World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington fields mercenary army in Iraq

வாஷிங்டன் கூலிபடை இராணுவத்தை ஈராக்கில் களமிறக்கியுள்ளது

By Harvey Thompson
5 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

பல்லுஜாவில் மார்ச் 31-ல் நான்கு தனியார் பாதுகாப்பு காவலர்கள், கொலைசெய்யப்பட்டு அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டதை அமெரிக்க ராணுவம் ஒரு சாட்டாகக் கொண்டு கொடூரமான, இடைவிடாத தாக்குதலை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈராக் நாட்டில் நடத்தி வருவது மட்டும் அன்றி, ஈராக் முழுவதிலும் ஏராளமான கூலிப்படையினர் செயல்பட்டு வருவதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

சமீபத்திய மதிப்பீட்டின்படி ஈராக்கிற்குள் 15,000- தனியார் மெய்காவலர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் செயலாற்றி வருகின்றனர், இவர்களில் குறைந்த பட்சம் 6,000-பேர் ஆயுதந்தாங்கியவர்கள் என்று நம்பப்படுகிறது----இவர்கள் அமெரிக்க ராணுவத்திற்கு அடுத்த பெரிய ராணுவமாக அங்கு உள்ளனர். Iraqi Klondike என்று விவரிக்கப்படும், ஈராக் நிர்வாக சபையிடம் இறையாண்மை ஒப்படைப்பு என அழைக்கப்படுகின்ற ஜூன் 30-ன் நிகழ்விற்குப் பின்னர் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான முன்னாள் ராணுவ வீரர்களும் போலீஸ் அதிகாரிகளும் ஒரு நாளைக்கு $1,500- வீதம் பணம் செலுத்தப்பட்டு (இது ஒரு போர் வீரர் ஊதியத்தைவிட பல மடங்கு உயர்வாகும்) மேற்கத்திய பிரமுகர்கள், எண்ணெய் கம்பெனி நிர்வாகிகள் மற்றும் ஈராக்கிலுள்ள கட்டுமான நிறுவன அதிபர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தருகின்றனர். இதுபோன்று தனியார் பாதுகாப்பு நிறுனவங்களும் கொலம்பியா மற்றும் அல்ஜீரியாவில் நடைபெற்ற மோதல்களில் எதிர்-கிளர்ச்சிகளில் வீரர்களாக பணியாற்றியவர்களும், செச்சன்யாவில் ரஷ்ய அரசாங்கம் நடத்திய போரில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களும் மற்றும் ஜெனரல் Pinochet-ன் கொடூரமான சர்வாதிகாரத்தில் பயிற்றுவிக்கப்பட்ட சிலி நாட்டு கூலிப்படையினரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஏப்ரல் 18-ல் பாக்தாத்தில் இருந்த பிரிட்டிஷ் Observer செய்திப்பத்திரிகையின் இரண்டு நிருபர்கள் இந்த கூலிக்கு அமர்த்தப்படும் குண்டர்கள் ஒராண்டிற்கு முன்னர் சமுதாயத்தில் நிகழ்த்திய வெறியாட்டத்தை நினைவு கூர்ந்திருக்கின்றனர்.

''முதலில் திடீரென்று தாக்கி கைப்பற்றி, பாக்தாத் வீழ்ச்சியடைந்த பின்னர் - மிகுந்த ஆர்வத்தோடு செரடோன் உணவு விடுதியில் பிரான்சு மற்றும் பெல்ஜிய முன்னாள் பாரசூட் படைவீரர்கள் தங்களது படைபிரிவு பாடல்களை பாடினர். முன்னாள் அமெரிக்க சிறப்புப்படை வீரர்கள் போதையுடன் காணப்பட்டனர். செச்சன்யா ரஷ்ய முன்னாள் போர்வீரர்கள் தனியாக இருந்தனர். முன்னர் போலீஸ் புலனாய்வு நாய்களை நடத்திவந்த அமெரிக்கப் பெண்கள் மற்றும் 25- முதல் 50- வயதிற்கு உட்பட்ட முன்னாள் பிரிட்டன் படைவீரர்கள் பலர் இந்த களியாட்டத்தில் காணப்பட்டனர்.''

மார்ச் 28- சன்டே இண்டிபெண்டன்ட் பத்திரிகையில் எழுதியுள்ள Robert Fisk ஈராக்கின் தலைநகரில் இந்த தனியார் இணை ராணுவ வீரர்களின் சட்டத்திற்குப் புறம்பாகவும் மற்றும் பெருகிவரும் வலுவான பங்களிப்பையும் விளக்கியிருக்கிறார்.

''பல கம்பெனிகள் பாக்தாத்தில் மத்திய தர வர்க்கத்தினர் பகுதிகளில் உள்ள மாளிகைகளில் எந்த பெயரும் கதவுகளில் இல்லாமல் செயல்படுட்டு வருகின்றன. ஆண்டிற்கு 80,000 -ற்கு மேல் சம்பளம் பெறுவதாக சில பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்: ஆனால் குறுகிய கால, ஆபத்துக்ககள் நிறைந்த கூலிப்படை பணிகளுக்காக அதைவிட அதிக கைமாறு வழங்கப்படுகிறது. பல்லூஜா போன்ற நகரங்களில் ஏழு-நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பாதுகாப்பு அலுவலருக்கு ஒரு நாளைக்கு 1,000 டாலர் வழங்கப்படுகிறது.

