World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Petitions filed to put socialist candidate on ballot

SEP stand against Iraq war evokes strong support in Maine

வாக்குச்சீட்டில் சோசலிச வேட்பாளரை இடம்பெற வைக்கும் மனுக்கள் தாக்கல்

Maine- பகுதியில் ஈராக் போருக்கு எதிரான சோசலிச சமத்துவ கட்சியின் நிலைப்பாடு வலுவான ஆதரவை வருவித்தது

By Jerry White
2 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

Maine-இரண்டாவது மாவட்டத்திலிருந்து அமெரிக்க காங்கிரசிற்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் Carl Cooly, நவம்பர் தேர்தல்களில் வாக்குச்சீட்டில் அவரது பெயரை இடம்பெறச் செய்வதற்காக பதிவு பெற்ற வாக்காளர்கள் 2,250- பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மனுக்களை மாகாண தலைநகரான Augusta- வில் செவ்வாயன்று தாக்கல் செய்தார்.

மே 25-ல் முடிவடைந்த இரண்டு மாத பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் மொத்தம் 3,000- வாக்காளர்களது கையெழுத்துக்ககளை திரட்டினர். இரண்டு பெரிய வர்த்தக கட்சிகளுக்கு மாற்று ஒன்றைத் தேடும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முறை சார்ந்தவர்களிடமிருந்து ஆதரவைத் திரட்டினர்.

Maine-ன் தனித்தன்மை கொண்ட வாக்குப்பதிவு நடைமுறையினால், சோசலிச சமத்துவக் கட்சி முதலில் உள்ளூர் அதிகாரிகளின் சரிபார்க்கும் சான்றிதழை பெற்றாக வேண்டும். வேட்பாளருக்காக கையெழுத்திட்ட வாக்காளர் வாழ்ந்த நகரத்தின் அதிகாரிகள் சான்றிதழ் தரவேண்டும். Augusta -வில் உள்ள தேர்தல் அதிகாரிகள் 2,250 பேர்களை பதிவுபெற்ற வாக்களர்களிடமிருந்து பெற்றவை என உறுதிப்படுத்தினர், இது வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்குத் தேவையான 2,000 கையெழுத்துக்களுக்கு மேற்கூடியதாகும். இது தொடர்பாக சவால் செய்வதற்கு ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் ஐந்து நாட்கள் இருக்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியின் 2004 தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குச் சீட்டில் இடம்பெறும் அந்தஸ்திற்கு தகுதிபெற்ற முதலாவது வேட்பாளர், 77 வயது நிரம்பிய கார்ல் கூலி, நியூயோர்க் வடக்கு Tarrytown லிருந்து வரும், ஒரு ஓய்வு பெற்ற Chevrolet மோட்டார் நிறுவனத்தின் தொழிலாளியும் நியூயோர்க் நகர அரசாங்க பள்ளியின் முன்னாள் ஆசிரியருமாவார், இவர் 1970களில் மெய்ன் பகுதிக்கு குடியேறினார். தற்போது பதவியில் இருக்கும் நீண்டகால ஜனநாயகக் கட்சியின் மாநில சட்டமன்ற உறுப்பினரும் காகிதத் தொழிற்சாலையின் தொழிற்சங்க அலுவலருமான Michael Michaud மற்றும் அதேபோல குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வர்த்தகர் பிரையன் ஹேமல் இவர்களுக்கு எதிராக போட்டியிடுகிறார்.

மனுக்களுக்கு கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், Cooly- யும் அவரது ஆதரவாளர்களும் SEP ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று கோரி வருவதாகவும், குற்றகரமான போருக்கும், ஆக்கிரமிப்பிற்கும் முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி வருவதாகவும் எடுத்துரைத்தனர். சமுதாயத்தின் ஆதார வளங்கள் அனைத்தையும், பொதுமக்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகள், கிடைப்பதற்கும், சுகாதார சேவைகள் மற்றும் வீட்டு வசதிக்கும் திருப்பிவிடப்பட வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

