World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: More questions on Dr Kelly's death as a confidante rejects suicide claim

பிரிட்டன்: டாக்டர் கெல்லியின் மரணம் தற்கொலை என்பதை ஒரு நம்பிக்கைக்குரியவர் நிராகரிக்கின்றபடியால் மரணம் குறித்து மேலும் கேள்விகள் உள்ளன

By Chris Marsden
30 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஞாயிற்றுக்கிழமை Mail on Sunday பத்திரிகை ஜனவரி 25இல் மாய் பேடர்சனின் (Mai Pederson) பேட்டியைப் பிரசுரித்துள்ளது. அமெரிக்க விமானப்படையில் மொழிபெயர்பாளரான இவர் ஈராக்கில் டாக்டர் கெல்லியுடன் இணைந்து பணிபுரிந்தவர். இந்தப் பேட்டியில் அவர், அரசாங்கத்தில் பணிபுரியும் விஞ்ஞானியான அவருக்கு ஈராக்கில் அவர் மேற்கொண்டிருந்த பணியைப் பற்றி மிரட்டல்கள் வந்ததையும் அவர் தனது மணிக்கட்டைத் தானே அறுத்துக் கொண்டு 20 மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி தனக்கு நம்ப முடியவில்லை என்று பேடர்சன் தான் முதலில் கூறியதை மறுபடியும் வலியுறுத்திக் கூறியுள்ளார். மேலும் பேடர்சன் தொடர்ந்து கூறும்போது கெல்லி மாத்திரைகளை விழுங்குவது அவருக்கு விருப்பமற்ற விஷயம் என்பதையும் அவர் மரணத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்தான் தன்னிடம் அவரது எதிர்காலம் திட்டம் குறித்து பேசியதாகவும் கூறியிருக்கிறார்.

கெல்லி ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுயவரும், பிரிட்டனின் தொழிற்கட்சி அரசாங்கம் தன்னிடம் இருந்த தகவல்களை வேண்டுமென்றே ''கலப்படம் செய்து'' அமெரிக்கப் படைகள் முன்னின்று நடத்திய ஈராக் மீதான யுத்தத்திற்கு காரணமாக இருந்தது, என்பதற்கான ஆதார தகவலுக்கான BBC இன் செய்தியை கெல்லியிடமிருந்துதான் பெற்றது. அவர் ஜூலை 18ம் தேதி அவரது இல்லத்திற்குப் பக்கத்தில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் பிணமாகக் கிடந்தார். அதற்கு முன்னர், அவர்தான் தகவலுக்கு காரணமானவர் என அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்டு இரண்டு பாராளுமன்ற விசாரணைக் குழுவினரிடம் சாட்சியம் சொல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

கெல்லியின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திய ஹட்டன் பிரபு தன்னிடம் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்களின்படி கெல்லி தற்கொலைதான் செய்து கொண்டார் என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். ஆனால் பேடர்ஸன் ஒரு முறை ஹட்டன் விசாரணை முன் சாட்சி சொல்லுமாறு அழைக்கப்படவில்லை. அது போல கெல்லி தற்கொலை செய்துகொண்டார் என்பதை பேடர்ஸன் ஒப்புக்கொள்ளவுமில்லை.

தி மெயில் பத்திரிகையில் வந்த செய்திகளைப் பார்க்கும் போது கெல்லியுடன் பேடர்ஸன் நெருங்கிய தொடர்பும், அவரது கருத்துக்கள் உருவாக்கக் கூடிய வாதப் பிரதி வாதங்களும் அரசினால் சந்திக்க இயலாதவை. இதன் காரணமாகத்தான் மாய் பேடர்ஸனை சாட்சியாக அழைக்காகததற்கு சொல்லப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரிட்டன் பத்திரிகைகளில் பெரும்பாலானவை டோனி பிளேயருக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், டோனி பிளேயருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிரான வலதுசாரி தி மெயில் பத்திரிகை மட்டும்தான் செல்வி.மாய் பேடர்ஸனைப் பற்றி தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறது.