''அவர்கள் சீருடை எதுவும் அணிந்திராவிட்டால் கூட, சில பாதுகாப்பு அலுவலர்கள் தங்களது அடையாள வில்லையை தங்களது சட்டையில் அணிந்தும், அதோடு துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகளையும் வைத்திருக்கின்றனர். மற்றவர்கள் ஓட்டல்களில்கூட தாங்கள் யார் என்று அடையாளம் காட்டுவதற்கு மறுக்கிறார்கள், ஒன்று சேர்ந்து மது அருந்தும் பொழுது, அவர்களது ஆயுதம் அவர்களது காலடியில் கிடக்கிறது. பல ஓட்டல்களில் விருந்தினர்களும் ஊழியர்களும் பாதுகாப்பு அலுவலர்களும் மதுக் கேழிக்கைகள் நடத்துகிறார்கள் என்று புகார் கூறியுள்ளனர், மற்றும் ஒரு ஓட்டல் மேலாளர் தனது ஓட்டலில் இருந்து வெளியேறும்போது தங்களது துப்பாக்கிகளை ஒரு பையில் போட்டு எடுத்துச் செல்ல வேண்டும் என கட்டளையிட்டிருந்தார் ஆனால் அவரது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது''

கூலிப்படை பட்டியலில் பிரிட்டன் முதலிடம்

ஈராக்கில் தனியார் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் பிரிட்டனின் பாதுகாப்பு நிறுவனங்கள் மிகப்பெரும் பங்கை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளன. மார்ச் முடிவதற்கு முன்னர், முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தவிர 1500 முன்னாள் சிறப்பு விமான சேவையைச்சார்ந்த படுகொலை நிபுணர்கள், கடற்படை வீரர்கள், பாரசூட் படைவீரர்கள், மற்றும் Royal Ulster ஊர் காவல் படை அதிகாரிகள் ஆகியோர் ஈராக்கின் பிரதான நகரங்களில் செயலாற்றி வருவதாக நம்பப்படுகிறது. ஈராக்கில் இலாபகரமான பாதுகாப்பு வேலை கிடைக்கும் என்று கவர்ச்சி காட்டப்பட்டதால் உயர்ந்த பயிற்சி பெற்ற தனது அதிகாரிகள் பலரை முன்கண்டிராத அளவில் SAS தனியார் நிறுவனங்கம் இழக்க நேரிட்டதாக கூறுகிறது.

Control Risks-க்கு மிகப்பெரிய ஒரு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருக்கிறது, இதன் மூலம் அந்த நிறுவனம் இதுவரை 23.5 மில்லியன்களை சேர்த்துள்ளது. 120- அதிகாரிகள் சுமார் 150- பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தகாரர்களை பாதுகாப்பதற்காக பணியாற்றிவருகின்றனர். மற்றொரு பிரிட்டனுக்கு சொந்தமான AmorGroup நிறுவனம் வெளியுறவு அலுவலகத்திற்கு 20-பாதுகாப்பு காவலர்களை வழங்கி வருவதோடு, ஜூலை முதல் அந்த நிறுவனத்திற்கு மிகப்பெருமளவில் ஒப்பந்தங்கள் உயர்த்தித் தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் 500- கூர்க்காக்களையும் பணியில் அமர்த்தி அமெரிக்க நிறுவனங்களான பெக்டேல், கெல்லாங் ரூட் அன்ட் பிரெளன் நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மற்றொரு பிரிட்டன் நடத்தும் Erinys நிறுவனம் ஈராக்கில் எண்ணெய் கிணறுகளையும், குழாய் இணைப்புக்களையும் பாதுகாப்பதற்காக 14,000 ஈராக்கியர்களை காவலாளிகளாகவும், பாதுகாப்பு காவலாளியாகவும் பணியில் அமர்த்தியுள்ளது.

Janusian பாதுகாப்பு நிறுவன கம்பெனி இயக்குநர் David Claridge ஈராக் ஆக்கிரமிக்கப்பட்ட ஓராண்டிற்குள் பிரிட்டிஷ் நிறுவனங்ள் 1 பில்லியன் சம்பாதித்தது என்று மதிப்பிமடப்பட்டுள்ளது-- இது ஈராக்கில் தனியார் போலீஸ் பணிக்கன UK இன் பெரும் ஏற்றுமதியாகும்.

பிரிட்டிஷ் பாதுகாப்பு கம்பெனிகள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தொகை மறைமுகமாக வரி செலுத்துவோரிடமிருந்து கறந்தெடுக்கப்படுகிறது. Independent on Sunday சென்ற மாதம் வெளியிட்ட தகவலில் பிரிட்டனின் வெளியுறவு அலுவலகமும், சர்வதேச மேம்பாட்டுத்துறையும் சிவில் சேவர்களை பாதுகாக்கவும், பாதுகாப்பு ஆலோசகர் பணிக்கு ஆயுதந்தாங்கிய காவலுக்காகவும் தனியார் மெய்காவலர்களை பயன்படுத்துவதற்காக ஏற்கெனவே 25-மில்லியன் செலவிட்டிருக்கிறது. ஜூலை மாதம் இத் தொகை குறைக்கப்பட இருக்கின்றது.

அமெரிக்கா கறைப்படிந்த பணிகளை செய்ய கூலிப்படையினரிடம் திரும்புதல்

ஈராக்கிலுள்ள அமெரிக்க குடிமக்களுக்கான சேவைகள் என்ற அமெரிக்க அராங்கத்தின் அதிகாரப்பூர்வமான ஒரு வலைத்தளப் பிரிவு [http://travel.state.gov/iraq_amcitservices.html]''ஈராக்கில் வியாபாரத்தில் ஈடுபடும் பாதுகாப்புக் கம்பெனிகள்'' என்று ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் முன்னுரையாக அதிகாரபூர்வ பாதுகாப்பு நிறுவனங்கள் கீழ்கண்ட மறுப்பையும் வெளியிட்டிருக்கிறது.

