World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

ழிஷீ tஷீ tலீமீ ணிuக்ஷீஷீஜீமீணீஸீ ஹிஸீவீஷீஸீசீமீs tஷீ tலீமீ ஹிஸீவீtமீபீ ஷிஷீநீவீணீறீவீst ஷிtணீtமீs ஷீயீ ணிuக்ஷீஷீஜீமீ

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இல்லை --- ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கே ஆம்

Statement by the Socialist Equality Party (Britain)
14 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) ஆலோசனை அரசியலமைப்பு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் டோனி பிளேயர், பின்பு தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொண்டுள்ளார். இதனால் பிரிட்டனிலும், ஐரோப்பாவிலும் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது.

வாஷிங்டனிலிருந்து அவர் ஏப்ரல் 19 ல் திரும்பியவுடன் தனது அமைச்சரவையைக் கூட கலந்து ஆலோசிக்காமல் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அத்தோடு, மூன்று வாரங்களுக்கு முன்னர்கூட அத்தகைய முயற்சியை அவர் ஏற்க மறுத்தார். இது பிரிட்டனிலுள்ள வலதுசாரிகளின் விமர்சனங்களை மட்டுப்படுத்தி அவர்களை சமாதானப்படுத்துகின்ற பலவீனமான அரசாங்கத்தின் முயற்சியாகும். ரூபேர்ட் முர்டோக்கின் (Rupert Murdoch) நியூஸ் கார்ப்பரேஷன் தனது ஆதரவை விலக்கிக்கொள்ளும் என்ற ஆபத்தை பிளேயர் எதிர்நோக்குகிறார். மற்றும் ஜூன் 10 ல் நடைபெறவிருக்கிற ஐரோப்பிய தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலிலும், மே 2005 ல் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலிலும், பொதுவாகெடுப்புக் கோரிக்கையை நடுநாயகமான தேர்தல் பிரச்சார அம்சமாக பழமைவாதிகள் எடுத்து வைக்கக்கூடும் என்பதால் பிளேயர் தனது போக்கை தலைகீழாக மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் அவர் பொதுவாக்கெடுப்பை கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டாலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர்தான் அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடத்த முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஐரோப்பாவை தங்களது நலன்களுக்கு உகந்த வடிவில் உருவாக்குவதில், தான் முக்கிய பங்களிப்பு செய்ய முடியுமென்பதை பிரிட்டனிலுள்ள முதலாளித்துவ வர்க்கத்தையும், வாஷிங்டனிலுள்ள தனது சகாக்களையும் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமென்று இன்னமும் பிளேயர் நம்புகிறார். ஆனால் அவரது நோக்கங்கள் எதுவாகயிருந்தாலும், அவர் அடக்க முயலுகிற மோதல்கள் முதலாளித்துவ வர்க்கத்திற்குள் வெடித்துச் சிதறுகிற ஆபத்தை இந்த அறிவிப்பு வெளிப்படுத்தியிருக்கிறது

ஆதலால், ஐரோப்பிய ஒருமைப்பாடு தொடர்பான அடிப்படை பிரச்சனையில் தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுதந்திரமான போக்கை முடிவு செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஐரோப்பிய மக்கள் தங்களது கண்டத்தின் எதிர்காலம் பற்றி முடிவு செய்வதற்கு அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளனர். ஆனால், இதை ஒரு பொது வாக்கெடுப்பினால் செய்துவிட முடியாது. ஏனெனில் அந்த பொது வாக்கெடுப்பில் அரசியல் அடிப்படையிலான வலுவான நிபந்தனைகளை பிளேயர் அரசாங்கமும் இதர அரசாங்கங்களும் முடிவு செய்யும்.

ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான அதிகாரபூர்வமான விவாதங்களில் ஈடுபடும் இரண்டு தரப்பிற்குமே தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக விரோதம் கொண்டவர்களாக இருந்தாக வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் எந்த அம்சத்தையும் ஆதரிப்பதில் அவர்களுக்கு எந்தவிதமான நன்மையுமில்லை. ஏனெனில் அவை பெரு வர்த்தகங்கள் மற்றும் வங்கிகளின் கட்டளைப்படி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பின் எந்த அம்சம் பற்றிய பொதுவாக்கெடுப்பு நடக்கும் நேரத்தில் தொழிலாள வர்க்கம் ''இல்லை'' என்று வாக்களிக்க வேண்டும். இதில் ''ஆம்'' என்ற பிரச்சாரத்தை முன்னின்று நடத்துகிற பிரிவுகளுக்கு இணையான, பிற்போக்கு மற்றும் ஜனநாயக விரோத முதலாளித்துவக் கன்னைகள் மேலாதிக்கம் செய்கின்ற உத்தியோகபூர்வமாக ''இல்லை'' தெரிவிக்கும் பிரச்சாரத்திற்கும் தொழிலாளர்கள் விட்டுக்கொடுக்காமல் தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும்.

