World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Democratic Leadership Council drafts right-wing platform for coming elections

வரவிருக்கும் தேர்தல்களுக்கு ஜனநாயகத் தலைமையிடக்குழு வலதுசாரி அரங்கை தயார் செய்கிறது

By Joseph Kay
28 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜனநாயகத் தலைமையிடக்குழு (DLC) கடந்த வார இறுதியில் 2006-ல் வரவிருக்கும் இடைக்கால தேர்தல்கள் மற்றும் 2008 ஜனாதிபதி தேர்தல்களுக்கு தன்னுடைய வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்டுவதற்காக ஓகையோ மாநிலத்தில் உள்ள கொலம்பசில் ஆண்டு மாநாட்டை நடத்தியது. இக்கூட்டத்தில் நடத்தப்பெற்ற உரைகளும், முன்னதாகவே வெளியிடப்பட்ட ஆவணங்களும் ஜனநாயகக் கட்சி ஒரு தீவிர வலதுசாரிப் பிரச்சாரத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதைத்தான் குறிக்கின்றன; அதிலும் குறிப்பாக "தேசியப் பாதுகாப்பு" மற்றும் ஈராக்கிய போர் பிரச்சினைகளில் இத்தகைய நிலைப்பாடுதான் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

1980-களின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட DLC ஜனநாயகக்கட்சிக்குள் முக்கிய ஆதிக்கம் செலுத்தும் பிரிவு ஆகும். கடந்த இரண்டு தசாப்தங்களாக கட்சியை வலதுக்கு தள்ளியிருக்கும் "புதிய ஜனநாயக" இயக்கத்திற்கு முக்கிய ஆதாரமாக இது உள்ளது.

மாநாட்டின் முக்கிய பேச்சாளராக நியூ யோர்க் செனட்டரும் முன்னாள் முதல் சீமாட்டியுமான சீமாட்டி ஹில்லேரி ரோடாம் கிளின்டன் விளங்கினார். குழுவின் புதிய "அமெரிக்க கனவு ஆரம்ப முயற்சி" என்ற அமைப்பின் தலைமையை கிளின்டன் ஏற்றார்; இவ்விதத் தகுதியில் அவர் நாடு முழுவதும் DLC இன் கருத்துக்களை பரப்ப பிரச்சாரத்தை மேற்கொள்ளுவார். 2008ம் ஆண்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வரிசையின் முன்னணி என்ற இடத்தை இந்நிலை அவருக்கு அளித்துள்ளது. DLC உடன் உறவாடுவதில் கிளின்டன் தன்னுடைய கணவரின் கால்சுவடுகளையே பின்பற்றிக்கொண்டிருக்கிறார்; அவரும் இந்தக் குழுவின் தலைவராக வேட்பாளராக நிற்பதற்கு ஒராண்டிற்கு முன் 1990-91ல் இருந்தார்.

அதே பாதையை நாடித்தான் இவரும் வெள்ளை மாளிகையை அடையலாம் என்ற ஊகங்களுக்கு இடையே, இந்த மாநாட்டில், தான் ஒரு "தாராளவாத" வேட்பாளர் என்ற முறையில்கூட போட்டியிடமாட்டேன் என்பதைத் தெளிவான முறையில் தன்னுடைய உரையை பயன்படுத்தி ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார். DLC அரங்கை பயன்படுத்தி, ஜனநாயகக் கட்சியின் பல பிரிவுகளுக்கும் இடையே "பூசல் நிறுத்தத்திற்கான" அழைப்பை விடுத்து, கிளிண்டன் கட்சிக்குள் இருக்கும் Moveon.org போன்ற இடது சக்திகளுக்கு தெளிவான குறிப்பை சுட்டிக் காட்டியுள்ளார். மிகக் குறைந்த போர் எதிர்ப்பு உணர்வுகூடக் கட்சியின் தலைமையிடத்தால் எதிர்க்கப்படும் என்பதுதான் அது.

ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடிய திறன் உள்ளவர்களாகக் கருதப்படும், இந்தியானாவின் செனட்டர் ஈவான் பே, ஐயோவாவின் கவர்னர் ரொம் வில்சாக், வர்ஜீனியாவின் கவர்னர் மார்க் வார்னர் உட்பட பலரும் கூட்டத்தில் உரையாற்றினர். பே முன்னாள் DlC தலைவராக இருந்தவர் ஆவார்; விலாஸ்க் தற்போதைய தலைவர் ஆவார்.

"பயங்கரவாதிகளை நாம் எங்கு கண்டாலும், அவர்களை அகற்றுவதற்கான ஒருங்கிணைந்த, தெளிவான உத்தி ஒன்றின் மீது குவிப்பைக்காட்டும்" வகையிலும் "தாய்நாட்டின் பாதுகாப்பை முன்னேற்றுவிக்கவும்" அவ்வம்மையாருடைய ஆக்கத்தையும் ஊக்கத்தையும் செலுத்த இருப்பதாக கிளின்டன் வலியுறுத்தினார். "கூடுதலான மக்களை இராணுவச் சீருடையில் கொண்டு, அவர்களுக்கு தேவையான தளவாடங்களை கொடுத்து, நேற்றைய அழுத்தங்கள் என்றில்லாமல், இன்றைய அழுத்தங்களை சந்திக்கக் கூடிய வகையில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டிருக்கும்" ஒரு வருங்கால சமுதாயத்தை தான் கண்முன் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் கூடுதலான படைகள் என்னும்போது, அவர் புஷ் ஈராக்கியப் போரை நடத்தும் வகையைப் பற்றிய ஜனநாயவாதிகளின் முக்கிய விமர்சனத்தைத்தான் - அதாவது தற்போதுள்ள படைகள் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு போதுமான வகையில் இல்லை என்பதைத்தான் திரும்பவும் கூறினார்.

மில்லியன் கணக்கான மக்களுக்கு அரசாங்க உதவி நிறுத்தப்பட்ட வகையில் பொதுநலச் சீருத்திருத்தம் என்ற அவருடைய கணவர் துவக்கி வைத்த DLC உடைய கருத்துக்களுக்கு இவரும் இணைவு கொடுத்தார். நிதிப் பொறுப்பு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தீவிர வலதின் எதிர்ப்புக்களை சரி செய்யும் வகையில் சில "பண்பாட்டு உணர்வுகளுக்கு" மதிப்புக் கொடுத்து பேசினார். "மனிதனை விஞ்ஞான முறையில் பிறப்பிக்கும் படியாக்கம் (cloning) முறை சர்வதேச அளவில் தடை செய்யப்படுவதற்கான வழிவகை வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தன்னுடைய பிரச்சாரத்தில் வன்முறை ஆதரவு இருக்கும் வகையிலான வீடியோ விளையாட்டுக்களையும் தாக்கிப் பேசினார். அனைத்து அமெரிக்கர்களும், "கடவுள் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை, இசைவான மதிப்பீடுகள்" இவற்றின் அடிப்படையில் ஒன்றாக வந்து, "குடும்ப நலத் திட்டம் வளர்த்து அதன் மூலம் தேவையற்றமுறையில் கருவுறுதல், கருக்கலைப்பு இவற்றைக் குறைத்தலுக்கு" உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் நம்முடைய தத்து எடுக்கும் முறை, பேணிவளர்க்கும் முறை ஆகியவை வலியுறுத்தப்படவேண்டும் என்றும் கூறினார்.