''இந்த பட்டியலில் காணப்படுகின்ற பெயர்களைக் கொண்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் தொழில் முறை சார்ந்த ஆற்றல் அல்லது நேர்மைக்கு அமெரிக்க அரசாங்கம் எந்தவிதமான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை''.

இந்தக் கம்பெனிகளில் பல எண்ணெய் நிறுவுதலை, கட்டுமானப் பகுதிகளை பாதுகாக்கும் நிரந்தர பணிகளிலிருந்து நீண்ட காலத்திற்கு முன்னரே விலகிவந்து இராணுவ ஆக்கிரமிப்பில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஒரு அமெரிக்க கம்பெனியைச்சார்ந்த ஆயுதந்தாங்கிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் இரவு நேரத்தில் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது, அந்த மாளிகைதான் அமெரிக்க நிர்வாகி போல் பிரேமர் குடியிருப்பாகும். சென்ற ஆண்டு பலூஜா அருகே அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது அப்போது ஒரு அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம் அந்த பகுதியை கட்டுப்பாட்டில் எடுத்து மீட்புப்பணியை துவங்கியது.

இந்தக் கம்பெனிகளின் பணிகளின் தன்மை குறித்து, CNN தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் Ken Robinson கூறினார், ''தனிப்பட்டவர்களுக்கு காலை விடிந்தது முதல் இரவில் அவர்கள் படுக்கைக்கு செல்லும் வரை குவிமைய பாதுகாப்பு தருகிறார்கள். இவர்கள் சிறப்புப்பணி குழுவினைச் சார்ந்த முன்னாள் போர்வீரர்கள். பயங்கரமான வலிமையை பயன்படுத்துவதில் உயர்ந்த பயிற்சி பெற்றவர்கள். கண்காணிப்பு, புலனாய்வு மற்றும் ஆபத்துக்களைப் தவிர்ப்பதில் மிக உயர்ந்த பயிற்சி பெற்றவர்கள்''.

இங்கு ஒப்பந்தம் பெறுகின்ற கம்பெனிகள் ஈராக்கில் நிலவுகின்ற ஆபத்துக்கள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம் என்று பென்டகன் வற்புறுத்தி வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள் CNN-க்கு தெரிவித்தன. அப்படி பேட்டியளிப்பது ஆபத்துக்களை எதிர்கொள்ள விரும்புகின்ற தங்களது தொழிலாளர்களுக்கு மேலும் ஆபத்தை உருவாக்கிவிடும் என்று பென்டகன் கூறியது.

அமெரிக்க நிறுவனமான Blackwater பாதுகாப்பு கன்சல்டிங் ( பிளாக் வாட்டர் USA- வின் ஒரு பிரிவு) பல்லூஜாவில் கொல்லப்பட்ட நான்கு பாதுகாப்பு காவலர்களை பணியில் அமர்த்தியிருந்தது. இதற்கு முன்னர் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த பணிகளை மேற்கொள்வதற்கு முன்னர் போர் வீரர்களை கூலிக்கு அமர்த்தி அதே பணிகளை செய்வதற்கு ஏற்பாடு செய்யும் வளர்ந்து வரும் ஒப்பந்தக்காரர்களில் இந்த நிறுவனம் ஒன்று. ராணுவ கலப்பு நிறுவனங்கள் பெருகிக்கொண்டிருப்பதற்கு ஒரு முன் மாதிரி பிளாக் வாட்டர் நிறுவனம் ஆகும். இதற்கு தலைமை முன்னாள் அமெரிக்க கப்பற்படை SEALS-ஐ சார்ந்தவர்கள், இந்தக் கம்பெனியின் மூலவேர் சிறப்பு செயல் சமுதாயம் வரை செல்கிறது மற்றும் அமெரிக்க ராணுவத்தின் சில பிரிவுகள் குறைக்கப்பட்ட நேரத்தில் உருவான வர்த்தக வாய்ப்புக்களை சாதகமாக்கிக் கொள்வதற்காக இந்த நிறுவனம் துவக்கப்பட்டது.

வடக்கு கரோலினா கிராமப்பகுதியில் 6,000 ஏக்கர் சுற்றளவுள்ள Moyock தளத்தில் இந்தக் கம்பெனி செயல்பட்டு வருகிறது. ''அமெரிக்காவில் மிக விரிவான தனியார் தந்திரோபாய பயிற்சி வசதிக்கான'' மைதானம் என்று அந்த கம்பெனி கூறிக்கொள்கின்றது.

Blackwater இன் வலை தளத்தில் சேவைகள் பற்றிய விளம்பரத்தில் அறிவித்திருப்பதாவது: ''எங்களது பணி வாடிக்கையாளருக்கு நிபுணத்துவம் வாய்ந்த ராணுவ, புலனாய்வு, மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தொழில் முறைபயிற்சி பெற்றவர்களுக்கு உதவுவது, எங்களது ஊழியர்கள் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தேவைகளிலும் களமிறங்கும் பணிகளிலும் முதிர்ந்த அனுபவம் உள்ளவர்கள். நாங்கள் உற்சாகமும், சிறந்த தொழில் முறைத் தகுதிகளும் உள்ளவர்களையே பணியில் அமர்த்தியுள்ளோம், அவர்கள் அனைவரும் பல்வேறு அமெரிக்க மற்றும் சர்வதேச சிறப்பு படைப்பிரிவு புலனாய்வு, சட்டம் ஒழுங்கு அமைப்புக்களை சார்ந்தவர்கள்''.