கெல்லியின் மரணத்திற்கு பின்னர் தேம்ஸ் வெலி போலீசார் பேடர்ஸனை விசாரித்தனர். ஆனால் தாங்கள் கூறியவற்றை ஹட்டன் பிரபுவிடம் தெரியப்படுத்தக்கூடாது என தடுத்த ஐந்து சாட்சிகளில் பேடர்ஸனும் ஒருவர். செப்டம்பர் 1 திகதி திருமதி ஜானிஸ் கெல்லியை விசாரிக்கும் போது அவர் பேடர்ஸனைப் பற்றி குறிப்பிடுகையில், தனது கணவரை பஹாய் சமயத்திற்கு (Baha'i faith) மாற்றுவதற்கு அவர் கெல்லியிடம் ''வலுவான தாக்கத்தை'' ஏற்படுத்தி இருந்தார். அதன் பின்னர் பேடர்ஸன் ஒரு குடும்ப நண்பராக ஆனார்'' என்று கூறியிருக்கிறார்.

ஜானிஸ் கெல்லி சாட்சியம் கூறிய அதே நாளில் பிளேயர் ஆதரவு டைம்ஸ் ரூபர்ட் முர்டோக்கின் பத்திரிகையில் தனது மாலை நேர பதிப்பில் டாக்டர் கெல்லியின் வாழ்க்கையில் பேடர்ஸன் ஏற்படுத்திய முக்கியத்துவப்பற்றி செய்தி வெளியிட்டது. அதற்கு சற்று நேரம் கழித்து மெயிலில் ஒரு செய்தி வெளியானது. பேடர்ஸனை சம்பந்தப்படுத்தி வெளியிட்ட செய்தியானது டைம்ஸ் பத்திரிகையில் சில ஆயிரம் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.

பேடர்ஸன் 'ஒற்றர் வேலை' பார்ப்பவரா?

பேடர்ஸன் திடீரென்று மாயமாய் மறைந்து போனதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். முதலாவது அவர் கூறிய விஷயங்கள் ஏற்படுத்தக் கூடிய சங்கடங்கள், போலீசாரிடம் அவர் முதன் முதலாக கொடுத்த தகவலின்படி தான் எந்தக் காலத்திலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்று கெல்லி கூறியதாக பேடர்ஸன் தெரிவித்து இருக்கிறார். அதுவும் இல்லாமல் ஏதாவதொரு ''காட்டுப்பகுதியில் இறந்து கிடக்கக்கூடிய'' சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், தனது பணியே அதற்கான காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார். அந்தப் பணியின் தன்மை குறித்தும் பேடர்ஸன் 'மெயில்' பத்திரிகையில் மேலும் தகவல்களை கூறியிருக்கிறார்.

இவற்றுடன் கூட மாய் பேடர்ஸன் சொந்த வாழ்க்கையும் குறிப்பிடத்தகுந்ததாகும். அவரது கணவரான பேடர்ஸனைப் பற்றி வெளியே தெரிந்து இருந்தாலும் கெல்லியின் ''ஆன்மீக ஆலோசகர்'' என்றே வர்ணிக்கப்படுகிறார். அதுமின்றி அவர் அடிப்படையில் அமெரிக்க விமானப்படையில் மொழிப்பெயர்பாளராக பணிபுரியும் அவர் ஜேனிஸ் கெல்லியின் ''குடும்ப நண்பராகவும்'' அறியப்படுகிறார். ஆனால் அவர் அமெரிக்க ஒற்றர் என்பதற்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன. அது மட்டுமின்றி கெல்லிக்கும், அவருக்கும் உள்ள நெருக்கம் பலரும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்குமாக இருந்திருக்கின்றது.

மெயில் பத்திரிகையிலும் பிற பத்திரிகைகளிலும் வெளிவந்த தகவல்களை ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது பேடர்சனின் பின்னணி குறித்து ஓரளவிற்காவது தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் குவைத்திலுள்ள மாய் அல்-சதாத் (Mai al-Sadat) என்கிற இடத்தில் பிறந்தவர். ஆனால் அமெரிக்க குடிமகளாக மாறியவர் இரண்டு முறை திருமணமானவர். அரபு, ஜேர்மன், பிரஞ்சு, மொழிகளில் அவருக்கு இருந்த புலமை பென்டகனில் இருந்ம அவரது உயர் அதிகாரிகளை கவனிக்க வைத்தது. அமெரிக்க பாதுகாப்புத் துறையை சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில் ''உயர் இரகசிய ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது முதல் பணிகளில் ஒன்றாக இராணுவம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மொழிபெயர்க்கப்பட்டன..... இதையடுத்து அவர் மொழிப்பெயர்பாளராகவும், இரகசியப் பணியில் செல்லும் உளவுத்துறையினருக்கு மத்திய கிழக்கு நாடுகளில் 'வழிகாட்டி துணையாகவும்' அனுப்பப்பட்டார்.

