World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi regime prepares for martial law

இராணுவச்சட்டத்திற்கு ஈராக் ஆட்சி தயாரிப்பு

By Mike Head
8 July 2004

Back to screen version

10 நாட்கள் பதவியிலிருக்கும் நிலையிலேயே அமெரிக்கா நியமித்துள்ள ஈராக் ஆட்சியின் இடைகால பிரதமர் அயத் அல்லாவி வாஷிங்டனின் கட்டளைகளின்படி நாடுமுழுவதிலும் அல்லது ஏதாவதொரு பகுதியில் இராணுவச்சட்டத்தை கொண்டுவருவதற்கான தீவிர நடவடிக்கைகளுக்கு கட்டளையிட்டிருக்கிறார். அவர் கையெழுத்திட்டுள்ள சட்டவிதிகள் நேற்று செயல்படத் தொடங்கின, அவர் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும், நகரங்களையும், மாநகரங்களையும் சுற்றிவளைக்க முடியும், சோதனையிட முடியும், ஆயுதம் தாங்கிய தனிமனிதர்களை காவலில் வைக்க முடியும், ஈராக்கில் ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்களும் அதில் அடங்குவர்.

''விடுதலை'' மற்றும் ''ஜனநாயகம்'' என்கின்ற பெயரால் அவசரகால அதிகாரங்களை கையில் எடுத்துக் கொள்வதற்கு வழிசெய்யப்பட்டிருப்பது புஷ் நிர்வாகம் ஒரு காலத்தில் சதாம் ஹூசைன் கையில் இருந்த அதிகாரங்களை போன்ற அதிகாரங்கள் படைத்த ஒரு கொடுங்கோலரை ஆட்சியில் அமர்த்தியிருப்பதை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது. என்றாலும், அல்லாவியை பொறுத்தவரை வாஷிங்டனுக்கு நேரடி கையாளாக அவர் செயல்படுவார், ஈராக்கை அடிமைபடுத்துவதற்கு எதிராக பெருகிவரும் எதிர்ப்பை நசுக்குவதற்கு முயலுவார்.

இராணுவச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட உடன் அல்லாவி, குறிப்பிட்ட மாகாணங்களில் கவர்னர்களாக இராணுவத் தலைவர்களை நியமிக்கின்ற அதிகாரம் பெறுகிறார், ''தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கின்ற'' குற்றங்களை செய்ததாக சந்தேகப்படுகின்ற எவரது சொத்தையும் முடக்கிவைக்க முடியும். கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியவர்கள், நிதியளித்தவர்கள், புகலிடம் அளித்தவர்கள் என்று குற்றம்சாட்டப்படுபவர்களின் சொத்துக்களை முடக்கமுடியும். மற்றொரு அதிகாரமான நகரங்களை சுற்றிவளைத்து தகவல் தொடர்புகளையும், போக்குவரத்தையும் கட்டுப்படுத்தி வெளியே செல்லாமல் தடுப்பு வேலி போட முடியும். மக்கள் மீது சுமத்தும் பெரிய குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். அவ்வாறான குற்றங்கள் கொலையில் ஆரம்பித்து அரசாங்க சொத்துக்களை அழிப்பதுவரை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய திட்டவட்டமான விதிகளுக்கு மேலாகவும் அப்பாலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் 6-வது பிரிவு அல்லாவிக்கு ஏறத்தாழ அதிகாரத்தை வழங்குகின்றது. ''எந்தப் பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோ, அந்தப்பகுதியில் பணியாற்றும் ஆயுதப்படைகள், அவசரகால படைகள், சிறப்புப்படைகள், ஊர்க்காவல் படைகள், உள்நாட்டுப் பாதுகாப்பு படைகள், மற்றும் பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் இராணுவ புலனாய்வு சேவைகள், அந்த காலத்தில் நேரடியாக பிரதமருக்கு தகவல் தரவேண்டும். அத்தகைய படைகள் மற்றும் சேவைகளை தளபதிகளோடு ஒருங்கிணைந்து பிரதமர் அவசரநிலை சூழ்நிலைகளுக்கு தேவைப்படுகின்ற தன்மைக்கும் மற்றும் நீதி அதிகாரம் பணிகளை தனதாக்கிக்கொண்டு நடவடிக்கைகளுக்கு கட்டளையிடுவார்''.

இந்த கட்டளைகளுக்கு செயலூக்கம் கொடுத்த அல்லாவிக்கு ஜனாதிபதி கவுன்சிலின் சம்மதம் தேவை, இதில் ஈராக் ஜனாதிபதி Ghazi al-Yawer உம், இரண்டு துணை ஜனாதிபதிகளும் இணைந்திருந்தனர்-----அவர்கள் அனைவரும் அமெரிக்காவினால் நியமிக்கப்பட்டவர்கள். கட்டளைகள் 60 நாட்களுக்கு நீடிக்கும், அதை தாராளமாக புதுப்பித்துக்கொள்ள முடியும்.

