World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US sailor refuses deployment to Iraq in protest against war

போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈராக் செல்ல மறுத்த அமெரிக்க மாலுமி

By Andrea Peters
10 December 2004

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர்-6-ல் அவரது கப்பல் ஈராக்கிற்கு பயணித்தபோது கடற்படை சிறிய அதிகாரி, மூன்றாவது வகுப்பு Pablo Paredes போருக்கு எதிர்ப்புத்தெரிவித்து கப்பலில் ஏற மறுத்துவிட்டார். இப்படி செய்ததன் மூலம் Paredes ஈராக் படையெடுப்பிற்கும் அமெரிக்க இராணுவ போர் நடவடிக்கைகளுக்கும் எதிராக வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கின்ற இராணுவ அணியினரிடம் அவர் சேர்ந்துகொண்டார்.

போருக்கெதிராக தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இராணுவத்தில் பணியாற்ற மறுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது சிறை தண்டனையை பூர்த்தி செய்துவிட்டவர்கள், குறைந்த பட்சம் நான்கு அமெரிக்க போர்வீரர்கள் ஆவர், மற்றும் பலர் ''கண்ணியத்திற்கு சற்று குறைவான முறையில்'' இராணுவப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். நூற்றுக்கணக்கான துருப்புக்கள் மனசாட்சிப்படி போரை எதிர்த்து நிற்பவர்கள் என்ற அந்தஸ்தில் தங்களை இராணுவப்பணியிலிருந்து விடுவிக்குமாறு மனுச்செய்திருக்கின்றனர்.

அமெரிக்கத்துருப்புக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை எதிரொலிக்கிற வகையில் இந்த வாரம் மட்டுமே குறைந்த பட்சம் இரண்டு இதர சம்பவங்கள் நடந்திருக்கின்றன. குவைத்திலுள்ள Buehring முகாமில் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்டை சந்தித்த போர்வீரர்கள் தேவையான தளவாடங்களை தராதற்காக அரசாங்கத்தைக் கண்டித்தனர் மற்றும் தங்களது இராணுவ பணிக்காலம் முடிந்தபின்னரும் இராணுவத்தின் ''நின்றால்-இழப்பு" திட்டத்தின் கீழ் ஓர் அங்கமாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதையும் அவர்கள் கண்டித்தனர். (''பாதுகாப்பு அமைச்சரை எதிர்த்த அமெரிக்க துருப்புக்கள்'' என்ற கட்டுரையையும் காண்க). கனடாவில் டிசம்பர் 8-ல் போருக்கு எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் மற்றும் தான் இராணுவ கடமையாற்ற கட்டளையிடப்பட்டால் அட்டூழியங்கள் புரிவதற்கு நிர்பந்திக்கப்படலாம் என்ற தனது அச்சத்தின் காரணமாகவும் கனடாவில் தஞ்சம் புக முயன்ற ஒரு அமெரிக்க போர்வீரர் மீது ஒரு விசாரணை நடாத்தப்பட்டது.

ஈராக்கிற்கு மரைன்களை ஏற்றிச்செல்லும் ஒரு பெரிய போர்க்கப்பலான Bonhomme Richard-ல் பணியாற்றுவதற்காக ஒரு ஆயுதக்கட்டுப்பாட்டு தொழில்நுட்ப ஊழியராக Paredes அனுப்பப்பட்டார். 23- வயதான நியூயோர்க் நகரவாசியான அவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். சாண்டியாகோவிலுள்ள 32-வது தெரு கடல் படை நிலையத்தில் கப்பல் பழுது பார்க்கும் துறையில் அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் பேட்டியளிக்கும்போது ''அந்த கப்பல் ஈராக்கிற்கு 3,000-மரைன்களை ஏற்றிச்செல்கிறது, அவர்களில் ஒரு நூறு அல்லது அதற்கு மேற்பட்டோர் திரும்பிவர முடியாது என்பது தெரிந்தே அனுப்பப்பட்டார்கள். பிழைப்பிற்காக நான் இப்படி செய்வது குறித்து இரவில் தூங்க முடியவில்லை'' என்று கூறினார்.

தனது நடவடிக்கைகள் உயிருக்கு பயந்து அந்த உந்துதலால் எடுக்கப்பட்டவையல்ல, ஆனால் மாறாக தான் ''ஒட்டுமொத்தமாக போரை எதிர்த்து நிற்பதால்தான்'' என்று தெளிவுபடுத்தினார்.

''நான் நம்பாத மற்றும் பலர் நம்பாத ஒரு போரில் மரைன்கள் பாதிக்கப்படும் வழியில் செல்வதற்கு மாறாக ஆறு மாதங்கள் இந்த கறைபடிந்த பணியை செய்வதற்கு பதிலாக இராணுவ நீதிமன்றத்தில் நான் ஓராண்டுகூட சிறையில் இருப்பேன்'' என்று Paredes திங்களன்று தெரிவித்தார்.