1998ல் ஈராக்கில் அவரும், டாக்டர் கெல்லியும் ஆயுத கண்காணிப்பு குழுவில் ஒன்றாக பணியாற்றியபோது கெல்லியோடு நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார். அந்தக் குழுவில் அரபு மொழிப்பெயர்ப்பாளராக அமெரிக்க விமானப்படையின் (USAF) சார்பில் பணியாற்றினார். 1999ம் ஆண்டில் கெல்லியை பஹாய் சமயத்திற்கு மதம் மாற்றினார்.

பேடர்ஸனின் முதல் கணவர் கேமரான் டிஹார்ட், அவர் ஒரு முன்னாள் அமெரிக்க சிறப்புப் படையில் அதிகாரி. அமெரிக்க விமானப்படையில் சார்ஜெண்டாக பணியாற்றிய இரண்டாவது முன்னாள் கணவர் ''பேடர்ஸன் இயந்திர கதியில் இயங்குவார் என்றும் தனது புலனாய்வுப் பணிக்களுக்கு உபயோகப்படும் வகையில் தன்னை நெருங்கி வரும் அனைவரையும் மாற்றக்கூடிய விதத்தில் பயிற்சி பெற்றவர்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

மாய் பேடர்ஸன் டேவிட் கெல்லியின் நண்பராக ஆனது தனக்கு எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை என்று திரு பேடர்ஸன் அதிகாரபூர்வமாக கூறியிருக்கிறார். ''அவரது இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதி எவரையும் தனது பணிக்கு சாதகமானவராக மாற்றும் திறமையை அவருக்குத் தந்திருந்தது.''

''இதன் காரணமாகவே அவர் டேவிட் கெல்லியை தேர்ந்தெடுத்து பழகியிருக்கலாம். அவர் பல முக்கிய விஷயங்களுக்கான மூலமாக இருக்க வேண்டும் என்று மாய் கருதியிருக்க வாய்ப்புக்கள் உண்டு. மாய் பேடர்ஸனுக்கு வாழ்வில் இரு விஷயங்கள் குறித்து மிகுந்த பிடிப்பும் தீவிரமும் இருந்தன. முதலாவது இராணுவம், இரண்டாவது பஹாய் சமயம்''.

ஜேம்ஸ் பேடர்ஸன் தன் நண்பர்களிடத்தில் தனது முன்னாள் மனைவி ''ஏதாவது ஒரு விசித்திரமான விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார். எங்களது திருமணம் ஆரம்பத்திலிருந்தே நிலையற்றதாகத்தான் இருந்தது. மாய் எப்போதும் மாதக்கணக்கில் பணி நிமிர்த்தம் வெளியிடங்களுக்கு சென்று விடுவார். அவருக்கு துப்பாக்கியை நன்றாக உபயோகிக்கத் தெரியும். இது தவிர ஆயுதமில்லா சண்டைப்பயிற்சில் நன்கு தேறியவர். TDA (Temporary Duty Attachments) என்று அழைக்கப்படும் தற்காலப் பணிப்பொறுப்புக்களை மேற்கொண்டு இரகசிய துப்பறிபவராக வெளியூர்களுக்கு சென்றுவிடுவார். எகிப்திற்கும் ஈரானுக்கும் அவ்வாறு சென்றிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் மிக சிக்கலான மனோபாவத்தை உடையவராக இருந்தார்.'' என கூறியுள்ளார்.

