மாற்று ஏதும் இல்லை என்பதுதான். பரந்த மக்களின் உரிமைகளின் மீதும் சமூகநல உரிமைகளின் மீதும் நிரந்தர தாக்குதல்கள் மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் ஏகாதிபத்திய போர்கள் போன்றவை காட்டும் உலகந்தழுவிய முதலாளித்துவ முறையின் ஆழ்ந்த நெருக்கடி நிலைமைகளில் அத்தகைய கட்சி சக்திவாய்ந்த ஈர்ப்புத் தன்மையைப் பெற்று விளங்கும்.

முற்றும்.

Notes

16) Flavia D'Angeli, "New turn for PRC," International Viewpoint 359, May/June 2004

17) Livio Maitan, "Refounding Rifondazione," International Viewpoint 340, May 2002

18) Livio Maitan, "On Fausto Bertinotti's book," International Viewpoint 326, December 2000

19) Livio Maitan, "Refounding Rifondazione," International Viewpoint 340, May 2002

20) Livio Maitan, "Refounding Rifondazione," International Viewpoint 340, May 2002

21) Alain Krivine, "Ciao compagno!" Rouge 30. September 2004

22) Livio Maitan, "Opening Speech of the Congress," International Viewpoint 349, May 2003

Top of page