''பயங்கரவாதிகள் மற்றும் சட்டத்தை மீறுபவரை'', போரிடுவதற்காக என்று மேற்கொள்ளப்பட்டுள்ள அவசர சட்டத்தில் முதலாவது பிரிவு நன்கு வரையறுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ''ஈராக்கில் அரசாங்கம் பரந்த-அடிப்படையில் ஸ்தாபிக்கப்படுவதற்கான'' எதிர்ப்பை ஒழித்துக்கட்டுவது என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தற்பொழுது நீடித்துக்கொண்டிருக்கின்ற அமெரிக்க இராணுவத்திற்கும் அதன் பொம்மை அரசாங்கத்திற்கும், எதிராக தோன்றும் எந்த அரசியல் எதிர்ப்பையும் அடக்குவதற்கு இராணுவச்சட்டம் கொண்டுவரலாம்.

இத்தகைய புதிய சட்டங்கள் பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. இராணுவச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டால் அதை செயல்படுத்துவதில் அல்லாவிக்கு ஈராக்கில் உள்ள 138,000 அமெரிக்கத்துருப்புக்கள் உதவும் என்று சென்ற வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் கூறினார். இது கட்டளையை இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டது என்று தோன்றுகிறது ஏனென்றால் அல்லாவி அமைச்சரவைக்குள்ளேயே சில குறிப்பிட்ட போராளிக்குழுவிற்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவியதாலேயாகும்.

சதாம் ஹூசைனால் உருவாக்கப்பட்ட அடக்குமுறை அதிகாரங்களோடு ஒப்புநோக்கப்படும் என்ற நனவின் காரணமாக ஈராக் ஆட்சியும், அதன் ஆதரவாளர்களும் அவரசநிலை அதிகாரங்கள், மனித உரிமைகள் பாதுகாப்புகளால் கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளன. மனித உரிமைகள் அமைச்சர் Bakhityar Amin இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்படும் பகுதிகளில் ஒரு சிறப்பு அமைப்பு மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்கூட்டி கண்காணிக்கும் என்று குறிப்பிட்டார். இந்த சட்டம் அமெரிக்க தேசபக்தி சட்டத்தோடு ஒப்பீட்டு கூறுவதிலிருந்தே மனித உரிமைகள்பற்றி ஹமீனின் கருத்து என்ன என்பது வெளிபடுகிறது, அதன் படி புஷ் நிர்வாகம் அமெரிக்க குடிமக்கள் உட்பட அமெரிக்காவில் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்களை குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ இல்லாமல் கைது செய்து காவலில் வைத்திருக்கின்றது.

பொதுமக்களது பெருகிவரும் எதிர்ப்பை நசுக்குகின்ற நோக்கில் நடைபெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிடுகின்ற நேரத்தில் அதை ஈராக்கியர் எடுக்கும் நடவடிக்கை என்ற தோற்றத்தை உருவாக்குவதற்குத்தான், வாஷிங்டன் அல்லாவிக்கும், அவரது தேர்ந்தெடுக்கப்பட்டாத மந்திரி சபைக்கும் ஜூன் 28-ல் இறையாண்மையை மாற்றித்தந்திருப்பதின் ஒரு காரணமாகும். இந்தப் பணிக்காக, அல்லாவி பாத்திஸ்ட் இராணுவத்தின் முன்னாள் இராணுவ அதிகாரிகளையும், போலீஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளையும் நியமித்திருக்கிறார்.

புஷ் நிர்வாகத்தின் கணிப்பில், பிரதமர் பதவிக்குரிய தனித்தகுதி ''அல்லாவிக்கு '' - கிடைத்திருப்பது, அவரது பிந்தைய முரட்டுத்தனமான சேவைகளின் அடிப்படையில் தான், 1970-களில் சதாம் ஹூசைனிடன் முதலில் பணியாற்றியும், அதற்குப்பின்னர் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்புக்களின் முகவராக பணியாற்றியவர். 1990-களில், அவரது ஈராக் தேசிய உடன்பாடு (INA) சி.ஐ.ஏ- வுடன் வேலைசெய்து சதாம் ஹூசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்கும், ஸ்திரமற்றதாக்குவதற்கும் பாக்தாத்தில் கார் குண்டுவெடிப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தது.