ஐரோப்பாவை ஒன்றுபடுத்துகிற அவசியமான முற்போக்கான பணியை மேற்கொள்வதும் மற்றும் விரோதமான அரசுகளில் நிலவுகின்ற பிளவுகளை சமாளித்து மேம்படுவதும் தொழிலாள வர்க்கத்தின் பொறுப்பாகும். இதற்கு தேவைப்படுவது, ஐரோப்பிய ஒன்றிய செயற்திட்டங்களில் கண்டுள்ள சந்தைகளால் உந்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் அனைத்துப் பிரிவு முதலாளித்துவத்திற்கும் எதிராக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பெருகிவரும் அமெரிக்க - ஐரோப்பிய மோதல்கள்

ஐரோப்பிய ஒருங்கிணைப்பு தொடர்பாக ஆளும் வர்க்கத்திற்குள் வளர்ந்து வருகின்ற மோதல்கள், கண்டம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய கடுமையான ஆபத்துக்களை உருவாக்கியுள்ளன. பிரதான ஐரோப்பிய அரசுகளுக்கும், அமெரிக்காவிற்கும் இடையில் பெருகிவரும் தீவிரமான போட்டிகளால் இந்த உயிர்நாடியான பிரச்சனை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இந்தப் பிரச்சனைகள் பிரிட்டனில் உருவாகியிருப்பதற்குக் காரணம் இதை உருவாக்குகின்ற தீ மூட்டும் பூகோள மோதலில் இது குவிமையமாக விளங்குவதால் ஆகும்.

வாக்காளர்கள் எந்த வகையான ஜனநாயக கட்டுப்பாட்டையும் மேற்கொள்வதற்கு பிளேயர் அரசாங்கம் குரோதம் கொண்டுள்ளது. ஈராக் போருக்கு எதிரான மக்களது கட்டளையையும் மீறி பிளேயர் சென்றதைப்போல், பிரிட்டிஷ் மக்களது கருத்துக்களைக் கேட்காமலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்பிற்கும் கூட அவர் ஒப்புதல் அளித்திருக்கக் கூடும்.

ஆனால், முர்டோக்கினுடைய பத்திரிகை தலைமை வகித்து உறுதியான பிரச்சாரத்தை நடத்தி வருவதால் அவர் பின்வாங்கியுள்ளார். அது, அவர் எப்போதுமே கலந்தாலோசிக்காத ஐரோப்பிய பங்காளிகளுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது. மற்றும் அவர் எப்போதுமே விரும்பியிராத ஒரு சண்டையில் அவரை திணித்துவிட்டுள்ளது.

பிளேயர் சம்பவங்களால் ஆட்டுவிக்கப்படுகிறாரே தவிர சம்பவங்கள் அவரை உருவாக்கவில்லை. அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பதவிக்கு வந்தது முதல் மேற்கொண்டுவருகிற மூலோபாயம் சிதைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையில் அதிலிருந்து தப்பிப்பதற்கு முயலுகிறார்.

இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய சகாப்தம் முழுவதிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அமெரிக்க மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு தனக்கென்று ஒரு உலக பங்களிப்பை நிலைநாட்ட முயன்று வருகிறது. வாஷிங்டனின் அதிக நம்பிக்கைக்குரிய நண்பனாக சர்வதேச அளவிலும், ஐரோப்பாவிலும் தனது பங்களிப்பை தருவதன் மூலம் பிரிட்டன் தனது வலுவிற்கு மிஞ்சிய வேகத்தோடும், தனது கரங்களை இதர பெரிய ஐரோப்பிய வல்லரசுகளுக்கு எதிராக வலுப்படுத்திக் கொள்ளவும் முயன்று வருகிறது. பிளேயர் இந்த முன்னோக்கை தொடருவதற்கு முயன்றார். ஆனால், திடீரென்று சர்வதேச சூழ்நிலைகள் மாறிவிட்டன. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் மற்றும் குறிப்பாக புஷ் நிர்வாகம் பதவிக்கு வந்த பின்னர் அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கப் பிரிவுகள் ஐரோப்பிய வல்லரசுகளோடும், ஜப்பானோடும், ஐ.நா மற்றும் நேட்டோ போன்ற இயந்திர அமைப்புகள் (Mechanisms) மூலம் சமரசத்திற்கு வரும் கொள்கையை முறித்துக்கொண்டுள்ளன.

தனது பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் மூர்க்கமான முயற்சியாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை மறு ஒழுங்கு செய்ய முயன்று வருவதுடன், இராணுவ ஆக்கிரமிப்பு வெடிப்பு மூலம் தனது மேலாதிக்கத்தை தட்டிக்கேட்க ஆளில்லாத நிலைக்கு முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப்போக்கு ஈராக் போன்ற சிறிய நாடுகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பெரிய ஏகாதிபத்தியப் போட்டி நாடுகளுக்கு எதிராகவும் செல்கிறது.

இதில் பிளேயரின் மூலோபாயமானது, அவர் ஈராக் படையெடுப்பில் செய்வதைப்போல் தனது ஐரோப்பிய பங்காளிகளை பகைத்துக் கொள்ளவேண்டிய ஆபத்து ஏற்பட்டாலும் அமெரிக்கா ஆக்கிரமிப்பு வெடித்து சிதறியிருப்பதற்கு ஒத்துழைத்துச் செல்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது. இந்த நிலைப்பாடு பிரிட்டனை ''ஐரோப்பாவின் இதயமாக ஆக்குகின்ற'' தனது நோக்கத்திற்கு முற்றிலும் ஒத்திருப்பதாக அவர் கருதுகிறார். மேலும், அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையேயான இணைப்பு பாலமாகவும், அமெரிக்காவின் தன்னிச்சைப் போக்கை மட்டுப்படுத்தும் செல்வாக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கருதுகிறார்.

ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தில் பிரிட்டனின் பங்களிப்பு விரும்பத்தக்கது, அவசியமானது என்று பிளேயர் கணக்கிட்டார். தனது அமெரிக்க செல்வாக்கைப் பயன்படுத்தி ஜேர்மனி மற்றும் பிரான்சின் மேலாதிக்கத்தை சிதைத்து விடமுடியும் என்றும், ஐரோப்பாவை மிகவும் கட்டுப்பாடற்ற சுதந்திர வர்த்தக வலையமாக உருவாக்கிவிட முடியும் என்றும், அமெரிக்க உறவோடு மோதுகின்ற நிலையை தவிர்த்துவிட முடியும் என்றும் அவர் நம்புகிறார். உண்மையிலேயே பிரிட்டன், வாஷிங்டனுக்கு விடுத்துள்ள விண்ணப்பம் என்னவெனில், ஐரோப்பாவில் தாம் நம்பகத்தன்மையுள்ள கூட்டணி என்பதுதான் ஆகும்.

பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னர் பிளேயர் ஐரோப்பாவில் பிரிட்டனின் பங்களிப்பை தற்காத்து நிற்பதற்கான இயக்கத்தை தொடங்கியுள்ளார். ஐரோப்பாவிற்கு எதிரான பழமைவாதிகளின் நிலைப்பாட்டை சீர்குலைப்பதுதான் அவரது நோக்கமாகும். ஆனால் அவர் தன்னை பிரிட்டிஷ் இறையாண்மையின் உறுதிப்பாடுள்ள ஆதரவாளர் என்றும் ட்ரான்ஸ் அட்லாண்டிக் உறவு மற்றும் அதிக செலவில்லாத நலன்புரி பொருளாதார நெறிமுறை தளர்த்தப்பட்ட, அமெரிக்க தலையீட்டிற்கு வழிதிறந்து விடுகின்ற ஐரோப்பாவை உருவாக்கிவிட முடியும் என்றும் கருதுகிறார்.

ஐரோப்பா கண்டத்தை அமெரிக்காவிற்கு ஆதரவாக சீரமைத்து விடுகின்ற பிரச்சாரத்திற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரிட்டன் ஏற்கமுடியும் என்று பிளேயர் வாதிடுகிறார். ''விரிவாக்கம் தாராள பொருளாதாரங்களை வலுவூட்டுவதாகவும், அமெரிக்காவுடன் நட்புறவை நிலைநாட்டுவதாகவும் அமைய வேண்டும்'' என்று அவர் ஏப்ரல் 30 ல் மூர்டோக்கின் டைம்ஸிற்கு பேட்டியளித்தார்.

கிழக்கு ஐரோப்பிய அரசுகள் ''ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து அதே கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொள்ளுகின்றன. எதிர்காலம் பற்றி அதே கண்ணோட்டத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தில், தங்களது சுதந்திரத்தை பேணிக்காப்பதில் உறுதி கொண்டிருக்கின்றன. தாராள மற்றும் போட்டிப் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக அமெரிக்கா, அந்த நாடுகள் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு உதவிய பங்களிப்பை தெளிவாக உணர்ந்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களது பங்குதார தன்மையை பராமரிப்பதில் உறுதி கொண்டிருக்கின்றன'' என்று பிளேயர் வாதிடுகிறார்.

பிளேயரின் ஐரோப்பா பற்றிய தொலைநோக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் அதிகாரத்தை வெட்டிக் குறைக்கவேண்டும் என்ற வாஷிங்டனின் முயற்சிகளை எதிரொலிப்பதாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவின் பங்களிப்பு ஐரோப்பிய வல்லரசுகளில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறியிருப்பதைப் போல் ''பழைய ஐரோப்பாவிற்கு'' எதிராக ''புதிய ஐரோப்பா'' போராட்டம் செய்வதை ஆதரிப்பதாக அமையும்.

ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மூலம் இக் கண்டத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திவிட முடியும் மற்றும் சோவியத் விஸ்தரிப்பை எதிர்த்து நிற்கமுடியும் என்ற அமெரிக்காவின் பழைய கொள்கையை முறித்துக் கொண்டு, ஐரோப்பா அரசியல் ரீதியில் பிளவுபட்டு நின்று அமெரிக்க வலிமைக்கு கடுமையான எதிரியாக மாறிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவாக, வாஷிங்டனில் ஆதிக்கம் செலுத்துபவர்களது குரலைத்தான் பிளேயர் எதிரொலிக்கிறார். பிளேயர் விரும்புகிற ஆதரவை பிரிட்டன் மற்றும் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து வென்றெடுக்க வேண்டும். ஆனால், நீண்டகாலப் போக்கில் இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான விரோதப் போக்குகளை எந்த வகையிலும் குறைக்காது.

ஈராக் நெருக்கடியின் தாக்கம்

அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையிலும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலும் நிலவிவந்த பதட்டங்கள் ஈராக் ஆக்கிரமிப்பின் போது வெளிப்பட்டதோடு, மேலும் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பினால் மோசமான கடினங்களை சந்திக்க நேரிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு தேசிய அளவில் எதிர்ப்புக்கள் வலுத்துக்கொண்டு வருவதுடன், சித்தரவதை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முறைகேடுகள் என்பன அம்பலத்திற்கு வந்துள்ளதால் நிலவரம் மேலும் மோசமடைந்து கொண்டே போகிறது. இது வாஷிங்டன் பின்வாங்கும் என்பதற்கான சமிக்கையல்ல. மாறாக, மத்திய கிழக்கை அடிமைப்படுத்த வேண்டுமென்ற அதன் முயற்சிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதில் புஷ் நிர்வாகம் உறுதியாக உள்ளது. அதற்கு ஜனாநாயகக் கட்சிக்காரர்களின் முழு ஆதரவும் இருக்கிறது. முதலில் அவர்கள் பிரிட்டன் மேலதிகமாக ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பவேண்டுமென்றும், அதே போன்று ஐரோப்பிய வல்லரசுகளும், ஐ.நா. வும் ஜூன் 30 அன்று வாஷிங்டனின் பொம்மை ஆட்சிக்கு ''இறையாண்மையை மாற்றித் தருவதாக'' கூறப்படுவதை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.

