World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US: Behind the AFL-CIO's call for a "a new labor code for Iraq"

அமெரிக்கா: AFL-CIO ''ஈராக்கில் புதிய தொழிலாளர் நெறிமுறைக்கு'' கோரிக்கை விடுக்கும் பின்னணி

By Jamie Chapman
11 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

AFL-CIO தலைவர் ஜோன் ஸ்வீனி (John Sweeney) ''ஈராக்கிற்கு புதிய தொழிலாளர் நெறிமுறை'' தேவை என்று ஜனவரி 22 ல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது இந்தக் கோரிக்கை நீண்ட காலத்திற்கு முன்னரே ஈராக் தொழிலாளர்களைப் பாதுகாக்க வந்திருக்க வேண்டியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், சதாம் ஹூசைன் ஆட்சியில் சந்தித்ததைவிட ஈராக் தொழிலாளர்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆக்கிரமிப்பின் கீழ் அதிக அளவிற்கு உரிமைகளை இழந்து தவிக்கின்றனர்.

வேலையில்லாத் திண்டாட்டம் 70 சதவிகித அளவிற்கு உயர்ந்திருப்பதால் தற்கால ஆணைய (Coalition Provisional Authority - CPA) அதிகார கூட்டணி கெடுபிடியையும் மீறி தெருக்களில் வேலை கோரி தொழிலாளர்கள் கண்டனம் செய்து வருகின்றனர். அத்தகைய ஆர்ப்பாட்டத் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். கண்டப்பேரணிகளை ஒடுக்குவற்காக ஈராக் போலீசாருக்கு உதவுகின்ற வகையில் சென்ற மாதத் தொடக்கத்தில் பிரிட்டன் துருப்புக்கள் அழைக்கப்பட்டபோது, அவர்கள் பேரணியில் கலந்து கொண்ட பலரை சுட்டுக்கொன்றனர்.

பணி கிடைத்திருக்கும் மிகப்பெரும்பாலோருக்கு மாதம் 60 அமெரிக்க டாலர்கள் மட்டுமே ''உடனடி'' ஊதியமாக தரப்படுகிறது. அவர்கள் அடிக்கடி 12 மணி நேரம் பணிமுறை மாற்றில் (shifts) பணியாற்றினாலும் மிகை நேரம் (overtime) படியில்லாமல் பணியாற்ற வேண்டியிருக்கிறது. CPA ஏற்கெனவே தொழிலாளர்களுக்கு தரப்பட்டு வந்த பாதி ஊதிய மிகை ஊதியங்களை (bonuses) ரத்து செய்துவிட்டது. பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் வழக்கமாக வேலையில்லாத பெரிய குடும்பங்களை காப்பாற்ற வேண்டியுள்ளது. விலைவாசிகள் நிரந்தரமாக உயர்ந்து கொண்டே போகின்றன.

அல் டோரா (Al Daura) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பாக்தாத் அருகில் உள்ளது. அதற்கு சென்று வரும் பார்வையாளர்கள் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தற்காப்புச் சாதனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். கனமான பாதுகாப்பான காலனிகள், கையுறைகள், கண்ணாடிகள் அவர்களுக்கு தரப்படவில்லை. சில நேரங்களில் அவர்கள் வெறும் கந்தல் துணிகளைக் கட்டிக்கொண்டு, வால்வுகளை திறக்கவேண்டியிருக்கிறது. இதே போன்று அடிப்படை பாதுகாப்பு எதுவுமில்லாமல்தான் ஈராக் முழுவதிலும் தொழிற்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே ஒரு தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டுவிடுமானால், அவர் மருத்துவ விடுப்பில் இருக்கும் காலத்திற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர் மருத்துவ உதவி வழங்கப்படுகிற அதிர்ஷ்டம் பெற்றிருப்பாரானால் தனது மருத்துவ செலவிற்காக அலைய வேண்டி இருக்காது. பணியாற்றும் இடங்களில் காயமடைந்துவிட்டால் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறை எதுவுமில்லை.

