World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel targets Palestinians, threatens Syria

இஸ்ரேல் பாலஸ்தீனர்களை குறிவைக்கிறது, சிரியாவை அச்சுறுத்துகிறது

By Chris Marsden
11 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

காசா பகுதியில் இஸ்ரேல் தனது இடைவிடாத இரத்தக்களரி இராணுவத் தாக்குதலை தொடக்கியுள்ளது. அதில் 20-க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

ஆகஸ்ட் 31-ல் Beersheba பகுதியில் இரண்டு பஸ்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புக்களில் 16 -பேர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான ஹமாஸ் அதற்கு பொறுப்பென கூறிக் கொண்டது. ஆனால் கடந்த காலத்தைப்போன்று இத்தகைய குண்டுவெடிப்புக்கள் பிரதமர் ஏரியல் ஷரோனின் அரசாங்கம் பாலஸ்தீனர்களை தாக்குவதற்கான ஏற்கனவே திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

தனது திட்டமிட்ட "ஒருதலைப்பட்சமான வெளியேற்ற" திட்டத்தை செயல்படுத்தும் முன்னர் ஹமாஸிற்கு எதிராக அதிகபட்ச சேதத்தை விளைவிக்க தாம் உத்தேசித்திருப்பதாக ஷரோன் தெளிவுபடுத்தியுள்ளார். காசா பகுதியிலிருந்து ஒரு சிறிய தொகையினரான 7,000- சியோனிச குடியேற்றக்காரர்களை தன்னிச்சையாக வெளியேற்றுவதன் மூலம் மேற்குக்கரையின் பெரும்பகுதி நிலப்பரப்புக்களை கைப்பற்றும் நோக்கத்தோடு நிறைவேற்றிவருகிறார். அதன் மூலம் மக்கள் தொகை அதிகமுள்ள குடியிருப்புக்களை இஸ்ரேல் நிரந்தரமாக தன்னோடு சேர்த்துக்கொள்கிறது. காசாவின் எல்லைகள் கடற்கரை மற்றும் விமான வழித்தடத்தை கட்டுப்பாட்டில் வைப்பதை இஸ்ரேல் பராமரிக்கும், அதன்மூலம் அப்பகுதியை பெரிய சிறைச்சாலை முகாம் போல் ஆக்குவதாகும்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஹமாஸின் இரண்டு முன்னணி தலைவர்களான ஷேக்யாசின், மற்றும் அப்துல் அஜிஸ்ரன்டிசி இருவரையும் இஸ்ரேல் கொலைசெய்வததற்கு பதிலடியாக Hamas, Beersheba- வில் பஸ்கள் மீது குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தியது.

ஒருவாரம் கழித்து ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை தாக்குவதாக Tel Aviv அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பை நிறைவேற்றுகின்ற வகையில் செப்டம்பர் 7- நள்ளிரவில் ஷேக்யாசின் பெயரில் அமைந்த கால்பந்து விளையாட்டு அரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 14 ஹமாஸ் போராளிகளை இஸ்ரேல் விமானப்படை, விமானம் சுட்டுக்கொன்றது.

இஸ்ரேல் குறிவைத்து கொலை செய்வது என்று தாக்குதல்களை நடத்திவருவதில் இதுதான் மிகப்பெருமளவில் நடத்த கொலையாகும். முதல் தடவையாக இளம் தொண்டர்கள்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்ட அனைவரும் 18-முதல் 26- வயதிற்கு உட்பட்டவர்கள்.

''இது சியோனிஸ்ட்டுகளுக்கும், எங்களுக்குமிடையில் பகிரங்கமான போர்'' என்று ஹமாஸ் பிரதிநிதி Mushir al- Masri அறிவித்தார்.

அவர்களது இறுதிச் சடங்கில் 50,000- பேர் திரண்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில் பள்ளிகள், மற்றும் கடைகள் அடைக்கப்பட்டன. உணர்வுகள் மிகக் கொந்தளிப்பான நிலைக்கு சென்று கொண்டிருப்பதால், இஸ்ரேலுடன் சமரசம் காணவேண்டுமென்பதில் ஆர்வமாக உள்ள பாலஸ்தீன பிரதமர் அஹமது Qurei "இதற்கு பதிலடி நடவடிக்கை எடுக்கப்படுமானால் அது நியாயமாகத்தான் இருக்கும்'' என்று அறிவித்தார்.