தற்போது ஈராக்கில் பிளாக் வாட்டர் 450 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது, இவர்களுள் பெரும்பாலானவர்கள் இடைக்கால கூட்டணி நிர்வாகத்தின் (CPA) ஊழியர்கள் மற்றும் ஈராக்கிற்கு விஜயம் செய்யும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு தருகிறார்கள். ஈராக் படைகளுக்கு ''பயங்கரவாத எதிர் நடவடிக்கை பயிற்சி வசதி'' தரும் நிலையமாக பாக்தாத் அருகிலுள்ள MIG- முன்னாள் விமானத்தளத்தை தன்வசம் வைத்துக்கொள்வதற்கு அந்தக்கம்பெனி மனுச்செய்திருக்கின்றது. அந்த பயிற்சி வளாகம் Moycock- பகுதியிலுள்ள 6,000 ஏக்கர் பயிற்சி நிலையத்தை எதிரொலிப்பதாக அமையும். அந்தப் பகுதிக்கு அமெரிக்க சட்டம் ஒழுங்கு மற்றும் ராணுவ அதிகாரிகள் அடிக்கடி வந்து போகின்றனர்.

ஏப்ரல் 6-ல் வாஷிங்டன் போஸ்ட வெளியிட்டுள்ள ஒரு செய்தி ஈராக்கில் அமெரிக்கா தலைமை வகித்து நடத்திக் கொண்டிருக்கின்ற ராணுவத் தாக்குதலில் பிளாக் வாட்டர் போன்ற நிறுவனங்கள் எந்த அளவிற்கு கடுமையாக சம்மந்தப்பட்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. பிளாக் வாட்டர் காவலர்கள் கொல்லப்பட்டு நான்கு நாட்களுக்குப் பின்னர் நஜாப் நகர அமெரிக்க ராணுவச் சாவடி ஒன்றில் ஈராக் எதிர்பாளர்கள் நடத்திய தாக்குதல் பற்றி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:- ''நூற்றுக்கணக்கான ஈராக் போராளி உறுப்பினர்கள் நஜாப் அமெரிக்க அரசாங்க தலைமை அலுவலகங்கள் மீது ஞாயிறன்று நடத்திய தாக்குதலை முறியடித்தது அமெரிக்க ராணுவம் அல்ல, ஆனால் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த எட்டு அதிரடிப்படை வீரர்கள் முறியடித்திருக்கின்றனர்'' என அந்த சம்பவத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தந்த தகவலின்படி தெரிகிறது.

''அமெரிக்க படைகளும், தளவாடங்களும் வந்து சேருவதற்கு முன் பிளாக்வாட்டர் பாதுகாப்பு கன்சல்டிங் நிறுவனம் தனது சொந்த ஹெலிகாப்டர்களை அனுப்பியது, தனது அதிரடிப்படை வீரர்களுக்கு தளவாடங்களை மீண்டும் வினியோகம் செய்வதற்காகவும், காயம் அடைந்த ஒரு கடற்படை வீரரை வெளியேற்றுவதற்காகவும் அந்த ஹெலிகாப்படர்கள் பெரும் போருக்கு இடையில் அங்கு சென்றன, என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

''.......ஷியைட்டு போராளிப் படைகள் Blackwater அதிரடிப்படை வீரர்களை குண்டு வீசித் தாக்கியது, நான்கு MPகள் மற்றும் கடற்படை ஆயுதம் தாங்கியவர் ஆகியோரை போராளிகள் ராக்கெட் வெடிகுண்டு மூலமும் A.K-47 துப்பாக்கிகள் மூலமும் அமெரிக்க சிறப்புப் படைபிரிவுகள் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தாக்கினர். அருகாமையில் உள்ள ஒரு கட்டிட உச்சியிலிருந்து ஒரு போராளி சுட்டதில் மூன்று பேர் காயம் அடைந்தனர். அமெரிக்கத் துருப்புக்கள் அன்றைய தினம் ஈராக் நகரங்களில் கடுமையான சண்டையை சந்தித்தன''.

இந்தக் கொடிய இரத்தக்களரி மோதலில், ஆயிரக்கணக்கான சுற்று குண்டுகள் சுடப்பட்டன மற்றும் நூற்றுக்கணக்கான 40 mm எறிகுண்டுகள் சுடப்பட்டன. பெயரை வெளியிட விரும்பாத வட்டாரங்கள் பிளாக் வாட்டரின் ஈராக் பணிகளின் ''உணர்வு பூர்வமான'' வேலையைப் பற்றிய அறிக்கையில் ஈராக் மக்களிடையே அளவிட முடியாத அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

அடுத்த நாள் இந்த சண்டை நடைபெற்ற இடத்திற்கு அருகில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரிகேட்டியர் படைத் தளபதி மார்க் கிம்மிட் பிளாக் வாட்டர் ஊழியர்களின் திட்டவட்டமான பங்களிப்பு பற்றி விளக்குவதை தவிர்த்தார். அவர் ஒன்றை ஒரு வகையில் ரத்தினச் சுருக்கமாக குறிப்பிட்டார். ''அவர்களுக்கு எதற்காக இங்கு வந்தோம் என்பது தெரியும்... காயம் அடைந்த மூவரை அவர்கள் இழந்திருக்கிறார்கள். அந்த துப்பாக்கி குண்டுமேல், உறைகளுக்குமேல் நாம் வெளிப்படையாக சொல்வதென்றால் அவர்களது தோழர்களது இரத்தத்தில் அமர்ந்திருந்தனர், அவர்கள் முற்றிலும் நம்பிக்கையோடு இருந்தனர்''.