ஈராக், இரண்டாவது வியட்நாமாக மாறிக்கொண்டிருக்கும் சச்சரவு சிக்கலில் சம்மந்தப்படுவதற்கு ஐரோப்பாவில் தயக்கம் அதிகரித்து வருகிறது. இந்த தயக்கம் வலுப்பெறும் வகையில் வாஷிங்டனின் மற்றொரு பிரதான ஐரோப்பிய கூட்டணியான ஸ்பெயினின் ஜோஸ் மரியா அஸ்னர் அந்நாட்டு மக்களது போரெதிர்ப்பு உணர்வுகளால் தோல்வியடைந்தார்.

ஸ்பெயினின் புதிய சமூக ஜனநாயக அரசாங்கம் ஈராக்கிலிருந்து தனது துருப்புக்களை விலக்கிக் கொள்வதாக அறிவித்ததும் அமெரிக்க ஊடகங்கள் மிகக்கடுமையாக ஸ்பெயின் மக்களை அவதூறு செய்கிற வகையில், அவர்களை ''கோழைகளென்றும்'' பயங்கரவாதிகளை ''திருப்திப்படுத்துபவர்கள்'' என்றும் கண்டனம் செய்தன.

தனது நெருக்கடிகளுக்கு பதிலளிக்கின்ற வகையில் அமெரிக்கா ஒவ்வொரு முனையிலும் கண்மண் தெரியாத தாக்குதலைத் தொடுத்து வருகிறது. ஈராக்கில் பொது மக்களுக்கு எதிரான பலாத்கார அடக்குமுறையை முடுக்கிவிட்டிருக்கிறது. மேலும், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் நடுநிலை முயற்சிகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டாக நடத்தப்பட்ட உடன்பாட்டு பேச்சு உருவாக்கப்பட்ட ''சாலை வரைபடம்'' என்றழைக்கப்படும் சமாதான உடன்படிக்கையை கிழித்தெறிந்துவிட்டு, மேற்குக்கரையின் மிகப்பெரும்பாலான நிலத்தை தன்னிச்சையாக கைப்பற்றிக் கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனின் திட்டத்தை முழுமையாக ஆதரித்திருக்கிறார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் பிளேயரின் சங்கடங்களை தீவிரப்படுத்திய போதிலும், என்னவிலை கொடுத்தாலும் வாஷிங்டனுடன் தனது கூட்டணியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் இருக்கிறார். பிளேயர், நிதி ஒரு சிலர் ஆட்சியின் (Financial oligarchy) அரசியல் சேவகராக ஆகிவிட்டார். அவர்களில் முர்டோக் மிகவும் செல்வாக்கு படைத்த பிரநிதியாவார். இந்த தட்டினர் ஐரோப்பாவுடன் வர்த்தகம் செய்வதை, உலகம் முழுவதிலும் உள்ள வளங்களை சுரண்டுகின்ற தங்களது ஆற்றலுக்கு அடுத்தபடியாக கருதுகின்றனர். அவர்கள், அமெரிக்காவின் இராணுவ வலிமையை இந்த பூகோளத்தை சுரண்டுவதற்கான உத்திரவாதமாக எடுத்துக் கொள்வதுடன், அமெரிக்காவின் பொருளாதார முன்மாதிரியான கட்டுத்திட்டமற்ற சுதந்திர நடைமுறைகளையும், நலன்புரி சேவைகள் இல்லாத நிலைமையையும் தங்களது வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்கின்றனர்.

இந்த ஆளும் தட்டினரைச் சார்ந்தவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் திட்டவட்டமான அக்கறை குறித்தும், பிரிட்டனின் நிதியாதிக்க வலுவைப்பற்றியும் கவலையடைந்துள்ளனர்: அமெரிக்காவில் மிகப்பெருமளவிற்கு முதலீடு செய்துள்ள நாடு பிரிட்டன் ஆகும். அது வரி விதிப்புக்களைப் பொறுத்தவரை ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. டாலருக்கு மாற்றாக இரண்டாம் நிலை நாணயம் பிரிட்டிஷ் பவுன்ட் ஆகும். மேலும் பிரிட்டனின் புவியியல் அரசியல் நலன்களும், பூகோள தன்மை கொண்டவையாகும். ஆகவே, அமெரிக்கா தலைமையில் பிரதானமாக மறு பங்கீடு செய்யப்படும் உலகில், குறிப்பாக எண்ணெய் வளம்மிக்க மத்திய கிழக்கிலும், யூரேஷியாவிலும் பிரிட்டன் ஒதுக்கித்தள்ளப்படுவதை அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவேதான் பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்திற்குள் இந்த அமெரிக்க ஆதரவு பிரிவு மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்கள், ஐரோப்பிய முதலாளித்துவம் ஓரே சீராக பலம் பெறுவதை ஒரு அரசியல் அச்சுறுத்தலாக கருதுகின்றனர். அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய செயற்திட்டத்தில் ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அம்சம் என்னவெனில், மூலதனம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சுதந்திரமாக கொண்டு செல்லப்படுவதற்கு வசதியாக, தொழிலாளர் சந்தைகளில் உள்ள நெறிமுறைகளின் எல்லாத்தடைகளும் நீக்கப்பட்டு, அந்த வகையில் தொழிலாள வர்க்கத்தை மிகப்பெருமளவில் சுரண்டுவதற்கு உத்திரவாதம் செய்துதரப்படவேண்டும் என்பதுதான். ஆதலால், அரசியல் அடிப்படையில் ஒற்றுமையில்லாத ஐரோப்பாவில் அவர்கள் ஒரே சந்தையை விரும்புகின்றனர். ஆகவே, பிளேயர் இதனை செய்துதராவிட்டால் அவர்கள் அவரை புறக்கணித்துவிட்டு டோரிக்களை முன்னிறுத்தி அவர்களுக்காக குரல் கொடுப்பார்கள்.