மேற்படி தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்தவுடன் மாய் பேடர்ஸன் கலிஃபோர்னியாவில் உள்ள மாண்டோரியாவில் அமெரிக்க விமானப்படை நடத்தும் ஒற்றுவேலை பயிற்சிப் பள்ளிகளில் பாதுகாப்புத்துறை மொழிப் பயிற்சி நிலையத்தில் அவர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் பென்டகனின் உள்நாட்டுப் பணியாளர்கள் இயக்கத்திலும் பணி புரிந்திருக்கிறார் என்று தெரிய வந்தது.

பிரிட்டனின் மிக உயர்ந்த ஆயுதக் கண்காணிப்பாளரான கெல்லி நிச்சயமாக அமெரிக்க உளவுத்துறையின் பயிற்சிக்கு வேண்டிய முக்கிய குறியாக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. புஷ் நிர்வாகம் ஈராக் பற்றிய அழிவிற்குரிய ஆயுதங்கள் வைத்திருப்பது என்ற பிரச்சாரத்தை ஐ.நாவின் ஆயுதக் கண்காணிப்பாளர்கள் மறுத்துவிடக்கூடாது என்ற பயத்தாலும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதற்கு காரணமான குழுவினரை சிறுமைப்படுத்தவும் அவர்களுக்கு இந்தத் தொடர்பு மிகவும் தேவையாக இருந்தது.

மாய் பேடர்ஸனும் கெல்லியும் நட்பு முறையில் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே கெல்லி மொண்டேரேரியில் நடந்த பஹாய் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்.

ஹட்டன் நீதி விசாரணை முன் தான் அழைக்கப்படுவோம் என்று மாய் பேடர்ஸனுக்கு நிச்சயமானவுடன் ''அவர் ஒளிந்து கொண்டு விட்டாற்போல் தோன்றுகிறது, மாக்ஸ்வெல் குந்தரில் (Maxwell Gunter) உள்ள அமெரிக்க விமானப்படைத்தளத்தில் அவர் அமெரிக்க அதிகாரிகளுடன் தங்கியிருக்கிறார். சார்ஜெண்ட் பேடர்ஸன் இவ்விசாரணை குறித்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்.

இருவருக்கும் இடையிலுள்ள நெருங்கிய முக்கிய உறவும், மாய் பேடர்ஸனின் புலனாய்வுத்துறை தொடர்புகளும் தான் கெல்லியின் மரணத்தைக் குறித்து முதலில் அறிந்தவர்களில் ஒருவராக இருக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். மாண்ட்ரெரியில் குடியிருப்பவரும், அந்தப் பகுதியின் பஹாய் இயக்கத்தின் செயலருமாகிய மாரிலின் வான் பெர்க் (Marilyn Von Berg) கூறியுள்ள படி அவரை பேடர்ஸன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர் (கெல்லி) கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி வான் பெர்க்கும் மற்ற நண்பர்களும் கெல்லி பற்றி பத்திரிகைகளில் வருவதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

தற்கொலை ''அர்த்தம் இல்லாத முட்டாள்தனமானது''

பேடர்ஸனின் Mail on Sunday பத்திரிகை பேட்டியானது, அவரின் தற்கொலையில் முடிவடைந்த மரணத்திற்கான உத்தியோகபூர்வமான காரணம் தொடர்பான பல பதில் காணப்படாத கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி இது பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாது விட்டுள்ளது.

Mail இல் மாய் குறிப்பிட்டதாவது ''கெல்லி மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் இறந்து கிடந்தார் என்பது பற்றி எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்கள் கூறிய காரணம் அவர் தற்கொலை செய்துள்ளார் என்பதாகும். நான் ஒரு தர்க்கரீதியாக சிந்திப்பவள். அத்துடன் அது எவ்விதமான தாக்கத்தையும் உருவாக்கவில்லை'' என்றார்.

தனது தாய் தற்கொலை செய்து கொண்டார் பேடர்ஸனிடம் தெரிவித்தபோது ''தற்கொலை என்பது குடும்பங்களில் ஒரு முறை நிகழ்ந்தால் தொடரக் கூடியது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று கூறி அவருக்கு எப்போதாவது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருமா என்று கேட்டதற்கு ''ஆண்டவா, நிச்சயமாக இல்லை என்றால் அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்றார்... நிச்சயமாக அவ்வாறு செய்யமாட்டேன்'' என்று தன்னிடம் கூறியதாக பேடர்ஸன் கூறியிருக்கிறார்.