Blackwater நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் பின்னர் CPA விற்கு பாதுகாப்புத்தரும் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்தினார், ஆனால் அந்த சம்பவத்தை வெளிவிடாமல் அதை மறைத்துவிட்டார். நஜாப் அமெரிக்க தலைமை அலுவலகங்களில் ஆரம்பத்தில் பல மணிநேரம் நடைபெற்ற சண்டைகள் தொடர்பாக ராணுவ அறிக்கைகள் எதுவும் இல்லை ஏனெறால் அந்த இடத்தில் அப்போது ராணுவ அலுவலக பணியாளர்கள் எவரும் இல்லை என்று பாதுகாப்புத்துறை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிலையத்தைச் சேர்ந்த ரிக் பர்டோன் தந்துள்ள தகவலின்படி ''ஏதாவது ஒருவகையில் 150- தாக்குதல்கள் தினசரி ஒரு புறத்தில் நடைபெற்றும் மற்றொரு புறத்தில் பெரும்பாலானவை எதிர் தாக்குதலுக்கும் இலக்காகின்றன... எனவே இந்தத் தாக்குதல்களின் தாக்கத்தை மட்டுப்படுத்துவதில் ஓரளவிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது, ஆனால் நாடு முழுவதிலும் ஏராளமான நடவடிக்கைகளில் நாம் சம்மந்தப்பட்டிருக்கிறோம்''.

 

கூலிப்படையினரை குறிவைத்தல்

 

தனியார், பாதுகாப்பு ஊழியர்கள் ராணுவ பங்களிப்பு செய்வது அதிகரித்துக் கொண்டிருப்பது தெளிவாகிக் கொண்டுவரும் சூழ்நிலையில் ஈராக்ய எதிர்ப்பு அணியினர் அடிக்கடி அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏப்ரலில் குறைந்த பட்சம் ஆறு பாதுகாப்பு காவலர்கள் கொல்லப்பட்டனர். இப்படி கொல்லப்பட்டவர்களில் அயர்லாந்தில் பணியாற்றிய முன்னாள் பிரிட்டன் பாரசூட் படைவீரர் Mike Bloss மற்றும் கடத்தப்பட்ட இத்தாலியரான Fabrizio Quattrocchi ஆகியோரும் அடங்குவர் என்றாலும் CPA அதிகாரப்பூர்வமாக இறந்தவர்கள் பட்டியலில் அவர்களது பெயரை சேர்க்கவில்லை.

இதன் விளைவாக தனியார் கம்பெனிகள் தங்களது ஊழியர்கள் மேலும் வலுவான ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு அதிகாரப்பூர்வமாக உரிமை வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கைகள் பெருகிவருகின்றன. தாங்கள் தாக்குதலுக்கு இலக்காகும் போது உதவிக்கு வருவதற்கு கூட்டணிப்டைகள் விரும்பவில்லை அல்லது அவர்களால் இயலவில்லை என்று சினமும் தனியார் பாதுகாப்பு தொழிற்சாலைகளில் உயர்ந்து கொண்டு வருகிறது.

ஏப்ரல் 17-ல் கார்டியன் பத்திரிகை பாக்தாத்திற்கு தென்-கிழக்கே 100-மைல்களுக்கு அப்பால் உள்ள குட் நகரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டை தொடர்பாக மிகவும் தெளிவான விவரங்களை வெளியிட்டிருக்கிறது. பிளாக்வாட்டர்/நஜாப் சம்பவங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் Hart Group கம்பெனியைச் சேர்ந்த ஐந்து பாதுகாப்பு அலுவலர்களுக்கும் ஈராக்கியருக்குமிடையே மோதல் நடைபெற்றது, பெர்முடா பதிவு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கன்சல்டன்சி முன்னாள் SAS மற்றும் Scots அலுவலர் Richard Bethell (வெஸ்ட்பரி பிரபுவின் மகன்)-ஆல் நடத்தப்படுகிறது.

ஒரு சம்பவத்தில் தென்னாப்பிரிக்க பாதுகாப்பு காவலரான Gray Branyield கொல்லப்பட்டார், முற்றுகையிடப்பட்டிருந்த அவரது சிறிய பாதுகாப்பு குழுவின் உதவியாளர் அவசர உதவி கோரி திருபத்திரும்ப அழைத்தும்கூட உக்ரைனிலிருந்து வந்த கூட்டணிப்படைகள் உதவிக்கு வராததால் இது நேர்ந்தது.

''ஏப்ரல் 6-ல் அந்த ஐந்து Hart Group மெய்காவலர்கள் வாழ்ந்து வந்த வீட்டை, ஷியா மதகுருமார் மொக்தாடா அல்-சதார்-ஐ பின்பற்றுவோர் என்று நம்பப்படும் ஒரு பெரிய குழு தாக்கியது. உள்ளூர் கூட்டணிப் படைகளுக்கு அவசர அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. இறுதியாக ஒரு உக்ரைன் பிரிவு இறுதியாக பதிலளித்தது உதவுவதாக உறுதியளித்தது. ஆனால் அவர்கள் வரவில்லை. பாக்தாத்திலுள்ள கூட்டணி படபைகளோடும் தொடர்பு கொள்ளப்பட்டு, மீட்பு முயற்சி மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டது, ஆனால் மறுபடியும் அது வரவில்லை.

''அந்த வீட்டின் தற்காப்புக்கள் சிதைந்தன மற்றும் ஐந்து மெய்காவலர்களும் அந்த வீட்டின் கூரைக்கு பின்வாங்கி சென்றனர். ஈராக்கியர்கள் Branfield-ற்கு மரண காயங்களை உருவாக்கினர். ஆனால் மீதமிருந்த நான்கு பேர் மாடியிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை ஆறு மணி நேரத்திற்கு மேல் சமாளித்தனர். இந்த நேரத்தில் குறைந்த பட்சம் ஆறு முறை உதவிப்படை வருகிறது என்று உறுதியளிக்கப்பட்டது. காலை விடிந்ததும் அந்த நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர்.''