இந்தக் காரணத்தினால்தான் பிளேயர் தனது வாஷிங்டன் கூட்டணிக்கு எதிராக வருகின்ற எல்லா எதிர்ப்புக்களையும் உறுதியாக சமாளித்து வருகிறார். அவரது பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பதைப்போல்: ''அமெரிக்காவிற்கும் நமக்கும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன-----அவ்வகை விருப்பம் ஊடகங்களில் வெளிப்படுகிறது..... நாம் அப்படி நடக்க அனுமதிக்கப் போவதில்லை''.

இந்த ஒரு சிலர் ஆட்சியை (Oligarchs) பகைத்துக்கொள்ள பிளேயர் ஒன்றும் செய்யமாட்டார். ஏனென்றால் அவரது கொள்கைகளுக்கு வேறு எந்த அடித்தளமுமில்லை. உண்மையிலேயே மிகப்பெரும் பணக்காரர்களின் கோரிக்கைகளை அரசாங்கத்தின் கொள்கையாக மாற்றுவதற்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பன, மிகப்பரவலான உழைக்கும் மக்களிடமிருந்து அவரது அரசாங்கத்தை மிக ஆழமாக தனிமைப்படுத்திவிட்டது.

அத்தோடு, ஈராக் நிலவரம் மோசமடைந்து கொண்டுவருவதால் பிளேயரின் செல்வாக்கு இழப்பு மேலும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவரை மிகுந்த ஆர்வத்தோடு ஆதரித்து, அவரது தயவை நாடிநிற்பவர்கள்கூட அவரது மூலோபாயத்தின் ஞானத்தையும், பிரதமர் என்கிற முறையில் அவரது எதிர்காலத்தையும் பகிரங்கமாக சந்தேகிக்கத் தொடங்கிவிட்டனர். தொழிற்கட்சி மூன்றாவது முறையாக பொதுத் தேர்தலில் வெற்றி பெறுமானால் இன்றைய அமைச்சர்களிலேயே ஒரு சிலர்தான் டோனி பிளேயரை மீண்டும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மூர்க்கமான டோனி பிளேயர் ஆதரவு தீவிர பத்திரிகையான கார்டீயனின் பொலி டோனிபீ (Polly Toynbee) என்பவர், தனது கட்டுரை முடிவில் ''நல்ல செய்தி எந்த வானத்திலும் பூமியிலுமில்லை, ஈராக்கிலுமில்லை, அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லை..... பிளேயர் ஏதாவது ஒரு சிக்கலை எடுத்துக்கொள்கிறார் என்றால் அதற்கு தீர்வு காண்பதைவிட அந்தப் பிரச்சனையின் ஓர் அங்கமாகவே அவர் கருதப்படுகிறார்'' என்று எழுதியுள்ளார்.

ஐரோப்பாவின் எதிர் விளைவு

புஷ் நிர்வாகத்தோடு அளவிற்கு அதிகம் நெருக்கமாக பிளேயர் இணைந்து கொண்டிருப்பதால், பிரிட்டனின் நலன்களுக்கு அவர் ஆபத்தை உண்டாக்கிவிட்டார் என்று கணிப்பவர்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது. பிரதமர் தற்போது வாஷிங்டனிலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு தனித்து நின்று அமெரிக்காவின் தன்னிச்சைப்போக்கை கட்டுப்படுத்துகிற முயற்சியில் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் புதிய ஸ்பெயின் அரசாங்கம் எடுத்துள்ள மிகவும் கண்டிக்கிற நிலைப்பாட்டோடு தன்னை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