பேடர்ஸன் தொடர்ந்து ''கெல்லி ஒரு முறை கடுமையான தலைவலியால் அவதிப்பட்டார் நான் அவரை ஒரே ஒரு டைலினால் மாத்திரையை சாப்பிடும்படி கூறினேன். ஆனால் அவர் மாத்திரைகளை விழுங்குவது தனக்கு எப்போதும் கடினமான விஷயமாக இருப்பதாகக் கூறினார். ஒரே ஒரு மாத்திரையை விழுங்குவதற்கு கஷ்டப்பட்ட ஒருவர் 20 மாத்திரைகளை விழுங்கி தற்கொலைசெயது கொண்டார் என்று தெரியவருவது நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கிறது என நான் போலீசாரிடம் இன்னொருமுறையும் தெரிவித்ததாக'' கூறியுள்ளார்.

பேடர்ஸன் மேலும் ''புலனாயவுத்துறை அறிக்கையை கலப்படம் செய்யப்பட்ட ஒன்று என்ற பிரச்சனை உச்சகட்டத்தில் இருந்தபோது தான் கெல்லியுடன் தொலைபேசி மூலம் பேசியதாகவும் இந்த விவகாரம் குறித்து அவர் எந்தவிதமான கலக்கமும் அடைந்தவராகத் தெரியவில்லை என்றும் மிகவும் சாதாரணமானவராகத்தான் அவரது பேச்சு இருந்தது'' என்றும் கூறினார்.
கெல்லியின் ''பணி எந்த அளவுக்கு ஆபத்தானது'' என்பது பற்றியும் அதனால் அவரது உயிருக்கே ஆபத்து வரும் என்றும் அவருக்குத் தெரியும் என்றும் பேடர்ஸன் விளக்கிக் கூறினார்.

ஹட்டன் விசாரணையில் மறைக்கப்பட்ட சான்றுகள்

ஹட்டன் விசாரணையில் தான் சாட்சி சொல்லாத விஷயம் எந்த அளவுக்கு முக்கியத்துவமானது என்பதை குறித்து மாய் பேடர்ஸன் குறிப்பிடத்தவறவில்லை. கடந்த வருடம் ஆகஸ்ட் மாத இறுதியில் இரண்டு பிரிட்டிஷ் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மாண்டிரெரியில் சென்று அவர் என்ன கூறவுள்ள முக்கியமான விடயங்கள் குறித்து விசாரித்ததாகக் கூறினார். வாஷிங்டனை சேர்ந்த பேடர்ஸனின் வழக்கறிஞர் மார்க் ஷய்ட் இன் கூற்றுப்படி, அவரைப் பற்றி பொதுமக்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே ஹட்டன் விசாரணையில் சாட்சி சொல்ல முடியாது மாய் மறுத்ததற்கு காரணம். ஆனால் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த பாதுகாப்பு ஹட்டன் விசாரணையால் தரப்பட்டது.

வீடியோ மூலம் அவர் சாட்சியளிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டார். தனது பாதுகாப்பிற்காகவும், நலன்களுக்காகவும் சாட்சியத்தின் போது அவரது முகத்தையும் குரலையும் மறைக்கப்பட வேண்டும் என்று கோரினேன். அவர்கள் (பிரிட்டிஷ்) இந்த பாதுகாப்பை அவர்களது புலனாய்வுத் துறையினரான M15, M16 க்கு தந்தனர். ஆனால் இதே வசதி மாய்க்கு தரப்படமாட்டாது என்றும் ஏனென்றால் விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டிய அவசியம்தான் அதன் காரணம் என்றும் தெரிவித்தனர்.

