World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq's new prime minister, the CIA and their record of terrorist bombings

ஈராக் புதிய பிரதமர், CIA உம் பயங்கரவாத குண்டுவீச்சுகளில் இவர்களது சான்று

By Peter Symonds
17 June 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் புதிய பிரமதர் அயத் அல்லாவி பற்றி சென்றவாரம் நியூயோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட கட்டுரையில், புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' மற்றும் ஈராக்கிற்கு ஜனநாயகத்தை கொண்டுவருவதாக கூறும் அதன் கூற்றின் பாசாங்கை மீண்டும் ஒருதடவை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக அயத் அல்லாவி இழிந்த வரலாற்றைக் கொண்டவர். அவர் பணக்கார ஷியிட்டு குடும்பத்தின் மகனாவார், அயத் அல்லாவி பாக்தாத்தில் தசாப்தங்களுக்கு மேலாக பாத் கட்சியில் தீவிரமான ஆதரவாளராவார். 1975ம் ஆண்டு இலண்டனில் இருக்கும்போது அவர் கட்சியிலிருந்து விலகி, சதாம் ஹூசைன் ஆட்சியின் எதிரிகளில் ஒருவரானாதுடன், மற்றும் CIA மற்றும் M16 உட்பட பல்வேறு புலனாய்வு அமைப்புகளோடு நீண்ட ஒத்துழைப்பவராக மாறினார். வாஷிங்டன் தனது முன்னாள் நண்பர் ஹூசைனை பகைத்துக்கொண்டு 1990இல் முதலாவது வளைகுடாப்போரை ஆரம்பித்த நேரத்தில் கிடைக்கின்ற புதிய வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வத்றகாக இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் உட்பட பெரும்பாலும் பாத்திஸ்ட் அதிருப்தியாளர்களை கொண்டு, அல்லாவி ஈராக் தேசிய உடன்பாடு (INA) என்ற தனது கட்சியை ஸ்தாபித்தார்.

ஈராக் தேசிய உடன்பாடும், அல்லாவியும் இவை அனைத்தையும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். CIA மற்றும் இதர புலனாய்வு சேவைகளோடு தொடர்பு கொண்டிருந்ததற்காக தான் வெட்கப்படவில்லை என்று அவர் அண்மையில் அறிவித்திருந்தார். ஆனால் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை என்னை அம்பலப்படுத்துகிறது என்றால் அல்லாவியும், ஈராக் தேசிய உடன்பாடு வும், CIA கட்டளைப்படி ஹூசைன் ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக ஈராக்கிற்குள் 1990 களின் ஆரம்பத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கார் குண்டு வெடிப்புக்கள் மற்றும் இப்போது அல்லாவியும், அமெரிக்காவும், ''பயங்கரவாத தாக்குதல்கள்'' என்று கண்டிப்பது போன்ற நடவடிக்கைகளில் அப்போது அவர்கள் ஈடுபட்டனர்.

இந்தக் கட்டுரைக்கு செய்தி மூலங்களில் மிகப்பெரும்பாலானவர்கள், பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளாவர். அவர்களது தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் இருந்தாலும், புஷ் நிர்வாகம் அல்லது அல்லாவி அந்த தகவல்களில் காணப்படுகின்ற உண்மைகளை இதுவரை மறுத்து அறிக்கை தெளிவாக வெளியிடவில்லை. 1992க்கும், 1995க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈராக் தேசிய உடன்பாடு குண்டுவீச்சுக்களை நடத்தியிருக்கிறது. வடக்கு ஈராக்கில் ''விமானங்கள் பறக்காத'' மண்டலமென்று அமெரிக்கா விதித்த கட்டுப்பாட்டுப் பகுதியின் வழியாக கடத்தப்பட்ட வெடிப்பொருட்களை பயன்படுத்தி இந்த குண்டுவீச்சுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, 1990களில் அந்தப் பகுதி CIA சதிச்செயல்களின் மையமாக விளங்கி வந்தது.

