World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Soldiers report British torture of Iraqi civilians

ஈராக் குடிமக்கள் மீது பிரித்தானிய சித்திரவதை தொடர்பான இராணுவத்தினர் அறிக்கை

By Robert Stevens
8 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் குடிமக்களை பிரித்தானிய இராணுவத்தினர் சித்திரவதை செய்வது தொடர்பான அறிக்கைகளும், புகைப்படங்களும் மே 1-ல் டெய்லி மிரர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தப்படங்களில் 18--20-வயது மதிக்கத்தக்க ஒரு ஈராக் குடிமகன் சித்திரவதை செய்யப்படுவதை பத்திரிகை சித்தரித்துக் காட்டப்படுகிறது; ஈராக்கில் பணியாற்றிக்கொண்டிருக்கிற இராணியின் Lancashire படைப்பிரிவைச் சார்ந்த இராணுவத்தினர் கடந்த ஓராண்டிற்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். 2003-ல் தெற்கு நகரமான பாஸ்ராவில் உள்ள ஒரு முகாமில் ராணுவ வண்டி ஒன்றில் அந்தத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தப்புகைப்படங்கள் இரண்டு இராணுவத்தினரிடமிருந்து பெறப்பட்டது. (இராணுவர் A இராணுவர் B- என்று அழைக்கப்படுகிறார்) அவர்கள் அந்தத்தாக்குதலை நேரில் கண்டவர்கள். ஈராக் கைதிகளை அமெரிக்கப்டைகள் சித்தரவதை செய்து வருவது தொடர்பான படுபயங்கர ஆதாரங்கள் வெளிவந்ததைத் தொடந்து பிளேயர் அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கைகளில் ஏற்கெனவே ஈடுபட்டிருப்பதைத் தொடர்ந்து இந்த புகைப்படங்களும் வெளிவந்திருப்பது ஆயுதப்படைகளுக்கு உள்ளேயும் பிளேயர் அரசாங்கத்தினுள்ளும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்திரிகையாளர் போல் பிர்னே எழுதியிருந்தார்: ''இந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் நிழற்படங்கள் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரும், அவரது சகாவும் நமக்கு தந்தனர். அவர்கள் பழிவாங்கப்படலாம் என அஞ்சியதால் அவர்கள் விவரம் பற்றிய ரகசியங்களைப் பாதுகாக்க சம்மதித்தோம். ''

அந்தப்புகைப்படங்களில் ஒருவரது கைகள் அவருக்குப் பின்னால் கட்டப்பட்டிருப்பதும், ஈராக் கால்பந்து வீரர் சட்டையும், உள் ஆடையும் அணிந்திருப்பது காணப்படுகிறது. தண்டிக்கப்பட்டவரின் தலை மணல் மூட்டையால் மூடப்பட்டிருக்கிறது. அந்தப் படங்களில் ஒரு சிப்பாய் அவர் மீது சிறுநீர் கழிக்கிறார் மற்றும் ஒருவர் துப்பாக்கி முனையால் அவரது முன்பகுதியில் குத்துகிறார், அவரை தலையில் உதைக்கிறார். அவரது தலையில் ஒரு துப்பாக்கி முனை அழுத்தப்பட்டு கழுத்து வளைந்திருக்கிறது. இன்னொரு புகைப்படத்தில் மணல் மூட்டைக்கு கீழே அவரது கழுத்தருகே இரத்தம் கசிந்து உறைந்திருப்பதை இன்னொரு புகைப்படம் காட்டுகிறது.

Byrne எழுதியிருந்தார்: ''எட்டு மணிநேர தாக்குதல்களுக்குப் பின்னர் அவர் ஏறத்தாழ சுய நினைவற்ற சூழ்நிலையில் சாகும் தருவாயில் விடப்பட்டார். இரத்தம் சிந்தப்பட்டும், வாந்தி எடுத்தும், அத்தோடு தாடை உடைந்தும், பற்கள் சிதைந்தும், பாஸ்ரா முகாமிலிருந்து அவர் கொண்டுவரப்பட்டு டிரக்கிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அவர் உயிருடன் இருந்தாரா அல்லது இறந்துவிட்டிருந்தாரா என்பது எவருக்கும் தெரியாது.''

இராணுவர்-A மற்றும் இராணுவர் B- ன் குற்றச்சாட்டுக்கள்

இராணுவர்-A சொல்லியதாக Byrne குறிப்பிட்டிருப்பது பாஸ்ராவின் ''துறைமுகத்தில் திருடினார், என்ற சந்தேகத்தில் அந்த இளைஞர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்'' என்று கூறினார்.

இராணுவர் A கூறினார், ''அந்த மனிதனை கைது செய்து கொண்டு செல்வது. அவரை நேரடியாக உதைப்பது, அவரை உதைத்து கீழே தள்ளுவது. அதன் பின் வாகனத்திற்கு பின்பக்கமாக கொண்டு செல்வது. அவரை பின்னுக்கு கொண்டு சென்று அதே போல் அடிக்கப்பட்டார். திரும்ப அழைத்துவரும்போது அவர் முழங்கால், கைவிரல்கள், கால்விரல்கள், முழங்கை மற்றும் தலையில் லத்திகளால் தாக்கப்பட்டிருந்தார்."

''முகாமில் இருக்கும் போது முகத்தை விட்டுவிட வேண்டும். கண்கள் கருமையாகி முகத்தில் இரத்தம் வழிந்தால் அதனால் சங்கடம் ஏற்படும். எனவே உடலில் காயங்களை ஏற்படுத்தி பயமுறுத்தி 'நாங்கள் உன்னை கொன்றுவிடுவோம்' என்று கூற வேண்டும். அவர்களில் பலர் கதறுவார்கள், அவர்களே சிறுநீர் கழித்துக்கொள்வார்கள். எங்களது நான்கு டன் வண்டியின் பின்பக்கம் அவர்களை தூக்கி எறிவோம் அது கொதிக்கும் சூடாக இருக்கும். அங்குதான் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இராணுவத்தினர் வருவார்கள் அந்த இளைஞர்களை தாக்குவார்கள். ஆயுதங்களால் தாக்கி அவர்களை வீழ்த்துவார்கள். அவரை நாங்கள் எட்டு மணிநேரம் வைத்திருந்தோம். அவரது உடலில் இருந்து இரத்தம் முதல்''தாக்குதலிலேயே'' வந்தது. அவர் பயந்து நடுங்கி 'கழிந்துவிட்டார்'.

''அவரது முகமூடியை கழற்றி அவருக்கு தண்ணீர் கொடுப்பட்டு 10-நிமிடங்கள் ஓய்வு கொடுத்தோம். அவர் சில வார்த்தைகளைத்தான் பேச முடிந்தது, அவர் மன்றாடினார் 'இல்லை மிஸ்டர்' 'இல்லை மிஸ்டர்', மற்றவர்களைவிட நான் குறைவாகவே செய்தேன். ஆனால் நானும் கலந்து கொண்டேன். நானும் எனது சகாவும் அப்போது அமைதி அடைந்தோம். அந்த நேரத்தில் இரண்டு இளைஞர்கள் வந்தார்கள் மீண்டும் தாக்குதல்கள் துவங்கிவிட்டன. அவருக்கு பற்கள் உடைந்துவிட்டன. அவரது வாயில் ரத்தம் சிந்தியது மற்றும் அவரது மூக்கு எல்லாவற்றிலும் சிந்தியது. அவரால் பேச முடியவில்லை அவரது தாடை வெளியே வந்துவிட்டது. அவர் சில மணிநேரம் உதைக்கப்பட்டார். அவர் கொல்லப்பட நிலையில் இருக்கிறார். அதிகமாய் நீங்கள் செய்யக்கூடியது அவ்வளவுதான்''.

அந்தக் கட்டத்தில் ஒரு அதிகாரி வந்து ''அவனைத் தீர்த்துக் கட்டுங்கள்---- நான் அவனை பார்க்கவில்லை'' என அவர்ககளிடம் கூறியதாக அந்த இரணுவர் மிரருக்கு தெரிவித்ததார்

மேலே கூறப்பட்ட தாக்குதல் நடந்து சில வாரங்கள் கழித்து மற்றொரு ஈராக் கைதி அடித்துக்கொல்லப்பட்டதாக அதே படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவர்மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது என அந்தக் கட்டுரை மேலும் தெரிவித்துள்ளது.

2003- செப்டம்பரில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதலை இராணுவர்-B மிரருக்கு எடுத்துரைத்தார். அவர் மரணம் பற்றி தந்த குறிப்பு ''இது அந்த நேரத்தில் நடந்த நிகழ்வு. ஒரு கைதி தாக்குதலை சமாளித்து நிற்க முயன்றான். நான் நினைக்கிறேன் 'இப்படி செய்யாதீர்கள் என்று கூறினன்' இது படுமோசமானது, அதை செய்தார்கள். அவர் உதைக்கப்பட்டார். பூட்ஸ் காலால் அவர்களை முதுகில் தாக்கினார்கள், முள்ளந்தண்டு முறிவதனைக் கேட்கமுடிந்தது. இன்னொரு பையன் கைதியின் தலையில் முஷ்டியால் இடித்துத் தாக்கினான். அருகிலிருந்த மற்றொருவன் காலால் பலமாய் உதைத்தான்''

மூத்த அதிகாரிகள் குற்றச்சாட்டுச் சான்றுகளை அழித்துவிடுமாறு கூறினார்கள் என்று அந்த இராணுவர் கூறினார். ''அவர்கள் எச்சரித்தார்கள், ராணுவ போலீசாரிடம் ஒரு வீடியோ படம் கிடைத்திருக்கின்றது. அது கைதிகளைப் பாலத்திலிருந்து தூக்கி எறிவது பற்றிய படம். இங்கு விடையம் என்னவெனில் "அதைச் செய்ய வேண்டாம்" அல்லது "நிறுத்திவிடுங்கள்" என்பதல்ல. "ஏதாவது தடயம் இருந்தால் அழித்துவிடுங்கள்'' என்பதாகும் என்றார் அவர்.

ரோயல் இராணுவ பொலிஸ் பிரிவு UK மற்றும் தென் ஈராக் நகரான பாஸ்ரா மற்றும் சைப்ரஸ் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரித்து வருகின்றது, அங்கு தான் இராணியின் லாங்கெய்சியர் படை பிரிவு (Queen's Lancashire Regiment) நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஓர் ''சித்தரவதையின் வடிவமைப்பு''

இந்தப் புகைப்படங்கள் தெரிவித்துள்ள மோசடிகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக இராணுவம், ஊடகங்கள் மற்றும் அரசாங்கம் தனது கவனத்தை மிரர் செய்தி பத்திரிகை மீது திருப்பிவிட்டது. அப்பத்திரிகையின் ஆசிரியர் பியர்ஸ் மோர்கன் போதுமான அளவிற்கு தனது செய்தியை சரிபார்க்காமல் அவசரப்பட்டு அச்சிட்டுவிட்ட குற்றவாளி என்று கூறுகின்றன.

அந்தப் படைப்பிரிவைச் சார்ந்த ராணுவ வட்டாரங்கள் பல முன்னாள் தளபதிகள் மற்றும் பொஸ்னியாவில் பிரிட்டிஸ் துருப்புக்களுக்கு ஐ.நா முன்னாள் தளபதியாக பணியாற்றிய கர்னல் போப் ஸ்டூவர்ட் உட்பட ராணுவ புலனாய்வு அதிகாரிகள் ஆகிய அனைவரும் புகைப்படச்சான்றுகளை மறுப்பதற்கு அவை பயனற்ற குப்பைகள் என்று காட்டுவதற்கு (to rubbish) முயன்றிருக்கிறார்கள். அந்தப்புகைப்படங்களில் காணப்படுகின்ற காலனி லேசுகள் தவறான அடிப்படையில் கட்டப்பட்டிருப்பதாக அடிப்படையில்லாமல் வெளியிடப்பட்டகூற்றுக்களை பெரும்பாலான பிரித்தானிய பத்திரிகைகள் மதிப்பளித்து செய்தியாகவும் வெளியிட்டிருக்கின்றன. சன் செய்திப்பத்திரிகை முதல் பக்க தலைப்புச் செய்தியாக "ஈராக் புகைப்படங்கள் போலியானவை" என்று குறிப்பிட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் மே-5-முதல் பிரதமர் டோனி பிளேயர் மிரருக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். அந்தப் புகைப்படங்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அது "மிகக்கடுமையான" ஒன்றாக இருக்கும் என்று குறிப்பிட்டார். அதே நாளில் நாடாளுமன்ற பாதுகாப்பு பொதுக்குழு விசாரணைக் கூட்டத்திற்கு மோர்கன் "அழைக்க"ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பொதுப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் Bruce George மோர்கனிடம் இருந்து சில விபரங்களை தெரிந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டார். ''பணம் எதுவும் தரப்பட்டதா? இந்தப் புகைப்படங்கள் உண்மையானது என்று அவர் நம்புகிறாரா? இந்தப் புகைப்படங்கள் உண்மையானவை என்று உறுதிசெய்து கொள்வதற்கு என்ன முயற்சிகளை அவர் மேற்கொண்டார்?'' என்று கேட்கப்போவதாக குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அவரும் அவரது ஊழியர்களும் பொறுப்போடு நடந்து கொண்டார்களா? என்பது குறித்து நாங்கள் மனநிறைவு கொள்வதற்கு ஏற்றவகையில் அந்த விசாரணை அமையும். ஏற்கெனவே நாங்கள் அறிவித்துள்ளபடி ஈராக்கில் தொடர்ந்து நடந்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைக் கூட்டத்தை நடத்துவோம்'' என்று குழு அறிவித்தது.

மிரர் தனது தகவலை உறுதியாக நிலைநாட்டியது. அந்த விவரங்களை தந்த இராணுவர்களும் உறுதியாக நின்றனர். அந்த செய்திப்பத்திரிகை தனது செய்தி மூலங்களை அடையாளம் காட்ட மறுத்துவிட்டது. ஆனால் 20 புகைப்படங்களை விசாரணைக்காக தாக்கல் செய்திருக்கிறது.

மே-7-ல் டைம்ஸ் செய்திப்பத்திரிகை ''அந்தப்புகைப்படங்கள் போலியானவையாக இருந்தால் அதை நிரூபிக்க இவ்வளவு நீண்டகாலமாகுமா'' என்று ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் மக்களது நினைவாற்றால் மிக குறுகிய காலத்திற்குதான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அத்தகைய அட்டூழியங்களை மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மே-முதல் தேதி மிரர் வெளியிட்டுள்ள கட்டுரை ஈராக் கைதிகளை இழிவுபடுத்துகிற வகையில் வக்கிரமான முறையில் பிரித்தானிய துருப்புக்கள் நடத்திய முதலாவது புகைப்பட ஆதாரமல்ல, சென்ற ஆண்டு மே மாதம் புகைப்பட பிரதி எடுக்கும் பிரித்தானிய நிறுவன ஊழியர்கள் புகைப்படங்களை போலீசாரிடம் தாக்கல் செய்தனர். அவற்றில் பிரித்தானிய துருப்புகள் ஈராக் போர் கைதிகளை சித்திரவதை செய்வதும், பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுத்துவதும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகைப்படங்கள் சன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. ஈராக் கைதிகளை ஒரு மண்வாரி பளுதூக்கி வலையில் கட்டி தொங்கவிடப்பட்டிருப்பதை அந்தப் புகைப்படங்கள் காட்டின. பாதுகாப்பு அமைச்சகம் புலன்விசாரணையைத் துவக்கியுள்ளது. ஆனால் இன்னும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

மே-3-ல் சர்வதேச பொதுமன்னிப்பு சபை அமெரிக்கா மற்றும் பிரித்தானிய கூட்டணிப்படைகள் ஈராக்கில் "சித்திரவதை வடிவமைப்பை" கைதிகளை பொறுத்து பின்பற்றி வருவதாகவும் அதை அந்த அமைப்பு கண்டுபிடித்திருப்பதாகவும், கொடூர செயல்கள் மற்றும் முறைகேடு தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருந்தது. பிரித்தானிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் கைதிகளை முறைகேடாக நடத்துவது தொடர்பான ஏராளமான அறிக்கைகள் வந்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியிருக்கின்றது.

சர்வதேச பொதுமன்னிப்பு சபை தனது அறிக்கையில் கூறியிருந்ததாவது:- புலன் விசாரணையின் போது அமெரிக்க மற்றும் பிரித்தானிய துருப்புக்கள் சித்ரவதை மற்றும் முறைகேடான நடவடிக்கைகளுக்கு பல கைதிகள் உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் பயன்படுத்துகின்ற முறைகளில் அடிக்கடி புகார் கூறப்படுவது; நீண்ட நேரம் தூங்க முடியாமல் தடுப்பது, உதைப்பது, துன்பம் தரும் நிலைகளில் அமருமாறு நீண்ட நேரம் கட்டாயப்படுத்துவது. மிகுந்த இரைச்சலான ஒலியினைப் பரப்புவது, ஒளி வெள்ளத்தில் நீண்ட நேரம் தலைச்சுமையோடு அமரச்செய்வது. இத்தகைய சித்தரவதை அல்லது முறைகேடான நடவடிக்கை பற்றிய புகார்கள் குறித்து எந்தவிதமான விசாரணையும் முறையாக தேவையான அளவிற்கு நடத்தப்படவில்லை.

இதில் குறிப்பிட்டுள்ள விசாரணை பிரித்தானிய மக்களவை பாதுகாப்புக் குழு ஈராக்கில் பிரித்தானிய துருப்புக்களின் நடவடிக்கைகளால் பெருகிவருகின்ற பொதுமக்கள் மரணங்கள், காயங்கள், அல்லது முறைகேடான நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட குற்றச்சாட்டுக்களால் இதுவரை 33- வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டிற்கு மேலாக பிரித்தானிய துருப்புக்களால் ஈராக்கில் 7- மரணங்கள் ஏற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. என்றாலும் எந்த ஒரு இராணுவர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை, எவர் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. பன்னிரண்டு வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. 21-வழக்குகள் பூர்த்தியாகி உள்ளன. முடித்து வைக்கப்பட்ட வழக்குகளில் 15-வழக்குகளுக்கு "பதிலளிக்க தேவையில்லை" என்று முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதர ஆறு வழக்குகளின் பரிந்துரைகள் இன்னும் பரிசீலனையில் இருந்து வருகின்றன. பாதுகாப்பு அமைச்சகம் எந்த புலன்விசாரணைகள் குறித்தும் மேற்பார்வைகளை வெளியிட மறுத்துவிட்டது.

வரும் வாரங்களிலும், மாதங்களிலும் ஈராக்கில் பிரித்தானிய இராணுவரின் கொடூரச்செயல்கள் குறித்து அதிக சான்றுகள் வரத்தொடங்கும். குழுவின் முன் ஆஜராக வேணடும் என்று மோர்கன் அழைக்கப்பட்ட அதே நாளில் வழக்கறிஞர்கள் 12 ஈராக் குடும்பங்கள் சார்பில் பிரித்தானிய துருப்புக்காளல் கொலை செய்யப்பட்டவர்களுக்காக பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இழப்பீட்டு கோரிக்கைகளை தாக்கல் செய்தனர்.

பாதுகாப்பு அமைச்சகம் சாவுகளுக்கான சட்டப்பூர்வ பொறுப்பை ஏற்றுக்கொள்ளுகின்ற வகையில் நடுநிலை விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். 1998-ல் இயற்றப்பட்ட மனித உரிமைகள் சட்டத்திற்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள பிரித்தானிய ஆயுதப்படைகள் கட்டுப்படுமா என்பதை இந்த வழக்குகள் முடிவு செய்யும் இந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் Phil Shine மொத்தம் 17 ஈராக்கிய குடும்பங்கள் மனித உரிமைகள் தொடர்பான சட்டப்படி இழப்பீடுகோரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

Top of page