பேடர்ஸன் கெல்லியுடன் காதல்வயப்பட்ட உறவு இருந்ததாகக் கூறப்படுபவற்றை மறுத்தார். 59 வயதும் மூன்று குழந்தைகளின் தந்தையான கெல்லியுடனான அவருடனான உறவு சகோதரன் சகோதரி என்கிற ரீதியில்தான் இருந்ததாகக் கூறுகிறார் மாய். ஆனால் தி மெயில் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்த படி கெல்லியின் பெயர் மாய் தங்கியிருந்த மூன்று முகவரிகளிலும் காணப்பட்டது. வாஷிங்டன் DC யில் இருந்த மாய்யின் இல்லமும் இதில் சேரும். இதற்கு உத்தியோகபூர்வமாக கொடுக்கப்படும் ஒரே விளக்கம் கெல்லி ''கடன் வசதி பெற இத்தகைய முகவரிகளை உபயோகப்படுத்தினார்.'' என்பதுதான்.

அவர் ஏதுமறியாத சாராரணமான ஆயுத கண்காணிப்புப் பிரிவின் சிவில் அதிகாரி என்று ஹட்டன் விசாரணையின் போது கூறப்பட்ட போதும் கெல்லி பணிபுரிந்த பாதுகாப்புத்துறையின் (Ministry of Defence-MoD) உயரதிகாரிகள் இம்மாதிரியான உறவு முறை இருந்திருந்தால் அது மிகப்பெரிய பாதுகாப்புப் பிரச்சனை என்பதால் அது குறித்து சந்தோஷப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பிளேயர் அரசும் பாதுகாப்புத் துறையினரும் சேர்ந்து நடத்திய மிகப்பெரிய பிரச்சார திட்டத்தில் மிகவும் முக்கியமான நிலையில் இருந்த கெல்லி ஒரு ஒற்றராவார்.

அரசின் செப்டம்பர் 2000 ஆண்டில் புலனாய்வுத் துறையின் அறிக்கையின் பலவீனமான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் குறித்து சில விமர்சனங்களை குறிப்பிட்டு தனது அபிப்பிராயத்தை அவர் தெரிவித்து இருக்கலாம். குறிப்பாக சதாம் ஹூசைன் பேரழிவு ஆயுதங்களை 45 நிமிடங்களில் தயார் நிலையில் வைக்க முடியும் என்கிற கூற்றைப் பற்றி அவர் பலவீனமான, நிரூபிக்க முடியாத ஒரு தகவல் என்று கருதி இருக்கலாம். ஆனால் அவரைப்பற்றி சன்டே டைம்ஸ்சின் ஜனவரி 25 ஆம் திகதி பதிப்பில் நிக்கோலஸ் ரிபோர்ட் எழுதிய கட்டுரை அவர் மதிப்பிலிருந்து வீழ்ச்சியடையும்வரை எந்த அளவுக்கு பெரும் செல்வாக்கும் உயர் பதவியும் பெற்றிருந்தார் என்பதை வெளிப்படுத்தியது.

அந்த கட்டுரையின் தலைப்பே ''ஒற்றன், கோமாளி, திருப்தியற்ற சிவில் அதிகாரி. இதுதான் நான் அறிந்த டேவிட் கெல்லி'' ரப்போர்ட் தெரிவித்தார்.

''சில சமயங்களில் ஐ.நா வின் ஆலோசகர், சில சமயங்களில் அரசு விஞ்ஞானி; சில சமயங்களில் நுண்ணுயிர் ஆயுதங்களை குறித்து அதீத ஞானம் கொண்ட பத்திரிகையாளர்களிடம் நம்பிக்கைகுரியவர், சில சமயங்களில் புலனாய்வுத்துறையின் சார்பில் செயல்படும் ஒற்றுவேலை செய்யும் ஏஜெண்ட்.

வெளிப்பார்வைக்கு அவர் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி, ஆயுத கட்டுப்பாட்டு உயர்மட்டத்தின் விஞ்ஞான ஆலோசகர். ஆனால் பல வருடங்களாக ஈராக்கிற்கான ஐ.நா சிறப்பு கமிஷனான Unscom இற்கு 'கடனாக' கொடுக்கப்பட்ட பிரிட்டிஷ் விஞ்ஞானி.

''அவர் ஈராக் சென்றபோது வெளியவிவகார அமைச்சகத்தின் சார்பில்தான் சென்றிருந்தார். அவர் பிரிட்டிஷ் புலனாய்வுத் துறைகளான பாதுகாப்புத் துறையின் புலனாய்வு அமைப்பு (Defence intelligence staff - DIS) மற்றும் M16 ஆகியவற்றுடன் நெருக்கமான பணிபுரிந்தார்.''