டிசம்பர்-8ல் தேசிய பொதுவானொலியில் (NPR) ஒரு பேட்டியளித்த அவர் தனது நிலைப்பாடு குறித்து மேலும் விளக்கினார்:

''அங்கே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், அல்லது எதற்காக அங்கிருக்கிறோம், என்பது எனக்குத் தெரியவில்லை. ஜனநாயகத்தை பரப்புவதற்காக என்று சொல்லப்படுவதை நான் ஒரு கணமும் நம்பவில்லை. பேரழிவுகரமான ஆயுதங்கள் என்று சொல்லப்படுவதையும் நான் நம்பவில்லை. எண்ணெய்தான் முதல் காரணம் என்று எனக்குத்தோன்றுகிறது, அது உங்களுக்கே தெரியும்.

''துரதிருஷ்டவசமாக நமது ஜனாதிபதி துருப்புக்களின் வீரத்திற்கு பின்னால் மறைந்து நின்று கொண்டேயிருக்கிறார், அது எனக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்குகிறது. ''இந்த வீரர்கள் சிறப்பானவர்கள்'' தங்களது பணியை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்வது சாத்தியம்தான்.' ஆனால் அவர்கள் அங்கு என்ன பணியாற்றுவதற்கு நீங்கள் அனுப்புகிறீர்கள் என்பது பொருளற்றதாக இருக்கிறது மற்றும் இந்த நாட்டில் இது ஒரு அடிப்படையான பிரச்சனையாகும். இந்தப்போருக்கெதிராக எதையும் சொல்வதற்கு ஒவ்வொருவரும் பயந்து கொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அது தேசபக்திக்கெதிரானது, மற்றும் தேசபக்திக்காக மனித நேயத்தை நீங்கள் வியாபாரம் செய்வது ஏன் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அது எப்போது நடந்தது என்று எனக்கு தெரியாது.''

மரைன்களை மரணத்திற்கு அனுப்புவதைவிட தனது போராட்டத்திற்கு ''அதிக துணிச்சல் தேவை'' என்பதை செய்தி ஊடகங்களும் அளித்த பல்வேறு பேட்டிகளில் Paredes விளக்கியுள்ளார்.

2000-த்தில் ஒரு ஆறு ஆண்டு இராணுவப்பணிக்காக மற்ற பல இளைஞர்களைப்போல் கடற்படையில் சேர்ந்தபொழுது அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை பற்றி எனக்கு குறைந்த அளவே தெரியும் ''ஒரு மில்லியன் ஆண்டுகளில் நமக்கு எந்தத் தீங்கையும் செய்யாத ஒருவர் மீது போருக்கு நாம் செல்வோம் என்பதை என்றைக்கும் நான் கற்பனைகூட செய்துபார்த்ததில்லை'' என்று Paredes குறிப்பிட்டார்.

NPR செய்தி அறிக்கையின் படி, ஜப்பானில் அவர் பணியாற்றினார், அங்கு அமெரிக்காவின் வெளிநாட்டு தலையீடுகள் குறித்து விமர்சனம் தெரிவிக்கின்ற பல இராணுவ அதிகாரிகளை சந்தித்தார், ஜப்பான் பணிகளுக்குப்பின்னர் அவர் வலைத் தளதில் மாற்றுக்கருத்துக்களை தேடி வாசிக்க தொடங்கினார், அதற்குப்பின்னர் பொதுவாகத்தான் போரை எதிர்ப்பதாக முடிவுசெய்தார்.

அந்த மாலுமி இராணுவ நீதிமன்ற விசாரணையை, ஒரு சிறைத் தண்டனையை மற்றும் ஒரு கண்ணியக்குறைவான இராணுவ விடுப்பை எதிர் நோக்கியுள்ளார், தனது நிலைப்பாடு மற்றவர்களிடம் இதேபோன்ற எதிர்ப்பை கிளறிவிடுமென்று அவர் நம்புகிறார். ''மற்றவர்களும் என்னுடைய வழியிலேயே உணர்வு கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத்தெரியும் மற்றும் பலர் தலை நிமிர்ந்து நிற்பார்கள் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்'' என்று அவர் ஒரு செய்திக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

தனது வழக்கிற்காக அவர் இன்னமும் ஒரு வக்கீலை தேடிக்கொண்டிருக்கும் Paredes-க்கு சாண்டியாகோ இராணுவ ஆலோசனைத்திட்டம் Paredes-க்கு ஆலோசனை கூறிவருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, அவர் இராணுவக் காவலில்தான் இருந்தார், எனினும் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.

Top of page