பிரச்சாரம் செய்தவர்கள் மாவட்டத்தின் அளவு, மிகக் குறைந்த மக்கள்தொகை, ஜனநாயகமற்ற வாக்குச்சீட்டுக் கட்டுப்பாடுகள், அதேபோல கடைவீதிகளில் மனுக்களில் கையெழுத்து வாங்குவதற்கு எதிராக தடைகள் உள்பட, பல தடைகளை வென்று வர வேண்டி இருந்தது. (பார்க்க: Maine: SEP Campaign faced arcane ballot requirements, Private Progerty restrictions" 2, June 2004)

Cooley உலக சோசலிச வலைதளத்திற்கு பேட்டியளிக்கும்போது கூறினார்: ''ஒரு சோசலிஸ்ட், போர் எதிர்ப்பு வேட்பாளராக அமெரிக்க காங்கிரசிற்கு நான் போட்டியிடுகிறேன். ஈராக்கிலிருந்து அனைத்துத் துருப்புக்களும் உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்று கோருகிறேன். இதைச் சொல்லித்தான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நான் கையெழுத்துக்களை சேகரித்தேன். பலர் மகிழ்ச்சியடைந்தனர். தங்களது உண்மையான கவலைகளைத் தங்களைப்போன்று எடுத்துரைப்பதற்கு ஒருவர் கிடைத்திருக்கிறார் என்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். போருக்கு எதிரான குரல் வலுவாக ஒலிக்கவில்லை என்பதில் விரக்தியடைந்தனர். அவர்கள் சோசலிஸ்ட் என்ற சொல்லை வியப்போடு பார்த்தனர், ஆனால் பயந்துவிடவில்லை. போர், வேலை வாய்ப்புக்கள் இழப்பு, இளைஞர்களுக்கு எதிர்காலம் இல்லாத ஒரு நிலை ஆகிய தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உண்மையான பதில்களை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்''.

இந்த கோரிக்கைகளுக்கு பொதுமக்களது ஆதரவு திரண்டு வருவது போருக்கு அவர்கள் காட்டிவரும் எதிர்ப்பு, வளர்ந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. புஷ் நிர்வாகமும், ஜனநாயகக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி-யும் ஆக்கிரமிப்பை நீடிக்க உறுதிமொழி அளித்திருப்பதால் இரண்டு கட்சிகளையுமே மக்கள் புறக்கணிக்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் என்னவென்றால் ஈராக்கில் பணியாற்றி வருகிற போர்வீரர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களது பதில்செயற்பாடு ஆகும், அவர்களில் பலர் SEP ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தி வருவதை அறிந்து ஆர்வத்தோடு உடனடியாக SEP மனுவில் கையெழுத்திட்டனர்.

Lobster- மற்றும் பிறவகை மீன்பிடிப்புத் தொழிலிலும், காகித தயாரிப்பு, மரங்கள், ஜவுளி ஆலைகள் மற்றும் Maine- பகுதியில் இதர உற்பத்தித்தொழில் மூடப்பட்டுவிட்டதாலும் உயர்ந்த ஊதியம் பெறுகின்ற வேலைகளை இழந்துவிட்டதால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், அந்த மாகாணத்தைவிட்டு வெளியேறிவிட்டனர் அல்லது கல்லூரி பட்டப்படிப்பில் சேருவதற்காக இராணுவத்தில் சேர்ந்திருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் இராணுவப்பணிக்கு சென்றதானது, எதிர்காலத்தில் குறைந்த ஊதியத்தில் சில்லறை விற்பனைக்கடைகளில் பணியாற்றுவதையும் அல்லது டெலிமார்க்கெட்டிங் பணியை தவிர்ப்பதற்காகவும்தான். அமெரிக்க இராணுவம் மற்றும் தேசிய காவலர் இருப்புக்களில் 60-சதவீதம்பேர் மியாமிப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்கள் இப்போது ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாகாணத்தை சேர்ந்தவர்களில் குறைந்தபட்சம் 11-போர்வீரர்கள் ஈராக்கில் மடிந்திருக்கின்றனர். எந்த ஒரு குறிப்பிட்ட சூப்பர்மார்க்கெட் பட்டியலைப் பார்த்தாலும் அதில் நான்கு அல்லது ஐந்து ஊழியர்கள் தற்போது ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருப்பதைப்பார்க்க முடியும்.