1994ல் அவர் ஆயுதக் கண்காணிப்பாளராக ஈராக்கில் பொறுப்பேற்றுக் கொண்டார். லண்டனில் அவர் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செயல்திட்டக் குழுவான ஆப்பரேஷன் ராக்கிங்ஹாமின் (Operation Rockingham) முக்கிய புள்ளியானார். இந்தக் குழுவானது பாதுகாப்பு புலனாய்வுத் குழுமத்தின் துணைத்தலைவரான ஜோன் மொரிசனால் உருவாக்கப்பட்டது. இதனுடைய குறிக்கோள் பல்வேறு விதங்களில் ஈராக்கைப்பற்றிய விவரங்களை சேகரித்து அவற்றில் உள்ள உண்மைகளை கண்டறிவதுதான். அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறைகளின் கூட்டு நடவடிக்கைகளில் இந்த ராக்கிங்ஹாம் செயல் மிக முக்கியமான இடத்தில் இருந்ததுடன், ஈராக்கை நிராயுதபாணியாக்கும் நடவடிக்கைகளில் மையமான பங்கை வகித்தது.

''அது பேரழிவு ஆயுதங்களை ஈராக் எங்கெல்லாம் மறைத்து வைத்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ள இடங்களையெல்லாம் தெரிவு செய்து அந்த இடங்களில் சோதனை செய்வதற்கு கண்காணிப்பு குழுக்களுக்கு விளக்கிகாட்டியது. இது தவிர கூட்டுப் புலனாய்வு குழுவுக்கு நடக்கும் விஷயங்களைக் குறித்து விவர அறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவற்றையும் செய்ததுடன், சம்பந்தப்பட்ட மந்திரிகளுக்கு நடந்து கொண்டிருப்பவைகளைக் குறித்து அறிக்கைகள் சமர்பித்தது.

ஸ்காட் ரிட்டர் என்கிற ஐ.நா சபையின் முன்னாள் ஆயுதக்கண்காணிப்பு ஆய்வாளர் ரொக்கிங்ஸ்ஹாம் நிலையத்தை பற்றியும் கெல்லியை பற்றியும் காட்டமாக விமர்சித்து கூறியிருப்பவைகளை ரப்போர்ட் சுட்டிக்காட்டுகிறார். இவர் தன் பதவிக் காலத்தின் போது மேற்படி நிலையத்துடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பை வகித்தார். முக்கியமாக அவர் குறிப்பிட்டு தெரிவித்திருப்பது என்னவென்றால் ''ரொக்கிங்ஸ்ஹாம் நிலையத்தின் உறுப்பினர்கள்தாம் ஐ.நா பாதுகாப்பு சபையின் அறிக்கைகளை தயாரிப்பதுடன், ஈராக் மீதான ஐ.நா வின் பொருளாதார தடைகள் நீடிக்க வேண்டுமா என்பது பற்றிய முடிவுகளில் இவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. இதற்காக வலு சேர்க்கும் வகையில் தங்களுக்குத் தெரியவரும் புலனாய்வுத் தகவல்களில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு சாதகமானவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டும், மற்றவைகளை நிராகரித்தும் வந்தனர் இப்படியான செயல்பாட்டில் கெல்லி மிகவும் முக்கிய பங்கு வகித்தார்.''

ரிட்டர் மேலும் கூறியதாவது ''ரொக்கிங்ஸ்ஹாம் சேகரிக்கும் பல்வேறு வகையான விவரங்களை அலசி ஆராய்ந்து அறிக்கை வடிவில் மாற்றும் பணியை கெல்லி செய்து வந்தார். இது பின்னர் Unscom இன் அறிக்கைக்கு சேர்க்கப்பட்டது. கெல்லிக்கு இந்தவிதத்தில் உறுதியான சுயநல நோக்கம் இருந்தது. தன்னைத் பற்றிய உருவகம் மாறக்கூடாது என்பதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. ஈராக்கில் உயிரியல் ஆயுதங்கள் இருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்திய தனது கூற்றுக்கு ஏதும் பங்கம் வந்துவிடக் கூடாது மற்றும் தான் தொடர்ந்தும் முக்கியமான நபராக தொடர்ந்து இருக்க முடியும்.''