ஆனால் ஷெரோன் கொடூரமான தாக்குதலை நீடித்துக்கொண்டிருக்கிறாரே தவிர ஹமாஸ் அல்ல, ஹமாஸ் இஸ்ரேலின் தாக்குதல்களால் கடுமையாக பலவீனப்பட்டு போயிருக்கிறது. மேற்குக்கரையை துண்டாடுகிற வகையில் "கான்கிரீட் வேலிகளை" இஸ்ரேல் அமைத்துக்கொண்டிருப்பதால் அதன் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தனது எல்லை பிடிக்கும் விரிவாக்க நோக்கங்களை நியாயப்படுத்துவதற்கு இஸ்ரேலின் வாழ்விற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக ஷெரோன் ஆவேச உணர்வுகளை கிளப்பிவந்தாலும், பாலஸ்தீன நிர்வாகம் தனது மக்களை கண்காணிக்கவும், இன்டிபதா-வை கட்டுப்படுத்தவும் தன்னால் முடிந்தவரை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஹமாஸ் போன்ற குழுக்கள் இஸ்ரேலுக்கு சவாலாக ஏற்புடைய அரசியல் முன்னோக்கு எதுவுமில்லை. அவற்றின் நடவடிக்கைகள் பெரும்பாலும் பயனற்றவையாக ஆகியிருக்கின்றன.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன மக்களுக்குமிடையே நடைபெற்றுவருகின்ற மோதல் அதிகரித்த அளவில் சமமமற்தாகப் பார்க்கப்பட்டு வருகின்றது. சென்ற ஆண்டு 17- தற்கொலை குண்டு வெடிப்புக்களும், 2002--ல் 46- தற்கொலை குண்டுவெடிப்புக்களும் நடந்தன, இவற்றுடன் ஒப்பிட்டால் எனவே இஸ்ரேல் தரப்பில் சாவு எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. சட்டவிரோத சியோனிச குடியிருப்புக்கள் மீது இங்கொன்றும் அங்கொன்றுமாக ராக்கெட் தாக்குதல்கள் நடக்கின்றன. அதற்கு பதிலடியாக மிகக் கொடூரமான எதிர்தாக்குதல்களில் இஸ்ரேல் ஈடுபடுகிறது. காசா பகுதியில் மட்டுமே 2000- திலிருந்து 1000- திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். காசாவிலும், மேற்குக்கரையிலும் சேர்த்து 3000- பால்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் பாலஸ்தீனியர்கள் கொன்ற சிவிலியன்களும், போர்வீரர்களும் 930- பேர்தான்.

கடந்த மூன்று நாட்களில் இஸ்ரேல் 200- டாங்கிகளையும், கவசவாகனங்களையும் போர் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி காசா பகுதியை மூன்றாக துண்டாடி விட்டது. காசாவின் தென்பகுதியிலுள்ள கான்யூனிசிற்கு அருகாமையில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படைகள் உள்ளன. செப்டம்பர் 8-ல் ஜபாலியா அகதிமுகாம் மற்றும் பெயிட் ஹானுன் நகரங்களுக்கு அருகிலும் படைகள் நிலைகொண்டுள்ளன. பல ராக்கெட்டு தாக்குதல்கள் நடந்ததை கூறி படைநடமாட்டத்தை நியாயப்படுத்தி வருகின்றன. அந்தப்பகுதியை மூடுவதற்காக புல்டெளசர்களை பயன்படுத்தி சாலைகளை சிதைக்கப்படுகின்றன.

அடுத்தநாள் ஜபாலியா முகாமில் இஸ்ரேல் துருப்புக்கள் தாக்குதல் நடத்தின. குறைந்த பட்சம் 7-பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒரு சிறுவனும் அடங்குவான். எதிர்ப்புக்களை மீறி இஸ்ரேல் துருப்புக்கள் அந்த முகாமிற்குள் புகுந்ததால் 25- பேர் காயமடைந்தனர்.

செப்டம்பர் 9- வியாழனன்று, துருப்புக்கள் மேற்குக்கரை நகரான ஜெரிகோவில் நுழைந்துள்ளனர். Al-Aqsa தியாகிகள் படையைச்சேர்ந்த ஒரு உறுப்பினர் கொல்லப்பட்டார். ரமாலாவிலுள்ள அமாரி அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவத்தால் ஒரு 15 வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

செப்டம்பர் 10-ல் Beit Hanoun-ல் சண்டை நடந்ததில் பலர் காயமடைந்தனர். ஹெலிகாப்டர், ராக்கெட் தாக்குதல் அல்லது டாங்கி சுட்டதால் உள்ளூர் ஹமாஸ் தலைவர் மடிந்தார்.