இரவில் அந்த நான்கு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் எதுவும் தராமலும் அல்லது அவர்களுக்கு உதவ முயலாமலும் உக்ரைன் பிரிவை சேர்ந்தவர்கள் இரவில் அருகாமையில் இருந்த CPA தலைமை அலுவலகங்களை காலிசெய்துவிட்டது என்று பின்னர் தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றி பெயர் குறிப்பிட விரும்பாத Hart Group வட்டாரம் ஒன்று கூறியது: ''எல்லா பாதுகாப்பு கம்பெனிகளுமே நெருக்கடிக்கு உள்ளாகும்போது அவர்கள் உதவிக்கு வந்து அதிலிருந்து காப்பாற்றுவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் பணியாற்றி வருகின்றன. மற்ற பாதுகாப்பு கம்பெனிகளுக்காக நான் உண்மையிலேயே பதிலளிக்க முடியாது. என்றாலும் பல கம்பெனிகள் ஒரே உணர்வுடனேயே உள்ளன. சில கேள்விகளை நாம் கேட்டாக வேண்டும். எங்களை ஆதரிக்க முடியாத நிலை ஏற்படுமானால் அப்போது நாங்கள் கனரக ஆயுதத்தை ஏந்திச்செல்ல வேண்டியது அவசியமாகும்''

அமெரிக்க ஆக்கிரமிப்புப்படைகள் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடும் என்ற அனைத்து சாத்திக்கூறுகளும் உள்ளன. CPA வுடன் செய்து கொண்ட ஒரு உடன்பாட்டின் படி தனியார் பாதுகாப்பு காவலர்கள் அதிகாரப்பூர்வமான சிறிய தற்காப்பு ஆதயுதங்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர், இருதரப்பினருமே இதை வழக்கமாக புறக்கணித்துவிட்டு செயல்படுகின்றனர். Hart நிறுவன வட்டாரம் ஒன்று தந்துள்ள தகவலின்படி ஈராக் ஆளும் சபை அதிகாரிகளோடு ஏற்கெனவே விவாதம் நடைபெற்று வருகிறது. மெய்காவலர்கள் தங்களது சுடுகின்ற ஆற்றலை அதிகரிக்கின்ற வகையில் கனரக ஆயுதத்தை வழங்குமாறு கோரியுள்ளனர். அந்தக் கோரிக்கையை ஏற்பது குறித்து விவாதம் நடந்து வருகின்றது. பிரிட்டனின் மிகப்பெரிய தனியார் பாதுகாப்பு நிறுவனம், Global Risk Strategies நிறுவனம் (தனது வலுவை ஈராக்கில் அதிகரித்துக் கொள்ள இருக்கின்றது) இந்த வகையில் புதிய நெறிமுறைகளை உருவாக்குகின்ற வகையில் CPA உடனும் ஈராக் ஆளும் சபையுடனும் (Iraqi Governing Council) பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

இந்த உள்ளடகத்தில் ராணுவ ஆக்கிரமிப்பு மிக உயர்ந்தளவில் இரத்தக்களரியாக மாறிக் கொண்டுவருகிறது, மக்களில் பெரும்பலோர் அமெரிக்கத் தலைமையிலான இராணுவங்களை தீவிரமாக எதிர்த்தும், அந்த நேரத்தில் சாதாரண போர்வீரர்கள் அதிக அளவில் வெறுப்படைந்து, தாங்கள் பணிக்கு அழைக்கப்படும் போது மெத்தனமாக செயல்படுவதால் மிக உயர்ந்த ஊதியத்தில், பயிற்சி பெற்ற புதிய குண்டர் தட்டு ஒன்று மேலும் அட்டூழியங்களைச் செய்வதற்காக தயாரிக்கப்பட்டு வருகின்றது. கைது செய்யப்பட்ட ஈராக்கியரை சித்ரவதை செய்வதிலும், புலனாய்வு நடத்துவதிலும் இப்படி ஊதியத்திற்கு அமர்த்தப்பட்டவர்கள் ரகசியமாக ஈடுபடுத்தப்பட்டு வருவதாக ஏற்கெனவே செய்திகள் வந்திருக்கின்றன.

பெரிய நிறுவனங்களுக்கு தேவைப்படும் கூடுதல் ஒடுக்கு முறை

ஜூன்-30- இறுதி நாள் நெருங்கும் பொழுது இந்த நிகழ்ச்சிப்போக்கு தீவிரம் அடைந்து வருகின்றது. உலகிலேயே மிகப்பெரிய எரிபொருள் மற்றும் கட்டுமான வர்த்தக நிறுவனங்களான செல் வோல்வோ, செவ்ரோன், டெக்சாகோ, Pfizer மற்றும் Kodak- உட்பட பல்வேறு நிறுவனங்கள் அண்மையில் மத்திய லண்டனில் ஒரு ரகசிய இடத்தில் ஒன்று கூடி, ஈராக்கில் பில்லியன் கணக்கான டாலர்கள் ஒப்பந்தத்தை முடிவெடுப்பதற்காக அந்த கூட்டம் நடத்தப்பட்டது. தங்களது எதிர்கால முயற்சிகளுக்கு சிர்குலைந்து வரும் ஈராக் பாதுகாப்பு நிலவரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல நிறுவனங்கள் தங்களது கவலைகளை தெரிவித்தன. பாஸ்ராவில் எண்ணெய் தொழிற்துறைக்காக அண்மையில் CPA ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்த கம்பெனிகளில் சில கலந்து கொள்ள மறுத்துவிட்டன. அந்த மாநாடு தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்த மாதக் கடைசியில் மிக ஆசையோடு பாக்தாத் கண்காட்சி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் இந்த நிறுவனங்கள் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. தற்போது அந்தக் கண்காட்சி வடக்கு நகரான சுலைமானியாவிற்கு மாற்றப்பட்டிருக்கின்றது. அங்கு சற்று பாதுகாப்பு அதிகம் என்று ஒரு ஈராக் அதிகாரி விளக்கினார்.