தெரிவிக்கப்படுகின்ற கவலைகளின் அளவு எப்படியிருந்தாலும் அத்தகைய முறையீடுகளில் ஓரளவிற்கு மலட்டுத்தன்மையும் நம்பிக்கையிழந்தபோக்கும் காணப்படுகிறது. ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆலோசனை கூறுபவர்கள் அமெரிக்க நிர்வாகத்தின் படுமோசமான அத்துமீறல்களை கட்டுப்படுத்தவும் ஓரளவிற்கு மட்டுப்படுத்தவும் உதவும் என்று கருதுகின்றனர். வாஷிங்டனின் மேலாதிக்கத்தை கடுமையாக எதிர்த்து நிற்பதற்கு ஐரோப்பிய அரசுகளிடம் விருப்பமோ அல்லது அதற்கான ஆற்றலோ இல்லை. எனவே ஐரோப்பாவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது ஓரளவிற்கு மட்டுப்படுத்தும் முயற்சியாக அமையுமே தவிர வேறு ஒன்றும் செய்துவிட முடியாது. பிளேயருக்கு பதிலாக மற்றொரு தலைவரென்ற சாத்தியக்கூற்றை எழுப்புபவர்கள்கூட, இதற்கான மாற்று சான்சலர் கார்டொன் பிரவுன் (Gardon Brown) தான் என்பதில் கருத்து ஒற்றுமையுடன் உள்ளனர். தனது சொந்த முறையில் யூரோவிற்கு எதிரான பகட்டாரவார உரைகளை ஆற்றிவரும் இவர், முர்டோக்குடன் பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கு குறித்து இதுவரை ஏதாவது ஒருவகையில் அமெரிக்காவுடன் அனுசரித்துப் போகவே விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியமானது, புஷ் மற்றும் ஷரோனின் மேற்குக்கரை தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், ஈராக்கில் ஐ.நா அமைப்பு மூலம் ஏதாவது ஒருவகையில் உடன்பாடு காணவேண்டுமென்று தீவிரமாக முயன்றும் வருகிறது. அமெரிக்க இராணுவவாதத்தை பொறுத்தவரை பிளேயர் மட்டுமே அதிகளவில் நிரந்தரமாக சமாதான போக்கில் செல்பவராக இருக்கின்றார். ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனாவோடு சேர்ந்து அமெரிக்காவின் மிகப்பிரமாண்டமான கடன் சுமைகளை தாங்கிக்கொள்ள தொடர்ந்து முயன்று வருகின்றது. அது, அமெரிக்கா மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை அல்லது எதிர் நடவடிக்கை எடுக்கப்போவதாக ஒருமுறை கூட அச்சுறுத்தலை வெளியிடவில்லை.

இது ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு மூலோபாய அடிப்படையிலான இருதலைக்கொள்ளி நிலையை உருவாக்கியுள்ளது. வாஷிங்டனுக்கு காட்டப்படும் ஒவ்வொரு சலுகையும், அதன் கோரப்பசியை கிளறிவிடவே செய்கிறது. எனவே, ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் முழுமையாக சரணாகதி அடைவதற்கு பதிலாக ஐரோப்பா கண்டத்தை ஒருங்கிணைத்து தனது சொந்த இராணுவ வலிமையை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதுதான் இவர்களது சாத்தியமான எதிர் நடவடிக்கையாக உள்ளது.

வரைவு ஐரோப்பிய ஒன்றிய அரசியல்யாப்பு, திட்டவட்டமாக ஐரோப்பா முழுவதையும் அமெரிக்காவிற்கு ஒன்றுபட்ட பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ வலிமைகொண்ட ஒரு சவாலாக உருவாக்குவதையே வலுப்படுத்தும் ஒரு முயற்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. யூரோ மண்டலத்தில் பணக் கொள்கையை வகுப்பதற்கு மற்றும் பொருளாதார வேலைவாய்ப்பு, மற்றும் சமூகக் கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பாத்திரத்தின் மீதாக "தனி அதிகாரத்தை" ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அந்த வரைவு முன்மொழிவுகள் வழங்குகின்றன. பெரும் வர்த்தகர்களுக்கு வரிச் சலுகைகளையும் ஏனைய ஊக்கத் தொகைகளையும் வழங்கும் பொருட்டு, சமூக நலத் திட்டங்களில் பெரும் தாக்குதல்களுக்கான ஒரு வழிமுறையாக இது இருக்கும்.

சர்வதேச அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் நகல் அரசியல் யாப்பானது, வெளியுறவு மற்றும் ''பொதுவான பாதுகாப்புக் கொள்கையை உருவாக்குவதுடன், அது இறுதியில் பொதுவான பாதுகாப்பாக உருவாவது'' என்பனவற்றை அடிப்படைகளாகக் கொண்டுள்ளது. மற்றும், அமெரிக்கா மற்றும் நேட்டோவிலிருந்து தனித்து சுதந்திரமாக சொந்த இராணுவக் கட்டுப்பாட்டு தலைமையோடு இயங்குவது மற்றும் தனி வெளியுறவு அமைச்சரோடு செயல்படுவது என்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டதாகவும் அது உள்ளது.

இந்த அம்சத்தைத்தான் பிளேயரும், பிரவுனும் எதிர்க்கின்றனர். வரிவிதிப்பு மற்றும் நிதிக்கொள்கையில் தேசிய இரத்து செய்யும் (national veto) உரிமைக்கு உத்திரவாதம் செய்துதராத எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியாது என்றும், வெளியுறவுக் கொள்கை, சமூகப் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஏற்பாடுகளில் பொதுவான நிலைப்பாட்டை முடிவு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உரிமை எதுவுமில்லை என்றும், இந்த இருவரும் கூறுகின்றனர். ஜேர்மனியும், பிரான்சும் அத்தகைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் யாப்பை அது சின்னாபின்னமாக்கிவிடும். எனவேதான் பாரிசும், பேர்லினும் பிளேயரின் பொதுவாக்கெடுப்பு முடிவிற்கு ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. பிளேயர் தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொள்வதற்கு முன்னரே கூட இருவழி ஐரோப்பா என்ற யோசனை எழுப்பப்பட்டது. அது ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தலைமையில் அமைக்கப்படும் ஐரோப்பா கண்ட விருப்பக் கூட்டணியாகும். அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளாத, அங்கீகரிக்காத நாடுகள் விலக்கி வைக்கப்படும். பிளேயரை சந்தித்தபின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் யாப்பை ''அங்கீகரிக்க வேண்டும் அல்லது விலகிக்கொள்ள வேண்டும்'' என்ற நிபந்தனையை சேர்த்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறு பற்றி குறிப்பிட்டார்.