அல்லாவி நியமனத்திற்கான அரசியல் கணிப்புக்களை எடுத்துக்காட்டுகின்ற வகையில் ஈராக் படையெடுப்பின் நவீன-பழமைவாத ஆதரவாளரான டானியல் பைப்ஸ் ஜூன் 28-ல் ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். பைப்ஸ் அமெரிக்காவில் தளமாக செயல்பட்டுவரும் மத்திய கிழக்கு அரங்கின் நிர்வாகியும் மற்றும் பயங்கரவாதம் மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான பென்டகனின் சிறப்பு பணிக்குழு உறுப்பினரான அவர், ஜூன் 28-ல் "Lateline" நிகழ்ச்சி மூலம் புஷ் நிர்வாகம் ''புதிய ஜனநாயக ஈராக்கை உருவாக்குவதற்கு மிகத்தீவிரமான சென்றுவிட்டதாக'' ABC-யில் கூறியுள்ளார்.

ஈராக்கில் அதிவிரைவில் ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு சாத்தியமில்லை என்று பைப்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ''ஈராக்கில் சில ஆண்டுகளுக்கு சக்தி கொண்டவர், ஆட்சி செலுத்த வேண்டும், அவர் காலப்போக்கில் ஜனநாயகத்தை கொண்டுவருவார். அதிஷ்டம் இருக்குமானால் இது ஆரம்ப நடவடிக்கையாகயிருக்கும், ஆனால் அதை நான் நம்பவில்லை..... நான் என்ன கோருகிறேன் என்றால் ஜனநாயக உள்ளம் கொண்ட வலுவான ஒருவர் ஆட்சியில் அமர்ந்து அத்தகைய மாற்றத்திற்கு உதவ வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

16 மாதங்கள் இரத்தக்களரி நடந்த பின்னரும் ஈராக்கில் மக்களது எதிர்ப்பை நசுக்கத் தவறவிட்ட காரணத்தினால், வெள்ளை மாளிகையும், பென்டகனும், இதுபோன்ற வட்டாரங்களிலிருந்து வருகின்ற ஆலோசனைகளை கவனம் செலுத்தி ஒரு இரும்பு கரத்தால் நாட்டை ஆளுகின்ற ''சக்திவாய்ந்த'' ஒருவரை ஆட்சியில் அமர்த்தியுள்ளன.

பல்லூஜாவில் குண்டு வீச்சு

இராணுவச்சட்டவிதிகள் வெளியிடப்படுவதற்கு முன்னரே அல்லாவி வாஷிங்டன் அவசியம் என்று கருதுகின்ற எத்தகைய நடவடிக்கையும் எடுப்பதற்கு தயராக உள்ளார் என்பதை அதிர்ச்சித்தரும் எடுத்துக்காட்டால் அல்லாவி வழங்கினார். பல்லூஜா பொதுமக்களது எதிர்ப்பு நிலவும் முக்கிய மையப்பகுதியாகும், அங்கு திங்களன்று அமெரிக்க விமானப்படை விமானம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்த பட்சம் 12 சிவிலின்கள் கொல்லப்பட்டார்கள் இதற்கு அவர் நேரடியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

பாக்தாத்திற்கு 30 கிலோ மீட்டர் மேற்கே அமெரிக்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பல்லூஜா நகரில் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்களை நடத்தியதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டார்கள். அமெரிக்க இராணுவ விமானங்கள் 2-தொன் குண்டுகளை நான்கு ஐநூறு இறாத்தல் குண்டுகள், 2- 1000 இறாத்தல் குண்டுகளை வீசி தாக்கியபின்னர் மாண்டுவிட்டவர்களின் உடல் பாகங்களைத்தான் மீட்புப்பணியாளர்கள் எடுக்கமுடிந்தது என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பல்லூஜா மருத்துவமனையை சார்ந்த டாக்டர் Diaa Jumaili 10 உடல்கள் பெரும்பாலும் சிதைந்துவிட்ட நிலையில் மருத்துவமனைக்கு வந்தாக குறிப்பிட்டார்.

அசோசியேட் பிரஸ் டெலிவிஷன் செய்தி ஒளிப்பதிவு படத்தில் குண்டுவிழுந்து வெடித்தபோது செங்கல்கள் பல கட்டிடங்களைத் தாண்டி சிதறிவிழுந்ததையும், அருகாமையில் உள்ள சுவற்றில் இரத்தம் உறைந்திருந்ததையும் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வீடு இருந்த இடம் 30 அடி ஆழ குழியாகிவிட்டிருந்தும், அங்கு திரண்டவர்கள் அதிலிருந்து உடைகளை ஒரு சிறுபிள்ளையின் சட்டைகளை மீட்டுள்ளனர். ''அவர்கள் பயங்கரவாதிகள் பற்றி பேசுகிறார்கள், ஆனால் இது ஒரு குடும்பம்'' என்று சம்பவ இடத்திலிருந்த ஒருவர் குறிப்பிட்டார். மற்றொருவர் இது ஒரு ஏற்றுக்கொண்ட அரசாங்கமா? மனித உரிமைகள் எங்கே?" என்று கேட்டார்.