ஜேர்மனியும், பிரான்சும் ஈராக்கிலிருந்து தங்களது குடிமக்களை வெளியேற்றிவிடுமாறு ஏற்கெனவே அதிகாரப்பூர்வமான ஆலோசனகளை வழங்கியுள்ளன. ஈராக்கிலுள்ள மிகப்பெரிய ரஷ்ய ஒப்பந்த நிறுவனமான மின்சார நிலையங்களை அமைக்கும் Technopromexport நிறுவனம் தனது 370- ஊழியர்களையும் விலக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கின்றது. பாக்தாத்தில் 8-ரஷ்ய தொழிலாளர் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. BBC கூட தனது ஈராக் ஊழியர்கள் எண்ணிக்கையை திடீர் என்று குறைத்துவிட்டது. தயாரிப்பாளர்கள் எந்த புதிய நிகழ்ச்சியையும் தயாரிப்பதற்கு ஈராக் செல்ல வேண்டாம் என்று தடைவிதித்திருக்கின்றது.

பிரிட்டன் நிறுவனமான Amec (அதன் தலைமை நிர்வாகி சர் பீட்டர் மேசன் அண்மையில் ஈராக்கில் ஆண்டிற்கு 1-மில்லியன் பவுனுக்கு மேற்பட்ட கட்டணத்தை பெறும் கட்டுமானப் பணியின் வளரும் வர்த்தகர் வரிசையில் சேர்ந்து கொண்டவர்) அவர் தனது அமெரிக்க பங்காளியான Fluor- நிறுவனத்தோடு சேர்ந்து 1.1-பில்லியன் டாலருக்கான பேரத்தை சென்ற மாதம் வென்றெடுத்தார். அது ஈராக்கின் நிறுவனங்கள் ஏற்பாட்டை சீரமைக்கும் திட்டமாகும். ஆனால் இன்னும் விரிவான பணிக்கட்டளைகள் CPA விடமிருந்து இன்னும் கிடைக்கவில்லை. அடுத்த சில வாரங்களில் அத்தகைய கட்டளைகள் கிடைத்த உடன் அந்த திட்டத்தை துவக்குவதற்கு வெளிநாடுகளிலிருந்து கூடுதல் ஊழியர்களை கொண்டுவரும் ஆபத்தை எதிர் கொள்வதால் திட்டத்தை தாமதப்படுத்துவதா? என்பதை முடிவு செய்யும் என்று அந்த நிறுவனம் அறிவித்தது. பொறியியல் குழுக்களான Halcrow மற்றும் Foster Wheeler போன்ற இதர பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஈராக்கில் தங்களது ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். ஆனால் பாதுகாப்பு நிலவரம் படுமோசம் அடைந்து வருவதால் தங்களது திட்டம் பற்றி விவாதிக்க மறுத்து வருகின்றனர்.

Diligence Information & Security (DI&S) என்னும் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Nick Day: ''வர்த்தக ஒப்பந்தக்காரர்கள் ஈராக்கில் தங்களது நிலைப்பாடுகளை ஆராயந்து வருகின்றனர். அந்த நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டு ஊழியர்களில் ஒரு பகுதியினரை வெளியேற்றிக் கொண்டிருகின்றனர். அல்லது நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதை பரபரப்பு எதுவுமில்லாமல் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்'' என அவர் கூறினார்.

பாதுகாப்பு நிலவரம் திருந்தி ஸ்திரத்தன்மைக்கு திரும்புகிறதா? என்பதை காத்திருந்து பார்த்துக் கொண்டிருக்கின்ற கம்பெனிகள் கூட தங்களது குறுகிய கால கண்ணோட்டம் சரியாக இல்லை என்று கருதுவதாக Nick Day குறிப்பிட்டார். ''அமெரிக்கா தெற்கில் நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளது. அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன. அடுத்த மாதம் ஆட்சி அதிகாரம் தரப்படுவதற்கு முன்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த மக்கள் முயலுவார்கள் எனவே ஏப்ரல் மாத கடைசியில் நிலவரம் மோசமடையும் என்ற பேச்சு எழுந்துள்ளது''.

பெரிய பிரிட்டன் நிறுவனம் ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத தலைமை நிர்வாகி ஈராக்கில் செயல்பட்டு வருகின்ற பல்வேறு கம்பெனிகளின் நிலையை எடுத்துரைத்திருக்கிறார்:

''நிலவரம் தவறான திசைவழியில் சென்று கொண்டிருக்கும் போது இருக்கின்ற நிலையிலிருந்து நகர வேண்டாம் என்று சொல்லப்படுகிறோம். நகருகின்றபோது பாதிப்படையவேண்டியிருக்கின்றது. எங்களது பணியாளர்களுக்கு ராணுவம் பாதுகாப்பு தந்தால்தான் நாங்கள் பணியாற்றுவோம் என ஏற்கெனவே நாங்கள் ஒரு முடிவெடுத்திருக்கிறோம். ஒவ்வொரு நாள் காலையிலும் கண் விழிக்கும் போதெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்லுகின்ற சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம்''.