அமெரிக்க தொழிலாளர்களுக்காக வாதாடுவதாக கூறிக்கொள்ளும் ஒரு தொழிற்சங்க அமைப்பு, போரில் சிக்கித் தவித்துக் கொண்டுள்ள ஈராக் தொழிலாள வர்க்கத்திற்காக அவர்களது தற்காப்பிற்காக குரல் கொடுப்பது ஏற்புடைய செயல்தான். ஆனால் அத்தகைய சமிக்கை எதுவும் வரவில்லை. என்றாலும் AFL-CIO அதிகாரத்துவம் வழக்கமாக அமெரிக்க தொழிலாளர்களின் வேலை வாய்ப்புக்களை ''திருடிக்கொள்ளும்'' வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எதிராக ஓசை வெடிக்கிற தங்களது நேரத்தை, ஆற்றலை செலவிட்டு வருகிறது.

ஸ்வீனியின் அறிக்கையை ஆழமாக ஆராய்ந்தால், தொழிலாளர் ஒருமைப்பாட்டுக்கும் மேலாக ஏதோ ஒரு நோக்கத்துடன் AFL-CIO செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது. அவர் ஈராக்கை ஆக்கிரமித்துக்கொண்ட படையை அல்லது போரை, அல்லது ஈராக்கில் படுமோசமாக உள்ள பணி நிலைகளை, வாழ்க்கைத்தரத்தை கண்டிக்கவில்லை. மாறாக CPA நிர்வாகியான போல் பிரேமர் கடைப்பிடித்துவரும் கொள்கையை, சதாம் ஹூசைன் காலத்தில் 1987 ல் இயற்றப்பட்ட சட்டத்தை செயல்படுத்துவதை தனிமைப்படுத்தி விமர்சனம் செய்திருக்கிறார். 1987 ல் இயற்றப்பட்ட இந்தச் சட்டம் பொது நிறுவனங்களில் தொழிற்சங்கங்களுக்கு தடைவிதிக்கிறது. அத்தகைய பொது நிறுவனங்களில்தான் ஈராக் மக்களில் மிகப்பெரும்பாலோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த 1987 ஆம் ஆண்டு சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது, ஈராக் மக்களுக்கு ''ஜனநாயகத்தையும்,'' ''சுதந்திரத்தையும்'' மீட்டுத்தருவதாக அமெரிக்கா கூறியுள்ள மோசடியை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறதை கண்டிக்கத்தான் வேண்டும்.

இங்கே குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஸ்வீனி, ஈராக் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை நிலை நிறுத்த வரவில்லை. AFL-CIO ஈராக்கில் புகுந்து கொண்டு பெரும் அளவில் கட்டணத்தொகையை வசூலிக்க வகைசெய்யும் ஆலோசகராகவும், துணையமைப்பாளராகவும், அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆணையத்திற்கு பணியாற்றவே திட்டமிட்டிருக்கிறது.

ஸ்வீனி எழுதியுள்ள கடிதத்தில் அவரது உண்மையான நோக்கம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ''சர்வதேச தொழிற்சங்க இயக்கத்திலிருந்து பயிற்சி மற்றும் இதர ஆதரவுகளைப் பெறுவதை ஊக்குவிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கடிதத்தை ஸ்வீனி எழுதியிருக்கும் நேரப்பொருத்தம் தற்செயலாக நடந்துவிட்டதல்ல. ஜனாதிபதி புஷ் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தக் கடிதம் எழுதப்பட்டது. அரசாங்கம் நிதியளிப்புச் செய்யும் தேசிய ஜனநாயக அறக்கட்டளைக்கு (National Endowment for Democracy - NED) நிதியளிப்பு இரட்டிப்பாக்கப்படுமென்று புஷ் அறிவித்தார். கூடுதல் நிதி ஒதுக்கீடான 40 மில்லியன் டாலர்களும் மத்திய கிழக்கிற்கான வேலைத்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.