கிளின்டனை பொறுத்தவரையில், இந்த உரை தன்னுடைய வலதுசாரி நிலைப்பாட்டை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளும் வகையில் ஒரு முயற்சியே ஆகும். சமீப மாதங்களில், இவர் முன்னாள் மன்ற சபாநாயகர் நிவிட் கிங்ரிச்சு, மற்றும் தற்பொழுது செனட் மன்றத்தின் பெரும்பான்மைத் தலைவராக உள்ள பில் பிரிஸ்ட் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு பெருவணிகத்திற்கும் பெரிதும் உதவும் பாதுகாப்புத்துறை சட்டம் இயற்றுவதில் ஆர்வம் காட்டியுள்ளார். மேலும் செனட் மன்ற ஆயுதக் குழுவில் ஒரு பொறுப்பையும் எடுத்துக் கொண்டு ஈராக் போருக்குத் தன்னுடைய வலுவான ஆதரவை வெளிப்படுத்தி வருவதுடன். அங்கு இருக்கும் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறிவருகிறார். ஜனவரி மாதம் அவர் ஆற்றிய உரை ஒன்றில் ஜனநாயக கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் கருக்கலைப்பு விஷயத்தில் ஒன்றாக ஒரு "பொது நிலைப்பாட்டை" காண வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிண்டனும் மற்ற பேச்சாளர்களும் மாநாட்டில் முன்வைத்த திட்டங்கள் DLC இதழான Blueprint ன் சமீபத்திய பதிப்பில் பல கட்டுரைகளாக வந்துள்ளன.

முக்கிய கட்டுரையான "அமெரிக்கா எவ்வாறு மறுபடியும் வெற்றிபெறலாம்" என்பதில் DLC இன் நிறுவனரும், தலைமை நிறுவனருமான Al From மற்றும் அதன் தலைவரான Bruce Reeed இருவரும் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்ற பெயரில் நடைபெறும் இராணுவவாதத்திற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். "செப்டம்பர் 11க்கு பின்னர் மிகக் குறுகிய, ஒளிவீசிய காலத்தில் கட்சி என்றில்லாமல் நாடுதான் கருத்திற் கொள்ளப்பட்டது. ...நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, நாம் சில முக்கியமான வெற்றிகளை பயங்கரம், கொடுங்கோன்மைக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் பெற்றுள்ளோம். ஆனால் செப்டம்பர் 11ல் உயிர் நீத்தோருக்கு நம்முடைய கடமையும், சுதந்திரத்திற்காக நமது கடமையும், இன்னும் செய்து முடிக்கப்படவில்லை." என்று இந்த இருவரும் எழுதியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், போர் தொடரும் என்பதோடு மட்டும் இல்லாமல், தீவிரப்படுத்தும் முயற்சிகளும் இருக்கும். "பல தசாப்தங்கள் தொடரக் கூடிய போருக்கு இராணுவ, பொருளாதார முறையில் நம்மை வலுப்படுத்திக் கொள்ளாததற்காக" கட்டுரையாளர்கள் நிர்வாகத்தை குறைகூறியுள்ளனர். "ஈராக்கிய போர் ஒன்றும் நாம் புரிய வேண்டிய கடைசிப் போர் அல்ல; நமக்குப் பெரிய இராணுவம் தேவை." அமெரிக்க இராணுவத்திற்கு இன்னும் கூடுதலாக 100,000 வீரர்கள் தேவை என்றும் இவர்கள் எழுதியுள்ளனர்; இந்தக் கோரிக்கை மாநாட்டில் பலமுறையும் வற்புறுத்தப்பட்டது. செனட் மன்றத்தில் ஜனநாயகவாதிகள் கிளின்டன் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி வேட்பாளர் Joseph Liberman உட்பட பல உறுப்பினர்களால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டவரைவில் கூடுதலான 80,000 படைவீரர்கள் வேண்டும் என்ற கருத்தைத்தான் இது பிரதிபலித்துள்ளது.

பிரம்மும், ரீடும் குடியரசுக் கட்சியோடு வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினர். "ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிராமல், பயங்கரவாதத்தின்மீதான போர் என்பது இரு கட்சிகளுக்கும் மிக முக்கியமான நினைப்பாக வேண்டும். நாம் முதலில் அமெரிக்கர்கள், இப்போரை அமெரிக்க மக்கள் அணுக விரும்பும் முறையில் அணுக வேண்டும். மக்களுக்கு எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் கவலை இல்லை; ஆனால் அமெரிக்கா வெற்றி பெறவேண்டும்" என்று அவர்கள் எழுதியுள்ளனர்.