தற்போதுதான் ஈராக்கிலிருந்து திரும்பியிருக்கின்ற ஒரு கடற்படை வீரர் SEP பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரிடம், ''அங்கே நாம் இருப்பதற்கு எந்தவிதமான முகாந்திரமுமில்லை, அங்கிருந்து வெளியேற வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டார். ஒரு இளம் பெண் Water Ville பகுதியில் SEP மனுவில் கையெழுத்திடுவதற்காக அவர்களை தடுத்துநிறுத்திக் கூறினார்: ''எனது இரண்டு சகோதரிகள் ஈராக்கில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே இளைஞர்களுக்கு எதிர்காலமில்லை என்பதால்தான் அவர்கள் இராணுவத்தில் சேர்ந்தார்கள்''

உழைக்கும் மக்களது குடும்பங்களை எதிர்நோக்கியுள்ள இந்த துயரநிலையை எடுத்துக்காட்டுகின்ற வகையில் ஒரு சம்பவம் இந்தப் பிரசாரத்திற்கிடையே நடந்திருக்கிறது. ஈராக்கில் சாலையோரக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஒரு தேசிய காவலர் ரிசேர்வ் படைவீரர் Chris Gelineau -ன் மனைவி மே 15-ல் தெற்கு Maine பல்கலைக்கழகம் தனது கணவருக்கு வழங்கிய பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் ஈராக் போருக்கு அழைக்கப்பட்ட நேரத்தில் அவரது படிப்பு பூர்த்தியாவதற்கு ஒரு மாதம் இருந்தது. கல்லூரி அதிகாரிகள் அவரது பெயரை படித்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் பலரும் அவரை கைதட்டி, பல நிமிடங்கள்வரை அவரை சிறப்பித்தனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த மாண்டுவிட்ட, போர்வீரரின் தாயார் உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தார், ''எனது மகன் கல்லூரிக்குச் சென்று பட்டம் பெறவேண்டும் என்று விரும்பினார், எனவேதான் இராணுவ தேசிய காவலர்படையில் அவர் சேர்ந்தார்'' என்று கூறினார்.

''வியட்நாம் தொடர்பாக அவர்கள் பொய் சொன்னார்கள், இப்போது மீண்டும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று பேங்கரில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற அஞ்சல்துறை ஊழியர் கூறினார். அவர் வியட்நாம் போரின்போது இரண்டுமுறை சுழற்சிமுறையில் இராணுவ கடமையாற்றியுள்ளார். "இப்போது எண்ணெய்காகவும், பதவிக்காகவும் அப்படி செய்கிறார்கள், புஷ் மற்றும் செனி இருவரும் பொய்யர்கள், கிரிமினல்கள்'' என்று கூறினார்.

சமூக துருவமுனைப்படல்

Maine -அழகான அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோர மாநிலமாகும். இங்கு செல்வந்தர்கள் பல மில்லியன் டாலர்களில் சொகுசு மாளிகைகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்த மாகாணத்தை சேர்ந்த மிகப்பெரும்பாலான மக்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டுவரும் சங்கடங்களை சந்தித்துவருகின்றனர். இந்த மாகாண மக்களின் சராசரி வருமானம் தேசிய சராசரியை விட மிகக்குறைவாக உள்ளது. 2000-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி ஏறத்தாழ 5- வீடுகளில் ஒரு வீட்டின் சராசரி வருமானம் 15,000- டாலருக்கும் குறைவாக உள்ளது.

மாகாண மக்களில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. 30-சதவீத வீடுகள் சமூக பாதுகாப்பு உதவித்தொகைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. சராசரி வருமானம் 11,492- டாலர். அமெரிக்காவின் 50- மாகாணங்களில் 1995-கணக்குப்படி இளைஞர்கள் வீதாச்சார எண்ணிக்கையில் Maine மாகாணம் 42-வது இடத்திலுள்ளது, மற்றும் இது 2025-வது வாக்கில் 49-வது இடத்திற்கு சென்றுவிடும்.

பழைய ஜவுளி ஆலை நகரங்களான Lewiston, Auburn, Water Ville மற்றும் Bangor -ஆகியவற்றில் SEP இயக்கத்திற்கு குறிப்பான ஆதரவு திரண்டது. 19-ம் நூற்றாண்டில் குழந்தை தொழிலாளருக்கு எதிராக Lewiston பகுதியில் தொழிலாளர் கிளர்ச்சி நடைபெற்றது, கம்பளி ஆலைகளிலும் காலனி தொழிற்சாலைகளிலும் 14-மணி நேர பணிகளுக்காக கிளர்ச்சி நடைபெற்றது. அந்தப் பகுதிகளில் இப்போது கைவிடப்பட்ட தொழிற்சாலைகள், மூடப்பட்ட கடைகள் மற்றும் சிதைந்து வரும் மரங்களால் ஆன பொது வீடுகளாகவே காணப்படுகின்றன.

Water Ville பள்ளிப்படிப்பிற்கு முந்திய கல்வி இயக்குநர் லிசா கூறினார் ''Maine மக்கள் தங்களது வாய்ப்பு வசதிகள் எதுவாக இருந்தாலும் அதைப்பயன்படுத்தி முன்னேற வேண்டுமென்ற ஆர்வத்துடிப்புள்ளவர்கள். ஆனால் பலருக்கு இப்போது நிலைமை கடுமையாகிக் கொண்டிருக்கிறது. இப்போது சிலர் தங்களது ஆற்றலை பண்டமாற்றுமுறையில் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். 'என்னுடைய தண்ணீர் பைப் வேலையை நீ செய்வாயானால், உன்னுடைய தச்சுவேலையை நான் செய்கிறேன்' என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்

இங்கே ஒரு நகரில் மருத்துவமனையை மூடிக்கொண்டிருக்கிறார்கள். கிராமப்புற வடக்கு பகுதியைச் சார்ந்தவர்கள் ஒரு மணிநேரம் அல்லது இரண்டுமணிநேரம் கூடுதலாக பயணம் செய்து முறையான சுகாதார மருத்துவ வசதியைப் பெறுவதற்கு தலைநகர் Augusta செல்ல வேண்டும்''

Maine சமுதாய நிலைகள் இன்றைய வறுமை ஆபிரிக்க- அமெரிக்கர்கள் மற்றும் குடியேறியவர்கள், சம்மந்தப்பட்டதுதான் என்று ஊடகங்களும், மிகப்பெரும்பாலான அரசியல்வாதிகளும் கூறுகின்ற கருத்தை மறுப்பதாக அமைந்திருக்கிறது. ஆனால் Maine மாகாணத்தில் 98- சதவீதம்பேர் வெள்ளையர்கள், அப்படியிருந்தும் Appalachia மற்றும் தென்பகுதியைப் போல் இங்கே அழுக்குபிடித்த மாடிவீடுகளிலும், சிதைந்து கொண்டுவருகின்ற டிரைலர் வீடுகளிலும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக தொழிற் கூடங்களில் பணியாற்றிய 24,000- பேருக்கு வேலை போய்விட்ட காரணத்தினால் இந்த சமுதாய நிலைப்பாடுகள் மேலும் மோசமடைந்துள்ளன. 1978-ல் Maine மாகாணத்தில் மூவரில் ஒருவர் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றிவந்தனர் ஆனால் 2004-ல் எட்டுப்பேரில் ஒருவர்தான் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.

உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படுகின்ற இந்தத்தாக்குதலில் ஒரு சிக்கலான நெருக்கடியான சம்பவம் 1987, 88-ல் நடைபெற்றது. International Paper- என்கிற உலகின் மிகப்பெரிய காகிதத் தொழிற்சாலை தனது Maine, Jay தொழிற் கூடத்தை மூடியது. 1250-தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்கத்தை உடைத்தது. 16-மாதங்கள் நடைபெற்றுவந்த வேலை நிறுத்தம் தனிமைப்படுத்தப்பட்டது, United Paper Workers, International Union- ம் AFL-CIO தொழிற்சங்க நிர்வாகமும் தொழிலாளர்களை காட்டிக் கொடுத்தன, அவை தொழிலாளர் போராட்டத்தை மக்கள் தொடர்பு வார்த்தை ஜாலங்களுக்குள் கட்டுப்படுத்திவிட்டனர் மற்றும் அன்றைய ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் Michael Dukakis ஆதரவு இயக்கத்தில் மூடிமறைத்தனர்.

International Paper வேலை நிறுத்தம் சீர்குலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பத்து-ஆண்டுகளில் Maine- ல் வர்த்தகம் செய்யும் காகித கம்பெனிகள் தங்களது சராசரி முதலீட்டின்மீது 44-சதவீத ஒட்டுமொத்த வருவாய் ஈட்டினர். பணவீக்கத்தை சரிக்கட்டிய பின்னரும் இந்த அளவிற்கு லாபம் கிடைத்ததென்று போர்ட்லாண்ட் செய்தி பத்திரிகைகள் புலனாய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன. அதேகாலத்தில் ரொக்கவருவாய் 65-சதவீம் உயர்ந்திருந்ததாக அந்த கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் தெரிவித்தனர். அதே காலகட்டத்தில் Maine- பகுதியில் காகித ஊழியர்களின் மணிக்கணக்கு ஊதியம் ஒரு சதவீதம்தான் உயர்ந்தது மற்றும் வேலைவாய்ப்பு 17-சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

காகிதத்தொழில் ஒட்டுமொத்தமாக வேலையிழப்பு, தொய்வின்றி அடுத்த பத்து ஆண்டுகள் நீடித்தது. Maine- இரண்டாவது காங்கிரஸ் மாவட்டத்தில் இது குறிப்பிடத்தக்கது. 2002- 2003-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் Great Northern காகித ஆலைகள் மூடப்பட்டதன் காரணமாக Millinocket- லும் கிழக்கு Millinocket -லும் வேலையில்லாத் திண்டாட்டம் 32- சதவீதமாக உள்ளது. மேலும் உயர்ந்துகொண்டிருக்கிறது.

அந்தப்பகுதி ஜனநாயகக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் MichaEL Michard, United Paper workers International யூனியன் (தற்போது PACE - Allied-Chemical and Energy Workers International Union) கிழக்கு Millinocket தொழிற்சாலையின் 152-வது முன்னாள் யூனியன் போர்டு அங்கத்தவர், அவர் தொழிற்சாலை மூடுவதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யவில்லை இதனால் 5,000-பேர் வேலையிழந்தனர் என்று மதிப்பிடப்படுகிறது.

தற்போது கெர்ரி-க்கும், ஜனநாயகக் கட்சிக்கும் AFL-CIO ஆதரவு தருவது மீண்டும் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. ''தொழிலாளர்களின் இந்த நண்பர்கள்'' தொழிலாளர்களின் வேலையிழப்பு மற்றும் வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியை முடித்துவைக்க பாடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. Maine- ல் அவர்களது சாதனை அதற்கு மாறாக உள்ளது - ஏனெனில் மாகாண சட்டமன்றம் கவர்னர் பதவி மற்றும் நாடாளுமன்றத்தின் இரண்டு உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இந்த சாதனையை மதிப்பீடு செய்கையில், காகித ஆலையின் தொழிலாளி Cooley -ன் மனுவில் கையெழுத்திடும்போது, ''எங்களது யூனியன் ஜனநாயகக்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கிறது என்பதை நம்பமுடியவில்லை. எங்களது வேலைகளை காப்பாற்ற அவர்கள் எதுவும் செய்யவில்லை, தொழிற்சாலைகள் மூடப்படுவதைத் தடுக்கவுமில்லை." எனக் கூறினார்.

Top of page