புஷ் உரையாற்றுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோன் எட்வர்ஸ் NED இன் நிதியளிப்பை இரட்டிப்பாக்க வேண்டுமென்று நெருக்கமான, இதற்கு இணையான கோரிக்கையை விடுத்திருந்தார்.

சர்வதேச தொழிலாளர் ஒருமைப்பாட்டுக்காக, அமெரிக்க நிலையத்தின் மூலம் அல்லது NED ன் ஒரு பகுதியான ''ஒருமைப்பாடு நிலையத்தின்'' மூலம் AFL-CIO, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி மற்றும் ''சர்வதேச தனியார் தொழில் முயற்சி அரங்கு'' என்ற பெரும் வர்த்தக பிரதிநிதித்துவ அமைப்பு ஆகியவற்றோடு அரசாங்க நிதியைப் பெறுவற்காக போட்டிபோட்டுக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

1983 TM NED யை அமெரிக்கா நாடாளுமன்றம் உருவாக்கியது. உலகம் முழுவதும் அமெரிக்கக் கொள்கைகளுக்கு எதிராக உருவாகும் எதிர்ப்புக்களை சமாளிக்க வழிவகைகளுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் CIA ரகசியமாக வழங்கி வந்த நிதியுதவிக்கு இப்போது ஒரு பாலமாக NED செயல்படத் தொடங்கியது. நிக்கரகுவா சாண்டினிஸ்டா அரசாங்கத்தை கவிழ்க்கவும், சீர்குலைவை ஏற்படுத்தவும் வாஷிங்டன் மேற்கொண்ட முயற்சிகளில் இந்த அமைப்பு பங்களிப்பு செய்தது.

கொரியா போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்காவிற்கு ஆதரவான பழமைவாத தொழிற்சங்கங்களுக்கு பணத்தையும், தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குவதற்கு AFL-CIO மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்களை NED பயன்படுத்திக்கொண்டது. அது போன்ற நாடுகளில் அமெரிக்கா ஆதரவு பெற்ற இராணுவ சர்வாதிகாரத்தை கவிழ்ப்பதற்கு வேலை நிறுத்தங்கள் மற்றும் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்துகிற போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு முன்னர் AFL-CIO, CIA தொடர்ந்து ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்ட ''தொழிலாளர் முன்னணிகள்'' பலவற்றின் மூலம் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இந்த முயற்சியாகும். இதில் மிகவும் இழிவான நடவடிக்கை லத்தீன் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டது. லத்தீன் அமெரிக்காவில் சுதந்திர தொழிலாளர் மேம்பாட்டிற்கான அமெரிக்க நிறுவனம் (American Institute for Free Labor Development - AIFLD) செயல்பட்டு வந்தது. அமெரிக்க நலன்களுக்கு விரோதமான அரசாங்கங்களை கவிழ்ப்பதில் ஆழமான பங்களிப்பு செய்ததாக இந்த அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

சல்வடோர் அலன்டேயுடைய சிலியின் மக்கள் முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான ''தொழிலாளர் அமைப்பு'' என்று அழைக்கப்பட்ட அமைப்பிற்கு இந்த AIFLD ஆலோசனை கூறியது. 1973 ல் ஜெனரல் பினோச்சே இரத்தக்களறி ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதற்கு ஏற்ற கலவரத்தையும், குழப்பத்தையும் உருவாக்குவதில் இந்த அமைப்பு பங்களிப்பு செய்தது. இந்த நிகழ்ச்சிகளில் AFL-CIO எப்போதுமே தனது பங்கை ஒப்புக் கொண்டதில்லை.