இதோடு இணைந்து வந்த "நாட்டுப்பற்றை மதிப்பீடு செய்தல்" என்னும் கட்டுரையில் DLC -உடன் இணைந்த Progressive Policy Institute என்ற அமைப்பு ஒன்றின் தலைவரான வில் மார்ஷல் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பணி இராணுவத்துடன் நெருக்கமான தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதாகும் என்று எழுதியுளார். "எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயகவாதிகள் ஒரு புதிய நாட்டுப்பற்று, அனைவரையும் இணைக்கும் கட்சி இது என்பதை நாட்டிற்குக் காட்ட வேண்டும்; அந்த நாட்டுப் பற்று முன்னேற்றமான நிலையில் ஈராக்கிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வெற்றி காண வேண்டும் என்ற உறுதியை கொண்டிருக்கவேண்டும்; ஜனநாயகக் கட்சிக்கும் இராணுவத்திற்கும் இடையே இருக்கும் பெரும் பண்பாட்டுப் பிளவை மூடவேண்டும், ஒரு புதிய தேசிய சேவை உணர்விற்கு அழைப்பு விட வேண்டும், எதிர் முகாம் அரசியலை எதிர்க்கும் வகையில் பங்கிட்டுக் கொள்ளும் மதிப்பீடுகளை வளர்க்க வேண்டும்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினரை போர் தொடுப்பதில் ஏற்பட்ட தவறுகளுக்கு குறைகூறினாலும் -- உதாரணம் போதுமான படைகள் இல்லாதது -- மார்ஷல் "இருப்புநிலைக் கணக்கேட்டின் மறுபுறத்தையும் அவர்கள் கவனிக்கவேண்டும். அந்தப் பக்கத்தில் நம்முடைய படைகளும் அவற்றின் நண்பர்களும் உலகத்தின் இழிந்த கொடுங்கோலர்களில் ஒருவரை அகற்றியுள்ளனர்; கூட்டுப் பாதுகாப்புக் கோட்டபாடு என்ற நெறியை நிலைப்படுத்தியுள்ளனர்; 24 மில்லியன் மக்கள் உள்ள நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளனர்; ஈராக்கின் நம்பிக்கைநிறைந்த பிரதிநிதித்துவ தன்னாட்சி சோதனையை சாத்தியமாக்க செய்துள்ளனர்; அரேபிய-இஸ்ரேலிய பூசலில் மூலோபாய சமன்பாட்டை மாற்றியுள்ளனர்" என்று மார்ஷல் அறிவித்துள்ளார்.

"ஜனநாயகக் கட்சியினரும் இராணுவமும்" என்ற பிரிவில் இராணுவத்தில் அளவுக்கு மீறிய விகிதாசாரத்தில் அதிகாரிகள் தங்களை குடியரசுக் கட்யினர் என்று காட்டிக் கொண்டிருப்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். "இந்தப் பிளவை எவ்வாறு ஜனநாயகக் கட்சி சீரமைக்க முடியும்? ஆரம்ப முயற்சியாக, இராணுவத்திற்கு ஆள் சேகரிப்பது பற்றி தடை செய்யும் கல்லூரிகளுக்கு எதிராகப் பேசலாம்; அதேபோல், ROTC, (Reserved Offficers' Training Corps) இருப்பு இராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பிரிவுகளிலும் உரையாற்றலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கிளின்டன் மற்றும் அவருடைய அமெரிக்க படைப்பிரிவு திட்ட காலத்தில் துவக்கப்பட்ட DLC இன் "தேசிய சேவை" கருத்து பற்றியும் மார்ஷல் விளக்கமாகக் கூறியுள்ளார். "இளைஞர்களின் பார்வையில் கூடுதலான வகையில் தேசிய சேவையை உணர்த்துவதற்கு ஒரு வழி Selective Service System [வருங்கால இராணுவ பணிக்காக அமெரிக்க இளைஞர்களுடைய பெயர்களை பதிவு செய்யும் முறை] என்பதற்குப் பதிலாக ஒரு புதிய தேசிய சேவை முறையைக் கொண்டுவர வேண்டும். அந்த முறையில் பெண்களையும், ஆடவரை போலவே இராணுவ அல்லது சிவிலிய பணிகளில் சேருவதற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். மற்றொரு வழி அமெரிக்கப் பிரிவை விரிவுபடுத்தி கூட்டாட்சி உதவித் தொகை நிலையை தேசிய சேவையுடன் இணைக்கலாம். அத்தகைய உடன்பாட்டின்படி, தேசிய சேவைக்கு உடன்படுவோர் மட்டுமே Pell Grants அல்லது மற்ற மாணவர்களுக்கான உதவித் தொகைகளை பெறத் தகுதியுடையவர்கள் என்று வைக்கலாம்."