அமெரிக்காவோடு நேரடியாக மோதல் போக்கை உருவாக்க அச்சுறுத்தம் வழிமுறையை ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் எந்த அளவிற்கு முன்னெடுத்துச் செல்லும் என்பது சந்தேகத்திற்கு உரியது. இறுதி ஆய்வில், உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடாத்தும்போது தங்களது கரத்தை வலுப்படுத்திக்கொண்டு, உலக சந்தைகள் மற்றும் ஆதார வளங்களுக்காக கடும் முயற்சிபோட்டு அதிக பங்கைப் பெறுவதுதான் அவர்களது நோக்கமாக உள்ளது.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக

வாஷிங்டன் தலைமையில் நடைபெற்றுவரும் இராணுவவாதம் மற்றும் காலனித்துவ படையெடுப்புக்களை எதிர்த்து நின்று சமூக வெற்றிகளையும், ஜனநாயக உரிமைகளையும் தற்காத்து நிற்பதற்கு ஒரே அடிப்படை ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஒருங்கிணைந்த அரசியல் தாக்குதலை நடத்துவதுதான் ஆகும். தொழிலாளர்களது வாழ்க்கைத் தரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் சிதைப்பதற்கான விருப்பம்தான், முதலாளித்துவ வர்க்கத்தின் எல்லாப் பிரிவுகளும் பகிர்ந்துகொள்ளும் ஒரு குறிக்கோள் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தை அதிக உற்சாகத்தோடு ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, ஐரோப்பிய நாடுகளில் இன்னமும் பரவலாக நடைமுறையிலுள்ள நலன்புரி உதவித் திட்டங்களை ஒழித்துக்கட்டுவதில் உடன்படுகின்றனர். அத்துடன், அரசு துறைகளில் தனியார்மயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லாக் கட்டுப்பாடுகளையும் நீக்குதல் என்பனவற்றில் இருதரப்பினருமே ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

இந்த வகையில்தான்அதிபர் ஷரோடர் ஜேர்மனியின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை 2010 வாக்கில் முற்றிலுமாக திருத்தி அமைக்கப்போகிறார். ஐரோப்பா முழுவதிலும் ஓய்வூதியங்களையும், இதர சமூக நலன்களையும் துடைத்துக் கட்டுவதற்கான முயற்சிகளுக்கு மிகப்பெருமளவில் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப்பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்திருப்பது --இங்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தரப்படுகின்ற ஊதியங்ளை விட ஐந்தில் ஒரு பங்கு ஊதியம்தான் கிடைக்கிறது, சமூக நலன்புரி இல்லை, கம்பெனி வரிகள் மிகக்குறைவு-- ஐரோப்பா முழுவதிலும் இதுபோன்ற ஊதியங்களை மற்றும் வேலை நிலைமைகளை கொண்டுவர பயன்படுத்தப்படுவதற்காகும். இந்த இணைப்பு, சம்பள வெட்டுக்கள், வேகம் அதிகரிப்பு மற்றும் வேலை இழப்புக்கள் இவற்றை ஏற்கவில்லை என்றால் வேற்றிடங்களுக்கு மாறுவது என்று அச்சுறுத்தும் பெரும் கார்ப்பொரேஷன்கள் மற்றும் அரசாங்கங்களின் ஒன்றிணைந்த தாக்குதல்களை தொடங்கி வைக்கும். முன்னர் ஸ்ராலினிச ஆட்சிகளால் ஆளப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலையை சமப்படுத்துவதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்களது நிலைமைகள் மட்டம் செய்யப்படுவதைக் காண்பார்கள்.

பிரிட்டன் தொழிலாளர்கள் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலுமுள்ள தமது சகோதர, சகோதரிகளுக்குமிடையிலான பிளவுகளை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளையும் எதிர்த்து நிற்க வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளேயே ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்ப்பவர்கள் ஜனநாயக வேடம்போட்டு, தேசபக்தி ஆவேசமூட்டி தொழிலாளர்களை குழப்பவும், ஏமாற்றவும் முயலுவார்கள். இதில் ஓரளவிற்கு அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஏனென்றால் யூரோ பொது நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் விலைவாசி மிகப்பெருமளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால், அவர்களது பாதை ஜனநாயகத்தை நோக்கி செல்வதல்ல. மாறாக, வாஷிங்டனுடன் கூட்டணி சேர்ந்து மற்றும் சூறையாடும் ஒரு சிலர் ஆட்சி (Oligarchy) சார்பில் போருக்கும், அடக்குமுறைக்கும் இட்டுச்செல்வதுதான் அவர்களது வழியாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்போக்கான ஒரு மாற்றாக, அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் தொடர்புடைய சுதந்திர சந்தை முன்மாதிரிக்கும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் ஒரு தடுப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் இருக்க முடியும் என்பதில் எந்தவிதமான நம்பிக்கையையும் வைத்தல் சமமான வகையில் தவறாகவே இருக்கும்.