அத்தகைய தலையீடுகள் கடந்த காலத்தில் நடந்துவிட்ட சம்பவங்களாக ஆகிவிடவில்லை. வெனிசூலா நாட்டில் பொதுமக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹுகோ சாவேசின் (Hugo chavez) ஆட்சியை கவிழ்ப்பதற்காக 2002 ஏப்ரலில் NED யின் பணத்தைப் பயன்படுத்தி CIA யும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் மேற்கொண்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் AFL-CIO இணைந்து பணியாற்றியபோதும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. வெனிசூலாவின் CTV தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு, இந்த அமெரிக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் நிதியுதவிகளையும் சட்ட நுணுக்க ஆலோசனைகளையும் வழங்கியது. CTV தொழிற்சங்க கூட்டமைப்பு வெனிசூலாவின் பெரிய வர்த்தக முதலாளிகள் அமைப்போடு இணைந்து ஆட்சியில் குழப்பம் ஏற்படுத்தவும் ஆட்சி கவிழ்ப்பிற்கான முன்னேற்பாடுகளை செய்யவும் பணியாற்றி வந்தது.

சென்ற நவம்பர் 6 ல் NED கூட்டத்தில் புஷ் உரையாற்றும் போது மத்திய கிழக்கு தொடர்பான அமெரிக்காவின் புதிய கொள்கையை அறிவித்தார். ஈராக்கை வென்றெடுத்தது ஜனநாயகத்திற்கான போரில் முதல் அடி எடுத்துவைத்த நடவடிக்கைதான் என்றும், வரும் தலைமுறைகளிலும் இந்தப்போர் ''பத்தாண்டுகளுக்கு நீடிக்கும்'' என்று குறிப்பிட்டார்.

அதே நாளில் ஸ்வீனி, NED நிறுவப்பட்டதை குறிக்கும் 20 வது ஆண்டுவிழாவையொட்டி சிறப்பு அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில் ''பூகோள பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு'' எதிராக புஷ் மேற்கொண்டுள்ள போரில் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டார். மற்றும் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக்கொண்டதை ஆதரித்து அறிக்கையும் வெளியிட்டார். ''ஈராக் மறுசீரமைப்பு முயற்சிகளில் பங்களிப்பு செய்வதற்கு AFL-CIO சர்வதேச தொழிற்சங்க இயக்க ஒத்துழைப்போடு தயாராக உள்ளது'' என்றும் அறிக்கையில் குறிப்பிட்டார்.

"NED- ஈராக்கில் தனது பணிகளை விரிவாக்குகிறது'' என்ற தலைப்பில் NED இணையத் தளத்தில் அண்மையில் அறிக்கை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனநாயகக்கட்சி, குடியரசுக்கட்சி மற்றும் பெரிய வர்த்தகத்துடன் இணைந்த அமைப்புக்கள் ஈராக்கில் அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சி உருவாக்கும் கட்டுக்கோப்பிற்கு உதவி வருகின்றன என்றும், புதிய அரசியல் நிர்ணய சட்டத்தை தயாரிப்பதிலும் 'பொருளாதார சீர்திருத்தங்கள்'' மற்றும் ''சந்தை மதிப்பீடுகளை'' உருவாக்குவதிலும் பங்களிப்பு செய்து வருவதையும் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. இதுவரை AFL-CIO முன்னணிக் குழு பணிகள் முடக்கப்பட்டிருந்தன.

ஸ்வீனி சில ஒப்பந்த பணிகளுக்காக முயன்று வருகிறார். அவர் பல்வேறு துரோகச் செயல்களுக்கு அமெரிக்காவிலேயே சலுகைகள் மற்றும் ஆட்குறைப்புக்கள் இவற்றுக்கு உடந்தையாக இருந்தவராவர். AFL-CIO தனது தொழிற்சங்க அனுபவத்தைக் கொண்டு ஈராக்கில் கொத்தடிமை தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு உதவ முன்வந்திருக்கிறது. அத்தகைய அமைப்பு ஈராக்கை தொடர்ந்து அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பதை ஆதரிக்கும். போர்க்குணமிக்க போராட்டங்கள் எதையும் எதிர்த்து நிற்கும். ஈராக்கை அடிமைப்படுத்தி பெருமளவில் லாபம் சம்பாதிக்க முயலுகின்ற அமெரிக்காவின் பெரிய எண்ணெய்க் கம்பெனிகள் மற்றும் இதர அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு தொழிலாளர் உரிமைகளை பலியிட தயாராகயிருக்கும்.