அப்போது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் மாண்டுவிட்ட குடிமக்கள் எண்ணிக்கையை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் குறைத்தே மதிப்பிட்டனர். ஈராக்கிலிருந்து நாடுகடத்தப்பட்ட குழுக்களோடு பணியாற்றிய CIA முன்னாள் அதிகாரி Robert Baer ''ஒரு பள்ளிக்கூட பேருந்து சிதைவதற்கு'' காரணமாக இருந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்தை நினைவுபடுத்தி தகவல்தந்தார். அதில் பள்ளிப் பிள்ளைகள் கொல்லப்பட்டார்கள்.'' அந்த குண்டு வெடிப்பிற்கு ஈராக் தேசிய உடன்பாடு தான் காரணமா? என்பதில் தமக்கு உறுதியாக எதுவும் தெரியாது, என்று அவர் குறிப்பிட்டாலும், இதர புலனாய்வு அதிகாரிகள் நியூயோர்க் டைம்ஸிற்கு பேட்டியளிக்குப்போது அந்த நேரத்தில் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரே அமைப்பு ஈராக் தேசிய உடன்பாடு தான் என்று குறிப்பிட்டனர்.

பிரித்தானியாவை தளமாக கொண்ட இண்டிபென்டன்ட் செய்திப்பத்திரிகை 1997ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையை நியூயோர்க் டைம்ஸ் மேற்கொள் காட்டியுள்ளது, ஈராக் தேசிய உடன்பாட்டின் தலைமை குண்டு தயாரிப்பவர் என்று தன்னைக் கூறிக்கொண்ட Abu Amneh al-Khadami ஒளிப்பதிவு பேட்டியை அடிப்படையாகக் கொண்டு அந்த பிரிட்டிஷ் பத்திரிகை அப்போது கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்த ஒளிப்பதிவு பேட்டி விவரங்கள் பின்னர் Patrick மற்றும் Andrew Cockburn இருவரும் வெளியிட்ட'' சதாம்: அமெரிக்காவால் ஆட்டுவிப்பவர்'' ("Saddam: An American Obsession,") என்ற நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவரங்கள் ஈராக் தேசிய உடன்பாடு

ஈடுபாட்டிற்கான கூடுதல் சான்றுகளாகும்.

''1994 மற்றும் 1995ல் பாக்தாத்தை சுற்றி அதிர்ச்சியை ஏற்படுத்திய குண்டு வெடிப்புகளுக்கு எவரும் எப்போதும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. திரையரங்கில் ஒரு குண்டுவெடித்தது, மற்றொன்று மசூதியிலும் வெடித்தது. பாத்கட்சி செய்திப்பத்திரிகையான al-Jourmoriah அலுவலகங்களுக்கு வெளியில் கார் குண்டுவெடிப்பு நடந்தபோது வழிப்போக்கர்களில், நிறைய பேர் காயமடைந்தனர் ஒரு குழந்தை கொல்லப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்த குண்டு வீச்சுக்களால் நூறு குடிமக்கள் வரை மடிந்தனர்''.

அந்த நூலில் எப்படி ஈராக் தேசிய உடன்பாடு தலைவர், முன்னாள் ஈராக் இராணுவத் தளபதி அட்னன் நூரி (Adnan Nuri) குண்டுவீச்சுக்களுக்கு திட்டமிட்டார்? என்று விவரிக்கப்பட்டிருக்கிறது, அவரை Khadami குர்திஸ் சிறையிலிருந்து விடுவித்தார். Khadami தலைமையில் டசின் கணக்கானவர்கள் பணியாற்றி வந்தார்கள், ''நூரியை உசுப்பிவிட்டு உதவிய CIA ஆதரவாளர்களுக்கு தங்களது அமைப்பின் செயல்பாட்டு வீச்சு எந்தளவு செல்கிறது என்பதை பணம் கொடுத்தவர்களுக்கு'' உணர்த்துவதற்காக இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு தான் திட்டமிட்டதாக அவர் கூறியுள்ளார். நூரியை சந்தேகிக்க தொடங்கியவுடன் Khadami ஒளிப்பதிவுபடம் எடுக்க ஆரம்பித்ததாக அந்த நூல் விளக்குகிறது. ஏற்பாடு செய்தவர்கள் போதுமான பணத்தையும், வெடிப்பொருட்களையும் தரவில்லை என்று Khadami புகார் கூறியது வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விவரங்களை சரிபார்ப்பதற்கு தற்போது எந்தவிதமான வழியுமில்லை என்றாலும் ஈராக் தேசிய உடன்பாடு, CIA இன் ஆசியோடு இந்த பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. 1990 களின் ஆரம்பத்தில் அல்லாவியோடு பணியாற்றிய ஒரு அமெரிக்க அதிகாரி நியூயோர்க் டைம்ஸிற்கு தகவல் தரும்போது ''அப்போது பாக்தாத்தில் நாசவேலைகள் நடத்தப்படவேண்டும் என்பதில் எவருக்கும் எந்தப் பிரச்சனையுமில்லை... எவரும் இன்றைய தினம் இப்படி நடக்கும் என்பதை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது என்று நான் கருதுகிறேன்'' என்று குறிப்பிட்டார்.