இன்னும் ஈராக்கிற்கு செல்வதற்கு தயாராக இருக்கின்ற நிறுவனங்கள் தங்களது முடிவுகளை சீர்தூக்கி ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. பிரிட்டினின் கன்சல்டன்ட் மற்றும் கட்டுமான பீரோ தலைவர் ஹோலின் ஆடம்ஸ் கூறினார்: ''அங்கே சிறப்பாக நிலைநாட்டப்பட்டு விட்ட நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறுவதாக சமிக்கை எதையும் காட்டவில்லை. ஈராக்கிற்கு செல்லுகின்ற நிறுவனங்கள் தான் மிக சிக்கலான முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

பிரிட்டனின் கட்டுமான நிறுவனமான Serco பாக்தாத்திலும் பாஸ்ராவிலும் விமான சேவைகளை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்று அது சம்மந்தமான பணிகளை இப்போது தான் முடித்திருகிறது. ''மேலும் ஏதாவது ஒப்பந்தங்களை பெறுவதற்கு போட்டியிடுவதற்கு முன்னர் நாங்கள் பாதுகாப்பு நிலைப்பாட்டை கண்காணிப்போம்'' என்று அந்த நிறுவன அதிகாரி ஒருவர் மிக கவனமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஈராக்கில் பணியாற்றி வருகின்ற கம்பெனிகள் எதிர்கொள்கின்ற மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், திடீர் என்று இன்சூரன்ஸ் பிரிமீய செலவினம் அதிகரித்திருப்பதாகும். லண்டனில் உள்ள காப்பீட்டுத் தரகர்கள் கடந்த 10-நாட்களில் பிரீமிய தொகைகளை இரட்டிப்பாகியிருப்பாதக கூறுகின்றன. காப்பீட்டு தரகர் நிறுவனமான Heath Lambert நிறுவன இயக்குநர் Anne Williams பத்திரிகையாளர்கள் அல்லது பாதுகாப்பு காவலர்கள் போன்ற அதிக ஆபத்துக்களை சந்திகின்ற தொழில்களில் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களது பிரீமியம் 6-சதவீதம் என்று குறிப்பிட்டிருக்கிறார். மரணம் அல்லது காயம் ஏற்படும் போது இன்சூரன்ஸ் நிறுவனம் $2,50,000 வரை இழப்பீடு வழங்கும். மூத்த ஊழியர்களுக்கு இந்த இழப்பீடு $500,000 வரை கிடைக்கும். ஆனால் அத்தகைய கொள்கைக்கு செலவு $15,000 இது எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானின் சராசரி "பாலிசியைவிட" 12-மடங்கு அதிக செலவு பிடிப்பதாகும். ஆப்கானிஸ்தானில் பிரீமியம் 0.5-சதவீதமாக உள்ளது. அல்லது சவுதி அரேபியாவை விட 24-மடங்கு அதிகமாக உள்ளது. சவுதி அரேபியாவில் செலவு 0.25-சதவீதம் தான் இவ்வளவு அதிகமான பிரீமிய செலவினம் இருந்தாலும் அதற்கான கோரிக்கைகள் ஈராக்கை பொறுத்து அதிகரிக்கவே செய்கின்றன. நாங்கள் விரட்டிச்சென்று பிடிக்க வேண்டிய வர்த்தகம் ஈராக்கில் ஏராளமாக உள்ளது என்று வில்லியம்ஸ் தெரிவித்தார்.

வரும் நான்கு ஆண்டுகளில் ஈராக்கை சீரமைப்பதற்கு பணிகளை மேற்கொள்வதற்கு 55-பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. அக்டோபரில் நடைபெற்ற மாட்ரீட் கொடையாளர் மாநாட்டில் 33- பில்லியன் டாலர்களுக்குத்தான் உறுதியளிக்கப்பட்டது.

ஈராக்கில் உள்ள பெரிய நிறுவனங்களை பெறுத்தவரை அதிக லாபம் தருகின்ற ஒப்பந்தங்களில் ஊன்றி கவனம் செலுத்தி வருவதால் மக்களது விருப்பங்களையோ, அல்லது சட்டப்பூர்வமான போர் நடப்பது தங்களுக்கு குறுக்கீடாக வருவதையோ விரும்ப மாட்டார்கள். மேலும் மிகக்கொடூரமான அடக்கு முறைகள் ஈராக் மக்கள் மீது ஏவிவிடப்படலாம் என்பதற்கான சமிக்கைகள் உருவாகியுள்ளன.

வாஷிங்டன் பகுதியிலிருந்து செயல்பட்டுவரும் தனியார் பாதுகாப்பு நிறுவனமான Diligence LLC நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான Mike Baker முன்னாள் CIA வழக்குகள் தொடர்பான அதிகாரியாகவும் பணியாற்றி வந்தவர். அவரது நிறுவனத்தின் சார்பில் 100-க்கணக்கானவர்கள் ஈராக்கில் பணியாற்றி வருகிறார்கள். அவர் ராணுவ நடவடிக்கையில் கூலிக்கு அமர்த்தப்படும் கொலைக்காரர்களை பயன்படுத்துவது பற்றி கூறியிருப்பதாவது:

''எவரும் பின்வாங்கவில்லை....... எமது ஆட்களை நாம் விலக்கிக் கொள்ளக்கூடும் என்று எவரும் கூறவில்லை. ஈராக்கிற்கு செல்பவர்களை எவரும் தடுப்பதாக நான் நினைக்கவில்லை. பாதுகாப்பு நிலைப்பாட்டை அவர்கள் முழுமையாக அறிந்திருகிறார்கள், ராணுவம் எப்படிச் செயல்படப்போகிறது என்பது மிக முக்கியமாகும். ஈராக் எதிர்ப்பிற்கு பதிலடியாக திட்டமிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அது முழுமையான பலவீனமாக கருதப்பட்டு அவர்கள் மிகத்துணிச்சலாக செயல்பட துவங்கிவிடுவார்கள்''.

Top of page