AFL-CIO உறுப்பினர்கள் எண்ணிக்கை வரலாறு காணாத அளவிற்கு குறைந்துவிட்டதால் இப்போது ஜோர்ஜ் W. புஷ் வலதுசாரி நிர்வாகம் உருவாக்கியுள்ள அரசாங்க நிதியளிப்பில் AFL-CIO தனது நிதியாதாரங்களை நிலைநாட்டி வருகிறது.

போர் தொடங்குவதற்கு முன்னர் 2002 அக்டோபரில் நாடாளுமன்றத்தில் போர் தொடர்பான தீர்மானம் விவாதிக்கப்பட்டு வந்த நேரத்தில், ஸ்வீனி வரவிருந்த படுகொலைகளின் அடிப்படையை ஏற்றுக்கொள்வதாக கோடிட்டுக் காட்டினார். அப்போது அவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தில் ''சதாம் ஹூசைன் ஒர் ஆபத்தான தலைவர் தனது மக்களுக்கும், நெருக்கடியான ஒரு மண்டலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஆபத்தானவர்'' என்று எழுதியிருந்தார்.

குண்டுவீச்சுக்கள் தொடங்கிய நாளில் அவர் மீண்டும் எழுதினார். ''ஈராக் ஆட்சி கொடூரமான சர்வாதிகாரம். அது தனது மக்களுக்கும் பக்கத்து நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. ஈராக்கில் பயங்கர ஆயுதங்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற குறிக்கோளை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இந்தச் சண்டை மூலம் ஈராக்கிற்கு அதிக ஜனநாயகமும், வளமும் கிடைக்கும் என்று நம்புகிறோம்''. புஷ்ஷின் போலியான மோசடி தேசபக்தி வேண்டுகோளை எதிரொலிக்கும் வகையில் தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கும் போது, ''நமது நாட்டை நாம் உறுதியாக ஆதரித்து நிற்கிறோம்'' என்று குறிப்பிட்டார்.

இதற்கு 5 நாட்களுக்கு பின்னர் ஸ்வீனி மற்றொரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஈராக் போரை நடத்துவதற்காக 79 பில்லியன் டாலர்களை துணைமானியமாக வழங்க வேண்டுமென்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு புஷ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

போருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்க குழுக்களில் சிலவற்றில், ஈராக் மீதான ஆக்கிரமிப்பு எதிர்ப்புத் தொழிலாளர் சக்திகளின் வெளிப்பாடுதான் ஜனவரி 22 ல் ஸ்வீனி வெளியிட்ட அறிக்கை என்று கருதுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இத்தகைய கருத்து உள்ளவர்கள் அறியாமை நிறைந்தவர்கள். அல்லது AFL-CIO வின் நீண்ட துரோக வரலாற்றை அறியாதவர்கள் ஆவர். மற்றவர்கள் அதிகாரத்துவ வர்க்கத்தின் அரசியல் வாழ்விற்கு ''இடது'' முகமூடி கிடைக்கிறதற்காக முயன்று வருபவர்கள். காரணங்கள் எதுவாகயிருந்தாலும் இந்த ஜடமாகிவிட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தை போருக்கு எதிரான போராட்ட ஆயுதமாக இருத்துவது அப்பட்டமான பொய் என்று தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்ட உண்மையாகும்.

AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவமானது, ஈராக்கில் நடைபெற்றுவரும் கொலைகளுக்கு அரசியல் பொறுப்பை செய்து வருகிறது. மற்றும் ஆக்கிரமிப்பு படைகளோடு ஒத்துழைத்து தனது தொழிற்சங்க செலவுக்கணக்கை பெருக்கிக்கொள்ள முயன்று வருகிறது. இந்த அமைப்பிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்க உழைக்கும் மக்களைத் அணிதிரட்டுவது ஒன்றுதான் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கும் எதிர்கால போர்களுக்கும் எதிரான ஒரே நடவடிக்கையாக அமையமுடியும்.

Top of page