ஐரோப்பிய ஒருங்கிணைப்பு என்பது பெரும்பாலான அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதைப் போன்று, பொருளாதார தர்க்கவியலுடன் இசைந்து கிளம்பும் தவிர்க்க முடியாத புறநிலை நிகழ்ச்சிப் போக்கு அல்ல. தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய ஒன்றிய திட்டம் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்கப் பிரிவுகளின் பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளை அடிப்படையாகக்கொண்டு முடிவு செய்யப்பட்டதாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேலாதிக்கம் செய்த பிரிவுகள், உள்நாட்டில் ஒப்பீட்டளவில் சமூக அமைதி மற்றும் அமெரிக்காவுடன் நட்புறவு அடிப்படையில் போட்டி என்ற நிலைமையின் கீழ் இந்தத் திட்டத்தை முற்போக்கானது மற்றும் நன்மை தருவது என்று கருதியது. ஐரோப்பாவை இரண்டுமுறை ஒட்டுமொத்த போரில் ஈடுபடுத்திய பயங்கரமான தேசிய பிரிவினைகளிலிருந்து விடுபட்டு, ஐரோப்பாவின் சமூக முன்னேற்பாடுகளின் விரிவான வலைப்பின்னலை அபிவிருத்தி செய்வதற்கான அடிப்படையை வழங்கும் ஒரு பெரிய மற்றும் திறமான சந்தையை உருவாக்குவதன் மூலம், மிகப்பரவலான அடிப்படையில் பொருளாதார வளர்ச்சிக்கு உத்தரவாதம் செய்யும் வழிமுறையாக இந்த திட்டம் சித்தரிக்கப்பட்டது.

ஆனால், தற்போது அது மங்கிவிட்ட நினைவாக ஆகிவிட்டது. முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பிய ஒற்றுமை என்பது மிக வலுவான ஏகாதிபத்திய அரசுகள் ஐரோப்பா கண்டத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதாக அமையும். இன்னமும் அதன் நோக்கம் மிகப்பரவலான உள்நாட்டு சந்தையை உருவாக்குவதுடன், பெரிய கம்பெனிகள் ஐரோப்பிய மக்களை சுரண்டுவதற்கான எல்லாக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

"சமூக ஐரோப்பா" எனும் பழைய பாசாங்கு போலியானதைப் பறைசாற்றினால், இப்போது நேட்டோ மற்றும் ஐ.நா கட்டுக்கோப்பிற்குள் முற்றிலும் தற்காப்பு கொள்கையை மேற்கொள்வது என்பதும் வெறும் கூப்பாடுதான். சோவியத் ஒன்றியம் சிதைந்ததால், இராணுவமயம் குறைந்துவிட வில்லை, மாறாக அதிகரித்திருக்கிறது. அமைதிவாதத்திற்கான வேண்டுகோள்கள் என்பன உலக மக்கள் மீது மீண்டும் காலனிய பாணியில் அடிமைப்படுத்தலை நிலைநாட்ட முயன்றுவரும் அமெரிக்காவின் பிரச்சாரத்தில், குறைந்தபட்சம் அமெரிக்காவின் இளைய பங்குதாரர் ஆகும் பாத்திரத்தை கருதிக் கொள்ளும் வண்ணம், ஐரோப்பா தனது சொந்த இராணுவ வலிமைகளை பெருக்கிக்கொள்வதற்கான முயற்சிக்கு வழி விட்டிருக்கிறது.

ஐரோப்பாவை முற்போக்கான முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வலுவான அமைப்பாக ஒன்றுபடுத்துவது என்பது அடிமட்டத்திலிருந்து வர வேண்டும். பெரிய வங்கிகள், மற்றும் கம்பெனிகளைக்கொண்ட ஐரோப்பாவிற்கு மாற்று தேசிய அளவில் தனிநாடு என்று குறுகிய வட்டத்திற்குள் ஒருங்கிக்கொள்வதல்ல. ஆனால், ஐரோப்பா முழுவதற்கும் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும். அந்த அரசியல் இயக்கமானது, புரட்சிகர சோசலிசக் கொள்கை அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தினது அடிப்படை சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும்.

மேலும் காலனியாதிக்கப் போர்கள், சமுதாய சீரழிவுகள் போன்ற படுபயங்கர விளைவுகளிலிருந்தும், முதலாளித்துவ ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகின்ற வலதுசாரி பிற்போக்குத்தன அச்சுறுத்தலில் இருந்தும் மக்களை காப்பாற்றுவதற்கு ஒரு சாத்தியமான மாற்று வழி ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் ஆகும்.

ஆகவே, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறிபோக்கிற்கான எதிர்ப்பு என்பது, ஐரோப்பிய அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அணி திரட்டுவதன் மூலம்தான் எதிர்ப்பை காட்ட முடியுமென்று கசப்பான அனுபவம் காட்டுகிறது. ஏனெனில் ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் அதன் அமைப்புக்களுக்கு தங்களது சொந்த சூறையாடும் இராணுவ அபிலாஷைகள் உண்டு. ஒரு புறம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும் மற்றொரு பக்கம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் அணிதிரண்டு நிற்பதற்கும் இடையே சமசரம் காணவியலாத மோதல் போக்கை உணர்ந்து ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் தங்களது சக்திகளை திரட்டியாக வேண்டும்.

சோசலிச மற்றும் சர்வதேசிய முன்நோக்கு என்பது, உழைக்கும் மக்களுக்கு ஒரு புதிய தலைமை தேவை என்பதைக் காட்டுகின்றது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளான பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியும், அதனது சகோதர ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (PSG) அத்தகைய தலைமையை ஐரோப்பா முழுவதிலும் உருவாக்குவதற்கு அற்பணித்துக் கொண்டுள்ளன. ஆகவே, இந்த முன்னோக்கு அடிப்படையில் வரவிருக்கின்ற ஐரோப்பிய தேர்தல்களில் PSG நடத்தும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறு நாங்கள் எங்களது வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Top of page