1996ல் ஹூசைனுக்கு எதிராக அல்லாவியும், ஈராக் தேசிய உடன்பாடும் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டன, அந்த முயற்சி படுமோசமாக தோல்வியடைந்தது. ஈராக் புலனாய்வு ஏஜெண்டுகள் ஈராக் தேசிய உடன்பாட்டின் வலைப்பின்னலில் ஊடுருவி அந்த திட்டம் பற்றி அறிந்துகொண்டு அந்த சதியில் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்டவர்களை கைதுசெய்தனர். அப்படியிருந்தாலும் அல்லாவியுடன், CIA தனது நெருக்கமான உறவுகளை நிலைநாட்டிவந்தது. அவர் M16 மற்றும் சவுதி அரேபிய புலனாய்வு மற்றும் ஜோர்டானோடு தனது உறவை நிலைநாட்டி வந்தார். ஜோர்டானில் ஈராக் தேசிய உடன்பாட்டிற்கு ஒரு அலுவலகமும், வானொலி நிலையமும் இயங்கி வந்தது.

பாக்தாத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பொம்மையாட்சியில் இடம்பெற்றுள்ளவர்களை போல் அல்லாவி வாஷிங்டனுக்கு ஆதரவு காட்டியதில் நீண்ட சான்றை கொண்டிருப்பவர், மற்றும் அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு நடத்தப்பட பரிந்துரை செய்தவர். ஆனால் அவர் பிரதமர் பதவிக்குரிய சிறப்புத்தகுதிகளில் ஒன்று 1990களின் ஆரம்பத்தில் அவர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் சம்மந்தப்பட்டிருந்தமை அடங்கும். தற்போது அமெரிக்க ஆக்கிரமிப்புப்படைகள் இடையறாத தாக்குதல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன, எனவே வாஷிங்டன் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆயுதந்தாங்கிய எதிர்ப்பை ஒழித்துக்கட்டுவதில் அல்லாவியின் நிரூபிக்கப்பட்டுவிட்ட கொடூரமான ஒடுக்குமுறை போக்கு அவசியமென்று கருதுகிறது. CIA இன் முன்னாள் ஆய்வாளர் Kenneth Pollack மிகுந்த இறுமாப்போடு நியூயோர்க் டைம்ஸிற்கு ''ஒரு திருடனைப் பிடிக்க இன்னொரு திருடனை அனுப்பு'' தெரிவித்திருப்பதைப் போல் உள்ளது.

தனது முன்னுரிமை நடவடிக்கைகளில் ஒன்றாக அல்லாவி ''பாதுகாப்பை'' தேர்ந்தெடுத்திருக்கிறார். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அவர் தெரிவிக்கும் ஒரே விமர்சனம் பாக்தாத்திலுள்ள சதாம் ஹூசைனின் அடக்குமுறை இயந்திரத்தை அமெரிக்காவின் ஆளுநர் Paul Bremer III கலைத்துவிட்டார் என்பதுதான். அமெரிக்காவிற்கும் அதன் உள்நாட்டு பொம்மை ஆட்சி பிரதிநிதிகளுக்கும் பரவலாக ஈராக்கில் எதிர்ப்பு நிலவுவதை நசுக்குவதற்கு ஒரு வழியாக தற்போது அல்லாவி மிக சுறுசுறுப்பாக பாத்திஸ்ட் ஆட்சியின் ஈராக் இராணுவ போலீஸ் மற்றும் புலனாய்வு சேவை அதிகாரிகளையும், கையாட்களையும் அரசுப்பணியில் சேர்ப்பதில் ஈடுபட்டிருக்கிறார்.

