World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

A soldier's view of the Iraq war

The World Socialist Web Site received the following email sent from "a soldier from Iraq."

ஈராக் போர் பற்றிய ஒர் அமெரிக்க படையினரின் கருத்து

உலக சோசலிச வலைதளத்திற்கு கீழ்கண்ட மின்னஞ்சல் ''ஒரு ஈராக்கிலுள்ள இராணுவ சிப்பாயிடமிருந்து கிடைக்கப்பெற்றது.

10 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க இராணுவத்தில் நான் ஒரு கவசவாகனப் படையினன். டெக்ஸாசிலுள்ள போர்ட் பிலிஸ் எனது தலைமையகம். செவ்வாய்க்கிழமை நாங்கள் வீடு திரும்பினோம். ஒரு படையினனின் சிறப்புக் கண்ணோட்டத்தில் இருந்து இந்தப் போர் பற்றி கருத்துக் கூற நான் விரும்புகிறேன்.

ஜனாதிபதி நம் அனைவரிடமும் பொய்சொல்லி இருக்கிறார் என நான் நேர்மையோடு எண்ணுகிறேன். ஈராக்கின் மிகப்பெரும்பாலான பகுதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை முதல் தடவையாக நேரில் பார்த்த பின்னர் எனது படைப்பிரிவு முழுவதுமே எந்த வகையிலும் எந்தவிதமான அச்சுறுத்தலையும் சந்திக்கவில்லை. நான் அமெரிக்காவை நேசிக்கிறேன். நான் அழைக்கப்பட்டால் அமெரிக்காவைக் காப்பேன். ஆனால் ஈராக்கைப் பொறுத்தவரை உண்மையான அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

புஷ் எங்களுக்கு அழைப்பு விடுத்த நேரத்தில் இருந்ததைவிட இன்றையதினம் ஈராக் அந்நாட்டு மக்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அமைந்துவிட்டது. ஒவ்வொருவரது கருத்தையும் நான் எதிரொலிக்கவில்லை. இதில் நான் உறுதியாக இருக்கிறேன். சில இளைஞர்கள், ஆயுதங்களை இயக்க வேண்டும், சுட வேண்டும் என்ற ஆர்வத்தால் இராணுவத்தில் சேர்ந்திருக்கலாம். ஆனால் ஈராக்கில் இருந்தபோது நாங்கள் உரையாடிய ஒவ்வொரு அமெரிக்க இராணுவத்தினரும் தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லவே விரும்பினர். புஷ் மிகப்பெரும் தவறைச் செய்துவிட்டார் என்று கருதுவதைக்கேட்க முடிந்தது. டிக்ரிட் என்றழைக்கப்படும் நகரம் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஊற்றுக்காலாக அமைந்திருக்கிறது.

இன்றைய தொலைக் காட்சியில் அமெரிக்கர்கள் வரவேற்கப்படுவதாக ஜனாதிபதி புஷ் கூறி இருக்கிறார்??? அவர் இன்னொரு கிரகத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும். பாக்தாத்திற்கு தெற்கில் சில சிறிய நகரங்களில்தான் டிரக்குகளில் தூங்குவது பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் புஷ் சொல்வதற்கு மாறாக ஈராக்கின் மிகப்பெரும்பாலான பகுதிகள் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு கொண்டவையாக இருக்கின்றன.

இந்த வகையில் விமான நிலையத்தில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் நிழற்படம் எடுக்க கலந்து கொள்ள புஷ் ஆதரவு இராணுவத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இரகசியமாக புஷ் தோன்றுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் நாங்கள் மறைமுகமாகக் கண்கானிப்பு செய்யப்பட்டோம். அவர் வரப்போகிறார் என்பதே எங்களுக்கு தெரியாது. ஆனால் இப்போது நினைத்துப்பார்க்கும் போது எங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் எல்லாம் போருக்கு எதிரான இராணுவத்தினரை நீக்கி விடுவதற்காகத்தான் வடிவமைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

சரியான ஆட்களை தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு மிகவும் கடுமையான சோதனை ஏற்பட்டது. உண்மை என்னவென்றால் எனது கம்பெனியும் (படைப் பிரிவும்) சில கடற்படை வீரர்களும் ''நன்றி அறிவிப்பு'' தினத்திற்கு முதல் நாள் ''பாதுகாப்பு விசாரணைக்காக'' டிக்ரிட் அனுப்பப்பட்டனர். திருமணமான பலர் அனுப்பப்படும் ஒவ்வொரு புதிய நகரங்களிலும் முறையற்ற பாலுறவுகளை வைத்திருந்தனர். எல்லா வீரர்களும் இப்படி செய்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்களது எண்ணிக்கை ஆச்சரியம் தரும் வகையில் அமைந்திருக்கிறது. நான் திருமணமாகாதவன். அப்படி இருந்தும் சம்மதத்தோடு செக்ஸ் தொடர்பு கொண்டேன். பணத்திற்கான வருவாய் வாய்ப்பு எதுவும் இல்லை. விபச்சாரம் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான இராணுவத்தினருக்கு ஆணுறை கையோடு கிடைக்கிறது. புஷ்ஷை ஆதரிக்கிற இராணுவத்தினருக்கு நான் எதிரி என்று நினைக்கவேண்டாம். ஆனால் பாக்தாத்தில் உள்ள சில படையினர் என்றைக்குமே தங்களது ஆயுதங்களைப் பயன்படுத்தியது இல்லை. செக்ஸ், போதைப்பொருள், மதுபானம் என்றே அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்தக் கடிதத்தை முடிக்கும் முன்னர் எனது சொந்தக் கருத்து என்னவென்றால் நாம் மிகவும் ஏழை நாட்டின் மீது மற்றும் ஒரு சரியான அடிவார்க்குண்டே (slingshot) இல்லாத நாட்டின் மீது படை எடுத்தோம். இது ஒரு அரசியல் போர் என்பதே என் கருத்து. டெக்ஸாஸிற்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்கிறேன். புஷ்ஷும் அதே போன்று மீண்டும் விரைவில் திரும்புவார் என எனக்குத் தோன்றுகிறது.

Top of page