தெற்கு காசாவில் Gush Katif bloc இஸ்ரேல் குடியிருப்புக்களுக்கு அருகில் நிராயுதபாணியான எட்டாவது பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

பாலஸ்தீன எல்லைகளை இஸ்ரேல் முழுமையாக மூடிவிட்டது, செப்டம்பர் கடைசியில் யூதர்களது புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடியும்வரை இந்த முற்றுகை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமாதானத்தை நிலைநாட்டுகின்ற வகையில் "ஒரு தலைப்பட்சமாக விடுவிக்கப்படும்" நடவடிக்கையை மேற்கொள்வதாக ஷரோன் கூறிக்கொண்டாலும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வன்முறைகளை அவர் முடுக்கவிட்டிருக்கிறார். குடியிருப்புக்கட்டுமான பணிகளும் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவரது அகண்ட இஸ்ரேல் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான அடிப்படைதான் மேற்குக்கரையில் அவர் ஈடுபட்டுள்ள நில அபகரிப்பு நடவடிக்கையாகும். முதலில் பாலஸ்தீன மக்களை போலீஸ் கண்காணிப்பிற்குட்பட்ட இன ஒதுக்கல் குடிசைப்பகுதிகளில் குடியேற்றுவது, முடிந்தால் அவர்களை ஒட்டுமொத்தமாக அங்கிருந்தே விரட்டிவிடுவது என்பதுதான் அவரது திட்டம்.

அவர் எந்தளவிற்கு மிகுந்த பேராசையோடு திட்டமிட்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில் Beershaba பஸ் குண்டுவடிப்புக்களை சிரியாவிற்கெதிரான அச்சுறுத்தலோடு சம்மந்தப்படுத்தியிருக்கிறார். இஸ்ரேல் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் Moshe Yaalon, Beershaba குண்டுவெடிப்புக்களுக்கு பதிலளிக்கும் வகையில் தனது இராணுவம் பாலஸ்தீன எல்லைக்குள்ளும் வெளிநாடுகளிலும்- சிரியாவில் என்று பொருள் -ஹமாஸ் தலைவர்களை கொல்லும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே சென்ற அக்டோபரில் Haiya- வில் நடைபெற்ற தற்கொலை குண்டுவெடிப்பை தொடர்ந்து சிரியா தலைநகரான டமாஸ்காஸிற்கு வெளியில் இஸ்லாமிய Jihan பயிற்சி முகாம் என்று கூறப்பட்ட ஒரு முகாமின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்களை நடத்தின.

Beershaba தற்கொலை குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் இஸ்ரேல் விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் "இந்த பிராந்தியத்தில் சீர்குலைந்துவரும் நிலவரத்தை மேலும் மோசமடையச் செய்துவிடும்". அதில் எந்தவிதமான "நம்பகத்தன்மையோ அல்லது சான்றோ" இல்லையென்று செப்டம்பர் 2-ல் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் Furook al -Sharaa எச்சரிக்கை செய்திருக்கிறார்.

என்றாலும் டமாஸ்கஸில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரேல் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி தங்களது இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீன மக்களுக்கும் சிரியாவிற்கும் எதிராக ஷரோன் தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதை ஆதரிப்பதாக அமெரிக்கா மீண்டும் கோடிட்டுக்காட்டியுள்ளது.

இஸ்ரேலை கண்டிக்கத் தவறும் அதேவேளை, வாஷிங்டன் பாலஸ்தீன பிரதமர் Qureia- விற்கு எதிரான கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அரசுத்துறை அதிகாரியான Richard Boucher பாலஸ்தீன பிரதமரின் விமர்சனங்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று கூறினார். Boucher விடுத்துள்ள எச்சரிக்கையில்: ''(ஹமாஸ் போன்ற) இந்த குழுக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து நீக்கிவைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் மிகத்தெளிவாக கூறியிருக்கிறோம். இந்தப் பிரச்சனையை பாலஸ்தீன தலைவர்கள் உடனடியாக தங்களது கவனத்தில் எடுத்துக்கொண்டு தங்களது அதிகாரத்தை நிலைநாட்டவேண்டும் பயங்கரவாதச் செயல்களையும், வன்முறையையும், ஒழித்துக்கட்டுவதற்கு நம்பகத்தன்மையுள்ள உடனடி நடவடிக்கைகளை பாலஸ்தீன தலைவர்கள் எடுக்கவேண்டியது அவசியமென்று தெளிவுபடுத்தியுள்ளோம் விளக்கங்கள், சமாதானங்கள், விவாதங்களை நடத்துகின்ற காலம் கடந்துவிட்டது. பயங்கரவாதிகளை சகித்துக்கொள்ளமாட்டோம் என்று தெளிவான செய்தியைக் கொடுக்கின்ற நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் வந்துவிட்டதென்று நாங்கள் கருதுகிறோம்''

சிரியாவுடன் மோதல்களை தூண்டிவிடவும் ஆத்திரமூட்டவும் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுத்துள்ளது. செப்டம்பர் 3-ல் லெபனான் நாடாளுமன்றம் எதிர்பார்த்தபடி அரசியல் சட்டத்தை திருத்த முடிவு செய்தது. சிரியாவின் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி Emile Laboud - ஐ அவரது ஆறாண்டு பதவி காலம் முடிந்தபின்னர் மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியில் நீடிக்க அந்தத்திருத்தம் வகைசெய்தது.

1990- உள்நாட்டுப் போர் முடிவில் இருந்து லெபனானை சிரியா விரும்பிய பலனை அளிக்கக்கூடிய வகையில் மிகச்சிறப்பாக நிர்வாகித்து வருகிறது. 1982- செப்டம்பர் மாதத்தில் Beirut உள்ள Shabra மற்றும் Shatilla அகதிகள் முகாம்களில் 2000- பாலஸ்தீனர்களை கொடூரமாக கொன்று குவித்ததில் அவரது பங்களிப்பிற்காக அந்த உள்நாட்டுப் போரில்தான் ஷரோன் போர்க் குற்றவாளி என்ற முறையில் சர்வதேச அளவில் பயங்கரமான மனிதர் என்று கருதப்பட்டார்.

சிரியாவின் நடவடிக்கை லெபனானின் இறையாண்மைக்கும், அரசியல் சுதந்திரத்திற்கும் எதிரானது என்று அமெரிக்கா கருதுவதாக Boucher அறிவித்தார். சிலமணி நேரத்திற்குள் ஐ.நா-வில் அமெரிக்கா பிரான்சுடன் சேர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. செப்டம்பர் 2-ல் 9-க்கு 0- என்ற வாக்கெடுப்பில் அந்தத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆறுநாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை, அந்ததீர்மானம் லெபனான் தேர்தல்களில் வெளியார் தலையீட்டிற்கு எதிராக எச்சரிக்கை செய்கிறது. எல்லா வெளிநாட்டு துருப்புக்களும் லெபனானிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்று கோருகிறது.

சிரியா- 20,000- துருப்புக்களை லெபனானில் வைத்திருக்கிறது. -தேவையான வாக்குகளை பெறுவதற்காக சிரியா என்று பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் டமாஸ்கஸ்ஸை தெளிவாக குறிவைத்துத்தான் அந்தத்தீர்மானம் நிலைவேற்றப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் அமெரிக்கா உருவாக்கிய தீர்மானம் அமெரிக்க அச்சுறுத்தலின் கடுமையை எடுத்துக்காட்டியது, சிரியா, லெபனானில் இருந்து அனைத்துத்துருப்புக்களையும் 30- நாட்களுக்குள் விலக்கிக் கொள்ளாவிட்டால் எல்லாப்போராளி ராணுவங்களையும் கலைக்காவிட்டால், தீர்மானத்தை செயற்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் நகல் தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்பினர் தீர்மானத்தை செயல்படுத்தியது தொடர்பாக 30- நாட்களுக்குள் ஐ.நா- பொதுசெயலாளர் கோபி அன்னான் பாதுகாப்பு சபைக்கு அறிக்கைதர வேண்டுமென்று தீர்மானம் கேட்டுக்கொள்கிறது.

ஷரோனின் நோக்கம் அகண்ட இஸ்ரேலை உருவாக்குவது அதற்கு இறுதியாக இஸ்ரேலுடன் போரிட்டாக வேண்டும் ஏனென்றால் கோலன் குன்றுகளைக் (Golden Heights) கைப்பற்றி அத்தியாவசிய தண்ணீர் சப்ளைக்கு வழிசெய்தாக வேண்டும். சென்ற ஆண்டு டமாஸ்கஸிற்கு வெளியில் குண்டுவீசி தாக்குதல் நடத்த வேண்டுமென்ற அவரது முடிவு வாஷிங்டன் ஆதரவோடு சிரியாவுடன் மோதலை தூண்டிவிடுவதற்காகத்தான். ஏற்கனவே வாஷிங்டன் சிரியாவை (rogue State) "கட்டுப்பாடில்லாத அரசு" என்றும், "பயங்கரவாதக் குழுக்களை ஆதரிக்கும் நாடு" என்றும், "பேரழிவு ஆயுதங்களை" வைத்திருப்பதாகவும் கண்டித்துவருகிறது.

பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் கட்டளைப்படி சிரியா மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்துவதற்கான அவசரத்திட்டம் பற்றிய இரகசியத் தகவல்கள் 2002- ஏப்ரலில் புலனாய்வு வட்டாரங்கள் மூலம் வெளிவந்தன.

இந்த ஆண்டு மே -மாதம் சிரியாவிற்கு எதிரான பல்வேறு கடுமையான தடை நடவடிக்கைகளை புஷ் நிர்வாகம் அறிவித்தது. ''அமெரிக்காவின் பொருளாதாரம் வெளியுறவுக்கொள்கை தேசியபாதுகாப்பு ஆகியவற்றிற்கு வழக்கத்திற்கு மாறான அசாதாரண அச்சுறுத்தலாக சிரியா விளங்குகிறது'' என்று வாஷிங்டன் கண்டனம் தெரிவித்தது.

Top of page