சென்ற வாரம் நடத்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்தில் ஈராக்கின் பாதுகாப்புப்படைகளை திரும்ப உருவாக்குவதற்கான திட்டங்களை விளக்கினார். தூக்கு தண்டனையை திரும்ப கொண்டுவருவது பற்றியும் குறிப்பிட்டார். ''உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பை M15 அல்லது FBI போன்று மறுசீரமைக்க வேண்டியது அல்லது கட்டியமைக்க வேண்டியது நமக்கு அவசியமாகும். ஏனென்றால் இது கைதுசெய்வதற்கும், புலனாய்வு செய்வதற்கும் அதிகாரம் படைத்தவை'' என்று கூறினார்.

இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. சென்ற டிசம்பரில், Allawi உம் மற்றொரு ஈராக் தேசிய உடன்பாட்டின் மூத்த உறுப்பினருமான Ibrahim al-Janabi உம் அமெரிக்காவிலுள்ள CIA தலைமை அலுவலகங்களுக்கு சென்று CIA டைரக்டர் ஜோர்ஜ் டெனட்டையும் இதர தலைமை அதிகாரிகளையும் சந்தித்து உள்நாட்டு புலனாய்வு சேவையை திரும்ப உருவாக்கும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். நியூயோர்க் டைம்ஸிற்கு Janabi கூறிய தகவலின்படி புதிய புலனாய்வு அமைப்பில் சதாம் ஹூசேனின் முன்னாள் உறுப்பினர்களான இழிபுகழ் பெற்ற இரகசியப் போலீஸான முக்காபரத்தை (Mukhabarat) சேர்த்துக்கொள்ளப்படும் என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்த இரகசிய போலீஸ் எண்ணிக்கையை Janabi குறைத்து கூறினாலும், முக்காபரத் உறுப்பினர்கள் மிக மதிப்புள்ள தொடர்புகளை வைத்திருக்கிறார்கள் அவர்களது அறிவும் அனுபவமும் பயன்தரும் என்று விளக்கினார்.

அதே நிகழ்ச்சியில், அல்லாவி Philadelphia Inquirer கட்டுரையாளருக்கு பேட்டியளித்தபோது ''நான் கடுமையானவன்'' என்று கூறினார். 10,000 போர் வீரர்கள் உள்ள, குறைந்த பட்சம் 5 பிரிவுகளை ஈராக் இராணுவத்தில் தான் உருவாக்கப்போவதாக குறிப்பிட்டார். ''முழு இராணுவப் பிரிவுகள் மீண்டும் வராது'' குறைந்தபட்சம் 40 முதல், 50 சதவீதம் பேர் இராணுவத்தினர் இருப்பார்கள், மத்திய தரப்பிலிருந்து அடிநிலைவரை மற்றும் கைதுசெய்யும் அதிகாரமுள்ள அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தையும் புஷ் நிர்வாகம் ஈராக்கில் ஜனநாயகத்தை ஸ்தாபிக்கப்போவதாக கூறிவருவதை எள்ளிநகையாடும் வகையில் அமைந்திருக்கின்றது. அமெரிக்காவிற்கு, விசுவாசமுள்ளவர் மிகக் கொடூரமானவர் என்று தெரிந்த ஒருவரை வாஷிங்டன் பதவியில் அமர்த்தியிருக்கிறது. அவருக்கு இடப்பட்டுள்ள கட்டளை என்னவென்றால் கிடைக்கின்ற வாய்ப்பு வசதிகளைப் பயன்படுத்தி விரோதம் கொண்ட மக்களை அச்சுறுத்தி எச்சரித்து பணியவைக்க வேண்டும் என்பதுதான். எனவே பழைய பாத் ஆட்சியின் சித்திரவதை செய்பவர், தூக்கிலிடுவோர் மற்றும் குண்டர்களை பணியில் சேர்க்க அவர் முயன்றுவருவது தற்செயலான ஒரு சம்பவமல்ல.

Top of page