''பயங்கரவாதி வலைபின்னல்களை அழிக்கவேண்டும்'' என்ற கூட்டணி மற்றும் ஈராக் படைகளை உறுதியை காட்டுகின்ற வகையில் அமெரிக்க இராணுவம் ஆறுவகையான ஆயுதங்களை குறிதவறாமல் பயன்படுத்தியதாக குறிப்பிட்டது. உடனடியாக அல்லாவி அந்தத்தாக்குதலை தனது அரசாங்கம் ஆதரித்ததுடன், அந்த வீட்டை குறிவைப்பதற்கான புலனாய்வு தகவலையும் தந்ததாக குறிப்பிட்டார். தற்போது அமெரிக்காவின், அட்டூழியங்களை நியாயப்படுத்துவதற்கு வசதியான பலிகடாவாக மாறிவிட்ட ஜோர்டான் இஸ்லாமிய தீவிரவாதி அபு-மூசாப் அல்சர்க்காவி ஆதரவாளர்கள் அந்த வீட்டை பயன்படுத்தினார்கள் என்று அல்லாவி குறிப்பிட்டார்.

''ஈராக் அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஈராக்கில் உள்ள பன்னாட்டு படைகள் ஆலோசனை நடத்திய பின்னர் தென்கிழக்கு பல்லூஜாவில் சர்காவி ஆதரவாளர்கள் தாக்கியிருப்பதாக அறியப்படும் ஒரு வீட்டை பற்றி இன்றுமாலை ஈராக் பாதுகாப்புப்படைகள் தெளிவான தவிர்க்க முடியாத புலனாய்வு தகவலை தந்தன. அதனடிப்படையில் துல்லியமாக தாக்குதல் நடந்தது. ''ஈராக் மக்கள் பயங்கரவாத குழுக்களை அல்லது சர்காவி ஆதரவாளர்கள் போன்ற அமைப்புக்களோடு ஒத்துழைப்பவர்களை சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று எந்த வெளிநாட்டை சார்ந்த போராளிகள் தங்களது தீங்கான வழிகளை தொடர்ந்து கடைபிடிக்க அனுமதிக்கமாட்டார்கள்''. என்று அல்லாவி ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

அப்படியிருந்தும் இரண்டு வாரங்களில் ஐந்தாவது தடவையாக பல்லூஜாவில் அமெரிக்கக் குண்டுகள் வீடுகளை தரைமட்டமாக்கியிருக்கின்றன, ஒவ்வொரு முறையும் சர்க்காவி ஆதரவாளர்கள் ''பாதுகாப்பு வீடுகளையும்,'' துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறி வருகின்றனர். முந்திய தாக்குதல்களில் டசின் கணக்கில் மக்கள் மடிந்தார்கள். ஒவ்வொரு சம்பவங்களிலும், உள்ளூர் மக்கள் கொல்லப்பட்டவர்கள் சிவிலியன்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பல்லூஜா- எதிர்ப்புக் குழுத்தலைவர்களும், அமெரிக்க ஆயுதம் தாங்கியவர்கள் அமெரிக்க நிதி உதவி வழங்கிய பல்லூஜா குடிப்படைகளும், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர், சர்க்காவி மற்றும் அவரது சந்தேகத்திற்குரிய அமைப்பு அந்த நகரத்தில் இல்லை என்று கூறுகின்றன.

300,000 மக்களைக்கொண்ட பல்லூஜா நகரம் ஏப்ரல் மாதம் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேசிய எதிர்ப்பு சின்னமாக விளங்கியது. அந்த நகரம், முற்றுகையிடப்பட்டபோது அமெரிக்க படைகள் 1000 இற்கும் மேற்பட்ட அந்த நகர மக்களை கொன்று குவித்தன. ஏப்ரல் 5 முதல் 9வரை நான்கு நாட்கள் அமெரிக்க படையினரின் முழுத்தாக்குதலையும் பல்லூஜா போராளிகள் எதிர்த்து நின்று போரிட்டதால் இறுதியாக அமெரிக்க படைகள் அங்கிருந்து பின்வாங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு அருகில் சர்க்காவி ஆதரவாளர்கள் எங்காவது நடமாடுகிறார்களா? இல்லையா என்பதைவிட தற்போது நடைபெற்றுள்ள தாக்குதலும், அல்லாவியின் அறிக்கையும், ஆக்கிரமிப்பு படைகளை எதிர்ப்பவர்கள் அனைவரையும் அச்சுறுத்தவும், பயமுறுத்தவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அல்லாவியின் இராணுவச்சட்டத்தின் கீழ் என்ன நடக்கும் என்பதை இந்த தாக்குதல்கள் தெளிவுபடுத்தியுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved