World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Bush and Blair pledge to continue Middle East aggression

மத்திய கிழக்கு ஆக்கிரமிப்பை நீடிக்க புஷ்ஷூம் பிளேயரும் உறுதிமொழி

By Julie Hyland and Chris Marsden
15 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

பிரதமர் டோனி பிளேயரும், ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷும் நவம்பர் 12ல் வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டு பத்திரிகை மாநாட்டில் பரஸ்பரம் பாராட்டிக்கொண்டது வெறுப்பூட்டுகின்ற ஒரு காட்சியாக இருந்தது.

அது ஈராக் நகரமான பல்லூஜா அமெரிக்க இராணுவத்தினால் சிதைக்கப்பட்ட நேரத்தில் நடைபெற்றது. அங்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மாடிக்குடியிருப்புக்கள் சிதைத்து நொருக்கப்பட்டன, தங்களைச்சுற்றி நடக்கும் பேரழிவுகளில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ளவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளிலேயே பல நாட்கள் மின்சாரம், தண்ணீர் இல்லாமல் அடைபட்டுக்கிடந்தனர்.

பிளேயருக்கும், புஷ்ஷிற்கும் இடையே நடைபெற்ற கூட்டம் போர் குற்றவாளிகளின் ஒரு உச்சிமாநாடு என்பதை பிரிட்டனின் ஊடகங்கள் ஒரு அலட்சியப்படுத்தும் விவகாரமாக தள்ளுபடிசெய்தன. அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது கூட்டத்தில் தனது அசைக்க முடியாத ஆதரவிற்கு பிளேயர் என்ன கைமாறு பெறப்போகின்றார் என்பதில் மட்டுமே Fleet Street லுள்ள பத்திரிகை ஆசிரியர் அலுவலகங்கள் அக்கறை செலுத்தின.

வாஷிங்டன் ஒரு தலைப்பட்சமாக மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று கருதப்படக்கூடிய செயலுக்கு சட்டபூர்வமான அவசிய அங்கீகாரம் தருவதற்காக ஈராக்கிற்கு எதிரான போரில் ஆதரவு தந்த அதிக நஷ்டத்தை விளைவிக்கும் ஆதரவிற்கு கைமாறு தருகின்ற நேரம் வந்துவிட்டது என்று பிரிட்டனின் ஆளும் செல்வந்த தட்டியினர் நம்பினர்.

இது ஒரு கடுமையான அரசியல் கருத்தாகும். இரண்டாவது முறை பதவியில் நீடிக்க வாய்ப்புபெற்றுள்ள புஷ் தனக்கு செலவிடுவதற்கான ''அரசியல் மூலதனம்'' கிடைத்திருப்பதாக பெருமையடித்துக்கொண்டார். ஆனால் பிளேயர் சிறிது காலத்தில் ஒரு பொதுத்தேர்தலை இன்னும் 6 மாதங்களில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். அவர் மிச்சமிருக்கும் துருப்புச்சீட்டுக்கள் அனைத்தையும் பயன்படுத்தியாக வேண்டிய ஆபத்தில் இருக்கிறார்.

பாஸ்ராவில் இருந்த பிரிட்டிஷ் துருப்புக்களை பாக்தாத்திற்கு அனுப்பி அங்கிருந்து அமெரிக்க படையினர் பல்லூஜா மீது தாக்குதல் தொடுப்பதற்கு விடுத்த செயல் பிரிட்டனின் போருக்கான அரசியல் எதிர்ப்பை கடுமையாக்கியிருக்கிறது மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஒரு புதைசேற்றில் ஈர்த்துக்கொள்ளப்படுகிற சாத்தியக்கூறையும் அதிகரித்துள்ளது. மக்களில் ஐந்தில் மூன்று பகுதியினர் பிரிட்டிஷ் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற சூழ்நிலையில் பொதுத்தேர்தலில் ஈராக் முக்கியமானதொரு காரணியாக அமையுமென்று கருத்துக்கணிப்புக்கள் காட்டுகின்றன.

எனவேதான் விமர்சகர்கள் பிளேயரின், வாஷிங்டன் பயணம் குறித்து புகார் கூறியுள்ளனர்--- நவம்பர் 2 தேர்தலுக்குப்பின்னர் ஒரு அரசுத்தலைவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் அது- இரண்டு தலைவர்களுக்குமிடையே நிலவுகின்ற ''சிறப்பு உறவை'' அந்த பயணம் உறுதிப்படுத்தியது, பிரிட்டனின் நலன்களை நிறைவேற்றுகின்ற வகையில் அமைந்துள்ளது என்பதற்கு எந்தவிதமான சமிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை.

பிளேயரின் முன்னாள் ஐரோப்பிய விவகார மூத்த ஆலோசகர் சேர் ஸ்டீபன் வால்ஸ் அமெரிக்காவுடனான உறவுகளை ஒரு-வழி நடவடிக்கை என்று வர்ணித்தார். கார்டியனில் எழுதியுள்ள முன்னாள் வெளியுறவு அமைச்சர் ராபின் குக் ''சிறப்பு உறவு'' உண்மையில் ஒரு ''தேசிய நப்பாசையா'' என்று கேட்கின்ற தருணம் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.

அத்தகைய விமர்சனங்களை எதிர்நோக்கும் பிரதமர், பயன்கள் பற்றிய உறுதியான சான்றை தந்தாகவேண்டுமென்று அவரது நண்பர்கள் அறிவுரை கூறுகின்றனர். அமெரிக்கா ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு நம்பகத்தன்மையுளள் திட்டத்தை வைத்திருப்பதாக அல்லது இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலில் சில உற்சாகமூட்டும் அறிவிப்புக்களை ஜனாதிபதி வெளியிடக்கூடும் என்று நம்பியிருக்கலாம்.

அத்தகைய நம்பிக்கைகள் நொருங்கிவிட்டன. வாஷிங்டனின் பேச்சுவார்தைகள் அமெரிக்க அரசுத்துறை செயலர் கொலின் பெளல் வலியுறுத்திக்கூறியுள்ள புஷ்ஷின் இரண்டாவது ஆட்சிகாலம் ஒரு ''ஆக்கிரமிப்பு'' மிக்கதாக இருக்குமென்ற கருத்தை உறுதிபடுத்தியுள்ளதுடன், வாஷிங்டனில் தயாராகும் எந்த குற்றத்திலும் ஒத்துழைக்க பிளேயர் தயாராக இருக்கிறார்.

ஈராக்கிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு மூலோபாயத்தை கோடிட்டுக்காட்டுவதற்கு பதிலாக இரண்டு தலைவர்களும், இராணுவ தாக்குதலை ஆழப்படுத்துவது பற்றியே பேசினர்----புஷ் வெளியேறுவதற்கான சாத்தியக்கூறை தெரிவிப்பதற்கு பதிலாக பிளேயர் கசப்பானதான இறுதிவரை ஈராக்கில் நீடிக்கப்போவதாக உறுதியளித்தார்.

பல்லூஜா படுகொலையை நியாயப்படுத்திய புஷ் இதையே உலகம் மேலும் எதிர்பார்க்க வேண்டுமென்று எச்சரித்தார். ஜனவரி தேர்தல்கள் நெருங்கிவருகின்ற நேரத்தில், ''கொலைகாரர்களின் நம்பிக்கையின்மை வளரும் மற்றும் வன்முறை தீவிரமடையும்'' என்று அவர் கூறினார்--- இது தங்கள் நாட்டை காலனித்துவ அடிப்படையில் எடுத்துக்கொண்டதற்கு ஈராக் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால் பல்லூஜாவைப் போன்ற பாணியில் ''கூட்டுத்தண்டனை'' நடவடிக்கைகள் இதர நகரங்களிலும் நீடிக்கப்படும் என்பதற்கான ஒரு சமிக்கையாகும். ஈராக் பொம்மை ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி அல்லாவி, ஏற்கனவே மோசூலில் ''இரண்டாவது போர் முனையை'' உருவாக்கும் தனது நோக்கத்தை அறிவித்துவிட்டார்.

இஸ்ரேல்--பாலஸ்தீன மோதலுக்கு ஒரு நியாயமான தீர்வுகாண்பதில் வாஷிங்டன் அதிக கவனம் செலுத்தவேண்டுமென்று பிளேயர் வலியுறுத்துபவராக உறுதியளித்திருந்தார் --அது மத்திய கிழக்கு சமாதான முன்னெடுப்பு வாதத்தைப்போல் ஒரு பாகமாக இருக்கும்-- இப்போது அது பாலஸ்தீன வெகுஜனங்களுக்கெதிராக வாஷிங்டன் தீட்டுகின்ற சதித்திட்டங்களை ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு வந்திருக்கிறது.

யாசர் அரஃபாத் காலமானதால் உருவாகியிருக்கும் நெருக்கடியை சுரண்டிக்கொள்ள தாம் கருதியிருப்பதாக புஷ் மிகத்தெளிவாக அறிவித்திருக்கிறார். ''நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுகின்ற வழியில் முன்னேற்றம் காண்பதற்கான ஒரு வழியை உருவாக்கியிருக்கிறது'' என்று அவர் மேற்கோள்காட்டியுள்ளார், அது பாலஸ்தீன நிர்வாகத்திற்கு ஒரு கைப்பாவை தலைவரை நியமிப்பது ஆகும்.

ஒரு பாலஸ்தீன அரசை உருவாக்குவதற்காக ''அமெரிக்காவின் முதலீடை செலவிடுவதற்கு அடுத்த நான்காண்டுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள நான் விரும்புகிறேன். ''விரைவில் பாலஸ்தீனர்கள் ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பார்கள்,'' என்று அவர் தொடர்ந்தார் ''இது நிரந்தர ஜனநாயக அரசியல் அமைப்புக்களை ஒரு சுதந்திர பாலஸ்தீனிய மக்கள் உள்ளூர் மற்றும் தேசியத் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முதல்கட்ட நடவடிக்கையாக அமையும்'' என்று புஷ் குறிப்பிட்டார்.

''இந்த தேர்தல்கள் வெற்றிபெறுவதில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் மற்றும் உதவுவதற்கு நாங்கள் தயாராகயிருக்கிறோம்''

இதையே வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், வாஷிங்டன் விரும்புகிற தலைமையை அது வழங்குமானால் பாலஸ்தீனிய அரசு உருவாவதை அமெரிக்க ஆதரிக்கும் --இஸ்ரேலின் சார்பில் பாலஸ்தீன மக்களது எதிர்ப்பை அடக்க அது தயாராகயிருக்கும். ஈராக்கைப் போல் அதுதான் ''ஜனநாயகத்தின்'' உண்மையான அளவுகோல்.

அமெரிக்கா-இஸ்ரேல் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்ற பொறுப்பு முழுவதும் பாலஸ்தீனய மக்களது பொறுப்பாகும். ''ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்து தருவதற்கு பாலஸ்தீன மக்களை தீக்குளிக்கவைப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்'' என்று புஷ் அச்சுறுத்துகிறார்.

''பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதில் உறுதிகொண்டுள்ள மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்தில் உறுதி கொண்டுள்ள பாலஸ்தீனிய தலைமையோடு பணியாற்றுவதை'' தாம் எதிர்நோக்கிக் முன்னேறிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். புதிய பாலஸ்தீனத்தலைமை வாஷிங்டனின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்குமானால் இண்டிபாடாவை அடக்குவதற்கு தயாராக இருப்பதாக தெளிவுபடுத்துமானால் அப்போது புஷ் அமெரிக்கா அல்லாத ''சர்வதேச சமுதாயத்திலிருந்து'' ஓரளவிற்கு பணத்தை கறந்து பாலஸ்தீன பொருளாதாரத்தை மறுமலர்ச்சியடையச் செய்வதற்கும், பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்கும் பாலஸ்தீன பாதுகாப்பு அமைப்புக்களை உருவாக்குவதாகவும் கூறியுள்ளார்.

மேற்குக்கரையில் இஸ்ரேலிய குடியிருப்புக்கள் முடக்கப்படுவதற்கான நடவடிக்கை முடுக்கிவிடப்படுமா என்ற கேள்விக்கு பதில் தருவதை புஷ் தவிர்த்தார், ''சாலை வரைபடம்'' அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் ஐ.நா உருவாக்கியது. அதில் ஒரு பாலஸ்தீன நாடு அமைவதற்கு சொற்ப வழிவகைகள் செய்யப்பட்டன அவையும் சந்தடியில்லாமல் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டன என்பதை புஷ் தெளிவுபடுத்தினார். மாறாக இப்போது புஷ் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் முன்னெடுத்து வைத்துள்ள திட்டமான ''தளர்த்தலை'' காசா பகுதியில் சில இஸ்ரேல் குடியிருப்புக்களை வெளியேற்றிவிட்டு மேற்கு கரையில் மிகப்பெருமளவில் நிலத்தை கைப்பற்றிக்கொள்வது அந்தத்திட்டம், அது இப்போது அமெரிக்காவின் அதிகாரபூர்வமான கொள்கையாக அறிவிக்கப்படுகிறது.

பாலஸ்தீனிய அரசு உருவாவதற்கு உருவாக்கிய ஐந்து கட்ட நான்கு வருட கால அட்டவணை, 2005ன் முந்தைய கால அட்டவணையை முறிக்கின்றது. அடுத்துவரும் 60 நாட்களில் வாஷிங்டனின் விருபத்திற்குரிய தலைமையை தேர்ந்தெடுத்தல் பாலஸ்தீனத்தில் தோல்வியாகுமானால் யதார்த்தத்தில் எதுவும் கிடைக்காது. மேலும் எந்த எதிர்கால பாலஸ்தீனிய அரசுக்கும் ஒதுக்கப்பட்ட பகுதி இஸ்ரேலிய கட்டளைப்படி முழு எல்லைகளும் நிர்ணயிக்கப்படும்.

புஷ்ஷின் நிலைப்பாட்டை வெட்கக்கேடான முறையில் நிபந்தனை எதுவுமில்லாமல் பிளேயர் தனது சொந்த நிலைப்பாடாக எடுத்துக்கொண்டிருக்கிறார். ''அந்த அரசின் அரசியல் பொருளாதார, மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு உருவாவதற்கு உதவுவதற்கும் வடிவமைப்பதற்கும் நாம் உறுதிசெய்து தரவேண்டியது அவசியம்'' என்று அவரும் வலியுறுத்திக்கூறினார்.

அத்தோடு இறுதியாக பிளேயர் ''அதைச்செய்வதற்கு நாம் சர்வதேச சமுதாயத்தையும், சர்வதேச அளவிலான ஆதரவையும் அணிதிரட்டுவோம்'' என்று உறுதியளித்தார்.

இது உண்மையிலேயே பிளேயர் புஷ்ஷிற்கு செய்கின்ற சேவையாகும், அது பாலஸ்தீனியமாக இருந்தாலும் அல்லது ஈராக்காக இருந்தாலும் --வாஷிங்டன் தருகின்ற ஒவ்வொரு தீர்வையும் முற்போக்கு வண்ணங்களில் சித்தரித்துக்காட்டுகிறார், அப்படி செய்வதன் மூலம் மனத்திற்கு உகந்ததாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில்.

ஆனால் இது பிரச்சார நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படக்கூடியது. அமெரிக்காவின் கட்டுத்திட்டமற்ற இராணுவவாதத்தை அசையாமல் ஆதரித்து நிற்பவர் பிளேயர். அவரது நீண்ட கண்ணோட்ட அடிப்படையில் உலகில் ஸ்திரத்தன்மை ஜனநாயகமில்லாமல் சாத்தியமில்லை என்று அவர் வலியுறுத்திக்கூறினார். ஆனால் ஜனநாயகத்தின்மீது அவர் மரியாதை வைத்திருக்கிறார் என்பதனால் ''உலக அரசுகளில் எந்தத்தலையீடும் கூடாது'' என்று பொருளாகாது.

அல்லது உள்நாட்டில் ஈராக்கிலிருந்து, பிரிட்டிஷ் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எடுத்துவைக்கின்ற கோரிக்கைகளுக்கு தலைவணங்குவது என்று பொருளாகாது ''நாம் ஈராக்கில் நமது பணியைப்பூர்த்தி செய்தாக வேண்டும், ஈராக்கை ஒரு ஸ்திரமான மற்றும் ஒரு ஜனநாயக நாடாக ஆக்குவதற்கு உறுதிசெய்துத் தரவேண்டும்'' என்று நிருபர்கள் மாநாட்டில் அவர் கூறினார். பின்னர் ABC இன் ''நைட்லைன் நிகழ்ச்சியில்'' அளித்த ஒரு பேட்டியில் ''இதை கடைசிவரை நான் விட்டுக்கொடுத்து விடப்போவதில்லை, அல்லது பின்வாங்கிவிடப் போவதில்லையென்று நான் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.'' என்று அவர் வலியுறுத்திக்கூறினார்.

அவர் அமெரிக்காவின் கட்டளைப்படி நடமாடுகின்ற ஒரு நாய்க்குட்டி என்ற குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகிவிட்ட பிரதமருக்கு தீவிரமான ஆதரவு தருகின்றவகையில் புஷ் கூறிய விளக்கம்: ''அவர் ஒரு பெரிய சிந்தனையாளர். அவருக்கு ஒரு தெளிவான கண்ணோட்டம் இருக்கிறது. மற்றும் அவர் வாடிப்போவதில்லை. விமர்சனங்கள் அவருக்கு எதிராக தொடங்கும்போது, அவர் தன்வழியிலேயே நடைபோட்டுக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத்தெரியும் --அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர் உறுதியாக நம்புகின்ற வழியில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறார் என்று நான் நம்புகிறேன்''.

இதன் மூலம் புஷ் எந்த பொருளில் சொல்கிறார் என்றால் வாஷிங்டனுக்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு எதிர்ப்பு மற்றும் ஐரோப்பாவிற்குள் எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியவற்றில் தன்னை பிரதமர் டோனி பிளேயர் உறுதியாக ஆதரித்து நிற்பார் என்று நம்பலாம் என்பதே.

''நான் பதவி ஏற்பு விழா முடிந்ததும் உடனடியாக ஐரோப்பிய விஜயத்தை மேற்கொள்ள விருக்கிறேன். ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் அமெரிக்காவின் உறவை ஆழப்படுத்த விரும்புகிறேன்'' என்று புஷ் கூறினார்.

உலக அரங்கில் அமெரிக்காவின் மேலாதிக்க ஆட்சியை முணுமுணுப்பு எதுவுமில்லாமல் ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதை காட்டவே ஐரோப்பிய விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பதுதான் உண்மையான நோக்கமாகும். இதற்கு ஒத்துவராத நாடுகளை தனிமைப்படுத்தி அச்சுறுத்த வேண்டும். ஸ்பெயின் நாட்டுப்பிரதமர் Zapatero தொலைபேசியில் தனக்கு பாராட்டு தெரிவிப்பதற்கு புஷ் இன்னும் பதிலளிக்கவில்லை. (சென்ற ஆண்டு மே மாதம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் Zapatero ஈராக்கிலிருந்து ஸ்பெயின் நாட்டுத் துருப்புக்களை விலக்கிக் கொண்டார்) மாறாக வெள்ளை மாளிகை Zapatero வினால் வீழ்த்தப்பட்ட எதிர்கட்சியான மக்கள் கட்சித் தலைவர் ஜோஸ் மரியா அஸ்னரை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்திருக்கிறது என்று கூறப்பட்டது.

ஐரோப்பாவில் பிளேயரின் ஆதரவு புஷ்ஷிற்கு முக்கியத்துவம் நிறைந்ததாகும் ஏனெனில் பிரான்சும், ஜேர்மனியும், தங்களது எதிர்ப்பை மறைக்கிவில்லை. பிளேயர் இல்லாமல் புஷ் இத்தாலி போன்ற குறைந்த அதிகாரம் படைத்த நாடுகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டியிருக்கும் என்று புஷ் நம்புகிறார். அத்தகைய அரசுகள் வெளிப்படையாக வலதுசாரி அணிகளைச்சார்ந்தவை அத்துடன் முன்னாள் ஸ்ராலினிச கிழக்கு ஐரோப்பிய அரசுகளையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

பிரிட்டனை தன்பக்கம் வைத்துக்கொண்டிருப்பதன் மூலம் ஐரோப்பாவின் பிரதான இராணுவ வல்லரசுகளில் ஒன்று தன் பக்கம் இருக்கிறது, இடதுசாரி குரல் எழுப்பும் போதனைகளை சொல்லுகின்ற ஒரு மந்தமான சமூக ஜனநாயகவாதி கிடைக்கிறார். இது ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு கீழ்படிந்து நடக்கின்ற நிலைக்கு முழுமையான அத்தியாவசியம் கொண்டதாகும் என்று அமெரிக்கா கருதுகிறது.

பிளேயரின் நிலைப்பாட்டிற்கு வாஷிங்டனின் ஆளும் தட்டுகளில் கணிசமான அளவிற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை அவர்களது புகார்களை வாஷிங்டன் பொருட்படுத்தவுமில்லை. ஐரோப்பிய வல்லரசுக்குள் ''சிறப்பு உறவுகொண்ட'' ஒரு மாற்று அணியை உருவாக்குவது குறித்து பிளேயரின் நிலைப்பாடு குறித்து தீவிரமாக சிந்தித்து வருகிறது.

எனவேதான் பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் தங்களது தியாகங்களுக்கு கைமாறாக அதிகம் எதிர்பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு மூத்த அரசாங்க வட்டாரம் விளக்கியிருப்பதைப் போல்: ''புஷ்ஷிற்கு, பிளேயர் தேவையில்லை, அவர்கள் சர்வதேச அளவில் மக்கள் செல்வாக்கு இழந்திருப்பது பற்றி முற்றிலும் அக்கறையற்றவர்களாக இருக்கின்றனர். மற்றும் வலுவான நண்பர்கள் ஆபத்தானவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

''ஆனால் நாம் ஆதரவு தருவதன் மூலம் இயல்பாகவே கைமாறை எதிர்பார்ப்பது ஒரு தவறாகும். அமெரிக்காவின் நலன்களுக்காக (நீங்கள் எதைவிரும்பினாலும்) செய்யவேண்டும்''.

Top of page