DLC க்குள்ளேயே இந்த "சேவை முறையை" கட்டாயமாக்கவேண்டும் என்ற அழைப்புக்கள் வந்துள்ளன; இது அனைத்து இளைஞர்களையும் ஏதேனும் ஒரு விதத்தில் இராணுவ அல்லது "உள்நாட்டுப் பாதுகாப்பு" செயலில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும்.

பல ஜனநாயக இடது பிரிவுகள் கிளின்டன் DLC யில் உரையாற்றியதை கட்சியின் வலதுசாரி நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தார் என்ற கண்டனத்திற்கு உட்படுத்தி அவரை கட்சியின் "வேர்களுக்கு" திரும்புமாறு குரல் கொடுத்துள்ளன. ஆனால், கிளின்டன் மற்றும் DLC வெளியிட்டுள்ள கருத்துக்கள் கட்சித் தலைமையினால் தொடர்ந்து செயலாற்றப்பட்டுவரும் கருத்துக்கள்தாம். ஜனநாயகக் கட்சியினர் புஷ் நிர்வாகத்திற்கு போரை தொடர்வதற்கு முக்கிய ஆதரவை கொடுத்து, ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதலுக்கும் ஆதரவு கொடுத்துள்ளதோடு, வலதுசாரி பொருளாதார கொள்கைகளை தொடர்வதற்கும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

புஷ்ஷைப் போலன்றி தான் ஈராக் போரில் வெற்றி காண்பேன் என்று கூறித்தான் ஜோன் கெர்ரி ஜனாதிபதி வேட்பாளராக நின்றார். எதிர்ப்பு உணர்விற்குத் தக்க முறையில் அழைப்பு விடுக்க இயலாமல் போனதுதான் கெர்ரியின் தோல்விக்குக் காரணமாகும். இந்த இழப்பில் இருந்து கட்சி பெற்றுக் கொண்ட படிப்பினையோ இன்னும் கூடுதலான வகையில் வலதுக்கு நகர்ந்து, புஷ் நிர்வாகத்துடனான ஒத்துழைப்பு தீவிரப்படுத்த வேண்டும் என்று போயிற்று.

போர் எதிர்ப்பு உணர்வு பெருகியுள்ள நிலையில், சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் கிட்டத்தட்ட 60 சதவிகித அமெரிக்க மக்கள் உடனடியாக முற்றிலும் அல்லது ஓரளவேனும் ஈராக்கில் இருந்து படைகளை வெளியேற்றிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர், ஜனநாயகக் கட்சியோ தீவிரமான போர் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வேறுபட்ட உணர்வு ஆழ்ந்த சமூக வேர்களை கொண்டுள்ளதாகும். புஷ் நிர்வாகத்துடன் எத்தகைய தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியுடன் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளிலும் உடன்பாட்டை கொண்டுள்ளது. இதில் அமெரிக்க உலக ஆதிக்கத்தை நிறுவுவதற்கு இராணுவ வலிமை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை குறைக்க வேண்டும் என்பதும், உள்நாட்டின் ஜனநாயக உரிமைகள் குறைக்கப்பட வேண்டும் என்பதும் அடங்கும்.

Top of page