ஒற்றர் என்கிற வகையில் அவரது செயல்பாடு ரிட்டர் குற்றச்சாட்டின்படி ஈராக்கின் ஆயுதங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி மிகையாக எடுத்துக் காட்டும் அவரது முயற்சிகள் பின்னாளில் அவரது உயர் அதிகாரிகள் மற்றும் அரசு ஆகியவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகளுடன் முரண்படவில்லை. உதாரணமாக, பேடர்ஸன் கூறிய கருத்தான ஐ.நா வின் ஆயுதக் கண்காணிப்பில் ஆய்வாளர்கள் குழுவின் தலைவராக அவர் இருப்பார் என்று எதிர்பார்ப்பிற்கு மாறாக அமெரிக்காவின் உயிரியல் விஞ்ஞானியான ரிச்சார்ட் ஸ்பெர்ஸல் தலைவராக தேர்வு செய்யப்ட்டார் இதையடுத்து 1998ல் கெல்லி ஈராக்கிலிருந்து வெளியே துரத்தப்பட்டார் அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்தில் பதவி இறக்கம் பெற்று ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு இருக்குமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன், அவர் கூறியிருந்தபடி, அவரின் சுயமதிப்பு தங்யிருந்த ஈராக்கின் ஆயுதங்கள் தொடர்பான பாதுகாப்பு ஆவணங்களின் பலவீனங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் சங்கடங்களையும், அவமானங்களையும் சந்திக்க நேரிடும் நிலையும் எழுந்தது.

இவை தவிர மாய் பேடர்ஸனுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் சில விஷயங்களை வெளிப்பட்டால் சங்கடங்களும் உண்டாகும்.

ஈராக்கிற்கு எதிரான இதன் மூலம் சட்ட நெறிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு பிரிட்டனை யுத்தத்திற்கு இட்டுச்செல்ல பயன்படுத்தப்பட்ட பொய்கள், ஏமாற்றுவேலைகள், அது பற்றி கேள்விகளிலிருந்து அரசை பாதுகாக்கவே கெல்லியின் மரணம் குறித்த சூழ்நிலைகள் பற்றி ஒரு மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே விசாரிக்க ஹட்டன் விசாரணை அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஒரு குறிப்பிட்டளவிலான இவ்விசாரணை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், கெல்லியின் மரணம் குறித்த விசாரணையையும் சரியானபடி நடைபெறவில்லை. விசாரணை ஒருவேளை முழுமையாக நடத்தப்பட்டு இருந்தால் ஈராக்கிற்கு எதிரான சூழ்ச்சிகளும் மற்றும் கெல்லியின் பங்கு போன்ற பல விஷயங்கள் வெளியிடப்படலாம் என்கின்ற முக்கிய ஆபத்து பற்றியும் கமிஷனுக்கு தெரிந்தே இருந்தது. இதனாலேயே கெல்லியின் மரணம் தற்கொலையே என்ற அரசுக்கு சாதகமான மிகவும் பிழைப்படுத்தப்பட்ட முடிவிற்கு விசாரணைக்குழு வந்தது.

See Also :

ஹட்டன் விசாரணை: கண்துடைப்பு எல்லையை மீறிச்செல்வதாக பிரித்தானிய செய்தி ஊடகங்கள் எச்சரிக்கை

பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின் படிப்பினைகள்

ஹட்டன் விசாரணை: ஈராக்கியப் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பிளேயர் அரசாங்கத்தின் பொய்கள் வெளிப்படுகின்றன

ஹட்டன் விசாரணை : பிரிட்டிஷ் உளவுத்துறை தலைவரின் சாட்சியம் ஈராக்கியப் போரைப்பற்றிய பொய்களை அம்பலப்படுத்துகிறது

ஹட்டன் விசாரணை: டாக்டர் கெல்லியும் வெளிவிவகாரகுழுவும் எவ்வாறு அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டனர்

பிரிட்டன்: ஹட்டன் விசாரணையின் அடிப்படையிலமைந்த அரசியல் பிரச்சனைகள்

Top of page